என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 11 நவம்பர், 2015

நேயர் கடிதம் - செல்வி. மெஹ்ருன் நிஸா


செல்வி. 
 மெஹ்ருன் நிஸா 
அவர்களின்  
உருக்கமான நேயர் கடிதம்

 


 குரு வணக்கம்


என் குருஜி கோபு சாரின் வலைத்தளத்தினில் 
2014ம் ஆண்டு நடைபெற்ற 40 வார 
‘சிறுகதை விமர்சனப்போட்டிகள்’ பற்றியும், 
அவற்றில் பங்குகொண்டு வெற்றி பெற்றுள்ள 
பலரின் மிகச்சிறப்பான விமர்சனங்களையும், 
இறுதியில் 2014 அக்டோபர் மாதத்தில் 
அந்தப்போட்டிகளில் கலந்துகொண்டுள்ள 
பலரும் எழுதியிருந்த நேயர் கடிதங்களையும் பார்த்து, 
படித்து எனக்குள் பரவஸப்பட்டு மிகவும் மகிழ்ந்து போனேன்.    

அந்த நேயர் கடிதங்களுக்கான இணைப்புகள்:




2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் எழுதப்பட்டிருந்த மேற்படி நேயர் கடிதங்களில், குருஜி கோபு சார் 2014ம் ஆண்டு தன் வலைத்தளத்தினில் வெற்றிகரமாக நடத்திக் காட்டியிருந்த ‘சிறுகதை விமர்சனப்போட்டிகள்’ பற்றிய அருமை பெருமைகளையும், குருஜி கோபு சாரின் கதை எழுதும் தனித்திறமைகள் பற்றியும், விலாவரியாக ஒவ்வொருவராலும் சொல்லப்பட்டிருந்தன. எனக்கு அவைபற்றியெல்லாம் ஏதும் விபரமாக அப்போது தெரிந்திருக்கவில்லை.

இவ்வாறு நிறைய பேர்களுடைய நேயர் கடிதங்களைப் படித்ததும், எனக்கும் அதுபோல ஒரு நேயர் கடிதம் நான் எழுத வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது ..... புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதையாக..... 


இந்த 2015ம் ஆண்டு குருஜி கோபு சார் நடத்திவரும் 
100% பின்னூட்டமிடும் போட்டியில் http://gopu1949.blogspot.in/2015/03/120404.html கலந்துகொண்டு நானும் இப்போது வெற்றி பெற்றுள்ளதால், அதைப்பற்றியே ஓர் நேயர் கடிதம் எழுதி இப்போது அனுப்ப மிகச்சரியான சந்தர்ப்பமும் அமைந்துள்ளதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே.  

மற்ற பதிவர்களுக்கெல்லாம் குருஜி கோபு சாருடன் பல வருஷங்களாகப் பழக்கம் இருக்கும் என நினைக்கிறேன். குருஜிக்கும்கூட ஒவ்வொருவரிடமிருந்தும் வேவ்வேறு மாதிரியான அனுபவங்கள் இதுவரை கிடைத்திருக்கக்கூடும். குருஜி மற்ற பதிவர்களின் எழுத்துக்களைப் படித்துப் பாராட்டி உற்சாகப்படுத்தி ஊக்கம் கொடுத்து வருவதை தங்களில் பலரும் தெரிந்திருப்பீர்கள் 

எனக்கு குருஜியோட இப்போ ஒரு ஆறு மாதங்கள் முன்புதான் பழக்கம் ஏற்பட்டது. ஃபேஸ்புக்கில் தான் பார்த்து ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பியிருந்தேன். பிறகு என் மனசு பூராவும் ஒரே உதறல்தான். நம்மளப்போய் ஃப்ரெண்டா ஏத்துக்கிடுவாங்களா என்று. அடுத்த நாளே அக்ஸப்ட் பண்ணி சந்தோஷமான ஷாக் கொடுத்து விட்டார்கள். பெரிய மனுஷங்க எப்போதுமே பெரிய மனுஷங்கதான்.  

அதுசமயம் வலைப்பதிவு பற்றியெல்லாம் எனக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை. குருஜியின் பதிவுகள் சிலவற்றைப் படித்தேனே தவிர என்னால் அவற்றிற்கு பின்னூட்டம் இட இயலவில்லை.  நாமும் நம் பெயரில் தனியே ஓர் வலைப்பதிவு வைத்துக்கொண்டால் மட்டுமே, பிற பதிவர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டம் இடமுடியும் என பிறகு நான் தெரிந்துகொண்டேன். எங்கெங்கேயோ தேடிப்பிடித்து நானும் ஓர் வலைப்பதிவு தொடங்கிவிட்டேன். ஆனால் முதலில் ஆரம்பித்த அது என்னவோ சொதப்பிக்கிச்சு. 

மறுபடியும் வேறு ஒரு பெயரில் மீண்டும் புதிதாக வலைப்பதிவு ஒன்று ஆரம்பித்தேன். அதன்பிறகு மட்டுமே குருஜி பக்கம் வந்து கமெண்ட்ஸ் போட முடிந்தது. வலைப்பக்கம் தொடங்கியபிறகு ஏதேனும் அதில் நான் எழுதணும் இல்லையா. என்ன எழுதுவது என்றே எனக்கு எதுவும் புரியவில்லை. குருஜியின் அற்புதமாக பதிவுகளையும், அதில் அவர் காட்டிவரும் அழகான படங்களையும், அதற்கு அவருக்குக் கிடைக்கும் பலரின் சூப்பரான பின்னூட்டங்களையும் பார்த்து, படித்து, எனக்குள் நான் பெருமூச்சு விட்டுக்கொண்டேன். 

பதிவுகளில் படங்களை இணைப்பது எப்படி என்று கேட்டு, குருஜியைத் தொந்தரவு செய்து நச்சரித்துக்கொண்டே இருந்தேன். சின்னக்குழந்தைக்குச் சொல்லி புரிய வைப்பதுபோல அழகாக பொறுமையாக ஸ்டெப்-பை-ஸ்டெப்பாகச் சொல்லிக்கொடுத்தாங்க, குருஜி. அதை நான் நன்கு புரிஞ்சுக்கிட்டு, பதிவினில் படங்களை இணைக்கக் கற்றுக்கொண்டு விட்டேன். யாரு இப்படியெல்லாம் ஹெல்ப் பண்ணுவாங்க ? 

அதுமட்டுமா, என் புத்தம் புதிய வலைப்பதிவுப் பக்கம் வந்து முதன்முதலாக சில கமெண்ட்ஸ் கொடுத்து உற்சாகப் படுத்தியிருந்தார்கள் நம் குருஜி. 




அந்த நேரம்தான், ’நினைவில் நிற்கும் பதிவர்களும் பதிவுகளும்’ என்ற தலைப்பினில் தொடர்ச்சியாக 35 நாட்களுக்கு, சுமார் 170 பதிவர்களின் ஆயிரக்கணக்கான பதிவுகளைச் சிறப்பித்தும், அவர்கள் ஒவ்வொருவரின் தனித்திறமைகளையெல்லாம் சொல்லி கெளரவப்படுத்தியும், தனது பதிவுகளில் எழுதி வெளியிட்டு வந்தார்கள். அதில் 35ம் நிறைவுத் திருநாள் அன்று புதுப்பதிவராகி நான்கே நாட்கள் மட்டும் ஆகியிருந்த என்னையும், அறிமுகப்படுத்தி ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்துட்டாங்க. இதைக்கண்ட என் கண்களில் ஆனந்தக்கண்ணீரே வந்து விட்டது. http://gopu1949.blogspot.in/2015/07/35.html

என் அம்மி (தாயார்) பள்ளிக்கூடப்பக்கமே போனது இல்லை. அவர்களுக்கு எழுதப்படிக்கத் தெரியாது. குருஜி கோபு சார் எழுதிய கதைகளை ஒவ்வொன்றாக அவர்களுக்கு நான் படித்துக்காட்டுவது உண்டு. மிகவும் ஆர்வமாக ரஸித்துக் கேட்டுப்பாங்க. நடு நடுவே சூப்பராக என்னிடம் தன் கருத்துக்களைக் கமெண்ட்டா அழகா நகைச்சுவை கலந்து பகிர்ந்து சொல்லி மகிழ்வாங்க.  குருஜி கதைகளை நான் படித்துச் சொல்லும்போதும், என் அம்மி அதனை கவனமாகக் கேட்கும் போதும், இருவருக்குமே ஒரே சிரிப்புப் பொத்துக்கொண்டு வரும்.

அப்போதுதான் எனக்கும் இந்த 2015ம் ஆண்டு நம் குருஜி அறிவித்துள்ள பின்னூட்டப்போட்டி பற்றிய தகவலே தெரிய வந்தது. இதுபற்றி எனக்குத் தெரிய வந்தது 2015 செப்டெம்பர் கடைசி வாரத்தில் மட்டுமே.

”விருப்பப்பட்டால் இந்த 2015ம் ஆண்டு, நான் அறிவித்துள்ள பின்னூட்டப்போட்டியில் நீங்களும் கலந்துகொள்ளலாம்” என குருஜி என்னிடம் சொன்னார்கள். 


”போட்டிக்கான இறுதித்தேதிக்கு இன்னும் மூன்று மாதங்கள் கூட இல்லை என்பதால், நான் எப்படி அதற்குள் குருஜியின் 750 பதிவுகளுக்கும் கமெண்ட்ஸ் போட முடியும்? என்னால் இயலாது” எனச் சொல்லிவிட்டேன். உடனே குருஜி என்னை உற்சாகப் படுத்தினாங்க. ”முயற்சியே பண்ணாமல், என்னால் இயலாது என்று சொன்னால் எப்படி? ..... முதலில் நீங்க முயற்சி செய்து பாருங்க”ன்னு சொன்னாங்க.



ooooooooooooooo

அப்போ எனக்கு ஒரு கதை நினைவுக்கு வந்தது:

கடவுளைக் கண்மூடித்தனமாக நம்பும் ஒரு ஆள் சாமியிடம் போனார். “சாமியே, உன்னைத்தான் முழுசா நான் நம்பியிருக்கேன்.  இந்த மாத லாட்டரியிலே முதல் பரிசு ‘ஒரு கோடி ரூபாய்’ எனக்கே கிடைக்கணும். இல்லாவிட்டால் என் இடது கையை வெட்டிக்கொள்வேன்” என்று வேண்டிக்கொள்கிறார். ஆனால் அந்த மாதம் அவருக்கு பரிசு கிடைக்கவில்லை. மறுமாதமும்  சாமியிடம் வருகிறார். “சாமியே,  உன்னைத்தான் முழுசா நான் நம்பியிருக்கேன். சென்ற மாதம் இப்படி என்னை ஏமாற்றி விட்டாயே.  இந்த மாத லாட்டரியிலேயாவது ’முதல் பரிசு ‘ஒரு கோடி ரூபாய்’ எனக்கே கிடைக்கணும். இல்லாவிட்டால் என் வலது கையையும் வெட்டிக்கொள்வேன்”  என்கிறார். அந்த மாத லாட்டரியிலும் அவருக்குப் பரிசு கிடைக்கவில்லை.

இதைப்பார்த்த சாமியோட பொஞ்சாதி சாமிகிட்டே “அவன் உங்க மேலே இப்படியொரு பக்தியோட இருக்கானே, ஏன் நீங்க அவனுக்கு பரிசுப்பணம் கிடைக்கச் செய்யாமல் இருக்கீங்க” என்கிறார்கள். அதற்கு அந்த சாமி “போடி பைத்தியக்காரி, இங்க பாரு ..... நான் பெட்டி நிறைய பணத்தை வெச்சுக்கிட்டு தயாராகத்தான் இருக்கேன். அவன் லாட்டரி டிக்கெட்டே இதுவரைக்கும் வாங்கவே இல்லையே ...... அதாவது அவன் அதற்கான சிறிய முயற்சியைக்கூட செய்யவில்லையே” என்கிறார். சாமி சொல்வதும் மிகவும் கரெக்ட் தானே !

ooooooooooooooo


அதுபோலவே நானும் இருந்துவிடக்கூடாதுன்னு குருஜி பதிவுகளுக்குக் கமெண்ட்ஸ் போடுகிற முயற்சிகளில் இறங்கி விட்டேன். தினமும் என்னென்ன பதிவுகளுக்குக் கமெண்ட்ஸ் போடணும்ன்னு, மூன்று மூன்று மாதப்பதிவுகளுக்கான லிங்ஸ் அனுப்பி அவ்வப்போது எனக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்துக்கொண்டே வந்தார் நம் குருஜி. ”முயற்சி செய்தால் உங்களாலேயும் ஜெயித்துக்காட்ட இயலும்” என்று எனக்கு அடிக்கடி தன்னம்பிக்கையை ஊட்டி வந்தார் குருஜி.


தொடர்ச்சியாகப் பின்னூட்டங்கள் கொடுத்து வந்த நான் ஒரு காலக்கட்டத்திற்குப்பிறகு ”உங்களோட ஆன்மிகப் பதிவுகளுக்கெல்லாம் என்ன மாதிரி கமெண்ட்ஸ் கொடுக்கணும்ன்னு எனக்கு விளங்கவே இல்லை. அதனால் போட்டியிலிருந்து நான் விலகிக்கொள்கிறேன்” என்று மிகவும் வருத்தத்துடன் சொன்னேன். 

போட்டியில் பாதிக்கிணறு தாண்டிவிட்ட என்னை குருஜி அப்படியே அம்போன்னு விட்டுடுவாரா என்ன? தடுத்தாட்கொண்டார்கள்.:) ஆன்மிகப்பதிவுகளுக்கு மட்டும் எப்படி எப்படியெல்லாம் சிக்கலில்லாமல் பின்னூட்டங்கள் கொடுத்து நான் தப்பிக்கலாம் என ஒருசில ஆலோசனைகளும் சொல்லி, ஒருசில விசேஷ சலுகைகளும் தனியாக எனக்கு மட்டும் அளித்து,  நான் என் கமெண்ட்ஸ்களைக் கண்டின்யூ செய்ய வைத்தார்கள். 

மேலும் ”எனக்கு எல்லோரையும் போல தமிழில் அழகாக எழுத வராது .... எனக்குத் தமிழ் கொச்சையாக மட்டுமே எழுத வரும்” என்று நான் குருஜியிடம் சொல்லி வருத்தப்பட்ட போது, “அதெல்லாம் ஒரு பெரிய விஷயமே கிடையாது .... உங்களுக்கு எப்படி தமிழ் எழுத வருமோ அப்படியே எழுதுங்கோ போதும்” என்று சொல்லி ஊக்கப்படுத்தி விட்டார்கள்.   


இந்தப்போட்டியிலே நான் கலந்துகொண்டதற்கு இன்னொரு மிக முக்கியமான காரணம் இதற்கான பரிசுப்பணம் ரூபாய் ஆயிரம் (ரூ. 1000) என்பதால் மட்டுமே. எங்கள் குடும்ப பொருளாதார நிலைமை ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படியாகவே இல்லை. மிடில் கிளாஸ் ஐ விட ஒருபடி கீழ்மட்டமாகவே இன்றும் உள்ளோம். இந்தப்பரிசுப்பணம் என்னைப் பொறுத்தவரை மிகப்பெரியதொரு தொகையாகும். எப்படியும் இந்தப்போட்டியில் நான் ஜெயித்தே ஆகவேண்டும் என்ற வெறியையும் பேராசையையும் எனக்குள் தூண்டி விட்டது. 07.10.2015 அன்று பின்னூட்டமிட ஆரம்பித்து 06.11.2015 அன்று [வெறும் 31 நாட்களுக்குள்] குருஜியின் அனைத்து 750 பதிவுகளுக்கும் பின்னூட்டமிட்டு முடித்து விட்டேன்.

போட்டியில் நான் வெற்றிபெற்றுவிட்டதற்கான செய்தியை குருஜி வாயிலாகக் கேட்டதும், மகிழ்ச்சியுடன் கனவு காண ஆரம்பித்தேன். அந்த பரிசுத்தொகையை எப்படியெல்லாம் செலவு செய்யணும்ன்னு ஒரு லிஸ்ட் போட்டுகிட்டு செலவுகளைக் கூட்டிப்பார்த்தால் ரூ. 1000 போதாமல் பக்கத்தில் ஒரு ஜீரோ சேர்த்து ரூ. 10000 ஆக அது வந்து நின்று என்னை பயமுறுத்தியது. பிறகு சிறிய குறைந்தபட்ச தேவைகளுக்கான பட்ஜெட்டில் ஓர் புதிய லிஸ்ட் போட்டுக்கிட்டேன்.

என் அம்மிக்கு (தாயாருக்கு) காலையிலே நாஸ்தாவாக ’குட்-டே’  பிஸ்கட் கொடுத்தால் அது மிகவும் இஷ்டமாகச் சாப்பிடும். அதனால் அம்மிக்கு ஒரு மாதம் முழுக்க சாப்பிட ‘குட்-டே’ பிஸ்கட் பாக்கெட்கள் ஒரு 10 அல்லது 15 வாங்கி வைக்கத்திட்டமிட்டேன். 


 

 


அடுத்ததாக என் அண்ணனுக்கு நல்லதா காட்டன்லே பேண்ட் + ஷர்ட் வாங்கித்தரணும் என்று குறித்துக் கொண்டேன். 

எனக்கு நல்லதொரு பேனா வாங்கிக்கொள்ள வேண்டும். இங்க் ஊற்றி எழுதும் நிப் உள்ள பேனா மட்டுமே எனக்குப் பிடிக்கும். ஆரம்பத்திலிருந்தே எனக்கு என்னவோ இந்த பால்-பாயிண்ட் பேனாக்கள் பிடிப்பதே இல்லை. ஒஸ்தியான பார்க்கர் பேனா வாங்கிக்கொள்ளணும் என குறித்துக்கொண்டுள்ளேன். 

ஒஸ்தியான பெளண்டைன் பேனா வாங்கி அதிலேயே என்னோட C.A., (Chartered Accountants) பரிட்சையை எழுதி முதல் ரேங்கிலே பாஸ் பண்ணிவிடனும் என்பது என் ஆசை. 




இதிலே அம்மிக்கு நான் அளிக்கப்போகும் பிஸ்கட் ஒரு மாதத்திற்குள் காலி ஆகிவிடும். என் அண்ணனுக்கு நான் அளிக்கப்போகும் பேண்ட் + ஷர்ட் கொஞ்ச நாட்கள் கழித்து கசங்கிக் கிழிந்துபோகவும் கூடும். 

ஆனால் என் பேனா மட்டும் பெர்மணெண்டாக என் கிட்டேயே குருஜியின் நினைவாக போற்றிப் பாதுகாத்து என்னால் வைத்துக்கொள்ளப்படும்.

கமெண்ட்ஸ் போட்டியிலே ஒரு மாதத்துக்குள்ளாகவே நான் ஜெயித்துள்ளேன் என்றால் அதற்கு நான் மட்டும் காரணமில்லை. எனக்குத் தன்னம்பிக்கை + ஊக்கம் + உற்சாகம் எல்லாம் கொடுத்து என்னை ஜெயிக்க வைத்த பெருமையெல்லாம் எங்கட குருஜியை மட்டிலுமே சேரும். நன்றி குருஜி.



இப்படிக்கு,
 
 
MEHRUN NIZA

ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo


07.11.2015 அன்று செல்வி. மெஹ்ருன் நிஸா அவர்கள். தனக்கே உரிய கொச்சைத்தமிழில் எழுதி எனக்கு அனுப்பியிருந்த ‘நேயர் கடிதம்’ இதோ இங்கே கீழே அப்படியே கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப்பதிவினை வாசிக்கும் அனைவருக்கும் அது நன்கு புரிய வேண்டுமே என்பதற்காக மட்டுமே, அது மேலே சற்றே மெருகூட்டி என்னால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. -vgk

-=-=-=-=-=-=-=-=-=-

நேயர் கடிதாசி. (முருகு)

குரு வணக்கம்.


இங்கன நெறய பேருங்களோட நேயர் கடிதாசில்லா படிச்சிகிட்டன். எனக்கும் அதுபோல ஒரு கடிதாசி எளுதிபிடோணுமுனு தோணிபோச்சி ( புலிகள பாத்து இந்த பூனயும் சூடு போட்டுகிட ஆசப்பட்டிச்சி.)

மத்தவங்க எளுதின கடிதாசிலலா சிறுகத விமரிசன வெவரங்க குருஜியோட கத எளுதும் தெறம அல்லா பாராட்டி சொல்லினாக. எனக்கு அதுபத்திலா ஏதும் தெரியாது. 

மத்தவங்களுக்கெல்லா குருஜியோட பல வருசமா பளக்கம் இருக்குது. குருஜி கூட ஒவ்வொருத்தங்களுக்கும் வேற வேற மாதிரி பட்ட அநுபவங்க கெடச்சிருக்கும். மத்தவங்க எளுத்த பாராட்டி உற்சாக படுத்தி ஊக்கம் கொடுப்பத அல்லாருக்குமே தெரிஞ்சிருப்பீங்க.

எனக்கு குருஜியோட இப்ப ஒரு 6--- மாசமின்னதான் பழக்கம் கெடச்சிச்சி. ஃபேஸ் புக் ல தான் பாத்து ஃப்ரெண்ட் ரிக்வெஸ்டு அனுப்பிகிட்டன். பொறவால மனசு பூராக்கும் ஒரே ஒதறலுதான். நம்மள அல்லா ஃபரண்டா ஏத்துகிடுவாங்களா?  அடுத்த நாளே அக்ஸப்ட்பண்ணி சந்தோச ஷாக் கொடுத்தாக. பெரிய மனுசங்க எப்பயுமே பெரிய மனுசங்கதா.

அப்பதா இந்த பின்னூட்ட போட்டி பத்தி தெரிய வந்திச்சி அப்பவே செப்டம்பர் மாதக் கடசிவாரம் ஆகிபோச்சி. வலைப்பதிவு பத்திலா ஏதுமே தெரிஞ்சிருக்கல. குருஜி பதிவு படிச்சி கமண்டு கூட போட ஏலல. நாமளும் வலப்பதிவு வச்சிருந்தாதா கமண்டு போட ஏலும் போலன்னு எண்ணி போட்டு எங்கெங்கியோ தேடி புடிச்சி வலப்பதிவு ஆரம்பிச்சு போட்டேன் 

அது சொதப்பிகிச்சி. மறுக்காவும் வேற ஒன்ன ஆரம்பிச்சினேன். பொறவாலதா குருஜி பக்கம் வந்து கமண்டு போட மிடிஞ்சிச்சி. வலைப்பக்கம் தொடங்கிய பொறவால ஏதாச்சும் பதிவு போடோணுமில்ல. இன்னா எளுதறதுன்னுபிட்டு ஏதுமே வெளங்கல. குருஜி பதிவெல்லா எம்பூட்டு சூப்பரா இருந்துகிடுமோ அதவிட அவங்க போடுற போட்டோ படங்கல்லா அத்தர சூப்பரா இருந்துகிடும். 

படம்லா எப்பூடி போடணுமினு குருஜிய தொந்தரவு பண்ணிபிட்டேன்ல. பச்ச புள்ளக்கி சொல்லி வெளங்க வைக்காப்புல ஸ்டெப பை ஸ்டெப்பா வெளக்கினாக. 

புரிஞ்சிகிட்டு படம்போட கத்துகிட்டேன. ஆரு இப்பூடில்லா ஹெல்ப் பண்ணுவாக. அதுமட்டுமா என் பக்கம் (பதிவு பக்கம்) வந்து கமண்டுக போட்டு உற்சாக படுத்தினாக. அந்த நேரம்தா குருஜி வலைச்சர ஆசிரியரா பொறுப்பு ஏத்துகிட்டாக. நெறய பதிவர்களை அவங்க தெறமய அல்லா சொல்லி அறிமுக படுத்தினாக. கடசி நாளன்னக்கி என்னயும் அறிமுக படுத்தி ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்துபிட்டாக. பதிவு தொடங்கி நாலே நாளுல புத்தம் புதிய பதிவருன்னுபிட்டு அறிமுகம் செய்தாக. சந்தோசத்துல அளுவாச்சியே வந்திச்சி.

எங்கட அம்மி பள்ளியோட பக்கமே போனதுல்ல. எளுத படிக்கலா ஏலாது. குருஜியோட கதலா படிப்பிச்சி காட்டிபோடுவேன. ஆர்வமா ரசிச்சு கேட்டுகிடும் மிடில் மிடிலா சூப்பரா ஜோக்கா கமண்டிடும். ரெண்டு பேத்துக்கும குருஜி கதகள படிசசி னா சிரிப்பாணி பொத்துகிடும் 

பின்னூட்ட போட்டில கலந்துகிட குருஜி சொல்லினாகல்ல. டைமு ரொம்ப கம்மி இருக்குது மூணு மாசத்துக்குள்ளாற 750--- பதிவுக்கு எப்பூடி கமண்டு போட ஏலும் என்னால ஏலாதுன்னுபிட்டு சொல்லினன். குருஜி என்னய உற்சாக படுத்தினாக. முயற்சியே பண்ணிகிடாம என்னால ஏலாதுன்னா எப்பூடி. முயற்சி பண்ணிபாருன்னாக

அப்ப ஒருகத நெனப்புல வந்திச்சி. ஒரு ஆளு கடவுள கண்மூடித்தனமா நம்புறவர் ஒருக்கா சாமி கிட்டத்துல போயி சாமி உன்னயதா முளுசா நம்பிஇருக்கேன். இந்த மாச லாட்டரில மொதபரிசு ஒருகோடி எனக்ககு கெடைக்கோணுமினு அல்லாகாட்டி என் எடது கையை வெட்டிகிடுவேன்னு வேண்டிகிடுறான். அந்த மாசம் அவனுக்கு பரிசு கெடைக்கல. மறுமா சமும் கடவுளு கிட்டால வாரான். சாமி ஒன்னயதானே முளுசா நம்பிகினேன். இப்பூடி ஏமாத்தி போட்டியேன்னு அளுதான. சரி இந்த மாசத்துலாவது மொத பரிசு ஒருகோடி வாங்கி தந்துபோடோணுமு அல்லா காட்டி என் வலது கையும் வெட்டிகிடுவேன்னுரான். அந்த மாசமும் பரிசு கெடைக்கல.. சாமியோட பொஞ்சாதி சாமியாண்ட கேக்குறாக. ஒங்கட மேல இப்பூடி பக்தியா இருக்கான்ல ஏன் பரிசுபணம் கெடைக்க செய்யலன்னுரா. அதுக்கு அந்த சாமி சொல்லிச்சி போடி பைத்தியகாரி இங்க பாரு நா பொட்டி நெறய பணத்த வச்சிகிட்டு தயாராதா இருக்கேன். அவன்லாட்டரி டிக்கட்டே வாங்கிகிடலியே. அப்பூடின்னாரு.

அதாவது அவன் முயற்சியே செய்யலியே ங்குறாரு. டிக்கட்டு வாங்கறதுன்ற சின்ன முயற்சி செய்திருந்தா பணத்த கொடுத்திருப்பேன்னாரு கரீட்டுதானே

அதுபோல நா இருந்துகிட கூடாதுன்னுபிட்டு கமண்டு போடுற முயற்சில எறங்கி போட்டேன். மாசா மாசம் இன்னல்லா பதிவுகளுக்கு கமண்டு போடணுமின்னுபோட்டு வரிசயா லிங்க் அனுப்பி என்ன உற்சாகமும் ஊக்கமும் படுத்தினாக. முயற்சி செஞ்சா உன்னாலயும் கெலிச்சிகிட ஏலும்னு எனக்கு அடிக்கடி தன்னம்பிக்க வர வச்சாக.

ஒங்கட ஆன்மிக பதிவெல்லா இன்னா மாதிரி கமண்டு போடோணுமனுபிட்டு வெளங்கல நா போட்டீலந்தே வெலகிபோடுறேன்னுபிட்டு வருத்தமா சொல்லினன். குருஜி என்ன அப்பூடில்லா விட்டு போடுவாகளா??? தனியா எனக்குனு ஸ்பெசல் சலுக கொடுத்து கமண்டு கன்டின்யூ பண்ண வச்சாக. பொறவால எனக்கு அல்லாரயும்போல நல்ல தமிளு எளுத ஏலாது கொச்சயாதா எளுத வருமின்னன். அதெல்லா ஒரு பெரிய வெசயமே கெடயாது ஒனக்கு எப்படி வருமோ அப்படியே எளுதிக்கிடுனுபிட்டாக.

இந்த போட்டில கலந்துகிட இன்னொரு முக்கியமான காரணம் பரிசு பணம்1000---ரூவா. எங்கட குடும்ப நெலம மிடில்க்ளாச விட ஒரு மட்டம் கீளாகதா இருக்கூது. அந்த பணம் என்ன பொறுத்தவர ரொம்ப பெரிய தொகை. எப்பூடியும் இந்த போட்டீல கெலிச்சு போடோணும்னு பேராசயே வந்துபோட்டது.

மொதகா நா கெலிச்சுபிட்டேனுபிட்டு கனவுல கண்டுகிட்டன் அந்த பரிசு பணத்த எப்பூடிலா செலவு செய்யுதுன்னு லிஸ்டு போட்டுகிட்டு செலவ கூட்டி பாத்தாகாட்டியும 1000--- க்கு மேல ஒரு ஜீரோ சேக்க வேண்டியதா போச்சி. பொறவால மருக்கா சிறுசா லிஸ்டு போட்டுகிட்டன் "அம்மிக்கு காலேல நாஸ்டாவுல " குட் டே" பிஸூகோத்துனா ரொம்ப இஸ்டமா தின்னுகிடும் அதனால ஒர மாசத்துக்கு அம்மிக்காக "குட் டே" பிஸூகோத்து பொட்டணம் ஒரு பத்து பாயஞ்சி வாங்கிபோடோணும். அடுத்து அண்ணனுக்கு நல்லதா காட்டனுல பேண்ட் சர்ட். பொறவால எனுக்கு. நல்லா பேனா வாங்கிபோடோணும். இங்க் ஊத்தி நிப்பு போட்ட பேனா இருக்குல அது. ஆரம்பத்துலேந்தே எனக்கு பால்பாயிண்டு பேனா புடிச்சிகிடவே புடிச்சிகிடாது.
மிடிஞ்சா ஒஸ்தியான( பார்க்கரு) பேனா வாங்கி அதுலதா எங்கட ஸி. ஏ. பரிச்ச எளுதி மொத ராங்குல பாஸு பண்ணி போடோணும் இதுல பிஸூகோத்து ஒரு மாசத்துக்குள்ளார காலி ஆகிபோடும். பேண்ட் சர்டும் கொஞ்ச நாளுல கிளிஞ்சிடும் ஆனாக்க என் பேனா மட்டும் பர்மனண்டா என்கிட்டாலியே இருந்துகிடும்( குருஜி நெனவா போற்றி பாதுகாத்து வச்சிகிடுவேன்ல) 

கமண்டு போட்டில ஒரு மாசத்துக்குள்ளாராவே கெலிச்சு போட்டேனாக்க நா மட்டும் அதுக்கு காரணமில்ல. தன்னம்பிக்கை ஊக்கம் உற்சாகம்லா கொடுத்து என்ன கெலிக்க வச்ச பெருமயல்லா எங்கட குருஜிய (மட்டிலுமே) சேரும. நன்றி குருஜி

Sent from my Samsung Galaxy smartphone.


-=-=-=-=-=-=-=-=-=-

ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo


’விழுவது எழுவதற்காகவே’ என்கிறதோ ..... இந்தக்கிளி  !




அன்புள்ள (mru) முருகு,

வணக்கம்மா.

ஆத்மார்த்தமாகவும், மிகவும் யதார்த்தமாகவும், தாங்கள் மனம் திறந்து எழுதியுள்ள இந்த நேயர் கடிதம் என்னை மிகவும் மனம் நெகிழச்செய்து விட்டது. 

மிகவும் நியாயமான சின்னச் சின்ன ஆசைகளாகவேதான் தாங்கள் சொல்லியுள்ளீர்கள். நான் தங்களுக்கு அளித்துள்ள ஊக்கம் + உற்சாகம் + தன்னம்பிக்கை இவைகளையெல்லாம் தாண்டி, தங்களின் மிகக்கடுமையான உழைப்பு மட்டுமே, தங்களுக்கு மிகக்குறுகிய காலத்தில் இந்த மாபெரும் வெற்றியினைத் தேடித்தந்துள்ளது. 

மேலும் இந்த என் பரிசுப்பணம், அந்தக்காலத்தில் இளமையில் வறுமையை நன்கு அனுபவித்துள்ள என்னைப்போன்ற, ஓர் ஏழைக்குடும்பத்திற்கு இன்று சென்றடைவதைக் கேட்கும்போது, என் மனமகிழ்ச்சி இரட்டிப்பாகவே மாறியுள்ளது.  

’முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ என்பதை மறக்காமல் தாங்கள் நன்கு படித்து, தாங்கள் விரும்பிடும் C.A., படிப்பினையும் முடித்து, பொருளாதாரத்தில் உச்ச நிலையை அடைந்து மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன் / பிரார்த்திக்கிறேன் / ஆசீர்வதிக்கிறேன்.


  


  



பிரியமுள்ள
 குருஜி கோபு 



பின்குறிப்பு: 
தாங்கள் விரும்பிய பார்க்கர் பேனா கிடைக்குமா என இங்கு நான் முயற்சித்தேன். பொதுவாக இங்க் போட்டு எழுதும் பேனாக்களே கடைகளில் இப்போது அதிகமாக விற்பனைக்கு இல்லாமல் உள்ளது. இருப்பினும் மேலும் நான் சற்றே முயன்றதில் ஓர் கடையில் தாங்கள் விரும்பிய பார்க்கர் பேனாவே சீல் உடைக்காமல் புத்தம் புதிதாகப் பேக்கிங் உடன் கிடைத்தது. உடனே கொத்திக்கொண்டு வந்துவிட்டேன். இதோ அதன் படத்தினை இங்கு இணைத்துள்ளேன். 


 
{ Front Side of the Packing  }
{  Reverse Side of the Packing }

பரிசுப்பணத்துடன் இந்தப் பார்க்கர் பேனாவும் 
நிச்சயமாக உங்களை வந்தடையும் 
என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

’பேனா’ என்றதுமே, ஏற்கனவே உங்கள் மாவட்டப் பெண் பதிவர் ஒருவர், 
என்னிடம் மிகவும் விரும்பிக்கேட்டு, 
நான் அனுப்பிவைத்த பேனா கதையே எனக்கு நினைவுக்கு வருகிறது. 
அதைப் பற்றிய மேலும் விபரங்களுக்கு இதோ இந்த இணைப்புகளின் இறுதியில் 


’தேடினேன் வந்தது ...... நாடினேன் தந்தது.....’ 
என்ற தலைப்பினில் உள்ள செய்திகளை மட்டும் படித்துப் பார்க்கவும்: 


 




134 கருத்துகள்:

  1. என்னதான் நீங்கள் மெருகூட்டியிருந்தாலும் முருகு அவர்கள் கோர்வையாக கதை போல அந்த நேயர் கடித்தத்தை எழுதியிருந்ததை வாசித்து அசந்து போனேன். தன் மனதிலிருப்பதை வெகு அழகாக நேரேட் பண்ணக்கூடிய அசாத்திய திறமை அவர்களுக்கிருப்பதை உணர முடிந்தது. இவர் எதிர்காலத்தில் மிகச் சிறந்த எழுத்தாளராய் வருவார் என்பது திண்ணம்.

    அவர்கள் தேவை அறிந்தவுடனேயே, தேடி அலைந்து பார்க்கர் பேனாவையும் வாங்கி பரிசுப் பணத்துடன் சேர்த்து அனுப்பும் உங்கள் தங்க மனசின் மாண்பு மனசை நெகிழ்த்துகிறது. பார்ப்பதற்கு மிகச் சாதாரணமாகத் தெரியும் இந்த செய்கை ரொம்பவும் அசாதாரணமானது. பலர் நினைப்பார்கள்; ஆனால் அதைச் செயல்படுத்தும் வரை அந்த நினைப்பு மனசில் தங்கியிருக்காது. கடைசி வினாடியில் ஏதாவது பின்வாங்கல், அல்லது கோணல் வந்து சேரும். வெகு சிலராலேயே இவ்வாறெல்லாம் நினைப்பதை பிசிறில்லாமல் சிரமேற்கொண்டு செயல்பட முடிகிறது

    உங்களிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கிறது கோபு சார்!.. உங்களை நண்பராகப் பெற்றதில் பெருமிதம் கொள்கிறேன்.

    அன்புடன்,
    ஜீவி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி November 11, 2015 at 2:47 PM

      வாங்கோ சார், நமஸ்காரங்கள் + வணக்கம்.

      //என்னதான் நீங்கள் மெருகூட்டியிருந்தாலும் முருகு அவர்கள் கோர்வையாக கதை போல அந்த நேயர் கடித்தத்தை எழுதியிருந்ததை வாசித்து அசந்து போனேன். தன் மனதிலிருப்பதை வெகு அழகாக நேரேட் பண்ணக்கூடிய அசாத்திய திறமை அவர்களுக்கிருப்பதை உணர முடிந்தது. இவர் எதிர்காலத்தில் மிகச் சிறந்த எழுத்தாளராய் வருவார் என்பது திண்ணம்.//

      மிகவும் பக்குவமான + நாகரீகமான எழுத்துக்களிலும், தரமான வாசிப்பு அனுபவங்களிலும் மிகத்திறமை வாய்ந்த தங்களின் திருவாய் மலர்ந்து, இதனை இங்கு குறிப்பிட்டுச்சொல்லி, அந்த இளம் வயது கல்லூரி மாணவியை இவ்வாறு பாராட்டி சிறப்பித்துள்ளது, எனக்கு மிகவும் மகிழ்வளிக்கிறது.

      அவள் மிகவும் அதிர்ஷ்டக்காரியாகத்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். தாங்கள் சொல்வதுபோல எதிர்காலத்தில் மிகச்சிறந்த எழுத்தாளராக வந்தால் நமக்கும் அதில் மிகவும் மகிழ்ச்சியே. அதுதானே நம் எதிர்பார்ப்பும் !

      >>>>>

      நீக்கு
    2. கோபு >>>>> திரு. ஜீவி சார் (2)

      //அவர்கள் தேவை அறிந்தவுடனேயே, தேடி அலைந்து பார்க்கர் பேனாவையும் வாங்கி பரிசுப் பணத்துடன் சேர்த்து அனுப்பும் உங்கள் தங்க மனசின் மாண்பு மனசை நெகிழ்த்துகிறது. பார்ப்பதற்கு மிகச் சாதாரணமாகத் தெரியும் இந்த செய்கை ரொம்பவும் அசாதாரணமானது. பலர் நினைப்பார்கள்; ஆனால் அதைச் செயல்படுத்தும் வரை அந்த நினைப்பு மனசில் தங்கியிருக்காது. கடைசி வினாடியில் ஏதாவது பின்வாங்கல், அல்லது கோணல் வந்து சேரும். வெகு சிலராலேயே இவ்வாறெல்லாம் நினைப்பதை பிசிறில்லாமல் சிரமேற்கொண்டு செயல்பட முடிகிறது.//

      பொதுவாகவே ஒரு படிக்கும் சிறுவனோ அல்லது சிறுமியோ என்னிடம் நேரில் வந்து தான் பாஸ் செய்துவிட்டேன், இவ்வளவு மார்க்குகள் பெற்றுள்ளேன் எனச் சொல்லும்போது, நான் அவர்களிடம் ஸ்வீட்ஸ் கேட்க மாட்டேன். நானே கால் கிலோவோ, அரை கிலோவோ, ஒரு கிலோவோ சாக்லேட் வாங்கி அவர்களுக்கு அளித்து மகிழ்வேன். இதனால் அதனைப் பிரித்து அவர்கள் மட்டும் சாப்பிடாமல், மற்ற பிறருக்கும் பிரித்தளிக்க செளகர்யமாக இருக்கும். இதுபோல எவ்வளவோ முறைகள் நான் செய்துள்ளேன்.

      2004 மே மாதம் (13.05.2004) வெளியான +2 ரிசல்ட் வந்த செய்தித்தாளின் ஒரு பகுதியை, போட்டோக்களுடன் இன்னும் நான் பத்திரமாக என்னிடம் வைத்துள்ளேன்.

      எங்கள் பூர்வீக கிராமமான ஆங்கரையைச் சேர்ந்த பெண்: ’பார்கவி’ என்று பெயர். திருச்சி சாவித்ரி வித்யாசாலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அன்று படித்த மாணவி.

      வேதியல், இயற்பியல், உயிரியல் மற்றும் கணிதம் ஆகிய நான்கு பாடங்களிலும் 200/200 டபுள் செஞ்சுரி வாங்கி மொத்த மதிப்பெண்களாக 1182/1200 பெற்றிருந்தவள்.

      சமஸ்கிருத பாடத்தில் மட்டும் 199/200. எங்களுக்கு தூரத்து சொந்தம் மற்றும் தாயாதிகள். அவர்கள் அன்றும் இன்றும் மிகப் பெரும் பணக்காரர்கள்தான்.

      இருப்பினும் நான்கு டபுள் செஞ்சுரி போட்ட அந்த ’சரஸ்வதி தேவி’யை நேரில் சந்திக்க விருப்பம்கொண்டு, ஒரு கிலோ ஒஸ்தி சாக்லேட்கள் வாங்கிக்கொண்டு, நானும் என் மனைவியுமாக போக வர கார் வைத்துக்கொண்டு, நேரில் ஆங்கரை கிராமத்திற்குச் சென்று கொடுத்துவிட்டு மகிழ்ச்சியுடன் திரும்பி வந்தோம்.

      இன்று அவள் ஒரு டாக்டர் (மருத்துவர்). திருமணமும் ஆகிவிட்டது. செளக்யமாக சந்தோஷமாக இருக்கிறாள். இவையெல்லாம் நீங்காத நினைவலைகளாக உள்ளன.

      >>>>>

      நீக்கு
    3. கோபு >>>>> திரு. ஜீவி சார் (3)

      சமீபத்தில் சென்ற ஆண்டு (2014) பிக்ஷாண்டார் கோயிலைச் சேர்ந்த ஓர் ஏழை மாணவன் 10th Exam இல் 473/500 வாங்கியிருந்தான் என்ற செய்தி எனக்குக் கிடைத்தது.

      {இவன் என் மனைவிவழி சொந்தக்காரப் பையன்.}

      மார்க் லிஸ்ட் வந்தவுடன் என்னை என் இல்லத்தில் சந்திக்க வரச்சொல்லி அழைப்பு விடுத்திருந்தேன்.

      நான்கு புதிய 100 ரூபாய் நோட்டுகள், ஏழு புதிய 10 ரூபாய் நோட்டுகள், மூன்று புதிய ஒரு ரூபாய் நோட்டுக்களை அழகாக ஒன்றன்கீழ் ஒன்றாக விசிறி போல அடுக்கி வடிவமைத்து அதன் கீழே 473/500 CONGRATS என எழுதி அரைக்கிலோ ஒஸ்தி சாக்லேட்கள் பையுடன் கொடுத்தேன்.

      அவனும் கூடவே அவனுடன் வந்திருந்த அவன் தாயாரும், தம்பியும் பிரமித்துப் போனார்கள்.

      ”மேலும் நன்றாகப்படி, +2 வில் இதுபோல நிறைய மார்க்குகள் வாங்கிக்கொண்டு வா. எவ்வளவு மார்க்குகள் வாங்கி வருகிறாயோ அவ்வளவு ரூபாய் இதுபோல நான் தருவேன்” என்று சொல்லி ஊக்கப்படுத்தி அனுப்பி வைத்தேன்.

      {அந்தப்படங்களைத் தங்களுக்கு மெயில் மூலம் தனியாக அனுப்பி வைக்கிறேன்.}

      >>>>>

      நீக்கு
    4. கோபு >>>>> திரு. ஜீவி சார் (4)

      நான் படிக்கும் காலத்தில், பொருளாதார ரீதியாக நான் மிகவும் கஷ்டப்பட்டு விட்டதாலும், யாரிடமும் அன்று உதவிகள் கேட்க என் தன்மானம் எனக்கு இடம் கொடுக்காததாலும், எனக்கு இதுபோலெல்லாம் செய்து நன்கு படிக்கும் குழந்தைகளாகிய அவர்களை கெளரவித்து, ஊக்கமும் உற்சாகமும் தர வேண்டும் என்பது, இன்று என் விருப்பமாக உள்ளது.

      என்னால் இன்று என்ன முடியுமோ அதனை ’எத்கிஞ்சது’ மட்டும் மிகச்சிறிய அளவில் மட்டும், அதுவும் சிலருக்கு மட்டும் செய்து வருகிறேன். இன்றும் என்னால் பெரிய அளவில் ஒன்றும் செய்யமுடியாமல்தான் உள்ளது.

      நான் சம்பாதித்த காலத்தில், நான் மற்ற சில சாதனை மாணவ/மாணவிகளுக்கு, ஊக்கம் தரும் விதமாக, நான் அன்று செய்துள்ள வேறு சில உதவிகளை இதோ இந்தப்பதிவினில் ஏற்கனவே விரிவாக எழுதியுள்ளேன்.

      http://gopu1949.blogspot.in/2012/03/4.html

      அதில் தங்களின் அருமையான பின்னூட்டமும் இடம் பெற்றுள்ளது என் பாக்யம்.

      >>>>>

      நீக்கு
    5. கோபு >>>>> திரு. ஜீவி சார் (5)

      //உங்களிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கிறது கோபு சார்!.. உங்களை நண்பராகப் பெற்றதில் பெருமிதம் கொள்கிறேன். அன்புடன், ஜீவி. //

      ஆஹா, அடடா ..... தன்யனானேன். இதைத்தங்கள் மூலம் கேட்பதில் மிகவும் கூச்சமாக உணர்கிறேன்.

      எல்லாம் தங்களைப்போன்ற என் நலம் விரும்பிகள் ஒருசிலரின் ஆசீர்வாதங்கள் மட்டுமே, காரணம்.

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
    6. கோபு >>>>> திரு. ஜீவி சார் (6)

      தங்களுக்கான என் 3வது பதிலின் இறுதியில் உள்ள வரிகள்:

      //{அந்தப்படங்களைத் தங்களுக்கு மெயில் மூலம் தனியாக அனுப்பி வைக்கிறேன்.}//

      இன்று 13.11.2015 காலை மணி: 10.42க்கு அவற்றை மெயில் மூலம் தங்களுக்கு அனுப்பியுள்ளேன். மொத்தம் 5 படங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
    7. பெருமதிப்பும் மரியாதயும் மிக்க உயர்திரு. ஜி. வி. ஐயாவுகளுக்கு. மொதக கும்பிடுதேங்க. எங்கட குருஜி ஒங்கட மேல ரொம்ப அன்பும் மதிப்பும் மரியாதயும் வச்சிருகாக. எப்பயும் ஒங்கட அரும பெருமல்லா சொல்லிகினே இருப்பாக. எனக்கு ஒங்கட பளக்கம் கெடயாதுல. அதா எப்பூடி ரிப்ளை கமண்டு போடுறதுன்னுபிட்டு வெளங்கல. நா கொஞ்சம் சூதானமில்லாத வெளிப்படையா பேசிப்போட்டிடுவன். ஏதாச்சிம் ராங்கா சொல்லினேன்னா மாப்பு கொடுத்து போடுங்க ஐயா.
      ஒங்களுக்கும் என்ன தெரியாதுன்னாகாட்டியும் சூப்பரா என்னயும் என் எளுத்தையும் பாராட்டா சொல்லினிங்க. எனக்கு சந்தோசம் பிச்சுகிடுது. மனசு ஒடம்பெல்லா சில்லுனு ஆகி போயிடிச்சி. எப்பூடி தெரியுங்களா. கொஞ்ச நாமு முன்ன பேப்பருல டி. வி. லலா ஒரு நியூஸு ஓடிகிட்டிருந்திச்சி. ஐஸ் பக்கெட் ஸவால்னு வாளி நெறய ஐஸு தண்ணி நெறச்சி தலவளியூ ஊத்திகிடணுமா. அப்ப எப்படி குளிரடிச்சி சில்லுனு ஆகிபோடும்லா அதுபோல எனக்கு ஒங்கட கமண்டு பாத்த ஒடனே ஆகி போயிடிச்சி. பொறவால பெரிய எளுத்தாளரா வாரலாம்னு சொல்லினத பாத்து போட்டு சிரிப்பாணி பொத்துகிச்சி. இலக்கண சுத்தமா நல்ல தமிளுல என்னால எளுதவே ஏலலே.ரொம்ப ட்ரை பண்ணிபோட்டேன் களுத வரமாட்டேனுபிட்டு ஒதைக்குது. நானும் போனாபோவுதுன்னு விட்டு போட்டன். நமக்கு எது வருதோ அத பண்ணிப்போடோணும்லா ஒங்கட பாராட்டுக்கு நன்றியோ நன்றிகள தெரிவிச்சுக்கிடுதேன். எனக்கு கெடைக்கிற பெரும பாராட்டு அல்லாமே எங்கட குருஜியத்தா சேரோணும்

      நீக்கு
  2. நாங்கள் உங்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியது நிறையவே இருக்கின்றன. எழுத்து, நட்பு, தொழில்நுட்பம், மனிதாபிமானம் என்ற நிலைகளில் அப்பட்டியல் தொடரும். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Dr B Jambulingam November 11, 2015 at 3:37 PM

      வாங்கோ முனைவர் ஐயா, வணக்கம்.

      //நாங்கள் உங்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியது நிறையவே இருக்கின்றன. எழுத்து, நட்பு, தொழில்நுட்பம், மனிதாபிமானம் என்ற நிலைகளில் அப்பட்டியல் தொடரும். நன்றி.//

      அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை ஐயா. நான் மிகச் சாதாராணமானவன் மட்டுமே. நான் கற்றது கைமண் அளவு மட்டுமே. கல்லாதது உலகளவு ஏராளமாக இன்னும் உள்ளன.

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா. - VGK

      நீக்கு
  3. தங்களின் முயற்சியும், தன்னம்பிக்கை ஊட்டும் பாங்கும், தளராத உழைப்பும் கண்டு வியந்து நிற்பவர்களில் அடியேனும் ஒருவன். நான் வலைப்பக்கம் துவங்கிய உடன் பின்னூட்டமிட்டு மகிழ்ச்சியளித்ததி மறக்கமுடியாது. தாங்கள் நடத்திய சிறுகதை விமர்சனப் போட்டியில் பங்கு பெற்ற பாக்கியம் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. தங்களின் ஆன்மிகப் பதிவுகளை பெரும்பாலும் (ஒன்றிரண்டு விடுபட்டிருக்கலாம்) படித்து வியந்து பின்னூட்டங்கள் அளித்துள்ளேன்.

    தங்களின் பொற்கரத்தால் பேனா பரிசுபெறும் நேயர் நிச்சயம் வாழ்வில் வெற்றிகளைப்பெற்று முன்னேறுவார் என்பதில் எனக்கு ஐயமில்லை! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Seshadri e.s. November 11, 2015 at 3:38 PM

      வாங்கோ திரு. சேஷாத்ரி அவர்களே, வணக்கம்.

      //தங்களின் முயற்சியும், தன்னம்பிக்கை ஊட்டும் பாங்கும், தளராத உழைப்பும் கண்டு வியந்து நிற்பவர்களில் அடியேனும் ஒருவன். நான் வலைப்பக்கம் துவங்கிய உடன் பின்னூட்டமிட்டு மகிழ்ச்சியளித்ததி மறக்கமுடியாது. தாங்கள் நடத்திய சிறுகதை விமர்சனப் போட்டியில் பங்கு பெற்ற பாக்கியம் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி.//

      இந்த 2015 .... 100% பின்னூட்டமிடும் போட்டியிலும் தாங்கள் கலந்துகொள்வீர்கள் என நான் எதிர்பார்த்தேன்.

      //தங்களின் ஆன்மிகப் பதிவுகளை பெரும்பாலும் (ஒன்றிரண்டு விடுபட்டிருக்கலாம்) படித்து வியந்து பின்னூட்டங்கள் அளித்துள்ளேன்.//

      ஆமாம். என் முதல் 750 பதிவுகளில் சுமார் 250 பதிவுகளுக்குக் குறையாமல் தாங்கள் நிச்சயமாகப் பின்னூட்டம் இட்டுள்ளீர்கள். இந்தப் புதுப் போட்டியில் தாங்கள் அவற்றிற்கெல்லாம் மீண்டும் பின்னூட்டமிட வேண்டிய தேவையே இருந்திருக்காது. அதுபோன்ற ஏற்கனவே பின்னூட்டமிட்டுள்ள பதிவுகளுக்கு ஜஸ்டு ஒரு :) ஸ்மைலி மார்க் மட்டும் போட்டுவிட்டு அடுத்த பின்னூட்டமிடாத பதிவுக்கு ஓடிப்போயிருந்திருக்கலாம்.

      எனினும் தங்களின் இன்றைய நிலை எனக்குத் தெரியும். அதனால் பரவாயில்லை, சார்.

      //தங்களின் பொற்கரத்தால் பேனா பரிசுபெறும் நேயர் நிச்சயம் வாழ்வில் வெற்றிகளைப்பெற்று முன்னேறுவார் என்பதில் எனக்கு ஐயமில்லை! நன்றி!//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.

      அன்புடன் VGK

      நீக்கு
    2. ஐயா வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றிங்க

      நீக்கு
  4. ஓ! முருகுதான் மெஹ்ருனிசாவா? முதலில் புரியவில்லை சார். பின்னர் தான் புரிந்தது. அவர்களது ஒரிஜினல் கடிதம் நன்றாக இருக்கிறது சார். உள்ளத்திலிருந்து வந்தது அல்லவா...

    வித்தியாசமானவர்தான் சார் நீங்கள். அவர்கள் தேவையைப் பூர்த்தி செய்து நீங்கள் அனுப்பியது தங்களின் பரந்த மனப்பான்மையைக் காட்டுகின்றது சார். நிறைய தெரிந்துகொள்கின்றோம் சார். வாழ்த்துகள்! பணிவான வணக்கங்கள் சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thulasidharan V Thillaiakathu November 11, 2015 at 4:00 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ஓ! முருகுதான் மெஹ்ருனிசாவா? முதலில் புரியவில்லை சார். பின்னர் தான் புரிந்தது.//

      ’முருகு’ என்பது நானாக அவர்களுக்கு வைத்துள்ள செல்லப்பெயர் மட்டுமே. ’முருகன்’ என்றால் ’அழகன்’ என்பதுபோல ’முருகு’ என்றால் ’அழகு’ என்ற பொருளும் உண்டல்லவா !

      முதலில் MEHRUN NIZA என்ற பெயரில் தான் ‘வசந்தம்’ என்ற வலைப்பதிவினை ஆரம்பித்தார்கள். அது ஏதோ சொதப்பிக்காச்சாம். அதனால் பிறகு mru என்ற பெயர் சுருக்கத்துடன் வேறொரு வலைப்பதிவினைப் புதிதாக ஆரம்பித்து, பின்னூட்டங்களிலும் mru என்ற பெயரையே போட்டு வந்தார்கள்.

      இந்த ‘mru' என்பதை எப்படி உச்சரிப்பது என்று தெரியாமல் நான் ’முருகு’ என அழைக்க ஆரம்பித்து விட்டேன்.

      //அவர்களது ஒரிஜினல் கடிதம் நன்றாக இருக்கிறது சார். உள்ளத்திலிருந்து வந்தது அல்லவா...//

      ஆமாம், சார். மிக்க மகிழ்ச்சி, சார்.

      //வித்தியாசமானவர்தான் சார் நீங்கள். அவர்கள் தேவையைப் பூர்த்தி செய்து நீங்கள் அனுப்பியது தங்களின் பரந்த மனப்பான்மையைக் காட்டுகின்றது சார்.//

      ஏதோ நம்மால் முடிந்ததோர் மிகச்சிறிய உதவி. ஒருசில தவிர்க்க இயலாத காரணங்களால் இன்னும் அவை என்னால் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. இன்றும் என்னிடம்தான் உள்ளன. அவர்கள் தற்சமயம் வெளியூர் போய் இருப்பதால், வீடு பூட்டியிருக்கும் என்பதால், அவர்கள் திரும்ப வந்தபிறகு விரைவில் அனுப்பி வைக்க உள்ளேன்.

      //நிறைய தெரிந்துகொள்கின்றோம் சார். வாழ்த்துகள்! பணிவான வணக்கங்கள் சார்!//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

      அன்புடன் VGK

      நீக்கு
    2. ஸார் வாங்க வணக்கமுங்கோ. வந்து பாராட்டி கமண்டு போட்டுபிட்டதுக்கு நன்றிங்கோ ஆமாங்கோ என்பேரு படாத பாடு பட்டுகிட்டுதா கெடக்குது. குருஜி முருகுன்னுவாக. எங்கட அம்மி ஒரு எளவும் தெரிஞ்சிகிடாத மக்குனு சொல்லிபோடும் எங்கட அண்ணனு மெஹருன்னுபிட்டு சொல்லிகிடும் மறுக்காவும் நன்றி

      நீக்கு
  5. எழுதத் தெரியாது என அவர்கள் எழுதியுள்ளதை
    நினைத்து ஆச்சரியமாக இருந்தது
    இத்தனை உணர்வுபூர்வமாக எழுதக் கூடியவர்கள்
    நிச்சயம் ஒரு பெரிய எழுத்தாளராக ஒரு நாள்
    மிளிர்வார்கள்.
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ramani S November 11, 2015 at 4:30 PM

      வாங்கோ சார். வணக்கம் சார்.

      //எழுதத் தெரியாது என அவர்கள் எழுதியுள்ளதை
      நினைத்து ஆச்சரியமாக இருந்தது. இத்தனை உணர்வுபூர்வமாக எழுதக் கூடியவர்கள் நிச்சயம் ஒரு பெரிய எழுத்தாளராக ஒரு நாள் மிளிர்வார்கள். வாழ்த்துக்கள்.//

      மிகச்சிறப்பாக இன்று மிளிர்ந்துவரும் எழுத்தாளராகிய தங்களின் வாயால் இதனைச் சொல்லி மகிழ்வித்து உள்ளீர்கள். அது அப்படியே பலிக்கட்டும் சார்.

      தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

      என்றும் அன்புடன் VGK

      நீக்கு
    2. திரு ரமணி சாரே என்னாங்க நீங்ககூட பெரிய எளுத்தாளராவலாம்னு சொல்லி போட்டீக. எங்கட இந்த தமிள வச்சிகிட்டு கதலா எளுதினா ஆரு படப்பாக மொதக நீஙக படிச்சி வெளங்கி கிடுவீகளா ஏலாதுல்லா. பாராட்டி கமண்டு போட்டுபிட்டதுக்கு நன்றிங்க.

      நீக்கு
  6. ஆத்மார்த்தமான நேயர் கடிதம். அவர்களின் பேனா ஆசையைப் பூர்த்தி செய்தது தங்களுடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது. தங்களுக்கும் முருகு அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழனி. கந்தசாமி November 11, 2015 at 4:44 PM

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      //ஆத்மார்த்தமான நேயர் கடிதம்.//

      மிக்க மகிழ்ச்சி, சார்.

      //அவர்களின் பேனா ஆசையைப் பூர்த்தி செய்தது தங்களுடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது.//

      படிக்கும் பருவத்தில் உள்ள குழந்தையின் நியாயமானதோர் மிகச்சிறிய ஆசையைப் பூர்த்தி செய்ய ஏதோ நமக்குக் கிடைத்துள்ளதோர் அரிய வாய்ப்பாக எண்ணி நான் மகிழ்கிறேன்.

      //தங்களுக்கும் முருகு அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

      என்றும் அன்புடன் VGK

      நீக்கு
    2. ஐயா வணக்கமுங்கோபாராட்டி கமண்டு போட்டுபிட்டதுக்கு நன்றிங்க ஐயா

      நீக்கு
  7. கோபால் சார் ஜிவி சார், ஜம்பு சார், சேஷாத்ரி அவர்கள், துளசி சகோ & கீத்ஸ் சொன்னதை நூறு சதம் வழி மொழிகிறேன்.

    பின்னொரு நாள் நீங்கள் கண்டெடுத்த இந்தப் பின்னூட்டப் புயல் மிகச் சிறந்த எழுத்தாளராகப் பரிணமிப்பார்.

    நானும் உங்களிடம் வியக்கும் விஷயம் தொடர்ந்து பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்துவது. மேலும் பாசிட்டிவ் திங்கிங்.

    நல்லதை இடுகைகளிலும் ஏதேனும் சிறிய குறைகள் இருந்தால் அதை உறுத்தாவண்ணம் அதே இடுகையின் பின்னூட்டத்திலும் கொடுத்து சிறப்பாக்கிடுவீங்க !

    தேடிப் பிடிச்சு பார்க்கர் பேனா வாங்கிக்கொடுத்தது சிறப்பு. முருகுவுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thenammai Lakshmanan November 11, 2015 at 4:53 PM

      வாங்கோ ஹனி மேடம், வணக்கம்.

      //கோபால் சார் ..... ஜிவி சார், ஜம்பு சார், சேஷாத்ரி அவர்கள், துளசி சகோ & கீத்ஸ் சொன்னதை நூறு சதம் வழி மொழிகிறேன்.//

      அச்சா! பஹூத் அச்சா!! அப்போ அவர்களுக்கு நான் அளித்துள்ள பதில்களே உங்களுக்கும் பொருந்தும். படிச்சுக்கோங்கோ.

      //பின்னொரு நாள் நீங்கள் கண்டெடுத்த இந்தப் பின்னூட்டப் புயல் மிகச் சிறந்த எழுத்தாளராகப் பரிணமிப்பார்.//

      ததாஸ்து. (அப்படியே ஆகட்டும்). தங்கள் வாக்கு அப்படியே பலிக்கட்டும்.

      //நானும் உங்களிடம் வியக்கும் விஷயம் தொடர்ந்து பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்துவது. மேலும் பாசிட்டிவ் திங்கிங்.//

      பிறரை ஊக்கமளிக்க ..... இதற்கு காசோ பணமோ தேவையில்லையே. ஏதோ நாலு நல்ல வார்த்தைகள் சொன்னால் போதுமே :)

      இருப்பினும் நமக்கும் ஓர் உற்சாகம் இருக்கும்வரை மட்டுமே இதெல்லாம் சாத்தியமாகும். நாளுக்கு நாள் எனக்கும் இந்த உற்சாகம் ஏனோ மிகவும் குறைய ஆரம்பித்துள்ளது. :(

      நமக்கும் வர வர வயதாகி வருகிறது அல்லவா !! அதனாலும் இருக்கலாம்.

      //நல்லதை இடுகைகளிலும் ஏதேனும் சிறிய குறைகள் இருந்தால் அதை உறுத்தாவண்ணம் அதே இடுகையின் பின்னூட்டத்திலும் கொடுத்து சிறப்பாக்கிடுவீங்க !//

      பிறகு அதுவே ..... இப்படிச் சொல்லிவிட்டோமே, இப்படிச் சொல்லி விட்டோமே ..... என என்னை உறுத்துவதும் உண்டு.

      //தேடிப் பிடிச்சு பார்க்கர் பேனா வாங்கிக்கொடுத்தது சிறப்பு. முருகுவுக்கும் வாழ்த்துகள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான தேன் சிந்திடும் கருத்துக்களுக்கும், முருகுவை வாழ்த்தியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஹனி மேடம்.

      அன்புடன் கோபால்

      நீக்கு
    2. ஐயோ ஹனி மேடம் நீங்களுமா.............
      எனிக்கி னொம்ப ஷை ஆவுதே. பாராட்டுக்கு ஞன்றிங்கோ.

      நீக்கு
  8. தாங்கள் அறிவித்த போட்டி ஒரு இளம் பதிவரை, (எதிர்கால பட்டய கணக்காளரை) தங்களது 750 பதிவுகளுக்கும் குறுகிய காலத்திற்குள் பின்னூட்டம் இட்டு பரிசை ஈட்ட உதவியிருக்கிறதென்றால் எந்த அளவுக்கு உங்களது பதிவுகள் அவரை ஈர்த்து ஊக்குவித்திருக்கிறது என்று என்னால் அறிய முடிகிறது. மேலும் அவரது அஞ்சலைப் படிக்கும்போது அவர் உள்ளதை மறைக்காமல் சொல்லும் வெள்ளந்தியான உள்ளம் கொண்டவர் என்று தெரிகிறது. நீங்கள் தந்திருக்கும் இந்த ஊக்கம் அவரை நிச்சயம் எழுத்துலகில் அவர் பாணியில் எழுதும் திறமையை வளர்க்கும். அவரை வழி நடத்திய உங்களுக்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வே.நடனசபாபதி November 11, 2015 at 5:12 PM

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      //தாங்கள் அறிவித்த போட்டி ஒரு இளம் பதிவரை, (எதிர்கால பட்டய கணக்காளரை) தங்களது 750 பதிவுகளுக்கும் குறுகிய காலத்திற்குள் பின்னூட்டம் இட்டு பரிசை ஈட்ட உதவியிருக்கிறதென்றால் எந்த அளவுக்கு உங்களது பதிவுகள் அவரை ஈர்த்து ஊக்குவித்திருக்கிறது என்று என்னால் அறிய முடிகிறது. மேலும் அவரது அஞ்சலைப் படிக்கும்போது அவர் உள்ளதை மறைக்காமல் சொல்லும் வெள்ளந்தியான உள்ளம் கொண்டவர் என்று தெரிகிறது. நீங்கள் தந்திருக்கும் இந்த ஊக்கம் அவரை நிச்சயம் எழுத்துலகில் அவர் பாணியில் எழுதும் திறமையை வளர்க்கும். அவரை வழி நடத்திய உங்களுக்கு பாராட்டுக்கள்//

      தங்களின் அன்பான வருகைக்கும், புரிதலுடன் கூடிய மிக விரிவான கருத்துக்களுக்கும், அந்த வெள்ளந்தியான இளம் பதிவரையும் புகழ்ந்துள்ளதுடன், அவரின் இன்றைய வழிநடத்தி நான் எனச்சொல்லி என்னையும் பாராட்டியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

      [ எதிர்கால பட்டயக் கணக்காளரை :) ........
      இது நான் இன்று தங்கள் மூலம் புதிதாகக் கற்றுக்கொண்டதோர் தமிழாக்கம் ... மிக்க நன்றி சார் ]

      அன்புடன் VGK

      நீக்கு
    2. ஐயா பாராட்டுக்கு நன்றிங்கோ. பட்டய கணக்காளருனா இன்னாது வெளங்கி கிட ஏலலியேஆடிட்டரோ.

      நீக்கு
    3. Chartered Accountant என்பதை தமிழில் பட்டய கணக்காளர் என்று சொல்வார்கள்.

      நீக்கு
  9. பதில்கள்
    1. திண்டுக்கல் தனபாலன் November 11, 2015 at 5:17 PM

      //பாராட்டுகள்... வாழ்த்துகள் ஐயா...//

      வாங்கோ, வணக்கம். மிக்க நன்றி, Mr. DD Sir.

      நீக்கு
  10. நேயர் கடிதம் நெகழ்ச்சியாக இருந்தது. ஜீவி சார் சொன்னது போல் வெகு அழகாய் தன் மனதில் உள்ளதை அப்படியே கடிதத்தில் கொண்டு வந்து இருக்கிறார்.
    உங்கள் அன்பு பரிசை பெற்ற மெஹ்ருனிசாவிற்கு வாழ்த்துக்கள்.உங்களூக்கும் வாழ்த்துக்கள் , பாராட்டுகள் சார்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு November 11, 2015 at 5:43 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //நேயர் கடிதம் நெகழ்ச்சியாக இருந்தது. ஜீவி சார் சொன்னது போல் வெகு அழகாய் தன் மனதில் உள்ளதை அப்படியே கடிதத்தில் கொண்டு வந்து இருக்கிறார்.//

      ஆமாம் மேடம். இந்த என் பதிவுக்கு நம் திரு. ஜீவி சாரே, முதன் முதல் வருகை தந்து சிறப்பித்து எழுதியுள்ளதில் எனக்கும் ஒரே மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக இருந்தது. முதலில் அந்தப்பெண்ணின் ஒரிஜினல் கடிதத்தை என் பதிவினில் அப்படியே வெளியிடலாமா வேண்டாமா என நான் யோசித்து மிகவும் குழம்பினேன். வெளியிட்டது நல்லதாப்போச்சு. நம் உயர்திரு. ஜீவி சார் அவர்களின் பாராட்டுகளையே அது பெற்றுவிட்டது என்பதில் எனக்கு மேலும் மகிழ்ச்சியே.

      //உங்கள் அன்பு பரிசை பெற்ற மெஹ்ருனிசாவிற்கு வாழ்த்துக்கள். உங்கலூக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுகள் சார்//

      தங்களின் அபூர்வ வருகைக்கும், நெகிழ்ச்சி மிக்கக் கருத்துக்களுக்கும், வாழ்த்துகள் + பாராட்டுகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
    2. வாங்க மேடம் பாராட்டுக்கு நன்றிகள்

      நீக்கு
  11. ஆத்மார்த்தமாகவும், மிகவும் யதார்த்தமாகவும், மனம் திறந்து எழுதியுள்ள அருமையான கடிதத்துக்கு பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி November 11, 2015 at 5:57 PM

      வாங்கோ, வணக்கம் மேடம்.

      //ஆத்மார்த்தமாகவும், மிகவும் யதார்த்தமாகவும், மனம் திறந்து எழுதியுள்ள அருமையான கடிதத்துக்கு பாராட்டுக்கள்..//

      இன்றைய தேதி-11, மாதமும் 11, தங்களின் பின்னூட்ட எண்ணும் 11 :) )) )) )) )) )) மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.

      மற்றவர்களுக்கு நான் பதில் அளிக்கும் போது, இது ஒருவேளை மாறிப்போய் விடலாம். அதனால் தங்களுக்கு மட்டும் அவசரமான இந்த பதில் இன்றே இப்போதே கொடுக்கப்பட்டுள்ளது.

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
    2. திருமதி ஸ்ரீராஜராஜேஸ்வரிம்மா வாங்கம்மா. குருஜி எப்பயுமே ஒங்களபத்தி உயர்வாகவும் பெருமயாகவும் சொல்லிகினே இருப்பாக. ரண்டு வாட்டி ஒங்கட பதிவு டக்கம்லா வந்துபிட்டேன் கோவிலு ஸாமிகள் பத்தி படங்க பதிவு இரந்திச்ச இன்னாகமண்டு போட்டுக்கிடனு வெளங்கி கிடலை.ஓடியாந்துபோட்டேன். ஞீங்கலா ரொம்ப பெரிய மனுசங்க என்ன பாராட்டி கமண்டு போட்டுபிட்டதுக்கு நன்றிம்மா

      நீக்கு
  12. வணக்கம் சார்.பின்னூட்டப்போட்டியின் எனக்கு தெரியாமல் போய்விட்டது..உங்களின் ஊக்கம்மூட்டும் பண்பு ஆச்சர்யத்தை தருகின்றது..பழனி கந்தசாமி அய்யா உங்களின் பரிசை ஆர்வமுடன் காட்டியபோது மிக மகிழ்வாக இருந்தது...நன்றி சார்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha M November 11, 2015 at 6:37 PM

      //வணக்கம் சார்.//

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //பின்னூட்டப்போட்டி பற்றி எனக்கு தெரியாமல் போய்விட்டது.. //

      2014ம் ஆண்டு தொடர்ச்சியாக 40 வாரங்களுக்கு, மிகப்புதுமையாக நான் நடத்திய ’சிறுகதை விமர்சனப்போட்டி’களில் 255 க்கும் மேற்பட்ட ரொக்கப் பரிசுகள் அளிக்கப்பட்டன.

      இதோ அதற்கான படங்களுடன் கூடிய இணைப்புகள்:

      http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html
      http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

      போட்டியின் நடுவர் அவர்களுக்கு விமர்சனம் எழுதி அனுப்பியவர் யார் என்பதைப்பற்றி கடைசிவரை நான் தெரியப்படுத்தாமல், மிகப்புதுமையாக நடைபெற்று முடிந்ததே இந்த என் போட்டிகளின் சிறப்பு அம்சமாகும்.

      அதில் ஆர்வத்துடன் பங்கு கொண்டு மிகச்சிறப்பாக விமர்சனம் எழுதி தங்களின் எழுத்துத் திறமைகளை வெளிக்காட்டியவர்களுக்கு, தேர்வுக்குழுவின் நடுவர் அவர்களின் பரிந்துரையின் பேரில் மட்டுமே பரிசுகள் வழங்கப்பட்டன.

      அதனுடன் ஒப்பிடும்போது இப்போது 2015ல் அறிவிக்கப்பட்டுள்ள ’100% பின்னூட்டமிடும் போட்டி’யொன்றும் கஷ்டமான போட்டியே அல்ல. மிகச்சுலபமான போட்டி மட்டுமே ஆகும். ஆனால் சிலருக்கு மிகவும் அலுப்பினைத் தரக்கூடியது. பழைய பஞ்சாங்கங்களைப் புரட்டிப் பார்த்து படித்து பின்னூட்டமிட மிகவும் பொறுமை மட்டும் இதற்குத் தேவைப்படும்.

      என் முதல் 750 பதிவுகளில் சுமார் 100 பதிவுகள் வரை மீள் பதிவுகளாகவே இருக்கும். மேலும் ஒரு 150 பதிவுகள் வரை ஆன்மிகம் அதிகம் கலந்திருக்கும். மற்றவை அனைத்தும் வெவ்வேறு தலைப்புகளில் படிக்க மிகவும் சுவாரஸ்யமாகவே இருக்கும். பெரும்பாலும் சிறுகதைகளாக நகைச்சுவைகள் அதிகம் உள்ளதாக இருக்கும் என பிறர் பாராட்டிச் சொல்வதுண்டு.

      //உங்களின் ஊக்கம்மூட்டும் பண்பு ஆச்சர்யத்தை தருகின்றது.. //

      நல்ல தரம் வாய்ந்த எழுத்தாளர்களை மட்டும், நானும் தேடிப்பிடித்து எனக்குள் அடையாளம் கண்டுகொண்டு, அவர்களை அவ்வப்போது என்னால் முடிந்தவரை பின்னூட்டங்கள் மூலம் பாராட்டி ஊக்குவிப்பதுடன், பிறருக்கும் அவர்களை அடையாளம் காட்டி சிறப்பிக்க என் மனதில் எப்போதும் நினைப்பது உண்டு. அதுபோலவே அவ்வப்போது நான் செய்வதும் உண்டு. இப்போது என் உடல்நலை காரணமாகவும், வேறு சில குடும்பப்பொறுப்புகள் காரணமாகவும் தற்சமயம் கொஞ்சம் இவற்றையெல்லாம் குறைத்துக்கொண்டுள்ளேன்.

      //பழனி கந்தசாமி அய்யா உங்களின் பரிசை ஆர்வமுடன் காட்டியபோது மிக மகிழ்வாக இருந்தது... நன்றி சார்..//

      இந்த 100% பின்னூட்டப்போட்டியில் இதுவரை வெற்றி வாய்ப்பினை எட்டியுள்ளவர்கள் மொத்தம் ஐந்து நபர்கள். அதில் நம் முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களும் ஒருவர். மிகவும் சுறுசுறுப்பானவர். தங்கமான குணம் உடையவர்.

      http://manammanamveesum.blogspot.in/2015/11/1.html

      இதோ இந்த மேற்படி பதிவினையும் அதற்கு நான் கொடுத்துள்ள இரண்டு பின்னூட்டங்களையும் முடிந்தால் பாருங்கோ.

      Even now it is not TOO LATE.

      இன்னும் போட்டி நிறைவுத்தேதியான 31.12.2015 க்கு முழுசாக 50 நாட்கள் உள்ளன. எக்காரணம் கொண்டும் இந்த தேதியை ஒத்தி வைக்கும் அல்லது நீடிக்கும் வழக்கம் மட்டும் என்னிடம் எப்போதும் கிடையவே கிடையாது.

      நான் யாரையும் போட்டியில் கலந்துகொள்ளுங்கள் என கட்டாயப்படுத்துவதோ, வற்புருத்துவதோ இல்லை. ஆர்வமும், விருப்பமும், ஈடுபாடும், நேர அவகாசமும் இருந்து அவர்களாகவே கலந்துகொண்டால், அவர்களை தொடர்ந்து ஊக்குவிப்பது மட்டுமே என் வேலையாக நான் வைத்துக்கொண்டுள்ளேன்.

      Best of Luck !

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என்னைக் கொஞ்சம் இது சம்பந்தமாக விரிவாகப் பேச வைத்துள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      நீக்கு
  13. தங்களுக்கும் முருகு அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரந்தை ஜெயக்குமார் November 11, 2015 at 7:16 PM

      வாங்கோ சார், வணக்கம்.

      //தங்களுக்கும் முருகு அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள் ஐயா//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.

      நீக்கு
  14. முருகுவின் கடிதம் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. பின்னூட்டப்போட்டியில் வெற்றி பெற்று பரிசு பெறுவதை அறிந்து மகிழ்ச்சி. கூடவே பேனாவும் சேர்த்து அளிப்பதறிந்து மகிழ்ச்சி. தொடர்ச்சியாக ஊக்கம் கொடுத்து போட்டியில் வெற்றி பெற வைப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே தான். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது கோபு சார்! எதிர்காலத்தில் முருகு சிறந்த பதிவராக வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞா. கலையரசி November 11, 2015 at 7:57 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //முருகுவின் கடிதம் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. பின்னூட்டப்போட்டியில் வெற்றி பெற்று பரிசு பெறுவதை அறிந்து மகிழ்ச்சி. கூடவே பேனாவும் சேர்த்து அளிப்பதறிந்து மகிழ்ச்சி. தொடர்ச்சியாக ஊக்கம் கொடுத்து போட்டியில் வெற்றி பெற வைப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே தான். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது கோபு சார்! எதிர்காலத்தில் முருகு சிறந்த பதிவராக வாழ்த்துகிறேன்!//

      தங்களின் அன்பான வருகைக்கும், மகிழ்ச்சியுடன் + நெகிழ்ச்சியுடன் கூடிய விரிவான பல நல்ல பாஸிடிவ் கருத்துக்களுக்கும், முருகுவுக்கான தங்களின் அருமையான வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      என்றும் நன்றியுடன் கோபு

      நீக்கு
    2. கலையரசி மேடம் பாராட்டுகளுக்கு நன்றிங்க

      நீக்கு
  15. மனம் திறந்த மடல்;குருஜிக்கும் சிஷ்யை க்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னை பித்தன் November 11, 2015 at 8:13 PM

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      //மனம் திறந்த மடல்; குருஜிக்கும் சிஷ்யை க்கும் வாழ்த்துகள்//

      தங்களின் அன்பான வருகைக்கும், மனம் திறந்த மடல் என வாழ்த்தியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

      நீக்கு
  16. நான் இனி பதிவுலகம் பக்கம் அடிக்கடி வர மாட்டேன், எழுத மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே, சத்தமில்லாமல், வலையுலகில் புரட்சி செய்து கொண்டு இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வாங்கோ சார், வணக்கம் சார்.

      //நான் இனி பதிவுலகம் பக்கம் அடிக்கடி வர மாட்டேன்,//

      உண்மைதான் சார். நான் இப்போதெல்லாம் பதிவுலகம் பக்கம் அடிக்கடி வருவது இல்லையே. தங்கள் பதிவுகள் பக்கம்கூட அதிகமாக நான் வரமுடியாமல் அல்லவா என் நிலமை இன்று உள்ளது என்பதை நினைக்க எனக்கும் வருத்தமாக உள்ளதே ......

      //எழுத மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே,//

      2011 = 200 பதிவுகள்;
      2012 = 116 பதிவுகள்;
      2013 = 142 பதிவுகள்;
      2014 = 238 பதிவுகள்;
      2015 = 98 பதிவுகள் மட்டுமே (இதுவரை)

      இப்போதெல்லாம் எழுதுவதும் இல்லையே. ஆடிக்கொருநாள் அமாவாசைக்கொருநாள் அல்லவா என்னால் வேறு வழியில்லாமல் எழுத நேரிடுகிறது.

      ’அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்ன சம்பந்தம்?’ என சிலர் சொல்வார்கள். அது என்ன சம்பந்தமோ எனக்கும் புரியவில்லை.

      ஆனால் இந்த மெஹ்ருன் நிஸா அவர்களின் நேயர் கடிதத்தினை பதிவாக நான், ஓர் நிறைந்த அமாவாசையன்று (அதாவது நேற்று 11.11.2015) வெளியிட நேர்ந்துள்ளதை நினைக்க எனக்கே மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.

      ஏதோவொரு சம்பந்தம் இருக்கும்போலத்தான் எனக்கும் தோன்றுகிறது. :)

      //சத்தமில்லாமல், வலையுலகில் புரட்சி செய்து கொண்டு இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்! //

      இந்த 2015ம் ஆண்டு, தெரிந்தோ தெரியாமலோ ஓர் போட்டியை நான் அறிவித்து விட்டேன் அல்லவா ! அது சம்பந்தமாக ஏதேனும் புரட்சிகள் செய்யாமல் என்னால் எப்படி ஒதுங்கி இருக்க முடியும் ... சொல்லுங்கோ. அதன் விளைவே இந்த ‘நேயர் கடிதம்’ வெளியீடு.

      அடுத்ததாக வரும் டிஸம்பரில் போட்டியில் வெற்றி பெற்றவர்களை வரிசையாக அறிவிக்க வேண்டும். அது எப்படியும் ஒரு 5-6 பதிவுகளாவது தேறும். அதன்பிறகு 2016 முதல் எனக்கு முழு ஓய்வு மட்டுமே.

      தங்களின் அன்பான வருகைக்கும், நியாயமான கேள்விகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

      என்றும் அன்புடன் தங்கள் VGK

      நீக்கு
  17. மிக அருமையான உள்ளத்தை தொட்ட கடிதம் மெஹர்னிசா !
    கோபு அண்ணாவின் தனித்தன்மையான குணமே அனைவரையும் பின்னூட்டத்தால் உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தி எப்படியாச்சும் எழுத வைத்து விடுவார் ..
    அப்புறம் மெஹருனிசா ... ..கோபு சார் கையால் பேனா கிடைப்பதற்கு கொடுத்து வச்சிருக்கணும் ...நீங்கள் நன்கு படித்து மென்மேலும் இப்படி நிறைய பரிசுகளை குவித்து சிகரம் தொட வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Angelin November 11, 2015 at 10:10 PM

      வாங்கோ என் அன்புச் சகோதரி ஏஞ்சலின் அவர்களே ! வாங்கோ, வாங்கோ, வணக்கம்மா.

      //மிக அருமையான உள்ளத்தை தொட்ட கடிதம் மெஹர்னிசா !//

      மெஹ்ருன் நிஸா சார்பில் இப்போதைக்கு என் நன்றிகள்.

      அவங்க இப்போ எங்கோ வெளியூர் போயிருக்காங்க. திரும்பி வந்ததும் எல்லோருக்கும் தனித்தனியே பதில் கொடுக்க அவங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ .... அது எனக்குத்தெரியாது. :) நான்தான் அதையும் சொல்லித்தர வேண்டியிருக்குமோ ..... என நினைக்கத் தோன்றுகிறது :)

      //கோபு அண்ணாவின் தனித்தன்மையான குணமே அனைவரையும் பின்னூட்டத்தால் உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தி எப்படியாச்சும் எழுத வைத்து விடுவார் ..//

      ஹைய்யோ ..... இதெல்லாம் டூ மச்சா இல்லையான்னு நம் அதிரா வந்தால் தான் தெரியும் ..... :)

      //அப்புறம் மெஹருனிசா ... ..கோபு சார் கையால் பேனா கிடைப்பதற்கு கொடுத்து வச்சிருக்கணும் ... நீங்கள் நன்கு படித்து மென்மேலும் இப்படி நிறைய பரிசுகளை குவித்து சிகரம் தொட வாழ்த்துக்கள்.//

      அந்தப்பொண்ணுக்கு இந்தத்தங்களின் பின்னூட்டம் மிகவும் ஆறுதல் அளிக்கும் என நினைக்கிறேன். அவள் நன்கு படித்து மேலும் முன்னேறி சிகரம் தொட தாங்களும் பிரார்த்தித்துக்கொள்ளவும். [Please Pray for her too] மிக்க நன்றி, ஏஞ்சலின்.

      அன்புடன் கோபு அண்ணா

      நீக்கு
    2. ஏஞ்சலின் அக்கா ரொம்ப அளகா பாராட்டி இருக்கீங்க ஆமாங்க குருஜியோட ராசியான கையிலேந்து பேனா அதுவும் நா ஆசப்பட்ட பார்க்கரு பேனா கட கடயா தேடி அலஞ்சி வாங்கி இருக்காகல்லா.

      நீக்கு
  18. மனதை நெகிழசெய்தது அண்ணா பரிசுடன் அந்த சின்னப்பெண் ஆசைப்பட்ட பேனாவையும் பரிசாக கொடுத்துள்ளீர்கள் ..சந்தோஷமாயிருக்கு ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Angelin November 11, 2015 at 10:15 PM

      வாங்கோ ஏஞ்சலின். வணக்கம். தங்களின் மீண்டும் வருகை மேலும் மகிழ்ச்சியளிக்கிறது.

      //மனதை நெகிழசெய்தது அண்ணா பரிசுடன் அந்த சின்னப்பெண் ஆசைப்பட்ட பேனாவையும் பரிசாக கொடுத்துள்ளீர்கள் ..சந்தோஷமாயிருக்கு ...//

      ஏதோ என்னால் ஆன மிகச்சிறியதோர் உதவி ..... அதுவும் அவளின் இலக்கான மிகப்பெரிய C.A., படிப்புக்காக மட்டுமே .....

      இன்று பணம் இருந்தால் மட்டும் போதும், டாக்டராகவோ, இஞ்சினியராகவோ அட்மிஷன் கிடைக்கவும், அதற்கான டிகிரிகள் வாங்கி சுலபமாக வெளியே வரவும்.

      C.A., படிப்பு மட்டும் அதுபோல இல்லை. உண்மையிலேயே இயற்கையாகவே அதிபுத்திசாலித்தனமான மூளையும், ஆர்வமும், கடும் உழைப்பும், அதிர்ஷ்டமும் ஒன்று சேர வேண்டும். இந்தப்படிப்பில் சேர்வது ஓரளவு சுலபம். பாஸ் செய்து வெளியே வருவது மிக மிகக் கஷ்டமானது என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும் என நம்புகிறேன்.

      பாஸ் செய்து வந்துவிட்டால் உலகம் பூராவும் வேலை வாய்ப்புகள் (DEMANDS) மிக மிக அதிகமாகவே உள்ள படிப்பு இது. மாதாமாதம் பல லட்சங்கள் சம்பாதிக்கலாம்.

      C.A., படித்து முடித்து வேலையில்லாமல் + வருமானம் இல்லாமல் இருக்கும் ஒரு நபரைக்கூட இந்த உலகம் பூராவும் தேடினாலும் நம்மால் கண்டு பிடிக்கவே முடியாது.

      இவள் மேற்கொண்டு C.A., படிக்கப்போகிறேன் என்று என்னிடம் சொன்னதுமே எனக்கும் மிகவும் சந்தோஷமாகப் போய் விட்டது.

      நெகிழ்ச்சியுடன் கூறியுள்ள தங்களின் கருத்துக்களுக்கு மீண்டும் என் நன்றிகள், ஏஞ்சலின்.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      நீக்கு
    2. ஏஞ்சலின் அக்கா மறுக்காவும் நன்றிங்க.

      நீக்கு
  19. நெகிழ வைத்த நேயர் கடிதம்.

    பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட் நாகராஜ் November 11, 2015 at 11:00 PM

      வாங்கோ வெங்கட்ஜி, வணக்கம்.

      //நெகிழ வைத்த நேயர் கடிதம்.
      பாராட்டுகளும் வாழ்த்துகளும்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜி.

      நீக்கு
  20. அருமை அய்யா! வழக்கம்போல் இதிலும் தங்களின் தனித்தன்மை மிளிர்கிறது. பின்னூட்டப் போட்டிப் பரிசு உரியவர்களுக்கே போய் சேர்ந்திருக்கிறது என்பது மகிழ்ச்சி.
    கடிதம் மனதை தொட்டது. பகிர்வுக்கு நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. S.P. Senthil Kumar November 11, 2015 at 11:07 PM

      வாங்கோ சார், வணக்கம்.

      //அருமை அய்யா! வழக்கம்போல் இதிலும் தங்களின் தனித்தன்மை மிளிர்கிறது. பின்னூட்டப் போட்டிப் பரிசு உரியவர்களுக்கே போய் சேர்ந்திருக்கிறது என்பது மகிழ்ச்சி. கடிதம் மனதை தொட்டது. பகிர்வுக்கு நன்றி அய்யா!//

      தங்களின் இந்தப் பின்னூட்டமும் தனித்தன்மையுடன் மிளிர்ந்து என் மனதைத்தொட்டது. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      நீக்கு
  21. செல்வி மெஹ்ருன்னிஸா அவர்களின் நேயர் கடிதம்,
    பரவச மனநிலையிலிருந்து எழுதியதால் மனதைத் தொடும்விதமாக இருந்தது.
    அவர்களது மெய்க் கடிதம் (original letter) உரையாடுவதுபோன்றே இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் November 12, 2015 at 7:46 AM

      வாங்கோ என் அருமை நண்பரே, நலமா? வணக்கம்.

      //செல்வி மெஹ்ருன்னிஸா அவர்களின் நேயர் கடிதம்,
      பரவச மனநிலையிலிருந்து எழுதியதால் மனதைத் தொடும்விதமாக இருந்தது.//

      மிக்க மகிழ்ச்சி. பரவச மனநிலையிலிருந்து மனதை தொடும் விதமாக எழுதியுள்ளதால் மட்டுமே இந்தக் கடிதம் இங்கு இப்போது அவசரமாக இடம் பெற்றுள்ளது .... போட்டிக்கான கெடு தேதிக்கு இன்னும் 50 நாட்கள் இருப்பினும்கூட.

      //அவர்களது மெய்க் கடிதம் (original letter) உரையாடுவதுபோன்றே இருந்தது.//

      ஆமாம். தாங்கள் சொல்வது மிகவும் உண்மைதான். :)

      >>>>>

      நீக்கு
    2. நீங்க ரூம்ப கரீட்டா சொல்லி போட்டீக சகோ. பரவச மனநிலையிலதா எளுதினன் அத குருஜி அவங்க பக்கத்துல போட்டுபிட்டாகளே.

      நீக்கு
  22. தாங்கள் அறிமுகப்படுத்தியபின் அவரது பதிவில் சென்று நானும் பின்னூட்டம் அளித்திருக்கிறேன்.

    முயற்சித்து வென்று காட்டிய சகோதரிக்கு வாழ்த்துகள்!

    அன்பரது ஆசையை (பேனா) நிறைவேற்றிய தங்களுக்கு சகோதரி சார்பாக நன்றி!

    சகோதரி மெஹ்ருன்னிஸா,
    தனது சி.ஏ. தேர்வை வெற்றிகரமாக முடித்திட எல்லாம்வல்ல அல்லாஹ்விடம் துஆ (பிரார்த்தனை)
    செய்துகொள்கிறேன்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் November 12, 2015 at 7:53 AM

      வாங்கோ வணக்கம் நண்பா, தங்களின் மீண்டும் வருகை மீண்டும் மகிழ்ச்சியளிக்கிறது.

      //தாங்கள் அறிமுகப்படுத்தியபின் அவரது பதிவில் சென்று நானும் பின்னூட்டம் அளித்திருக்கிறேன்.//

      அதை நான் அன்றே பார்த்து மகிழ்ந்தேன்.

      //முயற்சித்து வென்று காட்டிய சகோதரிக்கு வாழ்த்துகள்!//

      தங்களின் வாழ்த்துகளுக்கு அவர்களின் சார்பில் என் நன்றிகள். அவர்களும் என்றாவது ஒரு நாள் நன்றி கூற இங்கு வந்தாலும் வரலாம்.

      //அன்பரது ஆசையை (பேனா) நிறைவேற்றிய தங்களுக்கு சகோதரி சார்பாக நன்றி!//

      ஏதோ என்னால் ஆன மிகச்சிறியதோர் உதவி ..... அதுவும் அவர்களின் இலக்கான மிகப்பெரிய C.A., படிப்புக்காக மட்டுமே .....

      //சகோதரி மெஹ்ருன்னிஸா, தனது சி.ஏ. தேர்வை வெற்றிகரமாக முடித்திட எல்லாம்வல்ல அல்லாஹ்விடம் துஆ (பிரார்த்தனை) செய்துகொள்கிறேன்!!//

      மிக்க மகிழ்ச்சி நண்பரே. நானும் அதையே விரும்புகிறேன். பிரார்த்திக்கிறேன். நாம் நல்லதே நினைப்போம் .... நல்லதே நல்லவிதமாக விரைவில் நிகழட்டும்.

      தங்களின் அன்பான வருகைக்கும் விரிவான வியப்பளிக்கும் கருத்துக்களுக்கும் என் ஸ்பெஷல் நன்றிகள்.

      என்றும் அன்புடன் தங்கள் VGK

      நீக்கு
    2. போன கமண்டுல நன்றி சொல்லிகிட மறந்திட்டனே நன்றிங்க

      நீக்கு
  23. கோபால் சார், உங்க பதிவு பக்கம் இன்றுதான் முதல் தடவையாக வருகிறேன் என் நண்பன்தான் உங்க பதிவு பத்தியெல்லாம் என்னிடம் சொன்னான். இந்த பதிவு படித்ததுமே உங்க எல்லா பதிவுகளையும் தேடிப்பார்த்து படிக்க மிகவும் ஆவலாக உள்ளேன் இந்த பதிவு சிம்ப்ளி சூப்பர்ப். குருஜிக்கு பெருமை சேர்க்கும் சிஷ்ய பெண்ணை அறிந்து கொள்ள மிகவும் சந்தேஷமாக இருக்கிறது. அவர்களின் மனம் திறந்த கொச்சை தமிழ் கடிதம் அவங்கவெள்ளந்தியா மனதையும் உங்க மேல அவங்க வைத்திருக்கும் மரியாதையையும் நன்றாகவே தன் எழுத்து திறமையால் வெளிப்படுத்தியிருக்காங்க. நீங்களும் அவங்களை பெருமைப்படுத்தும் விதத்தில் அதை நாங்க எல்லாரும் தெரிந்து கொள்ள உங்கள் பதிவில் வெளியிட்டு இருக்கீங்க. அதுவும் படிக்கிறவங்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக அவங்க கடிதத்தை மெருகு கூட்டி எழுதி படிக்கிறவங்க எல்லாருக்கும் ஒரு பரவச அனுபவத்தை தந்திருக்கிறீர்கள. இதெற்கெல்லாம் மிகப் பெரிய பரந்த பெருந்தன்மையான மனது உங்களிடம் நிறம்பி கருக்கிறது. பரிசு பணத்துடன் அவங்க ஆசைப்பட்ட பார்க்கர் பேனாவைக்கூட தேடி அலைந்து வாங்கி கொடுக்கிறீரகள் இது என்ன மாதிரி குரு சிஷ்யை பந்தம் . உங்களை பதிவு மூலமாக இன்று முதல் முறையாக சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் சார் உங்களுக்கும் உங்க ஆத்மார்த்தமான சிஷ்யைக்கும் என் மனம் நிறந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்க எழுதி இருக்கும் எல்லா பதிவுகளையும் படிக்க ஆவலாக உள்ளேன். இன்றே தொடங்கி விடுவேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆல் இஸ் வெல்....... November 12, 2015 at 11:47 AM

      வாங்கோ, வணக்கம்.

      //கோபால் சார், உங்க பதிவு பக்கம் இன்றுதான் முதல் தடவையாக வருகிறேன் என் நண்பன்தான் உங்க பதிவு பத்தியெல்லாம் என்னிடம் சொன்னான்.//

      மிக்க மகிழ்ச்சி. அந்தத்தங்களின் நண்பருக்கும் தங்களுக்கும் என் முதற்கண் நன்றிகள்.

      //........................................................................................................................................................................................................................................................................................................................................... இதெற்கெல்லாம் மிகப் பெரிய பரந்த பெருந்தன்மையான மனது உங்களிடம் நிறம்பி கருக்கிறது.//

      மேலேயுள்ள கடைசி இரண்டு வார்த்தைகளை ’நிரம்பி இருக்கிறது’ என மாற்றிக்கொண்டு படித்தேன். ஓக்கே தானே ?

      ..............................................................................................................................................................................................................................
      //நீங்க எழுதி இருக்கும் எல்லா பதிவுகளையும் படிக்க ஆவலாக உள்ளேன். இன்றே தொடங்கி விடுவேன்.//

      இதை நானும் நம்புகிறேன் :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      தங்களின் முதல் வருகையும், மிக நீண்ட பின்னூட்டமும், பாராட்டுகளும் வாழ்த்துகளும் படிக்க மிகவும் மகிழ்ச்சியாக உணர முடிந்தது. அதற்காக மீண்டும் தங்களுக்கு என் இனிய அன்பு நன்றிகள். - VGK

      நீக்கு
  24. வணக்கம்
    ஐயா
    கடிதம் மகதை நெருடிவிட்டது... படித்துமகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  25. வணக்கம்
    ஐயா
    பதிவு மனதை நெருடி விட்டது... படித்து மகிழ்நதேன் ஐயா வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்நதேன் = ?????

      ஒருவரிப் பின்னூட்டம் ..... இருமுறை அனுப்பியும் ..... இரண்டிலும் வெவ்வேறு இரு இடங்களில் எழுத்துப்பிழைகள். :(

      எனினும் நன்றி.

      நீக்கு
  26. இப்பதான் இந்த பதிவு பார்த்தேன். ஏற்கனவே உங்களின் பல பதிவுகள் படித்து பின்னூட்டமும் போட்டிருக்கேன். இப்ப என் வலைப்பதிவின் பெயர் மாறி விட்டதால இந்த பெயரில் வந்திருக்கிறேன். உங்க சிஷ்ய பெண்ணிற்கு நீங்க கொடுத்திருக்கும் அங்கீகாரத்துக்கு முதலில் பாராட்டுகள். இது போல எந்த பதிவருமே செய்ததில்லை. மெஹருன்நிஸா அவங்களின் மனம் திறந்த கடிதம் நேரில் உட்கார்ந்து எங்களிடம் பேசுவது போலவே இருக்கிறது. ரொம்ப நல்லா எழுதி இருக்காங்க. நீங்களும் அதை மெருகூட்டி படிக்கிறவர்களுக்கு புரியும் விதத்தில் கொடுத்திருக்கீங்க. உங்க தெளிவான கடிதம் படித்து விட்டு அவங்க ஒரிஜனல் படித்ததினால்தான் அந்த கொச்சை தமிழ் கடிதாசியை புரிந்து கொள்ள முடிந்தது.
    உங்க பக்கம் அவங்க கடிதம் போட்டு அவங்களைப் பெருமைப்படுத்தியிருக்கிறீர்கள்
    இரண்டு கடிதங்களும் இணைப்பு படங்களும் கூடுதல் சிறப்பு..அவங்க ஆசைப்பட்டாங்க என்று பேனாவும் வாங்கி கொடுக்கிறீரகளே. உங்களுக்கு மிகப் பெரிய மனது சார் அருமையான குருஜி அவர்களுக்கும் குருஜியால் பெருமை அடைந்த சிஷ்யைக்கும் பாராட்டுகளுடன் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரணாகதி. November 12, 2015 at 1:23 PM

      வாங்கோ, வணக்கம்.

      //இப்பதான் இந்த பதிவு பார்த்தேன். ஏற்கனவே உங்களின் பல பதிவுகள் படித்து பின்னூட்டமும் போட்டிருக்கேன். //

      ஏதோ சில பதிவுகளில் மட்டும் தங்களைப் பார்த்த நினைவு எனக்கும் உள்ளது.

      //இப்ப என் வலைப்பதிவின் பெயர் மாறி விட்டதால இந்த பெயரில் வந்திருக்கிறேன்.//

      உங்களை எனக்கு மிக நன்றாகவே தெரியும். உங்களின் முதல் பதிவுக்கு முதல் பின்னூட்டமிட்டு ஊக்கம் கொடுத்ததும் நான்தான் என எனக்கும் நினைவில் உள்ளது.

      பெயரில் என்ன இருக்கிறது? ‘சரணாகதி’ .... இதுதான் எல்லாவற்றையும் விட மிகச்சிறப்பானதோர் செயல் + தத்துவம்.

      //............................................................................................................................................................................................................................ அருமையான குருஜி அவர்களுக்கும் குருஜியால் பெருமை அடைந்த சிஷ்யைக்கும் பாராட்டுகளுடன் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், நீண்ட கருத்துக்களுக்கும், பாராட்டுகள் + வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  27. செல்வி மெஹருன்னிசாவின் கடிதம் மனதை நெகிழ வைத்தது. அவர் சி.ஏ. தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்துத் தேர்ச்சி அடைந்துப் பொருளாதார நிலையிலும் உயர்வு அடைய மனமார்ந்த வாழ்த்துகள். பிரார்த்தனைகள். அவர் அண்ணாவின் நிலையும் உயர வேண்டும். அவர் அம்மாவுக்குத் தட்டாமல் குட் டே பிஸ்கட்டுகள் கிடைக்க வேண்டும். அவருக்காகத் தேடி அலைந்து பார்க்கர் பேனா வாங்கிக் கொடுத்த உங்கள் மேன்மை சிலிர்க்க வைக்கிறது. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha Sambasivam November 12, 2015 at 2:10 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //செல்வி மெஹருன்னிசாவின் கடிதம் மனதை நெகிழ வைத்தது. அவர் சி.ஏ. தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்துத் தேர்ச்சி அடைந்துப் பொருளாதார நிலையிலும் உயர்வு அடைய மனமார்ந்த வாழ்த்துகள். பிரார்த்தனைகள். அவர் அண்ணாவின் நிலையும் உயர வேண்டும். அவர் அம்மாவுக்குத் தட்டாமல் குட் டே பிஸ்கட்டுகள் கிடைக்க வேண்டும். அவருக்காகத் தேடி அலைந்து பார்க்கர் பேனா வாங்கிக் கொடுத்த உங்கள் மேன்மை சிலிர்க்க வைக்கிறது. அனைவருக்கும் வாழ்த்துகள்.//

      தங்களின் அன்பான வருகையும், மனம் நிறைந்த மிக உயர்வான, வித்யாசமான ஆசிகளும் என்னையும் நெகிழ வைத்து சிலிர்க்க வைக்கிறது.

      தங்களின் இந்த மனப்பூர்வமான நல்ல ஆசிகளால் அவர்கள் குடும்பமே க்ஷேமமாக, செளக்யமாக, சந்தோஷமாக, பணக்கஷ்டமோ, மனக்கஷ்டமோ ஏதும் இல்லாமல் இருக்கட்டும். அதுதான் நான் வேண்டி விரும்புவதும்.

      தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      அன்புடன் கோபு

      நீக்கு
    2. வாங்க மேடம் ஆமாங்க என் எய்ம் கனவு அல்லாமே எங்கட ஸி. ஏ. படிப்புதான். பாராட்டுக்கு நன்றி மேடம்

      நீக்கு
  28. கஷ்டங்களின் வரிவடிவம், முயற்சியின் பரிசு வடிவம், ஊக்கமூட்டியவிதம் எல்லாமே பிறருக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லவும் உதவும். படித்துபாஸ்செய்து நல்ல நிலை முருகிவிற்கு அருகிலேயே உள்ளது. அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காமாட்சி November 12, 2015 at 4:49 PM

      வாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.

      //கஷ்டங்களின் வரிவடிவம், முயற்சியின் பரிசு வடிவம், ஊக்கமூட்டியவிதம் எல்லாமே பிறருக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லவும் உதவும். படித்துபாஸ்செய்து நல்ல நிலை முருகிவிற்கு அருகிலேயே உள்ளது. அன்புடன்//

      தங்களின் மனப்பூர்வமான தூய்மையான இந்த ஆசீர்வாதங்களால் நிச்சயம் அந்தப்பொண்ணு நல்ல நிலைக்கு சீக்கரமே வருவாள் என்ற நம்பிக்கை எனக்குள் உள்ளது.

      தங்களின் அன்பான வருகைக்கும் ஆசிகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மாமி.

      அன்புடன் கோபு

      {தங்களின் பதிவுகள் பக்கம் பின்னூட்டமிட்டால் அது தங்களுக்குச் சரியாகவே போய்ச்சேர்வது இல்லை. Wordpress System அந்த அளவுக்கு மிகவும் வழுவட்டையாக உள்ளது என்பதைத்தான் நான் மீண்டும் உணர்கிறேன். 3-4 முறைகள் தொடர்ச்சியாக நான் பின்னூட்டமிட முயற்சித்தும் பலனில்லாமல் போய் விட்டது. இது தங்களின் தகவலுக்காக மட்டுமே}

      நீக்கு
    2. வாங்கம்மா குருஜியோட ராசியான கையிலேந்து பேனா வாங்கிபோட்டுதான பரீச்ச எளுதி மொத ஆளா பாஸ் பண்ணிபோடுவேன்ல. பாராட்டுக்கு நன்றிம்மா.

      நீக்கு
  29. ஹப்பா இதுபோல ஒரு குரு பார்வை எல்லாருக்குமே கிடைத்துவிட்டால் அவர்கள் வாழ்க்கையில் நிறைய சாதிக்க முடியும் செல்வி மெஹருன்னிஸாவின் கடிதாசி அவ்ளோ அழகு ஆத்மார்த்தமா இருந்தது.
    கொச்சை தமிழில் எழுதி இருந்தாலும் அவங்க குழந்தை உள்ளம் மாறாம ரொம்ப வெள்ளந்தியா கடிதாசியில அவங்க குடும்ப நிலமையைக்கூட சொல்லி இருக்காங்க.
    மெஹர் இதுபோல ஒரு அற்புதமான குருஜி
    உனக்கு சப்போர்ட்டா இருக்கும் வரை நீ எது பத்தியும் கவலைப்பட தேவையே இல்லைமா. கோபால் சார் திறமையான வலைப்பதிவு எழுத்தாளர் மட்டும் இல்லை. அதுக்கும் மேல திறமை உள்ளவங்களை கைதூக்கி விடும் பெரிய மனது படைச்சவங்க.
    அவங்க அறிமுகம் கிடைத்தது உனக்கு வாழ்வில் மிகப் பெரிய திருப்பங்களைத் தரும்
    அந்த விதத்தில் நீ மிகப்பெரிய அதிர்ஷ்டசாலிதான். போனஸாக நீ ஆசைப்பட்ட பார்க்கர் பேனாவும் உனக்காக காத்திண்டு இருக்கு. அந்த பேனாவினால் நீ பெரிய பெரிய வெற்றி எல்லாம் அடையப்போறேம்மா.

    கோபால் சாரை எவ்வளவு புகழ்ந்தாலும் அது கம்மிதான். இந்த பதிவு அவங்க போடலைன்னா உன்னை யாருக்குமே தெரிய வந்திருக்காது இல்லையாம்மா. இருவருக்குமே என் மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவிச்சுக்கிறேன். ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறதுன்னு நீ சந்தோஷமா பாடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோலா பூரி. November 12, 2015 at 5:57 PM

      வாங்கோ, வணக்கம்.

      ‘கோலா பூரி’ எனப்பெயரை மாற்றிக் கொண்டோ என்னவோ இங்கு இன்று புதிதாக வருகை தந்துள்ளதுடன், என்னைப்பற்றி எனக்கே தெரியாத பல விஷயங்களைப் புட்டுப்புட்டு எழுதி மகிழ்வித்துள்ளீர்கள்.

      தங்கள் பதிவுப்பக்கம் போய்ப்பார்த்தேன். 2011க்குப் பிறகு ஏதும் புதுப்பதிவுகள் வெளியிட்டுள்ளதாகத் தெரியவில்லை. பழைய பதிவுகள் சிலவற்றை மட்டும் படித்து மகிழ்ந்தேன். Follower ஆகிக்கொண்டு திரும்பி விட்டேன்.

      அங்கு தங்கள் வலைத்தளத்தில் உள்ள கோமு / கோமதி / சோமு / சிவகாமி போன்ற அனைத்துப்பெயர்களும் எனக்கு மிகவும் பரிச்சயம் உள்ள மற்றொரு ........ அந்த நபரோ என்ற சந்தேகத்தை என்னுள் கிளப்பி விட்டுள்ளது.

      ஆனால் அவர்களுக்கு இங்கு தாங்கள் எழுதியிருப்பது போல எழுத்துப்பிழைகள் இல்லாமல் தமிழில் எழுத வராது. அவர்கள் பள்ளி நாட்களில் தமிழ்மொழி படிக்க வாய்ப்பே இல்லாமல், வட இந்தியாவிலேயே, வளர்ந்து, படித்து அங்கேயே வாழ்க்கைப் பட்டவர்கள். அதனால் மட்டுமே அவர்களாக இருக்காதோ என்ற சிறு சந்தேகமும் என்னுள் உள்ளது.

      அப்படி ஒருவேளை இதுவும் அவர்களாகவே இருக்குமாயின் ’ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறதுன்னு’ நானும் பாடுவேனாக்கும். :)

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான மிக நீண்ட கருத்துக்களுக்கும், மனம் நிறைந்த வாழ்த்துகள் + பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன்
      x x x x x x x

      நீக்கு
    2. குருஜி ஒங்கட ரிப்ளை கமண்டுல இன்னாலாமோ சொல்லிகினாங்க ஏதுமே வெளங்கிகிட ஏலலே. ஏங்க பலகாரம் பேரெல்லா வச்சிகிட்டிருக்கீங்க. பாராட்டுக்கு நன்றி

      நீக்கு
  30. செல்வி மெஹருன்னிசாவின் கடிதம் மிகவும் நெகிழ்ச்சியைத் தருகிறது. உணர்ச்சிகளை எழுத்தில் வடித்திருப்பது, அவருடைய எழுத்துத் திறமையைக் காட்டுகிறது. அவருக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருக்கிறது என்பதில் எந்த விதமான சந்தேகமுமில்லை.அவருக்கு என் ஆசிகள்.

    பதிவர்களை நீங்கள் ஊக்குவிப்பது பற்றி சிறப்பாக இங்கே சொல்லியேயாக வேண்டும். 'ப்ளாக்' என்றால் என்ன, என்று முழுசாக எனக்குப் புரிபடுவதற்குள் , வேறொருவரின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட ப்ளாகில் , எழுதுகிறேன் பேர்வழி என்று எனக்குத் தோன்றியதை எழுதிவிட்டு , பெரிய சாகசம் நிகழ்த்தியதைப் போல், அதைப் படிக்க உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியது எனக்கு நினைவிற்கு வருகிறது. அந்தப் பதிவிற்கு நீங்கள் பல முறை பின்னூட்டமிட்டு, ஆஹா ... என்று புகழ்ந்து தள்ளிவிட்டீர்கள். அதற்குப் பிறகு உங்கள் பதிவுகளை படிக்க நேர்ந்த போது தான் புரிந்தது நான் வெறும் அரிச்சுவடி என்று . ஆனாலும் என் எழுத்தைப் புகழ்ந்து பின்னூட்டமிட்டது என்னை வெகுவாக ஊக்கப்படுத்தியது என்பதில் சந்தேகமேயில்லை. அதற்காக உங்களுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும்.

    செல்வி மெஹருன்னிசாவிற்கும் உங்கள் ஊக்கம் கிடைத்திருப்பது மகிழ்ச்சித் தருகிறது.

    நன்றி கோபு சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. rajalakshmi paramasivam November 12, 2015 at 7:10 PM

      வாங்கோ, வணக்கம் மேடம்.

      //செல்வி மெஹருன்னிசாவின் கடிதம் மிகவும் நெகிழ்ச்சியைத் தருகிறது. உணர்ச்சிகளை எழுத்தில் வடித்திருப்பது, அவருடைய எழுத்துத் திறமையைக் காட்டுகிறது. அவருக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருக்கிறது என்பதில் எந்த விதமான சந்தேகமுமில்லை. அவருக்கு என் ஆசிகள்.//

      தங்களின் ஆத்மார்த்தமான ஆசிகளுக்கு அவர் சார்பாக இப்போதைக்கு இங்கு என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

      >>>>>

      நீக்கு
    2. கோபு >>> திருமதி. இராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் (2)

      //பதிவர்களை நீங்கள் ஊக்குவிப்பது பற்றி சிறப்பாக இங்கே சொல்லியேயாக வேண்டும். 'ப்ளாக்' என்றால் என்ன, என்று முழுசாக எனக்குப் புரிபடுவதற்குள் , வேறொருவரின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட ப்ளாகில் , எழுதுகிறேன் பேர்வழி என்று எனக்குத் தோன்றியதை எழுதிவிட்டு, பெரிய சாகசம் நிகழ்த்தியதைப் போல், அதைப் படிக்க உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியது எனக்கு நினைவிற்கு வருகிறது. அந்தப் பதிவிற்கு நீங்கள் பல முறை பின்னூட்டமிட்டு, ஆஹா ... என்று புகழ்ந்து தள்ளிவிட்டீர்கள். அதற்குப் பிறகு உங்கள் பதிவுகளை படிக்க நேர்ந்த போது தான் புரிந்தது நான் வெறும் அரிச்சுவடி என்று.

      ஆனாலும் என் எழுத்தைப் புகழ்ந்து பின்னூட்டமிட்டது என்னை வெகுவாக ஊக்கப்படுத்தியது என்பதில் சந்தேகமேயில்லை. அதற்காக உங்களுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும்.//

      :)))))

      என்னைப்பொறுத்தவரை தாங்கள் ஓர் மிகச்சிறந்த எழுத்தாளர் மட்டுமே. அதுவும் நகைச்சுவை எழுத்தாளர் என்பது மேலும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். நகைச்சுவை கலந்து எழுத எல்லோராலும் இயலாது. அதுபோல நகைச்சுவைகளை ரஸித்துப் படித்து புன்முறுவல் பூக்கவும் எல்லோராலும் இயலாது. அதனால் உங்கள் எழுத்துக்கள் என்னைக் கவர்ந்ததில் வியப்பேதும் இல்லை.

      அவரவர் திறமைகள் அவரவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஒருவித தன்னடக்கமும்கூட அவர்களைத் தடுக்கலாம்.

      இன்று மின்னூல் வெளியீடுகள் வரை தாங்கள் எழுத்துலகில் கொடிகட்டிப்பறந்து வளர்ந்துள்ளது எனக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.

      2012 நவம்பர் மாதம் தாங்கள் முதன்முதலாக வெளியிட்ட ‘தீபாவளி’ பதிவுக்கு முதல் பின்னூட்டமிட்டதும், தொடர்ந்து தங்கள் எழுத்துக்களை ரஸித்து வாசித்து பல பின்னூட்டங்கள் அளித்ததும் எனக்கும் நன்கு நினைவில் உள்ளது.

      2014ம் ஆண்டு நான் என் வலைத்தளத்தினில் நடத்திய ‘சிறுகதை விமர்சனப்போட்டி’களில், சிலவற்றில் மட்டுமே கலந்துகொண்டு, ஒருமுறையல்ல, இருமுறையல்ல ஒன்பது முறைகள் நம் உயர்திரு நடுவர் ஜீவி சார் அவர்களால் தங்கள் விமர்சனங்கள் பரிசுக்குத் தேர்வாகியிருந்தன என்றால் சும்மாவா !!! !!! !!! அதிலும் நான்கு முறை ‘முதல் பரிசுகள்’ :) You are really a Great Writer !

      ஏனோ சில காரணங்களால் இப்போது கொஞ்சம் எழுதாமல் ஒதுங்கியுள்ளதாக உணர முடிகிறது. தொடர்ந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுங்கோ ப்ளீஸ்.

      //செல்வி மெஹருன்னிசாவிற்கும் உங்கள் ஊக்கம் கிடைத்திருப்பது மகிழ்ச்சித் தருகிறது. நன்றி கோபு சார்.//

      தங்களின் அன்பான அபூர்வமான வருகைக்கும், அழகான விரிவான பின்னூட்டக் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      அன்புடன் கோபு

      நீக்கு
    3. வாங்கம்மா பாராட்டுகமண்டு போட்டதுக்கு நன்றிங்க

      நீக்கு
  31. மெஹ்ருன்னிசா அவர்களின் கடிதம் கண்ணில் நீரை வரவழைத்துவிட்டது. எந்தவித பாசாங்கும் இல்லாமல் உள்ளத்தில் உள்ளதை அப்படியே வெளிப்படுத்தியிருக்கும் எழுத்து.. நல்ல எழுத்துத்திறமை அவர்களிடம் உள்ளது. எழுத்துநடையை மட்டும் சற்றே மாற்றினால் போதும்... அதுகூட பழகப் பழக வந்துவிடும். எழுதவேண்டும் என்ற எண்ணம்தான் முக்கியம். அவர்களிடம் அது நிறையவே உள்ளது. இல்லையென்றால் இப்படி ஒரே மூச்சில் ஒட்டுமொத்தப் பதிவுகளையும் வாசித்துப் பின்னூட்டமிட்டுப் போட்டியில் வெற்றிபெற்றிருக்க முடியுமா? அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் & வாழ்த்துகள்.. சோம்பிக்கிடக்கும் என் போன்றவர்களை வெட்கச்செய்யும் வேகம் அவர்களுடையது.

    இத்தனைக்கும் காரணமான தங்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை கோபு சார்.. பொறுமையாக அவர்களுக்கு வலைப்பூ பற்றிய விவரங்களை விளக்கி, படங்களை இணைக்கக் கற்றுத்தந்து, பின்னூட்டமிட வழிநடத்தி... எழுதியிருக்கும் நேசமிகு நேயர் கடிதத்தை அனைவரும் எளிதில் புரிந்துகொள்ள இயல்பான தமிழில் நகலெடுத்து...எத்தனை விதமான முனைப்பாடுகள்... வருங்காலத்தில் மெஹ்ருன்னிசா ஒரு நல்ல வலைப்பதிவராக உருவாகும்பட்சத்தில் துணைநின்று உருவாக்கிய பெருமையும் முன்னின்று வழிகாட்டிய பெருமையும் தங்களையே சாரும்.. மிகுந்த பாராட்டுகள் கோபு சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீத மஞ்சரி November 13, 2015 at 5:39 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //மெஹ்ருன்னிசா அவர்களின் கடிதம் கண்ணில் நீரை வரவழைத்துவிட்டது. எந்தவித பாசாங்கும் இல்லாமல் உள்ளத்தில் உள்ளதை அப்படியே வெளிப்படுத்தியிருக்கும் எழுத்து.. நல்ல எழுத்துத்திறமை அவர்களிடம் உள்ளது. எழுத்துநடையை மட்டும் சற்றே மாற்றினால் போதும்... அதுகூட பழகப் பழக வந்துவிடும். எழுதவேண்டும் என்ற எண்ணம்தான் முக்கியம். அவர்களிடம் அது நிறையவே உள்ளது.//

      ’விமர்சன வித்தகி’ அவர்களின் மூலம் இதனை இங்கு கேட்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. :)

      //இல்லையென்றால் இப்படி ஒரே மூச்சில் ஒட்டுமொத்தப் பதிவுகளையும் வாசித்துப் பின்னூட்டமிட்டுப் போட்டியில் வெற்றிபெற்றிருக்க முடியுமா? அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் & வாழ்த்துகள்.. //

      :) தங்களின் இந்தப் பிரத்யேகப் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம். :)

      //சோம்பிக்கிடக்கும் என் போன்றவர்களை வெட்கச்செய்யும் வேகம் அவர்களுடையது.//

      அடடா, சோம்பிக்கிடப்பவரா? அதுவும் தாங்களா?????

      வாழைப்பழச் சோம்பேறிகளுக்கு மிக நல்ல உதாரணமான என் போன்றவர்களை வெட்கச்செய்கிறது, இந்தத் தங்களின் தங்கமான வரிகள்.

      அவர்களின் பின்னூட்டங்களில் ’வேகம் மட்டுமே’ மிக அதிகமாக இருந்தது என்பதே என் அபிப்ராயாம்.

      //இத்தனைக்கும் காரணமான தங்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை கோபு சார்.. பொறுமையாக அவர்களுக்கு வலைப்பூ பற்றிய விவரங்களை விளக்கி, படங்களை இணைக்கக் கற்றுத்தந்து, பின்னூட்டமிட வழிநடத்தி...//

      உண்மையில் எனக்கு இது, மிகவும் கஷ்டமானதோர் வேலையாகத்தான் இருந்து வந்தது.

      //எழுதியிருக்கும் நேசமிகு நேயர் கடிதத்தை அனைவரும் எளிதில் புரிந்துகொள்ள இயல்பான தமிழில் நகலெடுத்து... எத்தனை விதமான முனைப்பாடுகள்... //

      அவர்களின் Original கடிதத்தை நான் சற்றே மாற்றி அமைத்து அதனை Draft எடுத்து அவர்களின் (Final Approval) ஒப்புதலுக்காக நான் அனுப்பி வைத்தபோது, அவர்கள் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அதற்கு அப்படியே ஒப்புதல் அளிக்காமல், கொச்சைத்தமிழில் தான் எழுதி அனுப்பிய தன்னுடைய Original Letter ஐயே வெளியிட்டால்தான் நல்லது. அதுவே தன்னால் எழுதப்பட்டது என பிறர் நம்பிக்கையைப் பெறக்கூடும் என்று மிகவும் தயக்கத்துடன், ஆனால் அதே சமயம் ஆணித்தரமாகச் சொல்லி, அடம் பிடித்து விட்டார்கள்.

      எனவே, நான் அவர்களின் Original Letter ஐயும், அவர்களின் நியாயமான கோரிக்கைக்காக கூடுதலாக இங்கு இறுதியில் வெளியிடும்படியாக ஆனது.

      //வருங்காலத்தில் மெஹ்ருன்னிசா ஒரு நல்ல வலைப்பதிவராக உருவாகும்பட்சத்தில் துணைநின்று உருவாக்கிய பெருமையும் முன்னின்று வழிகாட்டிய பெருமையும் தங்களையே சாரும்.. மிகுந்த பாராட்டுகள் கோபு சார். //

      நீண்ட நாட்களுக்குப்பின் தங்களின் ருசியான, விரிவான, மிக அழகான, அர்த்தமுள்ள, ஆச்சர்யம் தரும் எழுத்துக்களை வாசித்து மகிழ்ந்த எனக்கு ஆனந்தக் கண்ணீரே வந்தது.

      தங்களின் அன்பான வருகைக்கும், மிக நீண்ட அருமையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      என்றும் அன்புடன் கோபு

      நீக்கு
    2. நீங்கதா எங்கட பேரு முளுசா சொல்லினிங்க. பாராட்டுக்கு நன்றிங்க

      நீக்கு
  32. ஒரு வாரம் திருவண்ணாமலையில்
    அண்ணாமலையாரை பணீந்துவிட்டு ,
    இன்று காலைதான் பெங்களூர் திரும்பினேன் !

    நான் படித்த முதல் பதிவு தங்களின்
    செல்வி.மெஹ்ருன்நிஸா வின் நேயர் கடிதம்தான் .
    மெய் சிலிர்த்தது.
    செல்வி.மெஹ்ருன்நிஸா , வாழ்க்கையில் மென்மேலும்
    பல வெற்றிகளைப்பெற வாழ்த்துக்கள் !
    தங்களைப் பாராட்ட ....
    வார்த்தைகள் இல்லை !

    Simply ... Great !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. G Perumal Chettiar November 14, 2015 at 7:39 AM

      வாங்கோ சார், வணக்கம்.

      //ஒரு வாரம் திருவண்ணாமலையில்
      அண்ணாமலையாரை பணீந்துவிட்டு ,
      இன்று காலைதான் பெங்களூர் திரும்பினேன் !//

      மிகவும் சந்தோஷம். ஒரு 7-8 ஆண்டுகளுக்கு முன்பு நானும் என் இளைய மகனும், வேறு இரு ஆண் நண்பர்களுமாக, மொத்தம் நால்வர் மட்டும், போக வர ஒரு கார் ஏற்பாடு செய்துகொண்டு, திருவண்ணாமலைக்கும், சோளிங்கர் பெருமாள் + சோளிங்கர் ஹனுமார் மலைகளுக்கும், இரண்டு நாட்கள் பயணமாகச் சென்று இன்புற்று வந்தோம். அந்த இனிய நினைவலைகளை இப்போது என்னுள் மீண்டும் மீட்டுப் பார்த்துக்கொண்டேன்.

      //நான் படித்த முதல் பதிவு தங்களின்
      செல்வி. மெஹ்ருன்நிஸா வின் நேயர் கடிதம்தான் .
      மெய் சிலிர்த்தது. செல்வி.மெஹ்ருன்நிஸா , வாழ்க்கையில் மென்மேலும் பல வெற்றிகளைப்பெற வாழ்த்துக்கள் ! தங்களைப் பாராட்ட .... வார்த்தைகள் இல்லை ! Simply ... Great ! //

      நீண்ட நாட்களுக்குப்பின், என் வலைப்பதிவுப் பக்கம் தங்களின் அன்பான வருகைக்கும், அழகான மிகச்சிறப்பான கருத்துக்களுக்கும் செல்வி. மெஹ்ருன்நிஸா அவர்களை வாழ்த்தி, என்னைப் பாராட்டி எழுதியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

      அன்புடன் VGK

      நீக்கு
    2. ஐயா பாராட்டினதுக்கு நன்றி ஐயா.

      நீக்கு
  33. ஒரிஜினல் கடிதாசி உங்களால் மெருகூட்டப்பட்ட கடிதாசி இரண்டுமே நன்றாக இருக்கிறது. மேலும் படிக்க விரும்பும் மாணவிக்கு அவர்களின் தேவை ஆசை அறிந்து பேனா பரிசளிபதும் மிகவும் உயர்த செயல்.. குருஜி, சிஷ்ய பெண் இருவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. srini vasan November 14, 2015 at 10:34 AM

      வாங்கோ, வணக்கம்.

      //ஒரிஜினல் கடிதாசி உங்களால் மெருகூட்டப்பட்ட கடிதாசி இரண்டுமே நன்றாக இருக்கிறது. மேலும் படிக்க விரும்பும் மாணவிக்கு அவர்களின் தேவை ஆசை அறிந்து பேனா பரிசளிபதும் மிகவும் உயர்த செயல்.. குருஜி, சிஷ்ய பெண் இருவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவித்துக் கொள்கிறேன்.//

      என் வலைப்பதிவுப்பக்கம், அன்பான தங்களின் முதல் வருகைக்கும், அழகான கருத்துக்களுடன், இருவரையும் பாராட்டி வாழ்த்தியுள்ள நற்செயலுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
    2. பாராட்டுக்கு நன்றிசார்.

      நீக்கு
  34. Comment from Mrs. ASIYA OMAR Madam On 14.11.2015
    (நேயர் கடிதம் - செல்வி. மெஹ்ருன் நிஸா)

    மிகவும் ஆச்சரியப்பட வைத்தது இந்தப் பகிர்வு.
    மெஹ்ருன்னிஷாவிற்கு நல்வாழ்த்துக்கள்.
    பகிர்வுக்குப் பாராட்டுக்கள் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ASIYA OMAR

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //மிகவும் ஆச்சரியப்பட வைத்தது இந்தப் பகிர்வு.
      மெஹ்ருன்னிஷாவிற்கு நல்வாழ்த்துக்கள்.
      பகிர்வுக்குப் பாராட்டுக்கள் சார்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், செல்வி. மெஹ்ருன் நிஸா அவர்களுக்கான நல்வாழ்த்துகளுக்கும், பகிர்வுக்கான பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
    2. பாராட்டுக்கு நன்றி மேடம்.

      நீக்கு
  35. கோபால் சார். இந்த பதிவு படிச்சதும் எனக்கும் இந்த போட்டில கலந்து கொள்வதற்கு ரொம்ப ஆர்வமாக இருக்கிறது. டயம் ரொம்ப கம்மியா இருக்கே. இந்த சின்ன பெண்ணே ஒரு மாதத்துக்குள்ள வெற்றி பெற்றிருக்காங்க. முயற்சி செய்து பார்க நினைக்கிறேன். இப்ப நான் என்ன பண்ணனும். எங்கேருந்து தொடங்கணும். எனக்கும் வழிகாட்டுவீங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரணாகதி. November 15, 2015 at 12:12 PM

      வாங்கோ, வணக்கம்.

      //கோபால் சார். இந்த பதிவு படிச்சதும் எனக்கும் இந்த போட்டில கலந்து கொள்வதற்கு ரொம்ப ஆர்வமாக இருக்கிறது.//

      தங்களின் ஆர்வத்திற்கு என் முதற்கண் நன்றிகள்.

      //டயம் ரொம்ப கம்மியா இருக்கே.//

      ஆமாம். போட்டி நிறைவு நாளுக்கு இன்னும் 46 நாட்களே உள்ளன. 30 நாட்கள் மட்டும் இருப்பதாக மனதில் நினைத்துக்கொண்டு, திட்டமிட்டு இன்றே ஆரம்பித்து, தினமும் 25 பதிவுகள் வீதம் தொடர்ச்சியாகப் பின்னூட்டங்கள் கொடுத்து சீக்கரமாக முடிக்கவும். கடைசிநாள் வரை இழுக்க வேண்டாம்.

      எக்காரணம் கொண்டும் 31.12.2015 என்ற இறுதித்தேதியில் மாற்றமோ நீடிப்போ இருக்கவே இருக்காது என்பதையும் மனதில்கொண்டு, தங்களால் முடியுமானால் இதில் இறங்கவும். எனக்கும் மகிழ்ச்சியே.

      //இந்த சின்ன பெண்ணே ஒரு மாதத்துக்குள்ள வெற்றி பெற்றிருக்காங்க. முயற்சி செய்து பார்க்க நினைக்கிறேன்.//

      இந்தச்சின்ன பெண்ணிடம் கணினிகூட இல்லை. தனது மொபைல் போன் மூலம் மட்டுமே என் அனைத்து 750 பதிவுகளுக்கும் கஷ்டப்பட்டு, பின்னூட்டம் தந்துள்ளார்கள். மேலும் தமிழ் மொழி எழுத்துக்களும் அவர்களுக்கு மிகவும் தடவலாகவே இருந்துள்ளது.

      தங்களுக்கு அதுபோன்ற தொல்லைகள் ஏதும் இல்லை. அதனால் தங்களால் இதனை மேலும் மிகச்சிறப்பாகவே செய்து முடிக்க இயலும்.

      // இப்ப நான் என்ன பண்ணனும்.//

      இதோ http://gopu1949.blogspot.in/2015/03/120404.html இந்தப்பதிவினில் எல்லா விபரங்களும் கடைசியில் சொல்லப்பட்டுள்ளன.

      //எங்கேருந்து தொடங்கணும்.//

      இதோ http://gopu1949.blogspot.in/2011/01/blog-post.html இங்கிருந்து தொடங்கி வரிசையாக எதுவும் நடுவில் விட்டுப்போகாமல் பின்னூட்டங்கள் கொடுத்துக்கொண்டே வரணும்.

      ஒவ்வொரு மாதமும் தாங்கள் வெற்றிகரமாக முழுவதுமாக முடித்ததும் என்னிடமிருந்து ஒரு 'CONFIRMATION CERTIFICATE FOR MONTHLY COMPLETION OF COMMENTS' தங்களுக்கு மெயில் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

      தங்களின் மெயில் விலாசத்தை எனக்கு உடனடியாக அனுப்பி வைக்கவும்.

      //எனக்கும் வழிகாட்டுவீங்களா? //

      நிச்சயமாக. மேலும் ஏதும் தகவல் வேண்டுமென்றால் என்னை மெயில் மூலம் தொடர்பு கொள்ளவும். என் மின்னஞ்சல் முகவரி: valambal@gmail.com

      தங்களுக்கு என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

      அன்புடன் VGK

      நீக்கு
    2. ஆமுங்கோ ஒரு மாசத்துக்குள்ளாற போட்டில நான் கெலிச்சத என்னாலியே நம்ப முடிலிங்க. என்னய பாத்து பிட்டு நீங்க கூட போட்டில கலந்துக்க நெனக்கீக. குருஜி அல்லாருக்கும் ஹெல்பு பண்ணிப்போடுவாக.

      நீக்கு
  36. மற்ற பதிவர்களைத் தேர்ந்தெடுத்து, ஊக்குவித்து, பரிசுகள் தந்து பாராட்டுவது, கோபு மாமாவின் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Chitra November 16, 2015 at 6:07 AM

      வாங்கோ சித்ரா, வணக்கம். நலம். நலமறிய ஆவல்.

      //மற்ற பதிவர்களைத் தேர்ந்தெடுத்து, ஊக்குவித்து, பரிசுகள் தந்து பாராட்டுவது, கோபு மாமாவின் சிறப்பு.//

      அபூர்வமாக நீண்ட நாட்களுக்குப்பின் தங்களை இங்கு என் பதிவினில் இன்று பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

      தங்களின் அன்பான வருகைக்கும், சிறப்பான பின்னூட்டக் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      பிரியத்துடன் கோபு மாமா

      நீக்கு
  37. பெருந்தகையாளர் வை கோ அவர்களின் பதிவுகளுக்குப் பின்னூட்டம் போடும் போட்டியில் நானும் கலந்து கொள்ளலாம் என்று கிளம்பிவிட்டேன். முடிகிறதா என்று பார்க்கலாம். - இராய செல்லப்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Chellappa Yagyaswamy November 16, 2015 at 8:20 PM

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      //பெருந்தகையாளர் வை கோ அவர்களின் பதிவுகளுக்குப் பின்னூட்டம் போடும் போட்டியில் நானும் கலந்து கொள்ளலாம் என்று கிளம்பிவிட்டேன். முடிகிறதா என்று பார்க்கலாம். - இராய செல்லப்பா//

      ஏற்கனவே பலர் ஆர்வமாகக் கலந்துகொண்டும், இதுவரை ஐவர் மட்டுமே, இறுதிவரை வேகமாக ஓடிவந்து, இந்தப்போட்டியில் வெற்றிக்கனியை எட்டியுள்ளார்கள்.

      அதில் மூவர் என்னிடமிருந்து பரிசினையும் பெற்றுக்கொண்டு விட்டனர். மீதி இருவர் எனக்கு தங்களின் CLAIM FORMS களை அனுப்பி வைக்காமல் DELAY செய்து வருகின்றனர்.

      பரிசு பெற்ற அந்த மூவரில் இருவர் தங்கள் தங்களின் பதிவுகளிலும், தாங்கள் பெற்ற பரிசினைக் காட்சிப்படுத்தி மகிழ்ந்துள்ளனர்.

      அதற்கான இணைப்புகள்:

      http://swamysmusings.blogspot.com/2015/10/blog-post_17.html

      http://manammanamveesum.blogspot.in/2015/11/1.html

      வெற்றியாளர்கள் ஒவ்வொருவரையும், அதிகாரபூர்வமாக என் வலைத்தளத்தினில் அறிவித்துப் பாராட்டி, கெளரவித்து, தனித்தனிப் பதிவுகளாக 2015 டிஸம்பர் மாதம் 10ம் தேதிமுதல் நான் வெளியிட உத்தேசித்துள்ளேன்.

      பரிசுத்தொகைகளை வெற்றியாளர்கள் ஒவ்வொருவரிடம் சேர்ப்பது + அவர்களைப் பற்றி அதிகாரபூர்வமான தகவல்களை என் வலைத்தளத்தினில் வெளியிடுவது போன்ற இந்த என் போட்டி சம்பந்தமான அனைத்து வேலைகளையும், நான் 31.12.2015 க்குள் முடித்துவிடத் திட்டமிட்டுள்ளேன்.

      கடந்த இரண்டு நாட்களாக பேரெழுச்சியுடன் பின்னூட்டமிட ஆரம்பித்துள்ள, ’சரணாகதி’ என்ற வலைத்தளப்பதிவர் திரு. ஸ்ரீவத்ஸன் அவர்கள், அதற்குள் போட்டிக்கான 51 மாதப் பதிவுகளில் முதல் 4 மாதப்பதிவுகளை முற்றிலும் முடித்து 5ம் மாதப்பதிவுகளில் அடி எடுத்து வைத்துள்ளார்.

      அவருடைய இந்த நிமிட மதிப்பெண்: 77 out of 750. இவர் கடைசிவரை முயன்று வெற்றிபெற்றால் இவரே ஆறாவது நபராக இருக்கக்கூடும்.

      ஒருவேளை தாங்கள் ஏழாவது வெற்றியாளராக என்னால் அறிவிக்கப்படும் பிராப்தம் அமைந்தால் ’ஸப்த ரிஷிகள்’ போல அது மேலும் ஓர் அழகாகவே இருக்கக்கூடும்.

      இன்னும் போட்டிக்கு 30 நாட்கள் மட்டுமே இருப்பதாக நினைத்துக்கொண்டு, தினமும் சராசரியாக 25 பதிவுகளுக்குக் குறையாமல் தொடர்ச்சியாக பின்னூட்டம் இட்டுக்கொண்டே வந்தால் மிகச்சுலபமாக 10-15/12/2015 க்குள் தாங்களும் முடித்து வெற்றி பெற்றுவிடலாம்.

      தங்களுக்கு என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், சார்.

      அன்புடன் VGK

      நீக்கு
    2. வாங்க சார் நீங்களும் போட்டில கலந்துகிடுக. நானே கெலிச்சுப்போட்டேன்ல. நீங்களும் சுலபமா கெலிச்சு போடலாம் குருஜிதா ஃபுல்லா சப்போர்ட்டு பண்ணிபோடுவாகளே. பொறவென்ன யோசன.

      நீக்கு
  38. //பேஸ்புக்கில் தான் பார்த்து ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பியிருந்தேன். பிறகு என் மனசு பூராவும் ஒரே உதறல்தான். நம்மளப்போய் ஃப்ரெண்டா ஏத்துக்கிடுவாங்களா என்று. அடுத்த நாளே அக்ஸப்ட் பண்ணி சந்தோஷமான ஷாக் கொடுத்து விட்டார்கள். பெரிய மனுஷங்க எப்போதுமே பெரிய மனுஷங்கதான். //

    பெண்ணே நீங்கள் முகப்புத்தகத்தில் (அதாம்மா FACEBOOK) என்னுடைய நட்பு வட்டத்தில் இருக்கீங்க தெரியுமா?

    //இவ்வாறு நிறைய பேர்களுடைய நேயர் கடிதங்களைப் படித்ததும், எனக்கும் அதுபோல ஒரு நேயர் கடிதம் நான் எழுத வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது ..... புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதையாக..... //

    அதெல்லாம் ஒண்ணும் இல்லைப்பா. உங்களோட மழலை எழுத்தை நானும் ரசித்தேன். நல்லாதான் இருக்கு.

    பதிலளிநீக்கு
  39. //அதுமட்டுமா, என் புத்தம் புதிய வலைப்பதிவுப் பக்கம் வந்து முதன்முதலாக சில கமெண்ட்ஸ் கொடுத்து உற்சாகப் படுத்தியிருந்தார்கள் நம் குருஜி. //

    நானும் வரேன். அந்த ரோஜாப்பூ பதிவுக்கு பின்னூட்டம் கொடுக்க.

    //அதாவது அவன் அதற்கான சிறிய முயற்சியைக்கூட செய்யவில்லையே” என்கிறார். சாமி சொல்வதும் மிகவும் கரெக்ட் தானே !//

    ஆமாம். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் பதிவு பக்கம் வாரன்னு சொல்லிபிட்டு இன்னும் ஒங்கள அங்கிட்டு காங்கலதே.

      நீக்கு
    2. mru November 26, 2015 at 11:09 AM

      //என் பதிவு பக்கம் வாரன்னு சொல்லிபிட்டு இன்னும் ஒங்கள அங்கிட்டு காங்கலதே.//

      அன்புள்ள முருகு, ‘ஜெ’ மாமியை இப்போ ஒன்றும் சொல்லாதீங்கோ.

      இப்போ பணி ஓய்வுக்குப்பின் அவங்க மிகவும் பிஸியான மாமியாக ஆகிவிட்டாங்கோ [இதிலிருந்து அவர்கள் பணியில் இருந்தபோது மிகவும் ஜாலியாக இருந்திருப்பாங்கோ என்பதை டக்குன்னுப் புரிந்துகொள்ளவும். :) ]

      இப்போ முழுநேர இல்லத்தரசியாகி விட்டார்கள். எல்லா வேலைகளும் அவர்கள் தலையில் ஏறிவிட்டன. ‘லயா’க் குட்டி என்ற பேத்தியை வேறு பார்த்துக்கொள்ள வேண்டி உள்ளது. ’ஜெ’ க்கு இப்போ ஒரே சுளுக்குத்தான்.

      அத்துடன் இவர்கள் வசிக்குமிடம் சென்னை. இப்போ சென்னையில் மழை + வெள்ளத்தினால் மக்கள் ஒரே அவதிப்பட்டு வருகிறார்கள்.

      ஜெயா மாமி எப்படி இருக்கிறார்களோ என்ற கவலையும் எனக்கு உள்ளது. அலைபேசியில் தொடர்பு கொள்ளவும் என்னால் இயலவில்லை. மழை வெள்ளத்தால், மின் தடை, நெட் கிடைக்காமல் இருப்பது போன்ற பல்வேறு பிரச்சனைகள் அவர்களுக்கும் இருக்கக்கூடும். அவங்க ரொம்ப ரொம்ப நல்லவங்க. நேரம் கிடைக்கும்போது உங்கள் பதிவுக்கு நிச்சயம் வருவாங்கோ.

      அன்புடன் குருஜி

      நீக்கு
  40. //என் அம்மிக்கு (தாயாருக்கு) காலையிலே நாஸ்தாவாக ’குட்-டே’ பிஸ்கட் கொடுத்தால் அது மிகவும் இஷ்டமாகச் சாப்பிடும். அதனால் அம்மிக்கு ஒரு மாதம் முழுக்க சாப்பிட ‘குட்-டே’ பிஸ்கட் பாக்கெட்கள் ஒரு 10 அல்லது 15 வாங்கி வைக்கத்திட்டமிட்டேன். //

    பொதுவா எனக்கு அழறது பிடிக்காது. ரொம்ப வருஷமா அழவே கூடாதுன்னு இருக்கேன். என் பேத்தி கிட்ட கூட சொல்வேன் நாம அழவே கூடாது. நமக்கு உம்மாச்சி எல்லாம் கொடுத்திருக்கார்ன்னு.

    ஆனா இந்த பரிசுப் பணத்துல அம்மாவுக்கு ‘குட்டே’ பிஸ்கெட் வாங்கி வைக்கப்போறேன்னு படிச்சதும் மனசு நெகிழ்ந்து போச்சு. கண்ணீரை கட்டுப் படுத்திக்கொண்டேன்.

    //ஒஸ்தியான பெளண்டைன் பேனா வாங்கி அதிலேயே என்னோட C.A., (Chartered Accountants) பரிட்சையை எழுதி முதல் ரேங்கிலே பாஸ் பண்ணிவிடனும் என்பது என் ஆசை. //

    வாழ்த்துக்கள். நல்லதொரு வளமான எதிர்காலம் உங்கள் எதிரில். CA பரீட்சைக்கு முன் சொல்லுங்கள். SPECIAL ஆக பிரார்த்தனை செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா ஆண்டி அம்மிக்கு குட் டே பிஸுகோத்துனா அத்தர இஸ்டம் அத தா சொல்லினன் பாராட்டுக்கு நன்றி ஆண்டி

      நீக்கு
  41. //கமெண்ட்ஸ் போட்டியிலே ஒரு மாதத்துக்குள்ளாகவே நான் ஜெயித்துள்ளேன் என்றால் அதற்கு நான் மட்டும் காரணமில்லை. எனக்குத் தன்னம்பிக்கை + ஊக்கம் + உற்சாகம் எல்லாம் கொடுத்து என்னை ஜெயிக்க வைத்த பெருமையெல்லாம் எங்கட குருஜியை மட்டிலுமே சேரும். நன்றி குருஜி.//

    உங்களுக்கு மட்டும் இல்லீங்கோ. அல்லாருக்கும் கெடச்ச பெருமைக்கும் அண்ணந்தேன் காரணம்.

    // 07.11.2015 அன்று செல்வி. மெஹ்ருன் நிஸா அவர்கள். தனக்கே உரிய கொச்சைத்தமிழில் எழுதி எனக்கு அனுப்பியிருந்த ‘நேயர் கடிதம்’ இதோ இங்கே கீழே அப்படியே கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப்பதிவினை வாசிக்கும் அனைவருக்கும் அது நன்கு புரிய வேண்டுமே என்பதற்காக மட்டுமே, அது மேலே சற்றே மெருகூட்டி என்னால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. -vgk//

    THIS IS GOPU ANNA

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya November 16, 2015 at 10:42 PM

      அன்புள்ள ஜெயா, வாங்கோ, வணக்கம்மா.

      சென்னையில் அடாது மழை பெய்தாலும், மின் தடை, நெட் தடை போன்ற பல்வேறு இடையூறுகளுக்கு இடையேயும்,
      நம் ‘முருகு’ என்ற அந்தப்பெண்ணின் மனதுக்கு மிகவும் ஆறுதல் அளிப்பது போலத் தாங்கள் எழுதியுள்ள ஆதரவான நிறைய பின்னூட்டங்களைப் படித்து மகிழ்ந்தேன். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      நீக்கு
    2. ஜெயந்தி ஆண்டி இன்னா இத்தர வெரசா வந்து போட்டீக. மூஞ்சி பொஸ்தவத்துல எங்கட சோட்டுக்காரி லிஸ்டுல நீங்களும் இருக்கீகளே. நீங்க சொல்லின பொறவாலதா நானு கண்டுகிட்டேன். பாராட்டினதுக்கு நன்றி ஆண்டி.

      நீக்கு
    3. இப்பங்கூட நானு கெலிச்சு போட்டேன்னுபிட்டு நம்பிக்கிட ஏலல. அல்லா பெரும புகளு எங்கட குருஜியத்தா சேரோணும்

      நீக்கு
  42. அந்த முதல் படத்துல இருக்கற பொண்ணு மாதிரி குனிஞ்சு நிக்காம நிமிர்ந்து நில்லுங்கள். வெற்றி உங்களுக்கு MRU.

    பதிலளிநீக்கு
  43. ஸாரி. ரொம்ப சீக்கிரமா வந்திருக்கேனில்லயா. சிலபல சந்தர்ப்ப சூழ்நிலைகள் கையை கட்டிப்போட்டுது. இப்ப வந்ததே நம்பமுடியல. கோபால் சார் உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு. ஒவ்வொரு விஷயத்திலும் நிரீபிக்கிறீங்க. அந்த முருகு பொண்ணு ரொம்ப லக்கி. உங்க நட்பு வட்டத்துக்குள்ள இருக்காளே. இப்படி ஒரு பொண்ணு இருக்கான்னு இதுவரை யாருக்காவது தெரிந்திருக்குமா. உங்கபதிவு மூலமா அவ உருக்கமான கடிதத்தைப் போட்டு நாங்க எல்லாரும் அவளை அறிய வச்சிருக்கீங்களே. உங்க மெருகு கூட்டின கடிதாசி படிச்ச பிறகு தான் அவங்க கடிதத்தை சரியா புரிஞ்சிக்க முடிஞ்சது இல்லைனா புரிஞ்சுக்க கஷ்டமா இருந்திருக்கும். குருஜி குருஜி ன்னு ஒங்க மேல ரொம்பமதிப்பும் மரியாதையும் வச்சிருக்கா. கடிதாசிலேயே அவ வெகுளித்தனம் தெரியுது. நீங்களும் அவமேலதனி அக்கறை எடுத்து பேனா மொதக்கொண்டு வாங்கி கொடுக்கறீங்க.இரண்டு கடிதாசியுமே ரொம்ப டச்சிங்கா இருக்கு. உங்க ராசியான கையால பேனா வாங்கி அவ ஆசைப்பட்ட ஸி. ஏ. படிச்சு முதல் ஆளா பாஸ் பண்ணட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் November 20, 2015 at 2:51 PM

      வாங்கோ சிவகாமி, வணக்கம்மா. நல்லா செளக்யமாக சந்தோஷமா இருக்கீங்களா? இப்போ எந்த ஊரில் இருக்கீங்கோ? ஏன் மெயிலே ஏதும் கொடுப்பது இல்லை? :(

      //ஸாரி. ரொம்ப சீக்கிரமா வந்திருக்கேனில்லயா. சிலபல சந்தர்ப்ப சூழ்நிலைகள் கையை கட்டிப்போட்டுது. இப்ப வந்ததே நம்பமுடியல.//

      என்னாலும் நம்பவே முடியலே. பூந்தளிரின் திடீர் வருகையைக்கண்டதும் ‘நிழல்கள்’ என்றொரு திரைப்படத்தில் வைரமுத்து அவர்கள் எழுதிய பாடல் ஒன்றை என் வாய் இப்போது என்னையறியாமலேயே முணுமுணுக்கிறது:

      பூங்கதவே ....... தாள்திறவாய் .......
      பூவாய் ............. பெண் பாவாய் .......

      பொன் மாலை சூடிடும் பூவாய் ......
      பெண் பாவாய் .......

      (பூங்கதவே)

      //கோபால் சார் உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு. ஒவ்வொரு விஷயத்திலும் நிரூபிக்கிறீங்க.//

      அச்சா, பஹூத் அச்சா ! :)

      ஆனால் உங்கள் விஷயத்தில் அதை நிரூபிக்கவே இன்னும் எனக்கு சந்தர்ப்பம் ஏதும் தாங்கள் தரவில்லையே :(

      //அந்த முருகு பொண்ணு ரொம்ப லக்கி. உங்க நட்பு வட்டத்துக்குள்ள இருக்காளே.//

      அவள் லக்கியாக இருப்பினும், என்னைப்பொறுத்தவரை நீங்கதான் மிகவும் லக்கியெஸ்ட் தெரியுமோ ! :))

      //இப்படி ஒரு பொண்ணு இருக்கான்னு இதுவரை யாருக்காவது தெரிந்திருக்குமா. உங்கபதிவு மூலமா அவ உருக்கமான கடிதத்தைப் போட்டு நாங்க எல்லாரும் அவளை அறிய வச்சிருக்கீங்களே.//

      ’பூந்தளிர்’ பற்றிதான் கடைசிவரை என்னால் ஒன்றுமே முழுவதுமாகத் தெரிந்துகொள்ள முடியாமலேயே போய்விட்டது.

      இந்தப்பெண்ணைப்பற்றி ஏதோ கொஞ்சூண்டு அவளின் உருக்கமான நேயர் கடிதத்தின் மூலமும், ஒருசில மின்னஞ்சல்கள் மூலமும் என்னால் தெரிந்துகொள்ள முடிந்துள்ளது. அதனால் அதனை ஓர் தனிப்பதிவாக இங்கு வெளியிடவும் முடிந்துள்ளது.

      //உங்க மெருகு கூட்டின கடிதாசி படிச்ச பிறகு தான் அவங்க கடிதத்தை சரியா புரிஞ்சிக்க முடிஞ்சது இல்லைனா புரிஞ்சுக்க கஷ்டமா இருந்திருக்கும்.//

      உங்களைப் போன்றவர்கள் புரிந்துகொள்வதற்காகவே, அவளின் அந்த ஒரிஜினல் கடிதத்தை நான் கஷ்டப்பட்டு, சற்றே மெருகூட்டி வெளியிட்டுள்ளேன்.

      //குருஜி குருஜி ன்னு ஒங்க மேல ரொம்பமதிப்பும் மரியாதையும் வச்சிருக்கா. கடிதாசிலேயே அவ வெகுளித்தனம் தெரியுது. நீங்களும் அவமேலதனி அக்கறை எடுத்து பேனா மொதக்கொண்டு வாங்கி கொடுக்கறீங்க.//

      ஏதோ நம்மால் முடிந்த ஒரு சின்ன உதவி ..... அதுவும் அவள் விரும்பிடும் அந்த மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆவலுக்காகவும், பார்க்கர் பேனா மீது அவள் கொண்டுள்ள ஓர் தனி மோகத்திற்காகவும், மட்டுமே.

      //இரண்டு கடிதாசியுமே ரொம்ப டச்சிங்கா இருக்கு. உங்க ராசியான கையால பேனா வாங்கி அவ ஆசைப்பட்ட ஸி. ஏ. படிச்சு முதல் ஆளா பாஸ் பண்ணட்டும்.//

      நீ........ண்.......ட நாட்களுக்குப்பின் இன்று தாங்கள் இங்கு வருகை தந்து காட்சியளித்து, கருத்தளித்துள்ளது எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருக்குதும்மா. தங்கள் வாக்கு பலிக்கட்டும்மா. மிக்க நன்றிம்மா.

      அடிக்கடி மெயில் தொடர்பில் இருங்கோம்மா ......

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
    2. வாங்க பூந்தளிர் மேடம். ஒங்கட பேரு வித்தியாசமா இருக்குதே. குருஜிகூட ரிப்ளை கமண்டுல இன்னாமோ பாட்டெல்லா படிக்குது. ஒஙகட பதிவு லிங்க ஒருவாட்டி குருஜி தந்தாக. பாயசம்னா இன்னாதுன்னுபிட்டு குருஜிய கேட்டுபிட்டேன்ல. அப்ப கொடுத்திச்சி. தேங்காபாலு பாயசம் படிச்சதுமே புடிச்சிடிச்சி. ஏன் தெரியுமா அது கருப்பட்டி போட்டு பண்ணினீகல்லா. எங்கூட்டுல சீனி வெல்லம்லா கெடியாது தேதண்ணி காபி தண்ணி அல்லாத்துக்கும் கருப்பட்டிதா போடுவோம் வந்து பாராட்டி போட்டதுக்கு நன்றிங்க. குருஜி தயவு இல்லாகாட்டி நா இல்ல. அல்லாமே எனிக்கு எங்கட குருஜிதா.

      நீக்கு
  44. (முருகு இந்த கமெண்ட் உன் குருஜிக்கு)
    மெயில் அனுப்பி இருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் November 20, 2015 at 2:53 PM

      (முருகு இந்த கமெண்ட் உன் குருஜிக்கு)
      மெயில் அனுப்பி இருக்கேன்.//

      முருகு, இந்தக்கமெண்ட் + அவங்க அனுப்பியதாகச் சொல்லியிருக்கும் மெயில் இரண்டுமே எனக்குத்தான். நீங்க ஒன்னும் மிரள வேண்டாம். :)

      அன்புடன் குருஜி

      நீக்கு
  45. குருஜி வணக்கமுங்க. இந்த பதிவுக்கு எத்தினியோ பேருங்க கமண்டு போட்டு என்ன பாராட்டி இருக்காங்க. நானு அவுகளுக்கெல்லா பதில் கமண்டு போட்டாதான மரியாதயா இருந்துகிடும்லா. கொஞ்ச நாளா வெளி ஊரு போயிட்டேன்ல. அதான் வெரசா வார ஏலலே.
    என்னோட கடிதாசி ஒங்கட பதிவுல போட்டுபிட்டு என்ன சந்தோச மரத்துல உச்சாணி கிளையில குந்த வச்சுப்போட்டீகளே. அல்லாரும் என்ன தெரிஞ்சுகிட்டு எவ்வளவு பாராட்டுறாங்க. சந்தோசத்துல அளுவாச்சியா வருது கூருஜி மொதக ரிப்ளை ஒங்களுக்கு தா போடோணுமின்னுபிட்டு போடுதேன் நீங்க எனக்கு கொடுத்திருக்கற சந்தோசத்துக்கு நன்ளின்னு ஒரு வார்த்தையில சொல்லி போட்டா பத்தவே பத்தாது குருஜி. அதுக்கும்மேல ஏதும் சொல்லின ஏலல. வாள் நா பூராத்துக்கும் ஒங்கள நன்றி யோட நெனச்சிகிட்டே கெடப்பேன்ல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru November 22, 2015 at 7:24 AM

      //குருஜி வணக்கமுங்க.//

      வாங்கோ முருகு, வணக்கம்மா. இப்போ நல்லா சந்தோஷமாக செளக்யமாக இருக்கீங்களா? தங்களைப் பார்த்தே ரொம்ப நாள் ஆச்சும்மா !

      //இந்த பதிவுக்கு எத்தினியோ பேருங்க கமண்டு போட்டு என்ன பாராட்டி இருக்காங்க. நானு அவுகளுக்கெல்லா பதில் கமண்டு போட்டாதான மரியாதயா இருந்துகிடும்லா.//

      இருக்கலாம். இருக்கலாம். தங்களால் முடியுமானால் + செளகர்யப்படுமானால் பதில் கமெண்ட்ஸ் கொடுங்கோ. அதற்காக தங்களைத் தாங்களே மிகவும் வருத்திக்கொள்ள வேண்டாம். தினமும் ஓரிருவருக்கு பதில் தருவது என்று வைத்துக்கொண்டாலும்கூட .... அதுவே போதும்மா.

      //கொஞ்ச நாளா வெளி ஊரு போயிட்டேன்ல. அதான் வெரசா வார ஏலலே.//

      அப்படியா ! அது விஷயம் எனக்குத் தெரியாததால், இந்தப்பதிவின் கதாநாயகியான முருகுவைக் காணவே இல்லையேன்னு, எனக்குள் கொஞ்சம் கவலைப்பட்டேன்.

      //என்னோட கடிதாசி ஒங்கட பதிவுல போட்டுபிட்டு என்ன சந்தோச மரத்துல உச்சாணி கிளையில குந்த வச்சுப்போட்டீகளே.//

      சந்தோஷ மரத்தின் உச்சாணிக்கிளையில் குந்தியுள்ள நீங்க, தூக்கக்கலக்கத்தில் சொக்கிப்போய் கீழே விழுந்துடாமல் இருக்கணுமேன்னு எனக்கு ஒரே கவலையாக்கீதூஊஊ :)

      //அல்லாரும் என்ன தெரிஞ்சுகிட்டு எவ்வளவு பாராட்டுறாங்க. சந்தோசத்துல அளுவாச்சியா வருது கூருஜி//

      உங்களுக்கு சந்தோஷத்திலே அளுவாச்சியா வருது என்பது ’குருஜி’யை ’கூருஜி’ என எழுதியுள்ளதிலிருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது. எதற்கும் டிஷ்யூ பேப்பரோ அல்லது ஒரு துணியோ கையிலே இருக்கட்டும் ..... ஆனந்தக் கண்ணீரைத் துடைத்துக் கொள்ளத்தான்.

      //மொதக ரிப்ளை ஒங்களுக்கு தா போடோணுமின்னுபிட்டு போடுதேன்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, முருகு.

      //நீங்க எனக்கு கொடுத்திருக்கற சந்தோசத்துக்கு நன்ளின்னு ஒரு வார்த்தையில சொல்லி போட்டா பத்தவே பத்தாது குருஜி. அதுக்கும்மேல ஏதும் சொல்லின ஏலல. வாள் நா பூராத்துக்கும் ஒங்கள நன்றி யோட நெனச்சிகிட்டே கெடப்பேன்ல.//

      நன்ளி = நன்றி......... யா ?
      ஏலல = இயலவில்லை ...... யா ?
      வாள் நா = வாழ்நாள் ............ ஆ ?

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான மழலை எழுத்துக்களுக்கும், மிக நீ.....ண்.....ட, விரிவான, மனம் திறந்து சொல்லியுள்ள கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், முருகு.

      மீண்டும் தங்களுக்கு என் நல்வாழ்த்துகள்.

      அன்புடன்
      குருஜி கோபு

      நீக்கு
  46. ‘வாத்யாரி’ன் மிகப் பிரபலமான ஒரு வசனம் “என்னை நம்பிக் கெட்டவர்கள் இல்லை நம்பாமல் கெட்டவர்கள் உண்டு!” என்பது! எழுத்துலகத்திற்கு பாமரனான என்னையே ஊக்கப்படுத்தி விமர்சனப்போட்டிகளில் கலந்துகொள்ளச்செய்து பெரும்பாலான போட்டிகளில் பரிசினையும் பெறச்செய்து கெளரவப்படுத்தி, பிரபலப்படுத்தி அழகு பார்த்த எங்கள் வலையுலக வாத்தியார் வை.கோ. அவர்களும் அதே ரகம்தான்.
    //பின்னூட்ட போட்டில கலந்துகிட குருஜி சொல்லினாகல்ல. டைமு ரொம்ப கம்மி இருக்குது மூணு மாசத்துக்குள்ளாற 750--- பதிவுக்கு எப்பூடி கமண்டு போட ஏலும் என்னால ஏலாதுன்னுபிட்டு சொல்லினன். குருஜி என்னய உற்சாக படுத்தினாக. முயற்சியே பண்ணிகிடாம என்னால ஏலாதுன்னா எப்பூடி. முயற்சி பண்ணிபாருன்னாக// அவரு அப்படித்தாம்மா! அவர் போடுற ரூட்ல போனாலே போதும்! இதோ கெலிச்சிட்டீங்கள்ள. கர்னாடக இசை ‘ரிச்’சா இருந்தாலும் நாட்டுப்புறப்பாடல்தான ஈஸியா மக்கள் கிட்ட ‘ரீச்’ ஆகும். உங்களோட ஜாலியான எளிய எழுத்து நடையும் அப்படிதான் இருக்கு. வாத்யார் கையால பேனா கெடச்சாக்க… சச்சின் டென்டுல்கரோட மங்கூஸ் பேட் கெடச்சமாதிரி. இனி எல்லா பாலுமே சிக்ஸர்தான்மா!! அடி கெளப்புங்க…! என்னா ஒண்ணு வாத்யார்கிட்ட நான் பேனா கேக்கணும்னு நெனச்சேன். நீங்க முந்திகிட்டீங்க! பெண் (மகள்) பிரண்ட் ஆன உங்களை PEN பிரண்டாகவும் ஆக்கிட்டார் வைகோ வாத்தியார். ஆடிட்டர் ஆன பின்னும் இந்த வலை உலகம்கிற ஆடிடோரியத்த மறக்காதீங்க…மேன்மேலும் வெற்றிகள் பெற வாழ்த்துகள் மெஹ்ருன்னிஸா… ஆண்டவன் உங்கள முகம் பார்க்கட்டும்… வாத்யாரே ஏற்கனவே உங்களோட நட்பு வட்டம் பெருசு. இப்பவே ஆஞ்சநேயர் வால் போன்ற வரிசைல மவுச தள்ளி தள்ளி நாக்கு தொங்கிடுச்சி. இன்னும் நீண்டுகிட்டே போனா…..எண்ட புடிக்கிறதுகுள்ளாற நானும் ரிடையர் ஆகிடுவேன் போல இருக்கே… ஹா…ஹா…என்றும் அன்புடன் உங்கள் எம்.ஜி.ஆர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. RAVIJI RAVI November 25, 2015 at 11:44 PM

      வாங்கோ வாத்யாரே ! வணக்கம். வணக்கம். உங்களைப் பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு. நல்லா இருக்கீங்களா ?

      இந்தப்பெண் (Pen Friend) 31 நாட்களிலே முடித்து போட்டியிலே ஜெயித்திருக்கு. இதைப்பார்த்த ‘சரணாகதி’ என்ற வலைப்பதிவர் திரு. ஸ்ரீவத்ஸன் என்பவர் படு ஸ்பீடாக 15.11.2015 ஆரம்பித்து அதற்குள் பாதி முடிச்சுட்டாரு. அவர் போகும் போக்கில் 30 நாட்களிலேயே முடிச்சாலும் முடிச்சுடுவார் போலிருக்கு.

      இவையெல்லாம் இப்படி இருக்கும்போது வாத்யாருக்கு ஒரு 15-20 நாட்களே போதும் என நினைக்கத்தோன்றுகிறது.

      தினமும் 50 பதிவுகள் வீதம் 15 நாட்களில் முடித்தாலும் முடித்துவிடுவீர்கள். தங்களின் சந்தேகங்களுக்கான மெயிலுக்கு விரிவான பதில்கள் அனுப்பிவிட்டேன். முதல் மூன்று மாத இணைப்புகளும் அனுப்பி விட்டேன். இனி உங்கள் பாடு. அடிச்சு தூள் கிளப்புங்க.

      11.12.2015 முதல் இந்தப்போட்டியில் வெற்றி பெற்றுள்ள ஒவ்வொருவரையும் சிறப்பித்து தனித்தனிப்பதிவுகளாக என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட உள்ளன.

      பிறகு அனைவரையும் ஒட்டுமொத்தமாகச் சிறப்பித்து ஓர் ஒட்டுமொத்தப்பதிவும் 31.12.2015 அன்று மீண்டும் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

      அவற்றில் தாங்களும் காட்சியளிப்பது தங்கள் கையில்தான் உள்ளது.

      தங்களுக்கு என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

      அன்புடன் VGK

      நீக்கு
    2. வாங்க வாத்யாரய்யா. அதொண்டும் மிஸ்டேக்கு பண்ணிகிடாதீக. குருஜி வாத்யாரேன்னு சொல்லினாகல்ல அதா.. போட்டில கண்டிப்பா கலந்துகிடுக. நெறய நெறய வெசயங்க தெரிஞ்சிகிட ஏலும் கெலிச்சு போடுவீக. அப்ப மனசு பூராத்திலயும் ஒரு சந்தோசம் வந்துகிடும் பாருங்க. அது தனி சந்தோசமா ஆகிபோயிடும் வாங்க. பாராட்டினதுக்கு நன்றிங்க.

      நீக்கு
  47. இந்த வெற்றியாளர் முருகுவுக்கான பரிசுத்தொகை, சாதனையாளர் விருது பத்திரம், பேனாக்கள் போன்ற அனைத்தும், தற்சமயம் மஸ்கட்டில் இருக்கும் நம் முருகுவின் கைகளுக்கு 06.05.2017 அன்று கிடைக்குமாறு அனுப்பி வைக்கப்பட்டன.

    இவைகள் யாவும் தனக்குக் கிடைக்கப்பெற்ற முருகு மகிழ்ச்சியுடன் இன்று தன் ’வசந்தம்’ வலைத்தளத்தினில், நான்கு புதிய பதிவுகள் வெளியிட்டு இருக்கிறாள்.

    அதில் ஒன்று மட்டுமே பதிவாக எழுத்தில் (கொச்சைத்தமிழில்) உள்ளது. மீதி மூன்றும் வெறும் படங்கள் மட்டுமே.

    அவளின் இன்றைய பதிவுக்கான இணைப்புகள்:

    1) http://httpvasantham.blogspot.in/2017/05/blog-post_7.html

    2) http://httpvasantham.blogspot.in/2017/05/guruji_5.html

    3) http://httpvasantham.blogspot.in/2017/05/guruji_7.html

    4) http://httpvasantham.blogspot.in/2017/05/guruji.html

    இது அனைவரின் தகவல்களுக்காக மட்டுமே.

    பதிலளிநீக்கு