என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 11 அக்டோபர், 2012

ம ஞ் சூ [உண்மைக்கதை]


 ம ஞ் சூ


[சமோஸா வியாபாரி 
பற்றிய உண்மைக்கதை]

By 

வை. கோபாலகிருஷ்ணன்

இன்று இந்தியாவில் உள்ள சிறுசிறு வியாபாரிகளின் எண்ணிக்கைக் கணக்கில் அடங்காமல் தான் உள்ளது. சிலவிஷயங்கள் நம்மால் நம்ப முடியாமலும், ஜீரணிக்க முடியாமலும் தான் உள்ளன. ஆனால் அவைகளிலும்  சில மிகவும் சுவாரஸ்யமானவைகளாகவே உள்ளன. அதில் ஒன்றை இப்போது பார்ப்போம்.

தினமும் என் அலுவலக வேலைகள்  முடிந்ததும் சென்னை பரனூரில் ரயில் ஏறி வீடு திரும்புவது வழக்கம். அன்றும் அது போல மாலை 6.50 மணிக்கு ரயிலில் ஏறி அமர்ந்தேன். 




கூடுவாஞ்சேரி ஸ்டேஷனை விட்டு ரயில் கிளம்ப இருந்த நிலையில், அந்த சமோஸா வியாபாரி தன் காலிக்கூடையுடன் என் அருகில் வந்து அமர்ந்தார்.  

அந்த ரயிலில் பயணிகளின் கூட்டம் சற்றே அதிகம் இருந்ததாலும், நான் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வர இன்னும் நிறைய நேரம் இருந்ததாலும், சமோஸா வியாபாரியுடன் பேச்சுக்கொடுத்தேன். பேட்டி எடுத்தேன் எனவும் வைத்துக்கொள்ளலாம். 

நான்: ”உன் பெயர் என்னப்பா?  எல்லா சமோஸாக்ககளை விற்றுத்தீர்த்து விட்டாய், போலிருக்குதே!”

வியாபாரி: [புன்னகையுடன்] ”என் பெயர் மஞ்சுநாதன். எல்லோரும் மஞ்சூ மஞ்சூ ன்னு தான் என்னைச் செல்லமாகக் கூப்பிடுறாங்க; 

ஆமாம் சார்,  கடவுள் கிருபையால் எல்லா சமோஸாவுமே இன்று விற்றுத்தீர்ந்து விட்டது.”

நான்:  ”உங்களைப்போன்றவர்களைப்பார்த்து நான் மிகவும் பரிதாபபடுவது உண்டு. தினமும் நாள் முழுவதும் ஓய்வு ஏதும் இன்றி இப்படி உழைக்கிறீங்களே;  உங்களுக்கெல்லாம் சோர்வு ஏதும் ஏற்படுவது இல்லையா? ”

மஞ்சூ:  “என்ன சார் செய்வது? இதுபோல தினமும் கஷ்டப்பட்டு உழைத்து சமோஸா விற்றால் தான், எங்களுக்கு விற்கப்படும் ஒவ்வொரு சமோஸாவுக்கு 75 பைசா வீதம் கமிஷன் கிடைக்கும்”.  

நான்: ”ஓ .... அப்படியாப்பா! தினமும் எவ்வளவு சமோஸா நீ விற்பாய்?”

மஞ்சூ: ”வியாபாரம் ஜரூரான நாட்களில் தினம் 3000 முதல் 3500 வரை நாங்கள் ஒவ்வொருவரும் விற்க முடியும்.  வியாபாரம் டல்லடிக்கும் நாட்களில் 1000 சமோஸாக்களை நாங்கள் ஒவ்வொருவரும் விற்றாலே அது மிகப்பெரிய விஷயம். சராசரியாக ஒவ்வொருநாளும் எங்களைப் போன்ற ஒவ்வொருவரும் 2000 சமோஸா வீதம் மிகச்சுலபமாக விற்கமுடியும், சார்.”





அடுத்த சில நொடிகளுக்கு நான் வாயடைத்துப்போனேன்.   மனதுக்குள் கணக்குப்போட்டேன். 

தினமும் 2000 சமோஸாக்கள், ஒரு சமோஸாவுக்கு 75 பைசா கமிஷன் என்றால் தினமும் இவன் வருமானம் ரூபாய் 1500. 

அப்படியானால் மாத வருமானம் 45000 ரூபாய். 

மாதம் ஒன்றுக்கு இந்த சமோஸா வியாபாரி மஞ்சூக்கு மட்டும் ரூபாய் 45000 வீதம் வருமானம். 

இப்போது நான் என்பேட்டியை ஒரு பொழுதுபோக்குக்கு மட்டும் ஏனோ தானோ என நினைக்காமல் மிகவும் படு சீரியஸ் ஆக ஆர்வத்துடன் கேள்விகள் கேட்க ஆரம்பித்தேன். 

நான்: ”நீங்களே சொந்தமாக சமோஸா தயாரிக்கிறீர்களா?” 

மஞ்சூ: ”இல்லீங்க சார்; எங்க முதலாளி சமோஸா தயாரிக்கும் ஃபாக்டரியிலிருந்து மொத்தமாக வாங்கி எங்களிடம் தந்து விடுவார். நாங்கள் அதை விற்பதோடு சரி; 

விற்ற பணத்தை அவரிடம் அன்றாடம் அப்படியே ஒப்படைத்து விடுவோம். அவர் நாங்கள் விற்பனை செய்த எண்ணிக்கையின் அடிப்படையில் ஒரு சமோஸாவுக்கு 75 பைசா வீதம் எங்களுக்கு தந்து விடுவார்”.  

என்னால் மேற்கொண்டு அவரிடம் என்ன பேசுவது என்றே புரியாமல், ஒரு வார்த்தை கூட பேசாமல்,  நான் ஸ்தம்பித்துப்போன போது அவரே தொடர்ந்து பேசலானார். 

மஞ்சூ: ”ஆனா ஒண்ணு சார்; நாங்கள் இதுபோல உழைச்சு சம்பாதிக்கிறதுலே பெரும்பகுதி தினமும் நாங்க சாப்பிட்டு உயிர் வாழவே சரியாப்போயிடுது சார். மீதி சேமிக்குற சொற்பத் தொகையிலேயே தான் எங்களின் மத்த பிஸிநெஸ்ஸை நாங்க கவனிக்க வேண்டியதாக உள்ளது, சார்”.  

நான்: ”மத்த பிஸிநெஸ்ஸா? என்னப்பா அது? ”

மஞ்சூ: ”அது தான் சாரே, ரியல் எஸ்டேட்டுன்னு சொல்றாங்களே, அதாவது நிலத்தை வாங்குவது விற்பது போன்றவைகள் சார்; 

2007 இல் விருப்பாக்கம் என்ற இடத்திலே ஒரு ஒண்ணரை ஏக்கர் மூணு லட்சம் ரூபாய்க்கு வாங்கிப்போட்டேன் சார்;  

ஒரு மாஸம் முன்னாடி அதை பதினைந்து லட்சத்திற்கு வித்துப்போட்டேன் சார்;  

இப்போ உத்தமமேரூரிலே ஒரு அஞ்சு லட்சம் போட்டு ஒரு நிலம் வாங்கியிருக்கேன், சார்”.  

நான்: ”மீதிப்பணத்தை என்ன பண்ணினீங்க?”

மஞ்சூ: ”மீதிப்பணத்திலே ஒரு ஆறு லட்சத்தை என் மகள் கல்யாணத்துக்குன்னு ஒதிக்கி வச்சுப்புட்டேன் சார்.  மீதி நாலு லட்சத்தை பேங்கில டெபாஸிட்டா போட்டுட்டேன் சார்.”

நான்: ”நீ எவ்வளவுப்பா ....... படிச்சிருக்கே?”

மஞ்சூ: ” நானு மூணாம் கிளாஸ் வரைதானுங்க ஐயா படிச்சிருக்கேன். நாலாவது போகும் போது என் படிப்பை நானே நிறுத்திப்புட்டேன், சார்; 

ஆனாக்க எனக்கு நல்லா எழுதப்படிக்கத் தெரியும் சார்;  


சார், உங்களைப் போலவே நிறைய பேரு நல்லா டிப்-டாப்பா டிரஸ் பண்ணிக்கிட்டு, கழுத்திலே ஜோரா ‘டை’ கட்டிக்கிட்டு,  ஜம்முனு ஷூ போட்டுக்கிட்டு, சரமாரியா அழகா இங்கிலீஷ் பேசிக்கிட்டு, ஏ.ஸி. ரூமிலே வேலை பார்க்கிறீங்க;.  


ஆனாக்க அழுக்கு ஆடையை அணிந்து கிட்டு, வெயிலிலே வேர்த்து வழிய சமோஸா விற்கும் எங்கள் அளவுக்குக்கூட படிச்ச நீங்க ஒண்ணும் பெரிசா சம்பாதிப்பதாக எனக்குத் தெரியவில்லை சார்; 


மாதக்கடைசியானாக்க, உங்களைப்போல உத்யோகஸ்தர்கள் என்னிடம் சமோஸாவைக் கடன் சொல்லி வாங்கிட்டுப்போறாங்க, சார்.  ரொம்பப் பழக்கமான சில பேரு என்கிட்டே, கைமாத்தாக பணம் கூட கடனாகக் கேட்டு வாங்கிட்டுப்போறாங்க, சார். 


இந்த மஞ்சூவின் இப்படிப்பட்டப் பேச்சுக்கு நான் என்ன பதில் சொல்வது என்றே எனக்கும் நிச்சயமாகத் தெரியவில்லை.

நான் மிகப்பெரியதொரு கோடீஸ்வரரான தொழிலதிபரைத் தான் இவ்வளவு நேரம் பேட்டி கண்டுள்ளேன் என்பதை மட்டும் உணர முடிந்தது. 

நாங்கள் சேர்ந்து பயணம் செய்த ரயில் இப்போது குரோம்பேட்டை என்ற ஸ்டேஷனை நெருங்க ஆரம்பித்தது. சமோஸா வியாபாரி மஞ்சூ தன் இருக்கையில் இருந்து எழுந்து கொண்டார். 




மஞ்சூ:  ”சார், நானு இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்திடுச்சு. இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும். நான் போயிட்டு வாரேன், சார்” 

நான்: ”நல்லதுங்க மஞ்சூ, போய் வாருங்கள்” 

[நான் வேறென்ன சொல்ல முடியும் அவரிட்ம்?] 

எனக்கும் மாதம் 60000 ரூபாய் சம்பளம் வருகிறது. வீட்டு லோன், கார் லோன், அந்த லோன், இந்த லோன்னு போட்டாச்சு. வருமானவரிப் பிடித்தமெல்லாம் போக கையில் வாங்குவதோ ”இஞ்சிப்பச்சிடி தொட்டு நக்குடி”  ன்னு இருக்கு. 

கார் லோன் போட்டு ஆசையாகக் கார் வாங்கினேன்.  பெட்ரோல் விலை ஏற்றத்தால் அதை ஓட்டாமல் வீட்டு வாசலில் போத்தி வைத்துவிட்டு, ரயிலிலேயே பயணம் செய்கிறேன். 

கழுத்தில் உள்ள ’டை’ யை கழட்டி இப்போவே கையிலே வெச்சுக்கிட்டேன். காலில் உள்ள ஷூவை வீட்டுக்குப்போய்த்தான் கழட்டணும். என்னடா வாழ்க்கை இதுன்னு வெறுத்துப்போய் உள்ளேன். 

என்னைவிட பள்ளிப் படிப்பே படிக்காத அந்த அழுக்கு வேட்டி அழுக்குச்சட்டையுடன் சமோஸா விற்கும் வியாபாரி மஞ்சூ நல்ல அதிர்ஷ்டக்காரர் என்றும் அவர் வாழ்க்கைத்தரம் என் வாழ்க்கைத்தரத்தை விட மிகவும் சிறப்பாகவே உள்ளது, எனவும் நான் நினைத்துக்கொண்டேன்..




oooooooo
முற்றும்
oooooooo


பின் குறிப்பு: 

இது யாரோ ஒருவருக்கு சமீபத்தில் இரயிலில் ஏற்பட்ட அனுபவம். 

இதைப்பற்றி தனக்கு ஆங்கிலத்தில் வந்திருந்த மின்னஞ்சலை, இன்று மாலை, என்னுடைய BHEL தோழி ஒருவர் எனக்கு டெல்லியிலிருந்து FORWARD செய்திருந்தார்கள்.  

ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த இந்த உண்மைச் சம்பவம் பற்றிப்படித்ததும், வழக்கம் போல அதில்  சற்றே நகைச்சுவை கலந்து என் பாணியில் தமிழில் மொழிபெயர்த்து எழுதி, எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. 

அதனால் இந்தப்பதிவு இப்போது வெளியிடப்பட்டுள்ளது.


என்றும் அன்புடன் தங்கள்,
வை. கோபாலகிருஷ்ணன்

182 கருத்துகள்:

  1. Hi VGK Sir ,

    I'm Punitha from

    www.southindiafoodrecipes.blogspot.in

    Very very interesting and practical story Sir.

    Due to my BP Problem

    i never come to comment any other blog Sir.

    Take care and Keep on Sir....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் புனிதா மேடம்,

      இந்த என் பதிவுக்கு தங்களின் அன்பான முதல் வருகையும், அழகான அறிமுகமும், அருமையான கருத்துக்களும் எனக்கு மிகவும் மகிழ்வளிக்கின்றன.

      தாங்கள் எனக்கு விருது அளித்தபோதே தங்களைத் தங்களின் படத்தினில் கவனித்தேன்.

      http://gopu1949.blogspot.in/2012/07/10th-award-of-2012.html

      நம் சகோதரி புனிதா உருவத்திலும் நம்மைப்போலவே இருக்காங்களே என நினைத்தேன். உங்களுக்கும் BP இருக்குமோ என நான் சந்தேகித்தேன்.

      உடல் நலத்தை நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள் சகோதரி.

      பிரியமுள்ள
      VGK

      நீக்கு
  2. நிஜங்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். எல்லோராலும் சமோசா விற்க முடியாது இல்லையா?

    சம்பாத்தியம் பற்றிப் ஒப்பீடு பேசிய மஞ்சூ, 'போதும் திருப்தியாக இருக்கிறேன்', 'சந்தோஷமாக இருக்கிறேன்.' என்கிறது போல எங்கேயும் சொல்லவில்லை என்பதைக் கவனித்தேன்.

    வாழ்க்கைத் தரம் பணத்தில் மட்டும் அல்ல; மனத்திலும் இருக்கிறது. அந்த மனம்... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது.

    எதுவாயினும் 'மனத்திருப்தி' அமைந்தவர் வாழ்க்கைதான் 'தரமானது' என்பது என் அபிப்பிராயம் அண்ணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இமா October 10, 2012 12:58 PM
      நிஜங்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

      அன்பின் இமா ...
      வாங்கோ வாங்கோ!
      தங்கள் வரவு நல்வரவாகட்டும்.

      //எல்லோராலும் சமோசா விற்க முடியாது இல்லையா?//

      நிச்சயமாக முடியாது இமா. அதுவும் என்னால் முடியவே முடியாது இமா.

      வெங்காயம்+உருளைக்கிழங்கு மட்டும் போட்டு செய்த சுத்தமான, சுவையான, சுகாதாரமான, சூடான வெஜிடபிள் சமோஸாவாக இருந்தால் ஒரே ஒரு டஜன் மட்டும் என்னால் உடனடியாக சாப்பிட மட்டும் முடியும் இமா ;)

      ....

      நீக்கு
    2. VGK to இமா....

      //சம்பாத்தியம் பற்றி ஒப்பீடு பேசிய மஞ்சூ, 'போதும் திருப்தியாக இருக்கிறேன்', 'சந்தோஷமாக இருக்கிறேன்.' என்கிறது போல எங்கேயும் சொல்லவில்லை என்பதைக் கவனித்தேன். //

      ஆமாம். இன்னும் அவருக்கு முழுத்திருப்தியும் சந்தோஷமும் ஏற்படவில்லையோ என்னவோ?

      நீங்கள் கவனிக்காத விஷயமா ... என்ன?
      ’இமா’வா சும்மாவா ? [இமாவா.. கொக்கா.. போல ;)]

      நீக்கு
    3. VGK to இமா.... [3]

      //வாழ்க்கைத் தரம் பணத்தில் மட்டும் அல்ல; மனத்திலும் இருக்கிறது. அந்த மனம்... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது.//

      தென்னை மரத்திலிருந்து புதிதாக பதமான காயைப் பறித்து, நாரை உரிகோலால் உரித்து, தேங்காயை நன்கு அலம்பி விட்டு “மஹா கணேசா மங்கள் மூர்த்தி” ன்னு சொல்லிட்டு, அரிவாளால் ஒரே போடு போட்டு உடைச்சதும், மிகச்சரியாக அது [இளநீரைக்கண்ணீர் போலச் சிந்திக்கொண்டு] இரு மூடிகளாகி, பளீச்சுன்னு வெள்ளை வெளேர்ன்னு சிரிக்குமே, அதுபோல உள்ளது இமா [டீச்சர்], உங்களின் இந்தக்கருத்தும், எனக்கு.

      //எதுவாயினும் 'மனத்திருப்தி' அமைந்தவர் வாழ்க்கைதான் 'தரமானது' என்பது என் அபிப்பிராயம்
      அண்ணா.//

      தங்கையின் இந்தத்தரமான வார்த்தை அண்ணாவை அப்படியே சொக்க வைத்து விட்டது .... இமா.

      என் அபிப்ராயமும் ... அதே.... அதே.... சபாபதே!

      பிரியமுள்ள
      VGK

      நீக்கு
  3. நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் பதிவையும் அதற்கான உங்களின் முயற்சியை கண்டு வியக்கின்றேன். ஒரு சமோசாவுக்கு 75 பைசா கமிஷன் கிடைக்குமென்றால் நான் தமிழகத்திற்கே மீண்டும் வந்து செட்டில் ஆகிவிடலாம் என நினைக்கிறேன். அந்த சமோசா வியாபரி கொஞ்சம் ஒவாராகவே கதைவிடுவதாகதான் தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் பதிவையும் அதற்கான உங்களின் முயற்சியை கண்டு வியக்கின்றேன். //

      வாங்கோ தம்பி வாங்க.

      [சார்ன்னு சொன்னாக்க உங்களுக்குக் கோபம் வரும் .. அதனால் தம்பின்னு போட்டு தப்பிச்சுக்கிட்டேன் .. OK தானே Sir... Sorry தம்பி]

      // ஒரு சமோசாவுக்கு 75 பைசா கமிஷன் கிடைக்குமென்றால் நான் தமிழகத்திற்கே மீண்டும் வந்து செட்டில் ஆகிவிடலாம் என நினைக்கிறேன்.//

      வேண்டாம் தம்பி.... அவசரப்பட்டு ஏதும் முடிவு எடுத்துடாதீங்க!

      அதுபோல இங்கு திரும்பி வந்த சிலர், இங்குள்ள மின்தடை, ட்ராஃபிக் ஜாம், கடையடைப்பு, போராட்டம், ஆர்ப்பாட்டம், பந்த் போன்ற பல்வேறு அவஸ்தைகளால் அங்கேயே இருந்து ஒட்டகம் மேய்ப்பதே மேல் எனச் சொல்லி நானும் கேள்விப்பட்டுள்ளேன்.

      //அந்த சமோசா வியாபரி கொஞ்சம் ஒவாராகவே கதைவிடுவதாகதான் தோன்றுகிறது//

      இருக்கலாம் இருக்கலாம். ”அவர்கள் உண்மைகள்” ளுக்கு தோன்றுவது உண்மைகளாக மட்டுமே கூட இருக்கலாம்.

      அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், தம்பி.

      அன்புடன்
      VGK


      நீக்கு
  4. “மேகம் தவழும்
    மலைத்தொடர், பசுமை போர்த்திய தரைவெளி, ஆளுயர, மரங்கள்,
    இந்த பதிவைப் பாருங்க! இப்படியும் மனிதர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்திர வம்சம் October 10, 2012 3:01 PM
      //“மேகம் தவழும் மலைத்தொடர், பசுமை போர்த்திய தரைவெளி, ஆளுயர, மரங்கள்.. இந்த பதிவைப் பாருங்க! இப்படியும் மனிதர்கள்.//

      பார்த்தேன் மேடம், பார்த்தேன். ஒருவாரமாக கலக்கோ கலக்குன்னு கலக்குறீங்க. அதுவும் நேற்றிய தங்களின் “கல்கி பட்டுப்புடவை” ப்பதிவு சூப்பரோ சூப்பர்.

      தங்களுக்கு இன்று 11th October ஓர் மிக முக்கியமான நாள். அதற்கு என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

      என்றும் அன்புடன்,
      VGK

      நீக்கு
  5. மாதக்கடைசியான உங்களைப்போல உத்யோகஸ்தர்கள் என்னிடம் சமோஸாவைக் கடன் சொல்லி வாங்கிட்டுப்போறாங்க, சார்.
    சத்தியமான உண்மை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்திர வம்சம் October 10, 2012 3:03 PM
      ****மாதக்கடைசியானா உங்களைப்போல உத்யோகஸ்தர்கள் என்னிடம் சமோஸாவைக் கடன் சொல்லி வாங்கிட்டுப்போறாங்க, சார்.****

      //சத்தியமான உண்மை//

      இது அந்த ஒரிஜினல் ஆங்கில மின்னஞ்சலில் கிடையாது.
      நானாக சேர்த்த நகைச்சுவைக் காட்சிகளில் இதுவும் ஒன்று.

      அதைச் சுட்டிக்காட்டியுள்ளது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  6. பதில்கள்
    1. பழனி.கந்தசாமி October 10, 2012 3:08 PM
      ரசித்தேன். நல்ல அனுபவம்.//

      ஐயா, வணக்கம். எப்படியிருக்கீங்க? நலம் தானே!

      அனுபவசாலியான தங்களின் ரசித்’தேன்’ என்ற ஒரு சொல் எனக்குத் தேனாக இனிக்குது, ஐயா. நன்றிகள் ஐயா.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  7. அன்பின் வை.கோ - மஞ்சூ போன்ற படிக்காத - உழைப்பினை மட்டுமெ நம்பி வாழ்பவர்கள் இன்று பயங்கர பணக்காரர்களாக் இருக்கிறார்கள். வெளியே தெரியாமல் எளிமையாக வாழ்க்கை நடத்திக் கொண்டு செய்யும் தொழிலைத் தெய்வமாக வணங்கி முழு ஈடுபாட்டுடன் செய்து வருகிறார்க. இவர்களைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

    இருப்பினும் சமோசா விலை, கமிஷன், தினசரி விற்கும் எண்ணிக்கை - மாத வருமானம் - இவற்றை எல்லாம் நினைக்கும் போது கற்பனை கொடி கட்டிப் பறப்பது தெளிவாகத் தெரிகிறது.

    நல்ல நேர் காணல் வை.கோ - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. cheena (சீனா) October 10, 2012 4:51 PM
      //அன்பின் வை.கோ -//

      அன்பின் திரு. சீனா ஐயா அவர்களே, வாருங்கள், வாருங்கள். வணக்கம்.

      சற்றே ‘சொணக்கம்’ ஆக இருந்த எனக்கு தங்களுக்கு ’வணக்கம்’ சொல்லி வரவேற்பு கொடுத்ததும், ஓர் புத்துணர்ச்சியே ஏற்பட்டு விட்டது, ஐயா. ;)))))

      //மஞ்சூ போன்ற படிக்காத - உழைப்பினை மட்டுமே நம்பி வாழ்பவர்கள் இன்று பயங்கர பணக்காரர்களாக் இருக்கிறார்கள். வெளியே தெரியாமல் எளிமையாக வாழ்க்கை நடத்திக் கொண்டு செய்யும் தொழிலைத் தெய்வமாக வணங்கி முழு ஈடுபாட்டுடன் செய்து வருகிறார்கள். இவர்களைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.//

      உண்மையான, அருமையான, மிகவும் யதார்த்தமான நம் நாட்டு நடப்பினை, அப்படியே புட்டுப்புட்டு சொல்லீட்டீங்க ஐயா.

      ஆமாம் ஐயா, நாம் கற்றது கைமண் அளவே ....
      கற்றுக்கொள்ள வேண்டியது [அதாவது கல்லாதது]
      = உலகளவு MINUS கைமண் அளவு.

      .... தொடரும்

      நீக்கு
    2. VGK to சீனா ஐயா....

      //இருப்பினும் சமோசா விலை, கமிஷன், தினசரி விற்கும் எண்ணிக்கை - மாத வருமானம் - இவற்றை எல்லாம் நினைக்கும் போது கற்பனை கொடி கட்டிப் பறப்பது தெளிவாகத் தெரிகிறது.//

      ”நிழல் அல்ல நிஜமே; நிஜக்கதை தான்; கற்பனை அல்ல”

      என எனக்கு ஆங்கிலத்தில் வந்த மின்னஞ்சலில் எழுதியுள்ளது, ஐயா.

      கற்பனையென்றாலும் கற்சிலை என்றாலும் ....
      என்பது போல நானும் சற்றே கருவேப்பிலை, கொத்தமல்லி முதலியன போன்ற என் நகைச்சுவைகளை கொஞ்சம் சேர்த்து கடுகு உளுத்தம்பருப்பு தாளித்துக்கொட்டி சற்றே சூடாக்கி, தமிழில் பரிமாறியும் விட்டேன் ஐயா.

      //நல்ல நேர் காணல் வை.கோ - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

      பிரியமுள்ள
      VGK

      நீக்கு
  8. இக்க‌ரைக்கு அக்க‌ரைப் ப‌ச்சை?! உழைப்பின் ப‌ல‌னை சீர‌ழிக்காம‌ல் சேமித்த‌ அவ‌ரின் சாதுர்ய‌ம் மெச்ச‌த்த‌க்க‌தே. 'ஆனாக்க‌' மிக‌வும் உயிர்ப்புட‌னிருந்த‌து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய Mrs.நிலாமகள் Madam,

      வாங்கோ, வாங்கோ, வாங்கோ. தங்களின் அன்பான அபூர்வமான வருகையும், அழகான கருத்துக்களும் மிகவும் என்னை மகிழ்விக்கிறது.

      //இக்க‌ரைக்கு அக்க‌ரைப் ப‌ச்சை?! உழைப்பின் ப‌ல‌னை சீர‌ழிக்காம‌ல் சேமித்த‌ அவ‌ரின் சாதுர்ய‌ம் மெச்ச‌த்த‌க்க‌தே.//

      தங்களின் இந்த ஆழமான கருத்துக்களும் மெச்சத்தக்கதே தான், மேடம். நன்றியோ நன்றிகள்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  9. அ.உ. சொல்வது போல எனக்கும் அவர் 75 பைசா கமிஷன் என்று சொல்வது நம்புவது போலப் படவில்லை! இமா சொல்வதுவும் எனக்கும் தோன்றியது. சில சமயம் இது மாதிரி பதில்கள் நம்மை நாமே சமாதானப் படுத்திக் கொள்ளும் முயற்சி என்றும் தோன்றுகிறது! ஹி....ஹி...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள், ”ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்” அவர்களே,
      வணக்கம்.

      அ.உ. + இமா இருவருக்கும் பதில் கொடுத்து விட்டேன்.

      பலரும் பலவிதமான கருத்துக்களை நம் முன் வைக்கிறார்கள். மொத்தத்தில் இந்த என் பதிவின் பின்னூட்டப்பகுதி ஓர் விவாத மேடையாகவே மாறிவிட்டது, மகிழ்ச்சியளிக்கிறது.

      இன்னும் பலர் வந்து பலவித கருத்துக்களை முன் வைப்பார்கள். தாமதமானாலும் எல்லோருக்கும் பொறுமையாக பதில் அளிக்கத்தான் உள்ளேன்.

      நடுவில் நீண்ட நேரமின் தடைகள் போன்ற எவ்வளவோ பிரச்சனைகளும் சேர்ந்து வந்து விடுகின்றன.

      கடைசியில் தான் நாமும் ஓர் தீர்மானத்திற்கு வரமுடியும் என்று தோன்றுகிறது.

      தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் மகிழ்வளிக்கின்றன. பார்ப்போம். அன்புடன் VGK

      நீக்கு
  10. பதில்கள்
    1. வாங்கோ Mr Seeni Sir.
      ”சுவாரஸ்யமாக இருந்தது, பகிர்வுக்கு நன்றி”

      என்ற தங்களின் பதிலும் சுவாரஸ்யமாகவே உள்ளது.
      மிக்க நன்றி, நண்பரே.

      நீக்கு
  11. சிறுவர்களுக்கு கதை சொல்லுவதற்கு முன் பெரியவர்கள் “ கதை சொல்லும்போது குறுக்கே சிங்கம் பேசுமா? புலி பேசுமா? என்று அடிக்கடி கேள்வி கேட்கக் கூடாது “ என்று சொல்லி வைத்து விடுவார்கள். இந்த மொழிபெயர்ப்பு கதையும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். இங்கு சமோசா வியாபாரி சொல்லும் Turn Over கணக்கும் நம்பும்படியாக இல்லை. ஒரு வியாபாரி ஒரு நாளைக்கு 2000 சமோசா என்றால் அந்த சென்னையில் இவனைப் போல் எத்தனை வியாபாரிகள்? கணக்கு போட்டால் தலை சுற்றுகிறது. ஒரே ஆறுதல். நமது ஆசாமிகள் EMAIL, SMS என்று பூந்து விளையாடுவார்கள். உங்களுக்கு வந்த மின்னஞசலும் நகைச்சுவைக்காகவே!

    கதையின் கடைசியில் உங்கள் நடையில் நகைச்சுவையோடு சொன்ன

    //வீட்டு லோன், கார் லோன், அந்த லோன், இந்த லோன்னு போட்டாச்சு. வருமானவரிப் பிடித்தமெல்லாம் போக கையில் வாங்குவதோ ”இஞ்சிப்பச்சிடி தொட்டு நக்குடி” ன்னு இருக்கு. //

    என்ற வரிகளில்தான் எவ்வளவு உண்மை. பெரும்பாலும் ஜனவரி தொடங்கி மார்ச்சு மாதம் முடிய சம்பளமே இருக்காது. வரி கட்டுவதா அல்லது பத்திரங்கள் வாங்குவதா என்று காலம் ஓடும். மாதச் சம்பளக்காரர்கள் படும்பாட்டை படம் பிடித்து சொன்னீர்கள்.
    ( இதே போல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்கள் பதிவுகளை தாருங்கள் )






    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் அன்பின் திரு. தி.தமிழ் இளங்கோ ஐயா அவர்களே, வாருங்கள், வணக்கம்.

      //கதையின் கடைசியில் உங்கள் நடையில் நகைச்சுவையோடு சொன்ன

      ***வீட்டு லோன், கார் லோன், அந்த லோன், இந்த லோன்னு போட்டாச்சு. வருமானவரிப் பிடித்தமெல்லாம் போக கையில் வாங்குவதோ ”இஞ்சிப்பச்சிடி தொட்டு நக்குடி” ன்னு இருக்கு.****

      என்ற வரிகளில்தான் எவ்வளவு உண்மை. பெரும்பாலும் ஜனவரி தொடங்கி மார்ச்சு மாதம் முடிய சம்பளமே இருக்காது. வரி கட்டுவதா அல்லது பத்திரங்கள் வாங்குவதா என்று காலம் ஓடும். மாதச் சம்பளக்காரர்கள் படும்பாட்டை படம் பிடித்து சொன்னீர்கள்.//

      ஆமாம் ஐயா மேலே உள்ளவை யாவும் அந்த மின்னஞ்சலில் இல்லாதவை. என்னால் மட்டுமே சேர்க்கப்பட்டவை.

      நான் இவை எல்லாவற்றையும் என் பணி காலத்தில் எதிர் கொண்டவன் தான். இன்னும் விரிவாகவே இதைப்பற்றி எல்லாம் எழுதத்தான் நினைத்தேன். பிறகு இது யாருக்கோ ஏற்பட்ட அனுபவம் தானே, மின்னஞ்சலில் வந்தது தானே, நாம் நம் சொந்த அனுபவங்களை அதிகமாகச் சேர்க்க வேண்டாம் என நினைத்து சுருக்கமாக நிறுத்திக்கொண்டேன், ஐயா.

      பிப்ரவரி + மார்ச் இருமாதங்களும் போவதற்குள், வருமான வரி பிரச்சனை, அதற்கான சேமிப்புகள் முதலியவற்றால் .. போதும் போதும் என்று ஆகிவிடும், மாதச்சம்பளம் வாங்குவோர்களுக்கு.

      விழி பிதுங்கித்தான் போகும் அன்றைய நாட்களில். அது முடிந்ததும் மூன்று குழந்தைகளுக்கும், பள்ளிக்கூட யூனிஃபார்ம், நோட்டு புத்தகங்கள், School Fees என அடுத்தடுத்து துரத்திக்கொண்டே இருக்கும்.

      அதனுடன் ஒப்பிடும் போது இன்றைய நாட்களில் என்னைப் பொறுத்தவரையில், நான் நிம்மதியாகவே இருப்பதாக நினைக்கிறேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

      இன்றைய வலைச்சரத்தில் தங்களை அறிமுகம் செய்திருந்தார்கள், திருமதி ரஞ்ஜனி நாராயணன் அவர்கள்.
      மகிழ்ச்சியாக இருந்தது. அதற்கு என் பாராட்டுக்கள், ஐயா.

      அன்புடன் தங்கள்,
      VGK




      ( இதே போல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்கள் பதிவுகளை தாருங்கள் )

      நீக்கு
    2. VGK to திரு. தி.தமிழ் இளங்கோ ஐயா அவர்கள்

      //( இதே போல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்கள் பதிவுகளை தாருங்கள் )//

      ஆகட்டும் ஐயா. நேரம் + சந்தோஷமான மனநிலை + மின்சார விநியோகம் சீராக இருத்தல் + என் கணனியின் உடல் நிலை + என் உடல் நிலை + என் மேலிடத்தின் ஒத்துழைப்பு எல்லாம் எனக்குச் சாதகமாக அமையும் போது நிச்சயமாக நான் பலவிஷயங்களைப் பகிர்ந்து கொள்வேன், ஐயா.

      தங்களின் அக்கறைக்கும் என் மீது காட்டும் பேரன்புக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ஐயா.

      வலைச்சரத்தில் என் அன்புத்தங்கை மஞ்சு தன் அன்பைக் காட்டியிருந்தாள் இந்த இணைப்பில்:

      http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html?showComment=1349605091455

      அதற்கு முன்பே தாங்கள் தங்களின் இந்தப்பதிவினில் உங்களின் பேரன்பை என்மீது காட்டி அசத்தியிருந்தீர்கள்:

      http://tthamizhelango.blogspot.com/2012/09/blog-post.html

      “திருச்சியும் பதிவர் வை.கோபாலகிருஷ்ணனும்” என்ற தலைப்பினில்.

      மறக்க மனம் கூடுதில்லையே.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  12. பதில்கள்
    1. Lakshmi said....

      //சுண்டைக்காய் கால் பணம்,
      சுமைகூலி முக்கால்பணம் தானே?//

      அதே அதே மேடம். ;)

      வாருங்கள். வணக்கம். செளக்யமா இருக்கீங்களா? மேடம்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  13. வை.கோ சார்,மஞ்சூ கதை எனக்கு ஆச்சரியமாக இல்லை,இப்படி நிறைய பேர் சிறு தொழில் செய்து பெரிய நிலையில் வாழ்ந்து காட்டியிருக்காங்க..இப்படி கஷ்டப்பட்டு உழை உழைன்னு உழைச்சு நிலம் வாங்கி போட்டு கோடிக் கணக்கில் பணம் சேர்த்து வைத்த ஒருவரின் உண்மைக்கதை எனக்கு தெரியும்,என் தோழியின் மாமனார் சிறுவயதில் வெறும் முன்னூறு ரூபாயை மூலதனமாகக் கொண்டு சிறு தொழில் ஆரம்பித்து, சம்பாதித்து மகனை சி.ஏ. படிக்க வைத்து அவர் இப்ப வெளிநாட்டில்.மாமனார் அன்று வாங்கிய நிலங்களின் மதிப்பு சென்னையில் இப்ப கோடி கோடியாக கொட்டுகிற்து.உழைப்பும் சேமிப்பும் என்றும் வீண் போவதில்லை.


    நல்ல பகிர்வு சார்..தொடர்ந்து எழுதுங்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Asiya Omar October 10, 2012 9:34 PM
      //வை.கோ சார்,மஞ்சூ கதை எனக்கு ஆச்சரியமாக இல்லை,இப்படி நிறைய பேர் சிறு தொழில் செய்து பெரிய நிலையில் வாழ்ந்து காட்டியிருக்காங்க..//

      வாருங்கள் மேடம். வணக்கம். ஆச்சர்யமே இல்லை தான் மேடம். எனக்கும் இதுபோல உழைப்பால் மட்டுமே உயர்ந்த பலரின் கதைகள் தெரியும்.

      எந்தத்தொழிலும் உண்மையாக நேர்மையாக செய்து அதில் நம் திறமையையும் முழு ஈடுபாட்டினையும் காட்டி முன்னேற முடியும் என்பதில் அதிக நம்பிக்கையுள்ளவன் தான் நானும். கொஞ்சம் அதிர்ஷடமும் கை கொடுக்க வேண்டும். நான் இதுபற்றிய விஷயத்தில், தலைப்பில் ஒருசில பாஸிடிவ் கதைகள் எழுதி வைத்துள்ளேன். இன்னும் அவற்றை நான் என் பதிவுகளில் வெளியிடவில்லை.

      தொடரும் ....

      நீக்கு
    2. VGK to ASIYAOMAR Madam.....

      //என் தோழியின் மாமனார் சிறுவயதில் வெறும் முன்னூறு ரூபாயை மூலதனமாகக் கொண்டு சிறு தொழில் ஆரம்பித்து, சம்பாதித்து மகனை சி.ஏ. படிக்க வைத்து அவர் இப்ப வெளிநாட்டில்.மாமனார் அன்று வாங்கிய நிலங்களின் மதிப்பு சென்னையில் இப்ப கோடி கோடியாக கொட்டுகிற்து.//

      உழைப்பினால் உயர்ந்த அந்த அதிர்ஷ்டசாலி மனிதரைப் பற்றி கேட்கவே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

      //உழைப்பும் சேமிப்பும் என்றும் வீண் போவதில்லை.//

      உண்மை தான் மேடம். சத்தியமான வாக்கு! சந்தோஷம்.

      //நல்ல பகிர்வு சார்..//

      மிக்க நன்றி மேடம்.

      //தொடர்ந்து எழுதுங்கள்..//

      ஆகட்டும் மேடம்.. நேரம் + சந்தோஷமான மனநிலை + மின்சார விநியோகம் சீராக இருத்தல் + என் கணனியின் உடல் நிலை + என் உடல் நிலை + என் மேலிடத்தின் ஒத்துழைப்பு எல்லாம் எனக்குச் சாதகமாக அமையும் போது நிச்சயமாக நான் பலவிஷயங்களைப் பகிர்ந்து கொள்வேன், மேடம்.

      தங்களின் அக்கறைக்கும் என் மீது காட்டும் அன்புக்கும் என் மனமார்ந்த நன்றிகள் மேடம்.

      அன்புடன்,
      VGK


      நீக்கு
  14. மிக அருமையாக உங்களுக்கே உரிய நகைச்சுவையுடன் கலந்து எழுதி இருக்கீங்க,

    // சமோசா ஒன்று விற்றால் 75 பைசாவா , அப்ப நான் வேணுமுன்னா ஒரு நாளைக்கு 1000 சமோசா செய்து தருகிறேன் யாராவது விற்று தந்துடுங்களே// ஹிஹி ..//

    மற்ற பிசினஸ் இப்ப ஊரில் எல்லாரும் அப்படி தான் ஒரு 10 பேர் சேர்ந்து ஓவ்வொரு ஏரியா , வரும் கமிஷனை பிரித்து எடுத்து கொள்கிறார்கள்.
    இப்படி காலி மனை வாங்கி 5 வருடத்துக்கு ஒரு முறை விற்று லாபம் பார்பப்தும் சகஜம் தான் கோபு சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. VGK to Mrs. JALEELA KAMAL Madam ....

      //மற்ற பிசினஸ் இப்ப ஊரில் எல்லாரும் அப்படி தான் ஒரு 10 பேர் சேர்ந்து ஓவ்வொரு ஏரியா , வரும் கமிஷனை பிரித்து எடுத்து கொள்கிறார்கள்.//

      ஆமாம் மேடம். தெரியும்.
      பிழைக்கத் தெரிந்த புத்திசாலிகள்,
      பாராட்டத்தான் வேண்டும்.

      //இப்படி காலி மனை வாங்கி 5 வருடத்துக்கு ஒரு முறை விற்று லாபம் பார்ப்பதும் சகஜம் தான் கோபு சார்.//

      ஆமாம். இது எங்குமே நடப்பது தான். சகஜம் தான். நானே செய்வதும் உண்டு தான்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புள்ள
      கோபு

      நீக்கு
    2. VGK's பதில் பகுதி-1
      To
      Jaleela Kamal October 10, 2012 10:22 PM

      //மிக அருமையாக உங்களுக்கே உரிய நகைச்சுவையுடன் கலந்து எழுதி இருக்கீங்க//

      வாருங்கள் மேடம், வணக்கம் மேடம்,
      மிக்க மகிழ்ச்சி மேடம்.

      // சமோசா ஒன்று விற்றால் 75 பைசாவா , அப்ப நான் வேணுமுன்னா ஒரு நாளைக்கு 1000 சமோசா செய்து தருகிறேன் யாராவது விற்று தந்துடுங்களே// ஹிஹி ..//

      ஆஹா! அருமையான ஐடியா தான் இதுவும்.
      இதற்கு என் அன்புத்தம்பி “அவர்கள் உண்மைகள்” பதில் அளிப்பார். இதுபோன்ற வேலைவாய்ப்புகள் தேவை என்று மேலே சொல்லியுள்ளார், அந்த இளைஞர்.

      என்னால் சமோஸா சாப்பிடமட்டுமே முடியும் மேடம். ஓடியாடி உற்சாகமாக விற்றுவர நான் லாயக்கு இல்லை.

      தொடரும்.... [தொடர்ச்சி மேலே]

      நீக்கு
  15. Sir, So realistic.
    Yes, when we were young, we never imagine this much of amount now my and daughter are getting. But sure sir, i can say, we were very happy on those days comparing with the recent guys. Its true.
    Should not say lie, not steal others property, then everything is O.K. sir.
    Nice write up. Thanks for sharing.
    viji

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. viji October 10, 2012 10:37 PM
      Sir, So realistic.
      Nice write up. Thanks for sharing.
      viji//

      வாருங்கள் என் அன்புக்குரிய விஜி மேடம்.
      வணக்கம். எப்படி இருக்கீங்க, செளக்யமா?
      தங்களின் வருகை எனக்கு மிகவும் சந்தோஷம் அளிக்கிறது.

      திருடாமல், பொய் சொல்லாமல் எந்தத்தொழிலும் செய்யலாம், சம்பாதிக்கலாம் அதில் தவறு ஒன்றும் இல்லை என்று சொல்லியுள்ளது ... சுவையாக உள்ளது, மேடம்.

      நாம் அந்தக்காலத்தில் குறைவான சம்பளத்தில் திட்டமிட்டு குடும்பம் நடத்தி, கொஞ்சமாக சேமித்து, கெளரவமாக சிறப்பாக வாழ்ந்ததை நினைவூட்டியுள்ளதும் மகிழ்ச்சியளிக்கிறது.

      இன்று எவ்வளவு சம்பளம் வந்தாலும் போதவில்லை தான்.
      நிம்மதியும் இல்லை தான். அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

      அன்பான வருகைக்கும் அழகான கருத்துப்பகிர்வுகளுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      அன்புடன் தங்கள்,
      கோபு

      நீக்கு
  16. வணக்கம் அண்ணா,நலமா. நிஜமான கதைதான். நகைச்சுவையும் சேர்த்து
    எழுதியிருக்கிறீங்க.

    //”உங்களைப்போன்றவர்களைப்பார்த்து நான் மிகவும் பரிதாபபடுவது உண்டு. தினமும் நாள் முழுவதும் ஓய்வு ஏதும் இன்றி இப்படி உழைக்கிறீங்களே; உங்களுக்கெல்லாம் சோர்வு ஏதும் ஏற்படுவது இல்லையா? ”// டச்சிங்.எத்தனையோ பேர் எவ்வளவு கஷ்டப்படுறாங்க.
    அதற்கு உண்டான பலனை பாதிப்பேர்தான் அனுபவிக்கிறாங்க.மஞ்சூ மாதிரிசிலபேர்தான் முன்னுக்கு வருகிறாங்க.ஆனாலும் இமா கூறியபடி சந்தோஷம்,நிம்மதி இருக்கா தெரியவில்லை.

    //கழுத்தில் உள்ள ’டை’ யை கழட்டி இப்போவே கையிலே வெச்சுக்கிட்டேன். காலில் உள்ள ஷூவை வீட்டுக்குப்போய்த்தான் கழட்டணும்.//
    சிரித்து முடியல.
    தொடர்ந்து எழுதுங்க அண்ணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ammulu October 10, 2012 10:43 PM
      //வணக்கம் அண்ணா,நலமா.//

      வாங்கோ அம்முலு. நான் நலமே.
      நீங்கள் எப்படி செளக்யம் தானே?

      //நிஜமான கதைதான். நகைச்சுவையும் சேர்த்து
      எழுதியிருக்கிறீங்க.//

      ரொம்ப சந்தோஷம்...மா

      ***”உங்களைப்போன்றவர்களைப்பார்த்து நான் மிகவும் பரிதாபபடுவது உண்டு. தினமும் நாள் முழுவதும் ஓய்வு ஏதும் இன்றி இப்படி உழைக்கிறீங்களே; உங்களுக்கெல்லாம் சோர்வு ஏதும் ஏற்படுவது இல்லையா?”***

      //டச்சிங்.எத்தனையோ பேர் எவ்வளவு கஷ்டப்படுறாங்க.
      அதற்கு உண்டான பலனை பாதிப்பேர்தான் அனுபவிக்கிறாங்க.//

      கரெக்ட் அம்முலு. சரியாகவே சொல்லிட்டீங்க.

      //மஞ்சூ மாதிரி சிலபேர்தான் முன்னுக்கு வருகிறாங்க.//

      இதுவும் கரெக்ட். நம் தங்கச்சி மஞ்சுபாஷிணி போலவா? ;)

      //ஆனாலும் இமா கூறியபடி சந்தோஷம், நிம்மதி இருக்கா தெரியவில்லை.//

      இதைக்கூறியுள்ள இமாவும், அம்முலுவும் எப்போதுமே சந்தோஷமாக இருந்தால் போதும் எனக்கு.

      ***கழுத்தில் உள்ள ’டை’ யை கழட்டி இப்போவே கையிலே வெச்சுக்கிட்டேன். காலில் உள்ள ஷூவை வீட்டுக்குப் போய்த்தான் கழட்டணும்.***

      //சிரித்து முடியல... தொடர்ந்து எழுதுங்க அண்ணா.//

      இந்த வரிகள் அந்த ஆங்கில மின்னஞ்சலில் இல்லாதவை.
      நானாக நகைச்சுவைக்காக [உணர்வுகளை வெளிப்படுத்த] என் தமிழாக்கத்தில் மட்டும் சேர்த்துள்ளவை. அதைப் பார்த்து என் அம்முலு சிரித்தது, ரொம்பவும் சந்தோஷமாகவே உள்ளது.

      பிரியமுள்ள
      கோபு அண்ணா

      நீக்கு
  17. ”மஞ்சூ”. ரசிக்கத்தக்க நல்லதொரு காமெடிக் கற்பனை நேர்க்காணல்.

    //எதுவாயினும் 'மனத்திருப்தி' அமைந்தவர் வாழ்க்கைதான் 'தரமானது' என்பது என் அபிப்பிராயம் அண்ணா. // இமா கூறியது.
    100% உண்மை. இமாவின் கூற்று + என் கூற்றும்:)

    // ”இஞ்சிப்பச்சிடி தொட்டு நக்குடி”
    கழுத்தில் உள்ள ’டை’ யை கழட்டி இப்போவே கையிலே வெச்சுக்கிட்டேன். காலில் உள்ள ஷூவை வீட்டுக்குப்போய்த்தான் கழட்டணும். என்னடா வாழ்க்கை இதுன்னு வெறுத்துப்போய் உள்ளேன். //

    சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த நகைச்சுவை வரிகள்.

    பதிவுலக மீள்...வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி!
    தொடர்ந்து பதிவுகளை பதியுங்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளமதி October 10, 2012 11:18 PM
      //”மஞ்சூ”. ரசிக்கத்தக்க நல்லதொரு காமெடிக் கற்பனை நேர்க்காணல்.//

      வாங்கோ, ’யங்க் மூன்’! எப்படி இருக்கீங்க? செளக்யமா?
      கடைசியில் கொஞ்சமாவது அதிரஸம் கிடைத்ததா? இல்லையா? அஞ்சூ [ஏஞ்சலின் நிர்மலா] கொடுத்தாங்களா, அதிரா கொடுத்தாங்களா? ;))))))

      //எதுவாயினும் 'மனத்திருப்தி' அமைந்தவர் வாழ்க்கைதான் 'தரமானது' என்பது என் அபிப்பிராயம் அண்ணா.//
      [இது இமா கூறியது.] 100% உண்மை.

      இமாவின் கூற்று + என் கூற்றும்:)

      அப்படியா சரி, சரி. அப்போ இமாவுக்கான பதிலையே நீங்களும் படிச்சுக்கோங்க. [நல்லவேளை நான் பிழைத்துக் கொண்டேன்]

      *** ”இஞ்சிப்பச்சிடி தொட்டு நக்குடி”
      கழுத்தில் உள்ள ’டை’ யை கழட்டி இப்போவே கையிலே வெச்சுக்கிட்டேன். காலில் உள்ள ஷூவை வீட்டுக்குப் போய்த்தான் கழட்டணும். என்னடா வாழ்க்கை இதுன்னு வெறுத்துப்போய் உள்ளேன்.***

      //சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த நகைச்சுவை வரிகள்.//

      இதெல்லாம் தமிழாக்கத்தில் என்னோடசொந்த வரிகளாக்கும்.
      ரசித்து எழுதியுள்ளது மகிழ்ச்சியளிக்குது ... இளமதி.

      //பதிவுலக மீள்...வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி!
      தொடர்ந்து பதிவுகளை பதியுங்கள் ஐயா!//

      ஆகா... பேஷா... செஞ்சுடுவோம். ஆனா நீங்க ரெடியா?

      [உங்கள் வலைத்தளத்தில் ஏதேனும் காட்ட (வெளியிட) நீங்க ரெடியான்னு கேட்டுள்ளேன்.]

      பிரியமுள்ள,
      VGK

      நீக்கு
  18. ஒரு இருபது வருடம் முன்பு திருச்சி காந்தி மார்க்கெட் கொத்தமல்லி மொத்த கமிஷன் ஏஜண்ட் ஒருவர் முப்பது லட்ச ரூபாய்க்கு வீடு கட்டிய

    கதையை என் மச்சினர் சொல்ல நான் அப்போது நம்பவில்லை. ஆனால் 'சம்சாவை'ப் பார்க்கும் போது 'கொத்தமல்லியும்' உண்மை தான் போல் இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said..

      வாங்கோ வாங்கோ ராமமூர்த்தி சார்.
      செளக்யமாக இருக்கேளா? நானும் அன்பின் சீனா ஐயாவும் போன வாரம் வலைபோட்டுத் தேடினோம் உங்களை.

      கடைசியிலே உங்களை நான் அந்தப்பெரிய மார்க்கெட்டிலே கொத்துமல்லிக்கட்டு விற்கும் அம்மாளிடம் விசாரித்து விட்டுத்தான் கப்புன்னு பிடிச்சு கபால்னு சீனா ஐயாவிடம் சேர்க்க முடிந்தது. அட்வான்ஸ் வாழ்த்துகள், சார்.

      தொடரும்.....

      நீக்கு
    2. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி October 10, 2012

      //ஒரு இருபது வருடம் முன்பு திருச்சி காந்தி மார்க்கெட் கொத்தமல்லி மொத்த கமிஷன் ஏஜண்ட் ஒருவர் முப்பது லட்ச ரூபாய்க்கு வீடு கட்டிய கதையை என் மச்சினர் சொல்ல நான் அப்போது நம்பவில்லை.

      ஆனால் 'சம்சாவை'ப் பார்க்கும் போது 'கொத்தமல்லியும்' உண்மை தான் போல் இருக்கிறது! //

      நிச்சயமாக உண்மை தான், சார்.

      நாம் தினமும் அந்த பெரிய மார்க்கெட்டைத்தாண்டி தானே நம் ஆபீஸுக்குப் போவோம் வருவோம்.

      அதுவும் தொடர்ச்சியாக 38 ஆண்டுகளாக நான் போய் வந்துள்ளேன்.

      அங்கு சின்னச்சின்ன கடைகள் ஒரு 5 அடிக்கு 5 அடி தான் அதில் இடம் இருக்கும்.

      அதில் ஒரு ஆள் + ஒரு டெலிஃபோன் மட்டுமே இருக்கும்.

      கடையின் போர்டில் “வெல்லமண்டி” ”வெங்காயமண்டி” “அரிசி மண்டி” ”பருப்புமண்டி” மொத்த வியாபாரம்ன்னு போட்டிருப்பார்கள்.

      ஃபோனிலேயே கொள்முதல்+விற்பனை அதுவும் லாரி லாரியாக. எல்லாமே கமிஷன் மண்டி தான்.

      நான் பார்க்கவே அங்கு நிறைய பேர்கள் நன்கு முன்னேறி மிகப்பெரிய ஆட்களாக ஆகிவிட்டார்கள் என்பதே உண்மை.

      உங்கள் மச்சினர் சொன்னதும் 100 க்கு 100 உண்மைதான்.
      20 வருடங்கள் முன்பு 30 லட்சம் என்பது, இன்றைய மூணு கோடிக்குச் சமமானதாக இருக்கும் என்பது என் கருத்து.

      அபூர்வ வருகைக்கு நன்றி.

      பிரியமுள்ள
      கோபு

      நீக்கு
  19. நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களின் பதிவை படிப்பதில் மகிழ்ச்சி சார்.

    நம்மளை விட சமோசாக்காரர் வாழ்க்கை தேவலாம் போல இருக்கே...:)

    ஆனா இருப்பதை வைத்துக் கொண்டு சிறப்புடன் வாழ்வதே மேல் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவை2தில்லி October 10, 2012 11:46 PM

      வாங்கோ மேடம், செளக்யமா இருக்கீங்களா?

      //நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களின் பதிவை படிப்பதில் மகிழ்ச்சி சார்.//

      அப்படியா. சந்தோஷம் மேடம்.

      //நம்மளை விட சமோசாக்காரர் வாழ்க்கை தேவலாம் போல இருக்கே...:)//

      இக்கரைக்கு அக்கரை,எல்லாமே பச்சையாகத்தான் தெரியும்.

      //ஆனா இருப்பதை வைத்துக் கொண்டு சிறப்புடன் வாழ்வதே மேல் என்று நினைக்கிறேன்.//

      நல்ல சிறப்பான நினைப்புத்தான்.

      அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் நன்றிகள்.

      நீக்கு
  20. எடுத்ததுமே சில விஷயங்கள் நம்மால் நம்ப முடியாமலும் ஜீரணிக்க முடியாமலும் தான் உள்ளது. அப்படின்னு சொல்லிட்டே ஜாக்ரதையா ஆரம்பிச்சிருக்கீங்க அண்ணா.... " SMOKING IN INJURIOUS TO HEALTH " அப்டின்னு சொல்றமாதிரி....

    யாருக்கோ இரயிலில் ஏற்பட்ட அனுபவத்தை இங்கு தமிழாக்கம் செய்தமைக்கு முதன்மை நன்றிகள் அண்ணா...

    ஏன்னா இதில் நிறைய நல்ல விஷயங்கள் எல்லோருக்கும் பயன் தரும் விஷயங்கள் இருப்பதை உணரமுடிகிறது. உதாரணத்திற்கு... கல்வி மட்டுமே ஒரு மனிதனின் வாழ்க்கை தரத்தை உயர்த்துகிறது என்று பெற்றோர்கள் பிள்ளைகளை மாங்கு மாங்கு என்று படிக்கவைத்து வெளிநாட்டிற்கு மேல் படிப்புக்கு அனுப்பி சம்பாதிக்கவைத்து அங்கேயே செட்டில் ஆகிவிடுபவரும் உண்டு...

    ஆனால் நம் நாட்டிலேயே உழைத்து, முயற்சி எடுத்து அதிகம் படிக்காதவரும் வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதற்கான உதாரணம் தான் இந்த அனுபவம்....

    உழைப்பு... யாருமே சற்று யோசித்து பின்வாங்கும் விஷயம்... வியர்வையில், வெயிலில், ஓடித்திரிந்து சமோசா விற்று அதில் இத்தனை கமிஷன் பெற்று பிள்ளைக்கு பேங்கில் பணம் சேமிப்பிலும் இட்டு, நிலமும் வாங்கிப்போட்டு....

    ஆகமொத்தம் இந்த கதையில்..... கிடைத்த நல்லவிஷயங்கள்....

    1. கல்வியில்லை என்றாலும் வாழ்க்கைதரத்தை உயர்த்தலாம்.
    2. உழைப்பு நேரம் காலம் பார்க்காது உழைக்கவேண்டும்.
    3. இடைவிடாத முயற்சி... ஒரு ரயில்பெட்டில மட்டும் சமோசா வித்துட்டு ரெஸ்ட் எடுப்பது போல் இல்லாமல் இன்னும் இன்னும் என்று தொடர்ச்சியாக இருக்கும் பெட்டிகளில் ஓடி ஓடி ஓடி விற்பது....
    4. நம்பிக்கை..... இத்தனை உழைத்தால் கண்டிப்பாக இத்தனை லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கை...
    5. நேர்மை.... முதலாளி கொடுத்த சமோசாவை இன்னும் அதிக கமிஷன் மேற்பைசா போட்டு விற்காமல் முதலாளி சொன்ன காசுக்கு விற்கும் நேர்மை....

    இதெல்லாமே முயற்சித்தால் வெற்றி கண்டிப்பா கிடைக்கும்.... என்று மெசெஜ் தந்துள்ள பகிர்வு அண்ணா இது....

    ஒரு சமோசா 5 ரூபாய் என்றால் அதில் 75 பைசா கமிஷன்... பரவாயில்லையே... தாம்பரம் குரோம்பேட்டை அப்படின்னு லோக்கல் ட்ரெயினாக இல்லாமல் தொடர்வண்டி அதாவது தூர பயணம் அப்ப இதுபோன்று ஆட்கள் வந்து பொருட்கள், உணவுகள், பழங்கள், உடைகள் இப்படி எல்லாம் விற்பதை பார்த்துக்கொண்டிருந்தோம் நாங்களும்..... இளநீர், பழம், பூ, குழந்தைகளுக்கு கலர் செய்யும் புத்தகங்கள் இதுபோன்று வாங்கினோம்.... உழைப்பை மதிக்கிறோம் நாமும்.. அதனால் பயனும் பெறுகிறார்கள்... ஆனால் எனக்கு தெரிந்தவரை இத்தனை பணக்காரராய் யாரும் ஆனதா தெரியலை..... தினப்படி வாழ்க்கை நடத்த இவர்களின் இந்த உழைப்பு உதவுகிறது....

    மஞ்சுநாதன் ..... பெங்களூர்ல மஞ்சுநாத் அப்டின்னு சொல்வாங்க ஈஸ்வரனை.... கோயிலும் இருக்கு.. மஞ்சுநாத் டெம்பிள்....

    மிக அருமையான பகிர்வு அண்ணா... உங்களுக்கு வந்த மெயிலை அதை அழகாக தமிழாக்கம் செய்து எங்களுக்கும் பகிரத்தந்தமைக்கு மனம் நிறைந்த அன்புநன்றிகள் அண்ணா....

    மீண்டும் உங்கள் பதிவுகள் வலைப்பூவில் தொடரட்டும் அண்ணா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மஞ்சுபாஷிணி October 11, 2012 12:33 AM

      வாங்கோ மஞ்சு, வணக்கம்,எப்படி இருக்கீங்க?
      பார்த்து ரொம்ப நாள் ஆச்சுப்போல இருக்குது.

      //எடுத்ததுமே சில விஷயங்கள் நம்மால் நம்ப முடியாமலும் ஜீரணிக்க முடியாமலும் தான் உள்ளது. அப்படின்னு சொல்லிட்டே ஜாக்ரதையா ஆரம்பிச்சிருக்கீங்க அண்ணா.... " SMOKING IS INJURIOUS TO HEALTH " அப்டின்னு சொல்றமாதிரி....//

      அடடா, இதுவும் நல்லாவே இருக்குது. அதே அதே xxxx ;!

      -=-=-=-=-=-=-=-

      அப்புறம் மஞ்சு, இந்தக்கதைக்கு என்ன தலைப்பு கொடுக்கலாம்னு யோசித்தேன்.

      கொஞ்சநாளாவே அடிக்கடி என் வாய் அதே அதே சபாபதே! ததாஸ்து!! என்ற வார்த்தைகளை உச்சரித்துக்கொண்டே இருக்கிறது, அதுவும் என்னை அறியாமலேயே.

      அப்போ உடனே உங்க நினைவும் வந்திடுது.

      சமீபத்திய வலைச்சர ஆசிரியராக சிறப்பாகப் பணியாற்றினீங்க நீங்கன்னு, உலகமே [வலையுலகமே]
      சொல்லுவதாக நம் வலைச்சர தலைமை ஆசிரியர் சீனா ஐயா வேறு உங்களைப்பற்றி என்னிடம் டெலிஃபோனில் பாராட்டிப் பேசினார்.

      நம்ம திருமதி நிலாமகள் மேடம் வேறு ஏதேதோ சொல்லி வலைச்சரத்திலேயே பின்னூட்டம் கொடுத்திருந்தாங்க.

      நீங்க வேறு கடந்த ஒரு மாதமாக எப்போதுமே என் தொடர்பு எல்லைக்குள்ளே இருக்கீங்க.

      அதனாலும், மீண்டும் நான் என் வலைத்தளத்தில் எழுத வேண்டும் என வலைச்சரத்தில் கோரிக்கை வைத்துள்ள அன்புத்தங்கை மஞ்சுவை எப்படியாவது இந்தத் தலைப்பில் கொண்டு வந்தால் என்னன்னு யோசித்தேன்.

      ஆனால் இதில் வரும் இரண்டே இரண்டு கதா பாத்திரங்களும் ஆண்களாகவே அமைஞ்சுட்டாங்க!

      அதனால் அதில் ஒருவருக்கு மஞ்சுநாதன் என்ற பெயர் கொடுத்தேன். மஞ்சூ என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படுவதாக எழுதினேன்.

      தொடரும் ......

      நீக்கு
    2. VGK To மஞ்சு .... [2]

      //ஆகமொத்தம் இந்த கதையில்..... கிடைத்த நல்ல விஷயங்கள்....

      1. கல்வியில்லை என்றாலும் வாழ்க்கைதரத்தை உயர்த்தலாம்.

      2. உழைப்பு நேரம் காலம் பார்க்காது உழைக்கவேண்டும்.

      3. இடைவிடாத முயற்சி... ஒரு ரயில்பெட்டியில் மட்டும் சமோசா வித்துட்டு ரெஸ்ட் எடுப்பது போல் இல்லாமல் இன்னும் இன்னும் என்று தொடர்ச்சியாக இருக்கும் பெட்டிகளில் ஓடி ஓடி ஓடி விற்பது....

      4. நம்பிக்கை..... இத்தனை உழைத்தால் கண்டிப்பாக இத்தனை லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கை...

      5. நேர்மை.... முதலாளி கொடுத்த சமோசாவை இன்னும் அதிக கமிஷன் மேற்பைசா போட்டு விற்காமல் முதலாளி சொன்ன காசுக்கு விற்கும் நேர்மை....

      இதெல்லாமே முயற்சித்தால் வெற்றி கண்டிப்பா கிடைக்கும்.... என்று மெசெஜ் தந்துள்ள பகிர்வு
      அண்ணா இது.... //

      மஞ்சு, உங்களிடம் நான் பழகிவரும் சமீபகாலமாக நான் கவனித்த, [உங்களிடம் எனக்கு மிகவும் பிடித்தமான] ஒரு விஷயம் என்னவென்றால், நீங்கள் ஒரு அன்னபக்ஷிபோல செயல்படுகிறீர்கள்.

      அன்னபக்ஷியின் சிறப்பு என்னவென்றால் தண்ணீர் கலந்துள்ள பாலை அதனிடம் கொடுத்தால் அதிலுள்ள தண்ணீரை மட்டும் தனியாகப் பிரித்து விட்டு, சுத்தமான பாலை மட்டுமே அருந்தும் விசேஷ சக்தி அதற்கு உண்டு எனக்கேள்விப் பட்டுள்ளேன்.

      அதுபோல தாங்கள் யாருடைய எந்த ஒரு படைப்பினைப் படித்துக் கருத்துக்கூறினாலும், அதில் உள்ள நல்ல பாஸிடிவ் ஆன விஷயங்களை மட்டும் எடுத்துச்சொல்லி, பாராட்டி தானும் மகிழ்ந்து, எழுதினவரையும் மகிழ்விக்கிறீர்கள்.

      அதுதான் தங்களின் [ஸ்பெஷாலிடி] தனிச்சிறப்பு, நல்ல குணம், நேர்மறையான எண்ணம்.

      அதையே தான் மேலே ஐந்து நல்ல விஷயங்கள் என இந்தப்பதிவிலிருந்தும் எடுத்துச் சொல்லியுள்ளீர்கள்.

      இந்தத் தங்களின் தனித்தன்மைக்கு என் ஸ்பெஷல் பாராட்டுக்கள்பா .. ம ஞ் சூ ஊஊஊஊஊஊஊஊ.

      தொடரும்.....

      நீக்கு
    3. VGK To மஞ்சு .... [3]

      //... உழைப்பை மதிக்கிறோம் நாமும்.. அதனால் பயனும் பெறுகிறார்கள்... ஆனால் எனக்கு தெரிந்தவரை இத்தனை பணக்காரராய் யாரும் ஆனதா தெரியலை..... தினப்படி வாழ்க்கை நடத்த இவர்களின் இந்த உழைப்பு உதவுகிறது ....//

      இப்படியும் இருக்கலாம் அப்படியும் இருக்கலாம் தான் மஞ்சு.

      ஒருவருக்கு அவரின் உண்மை உழைப்புடன் கூட லேசாக ஓர் அதிர்ஷ்டக்காற்று வீசினால் போதும். அவர் எங்கேயோ மிக உயர்ந்த நிலைக்குச் சென்று விடுவார்.

      ஓர் அதிர்ஷ்டக்காற்று வீசும்போது கீழே வீதியில் எங்கேயோ சுழன்று கொண்டிருக்கும் குப்பையும் கோபுரக்கலசத்தின் மீது உச்சியில் போய் உட்காரக்கூடும்.

      அதே ஓர் துரதிஷ்டக்காற்று வீசினால், கோபுரக்கலசமே
      கூட குப்பைபோல கீழே வீசியெறிப்படவும் கூடும்.

      //மஞ்சுநாதன் ..... பெங்களூர்ல மஞ்சுநாத் அப்டின்னு சொல்வாங்க ஈஸ்வரனை.... கோயிலும் இருக்கு.. மஞ்சுநாத் டெம்பிள்....//

      அப்படியா, ரொம்ப சந்தோஷம், மஞ்சு ;)

      //மிக அருமையான பகிர்வு அண்ணா... உங்களுக்கு வந்த மெயிலை அதை அழகாக தமிழாக்கம் செய்து எங்களுக்கும் பகிரத்தந்தமைக்கு மனம் நிறைந்த அன்பு நன்றிகள்
      அண்ணா....//

      சமோஸா சூடாக சுவையாக ருசியாக ஒரு டஜன் சாப்பிட்டது போல மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, மஞ்சு.

      //மீண்டும் உங்கள் பதிவுகள் வலைப்பூவில் தொடரட்டும் அண்ணா....//

      அன்புத்தங்கை மஞ்சுவின் கோரிக்கைகளை ஏற்க கட்டாயம் முயற்சிப்பேன். பெங்களூர் ஈஸ்வரன் மஞ்சுநாத் அருளும்
      கிட்டட்டும், மஞ்சு.

      பிரியமுள்ள
      கோபு அண்ணா

      நீக்கு
  21. ஆஹா..நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவு.படித்து விட்டு கருத்திடுகிறேன்.இனி தொடவீர்கள் தானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸாதிகா October 11, 2012 12:56 AM
      ஆஹா..நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவு.படித்து விட்டு கருத்திடுகிறேன். இனி தொடர்வீர்கள் தானே?//

      வாங்கோ Mrs. ஸாதிகா Madam. அன்பான வருகைக்கு நன்றி. மெயில் பார்த்தேன். சந்தோஷம். நல்லபடியாக புனித யாத்திரைக்குச் சென்று வாருங்கள். தொடர்வோம்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  22. முதலில் உங்கள் பதிவைப் பார்த்ததிலே மகிழ்ச்சி! படித்ததிலே பெருமகிழ்ச்சி! உங்கள் பாணியில் சொன்ன விதம் அருமை! திரு சீனா அவர்கள் கூறியதுபோல்
    //படிக்காத - உழைப்பினை மட்டுமெ நம்பி வாழ்பவர்கள் இன்று பயங்கர பணக்காரர்களாக் இருக்கிறார்கள். வெளியே தெரியாமல் எளிமையாக வாழ்க்கை நடத்திக் கொண்டு செய்யும் தொழிலைத் தெய்வமாக வணங்கி முழு ஈடுபாட்டுடன் செய்து வருகிறார்க. இவர்களைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. //

    பயனுள்ள பகிர்வு நன்றி! மீண்டும் மீண்டும் புதிய இடுகைகள் தருக!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Seshadri e.s. October 11, 2012 1:10 AM
      //முதலில் உங்கள் பதிவைப் பார்த்ததிலே மகிழ்ச்சி! படித்ததிலே பெருமகிழ்ச்சி! உங்கள் பாணியில் சொன்ன விதம் அருமை!

      பயனுள்ள பகிர்வு நன்றி! மீண்டும் மீண்டும் புதிய இடுகைகள் தருக!//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமாந்த நன்றிகள்.

      VGK

      நீக்கு
  23. Interesting post GOpu Sir. Thanks for sharing. It reminds me of a man whose car we hired couple of times for trips. He came from a down south district of tamil nadu as a teenage boy. He like this samosa vendor, used to sell vadapav in the trains. Later he hired a boy & a set up a small thatch by road side & started doing the business & also sold them in the train. later he lended his business in train to the boys who had newly came to the city like him & supplied them the vadapavs from his roadside shop. Then he set up another shop in the same locality ....like this he grew up slowly in his life now owning 4 vadapav shops, 1 textile, 1 travels and some real estate business too....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. MiraOctober 11, 2012 1:33 AM
      Interesting post GOpu Sir. Thanks for sharing.

      அன்புள்ள மீரா, வாருங்கள், வணக்கம். செளக்யமா?
      எப்படி இருக்கிறீர்கள். நலம் தானே.

      சாதாரணமாக சிறுமுதலீட்டில் ஒரு தொழில் தொடங்கிய ஒருவர், படிப்படியாக முன்னேறி, பல தொழில்களை நடத்தி, பலருக்கும் வேலைவாய்ப்புகள் அளித்து வாழ்க்கையில் வெகுவாக முன்னேறியுள்ளதாகவும், அவரைத் தங்களுக்கும் தெரியும் என்று சொல்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.

      இதுபோன்ற பல உழைப்பால் உயர்ந்தவர்களை நானும் அறிவேன்.

      தங்களின் அன்பான வருகையும் அழகான எடுத்துக்காட்டுகளுடன் கூடிய கருத்துக்களும் என்னை மிகவும் மகிழ்விக்கிறது. மனமார்ந்த நன்றிகள்.

      பிரியமுள்ள
      கோபு

      நீக்கு
  24. நல்ல கதை. படிப்பினையைத் தரும் வகையில் அங்கங்கே சில வார்த்தைகளைப் போட்டு நீங்கள் எழுதியிருப்பதையும் சொல்ல வேண்டும். புத்தக விற்பனையிலிருந்து நிறைய தொழில்களில் 30%க்கு மேலான கமிஷன் உண்டு என்பது பல பேருக்குத் தெரியாது. வரும் கமிஷனை வாடிக்கையாளர்களுடன் ஓரளவு பகிர்ந்து கொள்வோருக்கு விற்பனை எகிறும் என்பது வியாபார தாரக மந்திரம்.

    உருவாகும் எந்த உற்பத்திப் பொருளையும் ஜனங்க கையில் கொண்டு போய்ச் சேர்க்கிற தந்திரத்தில் தான் விற்பனையின் ஜீவநாடியே இருக்கிறது. அந்த மார்க்கெட்டிங் காரியத்தைச் செய்வோருக்கு வாரிக்கொடுத்தால், வியாபாரம் மடங்கு மடங்காய் பல மடங்காகும் என்பதைத் தெரிந்து வைத்திருப்பார் போலிருக்கு
    மஞ்சுநாதனின் முதலாளி.

    தொழில் முனைவோருக்கு ஊக்கம் கொடுக்கும் கதை. 'வால்மார்ட் வந்தாலும் ஜெயமுண்டு; பயமில்லை, மனமே' என்று புன்னகைக்கும் கதை. வாழ்த்துக்கள், வைகோ சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் திரு ஜீவி ஐயா, வணக்கம். செளக்யமா?
      நல்லா இருக்கீங்களா? எங்கே சார் இருக்கீங்க இப்போ? [இந்தியாவிலா? அல்லது அமெரிக்காவிலா?] எங்கிருந்தாலும் வாழ்க!

      //வரும் கமிஷனை வாடிக்கையாளர்களுடன் ஓரளவு பகிர்ந்து கொள்வோருக்கு விற்பனை எகிறும் என்பது வியாபார தாரக மந்திரம்.//

      ஆமாம். இந்தத் [வியாபார] தாரக மந்திரம் தெரிந்தவர்கள் பிழைத்துக் கொண்டு வியாபாரத்தில் நன்கு முன்னேறி விடுகிறார்கள்.

      //உருவாகும் எந்த உற்பத்திப் பொருளையும் ஜனங்க கையில் கொண்டு போய்ச் சேர்க்கிற தந்திரத்தில் தான் விற்பனையின் ஜீவநாடியே இருக்கிறது.//

      மிகச்சரியான கணிப்பு தான். ஆமாம் அது தான் உண்மை.

      //அந்த மார்க்கெட்டிங் காரியத்தைச் செய்வோருக்கு வாரிக்கொடுத்தால், வியாபாரம் மடங்கு மடங்காய் பல மடங்காகும் என்பதைத் தெரிந்து வைத்திருப்பார் போலிருக்கு மஞ்சுநாதனின் முதலாளி.//

      இருக்கலாம் ஐயா, அதே அதே.

      //தொழில் முனைவோருக்கு ஊக்கம் கொடுக்கும் கதை. 'வால்மார்ட் வந்தாலும் ஜெயமுண்டு; பயமில்லை, மனமே' என்று புன்னகைக்கும் கதை. வாழ்த்துக்கள், வைகோ சார்!//

      என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய ஐயா அவர்களின் அன்பான வருகையும், சிரத்தையான யதார்த்த உண்மையான கருத்துக்களுக்கும் என மிகவும் மகிழ்வளிக்கிறது.

      மனமார்ந்த அன்பு நன்றிகள், ஐயா.

      பிரியமுள்ள
      கோபு

      நீக்கு
  25. பேரனின் வரவால் உங்கள் பதிவைப் படிக்க காலதாமதம் ஆனது.

    வெகு நாட்களுக்கு பிறகு அழகான அருமையான கதை தந்து விட்டீர்கள்.

    எங்கள் வீட்டு பழக்காராம்மா திடீரென்று இறந்து விட்டார்கள் அவர்கள் 50,000 சேர்த்து வைத்து இருந்தார்கள் ஓர் இடத்தில் அவர்கள் ஏமாற்றாமல் கொடுத்து விட்டார்கள் அவர்கள் மகளிடம் என்று எல்லோரும் பேசிக் கொண்ட போது கூடை சுமந்து பழம் விற்று இவ்வவளவு சேமிப்பு வைத்து இருக்கிறார்களே என்று ஆச்சிரியப்பட்டேன்.

    உங்கள் கதையும் பின்னூட்டங்களும் ஏழைகளிடம் சேமிப்பு பழக்கமும் பணம் சேர்க்கும் கலையும் இருப்பதை தெரிந்து கொண்டேன்.
    பல வேலைகள் செய்து பணம் சேர்த்து வைக்கிறார்கள் என தெரிகிறது.
    சினிமாவில் ஒரே பாட்டில் ஏழை பல தொழில் செய்து பணக்காரர் ஆவதைக் காட்டினால் சிரிக்கிறோம்.
    அது உண்மைதான் என மெய்பித்து இருக்கிறார் மஞ்சுநாதன். அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    இனி தொடர்ந்து உங்கள் பதிவுகள் வரும் என நினைக்கிறேன்.
    வாழ்த்துக்கள் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு October 11, 2012 2:46 AM
      //பேரனின் வரவால் உங்கள் பதிவைப் படிக்க காலதாமதம் ஆனது.//

      வாருங்கள் மேடம். அதனால் என்ன, பேரனைக் கொஞ்சுவது தானே நமக்கு பாக்யம்!

      //வெகு நாட்களுக்கு பிறகு அழகான அருமையான கதை தந்து விட்டீர்கள்.//

      மிக்க நன்றி, எனக்கும் சந்தோஷமாகவே உள்ளது.

      தாங்கள் கூறியுள்ள பழக்காரம்மா கதையும் சிறப்பு தான்.

      //உங்கள் கதையும் பின்னூட்டங்களும் ஏழைகளிடம் சேமிப்பு பழக்கமும் பணம் சேர்க்கும் கலையும் இருப்பதை தெரிந்து கொண்டேன்.//

      அப்படியா? மிக்க மகிழ்ச்சி, மேடம்.

      //இனி தொடர்ந்து உங்கள் பதிவுகள் வரும் என நினைக்கிறேன். வாழ்த்துக்கள் சார்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், எதிர்பார்ப்புகளுக்கும், வாழ்த்துகளுக்கும், என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      அன்புடன் தங்கள்,
      VGK





      நீக்கு
  26. ஆரம்பித்ததும் ஏதோ சோகக்கதை என்று நினைத்தேன். அப்புறம் நீங்க கண்க்கு கொடுத்ததை பார்த்ததுடன் பிரம்மிப்பாக்கிவிட்டது.
    இந்த மஞ்சூவும் விடாமல் சமோச விற்பதை தொடருகிறாரே என்று ஆச்சரியமாக இருக்கு.மிக அருமையாக இருக்கு சார்.உழைப்பே உயர்வு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. RAMVI October 11, 2012 4:12 AM
      //ஆரம்பித்ததும் ஏதோ சோகக்கதை என்று நினைத்தேன். அப்புறம் நீங்க கண்க்கு கொடுத்ததை பார்த்ததுடன் பிரம்மிப்பாக்கிவிட்டது.

      இந்த மஞ்சூவும் விடாமல் சமோச விற்பதை தொடருகிறாரே என்று ஆச்சரியமாக இருக்கு.மிக அருமையாக இருக்கு சார்.உழைப்பே உயர்வு..//

      வாருங்கள் மேடம். நல்லா இருக்கீங்களா, செளக்யமா?
      தங்களைப்பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டது.

      ஏஞ்சலின் [நிர்மலா] கூட உங்களைப்பற்றி என்னிடம் சமீபத்தில் விசாரித்தார்கள். ஃபோன் நம்பர், மெயில் விலாசம் எல்லாம் கேட்டார்கள். பிறகு தங்களை தொடர்பு கொண்டு விட்டதாகவும் சொல்லி நன்றி கூறினார்கள்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  27. அண்ணே... நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு கதை. இந்த மஞ்சூ சமோசா விற்று அலைந்து சம்பாதிக்கிறார். சமீபத்தில் முகநூலில் வந்த பதிவு இது. பேருந்து நிலையத்தில் மஞ்சள் துணி பையில் 7 லட்சம் ரூபாயுடன் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த ஒரு நபரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று விசாரித்துள்ளனர். அந்த பணம் பிச்சை எடுத்து சேர்த்த பணம் என்று கூறியிருக்கிறார். வங்கியில் இருந்து காலையில் பணத்தை எடுத்து கொண்டு மனையடி நிலம் வாங்குவதற்காக வந்தேன் என்றிருக்கிறார். போலீசார் அந்த நபர் சொன்ன வங்கியில் விசாரிக்கும் போது வங்கி மானேஜர், உண்மைதான் தினமும் வசூலாகும் பணத்தை இங்கு வந்து கட்டுவார் என்றிருக்கிறார். அதன் பின் அவர்கள் அந்த நபரை விசாரிக்காமல் விட்டிருக்கின்றனர். கதையை படித்ததில் ஏனோ இந்த கதை ஞாபகம் வந்ததுண்ணே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புச் சகோதரி ராதா ராணி அவர்களே,

      வாருங்கள், வணக்கம். நலம் தானே!

      //அண்ணே... நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு கதை.//

      ஆமாம்மா ... நீண்ட இடைவெளியாகிவிட்டது.

      //சமீபத்தில் முகநூலில் வந்த பதிவு இது.//

      அப்படியாம்மா, எனக்கு ஆங்கிலத்தில் மின்னஞ்சல் மூலம் என்னுடன் எங்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கும் தோழி ஒருவர் மூலம் அனுப்பப்பட்டது. அதில் உள்ள ஒருசில விஷயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு, மேலும்சில என்னுடைய சொந்தக் கருத்துக்களையும் நகைச்சுவைக்காகச் சேர்த்து எழுதினேன்.

      //இது... பேருந்து நிலையத்தில் மஞ்சள் துணி பையில் ஏழு லட்சம் ரூபாயுடன் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த ஒரு நபரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று விசாரித்துள்ளனர். அந்த பணம் பிச்சை எடுத்து சேர்த்த பணம் என்று கூறியிருக்கிறார். .............. //

      ஆமாம்மா... நானும் இதுபோல சில செய்திகள் அவ்வப்போது படித்துள்ளேன். மும்பையில் ஒரு பிச்சைக்காரர் பாவம் நடு ரோட்டில் இறந்து கிடந்தாராம். அவரின் உடமைகளை சோதனையிட்ட போது ஏராளமான ரூபாய் நோட்டுக்கள் கத்தை கத்தையாக இருந்ததாம்.

      அவற்றில் பல ரூபாய் நோட்டுக்கள் இப்போது புழக்கத்தில் இல்லாத மிகப்பழைய நூறு ரூபாய் நோட்டுக்களாம். அந்த நூறு ரூபாய் நோட்டுக்கள் அளவில் மிகப்பெரியதாக இருக்கும். இப்போதுள்ள ஆயிரம் ரூபாய் நோட்டுபோல இரண்டு பங்கு உயரம் இருக்கும். அகலம் மட்டும் சற்றே குறைவாக இருக்கும்.

      நானே என் பத்து வயதில் அதனை புழக்கத்தில் பார்த்திருக்கிறேன். 1960 உடன் அதுபோல மிகப்பெரிய அளவுள்ள நோட்டுக்கள் அச்சடிப்பதை நிறுத்தி விட்டார்கள்.

      தாங்கள் கூறியுள்ள உண்மைக் கதையும் சுவாரஸ்யமானதே.

      அன்பான வருகைக்கும், கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  28. பதிவுக்கு நன்றி ஐயா,

    இதே போல் ஒரு டீக்கடைகாரரின் கதையை கேஆர்பி தளத்தில் ஒரு முறை வாசித்தது உண்டு.
    http://www.krpsenthil.blogspot.in/2010/09/blog-post_21.html

    நாம் முகசுளிப்புடன் கடந்து செல்லும் பலர் நம்மை விட அதிகம் சம்பாதிப்பது உண்மை. அதற்க்கு அவர்கள் கொடுக்கும் உடல் உழைப்பு நம்மை விட அதிகம் என்பதும் உண்மை. என் அலுவலகம் அருகில் சிறிய தள்ளுவண்டியில் டீ, போண்டா, பஜ்ஜி விற்க்கும் ஒருவரிடம் கேட்ட போது தினமும் செலவு போக 1500 ரூபாய் லாபம் கிடைக்கும் என்றார். 2000ம் காலப்பகுதிகளில் என் நண்பர் ஒருவர் பாரிமுனையில் இருந்து துடைப்பக்குச்சி(மாப் ஸ்டிக்)வாங்கி வந்து பாண்டி பஜார், நுங்கம்பாக்கம் பகுதிகளில் ரோட்டில் நின்று விற்றார். அப்போதே ஒரு நாளைக்கு 750 ரூபாய் லாபத்துடன் வீடு திரும்புவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முத்து குமரன்October 11, 2012 5:29 AM
      பதிவுக்கு நன்றி ஐயா,

      வாருங்கள் நண்பர் திரு. முத்து குமரன் சார், வணக்கம்.

      //நாம் முகசுளிப்புடன் கடந்து செல்லும் பலர் நம்மை விட அதிகம் சம்பாதிப்பது உண்மை. அதற்கு அவர்கள் கொடுக்கும் உடல் உழைப்பு நம்மை விட அதிகம் என்பதும் உண்மை.//

      எல்லாமே உண்மைதான் நண்பரே. சரியாகவே சொன்னீர்கள்.

      //2000ம் காலப்பகுதிகளில் என் நண்பர் ஒருவர் பாரிமுனையில் இருந்து துடைப்பக்குச்சி(மாப் ஸ்டிக்)வாங்கி வந்து பாண்டி பஜார், நுங்கம்பாக்கம் பகுதிகளில் ரோட்டில் நின்று விற்றார். அப்போதே ஒரு நாளைக்கு 750 ரூபாய் லாபத்துடன் வீடு திரும்புவார்.//

      நிச்சயமாக இதையும் நான் நம்புகிறேன். உழைப்பே உயர்வு தரும். ”செய்யும் தொழிலே தெய்வம் அதில் நாம் காட்டிடும் திறமையே செல்வம்” என்பார்கள். அது மிகவும் சரியே.

      அன்புடன் வருகை தந்து அழகாக சில உதாரணங்களையும் கொடுத்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள், நண்பரே.

      அன்புடன்
      VGK



      நீக்கு
  29. Interesting story/post! Nambumbadiyaa illainnaalum, nall padippinai kodukkum kathai. Hard work always pays, though not this much!

    Like Mira's story, I have seen some uneducated people coming up in life with just their knack of business intelligence.

    Keep writing Gopalakrishnan Sir!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் சகோதரி Ms. Sandhya அவர்களே, வணக்கம்.

      //நம்பும் படியாக இல்லையென்றாலும், நல்ல படிப்பினை கொடுக்கும் கதை. சுவாரஸ்யமான பதிவு. கடும் உழைப்பு மட்டுமே, இந்த அளவு இல்லாவிட்டாலும், ஓரளவு வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும்.//

      அழகாகவே நச்சென்று சொல்லியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.

      //நம் மீரா அவர்கள் சொல்லியுள்ள உண்மைக்கதை போலவே, நானும் ஒருசில படிக்காத ஆனால் வாழ்க்கையில் முன்னேறிய தொழில் ஆர்வம் உள்ளவர்களை அறிவேன்.//

      ஆம். நானும் அறிவேன். ஏட்டுப்படிப்பை விட தொழில் ஆர்வமும் அதற்கான கடும் உழைப்பும் உள்ளவர்கள் நிச்சயமாக முன்னேறும் வாய்ப்புகள் நிறையவே உள்ளன.

      என்ன ஒன்று ... தொழில் ஆர்வம் + கடும் உழைப்பு இவற்றுடன் படிப்பறிவு சேருமானால் இன்னும் நன்றாகவே இருக்கும். அதனால் அவர்களும் முழுப்பயன் பெறலாம், பிறரும் முழுப்பயன் பெறுமாறு செய்யலாம்.

      //தொடர்ந்து எழுதுங்கள் கோபாலகிருஷ்ணன் சார்//

      தங்களின் வேண்டுகோளுக்கு நன்றி. முயற்சிக்கிறேன். எழுத சரக்குகள் நிறைய இருப்பினும், சூழ்நிலைகள் சாதகமாக இல்லாமல் உள்ளன. மாதம் ஒருமுறையாவது ஏதாவது நிச்சயமாக எழுதி வெளியிட முயற்சிக்கிறேன்.

      அன்புள்ள
      VGK

      நீக்கு
  30. நான் நேற்றே படித்து விட்டேன் .தாமதமாக பின்னூட்டம் இட வந்ததற்கு மன்னிக்கவும் ,
    உழைப்பால் உயர்ந்த மஞ்சு மனதில் உயர்ந்த இடத்தில இருக்கிறார் .
    ஒரு சமோசாவுக்கு கமிஷனே 75 பைசா என்றால் ஒரு சமோசாவின் விலை இப்ப எவ்வளவு ??? ( 4 samosas for one rupee thats long long ago in 95)
    இது வெங்காய சமொசாவா இல்லை வெஜிடபிள் சமொசாவா ??
    சுய தொழில் துவங்கலாமாவென்ற நப்பாசைதான் :))
    ...

    //வெயிலிலே வேர்த்து வழிய சமோஸா விற்கும் எங்கள் அளவுக்குக்கூட படிச்ச நீங்க ஒண்ணும் பெரிசா சம்பாதிப்பதாக எனக்குத் தெரியவில்லை சார்;//
    அதென்னமோ உண்மைதான் அண்ணா ..நான் பார்த்தேன் ஊரில் ...கோட்& டைஸ் /பர்ஸ் உள்ளே கிரெடிட் கார்ட் :))கோட்டையை பிடிக்கும் கனவு ,கோட்டை அதாவது வருமான கோட்டை தாண்டிய வீண் செலவு !! லோன்ஸ் etc etc ..இதெல்லாம் மஞ்சுவிற்கு இராது :)
    இப்ப ரியல் எஸ்டேட் யார் கண்டார்கள் நாளை ஸ்டாக் exchange இலும் கால் பதிக்கலாம் மிஸ்டர் மஞ்சு .. அருமையான பேட்டி ..அடிக்கடி இப்படி பேட்டிகளை பகிர்ந்துகொள்ளுங்களேன் எங்களுடன் ....

    பின்னூட்டங்கள் எல்லாம் அருமை ..அதுவும் நீங்க கடுகு உளுந்து தாளித்து சேர்த்த விதம் பற்றி சொல்லியது அருமையோ அருமை :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இது வெங்காய சமொசாவா இல்லை வெஜிடபிள் சமொசாவா ??
      சுய தொழில் துவங்கலாமாவென்ற நப்பாசைதான் :))//

      அஞ்சூஊஊஊஊஊ அது மட்டின் சமோஷா:))

      நீக்கு
    2. அன்பின் நிர்மலா [Angelin] வாருங்கள்,

      வணக்கம். நல்லா இருக்கீங்களா?

      ஜிமிக்கி வற்றல் குழம்பு, அதிரஸம், லட்டு, கருப்பு உளுந்து வடை என ஏதேதோ தொடர்ச்சியாகப் பதிவிட்டு கலக்கோ கலக்கென்று கலக்குகிறீர்கள். சந்தோஷமாக உள்ளது.

      //நான் நேற்றே படித்து விட்டேன். தாமதமாக பின்னூட்டம் இட வந்ததற்கு மன்னிக்கவும்.//

      அதனால் என்ன? அடுத்த அரை மணி நேரத்தில் பதிவு ஒன்று வெளியிடப்போகிறேன் என்ற முதல் தகவலை தங்களுக்கு மட்டுமே, [அதுவும் என்னுடன் தாங்கள் வேறு சில முக்கியமான விஷயங்களுக்காக தொடர்பில் இருந்ததால்]அன்று நள்ளிரவு சொல்ல நேர்ந்தது எனக்கு.

      //உழைப்பால் உயர்ந்த மஞ்சு மனதில் உயர்ந்த இடத்தில இருக்கிறார்.//

      மஞ்சு, அஞ்சு என்பதெல்லாம் பெயர் ராசி உள்ளவர்கள்.
      உழைப்பால் உயர்பவர்கள். எல்லோர் மனதிலும் உயர்ந்த இடத்தில் தான் இருக்க முடியும். ;)))))

      தொடரும்......



      நீக்கு
    3. VGK to நிர்மலா

      //ஒரு சமோசாவுக்கு கமிஷனே 75 பைசா என்றால் ஒரு சமோசாவின் விலை இப்ப எவ்வளவு ??? ( 4 samosas for one rupee thats long long ago in 95)//

      ஆம் ... அதுபோலெல்லாம் மலிவாக விற்றது தான் ... முன்னொரு காலத்தில். மறுப்பதற்கு இல்லை.

      இப்போ தான் எதை எடுத்தாலும் குறைந்த பட்சம் 5 ரூபாய் 10 ரூபாய் என்று ஆகிவிட்டதே.

      ஒரே ஒரு நீண்ட கெட்டியான முருங்கைக்காய் ரூ 5 முதல் 10 வரை விற்கப்படுகிறது.

      பொருளாதார முன்னேற்றம், மக்களின் வாங்கும் சக்தி அதிகரிப்பு என்ற நோக்கில் தான் நாம் இவற்றைப் பார்த்து மகிழ வேண்டும்.

      தொடரும்.....

      நீக்கு
    4. VGK to நிர்மலா [3]

      //இது வெங்காய சமோசாவா இல்லை வெஜிடபிள் சமோசாவா ?? சுய தொழில் துவங்கலாமாவென்ற நப்பாசைதான் :))...//

      இதற்குத் தங்களின் ஆருயிர்த்தோழி அதிரா ஏதோ அழகாக உங்களுக்கு மட்டுமே புரியும் வண்ணம் பதில் அளித்துள்ளார்கள். அதைப் பார்த்துக்கோங்கோ.

      நானும் எவ்வளவோ முயற்சி செய்து பார்க்கிறேன்.

      உங்கள் கோஷ்டித் தோழிகள் சிலரின் பாஷைகளையும் சொற்களையும் என்னால் கொஞ்சம் கூட புரிந்து கொள்ளவே முடியவில்லை.

      தொடர்ந்து அவர்களின் ஒரு நூறு பதிவுகளையாவது நான் படித்தால் தான் ஒரு பத்து வார்த்தைகளுக்காவது அர்த்தம் தெரிந்து கொள்ளலாம் போல இருக்கு.

      சமயத்தில் முன்பெல்லாம் இந்த இமா டீச்சர் [உங்க பாஷையில் றீச்சர்] எனக்கு உதவுவாங்க.

      இப்போ அவங்களும் எங்கேயோ உலகம் சுற்றும் வாலிபியாகி [வாலிபனின் பெண்பால் = வாலிபி] தலை நிறைய பூ வெச்சுக்கிட்டு, [முகம் கொடுத்துப்பேசாமல்] முதுகைக் காண்பித்தபடி போஸ் கொடுத்து, பதிவிட்டு, பிஸியாக இருக்காங்க. ;(

      தொடரும் .....

      நீக்கு
    5. VGK to நிர்மலா [4]

      //அதென்னமோ உண்மைதான் அண்ணா ..நான் பார்த்தேன் ஊரில் ...கோட்& டைஸ் /பர்ஸ் உள்ளே கிரெடிட் கார்ட் :))கோட்டையை பிடிக்கும் கனவு ,கோட்டை அதாவது வருமான கோட்டை தாண்டிய வீண் செலவு !! லோன்ஸ் etc etc ..இதெல்லாம் மஞ்சுவிற்கு இராது :)
      இப்ப ரியல் எஸ்டேட் யார் கண்டார்கள் நாளை ஸ்டாக் exchange இலும் கால் பதிக்கலாம் மிஸ்டர் மஞ்சு .. அருமையான பேட்டி //

      ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் இப்போவே நிறைய பேர்கள் கால் பதிச்சுட்டாங்க, நிர்மலா.

      சிலபேர் புதை மணல் போல அதிலேயே சிக்கிக்கொண்டு, வெளியே வர வழியும் தெரியாமல் விழி பிதுங்கி, தாங்கள் விட்டதைப் பிடிக்கணும் என்ற வெறியில் நடை பிணமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

      இதில் படித்தவர் படிக்காதவர் என்ற எந்தப் பாகுபாடும் கிடையாது, நிர்மலா. எனக்குத் தெரியும் இதுபோன்ற பலபேர்களை. ஆசை ... பேராசை. உழைக்காமல் உடனடியாக திடீர் பணக்காரன் ஆகணும் என்ற வெறி.

      தொடரும்....

      நீக்கு
    6. VGK to நிர்மலா [5]

      //அருமையான பேட்டி ..அடிக்கடி இப்படி பேட்டிகளை பகிர்ந்துகொள்ளுங்களேன் எங்களுடன் ....

      பின்னூட்டங்கள் எல்லாம் அருமை ..அதுவும் நீங்க கடுகு உளுந்து தாளித்து சேர்த்த விதம் பற்றி சொல்லியது அருமையோ அருமை :)//

      அன்பின் நிர்மலா,

      தங்களின் அன்பான வருகைக்கும்,
      அழகான கருத்துக்களைப்பகிர்ந்து கொண்டு பாராட்டிச் சிறப்பித்துள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களின் கோரிக்கையை பரிசீலனை செய்ய முயற்சிக்கிறேன். அதற்கு ஓர் ஸ்பெஷல் தாங்க்ஸ்.

      பிரியமுள்ள
      கோபு அண்ணா

      நீக்கு
  31. முதலில் நீண்ட நாட்களுக்குப் பிறகு, உங்களது இடுகையைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மஞ்சூவைப் போல, சாதாரணமாக எதையோ விற்று, வெள்ளைச்சட்டைக்காரர்களைக் காட்டிலும் அதிகமாக சம்பாதிக்கிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இடுகைக்காக நீங்கள் மேற்கொண்ட முனைப்பு பட்டவர்த்தனமாகத் தெரிகிறது ஐயா! கலக்கல்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேட்டைக்காரன் October 11, 2012 6:49 AM

      //முதலில் நீண்ட நாட்களுக்குப் பிறகு, உங்களது இடுகையைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.//

      எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை திலகமே, வாருங்கள், வாருங்கள், வணக்க்ம். தங்களின் அன்பான வருகையும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      //மஞ்சூவைப் போல, சாதாரணமாக எதையோ விற்று, வெள்ளைச்சட்டைக்காரர்களைக் காட்டிலும் அதிகமாக சம்பாதிக்கிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.//

      ஆமாம் ... சார், இருக்கத்தான் இருக்கிறார்கள். வெளியுலக அனுபவம் உள்ள தாங்கள் சொன்னால் அது மிகச்சரியாகவே இருக்கும்.

      //இடுகைக்காக நீங்கள் மேற்கொண்ட முனைப்பு பட்டவர்த்தனமாகத் தெரிகிறது ஐயா! கலக்கல்!//

      ரொம்பவும் சந்தோஷம் சார். என் மனமார்ந்த நன்றிகள், எல்லாவற்றிற்குமே. ;))))))

      அன்புடன்
      VGK

      நீக்கு
  32. பதில்கள்
    1. வாருங்கள் Ms. Middle Class Madhavi Madam,
      வணக்கம். நல்லா இருக்கீங்களா?


      தங்களின் அன்பான வருகைக்கும்
      “ரஸித்தேன்” ”பகிர்வுக்கு நன்றி”
      என்ற இரு ருசியான சமோஸாக்
      கருத்துக்களுக்கும் ;)))))
      என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  33. சுவராஸ்யமான பதிவுக்கு மிக்க நன்றி சார்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. S.Menaga October 11, 2012 8:41 AM
      சுவராஸ்யமான பதிவுக்கு மிக்க நன்றி சார்!!//

      வாருங்கள், Ms. S.Menaga அவர்களே.

      தங்களின் சுவாரஸ்யமான கருத்துக்கும், அன்பான வருகைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      VGK

      நீக்கு
  34. வாவ் கோபு அண்ணன்.. இப்போதான் கூகிள் ரீடர் பார்த்து புதுத்தலைப்புக்களை அடையாளம் கண்டு வந்துகொண்டிருக்கிறேன்.

    கவர்ச்சியான பதிவு.. குழுகுழுப்பன பதிவாக இருக்கு படிக்க. என்னால் இதை உண்மை என மனம் ஏற்றுக் கொள்ளுதே இல்லை...

    ஆனா கேள்விப்பட்டிருக்கிறேன், உணவுக்கடை திறந்தால் ஓஹோ என உயரலாம் என.. அந்த விதத்தில் இது உண்மையாக இருக்கவும் வாய்ப்பிருக்கு, ஆனா ஆரோ ஒருவர்தானெ கேட்கிறார்.. சும்மா சொல்லிட்டுப் போவமே எனவும் அவர் சொல்லியிருக்கலாமோ என எண்ணத் தோன்றுது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira October 11, 2012 10:50 AM
      //வாவ் கோபு அண்ணன்.. இப்போதான் கூகிள் ரீடர் பார்த்து புதுத்தலைப்புக்களை அடையாளம் கண்டு வந்து கொண்டிருக்கிறேன்.//

      ஆஹா, வாங்க அதிரா.

      “எங்க அப்பன் குதிருக்குள்ளே இல்லே” என்றானாம் மகன், தன் அப்பாவைத்தேடி, பணம் வசூல் செய்ய வந்தவரிடம்.

      அதுபோல உள்ளது இதுவும். நல்ல வேளையாக இந்த கூகுள் ரீடர் பார்த்து புதுத்தலைப்புகளை அடையாளம் கண்டு வந்ததாகச் சொல்லி எனக்கு ஆரம்பத்திலேயே தெளிவு படுத்திட்டீங்க இந்த மேட்டரை. நான் ஏதோ நம் அஞ்சூ அனுப்பிவெச்சு வந்தீங்களோன்னு தப்பா நினைச்சுட்டேன்.

      //என்னால் இதை உண்மை என மனம் ஏற்றுக் கொள்ளுதே இல்லை...//

      அதே அதே ... சபாபதே! என்னாலும் தான். [இது அந்த மேட்டர் இல்லை. மேலே உள்ள மேட்டர். ;) ]

      //ஆரோ ஒருவர்தானெ கேட்கிறார்.. சும்மா சொல்லிட்டுப் போவமே எனவும் அவர் சொல்லியிருக்கலாமோ என எண்ணத் தோன்றுது...//

      நீங்க ஒரு தனித்தன்மை வாய்ந்தவங்க. உங்களுக்கு எதுவும் புதிதாகத்தான் தோன்றும் .. மாறுபட்ட கோணத்தில். ஆனாலும் அதில் உண்மை இருக்கும். மகிழ்ச்சியே எனக்கு.

      பிரியமுள்ள
      கோபு அண்ணா

      நீக்கு
  35. நான் மிகப்பெரியதொரு கோடீஸ்வரரான தொழிலதிபரைத் தான் இவ்வளவு நேரம் பேட்டி கண்டுள்ளேன் என்பதை மட்டும் உணர முடிந்தது. ///

    ஹா..ஹா..ஹா.. சொல்லுவினம், இருப்பவர்கள் சிம்பிளாக இருப்பினமாம், இல்லாதொர்தான் தம்மிடம் இருப்பதுபோலக் காட்டிக்கொள்ள விலை உயர்ந்த ஆடைகளும், கோட்டும் சூட்டோடு திரிவார்களாம்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira October 11, 2012 10:52 AM
      ***நான் மிகப்பெரியதொரு கோடீஸ்வரரான தொழிலதிபரைத் தான் இவ்வளவு நேரம் பேட்டி கண்டுள்ளேன் என்பதை மட்டும் உணர முடிந்தது.***

      //ஹா..ஹா..ஹா.. சொல்லுவினம், இருப்பவர்கள் சிம்பிளாக இருப்பினமாம், இல்லாதொர்தான் தம்மிடம் இருப்பதுபோலக் காட்டிக்கொள்ள விலை உயர்ந்த ஆடைகளும், கோட்டும் சூட்டோடு திரிவார்களாம்:)..//

      உங்களின் கிளி கொஞ்சும் [சொல்லுவினம், இருப்பினமாம்] தமிழ் எனக்குப் புரிகிறதோ இல்லையோ ரொம்பப் புடிச்சுப்போச்சு. ;)))))

      என் தமிழ் எனக்கு இப்போ சுத்தமா மறந்து போச்சு.

      பிரியமுள்ள
      கோபு அண்ணா

      நீக்கு
    2. என் தமிழ் எனக்கு இப்போ சுத்தமா மறந்து போச்சு.

      பிரியமுள்ள
      கோபு அண்ணா//

      ஹா..ஹா..ஹா.. பன்றியோடு சேர்ந்தால் பசுவும் பழுதாகிடுமாமே:)) அப்பூடி ஆகப் போகுது பூஸோடு சேர்ந்த கோபு அண்ணனின் நிலைமை:).. இன்னும் கொஞ்ச நாளில்.. உங்களுக்கு சுத்தமா தமிழ்நாட்டுத் தமிழே மறந்திடும்:)) அல்லது மறக்கப்பண்ணிடுவோம்:))).. ஹையோ அஞ்சு வாறா.. உங்கட புளொக் ஆடுற ஆட்டத்தை வச்சே கண்டு பிடிச்சிட்டேன் அது அஞ்சுவேதான்ன்:))).. மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:)).

      நீக்கு
    3. athira October 14, 2012 10:34 AM
      //என் தமிழ் எனக்கு இப்போ சுத்தமா மறந்து போச்சு.

      பிரியமுள்ள
      கோபு அண்ணா//

      ஹா..ஹா..ஹா.. பன்றியோடு சேர்ந்தால் பசுவும் பழுதாகிடுமாமே:)) அப்பூடி ஆகப் போகுது பூஸோடு சேர்ந்த கோபு அண்ணனின் நிலைமை:).. இன்னும் கொஞ்ச நாளில்.. உங்களுக்கு சுத்தமா தமிழ்நாட்டுத் தமிழே மறந்திடும்:)) அல்லது மறக்கப்பண்ணிடுவோம்:))).. //

      ஐயோ ... கடவுளே ..... கடவுளே [அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் இதைப்படிக்கணும்]

      நல்லா இப்படியொரு ’அதிரடி அதிரா’விடம் என்னைச் சிக்க வைத்து விட்டாயே.

      கடவுளே ... கடவுளே ! காப்பாத்து காப்பாத்து.

      எதை இழந்தாலும் நான் என் கற்பை [அதாவது கற்பைப்போன்ற என் தாய்மொழி தமிழ்மொழியை] இழக்கக்கூடாதுப்பா.

      //ஹையோ அஞ்சு வாறா.. உங்கட புளொக் ஆடுற ஆட்டத்தை வச்சே கண்டு பிடிச்சிட்டேன் அது அஞ்சுவேதான்ன்:))).. மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:)).//

      அன்பின் நிர்மலா,

      பாருங்கோ உங்களின் ஆருயிர் தோழி ’அதிரடி அதிரா’வின் அட்டகாசங்களை. நல்ல ஆளை எனக்கு புதுசா அறிமுகம் செய்து வைத்துள்ளீர்கள். கடவுளே .. கடவுளே ........

      உங்கள் தோழியை சற்றே அடக்கி வையுங்கள். தூங்கும் புலியை இடற வேண்டாம்னு சொல்லுங்கோ. புலியும் [அவங்களுக்குப் பிடித்த புளியங்காய் அல்ல .... புலி] பதிலுக்கு சீறிப்பாய ஆரம்பித்தால் பூனை பூஸார் காலி என எச்சரிக்கை செய்யுங்கோ.

      //ஹையோ அஞ்சு வாறா.. உங்கட புளொக் ஆடுற ஆட்டத்தை வச்சே// ன்னு எழுதிட்டாங்களே, நிர்மலா!
      இதற்கு நீங்க சும்மாவே விடக்கூடது.

      சூடாகக் கண்டனம் தெரிவிக்க வேணும். ;))))))

      பிரியுமுள்ள
      கோபு அண்ணா

      நீக்கு
  36. எனக்கென்னமோ அவரின் கதையில் முழு நம்பிக்கை வரவே இல்லை, அப்படிப் பணம் வந்தால் அவர் ஒரு ஹோட்டல் ஆரம்பித்திருப்பார்ர்.. சரி இப்ப அதெல்லாம் எதுக்கு..

    போதும் எனும் மனமே பொன் செய்யும் மருந்து. இருப்பதை வைத்து திருப்தியாக இருக்கோணும், இதுக்கெல்லம் டக்குப் பக்கென ரையைக் கழட்டிப் பொக்கட்டில வைக்கப்பூடா:)) ஹா..ஹா..ஹா..:).

    உடம்பில எவ்வளவு எண்ணெய் பூசிக்கொண்டு மண்ணில உருண்டாலும், ஒவொருவருக்கும் எவ்வளவு ஒட்டோணுமோ அவ்வளவுதானாம் ஒட்டும்:)) அப்படித்தான் பணமும் எல்லாமும்.. அளந்தபடிதானே எல்லாம்...

    எண்ணம் அழகானால் எல்லாம் அழகுதான்:)
    சபாபதே!!!!

    பதிவு நகைச்சுவையோடு கூடிய நல்ல சுவையானதாக இருந்துது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira October 11, 2012 10:56 AM
      //எனக்கென்னமோ அவரின் கதையில் முழு நம்பிக்கை வரவே இல்லை, அப்படிப் பணம் வந்தால் அவர் ஒரு ஹோட்டல் ஆரம்பித்திருப்பார்ர்..//

      அங்கே தான் நீங்கத் தப்புக்கணக்குப் போட்டுட்டீங்க! அவர் ஏன் ஹோட்டல் ஆரம்பிக்கவில்லைன்னு தெரியணுமா உங்களுக்கு இதோ இந்தப்பதிவுக்குப் போய்ப்பாருங்க தெரியும்.

      தலைப்பு: ”பஜ்ஜின்னா ... பஜ்ஜி தான்”

      இணைப்பு: http://gopu1949.blogspot.in/2011/07/1-of-2.html

      தொடரும்....

      நீக்கு
    2. VGK TO ATHIRA >>>>>

      //போதும் எனும் மனமே பொன் செய்யும் மருந்து. இருப்பதை வைத்து திருப்தியாக இருக்கோணும், இதுக்கெல்லம் டக்குப் பக்கென ரையைக் கழட்டிப் பொக்கட்டில வைக்கப்பூடா:)) ஹா..ஹா..ஹா..:).//


      ஹா ஹா .... ரையைக் கழட்டிப் பொக்கட்டில வைக்கப்பூடா;)) புதிய அழகான கிளிகொஞ்சும் மூன்று வார்த்தைகள். எந்த மொழியோ? கிளி மொழியோ?

      //உடம்பில எவ்வளவு எண்ணெய் பூசிக்கொண்டு மண்ணில உருண்டாலும், ஒவொருவருக்கும் எவ்வளவு ஒட்டோணுமோ அவ்வளவுதானாம் ஒட்டும்:)) அப்படித்தான் பணமும் எல்லாமும்.. அளந்தபடிதானே எல்லாம்..//

      கேவலம் மண் ... உடம்பில் ஒட்ட வேண்டி, டின் டின்ன்னாக எண்ணெயை பூசிக்கொள்ள முடியுமா, அதிரா?
      எண்ணெய் பற்றிய விலைவாசி தெரியாமல் இருக்கீங்களே!

      ஆனாக்க இதையே தான் [இந்தப்பழமொழியையே தான்] எல்லாப்பயல்களும் ரொம்ப நாளாச் சொல்லித்திரியறாங்க.


      அதனால் பெரிய மனது பண்ணி ஏற்றுக்கொள்கிறான் உங்கள் கோபு அண்ணன், அதுவும் அதிரடி அதிராவுக்காக மட்டுமே [as a very special case] ;).. .

      //எண்ணம் அழகானால் எல்லாம் அழகுதான்:)
      சபாபதே!!!! //

      இதை [அதே அதே சபாபதே!!!!] நீங்க உபயோகிக்கக்கூடாது.

      என் அன்புத்தங்கை மஞ்சுவும் நானும் மட்டுமே பயன்படுத்தலாம். COPY RIGHT வாங்கிட்டோம்.
      NOTE THIS POINT - NOTED ? OK

      அதே அதே ..... சபாபதே !!!!


      //பதிவு நகைச்சுவையோடு கூடிய நல்ல சுவையானதாக இருந்துது.//

      சுவையென்றால் எப்ப்ப்ப்ப்ப்பூடி ?

      நம் இருவருக்கு மட்டுமே நம் அஞ்சூ கொடுத்த அதிரஸம் போலவா?

      பதிவுக்கு வருகை தந்து கலகலப்பாக்கி சிறப்பித்த

      அ தி ர டி அ தி ரா வு க் கு ஜே !! ;)

      பிரியமுள்ள
      கோபு அண்ணா


      நீக்கு
    3. கோபு அண்ணன், நேரம் எடுத்தாலும், ஒவ்வொருவரையும் மதிச்சு, ஒவ்வொன்றுக்கும், பொறுமையா அழகாகப் பதில் போடுறீங்க அதுதான் முக்கியம், எனக்கும் அதுதான் புய்க்கும்:). கீப் இட் மேல:))..

      சபாபதே!!!!... ஹையோ உங்கட “கொப்பி வலது”:) ஐ.. தெரியாமல், பழக்க தோஷத்தில எழுதிட்டென், அழிக்க ரேசர் இல்லை, நீங்க படிச்சதும் கிழிச்சிடுங்கோ பிளீச்ச்ச்ச்ச்ச்:)).

      நீக்கு
    4. athira October 14, 2012 10:40 AM
      //கோபு அண்ணன், நேரம் எடுத்தாலும், ஒவ்வொருவரையும் மதிச்சு, ஒவ்வொன்றுக்கும், பொறுமையா அழகாகப் பதில் போடுறீங்க அதுதான் முக்கியம், எனக்கும் அதுதான் புய்க்கும்:). கீப் இட் மேல:))..//

      //எனக்கும் அதுதான் புய்க்கும்:).//

      ”புய்க்கும்” : ஆஹா, மழலைபோல பேசி என்னை சொக்க வைக்கிறீங்க! ;)))))

      மழலைகளைக் கண்டால் எனக்கு ரொம்பவுமே புய்க்கும்.

      நான் எழுதிய “மழலைகள் உலகம் மகத்தானது” என்பதை மறக்காமப் படியுங்கோ ... ;))))) அதில் உங்களுக்குப் புய்க்கக்கூடிய நிறைய விஷயங்கள் இருக்கு.

      இணைப்பு இதோ:

      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_4556.html

      கீப் இட் மேல:)).. ஒரே சிரிப்பு தான், எனக்கு.
      படித்ததும் பெரியதாகச் சிரிச்சுப்புட்டேன்.

      உங்க பாடு பரவாயில்லீங்க. பஞ்சமில்லாமல் மேலேயும் உண்டு கீழேயும் உண்டு தான்.

      அதனால் நீங்க [’கீப் இட் மேலே’ அல்லது ’கீப் இட் கீழே’ என்று எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் தான். எங்களுக்குத்தான் மேலேயா கீழேயே எங்கே கீப் செய்வது முதலில் என்ற குழப்பங்கள் வரும்.

      //சபாபதே!!!!... ஹையோ உங்கட “கொப்பி வலது”:) ஐ.. தெரியாமல், பழக்க தோஷத்தில எழுதிட்டென், அழிக்க ரேசர் இல்லை, நீங்க படிச்சதும் கிழிச்சிடுங்கோ பிளீச்ச்ச்ச்ச்ச்:)).//

      “கொப்பி வலது” = COPY RIGHT ஆ! அடடா எவ்வளவு நகைச்சுவை உணர்வு தங்களுக்கு. புல்லரிக்குது எனக்கு.

      //அழிக்க ரேசர் இல்லை, நீங்க படிச்சதும் கிழிச்சிடுங்கோ பிளீச்ச்ச்ச்ச்ச்:)).// இது அதை விட சூப்பர் போங்க....

      அழிக்கத்தான் ஆசை ... கிழிக்கத்தான் ஆசை ... ன்னு
      தலையைபிய்த்துக்கொண்டு பாட்டுத்தான் பாடணும்ங்கோ.

      பிரியமுள்ள
      கோபு அண்ணா

      நீக்கு
    5. கேவலம் மண் ... உடம்பில் ஒட்ட வேண்டி, டின் டின்ன்னாக எண்ணெயை பூசிக்கொள்ள முடியுமா, அதிரா?
      எண்ணெய் பற்றிய விலைவாசி தெரியாமல் இருக்கீங்களே!///

      பாருங்கோ கோபு அண்ணன் நீங்களும் பணத்துக்கே முன்னுரிமை கொடுக்கிறீங்கபோல...:)) மண்ணைக் கும்பிடுவார்கள், ஆனா எண்ணெயை ஆரும் கும்பிட்டதாக சரித்திரத்தில் உண்டோ? அப்போ மண் உயர்வானதுதானே?:))..

      பார்த்தீங்களோ ஒரு பூஸிடம் மாட்டிவிட்டீங்க:) இதுக்குத்தான் அஞ்சுவின் பேச்சைக் கேட்காதீங்க எனச் சொல்வது, அவதானே என்னை அறிமுகம் செய்தவ உங்களுக்கு?:))..

      பாருங்கோ என் பின்னூட்டங்களுக்கு ஒண்ணொண்ணா பதில் போட்டு முடிப்பதெப்போ, நீங்க புதுத்தலைப்பு போடுவதெப்போ?:))..விடமாட்டமில்ல:).. ஹையோ ஓவராக் கதைக்கிறேனோ பயமாக் கிடக்கூஊஊஊஊஊ:) என் வாய்தேன் நேக்கு எடிரி:)... மீ எஸ்கேஎப்ப்ப்ப்ப்ப்:).

      நீக்கு
    6. //மண்ணைக் கும்பிடுவார்கள், ஆனா எண்ணெயை ஆரும் கும்பிட்டதாக சரித்திரத்தில் உண்டோ? அப்போ மண் உயர்வானதுதானே?:))..//

      மண் எப்போதுமே உயர்வானது தான். மண் இல்லாவிட்டால் எண்ணெய் வித்துக்கள் விளையவோ எண்ணெய் கிடைக்கவோ வழியில்லை தான். இந்த விளக்கத்தினை எனக்கு அளித்துள்ள அதிரடி அதிராவை நான் கும்பிடுகிறேன்.

      [அதற்காக அதிரடி அதிராவும் மண்ணும் மண்ணாங்கட்டியும் ஒன்று தான்னு நான் சொல்வதாக என நினைத்து சண்டைக்கு வரப்படாது சொல்லிப்புட்டேன், அட்வான்ஸாக.... ;) ]

      தொடரும்......

      நீக்கு
    7. //பார்த்தீங்களோ ஒரு பூஸிடம் மாட்டிவிட்டீங்க:)//

      ஆமாங்க வசமா மாட்டிக்கிட்டேங்க! எப்படித் தப்பிப்பதுன்னே தெரியிலிங்கோ.

      //இதுக்குத்தான் அஞ்சுவின் பேச்சைக் கேட்காதீங்க எனச் சொல்வது, அவதானே என்னை அறிமுகம் செய்தவ உங்களுக்கு?:))..//

      அதே அதே ...... சபாபதே !

      அவங்களோட ரொம்ப நாளா எனக்குப்பழக்கம் உண்டே. ரொம்ப ரொம்ப நல்லவங்களாச்சே. ஏன் என்னை உங்களிடம் இப்படிக் கோத்துவிட்டுட்டு, ஏதாவது பிரச்சனைன்னா பஞ்சாயத்து பண்ணவும் வராமால், எங்கேயோ எஸ்கேப் ஆயிடுறாங்களே ... ஐயோ ..
      கடவுளே ... கடவுளே.

      நேற்றைக்கு அப்படித்தான்

      //ஹையோ அஞ்சு வாறா.. உங்கட புளொக் ஆடுற ஆட்டத்தை வச்சே கண்டு பிடிச்சிட்டேன் அது அஞ்சுவேதான்ன்:))).. மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:))// ன்னு சொல்லிட்டுப்போனீங்க.

      நான் அதைப் படிச்சுட்டு [உள்ளுக்குள் நினைத்து நினைத்து சிரியோ சிரின்னு சிரித்தாலும்] வெளியே ரொம்பவும் பயந்தே போய்விட்டேன்.

      ஆனாக்க அவங்க வரவே இல்லை. ஏன் இப்படி மாறிட்டாங்கன்னு தெரியலையே? .. கடவுளே கடவுளே.
      மொத்தத்திலே எனக்கு நேரம் சரியில்லையோ என்னவோ.
      யாரிடமாவது ஜோஸ்யம் பார்க்கப்போகணும்.

      தொடரும்....

      நீக்கு
    8. //பாருங்கோ என் பின்னூட்டங்களுக்கு ஒண்ணொண்ணா பதில் போட்டு முடிப்பதெப்போ, நீங்க புதுத்தலைப்பு போடுவதெப்போ?:))..விடமாட்டமில்ல:)..//

      போச்சுடா, ஏதோ பெரிய திட்டத்தோடு தான் இருக்கீங்க போலிருக்கு.

      //ஹையோ ஓவராக் கதைக்கிறேனோ பயமாக் கிடக்கூஊஊஊஊஊ:)//

      இந்தக்கதைத்தல் எனக்கு ரொம்பப் புய்ச்சிப்போச்சு. அதாவது கதைத்தல் என்ற வார்த்தை ரொம்பப் பிடிச்சுப் போச்சுன்னு சொல்ல வந்தேன் உங்களை மாதிரியே.

      //என் வாய்தேன் நேக்கு எடிரி:)... மீ எஸ்கேஎப்ப்ப்ப்ப்ப்:)//

      உங்களுக்குத் தமிழும் இங்கிலீஷும் கலந்து நல்லாவே வருது. எனக்குத்தான் கொஞ்சம் கொஞ்சமா எல்லாமே மறந்து போயிடும் போலிருக்கு.

      //மீ எஸ்கேஎப்ப்ப்ப்ப்ப்:)//

      அப்பாடா. ”நல்லவேளை நான் பிழைத்துக் கொண்டேன்”.

      அன்புடன்
      கோபு அண்ணா

      நீக்கு
    9. நேற்றைக்கு அப்படித்தான்

      //ஹையோ அஞ்சு வாறா.. உங்கட புளொக் ஆடுற ஆட்டத்தை வச்சே கண்டு பிடிச்சிட்டேன் அது அஞ்சுவேதான்ன்:))).. மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:))// ன்னு சொல்லிட்டுப்போனீங்க.

      நான் அதைப் படிச்சுட்டு [உள்ளுக்குள் நினைத்து நினைத்து சிரியோ சிரின்னு சிரித்தாலும்] வெளியே ரொம்பவும் பயந்தே போய்விட்டேன்.

      ஆனாக்க அவங்க வரவே இல்லை. ஏன் இப்படி மாறிட்டாங்கன்னு தெரியலையே? ..//

      உங்களுக்கு விஷயமே தெரியாதுபோல கோபு அண்ணன்:)) அது வேறொன்றுமில்லை:) அவவுக்கு ஒரு “பூஸுடன்” மோதப் பயம்:)).. ஹையோ படிச்சதும் கிழிச்சு ஸ்ரவ் அடுப்பில எரிச்சிடுங்கோஓஓஓ:)).

      நீக்கு
    10. VGK to Athira [அதிரடி அதிரா]

      //உங்களுக்கு விஷயமே தெரியாதுபோல கோபு அண்ணன்:)) அது வேறொன்றுமில்லை:) அவவுக்கு ஒரு “பூஸுடன்” மோதப் பயம்:))..//

      ஹாஹ்ஹா! நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே.

      இந்தப் பின்னூட்டப்பகுதியின் கீழே வாங்க [கட்டிலுக்குக்கீழே பதுங்குக்குழின்னு எழுதினீங்களே ... அதே அதே சபாபதே போல கீழே வாங்க] இன்றைக்கு [16th] வந்து மூன்று பின்னூட்டம் கொடுத்திருக்காங்க.

      பட்டும் படாததுமாக எழுதிருக்காங்க. மூன்றாவது பின்னூட்டத்தில் [பூஸுடன் மோத பயந்துகொண்டு] பூஸை ஒரே தூக்காகத் தூக்கி வைச்சுட்டாங்க. தூக்கி வைச்சு எழுதியிருக்காங்க.

      //:)))) எல்லா புகழும் பெருமையும் எங்கள் தானை தலைவி அதிரா அவர்களையே சேரும்.// By அஞ்சூ! ;)

      //ஹையோ படிச்சதும் கிழிச்சு ஸ்ரவ் அடுப்பில எரிச்சிடுங்கோஓஓஓ:)).//

      மேலும் இன்று ஒரு கிளிகொஞ்சும் தமிழ் வார்த்தை கற்க முடிந்துள்ளது. ”ஸ்ரவ்”

      நாங்க அதை “ஸ்டவ்”ன்னு தான் சொல்லுவோம்.

      ஒன்று புரிகிறது எனக்கு. “ட” வர வேண்டிய இடங்களிலெல்லாம் “ர” அல்லது “ற” போடும்,
      ரம்பம் போன்ற ஆசாமிகள் நீங்க.

      பிரியமுள்ள
      கோபு அண்ணா

      நீக்கு
    11. யாரிடமாவது ஜோஸ்யம் பார்க்கப்போகணும்.

      தொடரும்....///

      இதுக்கு எதுக்கு ஆரிடமாவது போகோணும்?:) உங்கட பிறந்த தேதியையும் மாதத்தையும் மட்டும் சொல்லுங்கோ.. நானே சாத்திரம் சொல்லுவேன்:))...

      நீக்கு
    12. அன்புள்ள ஜோதிடர் அதிரா அவர்களே,

      வாருங்கள். வாருங்கள். வணக்கம்.

      எனக்கு ஜோஸ்யம் பார்க்க என்னிடம் FEES ஏதும் கேட்கக்கூடாது.

      ஆரம்பத்திலேயே *விழிப்புணர்வுடன் இதைச் சொல்லிவிட்டேன்.

      [இவ்வளவு நாழியும் இந்தத்தங்களின் பின்னூட்டத்தைப் பார்க்காமலேயே தூங்கிக்கொண்டு இருந்தேன். அதனால் இப்போது தான் *விழிப்புணர்வு ஏற்பட்டது.]

      என் பிறந்த மாதம் : டிஸம்பர்

      என் பிறந்த நாள்: எட்டு

      தன் பிறந்த நாள் பலன்களை
      ஆவலுடன் எதிர்பார்த்துக்
      காத்திருக்கும் உங்கள்

      கோபு அண்ணா

      நீக்கு
    13. ஹா..ஹா..ஹா.. கோபு அண்ணன்... உங்கள் பிறந்த நாள் வெகு விரைவில் இல்லை:).. மிக அருகிலேயே இருக்கிறது:). எட்டாம் எண்ணில் பிறந்தோருக்கு வாழ்க்கையில் எப்பவுமே ஏற்றம் இறக்கம் மாறிக்கொண்டே இருக்குமாம்... நகைச்சுவையுணர்வு இருக்குமாம்...

      எனக்கு இதுக்கெல்லாம் பீஸ் வாணாம்:) பீஸ் வாங்கினால் மகிமை கொறைஞ்சிடுமாம்:)... ஆனா நான் வாணாம் எண்டாப்போல நீங்க என்ன வெறுங்கையுடன் போகவிட்டிடுவீங்களோ இல்லைத்தானே?:)... அதனால பெரிசா ஒண்ணும் வாணாம்ம்.. சின்னதா ஒரு “பெரிய வைரத்தோடு”:) அதுகூட எனக்காக இல்லை, தெரியாமல் வள்ளிக்கு ஒரு நேர்த்தி வச்சுட்டேன்:) அதை நிறை வேத்தத்தான்:). மியாவும் நன்றி.

      நீக்கு
    14. athira October 19, 2012 6:54 AM

      அன்பின் அதிரா, [அதிரடி அதிரா] வாங்கோ, வாங்கோ!

      நீங்க எப்படியும் இங்கே வருவீங்க, வந்து என்னிடம் வசமாக மாட்டுவீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்.

      //ஹா..ஹா..ஹா.. கோபு அண்ணன்...

      உங்கள் பிறந்த நாள் வெகு விரைவில் இல்லை:)..

      மிக அருகிலேயே இருக்கிறது:). //

      அருகிலேயே என்றால்? என் மேலிட்த்தின் அருகிலே தானே!

      அன்றும் இன்றும் என்றும் நான் அவங்க அருகிலேயே தானே இருக்கிறேன்.

      நீங்க என்ன புய்ச்சா கண்டுபிடிச்சு சொல்லிட்டீங்க?



      தொடரும்.....


      நீக்கு
    15. அதிரடி அதிராவுக்கு ... 2

      //எட்டாம் எண்ணில் பிறந்தோருக்கு வாழ்க்கையில் எப்பவுமே ஏற்றம் இறக்கம் மாறிக்கொண்டே இருக்குமாம்..//

      இதுவிஷயத்தில் நீங்க பிரபல ஜோஸ்யர் தான் என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன். தினமுமே மாறிமாறி ஏற்றமும் இறக்குமும் தான். என் ஜோலியே அதுதான்.

      எவ்ளோ கரெக்கிட்டா சொல்லிட்டீங்க!

      அச்சா பஹூத் அச்சா ;))))))


      தொடரும்.....

      நீக்கு
    16. அதிரடி அதிராவுக்கு ... [3]

      // நகைச்சுவையுணர்வு இருக்குமாம்...//

      இதுவும் ஓரளவுக்கு ஒத்துக்கொள்கிறேன். ஏதோ ஓரளவுக்கு நகைச்சுவை உணர்வு உண்டுதாங்க.

      [ஆனாக்க அதிரடி அதிராவின் அளவுக்குக் கிடையாதுங்க]

      ஒருதடவை கல்யாணம் ஆன புதுச்சிலே ஏதோ ஒரு ஜோரிலே அவள் காதை நான் கடிப்பதாக நினைத்து காதுத்தோட்டையே கடிச்சு முழுங்கிட்டேங்க.

      அவ்வளவு ஓர் ”ந கை ச் சு வை” உணர்வு எனக்கூஊஊ.

      தொடரும்.....

      நீக்கு
    17. அதிரடி அதிராவுக்கு [4]

      //எனக்கு இதுக்கெல்லாம் பீஸ் வாணாம்:) பீஸ் வாங்கினால் மகிமை கொறைஞ்சிடுமாம்:)//

      ஆஹா, இதைக்கேட்டதும் எனக்குப் புல்லரிச்சுப்போய், சீப்பை எடுத்து உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை சர்வாங்கத்தையும் சொரிந்து கொண்டேன். ;))))))))

      தொடரும்.....

      நீக்கு
    18. அதிரடி அதிராவுக்கு [6]

      //இல்லைத்தானே?:)... அதனால பெரிசா ஒண்ணும் வாணாம்ம்.. சின்னதா ஒரு “பெரிய வைரத்தோடு”:)//

      ஆஹா! வெள்ளிக்கிழமையும் அதுவுமா, அதுவும் நவராத்திரி வெள்ளிக்கிழமையும் அதுவுமா, ஒரு சுமங்கலிப்பொண்ணு ஆசைப்பட்டு, துணிச்சலோட, இதுவரை என்னிடம் யாருமே [என் மேலிடம் உள்பட] கேட்காத ஒரு பொருளைக் கேட்டுடுத்து.

      இது என்ன பிரமாதம் After all “வைரத்தோடு” தானே சந்தோஷமாப் செய்து போட்டு விடுவேன்.

      தொடரும்.....

      நீக்கு
    19. அதிரடி அதிராவுக்கு [7]

      ஏற்கனவே நீங்க வைர நெக்லஸ் ஒண்ணு கேட்டிருக்கீங்க. அதுவும் நினைவில் உள்ளது எனக்கு.

      [நீங்க ஒருவேளை மறந்துட்டீங்களோ என்னவோ.- உங்க பதிவுலே பின்னூட்டத்திலே Sl. No: 155 இல் பாருங்கோ.

      இணைப்பு இதோ: http://gokisha.blogspot.in/2012/10/blog-post_5886.html

      //சே..சே... அதிராவைத் தப்புத் தப்பாவே கணக்கெடுத்து வச்சிருக்கிறார் கோபு அண்ணன்:)).. இதுக்கெல்லம் போய் நான் பீஸ் கேட்பனோ.. அதுவும் எக்கவுண்டில போடச் சொல்லி சே..சே.. காசெல்லாம் வாணாம்ம்.. ஒரு வைர நெக்லஸ் தந்தால் போதும்:) நேர்த்திக்கடன் ஒன்று இருக்கு அதை நிறைவேத்தத்தான்:))..//

      நீங்க மறந்தாலும் நான் மறப்பேனா என்ன? நான் எட்டாம் நம்பர் ஆசாமியல்லவா?

      அதனால் இப்போவே வைர நெக்லஸ், வைரத்தோடுகள், வைர மூக்குத்தி மூணுமே வாங்கித்தருவதா முடிவு
      பண்ணிட்டேன்.

      நான் முடிவு பண்ணினதுமே ஒரே கிழியா டார்ர்ர்ரா கிழிச்சுட்டேன். [இது வேற கிழி]

      அதாவது என் செக் புக்குலேந்து செக்கைக் கிழிச்சுப்புட்டேன்.

      [அதிலே பணம் இருக்கோ இல்லையோ அது வைரக்கடைக்காரனுக்கும் பேங்கருக்கும் தான் பாதரேஷன்; எனக்கோ உங்களுக்கோ அல்ல]

      தொடரும்......

      நீக்கு
    20. அதிரடி அதிராவுக்கு [9]

      //அதுகூட எனக்காக இல்லை, தெரியாமல் வள்ளிக்கு ஒரு நேர்த்தி வச்சுட்டேன்:) அதை நிறை வேத்தத்தான்:) . மியாவும் நன்றி//

      இது எனக்குப்பிடிக்கலை.

      அதிரடி அதிராவுக்கு மட்டுமே உண்டு.

      வள்ளி குள்ளின்னு யாரையாவது நடுவுலே கொண்டாராதீங்கோ, ப்ளீஸ்.

      அப்புறம் மியாவுக்கும் கிடைக்காது. ஜாக்கிரதை. ;)))))

      பிரியமுள்ள
      கோபு அண்ணா

      நீக்கு
    21. அதிரடி அதிராவுக்கு [5]

      //ஆனா நான் வாணாம் எண்டாப்போல நீங்க என்ன வெறுங்கையுடன் போகவிட்டிடுவீங்களோ //

      அதானே! அது எப்படீங்க வெறும் கையோட அனுப்பமுடியும்?

      மருதாணியாவது இட்டு சிவக்கவைச்சுத்தானே அனுப்புவோம் ;)))))

      அதுமட்டுமா தலைக்குப்பூவு, நெற்றிக்குக் குங்குமம், வெத்தலை, பாக்கு, வாழைப்பழம்ன்னு எல்லாமே ஒண்ணும் குறைவைக்காம கொடுத்து, சந்தோஷமாகத்தானே போக விடுவோம்.

      தொடரும்.....

      நீக்கு
    22. அதிரடி அதிராவுக்கு [8]

      ஆனாக்க ஒரு முக்கியமான விஷயம்ங்க.

      ஒண்ணு இல்லே ரெண்டு முக்கியமான விஷயங்க.

      அதாவது ............

      விஷயம்: 1
      ============

      இந்த வைரத்தோடு விஷயம் உங்க காதோடு மட்டுமே இருக்கோணும்.

      இரகசியமா நமக்குள்ளே மட்டும் இருக்கோணும் . யாரிடமும் சொல்லக்கூடாது.

      எல்லாப்பதிவர்களுக்கும் வைரத்தோடு, வைர மூக்குத்தி, வைர நெக்லஸ் வாங்கித்தர என்னால முடியாது ...... ஜாமீஈஈஈஈஈஈஈ

      [ஒருசில தமிள் வார்த்தையெல்லாம் உங்களோடது தான் - அதாவது உங்களோட கொப்பி வலது தான் - நாங்க அதை COPY RIGHT ன்னு தப்பாச்சொல்லுவோம் தான்]

      -oOo-

      விஷயம்: 2
      ============

      இது ரொம்ப முக்கியமான விஷயம்.

      உங்க சைஸ் எனக்கு அர்ஜெண்டா வேணும்.

      அதாவது கழுத்து நெக்கு சைஸ்.

      [Neck Size] வைர நெக்லஸ் ஆர்டர் கொடுக்கத்தான்.
      .
      மற்றவை நுழையா விட்டாலும் சற்றே அகட்டி விட்டுக்கொள்ளலாம்.

      அதில் ஒன்றும் ப்ராப்ளம் இருக்காது.

      [அதாவது வைரமூக்குத்தி, வைரத்தோடு போடும்
      மூக்கு, காது துவாரங்களைத்தான் சொல்றேன்]

      தொடரும்......

      நீக்கு
    23. ஹையோ ஜாமீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ:)) தெரியாமல் ஒரு தூங்கும் புலியின் மீசையில:) .. டச்சு பண்ணிட்டேன்ன்ன்ன்ன்:)... எனக்கு வைரமும் வாணாம்ம்.. தங்கமும் வாணாம்ம்:)).. நான் திருப்பதியில பிச்சை எடுத்து என் நேர்த்தியை நிறைவேத்தப் போறேன்ன் ஜாமீஈஈஈஈஈ:)) பூஸ் ஒன்று புறப்படுதே:)) பிச்சை எடுக்கத்தேன்:))...

      //[அதாவது வைரமூக்குத்தி, வைரத்தோடு போடும்
      மூக்கு, காது துவாரங்களைத்தான் சொல்றேன்]

      தொடரும்......//

      வாணாம்ம்.. வணாம்ம்ம் ஜொல்லிட்டேன்ன்:)).. “முற்றும்” :) எனப் போட்டு முடிச்சிட்டு டக்குப் பக்கெனப் புதுத்தலைப்பு போட்டிடுங்கோ:).. போற வழியில மங்கோ ஊசாவது கிடைக்கும்:))..

      உஸ்ஸ்ஸ்ஸ் என் தலை தப்பியது அம்பிரான் புண்ணியம் ஜாமீ:)) கட்டிலடியை விட்டு வெளியில வர ஆசைச்ப்பட்டது டப்பாப்போச்சு:).. இனி முருங்கில ஏறி இருந்திட வாண்டியதுதான்:).

      குட்டி ஊசி இணைப்பு:
      உங்கள் “மூக்குத்தி” தலைப்பு ஓபின் ஆகுதில்லையே:( கோபு அண்ணன் கவனியுங்கோ. சீயா மீயா...

      நீக்கு
    24. VGK to அதிரடி அதிரா

      //குட்டி ஊசி இணைப்பு:// = சிறிய பின்குறிப்பு

      [எனக்குப்புரியுது. இது மற்றவர்களுக்காக]

      //உங்கள் “மூக்குத்தி” தலைப்பு ஓபின் ஆகுதில்லையே:( கோபு அண்ணன் கவனியுங்கோ. சீயா மீயா...//

      கவனிச்சுட்டேன் தாங்கள் சொன்னக் குட்டியை ஸாரி “குட்டி ஊசி இணைப்பை”. எனக்கு ஓபன் ஆகிறதே! அதில் மொத்தம் ஏழு மூக்குத்திகள் உள்ளன. அதாவது ஏழு பகுதிகள். எதையாவது ஒண்ணை TRY பண்ணிப்பாருங்கோ.

      http://gopu1949.blogspot.in/2011/05/1-of-7.html
      http://gopu1949.blogspot.in/2011/05/2-of-7.html
      http://gopu1949.blogspot.in/2011/05/3-of-7.html
      http://gopu1949.blogspot.in/2011/05/4-of-7.html
      http://gopu1949.blogspot.in/2011/05/5-of-7.html
      http://gopu1949.blogspot.in/2011/05/6-of-7.html
      http://gopu1949.blogspot.in/2011/05/7-of-7.html

      பிரியமுள்ள
      கோபு அண்ணா

      நீக்கு
    25. //குட்டி ஊசி இணைப்பு:// = சிறிய பின்குறிப்பு

      [எனக்குப்புரியுது. இது மற்றவர்களுக்காக]//

      ஹா..ஹா..ஹா.. இதைப் பார்த்துச் சிரிச்சிட்டுப் போறேனாம் எனச் சொல்லிடுங்கோ கோபு அண்ணனிடம்:).

      நீக்கு
  37. கதையை வாசிக்கும் போது சிரிப்பாக இருந்தது . மஞ்சூ நன்றாக புழுகி இருக்கின்றார் போலும் இருக்கின்றது. ஆனாலும் இப்படியானவர்களும் இருக்கின்றார்கள் என்பதும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் . இங்கும் அப்படித்தான் சாதாரணமான கூலி வேலை செய்கின்றவர்கள் அழுக்கு ஆடையிலே இருப்பார்கள் ஆனால் வருமானம் அவர்களே கூடுதலாகப் பெறுகின்றார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்திரகௌரி October 11, 2012 3:11 PM

      வாருங்கள் Mrs.சந்திரகெளரி Madam, வணக்கம்.

      //கதையை வாசிக்கும் போது சிரிப்பாக இருந்தது.//

      ரொம்பவும் சந்தோஷம். தாங்கள் சிரித்ததில் மகிழ்ச்சியே!

      //மஞ்சூ நன்றாக புழுகி இருக்கின்றார் போலும்//

      புழுகியும் இருக்கலாம். உண்மையாகவும் இருக்கலாம்.

      //ஆனாலும் இப்படியானவர்களும் இருக்கின்றார்கள் என்பதும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.//

      தாங்கள் ஏற்றுக்கொண்டதில் எனக்கும் சந்தோஷமே.

      //இங்கும் அப்படித்தான் சாதாரணமான கூலி வேலை செய்கின்றவர்கள் அழுக்கு ஆடையிலே இருப்பார்கள் ஆனால் வருமானம் அவர்களே கூடுதலாகப் பெறுகின்றார்கள்.//

      அங்கிங்கனாதபடி எங்கும் இவர்கள் உலகினில் பரவித்தான் உள்ளனர் என்கிறீர்கள்..... கொசுக்கள் போலவே ;))))))

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      என்றும் அன்புடன்
      VGK

      நீக்கு
  38. முதலில் நீண்ட நாட்களுக்குப் பிறகு, உங்களது பகிர்வைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது ஐயா...

    இது போல் மனிதர்கள் நிறைய பேர்கள் மிகவும் சந்தோசமாக இருக்கிறார்கள் என்பது 100% உண்மை...

    நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  39. உழைப்பால் உயர்ந்த மஞ்சு மனதில் உயர்ந்த இடத்தில இருக்கிறார் ....வெகு நாட்களுக்கு பிறகு அழகான அருமையான கதை தந்து விட்டீர்கள் ஐயா ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. VijiParthiban October 12, 2012 3:55 AM

      வாங்கோ Mrs. Viji Parthiban Madam,

      வணக்கம். நல்லா இருக்கீங்களா?

      //உழைப்பால் உயர்ந்த மஞ்சு மனதில் உயர்ந்த இடத்தில இருக்கிறார் ....//

      ஆம் நம் சமீபத்திய வலைச்சர ஆசிரியர் பெயரும் மஞ்சு தான். அவரும் அப்படியே தான். அனைவர் மனதிலும்
      உயர்ந்த இடத்தினைப் பிடித்திருந்தார்.

      இந்த இணைப்பினை மட்டுமாவது தயவுசெய்து பாருங்கோ. உங்களுக்கே தெரியவரும்.

      http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html?showComment=1349605091455

      //வெகு நாட்களுக்கு பிறகு அழகான அருமையான கதை தந்து விட்டீர்கள் ஐயா ....//

      தங்களின் அன்பான வருகையும், அழகான் கருத்துக்களும் எனக்கு மிகவும் மகிழ்வளிக்கிறது, மேடம்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  40. என்னுடைய தாமதமான வருகைக்கு மன்னிக்கணும்.
    எனக்கும் இந்தக் கதை வந்தது. இதில் எவ்வளவு உண்மை இருக்கும் என்று தெரியவில்லை.

    உங்கள் கருத்தை சொல்லுங்களேன்.

    எப்படியோ, உங்களை மறுபடியும் பதிவுகள் எழுத வைத்த மஞ்சூ - விற்கு நன்றி சொல்ல வேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ranjani Narayanan October 12, 2012 6:47 AM

      வாங்கோ வாங்கோ திருமதி ரஞ்ஜனி நாராயணன் மேடம்.

      செளக்யம் தானே?

      //என்னுடைய தாமதமான வருகைக்கு மன்னிக்கணும்.//

      இந்த வார வலையுலகின் V V I P நீங்கள் தான். இங்கு வருகை தர நேரம் ஒதுக்கியதே பெரிய விஷயம் தான். மன்னிப்பு என்ற பெரிய வார்த்தைகளெல்லாம் நமக்குள் தேவை தானா மேடம்.

      //எனக்கும் இந்தக் கதை வந்தது. இதில் எவ்வளவு உண்மை இருக்கும் என்று தெரியவில்லை.//

      உங்களுக்கு மின்னஞ்சலில் வராமல் இருக்குமா? நீங்கள் என்ன சாதாரண ஆளா? இந்த வார வலைச்சர ஆசிரியர் வேறு.

      ஆங்கில் மின்னஞ்சலில் உள்ளது கொஞ்சம் தான் மேடம். நான் என் தமிழாக்கத்தில் மேலும் சேர்த்துள்ளது தான் அதிகம்.

      //உங்கள் கருத்தை சொல்லுங்களேன்.//

      இந்த எல்லாப்பின்னூட்டங்களுக்கும் நான் பதில் அளித்துள்ளேனே. அவற்றைப்படித்தாலே என் கருத்தும் இருக்கும் அல்லவா?

      பெரிய விவாத மேடை போல அமைந்து விட்டது பாருங்கோ. பலரும் பலவித கருத்துக்கள் அழகாகக் கூறியுள்ளார்கள் பாருங்கோ. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

      //எப்படியோ, உங்களை மறுபடியும் பதிவுகள் எழுத வைத்த மஞ்சூ - விற்கு நன்றி சொல்ல வேண்டும்!//

      புரிந்துகொண்டேன். அர்த்தபுஷ்டியுடன் கூடிய அழகான வார்த்தைகள் இவை. பிரபல எழுத்தாளர் என்றால் சும்மாவா?

      மஞ்சூஊஊஊஊஊஊஊஊ வுக்கு என் நன்றிகளும்.

      பிரியமுள்ள,
      VGK

      நீக்கு
  41. சில குறுந்தொழில்களில் ஒயிட் காலர்ஸ்களைவிட அதிக வருமானம் ஈட்ட முடிவது உண்மையே.ஆனாலும் ஒரு தினத்தில் இத்தனை சமோசாவா,அதை நம்ப முடியவில்லை.உங்களுக்கு வந்த மெயிலை அழகாக கதைப் பதிவாக பதிவிட்டமை நன்றாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. thirumathi bs sridhar October 12, 2012 10:24 AM

      வாங்கோ வாங்கோ திருமதி ஆச்சி மேடம்.

      செளக்யமா இருக்கீங்களா? தங்களின் வருகை எனக்கு மிகவும் பசுமையாக உள்ளது.

      [பச்சை உடம்பு எனச் சொல்லுவார்களே ;)))))].

      கைக்குழந்தை ”யக்சிதாஸ்ரீ” பிடித்துக்கொண்டு நிற்பது போல நேற்று தான் கனவு கண்டேன். இன்று பார்த்ததும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இன்னும் கொஞ்சநாள் போகட்டும். ரிஸ்க் எடுக்காதீங்கோ.

      //சில குறுந்தொழில்களில் ஒயிட் காலர்ஸ்களைவிட அதிக வருமானம் ஈட்ட முடிவது உண்மையே.//

      ஆஹா, அருமையாகச் சொல்லிட்டீங்க.

      //ஆனாலும் ஒரு தினத்தில் இத்தனை சமோசாவா,அதை நம்ப முடியவில்லை.//

      ஜனத்தொகையும், ரயில் பயணிகள் எண்ணிக்கையும், பசியும், ருசியும் அதிகம் தானேங்க! அதனால் நாம் இதையும் [தினமும் ஆயிரக்கணக்கான சமோஸாவையும்] நம்பலாம்.

      மேலும் என்னைப் போன்றவர்கள் [எதையாவது பக்க வாத்யம் போல அடிக்கடி வாங்கி அசை போட்டுக்கொண்டே இருப்பவர்கள்] ஒருவரே டஜன்கணக்கில் வாங்கிச் சாப்பிடுவதும் உண்டு தானே. ;)))))

      //உங்களுக்கு வந்த மெயிலை அழகாக கதைப் பதிவாக பதிவிட்டமை நன்றாக உள்ளது.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      பிரியமுள்ள,
      VGK

      நீக்கு
  42. உண்மை கதையோ, கற்பனையோ, ஒன்று நிஜம்... நமக்கு செலவுகள் அதிகம். காரும் வீடும், குளிர் சாதன வசதிகளும் மஞ்சூவுக்குத் தேவைப்படுவதில்லை... சம்பாதிக்கும் பணம் சேமிப்பாய் மாறுகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிருஷ்ணப்ரியா October 12, 2012 11:01 AM

      வாருங்கள் சகோதரி Ms கிருஷ்ணப்ரியா அவர்களே. தங்களின் முதல் வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. WELCOME TO YOU !

      //உண்மை கதையோ, கற்பனையோ, ஒன்று நிஜம்... நமக்கு செலவுகள் அதிகம். காரும் வீடும், குளிர் சாதன வசதிகளும் மஞ்சூவுக்குத் தேவைப்படுவதில்லை... சம்பாதிக்கும் பணம் சேமிப்பாய் மாறுகிறது...//

      நூற்றில் ஒரு வார்த்தை. அதே அதே ... மிக அழகாகப் புரியும்படியாக இனிமையாக இதமாக பதமாகச் சொல்லி விட்டீர்கள்.

      தங்களின் அன்பான முதல் வருகைக்கும் அழகான கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  43. சில காலம் முன்பு ஐதராபாத்தில் ஒரு பிச்சைக்காரனின் சராசரி நாள் வருமானம் 1500 ரூபாய் என்ற செய்தியைப் படித்தபோது வியந்து போனேன். இப்போது இந்த எளிய வியாபாரம் மூலம் இத்தனை பணம் வரும் என்கிற வியப்புத் தகவல் உங்கள் மூலம் அறிந்ததில் மீண்டும் வியப்பு. உங்களின் நடை அழகு. (எழுத்து நடையை சொன்னேன் சார்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பால கணேஷ் October 13, 2012 4:13 AM
      //சில காலம் முன்பு ஐதராபாத்தில் ஒரு பிச்சைக்காரனின் சராசரி நாள் வருமானம் 1500 ரூபாய் என்ற செய்தியைப் படித்தபோது வியந்து போனேன். இப்போது இந்த எளிய வியாபாரம் மூலம் இத்தனை பணம் வரும் என்கிற வியப்புத் தகவல் உங்கள் மூலம் அறிந்ததில் மீண்டும் வியப்பு.//

      வாருங்கள் திரு பால கணேஷ் சார். வணக்கம். இதுபோல வியப்பளிக்கும் செய்திகள் வந்துகொண்டே தான் உள்ளன.

      //உங்களின் நடை அழகு. (எழுத்து நடையை சொன்னேன் சார்)//

      அதானே பார்த்தேன். நாம் இன்னும் ஒருவரை ஒருவர் சந்திக்கவே இல்லையே, எப்படி நம் நடையழகை இவர் பார்த்தார் என ஸ்தம்பத்துப்போய் விட்டேன், ஒரே ஒரு நிமிடம், மட்டும்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  44. பதில்கள்
    1. மாதேவி October 13, 2012 5:57 AM
      உழைப்பால் உயர்ந்த மனிதர்.//

      வாருங்கள். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  45. மிக ஆச்சரியமாக இருக்கிறது.இதுதான் உண்மை என்றால் நாமெல்லாம் முட்டாள்கள் மட்டுமில்லை, ஒரு அளவுக்கு மேல் சிந்திக்க முடியாதவர்கள் என்பதும் நிதர்சனம். மிக நன்றி கோபாலகிருஷ்ணன் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிசிம்ஹன் October 14, 2012 3:28 AM

      வாருங்கள் திருமதி வல்லிசிம்ஹன் மேடம்.
      நல்லாயிருக்கீங்களா? தங்களின் அன்பான வருகை எனக்கு மிகவும் சந்தோஷம் அளிக்கிறது.

      //மிக ஆச்சரியமாக இருக்கிறது. இதுதான் உண்மை என்றால் நாமெல்லாம் முட்டாள்கள் மட்டுமில்லை, ...//

      ஏன் மேடம், அப்படியெல்ல்லாம் நினைக்கிறீங்க?

      யாருமே முட்டாள்கள் அல்ல.

      எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் அறிவாளிகள் மட்டுமே.

      எல்லோராலும் எல்லாவற்றையும் மனமுவந்து ஏற்று செய்ய முடிவது இல்லை என்பது தான் உண்மை.

      எனக்குத் தெரிந்த ஓர் முடிவெட்டிவிடும் நண்பர் உள்ளார்.

      அவரும் தன் உழைப்பால் [பிறர் தலையை முழுவதும் மொட்டையடிக்காமல் என்று கூட சேர்த்துக்கொள்ளலாம் இங்கே ;))))) ] உயர்ந்து கொண்டே வருபவர் தான்.

      அவரை மனதில் வைத்தே நான் என் சிறுகதை ஒன்றும் எழுதியுள்ளேன். இணைப்பு இதோ:

      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_17.html
      தலப்பு: அழகு நிலயம்

      //ஒரு அளவுக்கு மேல் சிந்திக்க முடியாதவர்கள் என்பதும் நிதர்சனம்.//

      இந்தத் தங்களின் கூற்றில் ஓரளவு உண்மையும் நியாயமும் உள்ளது. சிந்தித்து, திட்டமிட்டு செயல் பட்டால், எதிலும் வெற்றியடைய முடியும் தான்.

      //மிக நன்றி கோபாலகிருஷ்ணன் சார்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான மனம் திறந்த கருத்துப்பகிர்வுக்கும் நான் தான் நன்றி சொல்லணும், மேடம். மிக்க மகிழ்ச்சி.

      பிரியமுள்ள
      VGK

      நீக்கு
  46. பகிர்வு நன்று. அவர் சொன்ன கணக்குகள் முன்பின் இருக்கக் கூடும் என்றாலும் சிறு தொழில் செய்து சிறிய வீடுகளில் செழிப்பாக வாழ்ந்து வருகிறர்வர்கள் இருக்கவே செய்கிறார்கள். கடும் உழைப்பே இவர்களது முதலீடு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராமலக்ஷ்மி October 14, 2012 9:22 AM
      //பகிர்வு நன்று. அவர் சொன்ன கணக்குகள் முன்பின் இருக்கக் கூடும் என்றாலும் சிறு தொழில் செய்து சிறிய வீடுகளில் செழிப்பாக வாழ்ந்து வருகிறர்வர்கள் இருக்கவே செய்கிறார்கள். கடும் உழைப்பே இவர்களது முதலீடு.//

      வாருங்கள் மேடம். வெகு அழகாகச் சொல்லிவிட்டீர்கள், தங்களின் சமீபத்திய மலர்கள் பற்றிய பதிவு போலவே.;)

      அன்பான வருகைக்கும் அழகான கருத்துப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  47. கடின உழைப்பிற்கு ஈடு இணையில்லை.சுவாரசியமான பதிவு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரந்தை ஜெயக்குமார் October 14, 2012 5:11 PM
      கடின உழைப்பிற்கு ஈடு இணையில்லை.சுவாரசியமான பதிவு நன்றி//

      வாருங்கள் கரந்தை திரு. ஜெயக்குமார் அவர்களே!

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.

      அன்புள்ள
      VGK

      நீக்கு
  48. திரட்டிகளில் எனக்கு என்றுமே நாட்டம் இல்லை.
    இருப்பினும் தங்கள் தகவல்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  49. ஆளப்பாத்து எடைபோட முடியாதுன்னு இதத்தான் சொல்றாங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலாகுமரன் October 15, 2012 4:50 AM

      வாருங்கள் திரு. கலாகுமரன் சார்.

      //ஆளப்பாத்து எடைபோட முடியாதுன்னு இதத்தான் சொல்றாங்களா?//

      அதே அதே ..... தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

      அன்புடன் VGK

      நீக்கு
  50. உண்மைதான்...
    உங்கள் பாணியில் அழகா எழுதியிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  51. சே. குமார்October 15, 2012 6:38 AM
    உண்மைதான்...
    உங்கள் பாணியில் அழகா எழுதியிருக்கீங்க.//

    வாருங்கள் Mr. சே.குமார் Sir,

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.

    அன்புடன்
    VGK

    பதிலளிநீக்கு
  52. வணக்கம் சார். சமோசா விற்பதும் ரியல் எஸ்டேட் விற்பதும் ரொம்ப வசீகரமான தொழில்கள் போல பிரமை உண்டாகிறது. அந்த 'கோடீஸ்வரர்' இன்கம் டாக்ஸ் கட்டுவார் என்று எனக்கு தோணவில்லை. நம் மாதிரி லோன் போட்டு, கார் வாங்கி இருப்பவர்கள் கட்டும் டாக்ஸ்- தான், நாட்டின் பொருளாதாரத்திற்கு உயிர் நாடி.

    சந்தோஷமா ஏதோ நாட்டுக்கு நன்மை , நம்மாலான உதவி செய்கிறோம் என்று பெருமை பட்டு,'டை' கட்டும் போது, மகிழ்ச்சி கொள்ளலாம்.

    கண்டபடி மனைகளை விற்று, ஏரி குளங்கலெல்லாம் வீடாகவும் பல மாடிகளாகவும் ஆகும் அவலமான நிலைக்கு காரணமாக இருக்காமல் இருப்பது, எத்தனை மகத்தான , வாழ்க்கை முறை!

    ஆதலால், நம் நடுத்தர வர்க்க, பயந்த சுபாவ, மரியாதை மிக்க வாழ்க்கை எவ்வளவோ சுகம் சார்!.

    பதிவுகள் எழுதி, மகிழ்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ அன்புக்குரிய பட்டு,
      நல்லாயிருக்கீங்களா,
      செளக்யமாக சந்தோஷமாக இருக்கீங்களா?

      போனவாரம் நம் திருமதி ரஞ்ஜனி நாராயணன் மேடம் உங்களைப்பத்தி வலைச்சரத்தில் எழுதியிருந்தாங்க. எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது. இன்றைக்குத்தான் பார்த்து விட்டு பதில் எழுதியுள்ளீர்கள் போலிருக்கு. அதையும் பார்த்தேன். சந்தோஷம். வாழ்த்துகள்.

      தமிழிலும் சின்னச்சின்ன பதிவுகளாகக் கொடுங்கோ. அழகாகப்படமெல்லாம் இணைச்சுக்கொடுங்கோ. மறக்காமல் மெயிலில் பதிவின் இணைப்பை மட்டும் எனக்கு அனுப்புங்கோ.

      தொடரும்......

      நீக்கு
    2. VGK to பட்டு

      //நம் மாதிரி லோன் போட்டு, கார் வாங்கி இருப்பவர்கள் கட்டும் டாக்ஸ்- தான், நாட்டின் பொருளாதாரத்திற்கு உயிர் நாடி.//

      நிச்சயமாக. ஆனால் மாதச்சம்பளக்காரர்கள் கட்டும் வருமான வரி மொத்த வருமான வரியில் JUST 2 or 3% தான்னு சொல்றாங்க மேடம். மீதியெல்லாமே தொழில் நிறுவனங்கள் மூலம் கிடைப்பதாகச் சொல்கிறார்கள்.

      எது எப்படியோ நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நாம் செலுத்தும் அனைத்து வரிகளும் உயிர் நாடியே தான் என்பது சந்தேகமே இல்லை தான்.

      //சந்தோஷமா ஏதோ நாட்டுக்கு நன்மை , நம்மாலான உதவி செய்கிறோம் என்று பெருமை பட்டு,'டை' கட்டும் போது, மகிழ்ச்சி கொள்ளலாம்.//

      ஏதோ நம் சக்திக்கு எத்கிஞ்சிது நாமும் செலுத்துகிறோம் என்பதில் நிச்சயமாக நமக்கும் பெருமை தான்.

      தொடரும்......

      நீக்கு
    3. VGK To பட்டு [3]

      //கண்டபடி மனைகளை விற்று, ஏரி குளங்கலெல்லாம் வீடாகவும் பல மாடிகளாகவும் ஆகும் அவலமான நிலைக்கு காரணமாக இருக்காமல் இருப்பது, எத்தனை மகத்தான , வாழ்க்கை முறை!//

      ஆஹா, தங்களின் சமூக விழிப்புண்ர்வுக் கருத்துக்களும் எல்லோராலும் மிகவும் யோசிக்க வேண்டியவைகள் தான்.

      //ஆதலால், நம் நடுத்தர வர்க்க, பயந்த சுபாவ, மரியாதை மிக்க வாழ்க்கை எவ்வளவோ சுகம் சார்!. //

      நிச்சயமாக சுகம் தான். அது ஒரு தனிசுகம் தான். ;)))))

      //பதிவுகள் எழுதி, மகிழ்வோம்.//

      இது சூப்பர் ஐடியா .... பட்டு.

      தாங்கள் தமிழ் வலையுலகில் தொடந்து எழுத வேண்டும்.

      குளுகோஸ் மானிடர் போல மிகப்பெரிய பதிவாக இல்லாமல், பல பகுதிகளாக அதையே பிரித்து, சின்னச்சின்னதாக், பெரிய எழுத்துக்களில், தகுந்த படங்களையும் இணைத்துத் தர வேண்டும்.

      சற்றே கவர்ச்சிகரமான தலைப்பாகவும் தர வேண்டும். அப்போது தான் எல்லோரையும் அது சுண்டி இழுக்கும்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான மாறுபட்ட ஆனால் பாஸிடிவ் ஆன கருத்துப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், பட்டு.

      பிரியமுள்ள
      கோபு

      நீக்கு
    4. All tips and ideas noted, will be followed in future:-)

      (Officialese)

      நீக்கு
    5. Pattu RajOctober 17, 2012 2:35 AM
      All tips and ideas noted, will be followed in future:-)

      Thanks. Thanks a Lot PATTU.

      VGK

      நீக்கு


  53. ரெண்டு நாள் கொஞ்சம் பிசியா இருந்ததில் கோபு அண்ணாவின் ஒரே இடி மின்னல் என்றிருக்கே :))
    யாரோ அதிர வச்சிட்டாங்க அண்ணாவின் ப்ளாகை :)))

    பதிலளிநீக்கு
  54. //மண்ணைக் கும்பிடுவார்கள், ஆனா எண்ணெயை ஆரும் கும்பிட்டதாக சரித்திரத்தில் உண்டோ? அப்போ மண் உயர்வானதுதானே?:))..////

    தெய்வமே !!!!!தத்துவம் தத்துவமா கொட்டுகிறதே


    பூசானந்தா வாழ்க வாழ்க :))..

    பதிலளிநீக்கு
  55. உங்கள் கோஷ்டித் தோழிகள் சிலரின் பாஷைகளையும் சொற்களையும் என்னால் கொஞ்சம் கூட புரிந்து கொள்ளவே முடியவில்லை. //

    :)))) எல்லா புகழ் பெருமை எங்கள் தானை தலைவி அதிரா அவர்களையே சேரும் .

    பதிலளிநீக்கு
  56. angelin October 15, 2012 11:48 AM

    //ரெண்டு நாள் கொஞ்சம் பிசியா இருந்ததில் கோபு அண்ணாவின் பதிவினில் ஒரே இடி மின்னல் என்றிருக்கே :))

    யாரோ அதிர வச்சிட்டாங்க அண்ணாவின் ப்ளாகை :)))//

    ஆமாம் நிர்மலா, இதுவரை இதுபோன்ற ஒரு இடி + மின்னல் + பலத்த மழையை நான் பகிரங்கமாகப் பார்த்ததே இல்லை.

    ஒரேயடியா நிலநடுக்கம் போல அதிர வைக்குது என்னை.

    ”அதிரடி அதிரா” சிறப்புப்பட்டமே கொடுத்துட்டேன்.

    பிரியமுள்ள
    கோபு அண்ணா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. VGK to நிர்மலா,

      இந்த ’அதி’ரடி ’அதி’ரா எனக்கு அறிமுகமானதே உங்களின் ’அதி’ரஸப்பதிவினால் தான்.

      http://kaagidhapookal.blogspot.in/2012/10/craft-and-kitchen-cornerquilled-dora.html

      நான் உங்களின் அந்த ’அதி’ரஸப்பதிவுக்கு முதல் பின்னூட்டம் கொடுக்கப்போய்,

      நீங்க எனக்கு மட்டுமே ’அதி’ரஸம் கொடுக்கப்போய்,

      அவங்க குறுக்கே வந்து, ’அதி’ரஸத்தில் பங்கு கேட்கப்போய்,

      நீங்க சும்மா இல்லாமல், நாங்கள் இரண்டு பேரும் மட்டும் ஒற்றுமையாக ’அதி’ரஸத்தை அன்போடு சாப்பிடலாம்ன்னு சோல்லப்போய்,

      வேறு யாருக்கும் தரவேண்டாம் எனவும் சலுகை கொடுக்கப்போய்,

      வருகை தந்த வேறு யாருக்குமே ’அதி’ரஸம் கிடைக்காமலும் போய்,

      102 பின்னூட்டங்களில் நாங்கள் இருவருமே கால்வாசிப் பகுதியை ஆக்கிரமிக்கப்போய்,

      ஒரேயடியாக அங்குதான் எங்களுக்குள் அன்புத்தொல்லை ஆரம்க்கலானது ...... !

      தகவலுக்காக மட்டுமே !!

      VGK

      நீக்கு
    2. VGK TO நிர்மலா

      http://kaagidhapookal.blogspot.in/2012/10/indian-vintage-photos-collection.html

      அப்புறமா “கருப்பு முழு உளுந்து வடை + ரவா லட்டு” ன்னு ஒரு பதிவு போட்டீங்க. சரி, நாம முதன்முதலில் வடை கேட்டுப்போக வேண்டாம்னு நினைச்சு நான் ஒதிங்கிக்கொண்டேன்.

      அதிராவும் அதே போல நினைச்சு ஒதுங்கிக்கிட்டாங்க போலிருக்கு.

      கடைசியிலே பார்த்தா நம்ம அம்முலுவுக்கு அந்த முதல் வடை+லட்டு கிடைக்கும் அதிர்ஷ்டம் அடிச்சிது.

      அதன்பின் மெதுவாக வந்து கலந்துகொண்ட என்னை, அவங்க விடவே இல்லையே. துரத்தித் துரத்தியல்லவோ வம்பு இழுத்தாங்க.

      அதிலும் 79 கமெண்ட்களில் நிறைய நாங்களே ஆக்கிரமிக்கும் படியாகிப்போனது. அன்புத்தொல்லைகள் இதுபோல எங்களுக்குள் தொடர்கதையாகிப்போனது.

      தகவலுக்காக மட்டுமே இதுவும் !!

      VGK

      நீக்கு
    3. angelin October 15, 2012 11:49 AM
      //மண்ணைக் கும்பிடுவார்கள், ஆனா எண்ணெயை ஆரும் கும்பிட்டதாக சரித்திரத்தில் உண்டோ? அப்போ மண் உயர்வானதுதானே?:))..////

      தெய்வமே !!!!!தத்துவம் தத்துவமா கொட்டுகிறதே

      பூசானந்தா வாழ்க வாழ்க :))..//

      ஓஹோ, பூசானந்தா என்பதும் இவர்களுக்கு மற்றொரு பெயரோ? இப்போது தான் தெரிந்து கொண்டேன்.

      நான் யாரோ ‘ப்ரேமானந்தா’ ‘நித்யானந்தா’ போலவோன்னு நினைச்சேன். அந்த அதே சாயல் இருக்கு இவங்களிடமும். ஒரே ஆனந்தம் தான் போங்க !

      ”ஆனந்தம்... ஆனந்தம்... ஆனந்தமே” ன்னு பாட வேண்டியது தான்.

      பிரியமுள்ள
      கோபு அண்ணா

      நீக்கு
    4. angelin October 15, 2012 11:52 AM
      ***உங்கள் கோஷ்டித் தோழிகள் சிலரின் பாஷைகளையும் சொற்களையும் என்னால் கொஞ்சம் கூட புரிந்து கொள்ளவே முடியவில்லை.*** - VGK

      //:)))) எல்லா புகழும் பெருமையும் எங்கள் தானை தலைவி அதிரா அவர்களையே சேரும்.//

      மொத்தத்தில் இவர்களுடன் பழகினால் உலகத்திலுள்ள அனைத்து மொழிகளையும் கலந்த ’பஞ்சாமிர்தம்’ போல இருக்கும்னு சொல்றீங்க.

      ஆனால் எனக்கு இந்த பஞ்சாமிர்தம் என்பது பிடிக்காது நிர்மலா. பிரஸாதமே என்றாலும் கசகசப்பான பஞ்சாமிர்தத்தை நான் வேண்டாம் என மறுத்து விடுவேன். கையாலேயே தொடுவதில்லை. அதுபோல எல்லோருக்கும் பிடித்த “அவியல்” என்பதும் எனக்குப்பிடிக்காது.

      பொதுவாக கலப்படமான பழங்கள், காய்கறிகள் எனக்கு என்னவோ பிடிப்பதில்லை. என் “உணவே வா .. உயிரே போ” என்ற பதிவினில் கூட இதைப்பற்றி எழுதியிருந்தது உங்களுக்கும் ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

      உங்கள் சமையல் குரு காமாக்ஷி மாமிகூட அதைப்படிச்சுட்டு எனக்கு பின்னூட்டம் கொடுத்திருக்காங்க.

      http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_26.html

      பிரியமுள்ள
      கோபு அண்ணா

      நீக்கு
  57. சில சமயங்களில் வாழ்க்கையின் நிதர்சனம் இப்படித்தான் வந்து நம் முகத்தில் அறையும்!
    அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனோ சாமிநாதன் October 16, 2012 9:26 AM

      வாருங்கள் திருமதி மனோ சாமிநாதன் மேடம், அவர்களே!

      செளக்யாமா? நல்லா இருக்கீங்களா?

      //சில சமயங்களில் வாழ்க்கையின் நிதர்சனம் இப்படித்தான் வந்து நம் முகத்தில் அறையும்!//

      ஆமாம் மேடம். அறை வாங்கும் முகம் சற்றே சிவந்து கூடப் போகும். ;))))))

      //அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!//

      மிக்க நன்றி. தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் மிகுந்த சந்தோஷத்தை அளித்தன.

      அன்புச் சகோதரன்,
      VGK

      நீக்கு
  58. எல்லாம் வல்ல இறைவனின் அருளாலும், பெரியவர்களின் வேண்டுதலாலும், சவுதியில் நல்ல வேலையில் இருக்கிறேன், இருந்தாலும் எனது பள்ளிப்பருவம் தொட்டு கல்லூரிபருவம் வரை எனது தகப்பனரோடு திருச்சி N.S.B ROADல் இருந்த நடைபாதை கடையில் இரவு நேரங்களில் மற்றும் கல்லூரி இல்லாத நாட்களில் பகல் நேரங்களில் அமர்ந்து எனது தகப்பனாரை விட அதிக விலைக்கு விற்று அவர் வந்தவுடன் நான் எத்தனை லாபம் சம்பாதித்தேன் பார்த்திர்களா என்று கேட்பேன் அவர் சிரித்துக்கொண்டே எதிரில் உள்ள வசந்த பவனில் டபரா செட்டில் ஒரு காப்பி வாங்கி அவரே ஆத்தி எனக்கு பாதி கொடுப்பார்.அவையெல்லாம் என் வாழ்வின் வசந்த காலங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அஜீம்பாஷா October 16, 2012 12:34 PM

      வாருங்கள், அன்பு நண்பர் திரு.அஜீம்பாஷா அவர்களே.

      வணக்கம். நீங்களும் எங்கள் ஊரில் [திருச்சி]வாழ்ந்து பள்ளி + கல்லூரிப்படிப்புகளை முடித்தவர் என்பது கேட்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

      //எல்லாம் வல்ல இறைவனின் அருளாலும், பெரியவர்களின் வேண்டுதலாலும், சவுதியில் நல்ல வேலையில் இருக்கிறேன்.//

      கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது, நண்பா. ;)))))

      //இருந்தாலும் எனது பள்ளிப்பருவம் தொட்டு கல்லூரிபருவம் வரை எனது தகப்பனரோடு திருச்சி N.S.B ROAD ல் இருந்த நடைபாதை கடையில் இரவு நேரங்களில் மற்றும் கல்லூரி இல்லாத நாட்களில் பகல் நேரங்களில் அமர்ந்து எனது தகப்பனாரை விட அதிக விலைக்கு விற்று அவர் வந்தவுடன் நான் எத்தனை லாபம் சம்பாதித்தேன் பார்த்திர்களா என்று கேட்பேன்.//

      சபாஷ், புலிக்குப்பிறந்தது பூனையாக முடியுமா? என்பார்கள்.
      புலி 8 அடி பார்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்றும் சொல்வார்கள். அதே அதே .. மிக்க மகிழ்ச்சி.

      //அவர் சிரித்துக்கொண்டே எதிரில் உள்ள வசந்த பவனில் டபரா செட்டில் ஒரு காப்பி வாங்கி அவரே ஆத்தி எனக்கு பாதி கொடுப்பார்.//

      ஆஹா, இன்றும் அந்த NSB Road உள்ளது, வஸந்த பவனும் அங்குதான் உள்ளது. [இன்னும் ’சாரதாஸ்’காரர்கள் அதை வளைத்துப்போடவில்லையென நம்புகிறேன்] இனி நான் அந்தப்பக்கம் போகும்போதெல்லாம் உங்களையும் நினைத்துக்கொள்வேன். மனதினில் மகிழ்வேன்.

      //அவையெல்லாம் என் வாழ்வின் வசந்த காலங்கள்.//

      தங்களின் அன்பான புதிய வருகைக்கும், அழகான வசந்தகால நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதற்கும் என் மனமார்ந்த நன்றிகள். வாழ்க வளமுடனும் நலமுடனும்.

      நம் திருச்சியைப்பற்றி நான் ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்.
      இணைப்பு இதோ, நேரம் இருந்தால் படியுங்கள். படித்தால் கருத்துக்கூறுங்கள்.
      http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_24.html
      தலைப்பு: ”ஊரைச்சொல்லவா ! பேரைச்சொல்லவா !!”

      அன்புடன் தங்கள்
      VGK

      நீக்கு
  59. சிலர் சம்பாதிப்பதை சரியாக பயன்படுத்தி இந்த சமோசாகாரர் போல் வாழ்கிறார்கள் சார்! ஆனால் சிலர் இந்த மாதிரி சின்ன சின்ன வியாபாரத்தில் அதிக சம்பாதித்தும் அதை சரியான வழியில் செலவிட்டு சேமித்து வைக்காமல் கஷ்டப்படுகிறார்கள் என்பதையும் கேள்விப்பட்டிருக்கிறேன் சார்! பகிர்வுக்கு நன்றி சார்!

    பதிலளிநீக்கு
  60. யுவராணி தமிழரசன் October 17, 2012 4:44 AM
    //சிலர் சம்பாதிப்பதை சரியாக பயன்படுத்தி இந்த சமோசாகாரர் போல் வாழ்கிறார்கள் சார்! ஆனால் சிலர் இந்த மாதிரி சின்ன சின்ன வியாபாரத்தில் அதிக சம்பாதித்தும் அதை சரியான வழியில் செலவிட்டு சேமித்து வைக்காமல் கஷ்டப்படுகிறார்கள் என்பதையும் கேள்விப்பட்டிருக்கிறேன் சார்! பகிர்வுக்கு நன்றி சார்!//

    வாருங்கள் திருமதி யுவராணி தமிழரசன் மேடம்,

    ஆம் நீங்கள் சொல்வதும் சரியே. உலகம் பலவிதம். ஒவ்வொருவர் ஒவ்வொரு விதம்.

    அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.

    அன்புடன்
    VGK

    பதிலளிநீக்கு
  61. அய்யா நீங்கள் குறிப்பிட்ட பதிவை நான் ஏற்கனவே படித்திருக்கிறேன் அருமையாக எழுதியிருந்தீர்கள் நன்றி. நான் திருச்சிக்காரன்தான்,இரட்டைமால் தெரு பின்புறம் உள்ள நவாப் காலனியில்தான்(N.S.B ROAD TO SUPERBAZAAR போகும் குறுக்கு வழி) பிறந்தேன், நான் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை சாரதாஸ் பின்புறம் இருந்த நங்கவரம் பள்ளியில் படித்தேன்,பிறகு பத்தாம் வகுப்புவரை E.R.ல் படித்தேன். மேல் நிலை வகுப்பு புத்தூர் பிஷப்பிலும் கல்லூரி ஜமால் முகமது கல்லூரியிலும் படித்தேன்.
    இப்போது தென்னூர் அண்ணா நகரில் என் குடும்பம் இருக்கிறது,
    மலைக்கோட்டை பழைய தக்கார் மறைந்த நடராஜ ஐயர் என் அப்பாவின் நண்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அஜீம்பாஷா October 17, 2012 10:33 AM
      //அய்யா நீங்கள் குறிப்பிட்ட பதிவை நான் ஏற்கனவே படித்திருக்கிறேன்.அருமையாக எழுதியிருந்தீர்கள் நன்றி.//

      மிக்க நன்றி. மேலும் எனது படைப்புகள் பலவும் இணைப்புகளுடன் இந்த மாதம் 02.10.2012 அன்று தமிழ் வலைச்சரத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அது தங்களுக்கு ஓர் INDEX போல பயன் படக்கூடும். இணைப்பு இதோ:
      http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html?showComment=1349605091455

      //நான் திருச்சிக்காரன்தான், இரட்டைமால் தெரு பின்புறம் உள்ள நவாப் காலனியில்தான்(N.S.B ROAD TO SUPERBAZAAR போகும் குறுக்கு வழி) பிறந்தேன்//

      அந்த இடங்கள் எல்லாம் எனக்கு நன்றாகவே தெரியும். நான் பிறந்து, வளர்ந்து, படித்து, உத்யோகம் பார்த்து, பணிஓய்வு பெற்று இன்றும் வாழ்வது திருச்சியே. அதுவும் திருச்சி மலைக்கோட்டையைச் சுற்றியுள்ள நான்கு பிரதான சாலைகளில் ஒன்றான வடக்கு ஆண்டார் தெருவிலே தான்.

      //நான் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை சாரதாஸ் பின்புறம் இருந்த நங்கவரம் பள்ளியில் படித்தேன்//

      இப்போது அந்தப்பள்ளி மட்டுமல்ல, அங்கிருந்த கல்யாண மண்டபம், நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் எல்லாமே “சாரதாஸ்” ஜவுளிக்கடலின் அலைகளால் கபளீகரம் செய்யப்பட்டுவிட்டன. அந்த நங்கவரம் ஸ்டோர் என்பதின் நுழைவாயிலே அடைக்கப்பட்டு விட்டது.

      நான் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்தது பிரின்சிபல் சாரநாதன் இந்து எலிமெண்டரி ஸ்கூல் என்பதில். அதன் பிறகு VI Std. to XI Std. SSLC வரை படித்தது தேசியக்கல்லூரி உயர்நிலைப்பள்ளியில் [National College High School]. தாங்கள் படித்த E.R.மேல் நிலைப்பள்ளியில் A V KRISHNAN என்ற கணித ஆசிரியரைத் தங்களுக்கு ஒருவேளை தெரிந்திருக்கலாம். அவருக்கு இப்போது 81 வயது ஆகிறது. அவர் என் பெரியம்மா பிள்ளை ஆவார்.

      தொடரும்.....

      நீக்கு
    2. VGK to திரு.அஜீம்பாஷா

      //பிறகு பத்தாம் வகுப்புவரை E.R.ல் படித்தேன். மேல் நிலை வகுப்பு புத்தூர் பிஷப்பிலும் கல்லூரி ஜமால் முகமது கல்லூரியிலும் படித்தேன்.//

      அப்படியா சந்தோஷம்.

      //இப்போது தென்னூர் அண்ணா நகரில் என் குடும்பம் இருக்கிறது//

      ரொம்ப நல்லது. மகிழ்ச்சி.

      //மலைக்கோட்டை பழைய தக்கார் மறைந்த நடராஜ ஐயர் என் அப்பாவின் நண்பர்.//

      அவரை நான் ஒரே ஒரு முறை பார்த்திருக்கிறேன். நிறைய கேள்விப்பட்டுள்ளேன். அவர் இப்போது இல்லை. அவர் மகன் வக்கீல் K.N.பாலகிருஷ்ணன் என்பவருடன் எனக்கு கொஞ்சம் பழக்கம் உண்டு. அவர் இன்னும் அதே மலைக்கோட்டை நுழைவாயில் அருகில் உள்ள ஒத்தைமால் தெருவிலேயே தான் இருக்கிறார்.

      தங்கள் தகவல்களுக்கு மிகவும் நன்றி, சந்தோஷம்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  62. Geetha6 October 18, 2012 3:35 AM
    //wonderful sir!!!!!!!!//

    Thank you very much, Madam.

    I am Very Happy to see you here
    after a very long period.

    How are you?

    With Best Wishes.....

    vgk

    பதிலளிநீக்கு
  63. அவரை எனக்கும் தெரியும் ஐயா, அவர் ஒரு முனிசிபல் கவுன்சிலராகவும் இருந்திருக்கிறார் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு வென்றுள்ளார்.
    மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அஜீம்பாஷா October 19, 2012 11:43 AM
      அவரை எனக்கும் தெரியும் ஐயா, அவர் ஒரு முனிசிபல் கவுன்சிலராகவும் இருந்திருக்கிறார் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு வென்றுள்ளார்.
      மிக்க நன்றி ஐயா.//

      ஆமாம் அவர் முன்னாள் முனிசிபல் கவுன்சிலராக இருந்தவர் தான். திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் தான்.

      நன்றி... VGK

      நீக்கு
  64. நீண்ட நாட்களாக உங்கள் பக்கத்தில் பதிவுகள் இல்லையே என நினைத்துக் கொண்டிருந்தேன். இந்தப் பதிவு 13 நாட்களுக்கு முன் வந்திருந்தும் எப்படி தவறவிட்டேன் - ஒரு வேளை அப்டேட் ஆகவில்லையோ ?

    கடின உழைப்பிற்கு நிச்சயம் பலன் உண்டு என்பதை நிரூபிக்கிறார் மஞ்சூ.... ஆனால் கொஞ்சம் அதிகப் படியாக 2000 சமோசா விற்கிறார் என்பதெல்லாம் சற்றே அதிகமாக தெரிகிறது இல்லையா. உண்மையோ, பொய்யோ, ஏமாற்றாது உழைத்துச் சம்பாதிக்கும் அவருக்கு வாழ்த்துகள்!

    மீண்டும் அவ்வப்போது பதிவுகள் வெளியிட வேண்டுகோளுடன்!

    பதிலளிநீக்கு
  65. வாங்கோ, வெங்கட்ஜி, வணக்கம்.

    //இந்தப் பதிவு 13 நாட்களுக்கு முன் வந்திருந்தும் எப்படி தவறவிட்டேன் - ஒரு வேளை அப்டேட் ஆகவில்லையோ ?//

    தெரியவில்லை வெங்கட்ஜி. நான் இப்போதெல்லாம் எதையுமே கவனிப்பதும் இல்லை. என் டேஷ்போர்டு பக்கமும் செல்வது இல்லை.

    மெயில் தகவல் அளிக்கும் ஒருசிலர் பதிவுகள் பக்கமும், மின் தடை இல்லாமல், நெட் கிடைத்து, நேரமும் கிடைத்து, மனமும் சற்றே சந்தோஷமாக இருந்தால் மட்டுமே செல்ல முடிகிறது.

    //உண்மையோ, பொய்யோ, ஏமாற்றாது உழைத்துச் சம்பாதிக்கும் அவருக்கு வாழ்த்துகள்!//

    ஆமாம் வெங்கட்ஜி. ஏமாற்றாது உழைத்துச் சம்பாதிப்பவர்களை நாம் வாழ்த்தத்தான் வேண்டும்.

    //மீண்டும் அவ்வப்போது பதிவுகள் வெளியிட வேண்டுகோளுடன்!//

    நன்றி வெங்கட்ஜி. சூழ்நிலை சாதகமாக அமைந்தால் நிச்சயம் முயற்சிக்கிறேன்.

    அன்புடன்
    VGK

    பதிலளிநீக்கு
  66. வணக்கம் - முதல் முறையாக உங்கள் தளத்துக்கு வந்த்து கதை படித்தேன். சமேசா தொழில், கணக்கு விபரங்கள் அப்பிடி இப்படி இருந்தாலும் கதையில் உண்மை இருப்பது உண்மைதான். என் வாழ்க்கையிலே என்க்குத் தெரிந்த படிக்காத சில நண்பர்கள் உளைப்பதைவிட நாங்கள் 9-5 வேலையில் உளைப்பது குறைவு தான். உளைப்பு என்று சொல்வதைவிட வாழ்க்கைத்தரத்தை எப்ப்டி அமைக்கிறோம் என்பதில் தான் எல்லாமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Mo Moorthy October 26, 2012 5:17 AM
      //வணக்கம் - முதல் முறையாக உங்கள் தளத்துக்கு வந்த்து கதை படித்தேன்.//

      வாருங்கள் நண்பரே. வணக்கம். தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

      //உழைப்பு என்று சொல்வதைவிட வாழ்க்கைத்தரத்தை எப்ப்டி அமைக்கிறோம் என்பதில் தான் எல்லாமே!//

      மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள். இதையே தான் என் சொந்தப்படைப்பான “பஜ்ஜீன்னா பஜ்ஜி தான்” என்ற பதிவினில் வலியுறுத்திச்சொல்லியுள்ளேன்.

      நேரமும் விருப்பமும் இருந்தால் போய்ப்படித்துப்பாருங்கோ.

      இணைப்பு இதோ:
      http://gopu1949.blogspot.in/2011/07/1-of-2.html பகுதி-1

      http://gopu1949.blogspot.in/2011/07/2-of-2.html பகுதி-2

      நீக்கு
  67. பெரிய பெரிய நிறுவனங்கள் பத்து அல்லது இருபது சத்விகித லாபத்திற்கு உழைப்பைச் செலவிட்டால் சின்னஞ்சிறு பெட்டிக்கடைகள் தம்பிடிக்குத் தம்பிடி லாபம் என்று நூறு சத லாபத்தை சுலப்மாக பெறுகின்றனர் ..

    உழைப்பின் மதிப்பு என்றும் தன்னிகரில்லாதது ..

    பதிலளிநீக்கு
  68. இராஜராஜேஸ்வரி January 29, 2013 at 12:00 AM

    வாங்கோ, வணக்கம்.

    //பெரிய பெரிய நிறுவனங்கள் பத்து அல்லது இருபது சத்விகித லாபத்திற்கு உழைப்பைச் செலவிட்டால் சின்னஞ்சிறு பெட்டிக்கடைகள் தம்பிடிக்குத் தம்பிடி லாபம் என்று நூறு சத லாபத்தை சுலப்மாக பெறுகின்றனர் ..//

    ஆமாம். தாங்கள் சொல்வதும் சரி தான். கோடிக்கணக்காக முதலீடு செய்து பலருக்கும் வேலை வாய்ப்பும் கொடுத்து, 10-20% இலாபமாவது மார்ஜின் வைத்து பொருட்களை வாடிக்கையாளருக்கு அனுப்பி, டாக்ஸ், இன்சூரன்ஸ், பேங்க் ஓவர் டிராப்ட் வட்டி, சேல்ஸ் டாக்ஸ், இன்கம் டாக்ஸ், கஸ்டம்ஸ் போன்ற பலவற்றையும் சமாளித்து டேர்ன் ஓவர் செய்கிறார்கள்.

    விளம்பரச்செலவோ அதற்கு மேல் நிறைய செய்கிறார்கள்.

    சிறு வியாபாரிகளுக்கு மேற்படி எந்தத்தொல்லையும் அதிகமாக இல்லை தான். ஆனால் விடியற்காலம் பெட்டிக்கடையைத் திறந்து நள்ளிரவு வரை மாடாக உழைக்கிறார். ஒவ்வொரு பொருளிலும் 50-200% வரை இலாபம் கிடைக்கத்தான் கிடைக்கிறது. எப்போதும் கடை வாசலில் ஒரு 10 பேர்களாவது நின்று கொண்டு ஏதாவது கேட்டு வாங்கிப்போய்க்கொண்டே இருக்கிறார்கள்.

    இங்கு நம் வீட்டருகே ஹரி என்று ஒருவர் இதுபோல கடை வைத்துள்ளார். நான் அடிக்கடி அவர் கடைக்கு “தேவி” போன்ற புத்தகங்கள் வாங்கச்செல்வேன். நாளடைவில் எனக்கு நல்லதொரு நண்பரும் ஆகிவிட்டார்.

    மிகவும் சுறுசுறுப்பு, ஞாபக சக்தியும் அதிகம். உதவிக்கு எப்போதாவது அவர் மனைவி வருவாள். கொஞ்ச நேரம் அவர் சாப்பிடும் வரை வியாபாரத்தை கவனித்துக்கொள்வாள்.

    நான் ஸ்டெடி செய்தவரை அவருக்கும் தினம் ரூபாய்1000 க்கு மேல் 2000 வரை கூட இலாபம் கிடைக்கும் தான். சந்தேகமே இல்லை.

    ஆனால் அதற்கான கடும் உழைப்பைத்தருகிறார். எந்த சாமான் யார் கேட்டாலும் இல்லை என்றே சொல்ல மாட்டார். இல்லாவிட்டாலும் கூட நாளைக்கு வாங்க என்பார். மறுநாள் போனால் நிச்சயமாகத் தருவார்.

    //உழைப்பின் மதிப்பு என்றும் தன்னிகரில்லாதது ..//

    ஆம். உழைப்பு தான் உண்மையில் உயர்வைத்தருகிறது.

    அன்பான தங்களின் வருகைக்கும், அழகான கருத்துப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்..

    பதிலளிநீக்கு
  69. ம ஞ் சூ [உண்மைக்கதை]. உழைப்பால் உயர்ந்த உழைப்பாளியின் கதையை படித்த உடன் மனம் உயர்வடைகிறது.

    //ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த இந்த உண்மைச் சம்பவம் பற்றிப்படித்ததும், வழக்கம் போல அதில் சற்றே நகைச்சுவை கலந்து என் பாணியில் தமிழில் மொழிபெயர்த்து எழுதி, எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது.//

    கதை அருமை.

    தங்களின் பகிர்வுக்கு பாராட்டுக்கள் ஐயா.

    (கதையை படித்து விட்டேன். ஆனால் அதற்கு வந்த கமெண்ட்ஸ் நேரம் கிடைக்கும் போது தவறாமல் படித்து விடுகிறேன் ஐயா)

    பதிலளிநீக்கு
  70. வேல் October 2, 2013 at 12:34 AM

    வாங்கோ, வணக்கம்.

    //ம ஞ் சூ [உண்மைக்கதை]. உழைப்பால் உயர்ந்த உழைப்பாளியின் கதையை படித்த உடன் மனம் உயர்வடைகிறது.//

    மிக்க மகிழ்ச்சி.

    *****ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த இந்த உண்மைச் சம்பவம் பற்றிப்படித்ததும், வழக்கம் போல அதில் சற்றே நகைச்சுவை கலந்து என் பாணியில் தமிழில் மொழிபெயர்த்து எழுதி, எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது.*****

    //கதை அருமை//
    //தங்களின் பகிர்வுக்கு பாராட்டுக்கள் ஐயா.//

    மிக்க நன்றி.

    //(கதையை படித்து விட்டேன். ஆனால் அதற்கு வந்த கமெண்ட்ஸ் நேரம் கிடைக்கும் போது தவறாமல் படித்து விடுகிறேன் ஐயா)//

    மிகவும் சந்தோஷம். என் படைப்புகளையும் விட அதற்கு வரும் கமெண்ட்ஸ் + என் பதில்களை படிப்பதில் தான் நிறைய பேர்கள் ஆர்வமாக உள்ளனர். அதில் நீங்களும் ஒருவர் என்று தெரிவதில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  71. நூத்துக்கு நூறு உண்மை.

    இதே போல் என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்.

    நானும் சின்னச் சின்ன வியாபாரிகளை பார்த்து வியந்திருக்கிறேன். இவர்கள் எப்படி குடித்தனம் நடத்துவார்கள் என்று. ஆனா அவங்க எல்லாம் படித்த நம்பளவிட ரொம்ப SHREWD

    பதிலளிநீக்கு
  72. ஆமா கோடீஸ்வர தொழில் அதிபர்தான். செய்யும் தொழிலில் உயர்வென்ன தாழ்வென்ன. நேர்மையாக உழைச்சு சம்பாதிப்பதே பெருமைக்குறிய விஷயம் தானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் August 13, 2015 at 11:33 AM

      வாங்கோ, வணக்கம்.

      //ஆமாம், கோடீஸ்வர தொழில் அதிபர்தான். செய்யும் தொழிலில் உயர்வென்ன தாழ்வென்ன. நேர்மையாக உழைச்சு சம்பாதிப்பதே பெருமைக்குரிய விஷயம் தானே?//

      மிகவும் கரெக்டாவே சொல்லிட்டீங்கோ. :) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      நீக்கு
  73. ஆத்தாடியோவ் ஒருநாளக்கே1500---ரூவாவா. (படிக்காத மேதை) !!!!!! ஆனாகூட கடுமயான ஒளைப்பு இருக்கில்ல. நானு கூட
    சமோசா விக்க போலாமான்னு நெனக்கேன்.
    அதிராவங்க கமண்டு ஒங்க ரிப்ளை கமண்டு படிச்சிகிடவே அரைமணி ஆயி சிரிச்சி முடிச்சிகிட ஒருமணி காலம் ஆகிபோயிடிச்சி

    பதிலளிநீக்கு
  74. mru October 23, 2015 at 9:59 AM

    வாங்கோ முருகு, வணக்கம்மா.

    //ஆத்தாடியோவ் ஒருநாளக்கே1500---ரூவாவா. (படிக்காத மேதை) !!!!!! ஆனாகூட கடுமயான ஒளைப்பு இருக்கில்ல. நானு கூட
    சமோசா விக்க போலாமான்னு நெனக்கேன்.//

    சூடாக சுவையாக தங்கள் குருஜிக்கு ஒரு டஜன் வெஜிடபுள் சமோசாக்களை முதலில் குரு தக்ஷிணையாகக் கொடுத்து விட்டு பின்பு வியாபாரத்தை ஆரம்பிக்கவும். :)

    //அதிராவங்க கமண்டு ஒங்க ரிப்ளை கமண்டு படிச்சிகிடவே அரைமணி ஆயி சிரிச்சி முடிச்சிகிட ஒருமணி காலம் ஆகிபோயிடிச்சி//

    இப்போ நானும் அவற்றை மீண்டும் படித்தேன். ரஸித்தேன். சிரித்தேன். எனக்கு முக்கால் மணி நேரம் மட்டுமே ஆனது. சரியான வம்புக்காரிதான் அவங்க ! :)))))))))))))))))))))))))))))

    பதிலளிநீக்கு
  75. படிகாதமேதைதான். உழைப்புக்கு அஞ்சாத பாட்டாளி வர்க்கம். இவரின் திறமைகள் உங்க பதிவு மூலமாக பவரும் தெரிந்து கொள்ள தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  76. அருமை...அப்பட்டமான உண்மை!!! நாம்பல்லாம் ஒண்ணும் பெருசா சம்பாதிக்கமுடியாது!!! ரிடையரானதும் மஞ்சுகிட்ட அக்கவுன்ட்ஸ் அஸிஸ்டன்ட் ஆகலாமான்னு பாக்குறேன்...

    பதிலளிநீக்கு
  77. படித்த ஞாபகம் இல்லை ஒருவேளை படித்துப் பின்னூட்டம்இட்டிருக்கிறேனா எனப் பின்னூட்டத்தைத்தொடர்ந்தால் அடியைத் தொட இயலவில்லை அத்தனைப் பின்னூட்டம்.சுவாரஸ்யமான பதிவு.

    பதிலளிநீக்கு