என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 30 டிசம்பர், 2016

யானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே !





அன்புடையீர் ! அனைவருக்கும் வணக்கம். 

வரும் ஞாயிறு 01/01/2017 ஆங்கிலப்புத்தாண்டு பிறக்க உள்ளது.

புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'எனது எண்ணங்கள்’ http://tthamizhelango.blogspot.com/  வலைப்பதிவருமான திருச்சி தி. தமிழ் இளங்கோ அவர்கள் என்னை சந்திப்பதும், புத்தாண்டுக்கான நாட்குறிப்புப் புத்தகம் (DIARY) கொடுத்துவிட்டுச் செல்வதும் வழக்கமாக வைத்துக்கொண்டிருக்கிறார். இது கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக நடைபெற்று வருவதை நினைக்க, எனக்கே மிகவும் ஆச்சர்யமாகவே உள்ளது.  

25.12.2013 அன்று என் இல்லத்திற்கு நேரில் வருகை தந்து 2014-ம் ஆண்டுக்கான புதிய டைரியை முதன் முதலாகக் கொடுத்துச் சென்றார்.

25.12.2014 அன்று என் இல்லத்திற்கு வருகை தந்து 2015-ம் ஆண்டுக்கான புதிய டைரியைக் கொடுத்துச் சென்றார். அதுபற்றி என் பதிவினில் ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். இணைப்பு: https://gopu1949.blogspot.in/2014/12/9.html



25.12.2015 அன்று என் இல்லத்திற்கு வருகை தந்து 2016-ம் ஆண்டுக்கான புதிய டைரியைக் கொடுத்துச் சென்றார். அதுபற்றி என் பதிவினில் ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். இணைப்பு: https://gopu1949.blogspot.in/2015/12/100-2015.html

 


அதே போல நேற்று 29.12.2016 வியாழக்கிழமை மாலை சுமார் 5.45 மணிக்கு திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள் என் இல்லத்திற்கு நேரில் விஜயம் செய்து, பிறக்கவுள்ள 2017-ம் ஆண்டுக்கான புத்தம் புதிய DIARY கொடுத்து புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லி  மகிழ்வித்திருந்தார்கள். அப்போது எடுக்கப்பட்ட ஒரு சில படங்கள் இதோ தங்களின் பார்வைக்காக:






2014 முதல் 2017 வரை தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளாக, நேரில் வருகை தந்து எனக்குப் புத்தாண்டு வாழ்த்துகளும் சொல்லிப் புது வருட நாட்குறிப்புப் புத்தகமும் (DIARY) கொடுத்துச்செல்லும், அருமை நண்பர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 


பதிவுலக நட்புகள் அனைவருக்கும் என் இனிய  ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.








என்றும் அன்புடன் தங்கள்


[ வை. கோபாலகிருஷ்ணன் ]


திங்கள், 5 டிசம்பர், 2016

எங்கள் ஊரில், எங்கள் தெருவில் NUMBER ONE பிள்ளை.....யார்?



திருச்சிராப்பள்ளி நகரின் மிகப் பிரபலமான 
உச்சிப்பிள்ளையார் கோயிலைச் சுற்றி
தேரோடும் வீதிகள் நான்கு உள்ளன.

அவற்றில் ஆங்காங்கே பல 
பிள்ளையார் கோயில்கள் உள்ளன.

அவை பற்றிய மேலும் விபரங்களை
‘ஏழைப் பிள்ளையார்’
என்ற தலைப்பில் நான் எழுதியுள்ள சுவையான 
http://gopu1949.blogspot.in/2011/08/blog-post_28.html
இந்தப் பதிவினில் படிக்கலாம்.

இவற்றில் உச்சிப்பிள்ளையாரிலிருந்து ஆரம்பித்து
பிரதக்ஷணமாகச் சுற்றி வரும் போது ஐந்தாவது
பிள்ளையாராகவும், வடக்கு ஆண்டார் தெருவின் 
ஆரம்பத்திலேயே முதல் பிள்ளையாராகவும்
வீற்றிருப்பவர் ஸ்ரீ வரசித்தி விநாயகர்.

மிகப்பெரிய அரசமரத்தின் அடியில் பல நூறு ஆண்டுகளாக
வீற்றிருக்கும் மிகவும் சக்தி வாய்ந்த விநாயகர் இவர்.

இந்தப் பிள்ளையாருக்கு 04.12.2016 ஞாயிறு காலை
9.30 to 10.30 மணிக்கு வெகு சிறப்பாக 
கும்பாபிஷேகம் நடைபெற்றது.



மேலும் கீழும் உள்ள இந்தப் படங்கள் 
என் பழைய பதிவிலிருந்து எடுக்கப்பட்டவையாகும்.


கீழேயுள்ள படங்கள் 03.12.2016 சனிக்கிழமையன்று
[கும்பாபிஷேகத்திற்கு முதல்நாள்] 
பாலாலயம் செய்யப்பட்ட ஸ்வாமியை 
பிரதிஷ்டை செய்யும் முன்பு எடுக்கப்பட்டவை





கீழேயுள்ள படம், கும்பாபிஷேகத்திற்கான 
யாகசாலை பூஜைகள் நடக்குமிடம்
03.12.2016 சனிக்கிழமை எடுக்கப்பட்டது


04.12.2016 ஞாயிறு காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள்
வெகு சிறப்பாக கும்பாபிஷேகம் நறைபெற்றபோது
எடுக்கப்பட்டுள்ள படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.



^தெற்கு பார்த்த மிகச்சிறிய கோயில் 
கோபுரத்தின் உச்சி^



^கோபுர உச்சியைக் 
கிழக்கு திசையில் மேற்கு நோக்கி நின்று 
எடுக்கப்பட்ட புகைப்படம்
EASTERN SIDE VIEW  ^




^யாகசாலை பூஜைகள் + ஹோமங்கள்^






^தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் மூலவர்
ஸ்ரீ வரசித்தி விநாயகர்^


^மேற்கு நோக்கி நின்ற நிலையில்
ஸ்ரீ ஆஞ்சநேயர்^

[இந்த மிகச்சிறிய கோயிலின், பிரக்ஷண பாதையில் 
கிழக்குச் சுவர்புறம்  ..... கிழக்கு நோக்கி 
ஸ்ரீ முருகனுக்கு ஓர் சந்நதியும் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.]







^ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலுக்கு எதிரே
சமீபத்தில் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற
வடக்கு நோக்கி அமைந்துள்ள ஸ்ரீ கருப்பர் கோயில்^



கும்பாபிஷேகத்திற்கு முன் இருந்த கருப்பர் கோயில்
என் பழைய பதிவிலிருந்து எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. 

-சுபம்-



என்றும் அன்புடன் தங்கள்,


[ வை. கோபாலகிருஷ்ணன் ]

சனி, 15 அக்டோபர், 2016

ஆர்டிஸ்ட் அநிருத் ..... வயது ஐந்து !



சமீபத்தில் 
’தமிழ்நாடு அரசு - வனத்துறை’யினரால்
 நடத்தப்பட்டுள்ளதோர் ஓவியப் போட்டியில்  
திருச்சி மாவட்ட அளவில் 
முதலிடம் !

Master: S. ANIRUDH 
U.K.G. Student of 
R.S.K. Higher Secondary School
BHEL Township - Tiruchirapalli - 14.


ஐந்து வயதே ஆகும்
என் பேரக்குழந்தை 
’அநிருத்’தின்
ஓவிய சாதனை !!  

 

போட்டியில் கலந்துகொள்ள வந்திருந்த
 நூற்றுக்கணக்கான குழந்தைகளுடன்
நடுவர்கள் முன்னிலையில்

ஓவியப் போட்டி நடைபெற்ற நாள்: 
17.09.2016

போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி 
நடைபெற்ற நாள்: 
07.10.2016

இடம்:  பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சி



  

போட்டி நடைபெறும் நாளுக்கு முன்பாக
 அவனாகவே ஓர் ஆர்வத்தில், 
வீட்டில் ஒருவார பயிற்சி  எடுத்துக்கொண்டபோது
'அநிருத்' வரைந்துள்ள மாதிரி ஓவியங்களில் சில...







வெட்டப்பட்டுள்ள மரம் ஒன்று
கண்ணீர் விட்டபடி
தன் கையை உயர்த்தி
‘என்னைக் காப்பாற்றுங்கள் ....
எனக்கு உதவி செய்யுங்கள்’
[ ' SAVE ME' ..... 'HELP ME' ]
எனக் கதறுவதாக 
போட்டியின் நடுவர்கள் முன்னிலையில்
தானே கற்பனையில் வரைந்து
அங்கேயே அவர்கள் எதிரிலேயே
வர்ணங்களும் தீட்டி 
என் பேரனால்  கொடுக்கப்பட்டுள்ள படம்
திருச்சி மாவட்ட அளவில்
முதல் பரிசினைப் பெற்றுக்கொடுத்துள்ளது
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.



  
மேற்படிச் சான்றிதழில் இரு சிறு எழுத்துப்பிழைகள் உள்ளன

குழந்தையின் பெயர்: S. ANIRUDH
என எழுதப்பட்டிருக்க வேண்டும்.
[ instead of S. ANIRUTH ]

L.K.G. என்பதற்கு பதில் U.K.G. எனப்
போடப்பட்டிருக்க வேண்டும்.
 







  

Our Heartiest Congratulations to
My Dear ANIRUDH 




 

D.O.B : 24th April, 2011

 2011

 

 




2012

 

 



2013

  




2014









2015

10.11.2015 தீபாவளியன்று 



2016

On 17th January, 2016  
in a function at Srirangam


On 7th October, 2016 
Secured District Level First Prize in
Drawing Competition ! 

[ 'ANIRUDH' with his little brother 'AADHARSH' ]





தொடர்புடைய பதிவும் பின்னூட்டங்களும்
’வெற்றித் திருமகன்’

 

குழந்தை அநிருத் 
அவ்வப்போது வரைந்துள்ள 
வேறு சில டைரி கிறுக்கல் படங்களில்
கைவசம் இப்போது கிடைத்துள்ளவை மட்டும் இதோ:







 



சிறு வயதிலிருந்தே அவன் Free Hand இல் வரையும் படங்களையும், அதில் அவன் கொண்டுவரும் வளைவு நெளிவு சுளிவுகளையும் கண்டு நான் மிகவும் வியந்து போவதுண்டு.

பேப்பர், டைரி, பென்சில், பேனா, கலர் பென்சில்கள், ஸ்கெட்ச் பேனாக்கள் என அவனிடம் கொடுத்துவிட்டால் போதும். மணிக்கணக்காக அதில் அவன் ஆழ்ந்து விடுவது உண்டு.

ஓவியம் மட்டுமல்லாமல், எதிலுமே மிகச்சிறப்பான நினைவாற்றலும், கற்பனா சக்தியும், இசை ஞானமும், வேறு சில தனித்திறமைகளும், வயதுக்கேற்ற குறும்புகளும் கொண்டவனாக இருப்பதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது.

தாத்தா எழுதிய ‘அ, ஆ, இ, ஈ,  ........ ஃ’ எழுத்துக்களை, டிக் செய்து, ஸ்டார் போட்டு, ஸ்மைலி போட்டு, தன்னை ஒரு டீச்சராகவே பாவித்துக்கொண்டு GOOD போட்டு கொடுத்துள்ளதைப் பாருங்கோ. :)

 

Some of the Arts of 'ANIRUDH' 
on the outer walls of the 
Washing Machine at his home.

 






Fancy Dress Competition at School on 08.11.2016


^Fancy Dress Competition at School on 08.11.2016^


ONE MORE WINNING !

SPLASH COLOURING COMPETITION HELD AT 
KAILASAPURAM CLUB OF B.H.E.L., TIRUCHI-14
IN CONNECTION WITH CHILDREN'S DAY 
14.11.2016

Sri. S. ANIRUDH 
has secured 2nd Prize
in this Competition 

 


 He receives this Prize from the 
General Manager/Welding Research Institutue
BHEL - TIRUCHI-14
 




 


என்றும் அன்புடன் தங்கள்,


[ வை. கோபாலகிருஷ்ணன் ]