என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

45 / 1 / 6 ] ஏகாதஸி மஹிமை

2
ஸ்ரீராமஜயம்



விரத உபவாஸங்களில் உச்ச ஸ்தானத்தில் இருப்பது ஏகாதஸி.

ந காயத்ரியா பரமந்த்ர: 
ந மாதூபர தைவதம்; 
ந காச்யப: பரமம் தீர்த்தம்;  
ந ஏகாதஸ்யா: ஸமம் வ்ரதம்

காயத்ரிக்கு மேலே மந்திரம் இல்லை. அம்மாவுக்கு மேலே தெய்வம் இல்லை [தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை]. காசிக்கு மேலே தீர்த்தம் இல்லை என்று சொல்லி, கடைசியில் ஏகாதஸிக்கு ஸமானமாக விரதம் ஏதுவும் இல்லை, என்று முடிகிறது.

மற்றதெற்கெல்லாம்  மேலே ஒன்றும் இல்லை என்பதால் அவற்றிற்கு ‘ஸமமாக’ ஏதாவது இருந்தாலும் இருக்கலாம் என்று ஆகிறது.



ஆனால் விரதங்களை எடுத்துக்கொண்டால், அவற்றில்  ஏகாதஸிக்கு மேலே மட்டுமில்லாமல், அதற்கு ஸமமாகக் கூட எதுவுமில்லை என்று ரொம்பவும் சிறப்பித்துச் சொல்லியிருக்கிறது. 


oooooOooooo

ஓர் சம்பவம்


பெரியவா தேனம்பாக்கத்தில் தங்கியிருந்த சமயம். ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவில் சீமா பட்டாசாரியாரை அழைத்து வரும்படி சொன்னார். அவரும் வந்து வந்தனம் செய்தார்.

“இன்னிக்கு என்ன திதி?”

பட்டர் மெதுவாக “ஏகாதஸி” என்றார்.

“உபவாசம் நமக்கு மட்டும் தானா? இல்லே, வரதனுக்கும் தானா?”

பட்டர் திகைத்துப் போய் நின்றார்.

“பெருமாளுக்கு இன்னிக்கு நைவேத்யம் ஏன் செய்யல்லே?”

அதிர்ச்சியடைந்த பட்டர் நாக்குழற “தெரியல்லே.. விசாரிச்சிண்டு வரேன்” என்று கலவரத்துடன் கோயிலுக்குச் சென்றார்.

விசாரணையில் உள்கட்டில் ஏதோ தவறு நடந்துள்ளது என்ற உண்மை தெரிய வந்தது. அதை சரி செய்து, தக்க பிராயச்சித்தம் செய்து, பெருமாளுக்கு திருவமுது படைத்து, பிராஸாதத்தை பெரியவாளுக்கு கொண்டுவந்து சமர்ப்பித்தார் பட்டர்.

ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு நைவேத்தியம் நடக்கவில்லை என்பது பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது? தெரிந்திருந்தாலும், அதைப்பற்றி அவர்கள் கவலைப் படுவானேன்?


தேவரகசியம், ராஜரகசியம்  என்கிறார்களே? 

அது இதுதானோ? 


இல்லை, இது தேவராஜ ரகசியம்..! 



(ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு, ”தேவராஜன்” என்ற திருநாமமும் உண்டு)




oooooOooooo



அன்புடையீர்,

அனைவருக்கும் வணக்கம்,

28.05.2013 ஆரம்பித்த இந்தத் தொடர்பதிவின் முதல் நாற்பது பகுதிகள் மட்டும் 23.08.2013 அன்று நிறைவடைந்துள்ளன. 


இந்தத்தொடருக்கு அவ்வப்போது வருகை தந்து கருத்தளித்து 

உற்சாகப்படுத்தியுள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.



பழைய பதிவுகள் அனைத்துக்கும்
திரும்பச்சென்று புள்ளிவிபரங்களைச்
சேகரித்துக்கொடுத்த கிளி.




கிளி ஜோஸ்யம் போல கிளி சொல்லும் 

சில சுவாரஸ்யமான புள்ளி விபரங்கள் 

இதோ உங்கள் பார்வைக்காக


Position As On 1st September, 2013 - 7 PM [I.S.T]


முதல் 40 பகுதிகளுக்கு அவ்வப்போது 


வருகை தந்து கருத்தளித்துள்ளவர்களின் 




மொத்த எண்ணிக்கை:  79  


37 ஆண்கள்  + 42 பெண்கள்: ]




முதல் 40 பகுதிகளுக்குக் கிடைத்துள்ள 



பின்னூட்டங்களின் மொத்த எண்ணிக்கை:   1525






ஆண்களிடமிருந்து:   542   பெண்களிடமிருந்து:   983 



இந்தத்தொடருக்கு, பகுதி-1 முதல் பகுதி-40 வரை, 

தொடர்ச்சியாக வருகை தந்து கருத்தளித்து 

உற்சாகப்படுத்தியுள்ள, 7 ஆண்கள் + 15 பெண்கள் 



ஆகமொத்தம் 22 


பதிவர்களை மட்டும், 




கிளி இங்கு கீழே அடையாளம் காட்டிச் சிறப்பித்துள்ளது.  






புள்ளிவிபரங்களை அழகாக கணினியில் 
பதிவு செய்து இறுதி அறிக்கை தயாரித்த கிளி.



கிளியால் இன்று இங்கு சிறப்பாக அடையாளம் காட்டப்பட்டுள்ள பதிவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த கூடுதல் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


     



கிளியால் இன்று அழகாக 

அடையாளம் காட்டப்பட்டுள்ள 

”புதுமுகம்” - 1





வலைச்சர நிர்வாகக் குழுத்தலைவர்


’அன்பின் திரு. சீனா ஐயா அவர்கள்’




[01] அன்பின் திரு. சீனா ஐயா அவர்கள்


அசை போடுவது


 










ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹத்தில் 

இன்று [ 02.09.2013 ] வெற்றிகரமாக தங்களின்

நாற்பதாவது திருமண நாளைக்கொண்டாடி மகிழும்

 அந்த உத்தம தம்பதிகளுக்கு என்

மனமார்ந்த இனிய அன்பு நல்வாழ்த்துகள்.   

   





அன்பின் சீனா ஐயா தம்பதியினரை வாழ்த்தி 

ஸ்பெஷல் அன்பளிப்புகள்  


 




 



  








 

மதுரையில் வாழும் மகத்தான தம்பதி



வெற்றிகரமான தங்களின் நாற்பதாவது 

திருமண நிறைவு நாளையொட்டி




’தேன் நிலவு’க்காக 

லண்டனுக்குப் பறந்து சென்றுள்ள 

ஜோடிப்புறாக்களுக்கு

நம் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.




   

எல்லோரும் புஷ்பம் எடுத்துக்கோங்கோ! 

 

 

   


       
 
    


  


நம் அன்பின் திரு. சீனா ஐயா அவர்களின் முழுப்பெயர்:



ஆத்தங்குடி திரு. 

பெ.க.சு.பெ.கரு.கா. சிதம்பரம் செட்டியார் 

அவர்கள்.


அவரின் துணைவியார் அவர்களின் பெயர்:


திருமதி: மெய்யம்மை ஆச்சி அவர்கள்.





   




தொடர்ந்து பின்னூட்டமிட துடிக்கும் கிளிகளுக்கு வழக்கமான 

பூங்கொத்துடன் இன்று ஒரு செல்ஃபோன் வழங்கப்படுகிறது.

யாருக்கு எது வேண்டுமோ 

அன்பின் சீனா ஐயா தம்பதியினரின் ஆசியுடன்

பெற்றுக்கொள்ளுங்கள்.








அன்புள்ள பண்புள்ள இனிமையான எளிமையான என் அருமை நண்பர் திரு. சீனா ஐயா அவர்கள் வலைச்சரம் என்ற அமைப்பின் தலைமைப்பொறுப்பினை ஏற்றுள்ளார் என்பது தாங்கள் அனைவரும் அறிந்ததே.  

இவரைத்தெரியாமல் யாரும் தமிழ் வலையுலகில் வலம் வருவது என்பதே இயலாத விஷய்ம்.

வாரம் ஒரு பதிவர் வீதம் வலைச்சர ஆசிரியராக  நியமித்து, அவர் மூலம் பல்வேறு பதிவர்களை சிறப்பித்து அறிமுகம் செய்யச்சொல்லும் வலைச்சர தலைமை ஆசிரியரான இவரைப்போய் இன்று நான் இந்த என் பதிவினில் “புதுமுகம் - அறிமுகம்” என இங்கு கொண்டு வருமாறு எனக்கோர் சந்தர்ப்பம் நேர்ந்துள்ளதும் அந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் அனுக்ரஹம் என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது.

வலைச்சர ஆசிரியராக நேரிடையாகப் பொறுப்பேற்கச்சொல்லி எனக்குப்பலமுறை வாய்ப்பளித்தும், மறுத்து வந்த என்னை, அவ்வப்போது பல்வேறு பதிவர்களை வலைச்சர ஆசிரியராக நியமிக்கப் பரிந்துரையாவது செய்யுங்கள் என பலமுறை கேட்டுக்கொண்டுள்ளார். 

நானும் இதுவரை * 21 வைரங்களை [பதிவர்களை] இவரிடம் பரிந்துரை செய்துள்ளேன்.அவர்கள் அனைவருக்கும் உடனுக்குடன் வாய்ப்பளித்து மகிழ்ந்துள்ளார்கள்.

இன்று இந்தப்பதிவின் மூலம் தன்னையும் வேறுசில தங்கமான பதிவர்க்ளையும் நான் இங்கு அடையாளம் காட்டி அறிமுகம் செய்திட வழி வகுத்துக்கொடுத்துள்ள அருமை நண்பர் திரு. அன்பின் சீனா அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.   


நம்மில் சிலர் நேரில் பார்த்துள்ள 
புன்னகை மன்னன்


அன்பின் திரு சீனா ஐயா அவர்கள்



’பின்னூட்டப் பிதாமகன்’ என்று 
அழைக்கப்பட்டு வரும் இவர் 
நம்மில் பலருக்கும் அவ்வப்போது
கொடுத்து வரும் பின்னூட்டங்களால்
நம்மால் அறியப்பட்டுள்ள 
அன்பின் சீனா இதோ:





   



*21 வைரங்கள்*

என் பரிந்துரையை ஏற்று, அன்பின் திரு. சீனா ஐயா அவர்களால் வலைச்சர ஆசிரியர்களாக வாய்ப்பளித்து நியமிக்கப்பட்டு, மிகச்சிறப்பாக அரும்பணியாற்றி ஜொலித்த வைரங்களின் பட்டியல் இதோ: 

01. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள் [June 2011]
02. திருமதி. மனோ சுவாமிநாதன் அவர்கள் [August 2011] 
03. திருமதி. மிடில் க்ளாஸ் மாதவி அவர்கள் [Sep.  2011]
04. திருமதி. ஆச்சி அவர்கள்  [October 2011]
05. திருமதி. கோவை2தில்லி அவர்கள் [October 2011]
06. திருமதி. ராஜி - கற்றலும் கேட்டலும் அவர்கள் [Oct. 2011]
07. திருமதி. சாகம்பரி அவர்கள்  [Oct. / Nov. 2011]
08. திருமதி. ரமாரவி அவர்கள் [Nov. 2011]
09. திருமதி. ஷக்தி ப்ரபா அவர்கள் [Dec.  2011]
10. திருமதி. கோமதி அரசு அவர்கள் [January 2012]
11. திரும்தி. ஸாதிகா அவர்கள்  [March 2012]
12. திருமதி. கீத மஞ்சரி அவர்கள் [March 2012]
13. செல்வி.  நுண்மதி அவர்கள் [June 2012]

14. திருமதி. மஞ்சுபாஷிணி அவர்கள் [Oct. 2012]

மஞ்சு வெளியிட்டதோர் சிறப்புப்பதிவு:

http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html

வலைச்சர சரித்திரத்திலேயே முற்றிலும் மாறுபட்டது.

அந்த ஒரேயொரு பதிவுக்கு வந்துள்ள பின்னூட்ட எண்ணிக்கைகளிலும் மிகப்பெரியதோர் 
சரித்திர சாதனை நிகழ்ந்துள்ளது.

15. திருமதி. ரஞ்ஜனி நாராயணன் அவர்கள் [October 2012]
16. திரு. ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி அவர்கள் [OCT.2012]
17. செல்வி யுவராணி அவர்கள் [Nov. 2012]
18. திரு. ரிஷபன் அவர்கள் [Nov. 2012]
19. திரு. E S சேஷாத்ரி அவர்கள் [Dec. 2012]
20. திருமதி உஷா அன்பரசு அவர்கள் [Dec. 2012]
21. திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள் [February 2013]



   


இதன் தொடர்ச்சி இப்போதே!

ஆனால் தனிப்பதிவாக தொடர்கிறது. 

59 கருத்துகள்:

  1. காயத்ரிக்கு மேலே மந்திரம் இல்லை. அம்மாவுக்கு மேலே தெய்வம் இல்லை [தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை]. காசிக்கு மேலே தீர்த்தம் இல்லை என்று சொல்லி, கடைசியில் ஏகாதஸிக்கு ஸமானமாக விரதம் ஏதுவும் இல்லை,

    ஆக்கபூர்வமான சிந்தனைப்பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  2. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹத்தில்
    [ 02.09.2013 ] அன்று வெற்றிகரமாக
    நாற்பதாவது திருமண நாளைக்கொண்டாடி மகிழும்
    உத்தம தம்பதிகளுக்கு மனமார்ந்த
    இனிய அன்பு நல்வாழ்த்துகள்.
    நமஸ்காரங்கள்..

    பதிலளிநீக்கு
  3. ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு நைவேத்தியம் நடக்கவில்லை என்பது பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது? தெரிந்திருந்தாலும், அதைப்பற்றி அவர்கள் கவலைப் படுவானேன்?


    தேவரகசியம், ராஜரகசியம் என்கிறார்களே?

    அது இதுதானோ?

    தேவராஜ ரகசியம் ரசிக்கவைத்தது ..!

    பதிலளிநீக்கு
  4. நாற்பதாவது திருமண நாளைக்கொண்டாடி மகிழும்
    உத்தம தம்பதிகளுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நல்வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  5. சென்ற வருஷம் ஸெப்டம்பர் மூன்றாம் தேதி தனக்கு நேற்று 39 ஆவது
    திருமணநாள் என்று குறிப்பிட்டு எனக்கும் அதேநாள் என வாழ்த்து அனுப்பிய திரு சீனா ஐயா அவர்களுக்கு எனது ஆசிகளை அன்போடு
    வாழ்த்தி அளிக்கின்றேன். இன்று பூராவும் முயற்சி செய்தும் இப்போது
    இதை எழுத வழங்கிய கணினிக்கு நன்றி. யாவருக்கும் அன்புடன்

    பதிலளிநீக்கு
  6. அன்பின் வை.கோ - அருமையான பதிவு.

    //காயத்ரிக்கு மேலே மந்திரம் இல்லை. அம்மாவுக்கு மேலே தெய்வம் இல்லை [தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை]. காசிக்கு மேலே தீர்த்தம் இல்லை என்று சொல்லி, கடைசியில் ஏகாதஸிக்கு ஸமானமாக விரதம் ஏதுவும் இல்லை,// அருமை அருமை

    தேவ ரகசியம் ராஜ ரகசியம் தேவராஜ ரகசியம் விளக்கம் அருமை.

    கிளையின் உழைப்பு பாராட்டத்தக்கது - துல்லியமான புள்ளி விபரங்கள். வழக்கம் போல் ஆண்களை விட பெண்கள் அதிகம் - இவர்கள் இட்ட மறுமொழிகள் அதிகம்.

    தொடர்ச்சியாக வருகை தந்த 22 பதிவர்களின் படங்கள், தள முகவரி, தளத்தின் பெயர் ஆக அனைத்துத் தகவல்களையும் அள்ளித் தந்த கிளிக்கும் அருமை நண்பர் வை.கோவினிற்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  7. அன்பின் வை.கோ - நான் பலராலும் அறீயப்பட்ட பழைய மூத்த பதிவர் தான். 2007ல் இருந்து இருக்கிறேன். புதுமுகம் என அறிமுகப் படுத்தியது நன்று - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாபெரியவாளின் அமுத மழை பொழிந்த போது தளராமல் அனைத்திஅயும் படித்து மகிழ்ந்து மறுமொழிகள் இட்டமைக்கு தங்களீன் அறிமுகம் நெஞ்சை நெக்கிழச் செய்கிறது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  8. பெரியவா படமும் ( சாந்த சொரூபமான படம் ) பூச்செண்டுகளூம் அளித்துப் பாராட்டியதற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  9. அன்பின் வை.கோ

    இன்று இப்பொழுது 02.09.2013 - இந்திய நேரம் அதிகாலை 5 மணி .

    எங்களீன் நாற்பதாவது திருமண நாளை முன்னிட்டு சிறப்புப் பதிவாக எங்களீன் படங்களையும், நல்வாழ்த்துகளையும், அயலகத்தில் இருப்பதை நாசுக்காகச் சுட்டிக் காட்டி வாழ்த்தியமைக்கும் நன்றி

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  10. அன்பின் வை.கோ

    எங்களின் நாற்பதாவது திருமண நாளன்று - தங்களின் பெருந்தன்மை வெளீப்படும் வண்ணம் பலப்பல பரிசுகள் - வஸ்திரங்கள், விநாயகர் படம், மஞ்சள், குங்கும, வெற்றிலை பாக்கு, ரோஜாப்பூச் செண்டுகள், ஐஸ்கிரீம், பணத்துடன் பர்ஸ், நகைகளூடன் அழகிய பெட்டி, தங்கக் காசுகள் ஜொலிக்க - அழகிய பெட்டி, பெண்களின் கைப்பை, எங்கள் படங்கள் அளித்தமை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  11. அன்பின் வை.,கோ

    எங்களீன் 40 வது திருமண விழாவிற்கு வந்திருக்கும் நண்பர்களை வாழ்த்தி பூக்கள் எடுத்துக் கொள்ளச் செய்த தங்களீன் பெருந்தன்மை மகிழ்ச்சியிஅனித் தருகிறது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  12. அன்பின் வை.கோ

    இப்பதிவினிற்கு மறு மொழி இடுபவர்களூக்கு வழக்கமான பூக்களுடன் புத்தம் புதிய அலைபேசியும் அளிப்பதற்கு நன்றி.

    எங்களைப் பற்றிய விபரமான தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி

    வலைச்சரத்தில் தங்களீன் பரிந்துரைகளை ஏற்றதற்கு - பரிந்துரைக்கப் பட்ட பதிவர்களைன் தகவல்கள் - இப்பொழுது இங்கு பதிவிட்டமைக்கு நன்றி

    அன்புத் தங்கை மஞ்சுபாஷினிக்கு எங்களது தனிப்பட்ட நல்வாழ்த்துகள்

    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  13. அன்பின் வை.கோ - அறுபது படங்கள் வெளியிட்டமைக்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  14. அம்மாவுக்கு மேலே தெய்வம் இல்லை...

    ரகசியம் ரசிக்க வைத்தது...

    பதிலளிநீக்கு
  15. சீனா சாருக்கும், அவர் மனைவிக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துகள். மயில்கண் வேஷ்டியும், புடைவையும் அருமையாக இருக்கிறது. சீனா அவர்களின் மனைவி, மகள் அனைவருமே வலைப்பதிவு எழுதி வந்தனர். இப்போ யாருமே (திரு சீனா உட்பட) எழுதறதில்லை போல! :( தேனிலவுக்குப் பொருத்தமான இடம் லண்டன் தான். சென்னையில் இருந்த காலத்தில் 2009-ஆண்டு?? சரியா நினைவில் இல்லை. வலைச்சர ஆசிரியராகச் சீனா என்னைக் கேட்டப்போ எனக்கு இணைய இணைப்பே சரிவர வராது. எப்படியோ ஒரு மாதிரியா ஒப்பேத்தினேன். என்றாலும் சீனா அவர்கள் பெருந்தன்மையாகப் பொறுமை காத்தார். அதுக்கப்புறமா டாடா இன்டிகாம் இணைய இணைப்பையே துண்டித்துவிட்டு பிஎஸ் என் எல்லுக்கு மாறினப்புறம் தான் இணையமே ஒழுங்கா வேலை செய்யுது. 2005 ஆம் வருடத்திலிருந்து 2010 வரை இணைய இணைப்பினால் ரொம்பவே கஷ்டப் பட்டிருக்கேன். :)))

    பதிலளிநீக்கு
  16. பெருமாளுக்கு அமுது ஏகாதசி அன்று படைத்தது உண்மையில் கொஞ்சம் ஆச்சரியமாத் தான் இருக்கு. மற்றக் கோயில்களில் எப்படியோ தெரியலை, ஒரு சில பெருமாள் கோயில்களிலும், ராகவேந்திரர் பிருந்தாவனத்திலும் ஏகாதசி அன்று நிவேதனம் செய்ய மாட்டார்கள் என்பதோடு பிருந்தாவனத்தில் அன்று அக்ஷதைப் பிரசாதமும் கொடுப்பதில்லை. துளசி தீர்த்தம் மட்டுமே. வரும் அன்பர்களுக்கு அன்று அன்னதானமும் இல்லை என எண்ணுகிறேன்.

    பதிலளிநீக்கு
  17. திரு சீனா ஐயா அவர்களுக்கும் அவரது துணைவியாருக்கும் இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள். வலைச்சர ஆசிரியராகத் தாங்கள் என்னைப் பரிந்துரைத்தமையும், அதை சீனா ஐயா அவர்கள் ஏற்றமையும் எனக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரம். அதற்கு என் மனமார்ந்த நன்றி தங்களுக்கு.

    பதிலளிநீக்கு
  18. தேவ ரகசியம் அறியப்பெற்றோம் உங்கள் புண்ணியத்தால் அண்ணா..

    காயத்ரி மந்த்ரமும், ஏகாதேசி உபவாசமும், வரதராஜனுக்கும் உண்டா என்று மஹா பெரியவா கேட்க ஆச்சர்யம்....

    மனம் நிறைந்த அன்பு திருமணநாள் நல்வாழ்த்துகள் சீனா அண்ணா அண்ணி இருவருக்கும்..

    கிளி ஜோஸ்யம் மிக அற்புதம் அண்ணா..

    எப்படி முடியறது உங்களுக்கு இப்படி சிறப்பாக எந்த ஒரு காரியம் எடுத்தாலும் அதை பர்ஃபெக்டாக செய்ய??

    ஆச்சர்யமாக இருக்கிறது அண்ணா.. ஒவ்வொன்னும் பார்த்து பார்த்து செய்திருக்கீங்க....

    பொறுமையாக, கொஞ்சம் கூட அலுப்பே இல்லாமல் பார்த்து பார்த்து செய்திருக்கீங்க அண்ணா..

    மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா பகிர்வுக்கு...

    பதிலளிநீக்கு
  19. வலைச்சரத்தில் என்னை எழுத ஊக்குவித்தது எப்போதும் மறக்கவே முடியாது அண்ணா..

    அதன்பின் சீனா அண்ணா அண்ணி இருவருடைய அன்பும் என் மேல் அதீதம் ஆனதும் மறக்க இயலாது...

    இறையருளால் என்றும் சௌக்கியமும் சந்தோஷமுமாக இருக்க என் பிரார்த்தனைகள் அண்ணா...

    பதிலளிநீக்கு
  20. சீனா அண்ணா அண்ணி இருவரும் வெற்றிகரமான 40 ஆம் வருட திருமண நாளில் இங்கே மட்டும் வாழ்த்தறேன்னு நினைச்சுடாதீங்க அண்ணா.. வீட்டுக்கு வந்து தொலைபேசியில் அழைத்து வாழ்த்துகிறேன் கண்டிப்பா.. ட்ரீட் கிடைக்கும்ல அப்ப தான் :) ட்ரீட்டா அடி கிடைக்குமான்னு போன்ல சீனா அண்ணாவிடம் பேசியப்பின் தான் தெரியும் :)

    பதிலளிநீக்கு
  21. ஏகாதஸி மஹிமை பற்றி எழுதியமைக்கு நன்றி!

    இன்று (02.09.2013 திங்கட் கிழமை) நாற்பதாவது ( 40 ) திருமண நாள். காணும் அன்பின் சீனா அய்யா அவர்களுக்கு எனது உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!

    அன்பின் சீனா அவர்களின் இயற்பெயரையும் அவர் மனைவி பெயரையும் இன்றுதான் தெரிந்து கொண்டேன்.

    // என் பரிந்துரையை ஏற்று, அன்பின் திரு. சீனா ஐயா அவர்களால் வலைச்சர ஆசிரியர்களாக வாய்ப்பளித்து நியமிக்கப்பட்டு, மிகச்சிறப்பாக அரும்பணியாற்றி ஜொலித்த வைரங்களின் பட்டியல் //

    இந்த பட்டியலில் எனது பெயர் விடுபட்டுவிட்டது என நினைக்கிறேன்.

    பதிவுகள் எழுதவும், எல்லோருடைய பதிவுகளிலும் கருத்துரைகள் தரவும், புள்ளி விவரங்களை தயார் செய்யவும் அதிகம் உழைத்து இருக்கிறீர்கள். உடல்நிலையையும் கவனித்துக் கொள்ளவும்.

    பதிலளிநீக்கு
  22. நானும் கேள்விபட்டிருக்கேன் ஐயா,விரதத்தில் சிறந்தது ஏகாதசி விரதம் என்று..

    பதிலளிநீக்கு
  23. சீனா ஐயாவிற்கு இனிய மணநாள் வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  24. தம்பதிகளுக்கு மகிழ்வான வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  25. திரு சீனா யாவிற்கு மன நாள் வாழ்த்துக்கள்!.
    ஏகாதசி மகிமை அறிந்து கொண்டேன்.வலைச்சரத்தின் வைரங்கள் பற்றிய விவரம் அழகாய் அமைத்திருக்கிறீர்கள்.
    செல்போன் பெற்றுக் கொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  26. என்னுடைய சிந்தனை சிதறல்கள் வலைப்பதிவிற்கு
    வாழ வைக்கும் தமிழைப் போற்றுவீர் என்ற பதிவிற்கு http://kankaatchi.blogspot.in/2013/08/blog-post.html
    வந்து தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்து என்னை ஊக்கப்படுத்திய திரு சீனா அவர்களைப்பற்றி பல தகவல்களை அனைவரும் அறிய அளித்த வைகோ அவர்களுக்கு நன்றி.

    இல்லற வாழ்வில் நாற்பது ஆண்டுகள் என்பது
    ஒரு இடைப்பட்ட காலம் .

    இன்னாதது எது என்று அறிந்து
    இனியவை எது என்று அறிந்து தெளிந்து
    இவ்வுலகத்தை புரிந்துகொண்ட மனிதராய்
    எதிர்காலத்தை எதிர்கொள்ள வாய்ப்புகளை
    உருவாக்கிக்கொள்ளும் முயற்சிகளை
    மேற்கொள்ளும் காலம் .

    அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
    நல்ல உடல்நலமும் அன்பான மக்கள் சுற்றமும்
    தெய்வ அருளும் நிறைந்து வாழ்க
    இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  27. என்னுடைய சிந்தனை சிதறல்கள் வலைப்பதிவிற்கு
    வாழ வைக்கும் தமிழைப் போற்றுவீர் என்ற பதிவிற்கு http://kankaatchi.blogspot.in/2013/08/blog-post.html

    வந்து தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்து என்னை ஊக்கப்படுத்திய திரு சீனா அவர்களைப்பற்றி பல தகவல்களை அனைவரும் அறிய அளித்த வைகோ அவர்களுக்கு நன்றி. இல்லற வாழ்வில் நாற்பது ஆண்டுகள் என்பது ஒரு இடைப்பட்ட காலம் .இன்னாதது எது என்று அறிந்து இனியவை எது என்று அறிந்து தெளிந்து இவ்வுலகத்தை புரிந்துகொண்ட மனிதராய் எதிர்காலத்தை எதிர்கொள்ள வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ளும் முயற்சிகளை மேற்கொள்ளும் காலம் .
    அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நல்ல உடல்நலமும் அன்பான மக்கள் சுற்றமும் தெய்வ அருளும் நிறைந்து வாழ்க இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  28. இந்தமுறை பதிவர் சந்திப்பில் திரு சீனா ஐயாவை ரொம்பவும் மிஸ் பண்ணினேன். போனமுறை அவரிடம் எனக்கு வலைச்சரத்தில் ஆசிரியர் பதவி கொடுக்க மாட்டீங்களா என்று சண்டை (செல்லமாகத்தான்!) போட்டு, இரண்டே மாதத்தில் உங்கள் மூலம் அழைப்பு அனுப்பியிருந்தார். பதிவுலகத்தில் இப்போது நான் தெரிந்த முகமாக இருப்பது உங்கள் இருவராலும் தான் என்பதை மன மகிழ்ச்சியுடனும், நெகிழ்ச்சியுடனும் நினைத்துக் கொள்ளுகிறேன்.

    சீனா ஐயா அவர்களுக்கும், அவரது துணைவியார்க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  29. அருமையாக அறிமுகம் செய்துள்ளமைக்கு
    மனமார்ந்த நன்றி
    மண நாள் காணும் எங்கள் மதுரையைச் சார்ந்த
    சீனா தம்பதியினர் எல்லா வளமும் நலமும் பெற்று
    நீடூழிவாழ அன்னை மீனாட்சியை இந்த நாளில்
    வேண்டிக் கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  30. காயத்ரிக்கு மேலே மந்திரம் இல்லை. அம்மாவுக்கு மேலே தெய்வம் இல்லை [தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை]. காசிக்கு மேலே தீர்த்தம் இல்லை என்று சொல்லி, கடைசியில் ஏகாதஸிக்கு ஸமானமாக விரதம் ஏதுவும் இல்லை,
    அருமையான அமுத மொழி.

    சீனா சார் அவர்களுக்கும் அவர்கள் மனைவிக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்களை வலைச்சரத்தில் அளித்து விட்டேன்.
    இங்கும் உங்கள் சிறப்பு இடுகையில் அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன். வாழ்க வளமுடன்.

    வலைச்சரத்தில் உங்கள் பரிந்துரையால் முதலில் அழைத்தார்.மறுமுறையும் அழைத்த போது நான் கோவையில் குடும்ப விழாவில் பங்கு எடுத்துக் கொண்டு இருந்ததால் அந்த அழைப்பை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.
    அவர்களை மதுரையில் சந்தித்து இருக்கிறேன்.
    வலைச்சரத்தில் வைரங்கள் என்று சொன்னதற்கு நன்றி.
    மூன்று தினங்கள் விடுமுறை வெளியில் போய் விட்டதால் உடனே இந்த பதிவுக்கு வர முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  31. அடடா இங்க இருந்தோ அந்த “ஆறு” ஆரம்பமாகுது?:) ஐ மீன்ன்.. பதிவுகள் ஆறைச் சொன்னேன்... அப்பாடா நல்லவேளை லிங் கிடைச்சது இல்லையெனில்.. கண்டு பிடிச்சிருப்பனோ என்னமோ:)..

    சரி இப்ப அதுவோ முக்கியம்..

    சீனா ஐயா தம்பதிகளுக்கு இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்.. இன்றுபோல்.. என்றும் இளமையோடும் சந்தோஷத்தோடும் வாழ வாழ்த்துகிறோம்ம்..

    பதிலளிநீக்கு
  32. அன்புடையீர்,

    அனைவருக்கும் வணக்கம்,

    28.05.2013 ஆரம்பித்த இந்தத் தொடர்பதிவின் முதல் நாற்பது பகுதிகள் மட்டும் 23.08.2013 அன்று நிறைவடைந்துள்ளன.//

    என்னாது? முதல் 40 மட்டுமா?:) அப்போ இன்னும் இருக்கா?:)).. என்ர வைரவா நான் இப்போ தேம்ஸ்க்குப் போறதா வாணாமா?.. இனிச் சரிவராது.. தீக்குளிப்பு நடத்திட வேண்டியதுதான்ன்:).. ஃபயர் எஞ்சினுக்கு அடியுங்கோ:))..

    சே..சே.. என்ன பண்ணினாலும் நடக்கிறதுதானே நடக்கும்.. தொடரை நல்லபடி நடாத்தி முடிக்க வாழ்த்துக்கள் கோபு அண்ணன்...

    பதிலளிநீக்கு
  33. //முதல் 40 பகுதிகளுக்குக் கிடைத்துள்ள

    பின்னூட்டங்களின் மொத்த எண்ணிக்கை: 1525//

    எனக்காராவது சுட்டாறிய தண்ணி தெளியுங்கோஓ:)).


    ///புள்ளிவிபரங்களை அழகாக கணினியில்
    பதிவு செய்து இறுதி அறிக்கை தயாரித்த கிளி.///

    ஹா..ஹா..ஹா.. உந்தக் கிளிக்கேதும் நெஸ்ட்டமோல்ட் கரைச்சுக் குடுங்கோ:)) ஹா..ஹா..ஹா.. இண்டைக்கோ நாளைக்கோ என இருக்குதே:)).. ஹா..ஹா..ஹா.. காலையும் கழட்டிப் பக்கத்தில வச்சிருக்குது:)).. பின்ன.. எண்ணிக்கை எடுப்பது சும்மாவோ?:)).. ஒரு யங் கிளியாப் பார்த்து எடுத்திருக்கலாமெல்லோ வேலைக்கு.. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)) என் வாய் தான் நேக்கு எதிரி:).

    பதிலளிநீக்கு
  34. இருந்தாலும் நீங்க உப்பூடி வஞ்சகம் செய்யப்பூடா கோபு அண்ணன்:)).. சீனா ஐயாவுக்கு பட்ட்டுவேஷ்டி, ஆனா வைஃபுக்கு நூல் சேலை.. இது கொஞ்சம் கூட நல்லதில்லை... :)) நாங்க இதை எதிர்த்து தேம்ஸ் கரையில் உண்ணாவிரதம் இருப்போம்ம்ம்:)).. இதுக்கு மேலயும் நான் இங்கின நிண்டால் ஆபத்தூஊஊஊஊஊஊ:))...

    வலைச்சரத்தில் ஆசியராக இருந்து சிறப்புற நடாத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  35. Happy 40th anniversary to the wonderful couple. Thanks for sharing about the Ekadasi Viradham...

    பதிலளிநீக்கு
  36. பெரியவாளின் தேவரகசியம் மெய் சிலிர்க்க வைத்தது.

    சீனா ஐயா அவர்களுக்கு தாமதமான என் வாழ்த்துகளும், வணக்கங்களும்...

    பதிலளிநீக்கு
  37. "ஏகாதஸிக்கு மேலே மட்டுமில்லாமல், அதற்கு ஸமமாகக் கூட எதுவுமில்லை " அறிந்துகொண்டோம்.

    சீனா ஐயா தம்பதிகளுக்கு எனது வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  38. பதிவுகள் எழுதவும், எல்லோருடைய பதிவுகளிலும் கருத்துரைகள் தரவும், புள்ளி விவரங்களை தயார் செய்யவும் அதிகம் உழைத்து இருக்கிறீர்கள். உடல்நிலையையும் கவனித்துக் கொள்ளவும்.
    தங்களின் பணி அயரா பணி. நன்றி

    பதிலளிநீக்கு
  39. சீனா சாருக்கும், அவர் மனைவிக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துகள்.பெரியவாளின் தேவரகசியம் மெய் சிலிர்க்க வைத்தது.
    பகிர்விற்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  40. திரு. சீனா-மெய்யம்மை தம்பதியினருக்கு அன்பான வாழ்த்துக்கள். பகிர்ந்த தங்களுக்கும் நன்றிகள். பெரியாவாவின் தேவராஜ ரகசியம் பிரமிப்பு. அய்யோ என்னமா கிளி வட்டம் போடுது.

    பதிலளிநீக்கு
  41. ஏகாதசி மகிமை அருமை!
    கிளியும் அதன் புள்ளி விவரங்களும் சூப்பர்! அனைவரின் சார்பிலும் நன்றி

    பதிலளிநீக்கு
  42. அருள்மொழி படித்து இன்புற்றேன்.

    கிளியின் பணி பாராட்டுக்குரியது. எத்தனை எத்தனை கணக்குகளைக் கவனித்துக் கொள்கிறது உங்கள் கிளி! :)

    பதிலளிநீக்கு
  43. அடையாளம் காட்டிச் சிறப்பிக்கும் கிளி படத்தையும்,தொடர்ந்து பின்னூட்டமிட துடிக்கும் கிளிகளையும் வெகுவாக ரஸித்தேன்.

    பதிலளிநீக்கு
  44. 11 ஆவதாக என்னையும் இணைத்த உங்களுக்கு என் அன்பின் நன்றிகள் சார்.அனைவருக்கும் வாழ்த்துகக்ள்.

    பதிலளிநீக்கு
  45. நாற்பதாவது திருமண நாளைக்கொண்டாடி மகிழும்
    உத்தம தம்பதிகளுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நல்வாழ்த்துகளும்

    பதிலளிநீக்கு
  46. ஏகாதசி விரத மகிமை அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
  47. ஏகாதசிக்கு சமமாகவே எதுவும் இல்லைன்னா அப்புறம் அதுக்கு மேலே என்ன இருக்க முடியும்.

    பெருமாளுக்கு அமுது படைக்கலைங்கறது பெருமாளுக்கே தெரியாமப் போனாலும் போகும். நம்ப மகா பெரியவாளுக்கு தெரியாம போகுமே? நடமாடும் தெய்வத்துக்கு சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள்.
    அடுத்தவங்கள பாராட்டறதுல உங்களுக்கு இணை நீங்களே தான்.

    எப்படி இப்படி எல்லாம் முடியறது உங்களாது. புள்ளி விவரத்துல பெரும்புள்ளி தான் நீங்க. எனக்கு வீட்டுக்கணக்கே சரியா போடத் தெரியாது. (அதான் ரூபா, அணா, பைசா கணக்கை எல்லாம் ஆத்துக்காரர் கிட்ட விட்டுட்டேன்.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya August 18, 2015 at 3:14 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா. உங்களைப்பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. ஏதோ 06.08.2015 வியாழக்கிழமை மதியம் ஃபோனிலாவது தங்களுடன் என்னால் பேச முடிந்ததில் சற்றே என் மனதுக்கு ஓர் ஆறுதல்.

      //ஏகாதசிக்கு சமமாகவே எதுவும் இல்லைன்னா அப்புறம் அதுக்கு மேலே என்ன இருக்க முடியும்.//

      அம்மாவுக்கு மேல் தெய்வம் இல்லை என்பது போலத்தான் இந்த ஏகாதஸிக்கு சமமான விரதம் எதுவும் இல்லை என்பதும் போலிருக்கிறது.

      //பெருமாளுக்கு அமுது படைக்கலைங்கறது பெருமாளுக்கே தெரியாமப் போனாலும் போகும். நம்ப மகா பெரியவாளுக்கு தெரியாம போகுமே? நடமாடும் தெய்வத்துக்கு சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள். //

      :) மிக்க மகிழ்ச்சி.

      //அடுத்தவங்கள பாராட்டறதுல உங்களுக்கு இணை நீங்களே தான். எப்படி இப்படி எல்லாம் முடியறது உங்களாலே. புள்ளி விவரத்துல பெரும்புள்ளி தான் நீங்க. //

      மனம் திறந்து ஆத்மார்த்தமாக ஒவ்வொன்றையும் இப்படி எடுத்துச்சொல்வதில் ஜெயாவும் பெரும்புள்ளிதானே ! அதனால் எனக்கு ஒன்றும் பதில் சொல்லத் தெரியவில்லை.

      //எனக்கு வீட்டுக்கணக்கே சரியா போடத் தெரியாது.//

      ஆஹா, இதை அப்படியே நானும் நம்புகிறேன் ... என்ன ஒரு தன்னடக்கம் ... வியந்துதான் போகிறேன். :)

      //(அதான் ரூபா, அணா, பைசா கணக்கை எல்லாம் ஆத்துக்காரர் கிட்ட விட்டுட்டேன்.)//

      தம்பதியினர் ஜோடி இருவரில், யாராவது ஒருவரிடம் மற்றொருவர் இவ்வாறு அனைத்து நிதி நிர்வாகத்தையும் விட்டுவிட்டால் நல்லது தான். கொடுத்து வைத்த மகராஜி எங்கள் ஜெயா !

      [ஆனாலும் பாவம் நம் ரமணி சார் அவர்கள். பொறுமையின் சிகரம் அவர். கோயில் கட்டிக்கும்பிட வேண்டும் அவரை :) ]

      -=-=-=-=-

      இங்கு என் இல்லத்தில் இந்த மாதம் அனைத்துக்குடும்ப உறுப்பினர்களும் 100% கூடி நம் ஆஹமே நிறைந்து உள்ளதால், தங்களின் பின்னூட்டங்கள் அனைத்துக்கும் என்னால் பதில் கொடுக்க இயலாமல் போகலாம். தயவுசெய்து பொறுத்துக்கொள்ளவும்.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      நீக்கு
  48. தேவராஜ ரகசியங்கள் ஒரு தொடர் கதைதான். சீனா ஐயா தம்பதியருக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  49. ஓ...ஓ.. அந்த ஆண்டவருக்கே சாப்பாடு பண்ணிக்கிடலியா அது குரு சாமிக்கும் தெரியவந்திச்சா.

    சீனாஐயா, அவங்க பொஞ்சாதி அம்மாலங்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  50. பெருமதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய சீனா ஸார் தம்பதி களுக்கு இனிய திருமண நாள் நல் வாழ்த்துகள். ஏகாதசி விரத மகிமை காயத்ரி மந்திர மகிமை அனைவருமே அறிந்து கொள்ள வேண்டிய நல்ல விஷயங்கள்.

    பதிலளிநீக்கு
  51. ஞானக்கண் என்பது இதுதான் போலும்...அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு எங்களின் வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  52. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (21.06.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:

    https://www.facebook.com/groups/396189224217111/permalink/419452861890747/

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு