என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 21 ஜூன், 2014

VGK 21 / 02 / 03 - SECOND PRIZE WINNERS ........ மூ க் கு த் தி




’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு 



VGK 21 - ’ மூ க் கு த் தி 


இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2014/06/vgk-21.html




 

 

 

 


 




மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 





நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  


ஐந்து









இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 






  


மற்றவர்களுக்கு: 







    



இனிப்பான இரண்டாம் பரிசினை 


வென்றுள்ளவர்கள் இருவர்.


அதில் ஒருவர்






 திரு. ரவிஜி 



மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.

அவர்கள்

mayavarathanmgr.blogspot.com




இனிப்பான இரண்டாம் பரிசினை வென்றுள்ள


 திரு. ரவிஜி 



மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.


அவர்களின் விமர்சனம் இதோ:


  






“என் இனிய வை.கோ. சிறுகதை விமர்சனப்போட்டியாளர்களே!” என்று பாரதிராஜா பாணியில் துவங்கி தலைப்புக்கு அடுத்தபடியாக ஒரு சிறிய முன்னுரையாக தன்னந்தனியாக நகைவாங்கச் சென்று வந்த ஒரு கிராமத்து முதியவரின் அனுபவத்தை அவரே சொல்கிறார் என்று குறிப்பாக சொல்லிவிடுகிறார் கதாசிரியர்.

முதலில் பேருந்து நிறுத்தத்தில் துவங்குகிறது முதியவரின் அங்கலாய்ப்பு. எத்தனை பஸ்கள் விட்டாலும் கட்டுக்கடங்காத கூட்டம்! இந்த வயதான காலத்தில் எப்படி ஏறி எப்படி இறங்கி..?!

 இந்த சிந்தனைக்கிடையே - அந்தகாலத்தில் இருந்த நகைக்கடைகளின் நிலைமை, அந்த கடை முதலாளிகளின் அன்பான வரவேற்பு மற்றும் விசாரிப்பு, வீட்டு மனிதர்களைப்போலவே வந்த உடனே ஒரு குவளை குளிர்ந்த நீர் கொடுத்துவிட்டு பின்னரே வியாபாரம் பேச துவங்கும் நிலை இத்யாதி இத்யாதி என்று அந்தகால மனிதர்களின்personalized relationship குறித்து ஒரு flash backஅத்தோடு இப்பொழுது இருக்கும் பணம், பகட்டு இவற்றுக்கே முன்னிரிமை தந்துவரும் நிலைமை குறித்த ஒரு ஒப்பீடு! இப்போதைய நகைக்கடைகளில் காணப்படும் கட்டுக்கடங்காத கூட்டம்!

இதோ அந்த காலத்து மனிதர் இந்த காலத்து கடையில் ஒரே ஒரு ஒற்றை மூக்குத்தி வாங்கிட மஞ்சள் பையும் குடையுமாக உள்ளே நுழைகிறார். நம்மையும் உடன் சேர்த்துக்கொண்டுதான்.

      பண்டிகைக்காலமோ இல்லையோ, கையில் பணம் எங்கிருந்துதான் வருகிறதோ தெரியவில்லை அனால் மக்கள் ரயில்வே ஸ்டேஷன், பஸ்ஸ்டாண்டு, டாஸ்மாக்(!) கடை, சினிமா தியேட்டர், இவைபோலவே கூட்டம் கூட்டமாக வந்து தண்ணீருக்கே அவதிப்படும் இந்தக்காலத்தில் பணத்தையே தண்ணீர்போல செலவு செய்யும் ஒரு இடமாக நகைக்கடைகள் இருப்பதில் முதியவருக்கு ஒரு ஆச்சரியம் கலந்த அங்கலாய்ப்பு!  கடைக்குள் நுழைந்தாகிவிட்டது! வயதான டிக்கெட்டை கவனிப்பது யார்?  ஒருவழியாக ஒரு டிப்டாப் ஆசாமி வந்து நான்காவதுமாடிக்கு போகச்சொல்கிறான்! மக்கள் கூட்டம் லிப்டிற்குள் தள்ளிக் கொண்டு போக, லிப்ட் அவரை அள்ளிக்கொண்டுபோய் ஒருவழியாக மூக்குத்தி விற்கும் நான்காம் தளத்தில் உதிர்த்துவிடுகிறது! இதுவரை யதார்த்த காட்சி அமைப்பு நம்மையும் கூடவே நாலாம் தளத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டது! ஒருவழியாக ஸ்டூலில் இடம் பிடித்து அமர்ந்தால் “பெருசுக்கு என்ன வேண்டும்ன்னு கேட்டு சீக்கரம் அனுப்புப்பா” என்கிறான் ஒருவன்! இவருக்கு மட்டும் என்னவோ ஓஸியிலேயே நகை கொடுக்கிறவனைப்போல!  ஒருவழியாக நகை காட்டப்பட்டு கனமில்லாத நகையை விரும்பாது கொஞ்சம் எடை அதிகமாக கேட்கிறார் மஞசள் பைக்காரர். அதற்கும் ஒரு JUSTIFICATION ஆக அதிக எடையை இப்பொழுது யாரும் விரும்பவில்லை என்கிறான் கடைக்காரன்!  இந்தக்காலப் பெண்களுக்கு அதிக எடையில் மூக்குத்தியைக்கூட தாஙகமுடியாதா? இதற்கெல்லாம் அசராது அதே நேரத்தில் நான்காம் மாடிக்கு வந்த பின்பு மறுபடியும் வேறு கடைக்குச்சென்று பார்க்கமாட்டாமல் உள்ளதிலேயே சற்று பெரிய மூக்குத்தியை எடுத்து எடைபார்த்து விலையைச்சொல்லும்படி கேட்கிறார். செய்கூலி, சேதாரம், வரிகள் எல்லாம் உட்பட விலையைப்பார்த்தால் ரூபாய் 2622.  உடனே மனதுக்குள் மறுபடியும் பிளாஷ் பேக்! ஏறக்குறைய இதே விலையில் 1974ல் மனைவிக்கு 12 பவுனில் இரட்டை வடம் சங்கிலியே வாங்கமுடிந்தது ஞாபகம் வருதே! ஏறக்குறைய 40 வருடத்தில் 100 மடங்கு விலை உயர்வு? இருந்தும் என்ன செய்வது எடையும்கூட  திருப்தியில்லாவிட்டாலும்கூட வாங்க முடிவு செய்கிறார்! அங்கேயும் பார்த்தால் பில் போட ஒரு இடம், பணம் செலுத்தி நகையைவாங்கிட வேறு இடம்! பணம் செலுத்த தட்டுத்தடுமாறி வந்தால் புளியங்கொட்டை வண்ண முழுக்கை சட்டை அணிந்த ஒருவன் இவரைப்பார்த்துப் புன்னகைகிறான்! எல்லாரும் பெருசு என்று உள்ளுக்குள் ஒரு நக்கலுடன் அழைக்கும் போது இளைஞனான இவன் மட்டும் ஏன்…!? நமக்குள் ஒரு சந்தேகக் கீற்று! அவன் யாரென்ற பெரியவரின் கேள்விக்கு “நம்ம ஊரு பக்கம் தான். நீங்க பஸ் ஏறிவரும்போதே பார்த்தேன்” என்று புன்னகைத்தபடியே  போய்விடுகிறான்!

     நம்பாளோ பணம் கட்ட நின்ற எட்டு நிமிடத்தில் கல்லாவில் பத்து லட்சம் வசூலாவது கண்டு அசந்து போகிறார். இங்கேயாவது நகை கைக்கு வருகிறதா என்று பார்த்தால், பில்லில் ரப்பர் ஸ்டாம்ப் குத்தி கையில் கொடுத்து பேக்கிங்  செக்‌ஷன் பக்கமாக கையைக் காட்டுகிறார் கடை முதலாளி. (அந்தகாலத்திலோ வாங்கிய நகைகளைகடை முதலாளி sentimental touch உடன் கடவுளின் பாதத்தில் வைத்து எடுத்து கொடுத்தது முதியவரின் மனதில் நிழலாடுகிறது! ஒரு வாசகனாக கூடவே இருப்பதாக உணரும் நமக்கும்தான்).

     பேக்கிங் செக்‌ஷனிலும் அதே கூட்டம்! ஒருவழியாக உட்கார ஒரு ஸ்டூல் கிடைக்கிறது! இதோ அந்த புளியங்கொட்டை கலர் சட்டை பையன் மறுபடியும் entry.


“ஐயா, வந்த காரியம் முடிந்து விட்டதா? பணம் கட்டிப்
பொருளை வாங்கி விட்டீர்களா?”  என்று வினவுகிறான்! மேலும்

“மெதுவாகப்பார்த்து வாங்கி ஜாக்கிரதையாக வீட்டுக்கு எடுத்துட்டுப்போங்க, எங்கு பார்த்தாலும் கும்பலாகவும், திருட்டு பயமாகவும் உள்ளது” என்று கூறி விடை பெற்றுச்செல்கிறான்.  (இவன் ஏண்டா மறுபடி attendance போடுறான்?)


     டெலிவரி எடுக்கும் முன்பாக பாக்கிங் செக்‌ஷனில் கிப்ட் கொடுக்கும் காட்சி! 300 ரூபாய் மதிப்புள்ள சூட்கேசை கிப்ட்டாகப் பெற வாங்கிய 90000 ரூபாய் நகைக்கும் மேலாக இன்னும் 10000 ரூபாய்க்கு நகை வாங்கலாமா என யோசிக்கும் மனிதர்!  (இந்த கிப்ட் யுக்தி நல்லாத்தான் வேலை செய்யுதோ?) ஒருவழியாக அட்டைப் பெட்டியில் போட்ட நகையுடன், பில், ஜிப் வைத்த ஒரு சிறிய மணிபர்ஸ் போல ஏதோவொன்று போட்டு, பில், கியாரண்டி கார்டு, வேறு ஏதோ மாதாந்தர நகை சேமிப்புத்திட்டம் பற்றிய வழவழப்பான விளம்பரத்தாள் முதலியனவற்றையும் ஒரு பெரிய பிளாஸ்டிக் பையில் போட்டு கையில் கொடுக்கின்றனர். அப்பாடா முடிந்தது! இனி வீட்டுக்குக் கிளம்பலாம் என்றால் காலையில் நீராகாரம் மட்டுமே குடித்துவிட்டு கிளம்பியது இப்போது பசி வயிற்றைக் கிள்ளுகிறதே! எதிரே இருந்த ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட ஆர்டர் கொடுத்துவிட்டு காத்திருந்தால்….! அவருக்கு முன்பு ஏற்கனவே சாப்பிட்டுவிட்டு, கைகழுவிக்கொண்டிருந்த புளியங்கொட்டைக்கலர் சட்டைப்பையன் முதியவரைப் பார்த்து புன்சிரிப்பை உதிர்த்தவாறே,  ஓட்டலிலிருந்து வெளியேறுகிறான். இவன் எங்கே மறுபடியும்…நமக்கு ஒரு ஓரத்தில் தோன்றுகிறது? சரி சிறியபையன்தானே அவனுக்கு மட்டும் பசிக்காதா நாம் வந்த வேலையை பார்க்கலாம் என்று முதியவருக்குத் தோன்றுகிறது?

ஓட்டலில் அதிகம் கும்பல் இல்லாமல் இருந்ததால் மீண்டும் நகையை பையிலிருந்து எடுத்துப்பார்த்து, பத்திரப்படுத்திக்கொள்கிறார். அதோடு ஓட்டலுக்கான பில்லுக்கும், திரும்பிப்போக பஸ் செலவுக்கும் மட்டும் வேண்டிய பணத்தைத் தனியாக சட்டைப்பையில் வைத்துக்கொள்கிறார். பின்னர் பொடிநடையாக நடந்து, பஸ் ஸ்டாண்டு வந்து பஸ்ஸுக்கு காத்திருந்தால் மீண்டும் புளியங்கொட்டைக்கலர் சட்டை போட்டப்பையன் அப்போதும் திடீரென  முதியவர் முன் தோன்றி, அவரின் குடையை உரிமையுடன் வாங்கி, ஜன்னல் பக்கமாக அந்த பஸ்ஸில் ஒரு இடம்போட்டுவிட்டு, தொங்கவிட்ட மஞ்சள் பையுடன் இருந்த அவரை, அந்தக்கும்பலில் ஏற்றிவிட, படிக்கட்டில் இருந்த கூட்டத்தாரை, தன் பலம் கொண்டமட்டும் விலக்கி உதவியும் செய்கிறான். (அடேய் யார்தான்டா நீ?).ஆனால் அவன் அந்த பஸ்ஸில் வராமல் அடுத்த பஸ்ஸில் அவசர வேலையை முடித்துவிட்டு வருவதாக சொல்லி சென்றுவிடுகிறான்!

ஒருவழியாக ஊர்திரும்பி பஸ்ஸைவிட்டு இறங்கினால் ரோட்டின் மேல் இருந்த பிள்ளையார் கோயில் அருகில், எதையோ பறிகொடுத்ததுபோல நிற்கும் புளியங்கொட்டைக்கலர் சட்டைப்பையன் மீண்டும் கண்ணில் படுகிறான். (மறுபடியும் நீயாடா? இன்னாடா ஒங்கணக்கு?) அவருக்கு முன்னால் இவன் எப்படி இங்கு வந்துசேர்ந்தான்? ஒருவேளை டூ வீலரில் யாருடனாவது தொத்திக்கொண்டு ஸ்பீடாக வந்திருப்பானோ என்ற நினைப்பில் அவனை நெருங்கி அவன் எதையாவது தொலைத்துவிட்டானா, திருட்டுப் போய்விட்டதா எதனால் முகவாட்டம் என்றெல்லாம் அவனிடம் வெள்ளந்தியாக வினவுகிறார்! மேலும் பஸ்ஸில் கிளம்புமுன்பாக நகையையும், பணத்தையும் பத்திரப்படுத்திவிட்டதையும் அதனால் பஸ்ஸில் காலி மூக்குத்தி டப்பா மட்டுமே திருட்டு போனதையும் தெரிவிக்கிறார்!

பிறகு ஆதரவாக அவன் தோளைத் தட்டிக்கொடுத்து, “சரி ..... இப்போ என் வீட்டுக்கு வந்து ஏதாவது சாப்பிட்டுவிட்டு, அல்லது மோர் தண்ணியாவது குடித்துவிட்டுப்பிறகு போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் ஒரு புகார் எழுதிக்கொடுத்துவிடு; உன் நல்ல குணத்திற்கு, உன் காணாமல் போன நகை நிச்சயம் கிடைத்துவிடும்” என்று ஆறுதல் சொல்லி தன் வீட்டுக்கு அவனை அழைக்கிறார்.  (பெரிய மனுஷன் பெரிய மனுஷன் தான்!) ஆனால் அவரது அழைப்பை ஏற்க மறுத்த அவன், கோபமாகவும், வருத்தமாகவும், அவரிடமிருந்து நகர்ந்து சென்றுவிடுகிறான். இவரும் நல்ல பையன் தானே இவன் இப்படி கவனமில்லாமல் இருக்கிறானே என்றெல்லாம் எண்ணமிட்டபடியே வீட்டை அடைந்து நகையையும் பணத்தையும் பத்திரப்படுத்துகிறார்!

     ஆனாலும் அந்த புளியங்கொட்டைக்கலர் சட்டைப்பையன் நினைப்பு மீண்டும் மீண்டும் வந்து தொந்தரவு செய்ய பிள்ளையாரிடம் அந்தப்பையனுக்காக அவனது (???!!!) நகைகள் கிடைக்க வேண்டிக்கொண்டு மேலும் தனது நகைகளை பத்திரமாக வீடுகொண்டுவந்து சேர பையன் ரூபத்தில் உதவிய பிள்ளையாருக்கு ஒரு சதுர்காய் உடைத்துவிட்டு நன்றாக உடைந்திருக்கிறதா என்று தொட்டிக்குள் பார்த்தால்(???) தொட்டிக்குள் திருடு போன நகைப்பெட்டி உடைந்த நிலையில்! அப்பொழுதுதான் அந்த புளியங்கொட்டைக்கலர் சட்டைப்பையன்மீது முதியவருக்கு ஒரு சந்தேகம் எழத்தொடங்குகிறது! அவர் பிள்ளையாரைப் பார்க்க பலத்த இடிமின்னலுடன் பெருமழை துவங்குகிறது! திரை!!!

மிகவும் எளிமையான கோர்வையான காட்சி அமைப்புடன் கூடிய முதியவரின் அற்புதமான பாத்திரப்படைப்பினைப் பறைசாற்றும் கதை!  நகைகடையின் வர்ணனைகள் மற்றும் காட்சிகள் மிகவும் யதார்த்தம்!  மூக்குத்தி வாங்கும் பெரியவருக்கே ‘காது குத்த’ முயற்சித்து கடைசியில் மண்ணைக் கவ்வும் பையனைப் பார்த்து “புளியங்கொட்டைக்கலர் சட்டை - போடா நீ ஒரு கூமுட்டை” என்று விநாயகரே கானா பாட்டு பாடுவதுபோன்று ஒரு நகைச்சுவையான காட்சி நம் கண் முன்னே விரிகிறது!

     அந்த காலத்து மனிதர்களின் வெள்ளந்தி குணம், மற்றவர்களது கஷ்டம் பார்த்து இரங்கும் மனம், தேவையில்லாமல் பணத்தை வீணாக்காத, பணத்தின் மதிப்பு தெரிந்த குணம், அதே நேரத்தில் முன் ஜாக்கிரதை குணம் என பலவற்றையும் உள்ளடக்கியதான முதியவரின் பாத்திரம் நடிகர் கமல்ஹாசனை ஞாபகப்படுதுவதாக இருக்கிறது!  அந்த காலத்திற்கும் இந்த கால சமுதாய சூழ்நிலைகள் அற்றும் மக்களின் மனப்பாங்கு எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது - "மூக்குத்தி"


“அல்லாவைத் தொழு; ஒட்டகத்தைக் கட்டிப்போடு” என்ற அராபியப் பழமொழியை ஞாபகப்படுத்தும் கதை!


மேலும் நான் தடுக்குக்குள்ளேயும் ஒளிவேன். நீ தடுக்குக்குள்ளே புகுந்தால் நான் கோலத்துக்குள்ளேயே புகுந்து தப்பிப்பேன்” என்ற சொலவடையையும் முதியவரின் பாத்திரப்படைப்பு நினைவுபடுத்துகிறது!

வினாயகரின் கண்ணீர் ஒருகண்ணில் ஏமாற்ற நினைக்கும் இளைஞனுக்காக வருந்தி வி)டு)ழும் கண்ணீராகவும்மறு கண்ணில் அத்தகைய கயவனிடமிருந்து ஒரு வெள்ளந்தி மனிதரை காப்பாற்றி மூக்குத்தியை பத்திரமாக வீடு கொண்டு சேர்த்ததற்கான ஆனந்தக் கண்ணீராகவும் - மழையாக விழுவதாகத் தோன்றுகிறது! 

“நான் பாத்தா பைத்தியக்காரேன்! ஒம்பாட்டனுக்கும் வைத்தியம் பாப்பேன்” என்ற திரைப்படப் பாடல்வரிகளை முதியவர் கிளைமாக்ஸில் பாடுவது போன்ற காட்சி நம் கண்முன்னே விரிகிறது!

முதியவரை ஏமாற்ற நினைத்து இறுதியில் தானே ஏமாறும் “புளியங்கொட்டைக்கலர் சட்டை பையனின் பாத்திரப்படைப்பினை பார்க்கும் பொழுது

“ஏமாற்றாதே ஏமாறாதே” என்ற தலைப்பும்கூட இந்த கதைக்கு(ம்) பொருத்தமாகவே இருக்கும் என்று தோன்றுகிறது! கதாசிரியர் எப்பொழுதும் போலவே………நம்மை ஏமாற்றவில்லை!

நன்றி!


 










மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 



இனிய நல்வாழ்த்துகள்.








    



இனிப்பான இரண்டாம் பரிசினை 


வென்றுள்ள மற்றொருவர்


முனைவர் திருமதி


 இரா. எழிலி  


அவர்கள்


 






இனிப்பான இரண்டாம் 


பரிசினை வென்றுள்ள 


முனைவர் திருமதி


 இரா. எழிலி  


அவர்களின் விமர்சனம் இதோ:
 




மூக்குத்தி வாங்கப்போன முதியவரின் கதையை முதியவரே ஒரு கதைபோலக் கூறுமாறு அமைத்தது மிகவும் பாந்தம்.

முதியவர் மஞ்சள் பையும் (துணிப்பை இப்போது பிளாஸ்டிக்கால் விளையும் மாசினைத் தடுக்கப் பரிந்துரைக்கப் படுகிறது) குடை சகிதம் பயணப்படுவது அக்மார்க் கிராமத்து வாசியைக் கண்முன் நிறுத்துகிறது. பேருந்தில் கூட்ட நெரிசலுக்கான காரணத்தை ஆராய்தல், நகைக்கடைகளிலும், துணிக்கடைகளிலும் பேருந்து நிறுத்தம் மற்றும் இரயில் நிலையங்களில் காணும் கூட்டத்தைப்போன்று எல்லா நாட்களிலும் கூட்டம் நிரம்பி வழிவதை எண்ணி வியக்கிறார்.


கிராமத்தில் விவசாயி பயிரிடத் தண்ணீர் கிடைக்காதபோது, நகரத்தில் பணத்தைத் தண்ணீராய் தங்கம் வாங்கச் செலவழிப்பதை எண்ணி ஆதங்கப் படும் இடம் அருமை.


அந்தக்கால வியாபாரம், இக்கால வியாபாரத்திற்குள்ள வேறுபாடுகளை மிக அருமையாய், துல்லியமாய் விவரித்த விதம் அருமை. அந்தக்காலத்தில் நம்பிக்கை மற்றும் நாணயத்திற்குப் பெயர் போன ஓரிரு கடைகளில், பொறுமையுடன் நகை வாங்கியதையும், குளிர் நீர் கொடுத்து உபசரித்ததையும் இந்நாளில் நகை வாங்குவார்கள் எனத் தெரிந்து பழரசம் கொடுப்பதாகக் காண்பித்ததும் அருமை.


விளம்பர யுகத்தில், போட்டியான வியாபாரம், அடுக்குமாடிக்கட்டக் கடைகள், வாடிக்கையாளரைக் கவர்ந்திழுக்க தன் கடைதான் உயர்ந்தது என்பது போன்ற விளம்பரங்கள். “தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ” என்ற காலம் போய் வாங்கும் தங்க நகைகளின் தரம் குறித்து கவலைப் படும் நாளாகி விட்டது.


பழைய நகையை அழித்து புதிய நகை செய்த காலம் போய், அவசரமும், அலட்சியமும் மிகுந்த இக்காலத்தில் பழைய நகைகளை விற்றுக் காசாக்கி, புதிய நகை வாங்கும் மோகம் வெளிப்படுத்தப் பட்டுள்ளது.


ஐந்து மாடி நகைக்கடையில், ஒருவழியாக நான்காவது மாடியில் மூக்குத்தி விற்பனை என்பதை உணர்ந்து, லிப்டிற்குள் தள்ளப்பட்டது தனி முத்திரை. எதார்த்தமானது.


காட்சிகளின் விவரிப்பில் நகைக்கடை நம் கண்முன் நிறுத்தப்படுகிறது. முதல் மாடி செயின் வாங்குமிடம் என்றதும் அவரவர் செயினைத் தடவியதாக அமைத்தது எச்சரிக்கை உணர்வு இயல்பாய் அமைந்ததை உணர்த்துகிறது. 


மூக்குத்தியை விவரிக்கையில் ஏற்புடைய படங்களை எங்கிருந்து பிடித்தாரோ என வியக்க வைக்கிறார். ஒருவாறாக தான் நினைத்த அளவு மூக்குத்தி இல்லாவிட்டாலும், இனிமேல் அலைய முடியாத நிலையில், இருந்ததில் ஒன்றை வாங்கும்போது, தங்கத்தின் விலை 40 ஆண்டுகளில் 100 மடங்கு உயர்ந்துள்ளதையும், அதனாலேயே தங்கம் வாங்கும் மோகம் அதிகரிப்பதையும் உணர்த்தி, இதே விலைக்கு 12 சவரனில் 1974ல் இரட்டை வடம் சங்கிலி ஒன்றை தம் மனைவிக்கு வாங்கியதை நினைவு கூர்ந்து பணவீக்கம், வாங்கும் தன்மை அதிகரிப்பு முதலியவற்றை அசைபோடுவதாய்க் காட்டியவிதம் அருமை.


பில்போட்டதும், கிரவுண்ட் ப்ளோரில் பணம் கட்டி நகையைப் பெற்றுக்கொள்ள வந்து காத்திருக்கும்போது, புளியங்கொட்டை கலர் முழுக்கை சட்டை வாலிபனை முன்னிறுத்தும்போது, சட்டையை மட்டுமே காட்டி வாலிபனின் உருவத்தை நம் கற்பனைக்கு விட்டுவிட்ட கதாசிரியர் பாராட்டுக்குரியவர்.


கேஷ் கவுண்டர் நெரிசல், பத்து நிமிடத்தில் எட்டு இலட்சம் வசூல் எனில் ஒருநாளைக்கு நாலைந்து கோடி என மனக்கணக்கிட்டு, இவ்வளவு முதலீட்டிற்கு அப்படியிருந்தால்தான் கட்டுப்படியாகும் என நியாயப் படுத்திக் கொள்ளுதல் முதலியவற்றில் அந்நாள் முதியோரின் மனக்கணக்குத் திறன் வெளிப்படுத்தப் பட்டுள்ளது. இந்நாளில் அபாகஸ், வேதிக் மேத்ஸ் என ஆயிரம் வசதிகள் இருந்தும் கால்குலேட்டர் இல்லாவிட்டால்…?


பரிசுப் பொருள் மீதான மோகத்தை விளக்க 90000 ரூபாய்க்கு நகைவாங்கிய ஒருவர் 300 ரூபாய் சூட்கேசைப் பெற இன்னும் 10000 ரூபாய் செலவழிக்க எண்ணுவதை விளக்கிய இடத்தில், நம்முடைய அறிவீனம் நகைப்புக்குரியதாகிறது.


கேஷ் கவுண்டரில் 22 ரூபாய் தள்ளுபடி செய்து ஒப்படைக்கையில் முதலாளியின் கைவிரல் மோதிரங்களின் கதை வேறு.


நகைக் கடையிலும், உணவகத்திலும் தன்னைப் பார்த்து புன்முறுவல் பூத்து பணத்தையும் நகையையும் பத்திரமாக எடுத்துச் செல்லும்படி கூறிய அந்த புளியங்கொட்டைக் கலர் சட்டைக்கார இளைஞன் மீது முதியவருக்கு  எள்ளளவும் சந்தேகம் எழவில்லை.


இளைஞனின் எச்சரிக்கையால் உணவகத்தில், நகையையும், செலவுக்குப் போக மிச்ச பணத்தையும் பத்திரப் படுத்தியது அவரது முதிர்ச்சிக்கு சான்றாய் அமைந்தது.


பேருந்து நிலையத்தில், கோடை மழையுடன் கூடிய தருணத்தில் கூட்ட நெரிசலில் அதே இளைஞன் அவரது குடையை வாங்கி, இடம்பிடித்து, கூட்டத்தை விலக்கி அவரை உள்ளே அனுப்பி உட்கார்ந்ததை உறுதிப் படுத்திக் கொண்டு விடைபெற, அவன் மீது இவருக்கு இன்னும் ஒருபடி மேலான நல்ல அபிப்ராயம் ஏற்படுதல் இயற்கை.


ஒருவாறாக கிராமத்தை வந்தடையும்போது, மழையில்லாமல் இருந்ததையும், புளியங்கொட்டைக் கலர் சட்டைக்கார இளைஞன் நிற்பதையும் கண்டு வியந்தாலும், ஒருவேளை யாருடனாவது இருசக்கர வாகனத்தில் வந்திருக்கலாம் என எண்ணியது அவரது வெள்ளை உள்ளத்தை வெளிப்படுத்துகிறது.


வாடிய முகத்துடன் நின்றவனிடம் நகையைப் பறிகொடுத்துவிட்டானா எனக் கேட்டறிந்து தானும் தன் மஞ்சள் பையில் வைத்திருந்த நகைப்பெட்டியை மட்டும் பறிகொடுத்துவிட்டதைக் கூறி, அவன் எச்சரித்ததால் நகையை வேட்டித் தலைப்பில் பத்திரப்படுத்தி எடுத்துவர முடிந்ததையும் விவரித்து அவனை தன்னோடு வீட்டிற்கு வருமாறு அழைப்பதும், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் அவனுடைய நகை கிடைத்துவிடும் என்று நம்பிக்கையூட்டுவதும் அருமை.


ஆனால் அவனோ கோபமாகவும், வருத்தமாகவும் சென்றது ஏன் என்பது அவருக்குப் புரியாத புதிர்.


தன்னுடைய நகையை வீட்டில் பத்திரப்படுத்தி வைத்துவிட்டாலும், அந்த வாலிபன் மேல் கொண்ட அக்கறையாலும், அனுதாபத்தாலும் விநாயகர் கோயிலுக்குச் சென்று சதிர் தேங்காய் உடைத்தபின், அந்த தொட்டியை நோக்கும் போது, தான் பறிகொடுத்த மூக்குத்தி டப்பா உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு “அவனா நீ?” அவனேதானா? என அந்த இளைஞன் மேல் சந்தேகம் கொள்கிறார். முன்னால் அவருக்குப் புரியாத புதிராய் விளங்கிய அவன் செயலுக்கான விடை இங்கே கிடைத்துவிடுகிறது. விநாயகரைப் பார்த்தபோது இவர் வெள்ளை உள்ளத்தை எண்ணி அழுவதால் மழை பெய்ததாகக் காட்டியதும் அருமை.


இனியாவது இளம் வாலிபர்கள் இதுபோன்று ஈனச் செயல்களில் ஈடுபடாமல்” Not GOLD BUT ONLY MEN CAN MAKE THE NATION GREAT AND STRONG” என்பதை அறிந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி அத்தகு வாலிபர்களுக்கு ஒரு சாட்டையடியை அளிப்பதாய் அமைத்த கதாசிரியருக்கு ஒரு ஷொட்டு.

-எழிலி சேஷாத்ரி.





 


ஏற்கனவே VGK-18 To VGK-20
HAT-TRICK PRIZE WINNER 
ஆகிய தாங்கள் தங்களுக்கான
ஹாட்-ட்ரிக் பரிசினைத் தக்கவைத்துக்கொண்டு
தொடர்ந்து நான்காம் சுற்றுக்கு இப்போது வந்துள்ளீர்கள்.


   

NOW YOU ARE THE HAT-TRICK WINNER OF VGK-18 TO VGK-21
அதற்கு என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்

Your Hat-Trick Prize Amount will be fixed later 
according to your continuous further Success in VGK-22 and VGK-23

 





    




   


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.





நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி

இரண்டாம் பரிசுத்தொகை இவ்விருவருக்கும்

சரிசமமாகப் பிரித்து வழங்கப்பட உள்ளது

.



இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்பட்டு வருகின்றன.



காணத்தவறாதீர்கள் !







அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.



oooooOooooo



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:



VGK-23 


 ’யாதும் ஊரே யாவையும் கேளிர்’  




விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


26. 06. 2014




இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.











என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

40 கருத்துகள்:

  1. இனிப்பான இரண்டாம் பரிசினை வென்றுள்ள
    முனைவர் திருமதி இரா. எழிலி அவர்களுக்கு வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  2. இனிப்பான இஅரண்டாம் பரிசினை வென்றுள்ள
    திரு. ரவிஜி மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.அவர்களுக்குப்
    பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  3. ஆவ்வ்வ்வ் மூக்குத்தி என்றதும் எனக்கு உடனே மனதில் வருவது எங்கட கண்ணதாசனின் “சிகப்புக்கல் மூக்குத்தி” கதைதான்...

    தலைப்பே அருமை. சென்று படிக்கோணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira June 21, 2014 at 6:40 PM

      வாங்கோ அதிரா, வணக்கம்.

      //ஆவ்வ்வ்வ் மூக்குத்தி என்றதும் எனக்கு உடனே மனதில் வருவது எங்கட கண்ணதாசனின் “சிகப்புக்கல் மூக்குத்தி” கதைதான்... //

      நல்லவேளையாப்போச்சு. நான் பயந்தே பூட்டேன். நீங்க என்னிடம் [ஏதோ ஒரு நேர்த்திக்காக எனச்சொல்லி] வைர மூக்குத்தியோ தோடோ கேட்டிருந்தீர்களே. நான் கூட உங்களிடம் சைஸ் கேட்டிருந்தேனே .... அதுவாக்கும்ன்னு நினைத்து பயந்தே பூட்டேனாக்கும். ;)

      //தலைப்பே அருமை. சென்று படிக்கோணும்.//

      படியுங்கோ படியுங்கோ. நீங்க படிக்க வேண்டியதும், பார்க்க வேண்டியது, கருத்துச்சொல்ல வேண்டியது நிறையவே பாக்கியுள்ளன.

      நீக்கு
    2. ஹா..ஹா..ஹா.. கோபு அண்ணன்.. உண்மையாத்தான் நான் மறந்தே போயிட்டேன்ன்ன்.. நல்லவேளை நியாஆஆஆஆஅபகப் படுத்தினீங்க.. எங்கே வைரக்கல் தோடூஊஊஊஊஊஊஊ???...

      நீக்கு
    3. தங்களுக்காக ஆசையாக வைரத்தோடு, வைரமூக்குத்தி, வைர நெக்லஸ் என எல்லாவற்றிற்குமே ஆர்டர் கொடுக்க அன்றே புறப்பட இருந்தேன். புறப்படுமுன் டாராக கிழித்துவிட்டேன் என் செக் புக்கிலிருந்து ஒரு செக்கையும்.

      சைஸ் மட்டும் தங்களிடம் கேட்டேன். தாங்கள் இன்றுவரை தங்களின் சைஸ் என்னவென்றே எனக்குச்சொல்லவில்லை.

      கேட்டதற்கு எனக்கு நகையே வேண்டாம் ஸ்வாமீ, நான் பிச்சையெடுத்தாவது என் நேர்த்திக்கடனை செலுத்திக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டீர்கள்.

      இவ்வாறான நமது நீண்ட பேச்சு வார்த்தைகள் பல பின்னூட்டங்களாக என் பழைய பதிவுகளில் உள்ளன.

      அதனால் தங்களுக்கு வைர நகைகள் அளிப்பதில் நான் ஆர்வமாக இருந்தும் தங்களாலேயே இவ்வளவு தாமதம் ஆகிவிட்டது.

      இதற்கிடையில் தங்களின் சைஸும் வெகுவாக மாறியிருக்கக்கூடும்.

      எனவே ........... நான் இது சம்பந்தமாக மென்மேலும் எதுவும் சொல்லவிரும்பவில்லை. ;)

      நீக்கு
  4. கதையைவிட அதற்கான விமர்சனம் பெரிதாக இருக்கும்போல இருக்கே... அழகிய விமர்சனங்கள்.. சரியாத்தான் தெரிவு செய்திருக்கிறீங்க கோபு அண்ணன்.. உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    அதுசரி இப்படி செய்வது உங்களுக்கு கஸ்டமாக இல்லையா? ஈசியா இருக்கோ? கிட்டத்தட்ட ஒரு பேப்பரில் போட்டி வைத்து பரிசு கொடுப்பது போலல்லவா இருக்கு.

    தொடரட்டும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira June 21, 2014 at 6:42 PM

      //கதையைவிட அதற்கான விமர்சனம் பெரிதாக
      இருக்கும்போல இருக்கே... அழகிய விமர்சனங்கள்..
      சரியாத்தான் தெரிவு செய்திருக்கிறீங்க கோபு அண்ணன்..//

      தேர்வு செய்வது நான் அல்ல அதிரா. அதற்கென ஓர் நடுவர்
      இருக்கிறார்கள். பரிசுக்குத் தேர்வு செய்வது அவர்கள்
      மட்டுமே தான்.

      //உங்களுக்கும் வாழ்த்துக்கள்.//

      மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

      //அதுசரி இப்படி செய்வது உங்களுக்கு கஸ்டமாக
      இல்லையா? ஈசியா இருக்கோ?//

      உண்மையிலேயே இப்போதெல்லாம் கொஞ்சம்
      கஷ்டமாகத்தான் உள்ளது. இருப்பினும் முன் வைத்த
      காலை பின் வைப்பதாக இல்லை. ஆரம்பித்துள்ள இந்த
      போட்டியில் இதுவரை தொய்வேதும் இல்லாமல் 21 / 40 ....
      More than 50% தாண்டியாகி விட்டது. மீதியையும்
      வெற்றிகரமாக முடித்து விடலாம் என்ற நம்பிக்கையும்
      உள்ளது. பார்ப்போம்.

      //கிட்டத்தட்ட ஒரு பேப்பரில் போட்டி வைத்து பரிசு கொடுப்பது போலல்லவா இருக்கு.//

      பேப்பர்காரர்கள், பத்திரிகைக்காரர்களெல்லாமாவது ஒரு குழுவாகச் சேர்ந்து செயல்பட்டு இத்தகைய போட்டிகளை நடத்துவார்கள். நான் தனியொருவனாகவே இதை ஆர்வத்துடன் செய்து வருகிறேன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

      இதில் கிடைக்கும் ஆத்மதிருப்திக்கு முன்னால்
      கஷ்டமெல்லாம் பறந்தோடி விடுகிறது என்பதே உண்மை.

      //தொடரட்டும் வாழ்த்துக்கள்.//

      அதிரடி அதிராவும் தொடர்ந்து வருகை தந்து வாழ்த்தட்டும்.
      முடிந்தால் அதிராவும் போட்டியிலும் பங்கு கொள்ளட்டும். ;)

      நீக்கு
    2. ஆவ்வ்வ் இவ்வளவு வேலைமத்தியிலும் பொறுமையாகப் பதில் போட்டமைக்கு நன்றி கோபு அண்ணன்.... போட்டி பங்குபற்ற விருப்பம்தான் ஆனா செய்வன திருந்தச் செய்யோணும் என்பது என் ஆசை.. சும்மா அரை குறையாக அவசரத்தில் பின்னூட்டம் போட்டுவிட்டு ஓடுவதுபோல இருக்க முடியாதெல்லோ விமர்சனம். அதனால்தான் அதில் கால் எடுத்து வைக்கவில்லை நான். நீங்க மிகுதி 50 வீதத்தையும் இனிதே நடத்தி முடிக்க வாழ்த்துக்கள்.

      என்னால் முடிஞ்சது.. அப்பப்ப பாராட்டுவிழா.. முடிவுகளுக்கு வருகிறேன்ன்.

      நீக்கு
    3. athira June 21, 2014 at 11:12 PM
      //ஆவ்வ்வ் இவ்வளவு வேலைமத்தியிலும் பொறுமையாகப் பதில் போட்டமைக்கு நன்றி கோபு அண்ணன்.... //

      அன்புள்ள, அதிரபதே, அட்டகாச, அலம்பல் அதிரடி அதிராவுக்கு மட்டுமே பதில் கொடுத்துள்ளேன் என்பதை அறியவும்.

      //போட்டியில் பங்குபெற விருப்பம்தான். ஆனா செய்வன திருந்தச் செய்யோணும் என்பது என் ஆசை.. சும்மா அரை குறையாக அவசரத்தில் பின்னூட்டம் போட்டுவிட்டு ஓடுவதுபோல இருக்க முடியாதெல்லோ விமர்சனம். அதனால்தான் அதில் கால் எடுத்து வைக்கவில்லை நான். //

      அதனால் பரவாயில்லை. எல்லாம் நன்மைக்கே. விமர்சனத்தில் தங்களின் கொச்சைத்தமிழைப்படித்து
      உயர்திரு நடுவர் அவர்களுக்கும் நடுக்கம் ஏதும் இல்லாமல் இருக்கக்கூடும். அதற்கு என் நன்றிகள்.

      >>>>>

      நீக்கு
    4. 2] Gopu to athira

      //செய்வன திருந்தச் செய்யோணும் என்பது என் ஆசை.//

      என்று சொல்லுகிறீர்கள். ஆனால் அதையும் திருந்தச்
      செய்யவில்லையே ! ;(

      இந்த மூக்குத்திக்கதை விமர்சங்களுக்கு மொத்தம் ஐந்து
      பேர்கள் பரிசுக்குத் தேர்வாகியுள்ளனர். இந்தப்பதிவினில்
      இருவர் பெயர்கள் உள்ளன. இதற்கு முந்திய பதிவினில்
      ஒருவர் பெயர் உள்ளது. அவர் உங்களுக்கு மிகவும்
      வேண்டியப்பட்டவரும் கூட. ஆசையாக அக்கா அக்கா என்று சொல்லுவீர்கள். ஆனால் இப்போது அந்தப் பதிவுப்பக்கம் வருகை தந்து உங்கள் அக்காவைக் கண்டுகொள்ளவே இல்லை. ;(

      இணைப்பு இதோ:

      http://gopu1949.blogspot.in/2014/06/vgk-21-03-03-third-prize-winner.html

      >>>>>

      நீக்கு
    5. 3] Gopu to athira

      //நீங்க மிகுதி 50 வீதத்தையும் இனிதே நடத்தி முடிக்க வாழ்த்துக்கள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அதிரா.


      >>>>>

      நீக்கு
    6. 4] Gopu to athira

      //என்னால் முடிஞ்சது.. அப்பப்ப பாராட்டுவிழா.. முடிவுகளுக்கு வருகிறேன்.//

      முதலில் மேற்படி பதிவினில் அக்காவைப் பாராட்டி வாழ்த்தி எழுதுங்கோ. VGK-21 மூக்குத்தி முடிவுகளிலிருந்து தங்களின் புதிய வருகைத் தொடங்குவதாக வைத்துக்கொள்வோம்.

      >>>>>

      நீக்கு
    7. 5] Gopu to athira

      VGK-01 to VGK-10 க்கு ஒட்டுமொத்தமாக பரிசளிப்புப் பதிவு
      ஒன்று உள்ளது. அதற்கு ஒரு பின்னூட்டக்கருத்து
      கொடுங்கோ.

      http://gopu1949.blogspot.in/2014/04/vgk-10-04-04-vgk-01-to-vgk-10.html

      அதுபோலவே VGK-11 to VGK-20 க்கு ஒரு
      ஒட்டுமொத்தப்பதிவு உள்ளது. அதற்கும் கருத்துச்
      சொல்லுங்கோ போதும்.

      http://gopu1949.blogspot.in/2014/06/vgk-11-to-vgk-20_16.html

      மொத்தம் மூன்று பதிவுகளுக்கு மட்டும் அதிராவின்
      கருத்துக்களை இப்போதைக்கு ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

      அன்புடன் கோபு அண்ணன்.

      நீக்கு
  5. மாறுபட்ட இரு விமர்சனங்கள். இரண்டாம் பரிசு பெற்றுள்ள திரு.ரவிஜி அவர்களுக்கும் முனைவர் திருமதி இரா.எழிலி அவர்களுக்கும் இனிய பாராட்டுகள். மீண்டும் ஹாட்ரிக் பரிசுக்குத் தேர்வாகியுள்ள இரா.எழிலி அவர்களுக்கு சிறப்பு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  6. //வினாயகரின் கண்ணீர் ஒருகண்ணில் ஏமாற்ற நினைக்கும் இளைஞனுக்காக வருந்தி வி)டு)ழும் கண்ணீராகவும், மறு கண்ணில் அத்தகைய கயவனிடமிருந்து ஒரு வெள்ளந்தி மனிதரை காப்பாற்றி மூக்குத்தியை பத்திரமாக வீடு கொண்டு சேர்த்ததற்கான ஆனந்தக் கண்ணீராகவும் - மழையாக விழுவதாகத் தோன்றுகிறது!

    “நான் பாத்தா பைத்தியக்காரேன்! ஒம்பாட்டனுக்கும் வைத்தியம் பாப்பேன்” என்ற திரைப்படப் பாடல்வரிகளை முதியவர் கிளைமாக்ஸில் பாடுவது போன்ற காட்சி நம் கண்முன்னே விரிகிறது!// நல்ல வரிகள்! பரிசு பெற்ற திரு. மாயவர்த்தான் எம்.ஜி.ஆர் அவர்களுக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  7. என்னுடைய விமர்சனம் இரண்டாம் பரிசுக்குத் தெரிவானதில் மிகவும் மகிழ்வடைக்கிறேன். வாய்ப்பளித்த உயர்திரு . வைகோ சார் அவர்களுக்கும் தெரிசு செய்த நடுவர் அவர்களுக்கும் மிக்க நன்றி! வாழ்த்திய வாழ்த்தப்போகும் நல்லிதயங்களுக்கு என் உளமார்ந்த நன்றி!

    பதிலளிநீக்கு
  8. அன்பின் திருமதி முனைவர் எழிலி அவர்களே !

    விமர்சனம் எழுதி இரண்டாம் பரிசு பெற்ற்மைக்கும் ஹாட்ட்ரிக் பரிசு பெற்றமைக்கும் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  9. அன்பின் திருமதி முனைவர் இரா எழிலி - சிறுகதை விமர்சனப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றமைக்கும், ஹாட்ட்ரிக் பரிசு பெற்றமைக்கும் பாராட்டுகள் - மேன்மேலும் பரிசுகள் பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  10. இரண்டாம் பரிசு இருவருக்கு
    ரவிஜி
    எழிலி
    ஆகியோருக்கு
    மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  11. இரண்டாம் பரிசு பெற்ற திரு. ரவிஜி, திருமதி எழிலி அவர்களுக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. இனிப்பான இரண்டாம் பரிசினை,
    சுவையான விமர்சனம் எழுதி
    வெற்றி பெற்ற திருமதி. இரா. எழிலி சேஷாத்ரி
    அவர்களுக்கும் ,
    திரு. ரவிஜி ரவி அவர்களுக்கும்
    பாராட்டுக்கள் !

    பதிலளிநீக்கு
  13. பரிசு பெற்ற இருவருக்கும் எந்து பாராட்டுகள்! மேலும் பரிசுகள் பெற வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  14. திரு. ரவிஜி மாயவரத்தான் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், முனைவர் திருமதி இரா. எழிலி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
  15. அன்பின் வை.கோ மற்றும் அதிரா - விமர்சனம் எழுதி பரிசு பெற்ற இருவருக்கும் வாழ்த்துகள் கூறி மறுமொழிகள் ஏற்கனவே இட்டு விட்டேன்.

    ஆகவே இப்பொழுது வை.கோ மற்றும் அதிரா ஆகிய இருவருக்கும் நடுவே நடந்த மற்மொழிகள் பற்றிய மறுமொழி இங்கே. இருவரும் போட்டி போட்டுக்கொண்டு மறுமொழிகளுக்கு மறுமொழிகள் என எழுதித் தள்ளுகிறார்கள். அத்த்னைஅயும் அருமை - மிக மிக இரசித்தேன். இருவருக்கும் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  16. http://mayavarathanmgr.blogspot.in/2014/06/blog-post_21.html

    திரு ரவிஜி - மாயவரத்தான் எம்.ஜி.ஆர். அவர்கள்.

    இந்த சிறுகதை விமர்சன வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  17. அன்பின் வை.கோ - ரவிஜியின் பதிவினிற்கும் சென்று பாராட்டி வாழ்த்துகள் கூறி மகிழ்ந்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    அனைவரையும் பாராட்டி மகிழ வேண்டும் என்ற தங்களீன் நல்லெண்ணம் பாராட்டுக்குரியது. நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  18. இரண்டாம் பரிசினைப் பெற்ற சகோதரர் ரவிஜி அவர்களுக்கும் மற்றும் சகோதரி எழிலி சேஷாத்திரி அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  19. ஹாட்ட்ரிக் பரிசு பெற்ற முனைவர் எழிலிசேஷாத்திரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    , ரவிஜி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
    இருவர் விமர்சனமும் அருமையாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  20. இரண்டாம் பரிசினை வென்ற இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  21. மாறுபட்ட இரண்டு விமர்சனங்கள்.... திரு ரவிஜி மற்றும் திருமதி எழிலி சேஷாத்ரி ஆகிய இருவருக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  22. இரண்டாம் பரிசு பெற்ற ரவிஜி அவர்களுக்கும், திருமதி எழிலி அவர்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  23. இந்த வெற்றியாளர், முனைவர் திருமதி எழிலி சேஷாத்ரி அவர்கள் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினை அவரின் கணவர் திரு. E.S. சேஷாத்ரி [காரஞ்சன் சேஷ்] அவர்கள் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    http://esseshadri.blogspot.com/2014/06/blog-post_29.html

    அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  24. முனைவர் எழிலி சேஷாத்திரி அவர்களுக்கும் திரு.ரவிஜி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  25. தருமதி எழிலி சேஷாத்ரி திரு ரவிஜி வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  26. இரண்டாம் பரிசு பெற்ற திரு. ரவிஜி அவர்களுக்கும், திருமதி எழிலி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  27. திருமதி எழிலி திரு ரவிஜி அவங்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  28. திருமதி எழிலி திரு ரவிஜி அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  29. //இரண்டாம் பரிசினை வென்றுள்ள
    முனைவர் திருமதி இரா. எழிலி அவர்களுக்கு வாழ்த்துகள்..!//

    பதிலளிநீக்கு
  30. பரிசு பெற்ற இருவருக்கும் எந்து பாராட்டுகள்! மேலும் பரிசுகள் பெற வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு