என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 8 டிசம்பர், 2011

தா யு மா ன வ ள் [இறுதிப்பகுதி 3 of 3 ]



தாயுமானவள்

சிறுகதை
[இறுதிப்பகுதி 3 of 3 ]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-





[மேலே கொடுத்துள்ள படங்கள் இரண்டும், சிறுகதை வெளியான 
பத்திரிகை அலுவலக ஓவியரால் வரையப்பட்டவை.]

முன்கதை முடிந்த இடம்:



குழந்தை கண் அசந்து தூங்கத்தொடங்கியது. ஆனால் அதன் பிஞ்சு விரல்கள் மட்டும் முனியாண்டியின் சட்டையை இறுக்கமாகப் பற்றியிருந்தது.  அதன் மற்றொரு கையில் வைத்திருந்த மிகப்பெரிய பலூன் கைநழுவி அந்த மிகப்பெரிய கோயில் மண்டபத்தினுள் அடித்த காற்றில், இங்குமங்கும் பறந்து தனக்குத்தானே விளையாடிக் கொண்டிருந்தது. முனியாண்டியும் உட்கார்ந்திருந்த நிலையிலேயே கண்ணை மூடிக்கொண்டு தூங்க ஆரம்பித்திருந்தான். 


அடுத்த நிறைவுப்பகுதி தொடர்கிறது ...................

குழந்தையின் அருகே உட்கார்ந்த நிலையிலேயே தூங்கிக்கொண்டிருந்த முனியாண்டியை, ஐந்து மணி சுமாருக்கு பக்தர் ஒருவர் உடைத்த சதிர் தேங்காய்த்துண்டு ஒன்று தட்டி எழுப்பியது. அங்கிருந்த குழாய் நீரில் தன் முகத்தைக்கழுவிய முனியாண்டி, குழந்தையுடன் படிவாசல் பிள்ளையாராகிய மாணிக்க விநாயகரை வணங்கி விட்டு, தெப்பக்குளத்தையும் வலமாகச் சுற்றி வந்து, அப்போது தான் தேரில் நிலைக்கு வந்து சேர்ந்துள்ள வாணப்பட்டரை மாரியம்மனை மிக அருகில் சென்று வணங்கி விட்டு, தன் வீடு நோக்கிப்புறப்பட்டான்.

தெப்பக்குள ரோட்டு ஓரக்கடை ஒன்றில், பேரம் பேசி குழந்தைக்கு மாற்று உடையாக கவுன் ஒன்று வாங்கிக்கொண்டு, தன் அரண்மனையாகிய குடிசைக்குள், குழந்தையுடன் நுழைந்தான்.

சூடாக தோசை சுட்டுக்கொண்டிருந்த மரகதம், குழந்தை ஒன்றுடன் வந்துள்ளத் தன் கணவனை, தன் இரு புருவங்களையும் உயர்த்தி ஒரு பார்வை பார்க்கும் போதே, குழந்தை விஜியோ “அ..ய்..ய்..யா.....தோசை ! மம்மி .... மம்மி ....  ஸாரி ... ஸாரி ... ஆண்ட்டீ ... ஆண்ட்டீ ... எனக்கு ஒரு தோசை வேணும் .... தருவீங்களா?”  எனச்சொல்லி வெட்கம் கலந்த ஆசையுடன், தன் பிஞ்சு விரல்களைக் குவித்தபடி தன்கையை நீட்டியது.    

குழந்தையை ஒருவித வாஞ்சையுடன் தன் மடியில் அமர்த்திக்கொண்ட மரகதம், தோசையை அதற்கு ஊட்டிக்கொண்டே, அதன் கதை முழுவதையும் முனியாண்டி சொல்லச்சொல்ல கவனத்துடன் கேட்டுக்கொண்டாள்.


ஆசையுடன் தோசை சாப்பிட்டு முடித்த குழந்தையை பாய் ஒன்றைத் தட்டிப்போட்டு படுக்க வைத்தபின், மேற்கொண்டு இந்தக்குழந்தையை நாம் என்ன செய்வது என இருவரும் நெடுநேரம் யோசித்து, தங்களுக்குள் விவாதித்துப் பேசிக்கொண்டிருந்ததில், நள்ளிரவு வெகுநேரம் ஆகிவிட்டது.

காலையில் எழுந்த குழந்தைக்கு உடல் அனலாகக் கொதித்தது. பயத்தில் கை கால்கள் நடுங்கின. அழ ஆரம்பித்தது. முனியாண்டியும், மரகதமும் என்னவெல்லாமோ சொல்லி சமாதானம் செய்ய முயன்றனர்.

“காஃபி, டீ ... ஏதாவது வாங்கி வரட்டா? உனக்கு என்னடாக் கண்ணு வேணும்? ஏன் அழுவறே? என்று பரிவுடன் பரிதவித்துப்போய்க் கேட்டனர். 

”எனக்கு ஒண்ணும் வேணாம். என்னயத்தான் போலீஸ் ஸ்டேஷன்லே கொண்டுபோய் விடப்போறீங்களே! நேத்து ராத்திரி நீங்க பேசிட்டு இருந்தீங்களே! நான் உங்க கூடவே இருக்கேனே .... ப்ளீஸ் ... என்னய நீங்க எங்கேயும் கொண்டுபோய் விட்டுடாதீங்க .... ப்ளீஸ் ... ப்ளீஸ்” எனக்கெஞ்ச ஆரம்பித்தக் குழந்தையின் மேனியும் நடுங்கிக்கொண்டிருந்தது.

குழந்தையை கட்டிப்பிடித்துத் தூக்கிக்கொண்ட மரகதம், “சரி, சரி, நீ எங்களோடேயே இருக்கலாம்டா கண்ணு, உன்னய எங்கேயும் கொண்டுபோய் விடமாட்டோம்டா, நீ சமத்துப்பாப்பா இல்லையா? அழக்கூடாது” என்று சொல்லி தன் புடவைத்தலைப்பால் குழந்தையின் கண்களைத் துடைத்து விட்டு, அள்ளி அணைத்து முத்தமிட்டாள், மரகதம்.

திருவிழாவில் பலூன் விற்ற பணத்தை எண்ணி முடித்த முனியாண்டி, ”செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்ய, அந்த டாக்டரம்மா நம்மிடம் கேட்டிருந்த மூவாயிரம் ரூபாயும் சேர்ந்து விட்டது தாயீ!” என மரகதத்திடம் சொல்லிவிட்டு, எப்போது நாம் டாக்டர் அம்மாவைப் பார்க்கப்போகலாம்?” என வினவினான்.

”இதோ பாருய்யா, மச்சான்! அந்த வாணப்பட்டரை மகமாயீ, மாரியாத்தாளே இந்தப்பச்சப்புள்ளைய, நமக்கே நமக்குத்தான் சொந்தம்னு இந்தத் தேர் திருவிழாவிலே கொடுத்திருக்கும் போது, நமக்கு இப்போ இன்னொரு குழந்தை எதுக்குய்யா வேணும்?; 


இந்தப்புள்ளைய நல்லபடியா வளர்த்து ஆளாக்கினா அதுவே போதுமய்யா! அந்தப்பணத்தை அப்படியே எடுத்துட்டுப் போயீ, பக்கத்துல உள்ள இஸ்கூலிலே, இதை சேர்த்துப்பாங்களான்னு, விசாரித்துட்டு வாய்யா” என்றாள் மரகதம்.

திருச்சி மலைக்கோட்டைத் ”தாயுமானவர்” அருளால், ஒரே நாளில் “தாயுமானவள்” (தாயும்+ஆனவள்) ஆன தன் மனைவியை அள்ளி அணைக்கச் சென்ற முனியாண்டியைப் பார்த்து, வெட்கத்துடன் சிரித்தது, குழந்தை விஜி.  


-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-


[இந்தச் சிறுகதை சுனாமிக்குப்பிறகு 2005 ஆம் ஆண்டு எழுதப்பட்டது]



இது தான் என் வாழ்க்கையில் நான் எழுதிய முதல் சிறுகதை.

தினமலர் நிறுவனர் அமரர் டி.வி.ஆர் நினைவுச்சிறுகதைப் 
போட்டியில் கலந்து கொண்டு பரிசினை வென்ற கதையும் ஆகும்.











தினமலர்-வாரமலரில் 6.11.2005 அன்று என் புகைப்படம் மற்றும் சுயவிபரக்குறிப்புகளுடன் வெளியிடப்பட்ட கதை.






 இந்தச்சிறுகதை வெளியான 
6.11.2005 தினமலர் வாரமலர் அட்டைப்படம்.




[கதாசிரியர் பற்றி வெளியிடப்பட்ட சிறுகுறிப்பு]



போட்டியில் பங்குகொண்ட மொத்த கதைகள்: 2981 
இறுதிக்கட்டத் தேர்வில் வடிகட்டி தேர்ந்தெடுக்கப்பட்டு 
பரிசளிக்கப்பட்ட கதைகள் வெறும் 13 மட்டுமே.
அதற்கான ஆதாரம் இதோ இங்கே:












அந்தப் பதிமூன்றில் இதுவும் ஒன்று என்பதும்
நான் முதன்முதலாக எழுதிய கதை என்பதும் 
இதற்குக் கிடைத்த பரிசு + பாராட்டுக்களால் 
என்னை மேலும் மேலும் எழுத 
உற்சாகப்படுத்திய கதை என்பதும் 
இதன் தனிச்சிறப்பாகும்.

முதல் சந்திப்பு, முதல் பார்வை, முதல் நட்பு, முதல் உரையாடல்,  முதல் காதல், முதல் முத்தம், முதல் இரவு, முதல் உறவு, முதல் குழந்தை போன்றவற்றில் தானே ஒரு Thrilling ஆன அனுபவமும், சுகமும், பேரானந்தமும் இருக்க முடியும்?

அதுபோலவேதான் இந்த என் முதல் கதையும்; அது முதன் முதலாக ஒரு பத்திரிகையில் அச்சேறி, பிரசுரம் ஆனபோது, எனக்கு மட்டில்லா மகிழ்ச்சியையும், பரிசுத்தொகையையும், என்னுடன் அன்று மிகப்பெரிய தொழிற்சாலையில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான ஊழியர்களின் ஆத்மார்த்தமான பாராட்டுக்களையும், புதிய எழுத்துலக நண்பர்களையும் பெற்றுத்தந்தது என்பதே, இந்த என் சிறுகதையின் மூலம் நான் பெற்ற மிகச்சிறப்பான, மகிழ்ச்சிகரமானதோர் அனுபவம்.  


அந்த என் முதல் அனுபவம் மிகவும் 
THRILLING ! THRILLING !! THRILLING !!!  
தான்!  


நான் சொல்லும் இதனை, என்னைப்போலவே நன்கு அனுபவித்து, அதை மனதில் அப்படியே என்றும் நிலைநிறுத்தி, அவ்வப்போது நினைத்துப்பார்த்து, மனதால் மகிழ்வுடன் அசைபோடத் தெரிந்தவர்களால் மட்டுமே, இந்த சுகானுபவத்தை முற்றிலுமாகப் புரிந்து கொள்ள முடியும்.

பிறகு இதுபோல, ஏன் ...  இதையும்விட இன்னும் மேலாகவே, எவ்வளவோ பரிசுகளும், பாராட்டுக்களும், விருதுகளும் என்னைத் தேடி அவைகளாகவே வந்திருந்த போதிலும், இந்த என் முதல் அனுபவத்தை மட்டும் என்னால் எப்போதுமே மறக்க முடியாமல் உள்ளது என்பதை இங்கு தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 






இந்த ”தாயுமானவள்” என்ற தலைப்பிலேயே 
என் முதல் சிறுகதைத் தொகுப்பு நூலும், 
மிகப்பிரபலமான வானதி பதிப்பகம் மூலம் 
2009 ஆண்டு வெளியிடப்பட்டது. 


அந்தச்சிறுகதைத் தொகுப்பு நூலின், முன் அட்டைப்படமே 
தங்கள் பார்வைக்காக மேலே கொடுக்கப்பட்டுள்ளது.




மிகவும் பழமை வாய்ந்ததும், உலகப்புகழ் பெற்றதுமான வானதி பதிப்பகத்தின் மூலம் தன் நூல் ஒன்றை ஒரு எழுத்தாளர் வெளியிடுவது என்பது அவ்வளவு சாதாரணமானதொரு விஷயமல்ல என்பது பிரபல தமிழ் எழுத்தாளர்களுக்கு மட்டுமே தெரிந்ததொரு இரகசியம். 

இந்த தேவ இரகசியம் ஏதும் தெரியாமலேயே, புது எழுத்தாளனாகிய நான், முதன்முதாலாக என் சிறுகதைகளை ஒரு தொகுப்பு நூலாக வெளியிட வேண்டி கோரிக்கை வைத்து,அவர்களுக்கு அனுப்பப்போய், முதலில் நான் சந்தித்த சோதனைகளும், வேதனைகளும், மிகவும் அதிகம். ஆனாலும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் நடந்த அதிசயமான ஆச்சர்யமான சம்பவங்களும் [MIRACLE] அனுபவங்களும் பற்றி, ஒரு தனிப்பதிவாகவே நான் பிறகு ஒரு நாள் எழுதி வெளியிட நினைக்கிறேன்.

இறுதியாக தெய்வானுக்கிரஹத்தினால் மட்டுமே, என் முதல் சிறுகதைத்தொகுப்பு நூலான இந்தத் “தாயுமானவள்” பிரபல வானதி பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்டதும் எனக்கு மிகவும் பெருமை சேர்த்த விஷயமே என்பதையும் பெருமையுடன், இங்குத் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில்,  பெரு மகிழ்ச்சி அடைகின்றேன். 

-o-o-o-o-o-

மேற்படி முதல் சிறுகதைத்தொகுப்பு நூலில் 
இடம்பெற்றுள்ள மொத்தக்கதைகள்: 13

01. தாயுமானவள் 
http://gopu1949.blogspot.com/2011/12/1-of-3.html


02. என் உயிர்த்தோழி


03. உடம்பெல்லாம் உப்புச்சீடை 
http://gopu1949.blogspot.com/2011/11/blog-post_2406.html


04. பொடி விஷயம் 
[வந்துவிட்டார் வ.வ.ஸ்ரீ - புதிய கட்சி ”மூ.பொ.போ.மு.க” உதயம்]
http://gopu1949.blogspot.com/2011/04/1-1-of-6.html


06. தேடி வந்த தேவதை


08. ’எலி’ஸபத் டவர்ஸ்
http://gopu1949.blogspot.com/2011/02/1-8.html


09. ஏமாறாதே, ஏமாற்றாதே!
http://gopu1949.blogspot.com/2011/09/blog-post_22.html


10. நன்றே செய், அதையும் இன்றே செய் !
http://gopu1949.blogspot.com/2011/11/blog-post_9317.html


12. சுடிதார் வாங்கப்போறேன்!
http://gopu1949.blogspot.com/2011/04/1-of-3.html

13. நீ முன்னாலே போனா .. நான் பின்னாலே வாரேன்! 
http://gopu1949.blogspot.com/2011/10/15.html

இதில் No. 2 "என் உயிர்த்தோழி” மற்றும் No. 6 "தேடி வந்த தேவதை” ஆகிய இரண்டும் அநேகமாக இந்த மாதமே எனது அடுத்தடுத்த வலைப்பதிவு வெளியீடுகளாக இருக்கும்.   

மீதி 11 கதைகளும் ஏற்கனவே என் வலைப்பதிவில் வெளியிட்டுவிட்டேன் என்பது உங்களில் பலருக்கும் நினைவிருக்கும். இதுவரை படிக்காதவர்கள் விரும்பினால் போய்ப் படிக்க இணைப்புகளும் கொடுத்துள்ளேன்.

-oOo-


மேற்படி வானதி பதிப்பக வெளியீடான “தாயுமானவள்” சிறுகதைத்தொகுப்பு நூலுக்கு நான் எழுதியுள்ள “முன்னுரை” இதோ இங்கே ...... உங்கள் பார்வைக்கு:


முன்னுரை


அடியேன், இளமையில் வறுமையை நன்கு அனுபவித்து வளர்ந்தவன். ஏழை எளிய மக்களின் வாழ்வினில் ஏற்படும் சுகங்களும் சோகங்களும், அன்றாட வாழ்க்கைப் பயணத்திற்கு, அவர்கள் படும் அவஸ்தைகளும், பல்வேறு பொருளாதார கஷ்டங்களிலிருந்து விடுபட அவர்கள் மேற்கொள்ளும் கடின உழைப்பும், சிந்தும் வியர்வைத் துளிகளும், என் இளமைக்காலங்களிலேயே, எனக்கு சமுதாய சிந்தனையை ஏற்படுத்த வழிவகுத்து உதவின.

எப்போதாவது ஒருசில சமயங்களில், ஏழைகளின் சிரிப்பில் நான் இறைவனைக் கண்டதும் உண்டு. இவ்வாறு எனக்கு ஏற்பட்ட பலவித அனுபவங்களையும், ஒருசில சமூக அவலங்களையும், நான் சந்தித்து உறவாடி, உரையாடி பழக நேர்ந்த ஒருசில வேடிக்கை மனிதர்களையும், என் கதைகளில் ஆங்காங்கே இட்டுச்செல்வதால், அவை உயிரூட்டமுள்ளதாக அமைந்து வெற்றி பெறும் வாய்ப்பைப் பெறுவதாக நம்புகிறேன்.

என்னுடைய இந்த முதல் சிறுகதைத்தொகுப்பு நூல் வெளிவர ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து உதவிய என் அருமை நண்பர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும், இதில் உள்ள பல கதைகளை ஏற்கனவே பிரசுரித்து வெளியிட்ட வார, மாத இதழ்களுக்கும், இந்தத் தொகுப்பிதழை பிரசுரித்து வெளியிடும் “வானதி” பதிப்பகத்தாருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

அன்புடன்,
வை. கோபாலகிருஷ்ணன் 

-oOo-

இந்தத் “தாயுமானவள்” என்ற என் முதல் சிறுகதைத்தொகுப்பு நூலுக்கு ”வாழ்த்துரை” வழங்கிச் சிறப்பித்தவர் என் அருமை நண்பரும், பிரபலமான எழுத்தாளரும், எழுத்துலகில் என் மானஸீக குருநாதருமான திரு. ரிஷபன் ஸ்ரீநிவாஸன் அவர்கள். அவர்களின் வாழ்த்துரை தங்கள் பார்வைக்காக இதோ இங்கே :

வாழ்த்துரை

சிறுகதைகள் போல படிப்பு ருசி தருவதற்கு வேறு எதுவும் இருக்கிறதா? குண்டு குண்டாய்ப் புத்தகங்கள், பெரிய பெரிய நாவல்கள் இருக்கும். முதல் அத்யாயம் படித்து விட்டு அடுத்த அத்யாயம் போகும்போது ‘வசந்தி’ யார், இப்போது குறிப்பிடும் ‘சுகந்தி’ யார் என்கிற குழப்பத்தோடு மீண்டும் முதல் அத்யாயம் வாசிக்கும் பலரை நான் அறிவேன்.

சிறுகதைகளின் முதல் சுகமே அது அப்போதே முடிந்துவிடும். அது மட்டுமல்ல, நல்ல சிறுகதை வாசித்து முடித்ததும் கிடைக்கும் சுகம், அந்தக்கதை மூலம் பெறப்படும் படிப்பினை, மிகக் குறைவான கதாபாத்திரங்களில் ரசமான சம்பாஷணைகள், சம்பவங்கள், இப்படி சிறுகதைகளின் பெருமையினை அடுக்கிக்கொண்டே போகலாம். 

“படைப்பிலக்கியங்களில் நான் சிறுகதையாய் இருக்கிறேன்” என்று கீதையில் கிருஷ்ணன் சொல்லியிருப்பார், அர்ஜுனன் கேட்டிருந்தால்!

திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களிடம் கதை சொல்லும் திறன், நகைச்சுவை மிளிரக் கதை நகர்த்திச் செல்லும் தனித்துவம், சம்பவங்களில் வாசகன் தன்னையே பொருத்திப் பார்க்கத் தூண்டும் அளவு யதார்த்தம், உரையாடல்களில் காணப்படும் நேர்த்தி .... அவர் பேனா அழகாகக் கதை சொல்கிறது ... அழ வைக்கிறது ... சிரிக்க வைக்கிறது ... மொத்தத்தில் எல்லாமே உணர்ச்சிப் பிரவாகம். ஒவ்வொரு கதையும் அழுத்தம் ஆழம் என்று கனமாய் மனதில் இறங்கிவிடுகிறது.

இது அவரின் முதல் தொகுப்பு. அவர் இன்னும் பல தொகுப்புகளுக்குச் சொந்தக்காரராகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதற்குக் கட்டியம் கூறி, வாசிப்பு அனுபவம் வேண்டும் வாசகர்களுக்கு நல்விருந்தாய் அமைந்திருக்கிறது இந்தத்தொகுப்பு.

வாசகர்களுக்கும் படைப்புக்களுக்கும் இடையே இனி நான் எதற்கு?

அன்புடன்
ரிஷபன் 
   
-oOo-


You may also like to go through the pictures in these Links:


http://gopu1949.blogspot.com/2011/07/4.html

http://gopu1949.blogspot.com/2011/07/3.html

http://gopu1949.blogspot.com/2011/07/6.html






என்றும் அன்புடன் தங்கள்




     

  வை. கோபாலகிருஷ்ணன்
-oOo-








ஓர் முக்கிய அறிவிப்பு
என் அடுத்த பதிவான 
“என் உயிர்த்தோழி” 
என்ற சிறுகதை 
வரும் ஞாயிறு 11.12.2011 
அன்று வெளியிடப்படும். 
காணத்தவறாதீர்கள். 
அன்புடன் 
vgk 

122 கருத்துகள்:

  1. தெப்பக்குள ரோட்டு ஓரக்கடை ஒன்றில், பேரம் பேசி குழந்தைக்கு மாற்று உடையாக கவுன் ஒன்று வாங்கிக்கொண்டு, தன் அரண்மனையாகிய குடிசைக்குள், குழந்தையுடன் நுழைந்தான்.


    அன்பு அரசாளும் அது அரண்மனைதானே!

    பதிலளிநீக்கு
  2. முதல் கதையே அசத்தலாக எழுதி இருக்கீங்களே...

    நல்ல கதை. உங்களுடைய இச்சிறுகதைத் தொகுப்பு வானதி பதிப்பகம் மூலம் வெளிவந்தது சாலப் பொருந்தும்....

    வாழ்த்துகள். மேலும் பல சிறுகதைகள் படைத்து அவையும் பல தொகுப்புகளாக வெளிவர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. முதல் சந்திப்பு, முதல் பார்வை, முதல் நட்பு, முதல் உரையாடல், முதல் காதல், முதல் முத்தம், முதல் இரவு, முதல் உறவு, முதல் குழந்தை போன்றவற்றில் தானே ஒரு Thrilling ஆன அனுபவமும், சுகமும், பேரானந்தமும் இருக்க முடியும்?/

    மிக நிதர்சனமாய் அந்த கணத்தை
    சுகமான கனமான உணர்வு சுடர்விட்ட வரிகள்.. வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள். முதல் கதையே நல்லா வந்திருக்கே.

    பதிலளிநீக்கு
  5. இதற்குக் கிடைத்த பரிசு + பாராட்டுக்களால்
    என்னை மேலும் மேலும் எழுத
    உற்சாகப்படுத்திய கதை என்பதும்
    இதன் தனிச்சிறப்பாகும்.


    தனிச்சிற்ப்பான களம்.. அருமையான கதிக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  6. அந்த என் முதல் அனுபவம் மிகவும் THRILLING ! THRILLING !! THRILLING !!! தான்!

    மகிழ்வுடன் அசைபோடத் தெரிந்தவர்களால் மட்டுமே, இந்த சுகானுபவத்தை முற்றிலுமாகப் புரிந்து கொள்ள முடியும்.

    அந்த க்ஷணம் இனிமைமையான்து..

    பதிலளிநீக்கு
  7. அடுத்த 24 மணி நேரத்திற்குள் நடந்த அதிசயமான ஆச்சர்யமான சம்பவங்களும் [MIRACLE] அனுபவங்களும் பற்றி, ஒரு தனிப்பதிவாகவே நான் பிறகு ஒரு நாள் எழுதி வெளியிட நினைக்கிறேன்.

    தா யு மா ன வ சுவாமி அருளும் ஸ்தலத்தில் வசிக்கும் தங்களின் அனுபவப்பகிர்வை படிக்க காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  8. முதல் கதைஎன்றால் உண்மையாக நம்புவது
    கடினமாகத்தான் உள்ளது
    யதார்த்தமான நடை,கதைக் கரு முதலியவை
    முதல் கதையிலேயே அத்தனை இயல்பாக
    அமைந்தது ஆச்சரியமூட்டுவதாகவே உள்ளது
    தங்கள் பதிவினைத் தொடர்வதில் பெருமிதம் கொள்கிறேன்
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 3

    பதிலளிநீக்கு
  9. நீங்களே பதிப்பித்து, நீங்களே நூலக ஆணைக்குழுவின் பார்வைக்கு அனுப்பி வைத்து, அதிர்ஷ்டவசமாக அவர்களிடமிருந்து ஒருவழியாக ஆர்டர் கிடைக்கப்பெற்று, எல்லா மாவட்ட நூலகங்களுக்கும் அவர்கள் சொற்படி பிரதிகளை பார்சலில் அனுப்பி வைத்து.. இந்த அனுபவங்கள் எல்லாம் பெறாமல் போனீர்களே! அந்த மட்டும் ஷேமம்.

    பதிலளிநீக்கு
  10. முதல் கதையையே அழகாக, அனுபவித்து எழுதியிருக்கீங்களே...!

    \\மம்மி .... மம்மி ....ஸாரி ... ஸாரி ... ஆண்ட்டீ... ஆண்ட்டீ...\\
    எனும்போதே தாய்மையைத் தேடும் குழந்தையின் மனசை அழகாகக் காட்டி விடுகிறீர்கள்...

    \\“படைப்பிலக்கியங்களில் நான் சிறுகதையாய் இருக்கிறேன்” என்று கீதையில் கிருஷ்ணன் சொல்லியிருப்பார், அர்ஜுனன் கேட்டிருந்தால்!\\ என்கிற திரு.ரிஷபன் அவர்களின் வாழ்த்துரை இந்தக் கதைக்கு மிகப் பொருத்தமாகவே இருக்கிறது...

    \\அந்த என் முதல் அனுபவம் மிகவும்
    THRILLING ! THRILLING !! THRILLING !!! தான்! \\

    நிதர்சனமான உண்மை சார். முதல் படைப்பு வெளியாகிற நேரம் முதல் பிரசவத்திற்கு ஒப்பு என்பது படைப்பாளர்களுக்கு மட்டுமே தெரிந்த "தேவ ரகசியம்"

    தாயுமானவர் அருளால் "தாயுமானவள்" அருமை...

    பதிலளிநீக்கு
  11. முதல் கதையே பிரமாதமாக எழுதி இருக்கிறீர்கள்..

    பதிலளிநீக்கு
  12. I was totally surprised and taken aback when you presented this book to me when we last met at your house, about an year back.I was more surprised and felt very happy after reading all the 13 stories, which I shared with you by mail. I look forward to those thrilling 24 hours prior to the book was to be published. I cannot but agree with you on those electric moments when the first story comes on print, which I have also experienced about 50 years back, when my first story was published in KANNAN, as a prize winning iem.
    Wish you many more laurels, which you so much deserve.
    Anbudan, M.J.Raman

    பதிலளிநீக்கு
  13. அன்பின் வை.கோ

    மூன்றாம் - இறுதிப் பகுதி - சஸ்பென்ஸினை உடைத்து நல்ல நிகழ்வாக முடிந்திருக்கிறது. தோசை சுட்டுக் கொடுத்து குழந்தையுடன் சேர்ந்து தானும் மகிழும் மரகதம் தாயுணர்வுடன் குழந்தையை தன் குழந்தையாய் வளர்க்க அப்பொழுதே தீர்மானித்து விடுகிறாள்.

    இருப்பினும் இரவில் இருவரும் பேசித் தீர்மானித்த செய்தி கேட்ட குழந்தை காய்ச்சல் வந்து இருவரிடமும் கெஞ்சுவது மனதை உலுக்குகிறது.

    முனியாண்டி தேவையான் 3000 சேர்ந்து விட்டதை - மனைவியிடம் சொல்லும் போது - மரகதத்திற்கு வர்ணப்பட்டறை மகமாயி மாரியாத்தா கொடுத்த குழந்தை இருக்கும் போது எதற்கு செயற்கைக் கருத்தரிப்பு என ஒரு சிந்தனை மனதில் ஓடுவது நன்று.

    அந்த 3000த்தினை குழந்தையின் படிப்புச் செலவுக்கு பயன் படுத்தலாம் எனக் கூறும் மரகதம் அந்த நிமிடமே தாயுமானவள் ஆகி விடுகிறாள்.

    கதை முடிந்த விதம் அருமை அருமை.

    வாழ்க்கையில் எழுதிய முதல் சிறுகதை தினமலர் வார இதழில் வெளியாகி - ஏறத்தாழ 3000 கதைகளீல் சிறந்த ஒன்றாகத் தேர்வாகியது பற்றி மிக்க மகிழ்ச்சி. அக்கதையை வானதி பதிப்பகம் மற்ற சிறு கதைகளுடன் சேர்த்து புத்தக்மாக வெளியிட்டது குறித்தும் மிக்க மகிழ்ச்சி. பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள் வை.கோ

    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  14. அன்பின் வை.கோ

    முதல் தடவையாக நடக்கும் பல நிகழ்வுகளை விட - இந்நிகழ்வு நிஜமாகவே தங்களுக்கு ஒரு சிறப்பினையும் பெரு மகிழ்ச்சியினையும் - ஒரு கதாசிரியர் என்ற அங்கீகாரத்தினையும் அளித்திருக்கும்.

    கடந்த கால நிகழ்வுகளில் சிலவற்றை நாம் இன்றும் நினைத்து மகிழ்ந்து மெதுவாக உணர்ந்து அனுபவித்து - அசை போடும் ஆனந்த மான சூழ்நிலை அடிக்கடி கிடைக்க நல்வாழ்த்துகள்

    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  15. இந்தப்புள்ளைய நல்லபடியா வளர்த்து ஆளாக்கினா அதுவே போதுமய்யா! அந்தப்பணத்தை அப்படியே எடுத்துட்டுப் போயீ, பக்கத்துல உள்ள இஸ்கூலிலே, இதை சேர்த்துப்பாங்களான்னு, விசாரித்துட்டு வாய்யா” என்றாள் மரகதம்//

    அருமையான முடிவு.
    முடிவல்ல தொடக்கம்.

    முதல் கதையே மிகவும் சிறப்பாய் எழுதி பரிசு பெற்றது பெரிய சாதனைதான்.

    மேலும் மேலும் உங்கள் கதைகள் புத்தகங்களாய் வர வாழ்த்துக்கள்.

    இன்றைய பதிவு மிகவும் சிறப்பான பதிவு.

    பதிலளிநீக்கு
  16. திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களிடம் கதை சொல்லும் திறன், நகைச்சுவை மிளிரக் கதை நகர்த்திச் செல்லும் தனித்துவம், சம்பவங்களில் வாசகன் தன்னையே பொருத்திப் பார்க்கத் தூண்டும் அளவு யதார்த்தம், உரையாடல்களில் காணப்படும் நேர்த்தி .... அவர் பேனா அழகாகக் கதை சொல்கிறது ... அழ வைக்கிறது ... சிரிக்க வைக்கிறது ... மொத்தத்தில் எல்லாமே உணர்ச்சிப் பிரவாகம். ஒவ்வொரு கதையும் அழுத்தம் ஆழம் என்று கனமாய் மனதில் இறங்கிவிடுகிறது.

    இது அவரின் முதல் தொகுப்பு. அவர் இன்னும் பல தொகுப்புகளுக்குச் சொந்தக்காரராகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதற்குக் கட்டியம் கூறி, வாசிப்பு அனுபவம் வேண்டும் வாசகர்களுக்கு நல்விருந்தாய் அமைந்திருக்கிறது இந்தத்தொகுப்பு.

    வாசகர்களுக்கும் படைப்புக்களுக்கும் இடையே இனி நான் எதற்கு?

    அன்புடன்
    ரிஷபன் //

    ரிஷபன் அவர்களின் வாழ்த்துரை மிகவும் சிறப்பானது. அருமையாய் உங்களைப் பற்றி சரியாக சொல்லி இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  17. முதல் கதை ஆம் முதல்தரமான கதை! எழுத்தாளர் ரிஷனின் அருமையான வாழ்த்துரை! மிக அருமை வைகோ ஸார்!

    பதிலளிநீக்கு
  18. அருமையான கதை.
    வாழ்த்துகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  19. முதல் கதையே முத்தான கதை.மிக அருமையாக எழுதி இருக்கின்றீர்கள்.

    பதிலளிநீக்கு
  20. கதையின் முடிவு நன்றாகவே திருப்திகரமாக அமைந்து விட்டது.

    விரைவில் அந்த miracle பதிவை எதிர்பார்க்கிறேன்.

    முதல் கதை என்றாலும் முதன்மையானதாக அமைந்திருக்கிறது.

    திரு ரிஷபன் ஸ்ரீனிவாசன் அவர்களின் வாழ்த்துரை தங்கள் படைப்பிற்கு மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது.

    என் உயிர்த் தோழிக்காகவும் தேடி வந்த தேவதைக்காகவும் காத்திருக்கிறோம்.பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. வானதி பதிப்பகத்தில் வெளியானதற்கு வாழ்த்துக்கள் .
    முதல் கதையே அருமையாக அமைந்து விட்டது .நீங்கள் கூறுவது மெய்தான்
    முதல் வெற்றி /முதல் சாதனை /என்பது வாழ்வில் மறக்கவே முடியாதுதான் .அந்த ஓவியர் வரைந்த சிறு பெண்ணின் படம் உயிரோவியமாக நிற்கிறது .

    பதிலளிநீக்கு
  22. சார்... நீங்க இவ்வளவு பெரிய எழுத்தாளர்ன்னு இத்தனை நாள் தெரியாமல் போனதற்கு வருந்துகிறேன்...

    பதிலளிநீக்கு
  23. அருமையான கதை. முதல் கதையிலேயே பரிசும் அங்கீகாரமும் கிடைத்தது உங்களுடைய திறமையை வெளியுலகத்திற்கு காட்ட உதவியிருக்கிறது. மிக்க மகிழ்ச்சியும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  24. இராஜராஜேஸ்வரி said...
    தெப்பக்குள ரோட்டு ஓரக்கடை ஒன்றில், பேரம் பேசி குழந்தைக்கு மாற்று உடையாக கவுன் ஒன்று வாங்கிக்கொண்டு, தன் அரண்மனையாகிய குடிசைக்குள், குழந்தையுடன் நுழைந்தான்.


    //அன்பு அரசாளும் அது அரண்மனைதானே!//

    ஆம்! அன்பு அரசாளும் அது மட்டுமல்ல, அன்பு உள்ளங்கள் அனைத்துமே அரண்மனை தானே. ;)))))

    பதிலளிநீக்கு
  25. வெங்கட் நாகராஜ் said...
    //முதல் கதையே அசத்தலாக எழுதி இருக்கீங்களே...

    நல்ல கதை. உங்களுடைய இச்சிறுகதைத் தொகுப்பு வானதி பதிப்பகம் மூலம் வெளிவந்தது சாலப் பொருந்தும்....

    வாழ்த்துகள். மேலும் பல சிறுகதைகள் படைத்து அவையும் பல தொகுப்புகளாக வெளிவர வாழ்த்துகள்.//

    மிக்க நன்றி, வெங்கட். எல்லாம் கடவுள் செயல்.

    பதிலளிநீக்கு
  26. இராஜராஜேஸ்வரி said...
    முதல் சந்திப்பு, முதல் பார்வை, முதல் நட்பு, முதல் உரையாடல், முதல் காதல், முதல் முத்தம், முதல் இரவு, முதல் உறவு, முதல் குழந்தை போன்றவற்றில் தானே ஒரு Thrilling ஆன அனுபவமும், சுகமும், பேரானந்தமும் இருக்க முடியும்?/

    //மிக நிதர்சனமாய் அந்த கணத்தை
    சுகமான கனமான உணர்வு சுடர்விட்ட வரிகள்.. வாழ்த்துகள்..//

    சுகமான உணர்வுகளுடன் கூடிய வாழ்த்துக்களுக்கு நன்றி, மேடம்.

    பதிலளிநீக்கு
  27. Lakshmi said...
    //வாழ்த்துக்கள். முதல் கதையே நல்லா வந்திருக்கே.//

    வாங்க, லக்ஷ்மி மேடம்.
    ஏதோ சுனாமி போலவே திடீர்ன்னு வந்திருக்கு, மேடம்.
    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  28. இராஜராஜேஸ்வரி said...
    இதற்குக் கிடைத்த பரிசு + பாராட்டுக்களால்
    என்னை மேலும் மேலும் எழுத
    உற்சாகப்படுத்திய கதை என்பதும்
    இதன் தனிச்சிறப்பாகும்.


    //தனிச்சிற்ப்பான களம்.. அருமையான கதிக்குப் பாராட்டுக்கள்..//

    தனிச்சிறப்பான அருமையான பாராட்டுகளுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  29. இராஜராஜேஸ்வரி said...
    அந்த என் முதல் அனுபவம் மிகவும் THRILLING ! THRILLING !! THRILLING !!! தான்!

    மகிழ்வுடன் அசைபோடத் தெரிந்தவர்களால் மட்டுமே, இந்த சுகானுபவத்தை முற்றிலுமாகப் புரிந்து கொள்ள முடியும்.

    //அந்த க்ஷணம் இனிமைமையான்து..//

    ஆஹா! அந்த க்ஷணம் என்ற அழகிய சொல்லைச் க்ஷணத்தில் பிரயோகித்து விட்டீர்களே! நீங்க நீங்க தான்! ;))))

    பதிலளிநீக்கு
  30. இராஜராஜேஸ்வரி said...
    அடுத்த 24 மணி நேரத்திற்குள் நடந்த அதிசயமான ஆச்சர்யமான சம்பவங்களும் [MIRACLE] அனுபவங்களும் பற்றி, ஒரு தனிப்பதிவாகவே நான் பிறகு ஒரு நாள் எழுதி வெளியிட நினைக்கிறேன்.

    //தா யு மா ன வ சுவாமி அருளும் ஸ்தலத்தில் வசிக்கும் தங்களின் அனுபவப்பகிர்வை படிக்க காத்திருக்கிறோம்.//

    ”வாசிப்பது என்பது சுவாசிப்பது!
    வாசிப்பவர்களே சுவாசிப்பவர்கள்!!
    என்று ஆணித்தரமாகக் கூறும், பதிவரல்லவா! காத்திருப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை தான்!!

    யாருக்காக யாரும் எதற்காகவும் காத்திருக்காத இந்த அவசர உலகத்தில் இப்படியும் சிலர் என்பதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சியே; ))).

    பதிலளிநீக்கு
  31. Ramani said...
    //முதல் கதைஎன்றால் உண்மையாக நம்புவது
    கடினமாகத்தான் உள்ளது
    யதார்த்தமான நடை,கதைக் கரு முதலியவை
    முதல் கதையிலேயே அத்தனை இயல்பாக
    அமைந்தது ஆச்சரியமூட்டுவதாகவே உள்ளது//

    பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு கடிதம் வந்ததும், எனக்கே “நாமா இதை எழுதினோம்; நமக்கா பரிசு கிடைத்துள்ளது; எப்படி இதை எழுதினோம்;” என ஆச்சர்யமூட்டுவதாகவே இருந்தது, சார்.

    எல்லாம் அந்த சுனாமி பற்றிய செய்திகளால் எனக்குள் ஏற்பட்ட தாக்கமே இவ்வாறு என்னை எழுதத் தூண்டியது.

    கதையில் வரும் விஜி போல எவ்வளவு குழந்தைகள் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்குமொ என நினைத்தால் மனதுக்கு மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது.

    //தங்கள் பதிவினைத் தொடர்வதில் பெருமிதம் கொள்கிறேன்
    தொடர வாழ்த்துக்கள்//

    அன்பான தங்களின் வாழ்த்துக்கள் தொடர்வதில் நானும் பெருமிதம் அடைகிறேன், சார்.

    பதிலளிநீக்கு
  32. ஜீவி said...
    //நீங்களே பதிப்பித்து, நீங்களே நூலக ஆணைக்குழுவின் பார்வைக்கு அனுப்பி வைத்து, அதிர்ஷ்டவசமாக அவர்களிடமிருந்து ஒருவழியாக ஆர்டர் கிடைக்கப்பெற்று, எல்லா மாவட்ட நூலகங்களுக்கும் அவர்கள் சொற்படி பிரதிகளை பார்சலில் அனுப்பி வைத்து.. இந்த அனுபவங்கள் எல்லாம் பெறாமல் போனீர்களே! அந்த மட்டும் ஷேமம்.//

    மிகவும் மூத்த/பிரபல அனுபவசாலியான எழுத்தாளர் என்ற முறையில், இன்றைய நாட்டு நடப்பை வெகு அழகாகப் புட்டுப்புட்டு வைத்து விட்டீர்கள்.

    இவைகளைப்பற்றியெல்லாம் நான் போகப்போகக் கேள்விப்பட்டு தெரிந்து கொண்டேன், ஐயா.

    நல்லவேளையாக அதுபோன்ற கசப்பான அனுபவங்கள் எனக்கு ஏற்படவில்லை தான். அதுவரை க்ஷேமமே!!

    ஒவ்வொரு துறையிலும் எவ்வளவோ மர்மங்களும், தேவ இரகசியங்களும் நிறைந்துள்ளன போலும்!

    கருத்துக்களுக்கு மிக்க நன்றி, ஐயா.

    பதிலளிநீக்கு
  33. nunmadhi said...
    ***முதல் கதையையே அழகாக, அனுபவித்து எழுதியிருக்கீங்களே...!***

    அப்படியா! மிக்க நன்றி கெளரி



    \\மம்மி .... மம்மி ....ஸாரி ... ஸாரி ... ஆண்ட்டீ... ஆண்ட்டீ...\\
    ***எனும்போதே தாய்மையைத் தேடும் குழந்தையின் மனசை அழகாகக் காட்டி விடுகிறீர்கள்...***

    ஆஹா! நன்கு அழகாக ரஸித்துச் சொல்லியுள்ளீர்கள், லக்ஷ்மி.

    \\“படைப்பிலக்கியங்களில் நான் சிறுகதையாய் இருக்கிறேன்” என்று கீதையில் கிருஷ்ணன் சொல்லியிருப்பார், அர்ஜுனன் கேட்டிருந்தால்!\\ ***என்கிற திரு.ரிஷபன் அவர்களின் வாழ்த்துரை இந்தக் கதைக்கு மிகப் பொருத்தமாகவே இருக்கிறது...***

    ராணி வாயால் எது சொன்னாலும் அது எப்போதுமே மஹாராணி சொன்னது போலவே மிகப்பொருத்தமாகத்தான் இருக்கும்.

    எனக்கும் நண்பர் திரு. ரிஷபனுக்கும் தெரிந்த ஒரு ராணி இருக்கிறார்கள். எங்களுடன் சேர்ந்து ஒரு காலத்தில் ஒரே துறையில் பணியாற்றியவர்கள். சார் வீட்டுக்குப்பக்கம் தான் எங்கோ ஸ்ரீரங்கத்தில் குடியிருக்கிறார்கள். அதனால் தான் இங்கு தங்களின் மற்றொரு பெயரான ’ராணி’யைப் பயன்படுத்திக்கொண்டேன்.

    \\அந்த என் முதல் அனுபவம் மிகவும்
    THRILLING ! THRILLING !! THRILLING !!! தான்! \\

    ***நிதர்சனமான உண்மை சார். முதல் படைப்பு வெளியாகிற நேரம் முதல் பிரசவத்திற்கு ஒப்பு என்பது படைப்பாளர்களுக்கு மட்டுமே தெரிந்த "தேவ ரகசியம்"***

    நுண்மதி படைத்த நுண்மதி வாயால் இதைக் கேட்க எனக்கும் மிகவும் சந்தோஷமே. மிக்க நன்றி! நுண்மதி.
    .

    ***தாயுமானவர் அருளால் "தாயுமானவள்" அருமை...***

    சரியாகச்சொல்லி விட்டீர்கள். ராணி ஆனந்தி.

    [மற்ற பெயர்கள் ஏதும் விட்டுப் போயிருந்தால் கோபித்துக்கொள்ள வேண்டாம். ராணி கிருஷ்ணன்]

    பிரியமுள்ள vgk

    பதிலளிநீக்கு
  34. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
    //MUTHAL MUTHU!

    BY
    MUVAAR MUTHU!//

    அடடா!
    முத்தான முத்தல்லவோ,
    (மூவார் முத்திடமிருந்து)
    முதிர்ந்து வந்த முத்தல்லவோ!! ;)))) அதனால் முத்தில் சத்துள்ளது.

    பதிலளிநீக்கு
  35. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    //முதல் கதையே பிரமாதமாக எழுதி இருக்கிறீர்கள்..//

    மிக்க நன்றி, நண்பரே.

    பதிலளிநீக்கு
  36. Manakkal said...
    //I was totally surprised and taken aback when you presented this book to me when we last met at your house, about an year back.//

    ஓராண்டு முன்பு என் வீட்டுக்கு தாங்கள் எதிர்பாராத வருகை தந்ததும், நான் அப்போது ஒரே நேரத்தில் வெளியிட்டு இருந்த தாயுமானவள்+வர்ணம் தீட்டப்படாத ஓவியங்கள் ஆகிய 2 சிறுகதை நூல்களைத் தங்களுக்கு வழங்கியதும் நன்றாகவே நினைவுள்ளது, சார். தங்களின் அபூர்வ வருகையை மறக்கவா முடியும்?

    //’I was more surprised and felt very happy after reading all the 13 stories, which I shared with you by mail.//

    ஆம். அதுவும் மிக நன்றாகவே ஞாபகம் உள்ளது. அதைக்கூட, எனக்கு மிகவும் பிடித்த தங்களின் தாயாரின் ஆசீர்வாதங்களாகவே நினைத்து, நான் என் மனைவியுடன் சொல்லி மிகவும் மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டேன்.

    //I look forward to those thrilling 24 hours prior to the book was to be published.//

    உங்களைப்போல விரும்பிக்கேட்டுள்ள சிலருக்கு மட்டும் அதை தனி மெயில் மூலம் பிறகு ஒருநாள் தெரிவித்து விடுகிறேன். அதுவே நாகரீகமாக இருக்கும் என நினைக்கிறேன்.

    //I cannot but agree with you on those electric moments when the first story comes on print, which I have also experienced about 50 years back, when my first story was published in KANNAN, as a prize winning item.//

    50 ஆண்டுகளுக்கு முன்பே தங்களின் கதையொன்று “கண்ணன்” என்ற பத்திரிகையில் வெளிவந்தபோது, தாங்களும் இதே போன்ற அனுபவம் பெற்றேன் என்று கூறுவதைக் கேட்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது, சார்.
    எனக்கு அப்போது 10 அல்லது 11 வயதே இருக்கும்.

    அதுபோல ஒரு பத்திரிகை நான் பார்த்ததோ கேள்விப்பட்டதே இல்லை. எவ்வளவோ பத்திரிகைகள், பொருளாதார நெருக்கடியால், நடத்த முடியாமல் இதுபோல நாளடைவில் காணாமல் போன சரித்திரங்கள் உண்டு தான்.

    நாகர்கோயிலிலிருந்து மிகச்சிறந்த மாத இதழ் [சிற்றிதழ்] ஒன்று வெளியாகி வந்தது. தொடர்ச்சியாக அதில் நான் 30 மாதங்களுக்கு மேல் நான் ஒரு ஆத்ம திருப்திக்காக மட்டுமே, இலவசமாக கட்டுரைகள்/சிறுகதைகள் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.

    இப்போது அதை தொடர்ந்து வெளியிட முடியாமல் நிறுத்தி விட்டார்கள். ;(((

    //Wish you many more laurels, which you so much deserve.//
    Anbudan, M.J.Raman

    மிக்க நன்றி, சார். எல்லாம், என் மீது தனி பிரியம் வைத்திருந்த தங்கள் தாயாரின் ஆசீர்வாதங்களே.

    அவர்களைப்போன்ற ஒரு பொறுமைசாலியையும், தன் வீடு மட்டும் என்ற சுயநலம் இல்லாமல் பிறர் வீட்டுக்காரியமாக இருந்தாலும் உட்புகுந்து உதவிகள் செய்து, எல்லோரையும் அனுசரித்து, அன்பு செலுத்தி பரோபகாரியாக இருந்தவர்களை இப்போதெல்லாம் பார்ப்பதே அரிது.

    தங்கள் தங்கையும் அதுபோலவே சாந்தமாகவும், அமைதியாகவும் இருப்பதை கவனித்துள்ளேன்.தங்கள் தங்கையின் கணவரும் என் எழுத்துக்களின் பரம ரசிகராகவே உள்ளார். புத்தகப்புழுவாக உள்ளார். அதையும் கவனித்தேன்.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  37. கோமதி அரசு said...
    இந்தப்புள்ளைய நல்லபடியா வளர்த்து ஆளாக்கினா அதுவே போதுமய்யா! அந்தப்பணத்தை அப்படியே எடுத்துட்டுப் போயீ, பக்கத்துல உள்ள இஸ்கூலிலே, இதை சேர்த்துப்பாங்களான்னு, விசாரித்துட்டு வாய்யா” என்றாள் மரகதம்//

    //அருமையான முடிவு.
    முடிவல்ல தொடக்கம்.//

    அருமையான கருத்து. கதையில் வரும் குழந்தை விஜிக்கு அது அருமையான தொடக்கமே.

    //முதல் கதையே மிகவும் சிறப்பாய் எழுதி பரிசு பெற்றது பெரிய சாதனைதான்.//

    எழுத்து அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமே. எல்லாம் அவன் செயலே! ;))))

    //மேலும் மேலும் உங்கள் கதைகள் புத்தகங்களாய் வர வாழ்த்துக்கள்.//

    தங்களின் உற்சாகமாக வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.

    //இன்றைய பதிவு மிகவும் சிறப்பான பதிவு.//

    ரொம்பவும் சந்தோஷம், மேடம்.

    பதிலளிநீக்கு
  38. கதையை நெகிழ்வாய் முடித்திருக்கிறீர்கள். புத்தகம் வெளியிட்ட அனுபவங்களைப் படிக்க ஆவலாக இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  39. கோமதி அரசு said...

    //ரிஷபன் அவர்களின் வாழ்த்துரை மிகவும் சிறப்பானது. அருமையாய் உங்களைப் பற்றி சரியாக சொல்லி இருக்கிறார்.//

    திரு. ரிஷபன் அவர்கள் சிறந்த படைப்புக்களை உருவாக்கித்தரும் எழுத்தாளர் மட்டுமல்ல. பல படைப்பாளிகளையே உருவாக்கித்தரும், உற்சாகப்படுத்தி வரும், நல்ல மனது உள்ளவர்.

    போட்டியும் பொறாமையும் மிகுந்த எழுத்துலகில் அவர் ஒரு பத்தரைமாத்துத் தங்கம்.

    அவரை, தானாகவே என்னிடம் இழுத்து வந்து, நட்புடன் பழக ஆரம்பித்து வைத்ததே இந்த என் முதல் வெளியீடான பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட “தாயுமானவள்” சிறுகதையே.

    அதன்பின் நான் தொடர்ந்து எழுத என்னை அவ்வப்போது தூண்டிக்கொண்டே இருந்த பெருமையும் அவரையே சாரும்.

    கதைகளை நூலாக வெளியிட வேண்டும் என்று வற்புருத்தியவரும் அவரே தான். அவ்ர் ஏற்கனவே பல நூல்கள் எழுதியுள்ளார். என்னிடம் அவர் எழுதிய சில நூல்கள் மட்டும் உள்ளன. அதைப்பற்றியும் நான் ஒரு பதிவில் எழுதியுள்ளேன்.

    இணைப்பு இதோ:
    http://gopu1949.blogspot.com/2011/07/blog-post_21.html

    அதைப்போய் உடனே படித்துப்பாருங்கள்.

    தன்னடக்கமுள்ள என் மானஸீக குருநாதரைப்பற்றி, கொஞ்சூண்டு தெரிந்து கொள்ள முடியும்.

    பிரியமுள்ள vgk

    பதிலளிநீக்கு
  40. ஷைலஜா said...
    //முதல் கதை ஆம் முதல்தரமான கதை! எழுத்தாளர் ரிஷனின் அருமையான வாழ்த்துரை! மிக அருமை வைகோ ஸார்!//

    கிளி கொஞ்சும் அழகான கருத்துக்களுக்கு என் நன்றிகள்.

    நான் கோமதி அரசு அவர்களுக்கு எழுதியுள்ள பதிலே தங்களுக்கும் பொருந்தும்.

    கிளி தானே, உடனே பறந்துபோய் படியுங்கள் திரு. ரிஷபன் அவர்களைப்பற்றிய என் அந்த இணைப்பை.

    எனக்கு மிகவும் பிடித்த பறவைகளில் ஒன்றான கிளிக்கு மீண்டும் நன்றிகள்.
    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  41. Rathnavel said...
    //அருமையான கதை.
    வாழ்த்துகள் ஐயா.//

    மிகவும் சந்தோஷமும், மிக்க நன்றிகளும், ஐயா!

    பதிலளிநீக்கு
  42. ` ஸாதிகா said...
    //முதல் கதையே முத்தான கதை.மிக அருமையாக எழுதி இருக்கின்றீர்கள்.//

    தங்களின் முத்தான கருத்துக்களுக்கு நன்றிகள், மேடம்.

    பதிலளிநீக்கு
  43. cheena (சீனா) said...
    //அன்பின் வை.கோ

    மூன்றாம் - இறுதிப் பகுதி - சஸ்பென்ஸினை உடைத்து நல்ல நிகழ்வாக முடிந்திருக்கிறது. தோசை சுட்டுக் கொடுத்து குழந்தையுடன் சேர்ந்து தானும் மகிழும் மரகதம் தாயுணர்வுடன் குழந்தையை தன் குழந்தையாய் வளர்க்க அப்பொழுதே தீர்மானித்து விடுகிறாள்.

    இருப்பினும் இரவில் இருவரும் பேசித் தீர்மானித்த செய்தி கேட்ட குழந்தை காய்ச்சல் வந்து இருவரிடமும் கெஞ்சுவது மனதை உலுக்குகிறது.

    முனியாண்டி தேவையான் 3000 சேர்ந்து விட்டதை - மனைவியிடம் சொல்லும் போது - மரகதத்திற்கு வர்ணப்பட்டறை மகமாயி மாரியாத்தா கொடுத்த குழந்தை இருக்கும் போது எதற்கு செயற்கைக் கருத்தரிப்பு என ஒரு சிந்தனை மனதில் ஓடுவது நன்று.

    அந்த 3000த்தினை குழந்தையின் படிப்புச் செலவுக்கு பயன் படுத்தலாம் எனக் கூறும் மரகதம் அந்த நிமிடமே தாயுமானவள் ஆகி விடுகிறாள்.

    கதை முடிந்த விதம் அருமை அருமை.

    வாழ்க்கையில் எழுதிய முதல் சிறுகதை தினமலர் வார இதழில் வெளியாகி - ஏறத்தாழ 3000 கதைகளீல் சிறந்த ஒன்றாகத் தேர்வாகியது பற்றி மிக்க மகிழ்ச்சி. அக்கதையை வானதி பதிப்பகம் மற்ற சிறு கதைகளுடன் சேர்த்து புத்தக்மாக வெளியிட்டது குறித்தும் மிக்க மகிழ்ச்சி. பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள் வை.கோ

    நட்புடன் சீனா//

    அன்புள்ள ஐயா,

    தங்களின் விரிவான இந்த மறுமொழிகள் எனக்கு மிகவும் சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் கொடுப்பதாக உள்ளது.

    தங்களைப்போன்ற அனுபவசாலி + விஷய ஞானமுள்ளவர்களிடமிருந்து, இவ்வளவு நீள, அகல, ஆழமான மறுமொழி வாங்க நான் உண்மையிலேயே மிகவும் கொடுத்து வைத்துள்ளேன், ஐயா.

    மிக்க நன்றி, ஐயா.

    பிரியமுள்ள vgk

    பதிலளிநீக்கு
  44. cheena (சீனா) said...
    //அன்பின் வை.கோ

    முதல் தடவையாக நடக்கும் பல நிகழ்வுகளை விட - இந்நிகழ்வு நிஜமாகவே தங்களுக்கு ஒரு சிறப்பினையும் பெரு மகிழ்ச்சியினையும் - ஒரு கதாசிரியர் என்ற அங்கீகாரத்தினையும் அளித்திருக்கும்.

    கடந்த கால நிகழ்வுகளில் சிலவற்றை நாம் இன்றும் நினைத்து மகிழ்ந்து மெதுவாக உணர்ந்து அனுபவித்து - அசை போடும் ஆனந்த மான சூழ்நிலை அடிக்கடி கிடைக்க நல்வாழ்த்துகள்

    நட்புடன் சீனா//

    பிரியமுள்ள ஐயா,

    வணக்கங்கள்.

    தாங்கள் மீண்டும் வந்து மறுமொழி இட்டது எனக்கு மிகவும் மனநிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.

    அதுவே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக நான்
    நினைக்கிறேன். வலைச்சரமே வந்து வாழ்த்தியது போல ஒரே பூமணம் வீசுகிறது.முதலிரவு அறையின் ஜாஸ்மின் மயக்கத்தில் இப்போது நான்.


    நன்றி, நன்றி, நன்றி!

    பிரியமுள்ள vgk

    பதிலளிநீக்கு
  45. raji said...
    //கதையின் முடிவு நன்றாகவே திருப்திகரமாக அமைந்து விட்டது.//

    வளரும் கம்பீரமான எழுத்தாளராகிய தங்களையே இந்தக்கதைத் திருப்தி படுத்தி விட்டது என்பதைக் கேட்கவே எனக்கும் திருப்தியாக உள்ளது.

    //விரைவில் அந்த miracle பதிவை எதிர்பார்க்கிறேன்.//

    தங்களைப்போல ஆர்வத்துடன் கேட்டுள்ள ஒருசிலருக்கு மட்டும் அதை பிறகு மெயில் மூலம் அனுப்பி வைக்கிறேன். அது தான் நாகரீகமாக இருக்கும் என்று எனக்கு இப்போது தோன்றுகிறது.

    //முதல் கதை என்றாலும் முதன்மையானதாக அமைந்திருக்கிறது.//

    எல்லாம் அந்த பாழாய்ப்போன இயற்கைச் சீற்றத்தைப் பற்றிய செய்திகளைக் “கற்றலும் கேட்டலும்” செய்ததனால் வந்த விளைவும், வேகமுமே என்னை இவ்வாறு எழுத வைத்தது.

    //திரு ரிஷபன் ஸ்ரீனிவாசன் அவர்களின் வாழ்த்துரை தங்கள் படைப்பிற்கு மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது.//

    திருமதி. கோமதி அரசு அவர்களின் பின்னூட்டத்திற்கான என் பதிலில் திரு. ரிஷபன் அவர்களைப்பற்றி, நான் சொல்லியுள்ளது உங்களுக்கும் பொருந்தும்.

    //என் உயிர்த் தோழிக்காகவும் தேடி வந்த தேவதைக்காகவும் காத்திருக்கிறோம்.//

    இந்த இரண்டு தலைப்பிலும் என்னை இன்று எழுதச்சொன்னால், இன்றுள்ள சூழ்நிலையில் நான் எப்படி எழுதுவேன், யாரைப்பற்றி எழுதுவேன் என்று சிலர் ஏதேதோ கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள்.ஆனால் இந்தக்கதைகள் பல ஆண்டுகளுக்கு முன்பு அன்றுள்ள சூழ்நிலையில் எழுதப்பட்டவைகளாகும்.

    என் இன்றைய தோழியும், அன்பு மகளுமான தங்களால் நிச்சயம் இதைப் புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.

    //பகிர்விற்கு நன்றி.//

    தங்களின் மிக நீண்ட அருமையான கருத்துரைக்களுக்கு என் நன்றிகள்.
    மன நிறைவுடன், பிரியமுள்ள vgk

    பதிலளிநீக்கு
  46. angelin said...
    //வானதி பதிப்பகத்தில் வெளியானதற்கு வாழ்த்துக்கள் .
    முதல் கதையே அருமையாக அமைந்து விட்டது .நீங்கள் கூறுவது மெய்தான்
    முதல் வெற்றி /முதல் சாதனை /என்பது வாழ்வில் மறக்கவே முடியாதுதான் .அந்த ஓவியர் வரைந்த சிறு பெண்ணின் படம் உயிரோவியமாக நிற்கிறது .//

    தேவதையின் அன்பான வருகையும், அருமையான கருத்துக்களும், இந்தப்பதிவினை மேலும் மெருகூட்டுவதாக உள்ளன.

    ரொம்பவும் சந்தாஷமும், நன்றிகளும், மேடம். பிரியமுள்ள vgk

    பதிலளிநீக்கு
  47. Philosophy Prabhakaran said...
    //சார்... நீங்க இவ்வளவு பெரிய எழுத்தாளர்ன்னு இத்தனை நாள் தெரியாமல் போனதற்கு வருந்துகிறேன்...//

    Dear Sir,

    தாங்கள் வருந்தவே வேண்டாம்.

    நான் ஒன்றும் பெரிய எழுத்தாளரே கிடையாது.

    இன்றும் கூட நான்
    மிகச் சாதாரணமானவனே,
    மிகச் சாமான்யனே தான் என்பதை அறியவும்.

    "கற்றது கைமண் அளவு
    கல்லாதது =
    உலகு minus கைமண் அளவு”

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  48. DrPKandaswamyPhD said...
    //அருமையான கதை. முதல் கதையிலேயே பரிசும் அங்கீகாரமும் கிடைத்தது உங்களுடைய திறமையை வெளியுலகத்திற்கு காட்ட உதவியிருக்கிறது. மிக்க மகிழ்ச்சியும் பாராட்டுகளும்.//

    Most Respected Doctor Sir,

    முதலில் என் வணக்கங்களும் நமஸ்காரங்களும் உங்களுக்கு.

    ஓரிரு வார்த்தைகளில் மட்டுமே, தந்தி போல் சுருக்கமாகவே, எல்லோருக்கும் கருத்துக்கள் சொல்லும் தாங்கள், இன்று மிகப்பெரிய வாழ்த்துரை வழங்கியிருப்பது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. அதுவே எனக்கு மிகப்பெரிய வெற்றியாகவும், அங்கீகாரமாகவும் நினைக்கிறேன்.

    மிக்க நன்றி, சார். அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  49. ஸ்ரீராம். said...
    //கதையை நெகிழ்வாய் முடித்திருக்கிறீர்கள். புத்தகம் வெளியிட்ட அனுபவங்களைப் படிக்க ஆவலாக இருக்கிறேன்.//

    ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்!

    அன்பான வருகைக்கும் அருமையான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

    புத்தகம் வெளியிட்ட அனுபவம் என்றாவது ஒரு நாள் உங்களைத் தேடி வரும். அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  50. முதல் கதையே மிக அசத்தலாக இருக்கு.பரிசு பெற்றது மற்றும் புத்தக வெளியீடு பற்றிய குறிப்புகளை மிக அருமையாக சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள் ஐயா.
    மீதி கதைகளையும் படிக்க மிக ஆவாலாக காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  51. RAMVI said...
    //முதல் கதையே மிக அசத்தலாக இருக்கு.//

    தங்களின் அசத்தலான பின்னூட்டத்திற்கு நன்றிகள்.

    //பரிசு பெற்றது மற்றும் புத்தக வெளியீடு பற்றிய குறிப்புகளை மிக அருமையாக சொல்லியிருக்கீங்க.//

    அப்படியா! மிகவும் சந்தோஷம் மேடம்.

    //வாழ்த்துக்கள் ஐயா.//

    மிக்க நன்றி

    //மீதி கதைகளையும் படிக்க மிக ஆவாலாக காத்திருக்கிறேன்.//

    மதுர[மான]கவியைக் காக்க வைக்க எனக்கும் மனம் இடம் தராது. இந்த மாதத்திற்குள் 200 ஆவது பதிவை எட்டிவிடத் தான் திட்டமிட்டுள்ளேன்.

    அடுத்தடுத்து இந்த டிஸம்பரிலேயே பல கதைகள் வர வாய்ப்பு உண்டு.

    பார்ப்போம். பிராப்தம் எப்படியோ!

    அந்த உங்களின் பதிவுப்படத்தில் உள்ள ரெங்கமன்னாரும்,
    ஆண்டாளும் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்களோ! ;))))

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  52. முத்தானதொரு சிறுகதை..

    அப்பா அம்மாவை இழந்தாலும் அன்பு அரசாளும் அரண்மனையில் அரசகுமாரியாக வளர்வாள் அந்தக் குழந்தை..

    பதிலளிநீக்கு
  53. அமைதிச்சாரல் said...
    //முத்தானதொரு சிறுகதை..

    அப்பா அம்மாவை இழந்தாலும் அன்பு அரசாளும் அரண்மனையில் அரசகுமாரியாக வளர்வாள் அந்தக் குழந்தை..//

    அமைதி[யான மழை]ச்சாரல் ஆக வருகை தந்து, முத்தானதொரு மழைத்துளி போல பாராட்டியுள்ளதற்கு என் நன்றிகள், மேடம்.

    அன்பு மட்டும் இருந்தால் போதும் குடிசையே அரண்மனையாகும், அதில் உள்ள ஏழைக்குழந்தையே கூட அரசகுமாரியாவாள் என்று சொல்லும் தங்கள் கருத்து என்னை மிகவும் கவர்வதாக உள்ளது. நன்றி. ;)))))

    பதிலளிநீக்கு
  54. The very first story, that too got published by the famous Vanathi Padhippagam, and on top of it, with a foreword from Rishaban! What else a budding writer would want? No wonder you cherish that experience.
    For me, it has been a pleasure to read your stories which possess the old-world charm that is rarely seen or felt around us these days.

    My best wishes. May many more laurels be yours!

    பதிலளிநீக்கு
  55. D. Chandramouli said...
    //The very first story, that too got published by the famous Vanathi Padhippagam, and on top of it, with a foreword from Rishaban! What else a budding writer would want? No wonder you cherish that experience.
    For me, it has been a pleasure to read your stories which possess the old-world charm that is rarely seen or felt around us these days.

    My best wishes. May many more laurels be yours!//

    Yours is Very Sweet & Encouraging message, Sir.

    Yes, I feel Very Very Happy in reading your kind message.

    Thanks for your kind Greetings Sir.

    Affectionately yours,
    vgk

    பதிலளிநீக்கு
  56. அந்த 3000த்தினை குழந்தையின் படிப்புச் செலவுக்கு பயன் படுத்தலாம் எனக் கூறும் மரகதம் அந்த நிமிடமே தாயுமானவள் ஆகி விடுகிறாள். /

    மிக இயல்பான இந்த கதையை
    தினமலர்-வாரமலரில் தங்கள் புகைப்படம் மற்றும் சுயவிபரக்குறிப்புகளுடன் வாசித்தது நினைவில் நிழலாடுகிறது..

    தங்கள் வலைப்பூ பக்கம் வந்தபோது மிகவும் பரிச்சயமான நடையழகு கண்டு வியந்ததும் உண்டு..

    ஹாரத்தி சுற்றி மனம் நிறைந்த வரவேற்பு தருகிறோம் தங்களின் அருமையான படைப்புகளுக்கு...

    ஆத்மார்த்தமான பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  57. வை.கோ சார்! Manakkal சார்!

    Manakkal அவர்கள் குறிப்பிட்டுள்ள 'கண்ணன்' பத்திரிகை ஆசிரியர் அமரர் ஆர்வி பற்றி எனது பதிவில் 'எழுத்தாளர்' பகுதியில் எழுதியுள்ளேன்.

    முடிந்தால் வாசித்துப் பார்க்க வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  58. முதல் கதை என்றவுடன் ஆச்சிரியப்பட்டேன். நன்றாக உள்ளது. இன்னும் எழுதுங்க சார்! நன்றி!
    இதையும் படிக்கலாமே:
    "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

    பதிலளிநீக்கு
  59. முதல் கதையிலேயே பரிசு பெறுவதைப் போல பேரின்பம் ஒரு எழுத்தாளனுக்கு வேறு எதில் இருக்கப் போகின்றது. முதல் கதையே அருமையாக இருக்கும் பொது மற்றவற்றை சொல்லவே தேவை இல் லை. முனியாண்டி பற்றிச் சொல்லிச் சென்று அவர் மனைவிக்குத் தலைப்புச் சொன்ன விதம் ஒரு திருப்புமுனை ஆக இருக்கின்றது. உங்கள் அனைத்துக் கதைகளையும் வாசிக்கும் சந்தர்ப்பத்தைத் தந்தமைக்கு மிக்க நன்றி. உங்கள் அனைத்து ஊக்கத்திற்கும் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  60. உங்களின் சிறந்த சிறுகதை தொகுதி கண்டேன் மிகவும் சிறப்பு உண்மையில் இப்படி தொடர் ஆர்வமாக இந்த சமூகத்திற்கு நல்ல அரிய கருத்துகளை படைத்து எங்களுக்கு நல்ல வழி காட்டியாக இருக்க வேண்டுகிறேன் பாராட்டுகள் .

    பதிலளிநீக்கு
  61. எதிர்பார்த்தபடி குழந்தை பலூன்காரருக்கு சொந்தமானதில் மகிழச்சி.அந்த பணத்தை குழந்தையின் படிப்பிற்காக வைத்துக்கொள்ள முன்வந்ததில் அந்த குழந்தை நல்லதொரு இடத்திற்கு வந்துள்ளதில் மேலும் மகிழ்ச்சி.நல்ல கதை.

    இந்த கதைக்கு பின் இவ்வளவு சுவாரஸ்யமான விசியங்களும்,உங்கள் உழைப்பும்,மனதும் எழுத்து திறமையும் பற்றி வருகை தந்த அனைவரும் அறிந்துகொண்டோம்.

    உங்கள் எழுத்துப் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள் சார்.

    பதிலளிநீக்கு
  62. இராஜராஜேஸ்வரி said...
    //அந்த 3000த்தினை குழந்தையின் படிப்புச் செலவுக்கு பயன் படுத்தலாம் எனக் கூறும் மரகதம் அந்த நிமிடமே தாயுமானவள் ஆகி விடுகிறாள். //

    வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
    மேலும் ஏழையான அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு பலநாட்களாக சேமித்த தொகையல்லவா அது! அதை எடுத்து இந்தக் குழந்தையை பள்ளியில் சேர்க்க செலவழிக்க வேண்டும் என்றால், எவ்வளவு ஒரு பரந்த நல்ல மனம் வேண்டும்! மனதளவில் பெரும் செல்வந்தர்கள் அல்லவா!! ;))))

    //மிக இயல்பான இந்த கதையை
    தினமலர்-வாரமலரில் தங்கள் புகைப்படம் மற்றும் சுயவிபரக்குறிப்புகளுடன் வாசித்தது நினைவில் நிழலாடுகிறது..//

    இதை என்னால் கொஞ்சம் நம்ப முடியாமல் உள்ளது. ஆனாலும் “வாசிப்பது தான் சுவாசிப்பது; வாசிப்பவர்களே சுவாசிப்பவர்கள்” என்று தங்களில் வலைப்பூவின் கொண்டையிலேயே கொட்டை எழுத்துக்களில் தாங்கள் போட்டுள்ளதால், என்னால் நம்பாமலும் இருக்க முடியவில்லை.

    //தங்கள் வலைப்பூ பக்கம் வந்தபோது மிகவும் பரிச்சயமான நடையழகு கண்டு வியந்ததும் உண்டு..//

    அதே பரிச்சயமான உணர்வுகள் தான் என்னிடமும் உங்கள் வலைப்பூப்பக்கம் வரும்போது ஏற்படுகிறது. ஏதோ ஜன்ம ஜன்மமாகப் பழகியவர்கள் போல ஓர் தனி ஈடுபாடு.

    //ஹாரத்தி சுற்றி மனம் நிறைந்த வரவேற்பு தருகிறோம் தங்களின் அருமையான படைப்புகளுக்கு...//

    இந்த இடத்தில் தாங்களே “தாயுமானவள்” ஆகத் தெரிகின்றீர்கள் என் கண்களுக்கு. எவ்வளவு ஒரு வாத்சல்யத்துடன் கூடிய வார்த்தைகள் இவை. மனது ஜில்லிட்டுப்போகிறது.

    //ஆத்மார்த்தமான பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..//

    மனதிற்கு இதம் தந்திடும் செந்தாமரையை மீண்டும் மலரச்செய்ததற்கு ஆத்மார்த்தமான நன்றிகள், மேடம்.

    பிரியமுள்ள vgk

    பதிலளிநீக்கு
  63. ஜீவி said...
    //வை.கோ சார்! Manakkal சார்!

    Manakkal அவர்கள் குறிப்பிட்டுள்ள 'கண்ணன்' பத்திரிகை ஆசிரியர் அமரர் ஆர்வி பற்றி எனது பதிவில் 'எழுத்தாளர்' பகுதியில் எழுதியுள்ளேன்.

    முடிந்தால் வாசித்துப் பார்க்க வேண்டுகிறேன்.//

    கட்டாயம் போய்ப் படித்து விட்டு, என் கருத்துக்களையும் பதிவு செய்கிறேன், ஐயா. தகவலுக்கு மிக்க நன்றி. vgk

    பதிலளிநீக்கு
  64. திண்டுக்கல் தனபாலன் said...
    //முதல் கதை என்றவுடன் ஆச்சிரியப்பட்டேன். நன்றாக உள்ளது. இன்னும் எழுதுங்க சார்! நன்றி!//


    இன்னும் எழுத முடிந்தவரை முயற்சிப்பேன்.

    ஆச்சர்யமான முறையில் நன்றாக எழுதியுள்ள தங்கள் கருத்துக்களுக்கு, என் நன்றி, சார்.

    //இதையும் படிக்கலாமே:
    "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"//

    நேரமின்மையால் என்னால் பலரின் வலைப்பக்கம் செல்லமுடியாமல் உள்ளது என்பதை மிகுந்த வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நேரம் கிடைத்து உடலும் உள்ளமும் ஒத்துழைக்கும் போது கட்டாயம் வர முயற்சிப்பேன்.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  65. இது தான் தாய்மை. இயற்கையிலேயே மரகதத்திடம் இருக்கும் போது செயற்கையில் ஏன்?!

    மனசு முழுக்க பலூன் மாதிரி லேசாகி உயர உயர பறக்குது. உங்க கதைகளோட அருமையே அது தானே!

    பதிலளிநீக்கு
  66. சந்திரகௌரி said...
    //முதல் கதையிலேயே பரிசு பெறுவதைப் போல பேரின்பம் ஒரு எழுத்தாளனுக்கு வேறு எதில் இருக்கப் போகின்றது. முதல் கதையே அருமையாக இருக்கும் பொது மற்றவற்றை சொல்லவே தேவை இல் லை. முனியாண்டி பற்றிச் சொல்லிச் சென்று அவர் மனைவிக்குத் தலைப்புச் சொன்ன விதம் ஒரு திருப்புமுனை ஆக இருக்கின்றது. உங்கள் அனைத்துக் கதைகளையும் வாசிக்கும் சந்தர்ப்பத்தைத் தந்தமைக்கு மிக்க நன்றி. உங்கள் அனைத்து ஊக்கத்திற்கும் பாராட்டுக்கள்//

    தங்களின் அன்பான வருகையும், ஆதரவான கருத்துக்களும் என்னை மிகவும் உற்சாகப்படுத்துவதாக உள்ளது, மேடம். மிக்க நன்றி. vgk

    பதிலளிநீக்கு
  67. மாலதி said...
    //உங்களின் சிறந்த சிறுகதை தொகுதி கண்டேன் மிகவும் சிறப்பு உண்மையில் இப்படி தொடர் ஆர்வமாக இந்த சமூகத்திற்கு நல்ல அரிய கருத்துகளை படைத்து எங்களுக்கு நல்ல வழி காட்டியாக இருக்க வேண்டுகிறேன் பாராட்டுகள்.//

    தங்கள் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

    பதிலளிநீக்கு
  68. thirumathi bs sridhar said...
    //எதிர்பார்த்தபடி குழந்தை பலூன்காரருக்கு சொந்தமானதில் மகிழச்சி.அந்த பணத்தை குழந்தையின் படிப்பிற்காக வைத்துக்கொள்ள முன்வந்ததில் அந்த குழந்தை நல்லதொரு இடத்திற்கு வந்துள்ளதில் மேலும் மகிழ்ச்சி.நல்ல கதை.//

    உங்கள் ஊரிலிருந்து புறப்பட்டு எங்கள் ஊருக்கு வந்து சேர்ந்துள்ள ஒரு மழலைக் குழந்தையைப் பற்றிய கதையாகையால், உங்களிடமிருந்து ஏதும் கருத்துக்கள் வரவில்லையே எனக் காத்திருந்தேன்.

    //இந்த கதைக்கு பின் இவ்வளவு சுவாரஸ்யமான விஷயங்களும்,உங்கள் உழைப்பும்,மனதும் எழுத்து திறமையும் பற்றி வருகை தந்த அனைவரும் அறிந்துகொண்டோம்.//

    அடடா! இதுவரை இரகசியமாகவே வைத்திருந்தேனே! இப்போது வெளியிடும்படி ஆகிவிட்டதே!!

    //உங்கள் எழுத்துப் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள் சார்.//

    ஒருவருக்குள் ஒருவரின் வாழ்த்துக்கள் என்னைப் புல்லரிக்கச் செய்து விட்டன, மேடம்.

    மிக்க நன்றி, மேடம்.

    பேரன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  69. Shakthiprabha said...
    //இது தான் தாய்மை. இயற்கையிலேயே மரகதத்திடம் இருக்கும் போது செயற்கையில் ஏன்?!//

    சூப்பரா வரிகளைக் கொடுத்து வீழ்த்தி விட்டீர்கள், மேடம். இது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. Touching Line with appropriate words. Thanks for the same. நச்சென்று உள்ளது.

    //மனசு முழுக்க பலூன் மாதிரி லேசாகி உயர உயர பறக்குது. உங்க கதைகளோட அருமையே அது தானே!//

    உங்கள் பாராட்டுக்கள் உண்மையிலேயே மிகவும் வித்யாசமானவை. நான் மிகவும் ரஸிப்பவை. அது தான் உங்களின் தனித்திறமையும் கூட. வாழ்த்துக்கள்.

    ஷக்தி தரும் ஷக்தி வாய்ந்த ஊக்கத்தால் புதிய ஷக்தி பிறக்குதே! ;))))) மன மகிழ்ச்சியில் நானும் பலூனாகி இப்போது உயர உயரப் பறப்பதுபோல உணர்கிறேன்.

    அன்பான வருகைக்கும், அசத்தலான உற்சாகமூட்டும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.

    பிரியமுள்ள vgk

    பதிலளிநீக்கு
  70. முதல் கதையிலிருந்தே உங்கள் வெற்றிப் பயணம் துவங்கி விட்டது!
    அவ்வளவாய் பழக்கமில்லாத நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்.. எவ்வளவு மிஸ் பண்ணியிருக்கிறேன்..
    சிலருக்கு சரஸ்வதி ஸ்பூனிலும் சிலருக்கு கரண்டியிலும் சிலருக்கு டம்ளரிலும் கொடுத்து இருக்கிறாள் வித்தையை என்று பாதி கேலியாக - பாதி பொறாமையாகச் சொல்வேன். உங்களுக்கு சொம்பில் கொடுத்து விட்டாள்!
    காத்திருக்கிறோம்.. உங்கள் எழுத்தில் திளைக்க.. ரசிக்க..

    பதிலளிநீக்கு
  71. """"இந்தப்புள்ளைய நல்லபடியா வளர்த்து ஆளாக்கினா அதுவே போதுமய்யா! அந்தப்பணத்தை அப்படியே எடுத்துட்டுப் போயீ, பக்கத்துல உள்ள இஸ்கூலிலே, இதை சேர்த்துப்பாங்களான்னு, விசாரித்துட்டு வாய்யா” என்றாள் மரகதம்.'''''

    குழந்தையை வளர்க்கவேண்டும் என்ற எண்ணத்தை விட அதை படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் மரகதத்திற்கு வந்ததே இந்த கதையின் சிறப்பு. அமர்க்களமான கதையை உங்களின் களத்தில் கண்டு ரசித்தது ஆனந்தம் அய்யா...........

    பதிலளிநீக்கு
  72. ரிஷபன் said...
    //முதல் கதையிலிருந்தே உங்கள் வெற்றிப் பயணம் துவங்கி விட்டது!//

    Dear & Respected Sir,

    என் வெற்றிப்பயணத்தின் முதல் வெற்றி மட்டும் கடவுள் செயலால் நடந்தது.

    அதன் பிறகு பெற்ற வெற்றிகள் கடவுள் க்ருபையுடன் கூட, தாங்கள் எனக்குத் தந்த ஆக்கமும் ஊக்கமும் தான், சார்.

    பதிலளிநீக்கு
  73. @ ரிஷபன்
    //அவ்வளவாய் பழக்கமில்லாத நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்.. எவ்வளவு மிஸ் பண்ணியிருக்கிறேன்..//

    நானும் அதேபோல் தான் சார். நீங்கள் ஒரு புகழ் வாய்ந்த எழுத்தாளர் என்பது எனக்குத் தெரிய வந்ததும் உங்களுடன் எப்படியாவது பழக வேண்டும் என நானும் நினைத்ததுண்டு.

    ஆனால் உங்களிடம் பழகவும் என்னை அறிமுகப்படுத்திக்கொள்ளவும் மிகச்சாதாரணமானவனான எனக்கு ஏதோவொரு தயக்கம். கூச்சம், அன்று.

    உங்களுக்கே தெரியும் நான் ஒரு RESERVED TYPE ஆசாமி என்பதும், எழுதும் அளவுக்கு என்னால் FREE ஆக யாரிடமுமே உடனடியாக பேசிவிடவோ பழகிவிடவோ முடியாது என்பதும்.

    நன்றாகப் பழக்கம் ஏற்பட்ட பிறகே மிகவும் Casual ஆக Free ஆக ஜாலியாகப் பேசுவேன். அது என் பிறவி குணம். மாற்ற முடியாதது.

    தொடரும்......

    பதிலளிநீக்கு
  74. @ ரிஷபன்

    ஒரு சம்பவம் எனக்கு நல்ல நினைவு உள்ளது, சார்.

    தங்களின் “செங்கிப்பட்டிக்கு ரெண்டு டிக்கெட்” கதை கல்கியில் வெளியான சமயம். அப்போதெல்லாம் நான் கல்கி வாங்கிப்படிப்பது கிடையாது.

    Mr. G.ஜயராமன் அவர்களிடம் [Manager/Finance/Banks] நான் கொஞ்சம் நாட்கள் வேலை பார்த்த போது, உங்களை எல்லோரும் கைகுலுக்கிப் பாராட்டினார்கள். எதற்கு என்று வேறொருவரிடம் நான் அப்பாவித்தனமாகக் கேட்டபோது, உங்கள் கதை ஏதாவது பத்திரிகையில் வெளியாகி இருக்கும், என்று மிகவும் அசால்டாகச் சொன்னார்.

    Mr.G.J. அவர்களும் உங்களுக்குக் கை கொடுத்துப் பாராட்டினார். பிறகு அவருக்கு அந்தக்கதை வந்த கல்கியை கொண்டுவந்து தருவதாக நீங்கள் சொல்லிப்போனீர்கள்.

    அப்போது கூட ”செங்கிப்பட்டிக்கு நீங்கள் நிஜமாகவே போய் வந்திருக்கிறீர்களா ரிஷபன்” என்று அவர் [ Mr. G.J ]உங்களிடம் வினவினார்.

    அதற்கு நீங்கள் “இல்லை சார், திருச்சி தஞ்சாவூர் ரூட்டில் உள்ளது என்று தெரியும். சும்மா கதைக்கு தலைப்பாக அதைத் தேர்ந்தெடுத்தேன், அவ்வளவு தான்” என்றீர்கள்.

    பிறகு நீங்கள் கல்கியை அவருக்குக் கொடுத்தீர்களா, அவர் படித்தாரா என்பது எனக்குத் தெரியாது.

    அவரிடம் கேட்கவோ, உங்களிடம் கேட்கவோ நான் மிகவும் தயங்கினேன். ஆனால் அந்தக் கல்கியில் தாங்கள் என்னதான் அப்படி எழுதியிருக்கிறீர்கள் என்று பார்க்கணும் என்ற ஆவல் அதிகமாக இருந்தும், என்னை நானே கட்டுப்படுத்திக்கொண்டு இருந்து விட்டேன்.

    எந்த வாரக்கல்கி போன்ற விபரங்கள் சரிவரத் தெரியாததால் கடையிலும் கேட்டு வாங்க முடியவில்லை என்னால்.

    தொடரும்.........

    பதிலளிநீக்கு
  75. @ ரிஷபன்


    இந்த என் கூச்ச சுபாவத்தால் நான் வாழ்க்கை இழந்தவை ஏராளம் ஏராளம். அதில் விலைமதிப்பற்ற உங்கள் நட்பை அக்டோபர் 2005 க்கு முன்பு நான் பெறமுடியாமல் போனதும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

    பிறகு நாம் 2006 முதல் 2008 வரை 3 முழு ஆண்டுகள் மட்டுமே, அன்றாடம் அலுவலகத்திலும், கேண்டீன் போன்ற பொது இடங்களிலும் சந்தித்துப்பேசிப் பழக முடிந்தது.

    அதற்கும் இந்த என் பரிசுபெற்ற முதல்கதையான “தாயுமானவள்” தான் ஒரு பாலமாக அமைந்தது.

    தொடரும் .............

    பதிலளிநீக்கு
  76. @ ரிஷபன்
    அந்த கதை தினமலர்-வாரமலரில் வெளியானதும், தாங்களாகவே தான், நண்பர்கள் கிருஷ்ணா, ஒயிட் நடராஜன், Costing நடராஜன் போன்றவர்களை என் அலுவலக இருக்கைக்கே கூட்டி வந்து எனக்குக் கைகொடுத்துப் பாராட்டினீர்கள். தொடர்ந்து எழுத வேண்டும் என்று அறிவுருத்தினீர்கள்.

    தாங்கள் கொடுத்த உற்சாகமும், தொடர் நச்சரிப்புமே அடுத்த கதையான “உடம்பெல்லாம் உப்புச்சீடை” நான் எழுத மிகவும் உதவியாக இருந்தன.

    அதைப்படித்து விட்டு தாங்கள் அடைந்த உண்மையான மகிழ்ச்சியும், பலரிடம் அதைக்காட்டி நீங்கள் மகிழ்ந்ததும் எனக்கு நன்றாகவே நினைவில் உள்ளன.

    பிறகு ”அதில் நல்ல ஒரு FLOW இருப்பதாகவும் ஆனால் சற்றே மிகப் பெரிய கதையாக எழுதி விட்டீர்கள்” என்றும் என்னிடம் சொல்லி, அதை அப்படியே என் மனைவி பெயரில் “மங்கையர் மலருக்கு” அனுப்பச் சொன்னதும், தாங்கள் தானே. அதை என்னால் எப்படி மறக்க முடியும்?

    மிகப்பெரிய ஆச்சர்யம் என்னவென்றால், தங்கள் ஆலோசனைப்படி என்னால் மங்கையர் மலருக்கு அனுப்பப்பட்ட அந்தக்கதை, உடனடியாக அடுத்த மாத இதழிலேயே ஒரு எழுத்தோ அல்லது வார்த்தையோ கூட நீக்கப்படாமல் (without editing of even a single word or letter) நெடுங்கதையாக அப்படியே வெளியிடப்பட்டு என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.

    தொடரும்.........

    பதிலளிநீக்கு
  77. @ ரிஷ்பன்

    அதன் பிறகும் தாங்கள் ஒவ்வொரு நாளும் என்னிடம் வந்து, மேலும் மேலும் எழுதச்சொல்லி தூண்டுகோல் போட்டுக்கொண்டே இருந்தீர்கள்.

    நாகர்கோயிலிலிருந்து வெளிவந்த “மனம் ஒளிர்ந்திட” + ”மனம் மலர்ந்திட” மாத இதழ்களில் தொடர்ச்சியாக என் கதைகள் இடம் பெற வழி வகுத்துக் கொடுத்தீர்கள்.

    நாம் இருவரும் பிறகு தொடர்ந்து, நிலாச்சாரல் என்ற மின் இதழ் ஒன்றில் ரொம்ப நாட்கள் எழுதி வந்தோம். அது சம்பந்தமான ஒரு எழுத்தாளர் மீட்டிங்குக்கு சென்னைக்கும் சேர்ந்தே நாம் சென்று வந்தோம்.

    அவை பசுமையான நினைவலைகள் அல்லவா!

    தொடரும்............

    பதிலளிநீக்கு
  78. @ ரிஷபன்
    அதுமட்டுமா! என்னை தொடர்ந்து எழுத அவவ்ப்போது உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தீர்கள். தங்களின் பல சிறுகதைத் தொகுப்புக்களை எனக்குப் பரிசாக அளித்தீர்கள்.

    என்னையும் சிறுகதைத் தொகுப்பு வெளியிடுமாறு வற்புருத்தினீர்கள்.
    மொத்தத்தில் குடத்திலிட்ட விளக்காக யாருக்குமே தெரியாமல் இருந்த என்னை, பலருக்கும் தெரியச்செய்து விட்டீர்கள்.

    எனக்கு BLOG பற்றி எடுத்துக்கூறி, இன்று அதிலும் என்னை எழுத வைத்துள்ளதும் தாங்கள் தானே! ;)))))

    தொடரும்.........

    பதிலளிநீக்கு
  79. @ ரிஷபன்


    என் பணி ஓய்வுக்குப்பின் உங்களுடனான, என் அன்றாடத் தொடர்புகள் அறுந்து விட்டதில் எனக்கு மிகவும் வருத்தமே. இருப்பினும் தொலைபேசி, வலைப்பதிவு மூலம் நாம் பேசவாவது முடிவதில் ஒரு பெரிய திருப்தியுள்ளது.

    தொடரும்.........

    பதிலளிநீக்கு
  80. @ ரிஷபன்

    //சிலருக்கு சரஸ்வதி ஸ்பூனிலும் சிலருக்கு கரண்டியிலும் சிலருக்கு டம்ளரிலும் கொடுத்து இருக்கிறாள் வித்தையை என்று பாதி கேலியாக - பாதி பொறாமையாகச் சொல்வேன். உங்களுக்கு சொம்பில் கொடுத்து விட்டாள்!//

    சரஸ்வதியின் அருளைக் குடம் குடமாக அண்டா அண்டாவாகப் பெற்றுள்ள தாங்கள் சொல்வதால், மகிழ்வுடன் அடக்கத்துடன் இதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

    ஆனால் என் எல்லாப்புகழுக்கும் பின்னணியில் நீங்கள் தான் இருந்துள்ளீர்கள் என்பதே என் அபிப்ராயம். அது தான் உண்மையும் கூட. எழுதியது நானாக இருப்பினும், என்னை எழுதச்சொல்லி அவ்வப்போது ஊக்கம் கொடுத்தது தாங்கள் தானே! ;)))))

    தங்களைப்போல அன்புடன் என்னை அவ்வப்போது தூண்டி விடுபவர்கள் இன்று என் அருகில் இல்லாததே, என் இன்றைய தொய்வுக்குக்காரணம்.

    ஏதோ இதுவரை கிடைத்துள்ள வெற்றிகளை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன். அதை அவ்வப்போது, வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் என் பதிவினில் பகிர்ந்து கொள்கிறேன்.

    //காத்திருக்கிறோம்.. உங்கள் எழுத்தில் திளைக்க.. ரசிக்க..//

    அன்பும், பண்பும், அடக்கமும் ஒருங்கே பெற்ற தங்களை என் மானஸீக குருநாதராக ஏற்று, எப்போதும் என் மனதில் உங்களை நினைத்து பெருமைப்பட்டு வருவதால், ஏதோ வண்டி ஓடிவருகிறது.

    தங்களின் சிறுகதைத்தொகுப்பு நூல்களுடன் ஆரம்பித்து ஒரு குட்டி லைப்ரரியே வீட்டில் வைத்துள்ளேன். அவ்வப்போது எடுத்துப்படித்து மகிழ்வதுண்டு.

    என்றும் தங்களின் அன்பான நினைவலைகளுடன்,

    பிரியமுள்ள உங்கள் vgk

    பதிலளிநீக்கு
  81. A.R.ராஜகோபாலன் said...
    """"இந்தப்புள்ளைய நல்லபடியா வளர்த்து ஆளாக்கினா அதுவே போதுமய்யா! அந்தப்பணத்தை அப்படியே எடுத்துட்டுப் போயீ, பக்கத்துல உள்ள இஸ்கூலிலே, இதை சேர்த்துப்பாங்களான்னு, விசாரித்துட்டு வாய்யா” என்றாள் மரகதம்.'''''

    //குழந்தையை வளர்க்கவேண்டும் என்ற எண்ணத்தை விட அதை படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் மரகதத்திற்கு வந்ததே இந்த கதையின் சிறப்பு. அமர்க்களமான கதையை உங்களின் களத்தில் கண்டு ரசித்தது ஆனந்தம் அய்யா...........//


    தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான ரசனைக்கும், ஆனந்தமான கருத்துக்களுக்கும் நன்றி, சார்.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  82. //மம்மி .... மம்மி .... ஸாரி ... ஸாரி ... ஆண்ட்டீ ... ஆண்ட்டீ ...//


    அந்தத் தம்பதியர் முடிவெடுக்கும் முன் சரியான முடிவை குழந்தை எடுத்து விட்டது போலும் .


    யதார்த்தமான வார்த்தைகளில் ஆழ்ந்தோடிய சிந்தனைகள்.


    வானதி பதிப்பகத்தாரின் மகத்துவம் இப்பொழுது புரிகிறது.


    வாழ்த்துக்கள் பல .

    பதிலளிநீக்கு
  83. கணேஷ் said...
    //மம்மி .... மம்மி .... ஸாரி ... ஸாரி ... ஆண்ட்டீ ... ஆண்ட்டீ ...//

    அந்தத் தம்பதியர் முடிவெடுக்கும் முன் சரியான முடிவை குழந்தை எடுத்து விட்டது போலும் .

    யதார்த்தமான வார்த்தைகளில் ஆழ்ந்தோடிய சிந்தனைகள்.

    வானதி பதிப்பகத்தாரின் மகத்துவம் இப்பொழுது புரிகிறது.

    வாழ்த்துக்கள் பல .//

    அன்புள்ள கணேஷ்.
    உன் வருகையும் கருத்துக்களும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றன.

    மற்ற விபரங்கள் சில மெயில் மூலம் அனுப்பியுள்ளேன்.

    பிரியமுள்ள vgk

    பதிலளிநீக்கு
  84. 'கண்ணன்' பத்திரிகை ஆசிரியர் அமரர் ஆர்வி பற்றி, சொன்னபடியே உடனே படித்து தங்கள் கருத்துக்களையும் அந்தப் பகுதியில் பதிந்தமைக்கு நன்றி. 'இதெற்கெல்லாம் நன்றி எதற்கு'என்று தோன்றலாம். சும்மா பேச்சுக்காக என்று ஒன்று இல்லாமல், படிப்பதில் உள்ள நிறைய சிரமங்களுக்கிடையே அதைச் செயல்படுத்துகிறீர்கள், பாருங்கள்; அதற்காகத்தான்.

    பதிலளிநீக்கு
  85. குழந்தை, மரகதம் முனியாண்டியிடம் சேர்ந்தது சரியே..எல்லா கதைகளும் சுபமாகவே முடிவதில் மகிழ்ச்சி. தொடர்ந்து இது போலவே தாருங்கள்.

    முதல் கதையே ஆயிரக்கணக்கான கதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு பெற்று புத்தகமாகவும் வெளிவந்ததில் மகிழ்ச்சி சார்.கடவுள் அருளால் மேலும் பல புத்தகங்கள் வெளிவர வாழ்த்துகள்.

    ரிஷபன் சாரின் வாழ்த்துரையும் அழகாக இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
  86. வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...
    //அற்புதம். வாழ்த்துக்கள்.//

    Most Respected Madam,

    சமீபத்திய சாலை விபத்தொன்றில் கால் பாதத்தில் காயம் ஏற்பட்டு, அதனால் மிகுந்த சிரமங்கள் பட்டுள்ள, தாங்கள், அத்துடனேயே இந்த என் பதிவுக்கு வருகை தந்து வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது, எனக்கு மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.

    மிக்க நன்றி, மேடம்.

    [இப்போது கொஞ்சம் சரியாகி, ஓரளவு சிரமம இல்லாமல் நடக்க முடிந்திருக்கும் என்று நம்புகிறேன். Please take care, Madam.]

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  87. ஜீவி said...
    //'கண்ணன்' பத்திரிகை ஆசிரியர் அமரர் ஆர்வி பற்றி, சொன்னபடியே உடனே படித்து தங்கள் கருத்துக்களையும் அந்தப் பகுதியில் பதிந்தமைக்கு நன்றி. 'இதெற்கெல்லாம் நன்றி எதற்கு'என்று தோன்றலாம். சும்மா பேச்சுக்காக என்று ஒன்று இல்லாமல், படிப்பதில் உள்ள நிறைய சிரமங்களுக்கிடையே அதைச் செயல்படுத்துகிறீர்கள், பாருங்கள்; அதற்காகத்தான்.//

    அன்புள்ள ஐயா, வணக்கம்.
    தங்கள் மேல் எனக்கு எப்போதுமே ஒரு தனி பிரியமும், மரியாதையும் உண்டு.

    தங்களிடம் மட்டுமல்ல யாரிடமும் நான் செய்வதாக ஒத்துக்கொண்டு [If Commitment is given] விட்டால் அதை செய்யாமல் இருக்க மாட்டேன்.

    [லேஸில் எதையும் செய்வதாக ஒத்துக்கொள்ளவும் மாட்டேன் என்பது வேறு விஷயம்]

    உங்களின் வலைத்தளத்தில் பல்வேறு எழுத்தாளர்களைப்பற்றி கூறியிருப்பதை அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது படித்து மகிழ்வதுண்டு.

    என் மனதில் ஒரு பத்தி நன்கு பதிந்த பிறகே அடுத்த பத்திக்கு நான் செல்வேன். மனதில் பதிய மறுத்தாலோ, குறுக்கீடுகள் ஏதும் ஏற்பட்டாலோ, அத்தோடு நிறுத்தி விடுவேன். இதனால் முழுவதுமாகப் படித்து தங்கள் பதிவுகளுக்குப் பின்னூட்டம் இட முடியாமலும் போனதுண்டு. தாங்கள் சமீபத்தில் எழுதிய தொடர்கதைக்கும் அப்படித்தான் ஆகிவிட்டது. தொடர்ந்து அதை படிக்க முடியாமல் போய்விட்டது.

    நேரமின்மை, உடல்நலமின்மை, மன நிம்மதிக்குறைவுகள், மின்தடைகள், குடும்பத்தினரின் குறுக்கீடுகள், எனது சொந்த படைப்புகளை வெளியிடும் முயற்சிகள் என தாங்கள் சொல்வது போல, படிப்பதில் எவ்வளவோ சிரமங்கள் இருக்கத்தான் உள்ளன.

    மிகவும் வாசிப்பு அனுபவம் வாய்ந்த தங்களின், கருத்துக்கள் எனக்குக் கிடைக்கும் போது, அதை மிகுந்த கவனத்துடன் பலமுறை வாசித்து மகிழ்வேன். அவை தந்தி போல ஏதோ ஓரிரு வார்த்தைகளில், கடமைக்காக எழுதுவதாக இருக்காது.

    முழுவதும் வாசித்து அனுபவித்து நிறைகளைச் சுட்டிக் காட்டி, குறைகளை நேரிடையாகக் கூறாமல், இப்படியிருக்கலாம் அப்படியிருக்கலாம் என்பது போல மிகவும் நாசூக்காக எடுத்துச் சொல்லும் அழகு ரஸிக்கத்தகுந்ததாகவே இருக்கும்.

    உங்களிடமிருந்து நான் இதுவரைக் கற்றவைகளும், இன்னும் கற்க வேண்டியவையும் ஏராளம் உள்ளன.

    மிக்க நன்றி, ஐயா!

    நமஸ்காரங்களுடன் vgk

    பதிலளிநீக்கு
  88. கோவை2தில்லி said...
    //குழந்தை, மரகதம் முனியாண்டியிடம் சேர்ந்தது சரியே..எல்லா கதைகளும் சுபமாகவே முடிவதில் மகிழ்ச்சி. தொடர்ந்து இது போலவே தாருங்கள்.//

    மிக்க நன்றி, மேடம். முயற்சிக்கிறேன்.

    //முதல் கதையே ஆயிரக்கணக்கான கதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு பெற்று புத்தகமாகவும் வெளிவந்ததில் மகிழ்ச்சி சார்.//

    எனக்கும் மகிழ்ச்சியே!

    //கடவுள் அருளால் மேலும் பல புத்தகங்கள் வெளிவர வாழ்த்துகள்.//

    இதில் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.

    இதுவரை வெளியிட்டுள்ள என் மூன்று சிறுகதைத் தொகுப்பு நூலகளுமே, நான் என் ஆத்ம திருப்திக்காக மட்டுமே வெளியிட்டவை.

    ஒவ்வொன்றையும் 300 பிரதிகள் வீதம் நானே விலைக்கு வாங்கி, என் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும், என் கையொப்பத்துடன், அன்பளிப்பாக மட்டுமே கொடுத்துள்ளேன்.

    இதில் வியாபார நோக்கமோ பணம் செய்ய வேண்டும் என்ற ஆசையோ எனக்குத் துளியும் கிடையாது.

    தாங்கள் சொல்வது போல கடவுள் அருளும் பிராப்தமும் இருந்தால் மேலும் ஒரே ஒரு தொகுப்பு நூல் மட்டுமாவது வெளியிட வேண்டும் என்ற ஆசையும் அடிமனதில் உள்ளது. பார்ப்போம்.

    //ரிஷபன் சாரின் வாழ்த்துரையும் அழகாக இருக்கின்றது.//

    இதை நாம் நேரில் சந்திக்க இருக்கும் 12.12.2011 அன்று திரு. ரிஷபன் சாரிடம் நீங்களே, என் முன்னிலையில் சொல்லி விடுங்கள். WELCOME TO YOU ALL TO OUR TIRUCHIRAPALLI.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  89. முதற்கதை போலவே இல்லை. அற்புதமான கதை. மீதி விபரங்களும் படித்தறிந்துகொண்டேன்.
    மேலும் பல தொகுப்புக்கள் வெளியாக என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

    பதிலளிநீக்கு
  90. ஐயா!
    கடந்த ஒரு வார காலமாக
    என் கவிதை நூல்வெளியிட முன் ஏற்பாடுகள் செய்ய வேண்டி இருந்ததால் பலருடைய வலைப்பதிவுகளை என்னால் படிக்க
    இயலாமல் போயிற்று! மன்னிக்க!
    எனவேதான் தங்கள் எழுதிய
    கதைகள், நூலாக, அதுவும் வானதிப்
    பதிப்பகம் வாயிலாக வெளிவந்த
    சிறப்பினை அறிய இயலாமல்
    போயிற்று
    கதைகளையே படிக்காமல் இருந்த என்னை கதைகளைப் படி்க்க
    ஆர்வமூட்டியது தங்களின் கதைகளே
    என்றால் அது மிகையல்ல!

    புலவர் சாஇராமாநுசம்
    jram1932@gmail.com

    பதிலளிநீக்கு
  91. தொடர்ந்து வந்து வாசித்தபோதும் உடனடியாக பின்னூட்டமிடமுடியாமல் கணினி பிரச்சனை செய்யவே விட்டுவிட்டேன். மன்னிக்கவும்.

    தான் பெற்றக் குழந்தையே பெண்ணாயிருக்கும் பட்சத்தில் அதைக் கொல்லத்துணியும் கல்மனம் படைத்த மக்களிடையே அன்பாய் வளர்க்கத் தலைப்படும் அருமையான மனிதர்களைக் காட்டியது ஒரு சிறப்பு என்றால் தாய்க்குத் தாயாய் கவனிக்கும் மரகதத்தையும், முனியாண்டியையும் விட்டு போகமாட்டேன் என்று குழந்தை அழுவதும், பயத்தில் காய்ச்சல் வந்து தன் நிலையை உறுதிப்படுத்துவதும் கதைக்கு கூடுதல் பலம். கருகவிருந்த ஒரு பெண்குழந்தையின் வாழ்வை மலரச் செய்த அருமையான கதைக்கும், அது வானதி பிரசுரத்தால் புத்தகமாக வெளிவந்ததற்கும் என் மனமார்ந்த பாராட்டுகள். விரைவில் மற்ற கதைகளையும் படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  92. இமா said...
    //முதற்கதை போலவே இல்லை. அற்புதமான கதை. மீதி விபரங்களும் படித்தறிந்துகொண்டேன்.
    மேலும் பல தொகுப்புக்கள் வெளியாக என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.//

    வெகு நாட்களுக்குப்பின் தங்களின் அன்பான வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும், பிரார்த்தனைகளுக்கும் மிக்க நன்றி, இமா.

    நலமாக இருக்கிறீர்களா?

    பிரியமுள்ள vgk அண்ணா.

    பதிலளிநீக்கு
  93. புலவர் சா இராமாநுசம் said...
    //ஐயா!
    கடந்த ஒரு வார காலமாக
    என் கவிதை நூல்வெளியிட முன் ஏற்பாடுகள் செய்ய வேண்டி இருந்ததால் பலருடைய வலைப்பதிவுகளை என்னால் படிக்க
    இயலாமல் போயிற்று! மன்னிக்க!
    எனவேதான் தங்கள் எழுதிய
    கதைகள், நூலாக, அதுவும் வானதிப்
    பதிப்பகம் வாயிலாக வெளிவந்த
    சிறப்பினை அறிய இயலாமல்
    போயிற்று
    கதைகளையே படிக்காமல் இருந்த என்னை கதைகளைப் படி்க்க
    ஆர்வமூட்டியது தங்களின் கதைகளே
    என்றால் அது மிகையல்ல!

    புலவர் சாஇராமாநுசம்//

    உங்கள் நிலைமையை மிகச்சுலபமாக என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
    மிக்க நன்றி ஐயா. புது கவிதைத் தொகுப்பு நூலுக்கு என் அன்பான அட்வான்ஸ் வாழ்த்துக்கள். vgk

    பதிலளிநீக்கு
  94. கீதா said...
    //தொடர்ந்து வந்து வாசித்தபோதும் உடனடியாக பின்னூட்டமிடமுடியாமல் கணினி பிரச்சனை செய்யவே விட்டுவிட்டேன். மன்னிக்கவும்.

    தான் பெற்றக் குழந்தையே பெண்ணாயிருக்கும் பட்சத்தில் அதைக் கொல்லத்துணியும் கல்மனம் படைத்த மக்களிடையே அன்பாய் வளர்க்கத் தலைப்படும் அருமையான மனிதர்களைக் காட்டியது ஒரு சிறப்பு என்றால் தாய்க்குத் தாயாய் கவனிக்கும் மரகதத்தையும், முனியாண்டியையும் விட்டு போகமாட்டேன் என்று குழந்தை அழுவதும், பயத்தில் காய்ச்சல் வந்து தன் நிலையை உறுதிப்படுத்துவதும் கதைக்கு கூடுதல் பலம். கருகவிருந்த ஒரு பெண்குழந்தையின் வாழ்வை மலரச் செய்த அருமையான கதைக்கும், அது வானதி பிரசுரத்தால் புத்தகமாக வெளிவந்ததற்கும் என் மனமார்ந்த பாராட்டுகள். விரைவில் மற்ற கதைகளையும் படிக்கிறேன்.//

    தாமதமாக வந்தாலும், வெகு அருமையான கருத்துரைகள் அளித்துள்ளதில், ப்லூன் அங்கிளிடமும் மரகதம் அம்மாளிடமும் மகிழ்வுடன் வளரப்போகும் குழந்தை விஜி போல என் மனதும் மகிழ்ச்சியடைகிறது.

    ஆஸ்திரேலியா கண்டமே ஒட்டுமொத்தமாக வந்து என்னை வாழ்த்தியது போல மகிழ்ச்சியடைகிறேன்.

    மிக்க நன்றி, மேடம்.
    பிரியமுள்ள vgk

    பதிலளிநீக்கு
  95. அந்த என் முதல் அனுபவம் மிகவும்
    THRILLING ! THRILLING !! THRILLING !!!
    தான்!
    உங்கள் முதல் கதையே ஒரு முத்திரைக் கதையாகி உங்கள பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் தமிழ் நாட்டின் சிறந்த பதிப்பகங்களில் ஒன்றான “வானதி பதிப்பகம்” முதல் கதையின் தலைப்பிலேயே “தாயுமானவள்” வெளியிட்டதில் இன்னும் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  96. அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ ஐயா, வாருங்கள், வணக்கம்.

    தங்களின் அன்பான வருகைக்கும், வெகு அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், மகிழ்ச்சியான வாழ்த்துகளுக்கும், என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

    என்றும் அன்புடன் தங்கள்,
    vgk

    பதிலளிநீக்கு
  97. அருமையா முடிச்சிருக்கீங்க அண்ணா..குழந்தை பாதுகாப்பா இருக்கிறது நிம்மதியான முடிவு..உண்மையில் சுனாமியில் பாதிக்கப்பட்ட எத்தனை குழந்தைகள் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளதோ..அருமையான கதையா முதல் கதையை எழுதி இருக்கீங்க அண்ணா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புச் சகோதரி, Mrs. ராதா ராணி Madam,

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆமாம். சுனாமியின் தாக்கம் தான் இந்தக்கதை. இதுபோல எவ்வளவு குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்தனவோ!
      ஆம். நான் எழுதிய முதல் கதை இதுதான். சந்தோஷமாக உள்ளது.

      இன்று ஒரு நாள் முழுவதும் எனக்காகவே ஒதுக்கி விட்டீர்களா? உங்களின் கமெண்ட்களுக்கு பதில் எழுதவே நேரம் இல்லாமல் போனது, எனக்கு. அவ்வளவு கமெண்ட்கள் வரிசையாக வந்துள்ளன.

      தங்களுக்கு மீண்டும் நன்றி.

      அன்புடன்
      vgk

      நீக்கு
  98. // இது தான் என் வாழ்க்கையில் நான் எழுதிய முதல் சிறுகதை.//
    நம்பமுடியவில்லை. ஆனால் நம்புகிறேன்:)

    ”தாயுமானவள்” உங்களின் எழுத்துலக பிரவேசம் இல்லைஇல்லை பிரசவம் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்திருக்கிறதே. வரவேற்புடன் பரிசு, வாழ்த்துக்கள் எல்லாமே.

    கதை அதன் தலைப்பு அதைதொடர்ந்து பத்திரிகை உலகில் முதன்முதல் காலடி பதித்த தருணம் எல்லாம் தெய்வ சங்கல்பமே. அந்த அருளினால்தான் உங்கள் திறமை வெளியில் கொண்டுவரப்பட்டு, எங்களுக்கும் அருமையான உங்கள் அற்புத படைப்புக்களைப் படிக்க கிடைத்திருக்கிறது.

    நீங்கள் நோய் நொடி இன்றி நல்ல ஆரோக்கியமுடன் நீடூழி வாழவும், இன்னும் இன்னும் நல்ல படைப்புகளை தொடர்ந்து எமக்கு தரவேண்டுமென இறைவனை நாமும் வேண்டுகிறோம்.

    கதையும் சொல்லவே வேண்டாம். மனதை நிறைத்த, மனதில் நிற்கின்ற நல்ல படைப்பு. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் இளமதி, வாருங்கள். வணக்கம்.

      நான் நலம். நீங்கள் நலமா?

      //நம்பமுடியவில்லை. ஆனால் நம்புகிறேன்:)//

      ஆமாம் என்னாலும் ஆரம்பித்தில் நம்பத்தான் முடியவில்லை. பிறகு தான் நம்பினேன்.

      //”தாயுமானவள்” உங்களின் எழுத்துலக பிரவேசம் இல்லைஇல்லை பிரசவம் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்திருக்கிறதே. வரவேற்புடன் பரிசு, வாழ்த்துக்கள் எல்லாமே.//

      ஆமாம். அது ஓர் மிகவும் சுகமான புது அனுபவமாகத்தான் இருந்தது. ஏதோ ஓர் அதிர்ஷ்டமான நேரமாக இருந்தால் எல்லாமே நமக்கு சாதகமாக அமைந்து விடுகிறது.

      //கதை அதன் தலைப்பு அதைதொடர்ந்து பத்திரிகை உலகில் முதன்முதல் காலடி பதித்த தருணம் எல்லாம் தெய்வ சங்கல்பமே.//

      ஆமாங்க, எல்லாமே தெய்வ சங்கல்ப்பம் மட்டுமே.

      //அந்த அருளினால்தான் உங்கள் திறமை வெளியில் கொண்டுவரப்பட்டு, எங்களுக்கும் அருமையான உங்கள் அற்புத படைப்புக்களைப் படிக்க கிடைத்திருக்கிறது.//

      மிகச்சரியாகவே சொல்லிட்டீங்க, இளமதி. அதே அதே. எல்லாவற்றிற்கும் காரணம் கடவுளின் அருள் மட்டுமே தான்.

      //நீங்கள் நோய் நொடி இன்றி நல்ல ஆரோக்கியமுடன் நீடூழி வாழவும், இன்னும் இன்னும் நல்ல படைப்புகளை தொடர்ந்து எமக்கு தரவேண்டுமென இறைவனை நாமும் வேண்டுகிறோம்.//

      ஆஹா, என்னவொரு வாத்சல்யத்துடன் கூடிய வேண்டுதல். தங்கள் பிரார்த்தனைப்படியே நல்ல ஆரோக்யமும், நீண்ட வாழ்வும் எனக்குக் கிடைத்தால் மகிழ்ச்சியே! ;) தங்களின் அன்பான பிரார்த்தனை என்னை மெய்சிலிரிக்க வைக்கிறது.

      //கதையும் சொல்லவே வேண்டாம். மனதை நிறைத்த, மனதில் நிற்கின்ற நல்ல படைப்பு. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்!!!//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், இளமதி.

      பிரியமுள்ள,
      VGK

      நீக்கு
  99. முதலில் கதையின் முடிவு... இல்லை இல்லை குழந்தையின் வாழ்வின் தொடக்கம்....

    மரகதம் முனியாண்டி இருவரின் வாழ்வில் செயற்கை கருத்தரிப்புக்காக சேர்த்த பணம் குழந்தையின் படிப்புக்காக....

    குழந்தை சந்தோஷமாய் இயல்பாய் மம்மி என்று அழைத்து அதன்பின் ஆண்ட்டி என்று மாற்றிக்கொண்டது காலச்சூழல் குழந்தையை இந்த அளவுக்கு கொண்டு வந்து விட்டதே...

    மரகதமும் முனியாண்டியும் இரவெல்லாம் செய்த விவாதத்தில் குழந்தை மனம் கலங்கி மறுபடி நாம் வெளியேற்றப்படுவோமோ போலீஸ் ஸ்டேஷனில் கொண்டுப்போய் சேர்க்கப்படுவோமோ என்ற பயத்தில் ஜுரம் வந்துவிட... குழந்தை வெகு இயல்பாய் அவர்கள் இருவரிடமும் இதை கேட்டுவிட இருவரின் மனதில் இருந்த கருணை வெளிக்கொணரவே இந்த நாடகம் இறைவன் நடத்தியது போல...

    முடிவு சுபம்... குழந்தைக்கும் அம்மா அப்பா கிடைத்தது. அம்மா அப்பாக்கும் குழந்தை கிடைத்தது... இறைவனுக்கு தெரியும் அல்லவா யாரை யாரிடம் எப்போது ஏன் எங்கே சேர்ப்பது என்று?

    இனி கதை தொடங்கிய கதைக்கு வருவோம்...

    கதையாசிரியரின் தெள்ளிய நடையில் அற்புதமாய் ஒரு கதை....
    ஹுஹும்... முதல் கதை.... தவழும் குழந்தையின் முதல் அடி எடுத்துவைக்கப்பட்டு அந்த நடையே வெற்றிகரமான நடையாக... கதையாசிரியரின் சிறப்பான கதை முதன் முதலில் எழுதிய கதை தினமலரிலும் வாரமலரிலும் வெளியிட்டு அதன்பின் அந்த கதை 2981 பேர்கள் எழுதியதில் 13 தேர்வாகி அதிலும் முதல் இடத்தைப்பெற்றது எத்தனை பெருமைக்குரிய விஷயம்...

    முதல் கதை வெற்றிப்பெற்றதற்கும் பிரசுரித்தமைக்கும் மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் அண்ணா...

    முதல் கதை அதுவும் வெற்றிகரமாக பிரபல நாளிதழிலும் வாரமலரிலும் வெளியிட்டும் கொஞ்சம் கூட அந்த பெருமையை காட்டாது அடக்கமாக.... தான் எப்படிப்பட்ட சூழலில் இந்த கதையை எழுதினேன் என்று மிக அருமையாகச்சொல்லி....

    கதையாசிரியரின் இளமைப்பருவம் வறுமைகள் நிறைந்ததை சுயவிவிவரத்தில் குறிப்பிட்டு.... படிப்படியாக உழைத்து முன்னுக்கு வந்து இன்று நல்ல நிலையில் இருப்பதைச்சொன்ன விதமும்...

    நல்ல நிலைக்கு வந்தப்பின்னர் தான் யாரால் முன்னுக்கு வந்தோம் என்பதை மறந்து போகும் மனிதர்கள் இடையில் ரிஷபன் எனும் வைரக்கல் தான் இந்த வைரக்கல்லை பட்டைத்தீட்ட ஊக்குவித்தது என்று நன்றிகள் கூறி.... ( வசிஷ்டர் கையால் பிரம்மரிஷிப்பட்டம் ) எத்தனை பெரிய விஷயம்...

    கதையாசிரியரிடம் திறமை இருக்கிறது. அதை சீராக்கி கதை வரிக்கும் அற்புதமான க்ரியேட்டிவிட்டி இருக்கிறது... இந்த விளக்கை தூண்டிவிட ரிஷபன் என்ற நல்ல உள்ளத்தால் இன்று வலைப்பூவிலும் பிரபலமாகி எல்லோர் மனதிலும் நிலையான இடம் பிடித்து வெற்றிகள் குவிக்கவும்.... இன்னும் நிறைய கதைகள் பகிர்ந்து நல்வழி நடத்தவும்

    மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகளுடனான நன்றிகள் அண்ணா...

    பதிலளிநீக்கு
  100. மஞ்சுபாஷிணி October 16, 2012 4:12 AM

    அன்பின் மஞ்சு வாங்கோ, வணக்கம்.

    //முதலில் கதையின் முடிவு... இல்லை இல்லை குழந்தையின் வாழ்வின் தொடக்கம்....//

    முடிவல்ல .... தொடக்கமே.

    குழந்தையின் வாழ்வு என்ற புதுக்கதையின் துவக்கமே. ;)))))

    ஆம் மஞ்சு. ஒரு விஷயம் சோகமாக முடிவுக்கு வரும் போது, அதிலிருந்து மீளமுடியாமல் வருந்தி மனம் மிகவும் வலிக்கத்தான் வலிக்கிறது.

    அந்த நேரத்தில், ஏதோ ஒரு புதிய விஷயம் அப்போதே நம்மை ஆட்கொண்டு ஆதரிக்கும் போது, அந்த புதிய விஷயம் நம் மனதுக்கு சற்றே ஆறுதல் அளிக்கும் போது, நம் மனம் சற்றே சந்தோஷப்படுகிறது. வருத்தங்களுக்கெல்லாம் ஓர் வடிகால் கிடைத்து விட்டதாக உணர்கிறது.

    நம் மன வருத்தங்களுக்கும், வலிகளுக்கும், வேதனைகளுக்கும், சோதனைகளுக்கும், நாம் சற்றும் எதிர்பாராமல் Accidental ஆக ஏற்பட்டு விடும் நிகழ்வுகளுக்கும், அதுவே ஓர் இடைக்காலத் தீர்வாக அமைந்து, இதமான ஒத்தடம் கொடுத்தது போல நம்மை அமைதிப்படுத்துகிறது.

    தக்க நேரத்தில் ஒருவர் அன்பை இழந்து, மனம் கலங்கிப்போய் வருந்தும் நேரத்தில், ஆதரவாக வேறொருவரின் அன்பு கிடைத்தால் அது மிகவும் பாக்யமே.

    சிறு குழந்தைகளின் சளி, இருமல், கபம் போன்றவைகளுக்கு, கழுத்து, மார்பு, முதுகு மூக்கு போன்ற பகுதிகளில் ’விக்ஸ் வேபோரப்’ ஐ, மிகவும் மென்மையாக ஓர் தாய் தடவி விடுவது போல அமைந்து விடும் பாக்யம் அது. It is 'The Timely Help'.

    இதுபோன்றதொரு பாக்யம் எல்லோருக்கும் தக்க நேரத்தில் கிடைத்துவிடும் என்று சொல்லவே முடியாது. இந்தக்கதையில் வரும் குழந்தைக்கு ஏதோ முனியாண்டி மரகதம் தம்பதி மூலம் கிடைத்துள்ளது. தக்க நேரத்தில் தக்க உதவி கிடைக்காது போனால், அன்பை இழந்த அந்தக்குழந்தையின் நிலைமை என்ன ஆகும்? கொடுமை அல்லவா?

    தொடரும் .....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. VGK to மஞ்சு....

      //முடிவு சுபம்... குழந்தைக்கும் அம்மா அப்பா கிடைத்தது. அம்மா அப்பாக்கும் குழந்தை கிடைத்தது... //

      ஆம் மஞ்சு. மிகச்சரியாகவே சொல்லிட்டீங்க.

      //இறைவனுக்கு தெரியும் அல்லவா யாரை யாரிடம் எப்போது ஏன் எங்கே சேர்ப்பது என்று?//

      ஆம் மஞ்சு. இது நிதர்சனமான உண்மை. சமீபத்தில் நான் இதை மிக நன்றாக் அனுபவபூர்வமாகவே உணர்ந்துள்ளேன்.

      தொடரும்....

      நீக்கு
    2. VGK to மஞ்சு... [3]

      //கதையாசிரியரின் தெள்ளிய நடையில் அற்புதமாய் ஒரு கதை....

      ஹுஹும்... முதல் கதை.... தவழும் குழந்தையின் முதல் அடி எடுத்துவைக்கப்பட்டு அந்த நடையே வெற்றிகரமான நடையாக... கதையாசிரியரின் சிறப்பான கதை முதன் முதலில் எழுதிய கதை//

      பாராட்டுக்களுக்கு மனமார்ந்த நன்றிகள், மஞ்சு.


      //தினமலர் - வாரமலரில், வெளியிட்டு அதன்பின் அந்த கதை 2981 பேர்கள் எழுதியதில் 13 தேர்வாகி அதிலும் முதல் இடத்தைப்பெற்றது எத்தனை பெருமைக்குரிய விஷயம்...//

      இல்லை மஞ்சு 13 கதைகளில் நாலாம் இடம் மட்டுமே. முதல் இடம் அல்ல.

      அதாவது முதல்/இரண்டு/மூன்று என மூன்று பரிசுகள், அதன் பின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பான 10 கதைகளுக்கு ஆறுதல் பரிசுகள்.

      எனக்கு இந்தக்கதைக்கு கிடைத்தது ஆறுதல் பரிசு மட்டுமே.

      இருப்பினும் எனக்கு அது முதல் பரிசே கிடைத்த ஓர் மகிழ்ச்சியினைக் கொடுத்தது என்பதே உண்மை.

      தொடரும்....

      நீக்கு
    3. VGK to மஞ்சு [4]

      //கதையாசிரியரிடம் திறமை இருக்கிறது. அதை சீராக்கி கதை வரிக்கும் அற்புதமான க்ரியேட்டிவிட்டி இருக்கிறது... இந்த விளக்கை தூண்டிவிட ரிஷபன் என்ற நல்ல உள்ளத்தால் இன்று வலைப்பூவிலும் பிரபலமாகி எல்லோர் மனதிலும் நிலையான இடம் பிடித்து வெற்றிகள் குவிக்கவும்.... இன்னும் நிறைய கதைகள் பகிர்ந்து நல்வழி நடத்தவும்

      மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகளுடனான நன்றிகள் அண்ணா...//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான விரிவான கருத்துக்களுக்கும், மனம் திறந்த பாராட்டுக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மகிழ்ச்சிகள் மஞ்சு. சந்தோஷம். ;)

      பிரியமுள்ள
      கோபு அண்ணா

      நீக்கு
  101. அந்தக்குழந்தை மன நிலையை எவ்வளவு அழகாக சொல்லி இருக்கீங்க். தோசை சாப்பிட ஆசையும் தயக்கமுமாக மம்மி,,,,,, மம்மி,,,, சாரி, சாரி ஆண்டி, ஆண்டி ஒரு தோசை தருவீங்களானு அந்தக்குழந்தை கேட்கும் போதே நம்மகிட்டயே காக்குற மாதிரி இருந்துச்சி. அவங்க இரவு பேசிக்கொண்டதை கேட்ட குழந்தை விஜி பதட்டத்துடன் நீங்கதான் என்ன போலீசுகிட்ட கொடுத்துடுவீங்களே என்று பரிதாபமாக சொல்லும் போது ஐயோ பாவமாக இருந்தது. குழந்தை இல்லாத அந்த அன்பு தம்பதி களுக்கு குழந்தையை அந்த மாரியம்மனே அனுப்பியது போல தோன்றுகிறது. நல்ல சுவாரசியமான கதை படித்த திருப்தி கிடைத்தது.முடிவு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்துச்சி,இதுதான் உங்க முதல் சிறு கதைன்னு நம்பவே முடியல்லே. முதல் கதையிலேயே இவ்வளவு திறமை யான எழுத்து எப்படி கை வந்திச்சு?ஆச்சரியம்தான். மூன்று பகுதிகளையும் ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன். இனி மற்ற பதிவுகளுக்கும் சென்று பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  102. பூந்தளிர் January 13, 2013 at 9:20 PM

    //அந்தக்குழந்தை மன நிலையை எவ்வளவு அழகாக சொல்லி இருக்கீங்க். தோசை சாப்பிட ஆசையும் தயக்கமுமாக மம்மி,,,,,, மம்மி,,,, சாரி, சாரி ஆண்டி, ஆண்டி ஒரு தோசை தருவீங்களானு அந்தக்குழந்தை கேட்கும் போதே நம்மகிட்டயே காக்குற மாதிரி இருந்துச்சி.//

    ரஸித்த இடத்தைச் சுட்டிக்காட்டியது மகிழ்ச்சியாக உள்ளதும்மா.

    //அவங்க இரவு பேசிக்கொண்டதை கேட்ட குழந்தை விஜி பதட்டத்துடன் நீங்கதான் என்ன போலீசுகிட்ட கொடுத்துடுவீங்களே என்று பரிதாபமாக சொல்லும் போது ஐயோ பாவமாக இருந்தது.//

    உங்களின் தாயுள்ளத்தையும் அன்பையும் உணர முடிகிறது.

    //குழந்தை இல்லாத அந்த அன்பு தம்பதி களுக்கு குழந்தையை அந்த மாரியம்மனே அனுப்பியது போல தோன்றுகிறது.//

    ஆம், சரியாகச் சொன்னீர்கள். அம்பாள் தான் அனுப்பியிருப்பாள்.

    //நல்ல சுவாரசியமான கதை படித்த திருப்தி கிடைத்தது. முடிவு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்துச்சி, இதுதான் உங்க முதல் சிறு கதைன்னு நம்பவே முடியல்லே.//

    பிரசுரிக்கப்பட்டு பரிசு கிடைத்ததை என்னாலும் அன்று நம்பவே முடியவில்லை தான்.

    //முதல் கதையிலேயே இவ்வளவு திறமையான எழுத்து எப்படி கை வந்திச்சு?//

    எனக்கே தெரியவில்லை. எப்படியோ வந்திச்சு. எழுத்து அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

    ’வரம்’ என்றதும், ஆனால் ஒன்று மட்டும் ஞாபகத்து வந்திடுச்சு. ‘வரம்’ என்ற தலைப்பிலேயே ஒரு குட்டியூண்டு நகைச்சுவைக் கதை எழுதியுள்ளேன்.

    இணைப்பு இதோ: :http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_1783.html

    //ஆச்சரியம்தான். மூன்று பகுதிகளையும் ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன்.//

    நீங்கள் என்ன என்னைப்போல சாதாரண ஆளா, You are so Great. உங்கள் பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்கவே எனக்கு இனி மூச்சு வாங்கும் போல இருக்கு ;)))))

    //இனி மற்ற பதிவுகளுக்கும் சென்று பார்க்கிறேன்.//

    ஆஹா, பாருங்கோ பாருங்கோ. நன்றியோ நன்றிகள், மேடம்.

    பிரியமுள்ள
    VGK

    பதிலளிநீக்கு
  103. வெகு அருமை. சிறப்பான சிறுகதை.

    //காவிரிக்கரையோரம் ரயில்வே லைனை ஒட்டிய ஒரு சற்றே பெரிய குடிசை வீடு, அதுவே அவர்கள் இன்பமுடன் இல்லறம் நடத்தி வரும் அரண்மனை//

    அன்பும் அரவணைப்பும் அன்னையுமானவள் கொண்ட அரண்மனை

    //பலூன் அங்கிள்! யூ ஆர் வெரி குட் ஸ்வீட் அங்கிள்!! தாங்க்யூ வெரி மச்; ஐ லவ் யூ சோ மச்” என்று கூறி அவன் கழுத்தைக்கட்டிக்கொண்டு, கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தது//
    //குழந்தையை கட்டிப்பிடித்துத் தூக்கிக்கொண்ட மரகதம், “சரி, சரி, நீ எங்களோடேயே இருக்கலாம்டா கண்ணு, உன்னய எங்கேயும் கொண்டுபோய் விடமாட்டோம்டா, நீ சமத்துப்பாப்பா இல்லையா? அழக்கூடாது” என்று சொல்லி தன் புடவைத்தலைப்பால் குழந்தையின் கண்களைத் துடைத்து விட்டு, அள்ளி அணைத்து முத்தமிட்டாள், மரகதம்//

    முத்தான முத்தத்தின் அன்பை பெற்ற பெற்றோர்கள்.


    //குழந்தை கண் அசந்து தூங்கத்தொடங்கியது. ஆனால் அதன் பிஞ்சு விரல்கள் மட்டும் முனியாண்டியின் சட்டையை இறுக்கமாகப் பற்றியிருந்தது//

    பிஞ்சுவின் பிடி மட்டுமல்ல தங்களின் பதிவும் அனைவரையும் பிடித்து கொண்டது.

    //இந்தச் சிறுகதை சுனாமிக்குப்பிறகு 2005 ஆம் ஆண்டு எழுதப்பட்டது//

    சுனாமியின் தாக்கம் தங்களின் உருவாக்கம்.

    // இது தான் என் வாழ்க்கையில் நான் எழுதிய முதல் சிறுகதை.//

    முதல் சிறுகதையும் இது. முத்தான சிறுகதையும் இது.

    //எழுத்து அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமே//

    நல்ல பதிவர்களையும் நல்ல பதிவுகளையும் படிக்கச் செய்த பகவானே! இதுவும் எங்களுக்கு இறைவன் கொடுத்த வரமே.

    //தா யு மா ன வ ள்//
    தாயுமானவர் கோவிலின் அருகே கதைக்கு கிடைத்தது தாயுமானவள். அதே கோவிலின் அருகே எங்களுக்கு கிடைத்தவர் தாயுமானவர்.

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றி ஐயா!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  104. வேல் September 17, 2013 at 12:02 PM

    வாருங்கள், வணக்கம்.

    //வெகு அருமை. சிறப்பான சிறுகதை.//

    சந்தோஷம்.

    //அன்பும் அரவணைப்பும் அன்னையுமானவள் கொண்ட அரண்மனை//

    மிக்க மகிழ்ச்சி.

    //முத்தான முத்தத்தின் அன்பை பெற்ற பெற்றோர்கள்.//

    ஆம், மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.அதை அனுபவித்தவர்களால் மட்டுமே உணர முடியும்.

    *****குழந்தை கண் அசந்து தூங்கத்தொடங்கியது. ஆனால் அதன் பிஞ்சு விரல்கள் மட்டும் முனியாண்டியின் சட்டையை இறுக்கமாகப் பற்றியிருந்தது*****

    //பிஞ்சுவின் பிடி மட்டுமல்ல தங்களின் பதிவும் அனைவரையும் பிடித்து கொண்டது. //

    வெகு அழகாக இந்த இடத்தை ரஸித்துச் சொல்லியுள்ளீர்கள். ஸ்பெஷல் நன்றிகள்.

    //சுனாமியின் தாக்கம் தங்களின் உருவாக்கம்.//

    ஆமாம். சுனாமி பற்றிய செய்திகளின் தாக்கம் தான்.

    //முதல் சிறுகதையும் இது. முத்தான சிறுகதையும் இது.

    நல்ல பதிவர்களையும் நல்ல பதிவுகளையும் படிக்கச் செய்த பகவானே! இதுவும் எங்களுக்கு இறைவன் கொடுத்த வரமே.//

    ஆஹா, ஜோராக எழுத்தாளரை மகிழ்வூட்டும் படி, உற்சாகம் தருமாறு எழுதுகிறீர்கள்.

    //பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றி ஐயா!!!!!!!!!!!//

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகாக ரஸித்து, ருசித்து எழுதியுள்ள சத்தான முத்தான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  105. திருச்சி டவுன் வாணப்பட்டரை மாரியம்மன் தேர்த்திருவிழா இன்று 21.04.2015 செவ்வாய்க்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

    மதியம் 1 மணி சுமாருக்கு என் குடியிருப்புப் பகுதி வாசலுக்கு வாணப்பட்டரை மாரியம்மன் அழகுத்தேரில் மெல்ல நகர்ந்து பவனி வந்து அருள் பாலித்தாள்.

    அப்போது என் வீட்டு பால்கனி ஜன்னல் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில இதோ http://gopu1949.blogspot.in/2014/06/vgk-24.html இந்தப்பதிவினில் இப்போது புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  106. முதல் சிறுகதையா?
    அருமை அய்யா. சுனாமி எத்துனை பேரை அனாதை ஆக்கியது. என்னைப் பொநுத்தவரை இது கதையில்லை. நிஐம் போல் உள்ளது. உண்மை தான் இவள் தாயுமானவளே,,,,,,,,,,,
    மனம் கனத்தது, 300 சம்பாதித்த மகிழ்ச்சி
    அதைவிடவும் இவள் தாயான மகிழ்ச்சி.
    நல்ல கதை.

    பதிலளிநீக்கு
  107. mageswari balachandran May 4, 2015 at 11:48 AM

    வாங்கோ, வணக்கம்.

    //முதல் சிறுகதையா?//

    ஆமாம்.

    //அருமை ஐயா.//

    மிக்க மகிழ்ச்சி.

    //சுனாமி எத்துனை பேரை அனாதை ஆக்கியது.//

    :(

    என்னைப் பொறுத்தவரை இது கதையில்லை. நி ஜ ம் போல் உள்ளது. உண்மை தான் இவள் தாயுமானவளே,,,,,,,,,,, மனம் கனத்தது, 300 சம்பாதித்த மகிழ்ச்சி அதைவிடவும் இவள் தாயான மகிழ்ச்சி. நல்ல கதை.//

    தங்களின் அன்பான வருகைக்கும் இன்று ஒரே நாளில் இந்தச் சிறப்புச் சிறுகதையின் மூன்று பகுதிகளையும் ரஸித்துப்படித்து, கருத்துக்கள் கூறியிருப்பதற்கும், மகிழ்ச்சியுடன் நன்றி கூறிக்கொள்கிறேன். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  108. பூந்தளிர் May 21, 2015 at 11:48 AM
    // :)))) //

    பழைய பூந்தளிரின் நீண்ட பின்னூட்டம் இன்று என்னால் மீண்டும் ரசித்து படிக்கப்பட்டது. அந்தப்பூந்தளிர் இப்போ காணாமல் போய் விட்டதில் எனக்குக் கொஞ்சம் வருத்தமே.

    பதிலளிநீக்கு
  109. இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.

    இந்தக் கதைக்கு பரிசு கிடைக்கலைன்னா எப்படி?

    அருமையான கதை
    முதல் சிறுகதை மாதிரி தெரியவில்லை.

    ஒரு பண்பட்ட எழுத்தாளரின் ஆற்றல் கதையில் வெளிப் பட்டிருக்கிறது.

    மீண்டும், மீண்டும் படிக்கத்தூண்டும், எவ்வளவு முறை படித்தாலும் அலுக்காத படைப்புகள் தான் உங்களுடையவை.

    பாராட்ட வார்த்தையே இல்லை.

    வாழ்த்துக்கள் அண்ணா

    பதிலளிநீக்கு
  110. அந்த கொளந்த ஒரு நல்லவருகிட்டத்துலதா போயி சேந்திச்சி. நீங்க வரைஞ்சிருக்க படம் ரொம்ப டச்சிங்கா இருக்குது.

    பதிலளிநீக்கு
  111. குழந்தை இல்லாத அந்த ஏழை தம்பதிகளுக்கு அந்தக்குழந்தையை அனுப்பி இருக்கார் ஆண்டவர். குழந்தை மனநிலை பெரியவர்கள் மனநிலை எல்லாமே நல்லா ரசனையுடன் சொல்கிறீர்கள்




    பதிலளிநீக்கு
  112. திருச்சி மலைக்கோட்டைத் ”தாயுமானவர்” அருளால், ஒரே நாளில் “தாயுமானவள்” (தாயும்+ஆனவள்) ஆன தன் மனைவியை அள்ளி அணைக்கச் சென்ற முனியாண்டியைப் பார்த்து, வெட்கத்துடன் சிரித்தது, குழந்தை விஜி.// வாத்யார் படம் போல வாத்யாரின் சிறுகதைகளும்...சுபமான முடிவுதான்.மீண்டும் ரசித்தேன்..

    பதிலளிநீக்கு
  113. //தலைப்புக்கேற்ற அருமையான் கதை! முதல் கதையே முத்தான படைப்பு! மனம் கவர்ந்த, நெஞ்சில் நிறைந்த தங்களின் பல படைப்புகளில் இதுவும் ஒன்று!

    பதிலளிநீக்கு
  114. பத்திரிகையில் அச்சிடப்பட்டு பிரசுரமான என் கதைகளில் ஒன்றான இதனை என்னிடம் கேட்டு வாங்கி, எங்கள் BLOG என்ற வலைத்தளத்தில், 02.02.2016 அன்று படங்களுடன் வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    அதற்கான இணைப்பு:
    http://engalblog.blogspot.com/2016/02/blog-post.html

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு