என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

VGK 13 / 01 / 03 - FIRST PRIZE WINNERS - ’வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ., - புதிய கட்சி : மூ.பொ.போ.மு.க. உதயம் !’




’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு 


VGK 13 - ” வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ., ! 

புதிய கட்சி : மூ.பொ.போ.மு.க. உதயம் !! “


இணைப்பு:

மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 







நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  




ஐந்து


















இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 






  


மற்றவர்களுக்கு: 







     



முதல் பரிசினை வென்றுள்ளவர்கள் 

மொத்தம் இருவர்.


அதில் ஒருவர்



இரட்டை ஹாட்-ட்ரிக் 

வெற்றியாளரான


 

திருமதி. 



  இராஜராஜேஸ்வரி   

    
  

அவர்கள்




http://jaghamani.blogspot.com/

வலைத்தளம் : “மணிராஜ்”

http://rjaghamani.blogspot.in/

"krishna"









முதல் பரிசினை வென்றுள்ள


திருமதி.



 இராஜராஜேஸ்வரி  




அவர்களின் விமர்சனம் இதோ:

 




மிகவும் விறுவிறுப்பான கதை சுறுசுறுப்பாகப் படிப்பதற்காக நகைச்சுவை தோரணங்களால் அழகுபடுத்தப்பட்ட கதை..

’பொண்டாட்டி’யின் சுருக்கமான ’பொ.........டி’யை, தீட்க்ஷையாகப் பெற்றுக்கொள்ள தயாராக அலுவலகத்தில் புதிதாக வேலைக்குச்சேர்ந்த ஒருவர் மூன்று மாதங்களில் ஓய்வு பெறப்போகும் தன் தந்தை வயதில் உள்ள வ.வ.ஸ்ரீ.யை வழிகாட்டியாக ஏற்றுக்கொள்வதை நகைச்சுவையே பிரதானமாக பிரவாகமாக பெருக்கெடுதோடவிட்டு சிரிப்பாய் சிரிக்கவைக்கிறார் கதை ஆசிரியர்...!

வ.வ.ஸ்ரீ.யோ கொச்சையான பேச்சை சற்றும் சங்கோஜமோ, சங்கடமோ, லட்ஜையோ இல்லாமல் தன் இல்வாழ்க்கையின் இரகசியங்களை  எடுத்துரைத்த விதம்   உயர்ந்த அபிப்ராயத்தை ஏற்படுத்தி குருவாக ஏற்றுக்கொள்ளவைக்கிறது..

அவர் சரித்திரத்தை பேட்டியாக கேள்விகள் கேட்டு ஞானம் பெறும் புது அலுவலர் இன்றைய அலுவலகத்தில் சிலர் அடிக்கும் கூத்துகளை முழுநீள நகைச்சுவை திரைப்படமாக ஓடவிடுகிறார் கதாசிரியர்..

இப்படி ஒரு அலுவலகத்தில் நான்கு பேர் ..வேண்டாம் வேண்டாம் ..இவர்கள் இரண்டு பேரே போதும் ... நாடு உருப்பட்டமாதிரிதான் என யோசிக்கவைக்கிறார்கள்..

இதில் வ.வ.ஸ்ரீ. மனநிலை மருத்துவரிடம் ஷாக் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொள்ளும் நிலையிலிருப்பவர் .. இவர் செய்யும் வேலைக்கு இவருக்கு சிஷ்யர் வேறு.. 

நவரசங்களும் கதையில் மிளிர்ந்தாலும்  நகைச்சுவை வெள்ளத்தில் அவை அனைத்தும் அடித்துச்செல்லப்படுவதை உணர்ந்துகொள்கிறோம் ..

தன் தந்தையின் தொன்னூற்று ஒன்பதேகால் வருட பொடி அனுபவத்தையும், தாத்தாவின் நூற்றாண்டு  வாழ்க்கையின் முடிவை  கண்ணீர்வழிய சோகத்தில் அவர் சொன்னாலும் நகைச்சுவைதான் பிரதானமாக மலர்கிறது.. 

அலுவலகத்தில் வேலைபார்ப்பதாக மற்றவர்களை எண்ணவைக்கும் டெக்னிக் அனுபவசாலிகளுக்கே உரியது..1

பொடிக்குறள், பொடிக்காயத்ரி, பொடிகள் வாழ்வில் அங்கிங்கெனாதபடி ஆக்ரமித்திருக்கும் பாங்கு, பொடி செய்யும் முறை, மூக்குப்பொடியின் விலை காப்பிப்பொடியின் விலையைவிட அதிகம் என்னும் பொருளாதார குறிப்புகள், என கதை எங்கும் பொடி விரவிநின்று நகைச்சுவைவையை பரப்புகிறது..!

பழக்கங்கள் விருந்தாளியாய் மனிதவாழ்வில் நுழைந்து,  பிறகு அதுவே அடிமைப்படுத்துவதை சுவாரஸ்யமாய் காட்சிப்படுத்தப்படுகிறது..

விமானப்பணிப்பெண்களிடம்  எல்லா உபசிரிப்புகளும் கிடைத்தாலும் லாகிரிவஸ்துவாக விமானத்தில் தடைசெய்யப்பட்ட அந்த துளியூண்டு மூக்குப்பொடி கிடைக்காமல் அவர் படும் அவஸ்தை  நகைச்சுவையாகத்தான் சித்தரிக்கப்படுகிறது..

சின்ன வெங்காயம் போல் தங்க மோதிரங்கள் மலையாகக் குவித்துவைக்கப்பட்டிருக்கும் அத்தனை பெரிய துபாய் மால்கூட புடலங்காய் ஷாப்பிங்மால் பொடிகூட கிடைக்கவில்லை என முணுமுணுக்கும்போது சிரிக்கவைக்கிறார்..!

வியாபரத்ந்திரம், ஆடித்தள்ளுபடி அதிரடித்தள்ளுபடியின் சரித்திரத்தையும் பொடி விற்பனை மூலமாகவே எடுத்துரைக்கும் பாங்கு பாராட்டுக்குரியது..

கதை எழுதிய காலக்கட்டத்தில் நிகழ்ந்த தேர்தல் திருவிழா - இன்றைக்கு நடைபெறும் தேர்தல் நிகழ்ச்சிகள் எல்லாம் ஒருங்கிணைந்து - எத்தனை ஆச்சரியம் அதே காட்சிகள் மாறாமல் நிகழ்ந்து காலம் கடந்தும் காட்சிப்படுவது இந்த நகைச்சுவைக் கதை காலத்தை கந்து வென்று சாதனை படைத்திருப்பதே இக்கதையின் வெற்றிக்குச்சான்று பகர்கிறது ..

தேர்தல் நேரத்தில் மனநிலை மருத்துவ மனையில் அனுதிக்கப்பட்டு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுக்கவேண்டி நிலையிலுள்ள நோயாளி வ.வ.ஸ்ரீ  என அவர் மனைவி மூலமாக அறிந்து அதிர்ச்சியடைந்தாலும் அவர் மனைவியே அதை அடுத்த தேர்தல் வரை கவலையில்லை என சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்..

மருத்துவரின் ஆலோசனைப்படி மூக்குப்பொடி போடாமல் தவித்த அவருக்கு தானே பரண்மீது ஏறி பொடி டின் எடுத்துக்கொடுத்த பத்தினி தெய்வமல்லவா அவர்..

கல்லானாலும் கணவன்  புல்லானாலும் புருஷன் - என
பொடி போட பொண்டாட்டி செய்யும் பொருத்தமான  உதவி 
பொடியானது அல்லவே .. மகத்துவமான உயிர்காத்த உத்தமமானது அல்லவா..
  
பொடி டின், வழுவட்டை என்றெல்லாம்  கதை முழுக்க பலமுறை திரும்பத்திரும்ப வருகிறது..!

பொடிபோடாத மூக்கு, நொணநொணக்கவும், முணுமுணுக்கவும், தொணதொணக்கவும் ஆரம்பித்து வி அவரிடம் கெஞ்சோகெஞ்சென்று கெஞ்சிய மூக்கு. முன்னுரிமை அடிப்படையில், படிப்பவர்களின் வாய் தன்னைறியாமல் கலகல வெனச்சிரிக்கத்தலைப்படுவது நகைச்சுவையின் உச்சம் எனலாம்..!..

தந்தையின் இறப்பின் சோகம் 

இல்ல வாழ்வின் கொழுக்கட்டை விவரிப்பில் சிருங்காரம்

பூங்காவில் ஆற்றிய சொற்பொழிவில் ஆவேசம்

அலுவலக பணிகளில் அலட்சியம்

பொடி போட்டுத்தும்முவதில் ரசிக்கவைக்கும் மிருதங்கக்கச்சேரி, தீபாவளி ஆயிரம்வாலா பட்டாசு வெடிப்பு,

மேலாளருக்கு தண்ணிகாட்டுவது- என எந்த  உணர்ச்சியானாலும் நகைச்சுவைப்பொடியை அனாயசமாகத்தூவி வெற்றி வாகை சூடுகிறார் கதாசிரியர்..

பொதுவாக படிப்பவர்களை அழவைப்பது சுலபம் ..ஒரு கோடிகாட்டினால் போதும் தங்கள் வாழ்வில் நடந்தவைகளையோ, தங்களுக்கு வேண்டியவர் வாழ்வில் நிகழ்ந்தவைகளையோ, மனதிற்குக் கொண்டுவந்து சோகத்தில் மூழ்கடிக்கத் தயாராகிவிடுவார்கள்..தற்போதைய மெகாத்தொடர்கள் இல்லத்துப்பெண்களை சுலபமாக ஈர்த்திருப்பது இப்படித்தானே..!

ஆனால் நகைச்சுவை எழுத்தோ நடிப்போ  அவ்வளவு சுலபமல்ல..
யாரும் தங்கள் சூழ்நிலை சுற்றுப்புறத்தை மறந்து அவ்வளவு சீக்கிரம் சிரிக்க தயாராக இருக்கமாட்டார்கள்..

சிரிப்பு என்பது இயற்கை யாக ஒரு மனிதனுக்கு சக்தி தரும் செயல்.. 
நல்ல நண்பர்கள் மூலமும் அக்கறையும் அன்பும் கொண்டவர்களிடமும் மட்டுமே  பெற முடியும். ‘துன்பம் வரும் போது சிரி’  என்பார்கள். ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்பார் திருவள்ளுவர்..! நல்ல சமயங்களில் யாராயினும் சிரித்து மகிழலாம்.  மிகுந்த கடினமாக காலங்களில் எப்படி சிரிப்பது?  அதையும்  மீறி சிரிக்கும்போது துன்பத்திலிருந்து  மீண்டு வரவும், கடினமான காரியங்களை செய்யும் துணிவும் கிடைக்கும்.

வாய்விட்டுச்சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்பதை மனதில் கொண்டு  மனதில் மகிழ்ச்சி மலர்விக்கும் மருத்துவராக கடினப்பணியை சிரமேற்கொண்டு சிரிக்கவைத்திருப்பது உகளாவிய சாதனை என்றே கொள்ளவேண்டும்..


அர்சுனனின் அம்பைப் போல எய்யும் குறி தான் ஒரே கவனமாய் எழுதும் பொருளான 

நகைச்சுவையில் போய் குவிந்து  இதயத்தில் இனிமையும் உதடுகளில் சிரிப்பின் 

பிரகாசத்தையும் ஒரு சேரக் குவிக்கும் அற்புதத்தை உணர்கிறோம்..!


ஆசிரியர் தனது குறிக்கோளாக நகைச்சுவையை எடுத்துக்கொண்டு கவனம் சிதறாமல் - தவறாமல் மிகச்சரியாக  இலக்கினை வென்றிருக்கிறார்...!

நவரசங்களும் கதையில் ததும்பினாலும் ஜீவநதியானது வெய்யில் காலத்தில் பனிமலையின் பனிஉருகுவதாலும், மழைக்காலத்தில் மழை பொழிவதாலும் வெள்ளப்பெருக்கு ஏற்படுத்துவதுபோல அனைத்து உணர்ச்சிகளிலும், வரிக்குவரி நகைச்சுவை வெள்ளத்தையே  பாயவிட்டிருக்கிறார் கதை ஆசிரியர்.. 

சிரிக்கலாம் வாங்க என்று பொடிவைத்து அழைத்து மகிழ்ச்சியூட்டுகிறது இந்த அருமையான கதை..!





 


    






09.03.2014 அன்று பிறந்து 

இன்றுடன் 50 நாட்களே ஆன 

 எங்களின் புதிய பேரன் ”ஆதர்ஷ்” 

முதன் முதலாக எங்கள் இல்லத்திற்கு 

இன்று 27.04.2014 வருகை புரிந்ததில் 

எங்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி !



     




முதல் பரிசினை வென்று 


பகிர்ந்து கொண்டுள்ள 


மற்றொருவர் யார் ? 





தொடர்ச்சியாக அடுத்தடுத்து 

ஏழாம் முறையாக வெற்றிவாகை சூடியுள்ள

நம் அன்புக்குரிய சாதனை நாயகி







 ’கீத மஞ்சரி ’ 


திருமதி



 கீதா மதிவாணன்  



அவர்களே தான் ! ;)



  



விமர்சன வித்தகி 

திருமதி. 


 கீதா மதிவாணன்     

அவர்களின் 



அழகான சங்கீத உபன்யாசத்தினைக் 





இப்போது நாம் கேட்டு மகிழ்வோமா !






திமிகிட திமிகிட வாத்திய மிருதங்கம்
ப்ருமானந்த ஹரே !
கஜானன தாண்டவ நித்ய ஹரே !!

நமஸ்காரம் மகாஜனங்களே… எல்லாரும் க்ஷேமந்தானே… நான் இன்னிக்கு யார் கதையைப் பத்தி சொல்லப் போறேன்னு எல்லாரும் ரொம்ப ஆர்வமாக் காத்திருப்பேள்னு தெரியும்இன்னிக்கு ஒரு வித்தியாசம் பாருங்கோ… நான் கதை சொல்லப்போறதில்லே.. கதையைப் பத்தின கதை சொல்லப்போறேன்.. கொழப்பமா இருக்கா… கொழம்பாதீங்கோ… தெளிவா சொல்லிடறேன்… இந்த லோகமே ஒரு வலை… அதிலே மாட்டிண்டு முழி பிதுங்கிப் போனாவாதான் நாமெல்லாம்னு சொல்லத் தேவையில்லே.. ஆனா பாருங்கோ.. இந்த லோகத்துல வலை லோகமுன்னு ஒண்ணு தனியா இருக்கு தெரியுமோ… அந்த லோகத்துலே ஆளாளுக்கு ப்ளாக்னு ஒண்ணு வச்சுண்டு எழுதி எழுதித் தள்ளி மூளை பிதுங்கிப் போனவா நெறைய பேர் இருக்கா…. நான் ஒருநாள் யதேச்சையா அந்தப்பக்கம் போயிட்டேன்.

நல்ல இடம் நான் போன இடம்
வை.கோபாலகிருஷ்ணன் என்னும் வலைத்தளம்
வ.வ.ஸ்ரீ என்றொரு கதைக்களம்
வாசித்தேன் ஆஹா… அமர்க்களம்.

வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ! புதிய கட்சி மூ.பொ.போ.மு.க. உதயம்’ங்கிறது கதையோட பேரு! அடபேரே அட்டகாசமா இருக்கேன்னு நானும் வாசிச்சேன்அந்தக் கதைக்கு விமர்சனப்போட்டியிருக்காம்… உங்கள்ல யாருக்காணும் உபயோகமா இருக்குமேன்னு இன்னிக்கு அந்தக் கதையைப் பத்தி சொல்லலாம்னு இருக்கேன்… கேட்க எல்லாரும் தயாரா இருக்கேளா

இருக்கோம்….

ஆதௌ கீர்த்தனாரம்பத்துல நம்ம கதாநாயகன் வழுவட்டை ஸ்ரீனிவாசன் ஒரு ஆபிஸூல வேலை பாக்கறதா பேர் பண்ணிண்டு அஞ்சு நிமிஷத்துக்கொருதரம் மூக்குப்பொடி போட்டுண்டு அவர் பக்கம் போறவா வரவாளுக்கெல்லாம் பிரசாதமாட்டம் அதை விநியோகிச்சுண்டு… இப்படியே சீட்டைத் தேய்ச்சு தேய்ச்சு… இப்போ ரிடையராகிற ஸ்டேஜுக்கும் வந்துட்டார்..

வழுவட்டைங்கறேளே… அப்படின்னாஎன்ன குருவேவழுக்கைத்தலையா

அட வழுவட்டை… இது தெரியாதா நோக்குஉன்னை மாதிரிதான் அந்த ஆபிஸூல வேலை பாக்கறதா பேர் பண்ணிண்டு பாவலா காமிச்சுண்டிருக்கானே ஒரு புதுப் புள்ளையாண்டான் அவனும் நினைச்சிருக்கான்அப்பறந்தான் தெரிஞ்சிருக்கு.. ப்போவெல்லாம் மொக்கை மொக்கைன்னு சொல்றாளே… அதைத்தான் அவர் அப்போ வழுவட்டைங்கறார்னு..

ஆஹா… பேஷ்.. பேஷ்

அதைச் சொல்லிச் சொல்லி அதுவே அவருக்குப் பட்டப்பெயராயிடுத்து. பொடிதான் அவருக்கு உயிர். அந்தப் பொடி விஷயத்தை எடுத்துண்டு இப்படி பாகம் பாகமா எழுதமுடியுமான்னு நேக்கு ஆச்சர்யமாப் போயிடுத்து. கொஞ்சநாள் நாமும் வ.வ.ஸ்ரீயோட ஆபிஸ்ல வேலை பாத்த மாதிரியான்னா இருக்கு கதையை வாசிச்சு முடிச்சதும்.

அப்படி அந்தப் பொடியிலே என்னதான் இருக்கு குருவே..…

அட பொடிப்பயலே.. பொடின்னு சாதாரணமா சொல்லாதடா

சோதியும் ஜீவனும் அவருக்குப் பொடிதான்
சோம்பல் நீக்க வேணுமந்த நெடிதான்!
ஆதியும் அந்தமும் ஆன படிதான்
பாதியாய் ஆன பார்யாளும் பொடிதா….ன்!

என்னதுபாதியாய் ஆன பார்யாளா?

அட ஆமாண்டா… அபிஷ்டு… பொடியும் பொண்டாட்டி மாதிரிதானாம்… அந்த வார்த்தையோட ஆதியும் அந்தமும் அதாவது ‘பொவும் ‘டியும் தான் அவருக்கு ஜீவன்கிறதை பொடி போடாத நான் சொல்லமுடியுமோ… அந்த வ.வ.ஸ்ரீ சொல்றதா கதாசிரியர் சொல்றார். இன்னொரு விஷயம் சொல்லணும்…

சொல்லுங்கோ…

ரசத்திலே பொடிகலந்து பாத்திருப்பேள்.. 
பொடியிலே ரசத்தைக்கலந்து பார்த்திருக்கேளா… 
இந்தக் கதையிலே வர பொடிடப்பாவுக்குள்ளே எத்தனை ரசம்… 
அடா அடா… ஒன்பது பகுதியிலும் ஒன்பது ரசமா… 
நவரசமுமில்லே அடங்கிக்கிடக்கு.

ஒவ்வொண்ணா சொல்லுங்க குருவே..

முதல்லே நவரசங்கள் என்னென்னன்னு தெரியுமோடா அம்பி?

ஸ்ருங்காரம் வீரம் காருண்யம்
ருத்ரம் ஹாஸ்யம் பயங்கரம்
பீபத்சம் அற்புதம் சாந்தம்!
சரிதானா குருவே சொல்லும்!

சபாஷ்… இந்தக் கதையிலே ஒண்ணாம் பாகத்துலே காருண்யத்தைக் காட்டறார் கதாசிரியர்... அதாகப்பட்டது.. கர்ணனுக்கு கவசகுண்டலம் மாதிரி அந்த வழுவட்டை ஸ்ரீனிவாசனுக்கு பொடி டப்பா. கர்ணன் மாதிரியே பொடியை வாரி வழங்குறதில் வள்ளல்தான் அவரும்னு நமக்கு சொல்லாம சொல்லிடறார். 

அதிலயும் போறவாவரவாக்கெல்லாம் பொடி டப்பாவை நீட்டி நீட்டி 
விநியோகம்பண்றக் கருணையைப் பாக்கணுமே… 
ஒரு நாளைக்கு அவர் ஆபீஸ் வரலேன்னாலும் 
தவியாத் தவிக்கறதாம் பல மூக்குகள்!

ஆஹா.. என்னே ஒரு அபயஹஸ்தம்!

ரெண்டாம் பாகத்துல… பீபத்சம்…. அதாகப்பட்டது அருவறுப்புஅந்த வ.வ.ஸ்ரீ. பொடியைப் போட்டுண்டு தும்மி கைக்குட்டையாலே… அட சொல்றபோதே… ஆஹ்… நேக்கு ஒமட்டிண்டு வரதுனா..

வாசகருக்கு ஒமட்டிண்டு வரா மாதிரி எழுதலாமோ அவர்தப்புத்தானே குருவே

அட… யோசிச்சிப்பாருடா அம்பி… வாசிக்கும்போதே ஒமட்டிண்டு வரதுன்னா… எந்த அளவுக்கு ஈடுபாட்டோட எழுதியிருப்பாருன்னு புரிஞ்சுண்டுக்க வேணாமோ… அவர் பொடிடப்பாவை நீட்டி பொடி தர்ற அழகை பொம்மனாட்டிகள் குங்குமம் கொடுத்து கொலுவுக்கு அழைக்கிறா மாதிரி இருக்குன்னதை… நினைச்சிப் பார்த்தாலே சிரிப்பு வரதோன்னோ… ஹியூமரான ஒரு விஷயத்தை வாசிக்கறச்சே ஆஹா…ன்னு சிரிப்பு வரயிலே…. துக்கமான ஒரு விஷயத்தை வாசிக்கறச்சே அச்சச்சோ…ன்னு பச்சாத்தாபம் வரயிலே…. அருவருப்பான விஷயத்தை வாசிக்கறச்சே அய்யய்யே…ன்னு ஒமட்டிண்டு வரதுல என்ன தப்புஅதுவும் எழுத்தாளரடோ பலம்ன்னுன்னா சொல்லணும்

ஓ.. அப்படியா குருவே… இப்ப புரிஞ்சது… சரி… மூணாம் பாகத்தைப் பத்தி சொல்லுங்கோ

மூணாம் பாகம் முச்சூடும் வழுவட்டை ஸ்ரீனிவாச மகாராஜாவோட வீரதீரப் பிரதாபங்களைப் பத்திபத்தி பத்தியா எழுதியிருக்கார்… பரம்பரை பரம்பரையா அவர் தோப்பனார்தோப்பனார்க்குத் தோப்பனார்… பொடி போடற மகாத்மித்யத்தையும்… அவர் பொடி போட்டதாலே நூறு வயசு வரைக்கும் யமதர்மராஜாவும் அவங்களை நெருங்க பயந்த பராக்கிரமத்தையும் சொல்லியிருக்கார்

பலே… பலே… பொடிக்குள்ளே இவ்வளவு விஷயமிருக்கா?

ஆமாம்டா அம்பி! மூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிதுன்னு சும்மாவான சொன்னா… நாலாம்பாகத்துல பொடி வாங்கற கடையைப் பத்தி… பொடிக்கடை மனுஷாளைப் பத்தி… பொடி வியாபாரத்துக்கு அவா செய்யற விளம்பர சாதுர்யம் பத்திபொடிப்பயல்கள்தான் பின்னாளில் பொடிமனுஷாளாவான்னு தெரிஞ்சு சின்னத்துலேயே அதுகளை பொடி தந்து மடக்கி ரெடியாக்கற தந்திரம் பத்தி… வாசிக்க வாசிக்க நமக்கு ஆச்சர்யமானா இருக்கு

அப்படின்னா.. இந்தப் பாகத்துல அற்புத ரசம் ஆறா ஓடறதுனுசொல்றேள்.. சரிதானா குருவே

சரியாச் சொன்னேடா… அஞ்சாம் பாகத்தில் கொஞ்சம் ஸ்ருங்கார ரசம்கொஞ்சம் ஸ்ஸ்..கார ரசம்அதாகப்பட்டதுகல்யாணம் ஆன புதுசில் பொண்டாட்டி எப்படியிருப்பான்னு வர்ணிக்கறது ஸ்ருங்காரம்… போகப் போக என்ன ஆவாள்னு சொல்றது ஸ்…காரம்… பழகிப் போன பொண்டாட்டியை புளிச்சுப்போன பழைய சோத்துப்பானைஊசிப்போன கொழுக்கட்டைன்னு உதாரணமெல்லாம் பேஷா சொல்லிண்டு போறார்… அவர் சம்சாரம் கேட்டிருக்கணும்; அவரை ஸ்பாட்லயே சம்ஹாரம் பண்ணிருப்போ…

அடப்பாவமே… மனுஷன் அவ்வளவு நொந்துபோயிருக்கார்போல… சரி, இப்போ ஆறாம்பாகத்துல என்ன ரசம் சொல்லுங்கோ…  

ஆறாம் பாகத்துல குருவி தலையிலே பனங்கா மாதிரி வ.வ.ஸ்ரீ-க்குப் பிறகு அவருடைய பொறுப்பை தான் ஏற்கணுமேன்னு பயப்படறான் நம்ம புதுப்பிள்ளையாண்டான்அதுக்கு வ.வ.ஸ்ரீ சொல்ற உபாயங்கள் அலாதி… ஆபீஸ் ஃபைலைத் தேடி வர்றவனை எப்படி அலறவச்சி ஓடவக்கலாம்ன்னு ஐடியா சொல்றார்… இந்தப் பாகத்துல பொடி தயாரிக்கிற வித்தையை சொல்றார்… வாசனைப் பொடி போட்டா பொணநாத்தம்கறாளாம் பொண்டாட்டி… நாசிகாசூர்ணம் போட்டா… மண்டையிலே உள்ள நரம்பெல்லாம் கட்டாற மாதிரி நச்சு நச்சுன்னு தொடர்தும்மல் வருமாம்… வாசிக்கறச்சேயே பக்கு பக்குன்னது நேக்கு.

அப்படின்னா அது பயங்கரம்.. ஏழாம் பாகம் எப்படி?

ஏழாம் பாகத்தைப் பத்தி சொல்லணுமானா… ஹாஸ்யமய்யாஹாஸ்யம்… கங்கையிலே முங்கினாலும் காக்கை வெளுப்பாயிடுமா… துபாய் போனாலும் நம்ம வ.வ.ஸ்ரீ-க்கு பொடியாசை போயிடுமா… விமானத்துல பொடியில்லாம நம்ம வ.வ.ஸ்ரீ தவிக்கற தவிப்பும்… அவ்வளவு பெரிய ஷாப்பிங் மாலில்  ஒரு பொடிக்கடை இல்லியேன்னு அவர் ஏங்கறதும்… அண்டர்வேர்ல்ட் தாதா ஆயுதத்தை மறைச்சு எடுத்துவராப்போலே… பொடியை அண்டர்வேரில் மறைச்சி அவர் எடுத்துவர காட்சியும் நினைச்சாலே குபீர்னு சிரிப்பு வரது நேக்கு…

நீங்க சொல்லும்போதே எங்களுக்கும் சிரிப்பு வரதே… சரி.. அடுத்ததா என்ன… சொல்லுங்கோ…

எட்டாம் பாகத்துல ரௌத்ர தாண்டவம்னா ஆடறார்! இப்பத்திய அரசியல் கட்சிகள் பத்தி என்னமா கோபாவேசத்தோடு பேசறார்... இந்தப் பாழாப்போன கட்சிகளை நெனைச்சு ஆத்திரப்பட்டதாலேதானே… காத்திரமான பொடி டப்பாவை சின்னமா வெச்சி ஒரு புதிய கட்சியான மூ.பொ.போ.மு.கழகத்தையே தொடங்கறார்… அவரை வாழவைக்கிற பொடிக்கு உரிய மரியாதையைத் தரவேணாமோ… அரசியல் சாக்கடையைப் பத்தி அந்த வ.வ.ஸ்ரீ வாயால் கதாசிரியர் சொல்றது… ஆஹா… முற்போக்கு,பிற்போக்கு பத்தி என்னவொரு தத்துவ வாக்கு! என்ன பண்ணி என்ன பிரயோசனம்கிறா மாதிரி… எல்லாமே பிரம்மையான்னாபோயிடுத்து… தேர்தல் நேரங்கள்ல அவருக்கு ஏற்படற அதிர்ச்சி அவரோட மூளையைப் பாதிக்கறதுங்கறது நம்ம புதுப்பிள்ளையாண்டானுக்கு மட்டுமல்ல, வாசிக்கற நமக்கும் கடைசிவரைக்கும் தெரியாமலேயே போயிடுத்து.

ஐயையோ…

பதறாதீங்கோ… எப்படியோ… சிகிச்சையெல்லாம் நல்லவிதமா முடிஞ்சுநம்ம நகைச்சுவை மாமணி… தும்மல்திலக சிகாமணி… வ.வ.ஸ்ரீ நார்மலாயிட்டார்… அவர் ரிடையரான அன்னிக்கு ஆபீஸ்லயும் அவருக்கு நல்லவிதமா வழியனுப்பி வச்சு… 25கார்கள் தொடர… வீட்டுக்கு பவனி போறார்… எல்லாமே அமைதியா முடிஞ்சது… ஒம்பதாம் பாகத்துல… சுபம்சாந்தம்!

ஆஹா…. அவரோட பழகுன ஒருத்தரும் அவரை மறக்கமுடியாதபடிக்குப் பண்ணிட்டார்.. அந்த வ.வ.ஸ்ரீ… அவர் கதையைக் கேட்ட நாமளும் வ.வ.ஸ்ரீயை மறக்கமுடியாதபடிக்கு பண்ணிட்டார் இந்தக் கதாசிரியர்.

மகாஜனங்களே… இதுவரைக்கும் வ.வ.ஸ்ரீனிவாசனுடைய கதையை வை.கோபாலகிருஷ்ணன் என்னும் கதாசிரியர் எழுதின அழகைப் பத்தி சொன்னேன். எல்லாரும் பொறுமையா சிரத்தையா இருந்து கேட்டேள்… நன்னா ரசிச்சேள்னு உங்க மொகமே சொல்லிடுத்து… அடுத்தவாரம் வேறொரு கதையைப் பத்திப் பார்ப்போம். அதுவரைக்கும்…
மங்களம் சுப மங்களம்
வ.வ.ஸ்ரீ கதையைக் கேட்ட உங்களுக்கும்
கதையை விமர்சித்த எங்களுக்கும்
மங்களம் சுப மங்களம்.


மங்களம் பாடியது மனதுக்கு மிகவும் மகிழ்வளித்தது.
நகைச்சுவையான சங்கீத உபன்யாசம் 
படிக்கச் சிரிப்பாகவும் சிறப்பாகவும் இருந்தது.
தனித்தன்மை வாய்ந்த தங்களின் 
கற்பனைக்கு தலை வணங்குகிறேன்.

பிரியமுள்ள கோபு


[கதை கேட்டவாளுக்கெல்லாம் விநியோகிக்க சுண்டல்]


 



மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


இனிய நல்வாழ்த்துகள்.




     





மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.





நடுவர் அவர்களின் 

வழிகாட்டுதல்களின்படி

முதல்  பரிசுக்கான தொகை 

இவ்விருவருக்கும் 

சரிசமமாக பிரித்து வழங்கப்பட உள்ளது.



-oOo-


போட்டியில் பரிசு பெற்றுள்ள மற்றவர்கள் 

பற்றிய விபரங்கள்  தனித்தனிப்

பதிவுகளாக பல மணி நேர இடைவெளிகளில்

ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. 

காணத்தவறாதீர்கள் !




    




’போனஸ் பரிசு’ பற்றிய 

மகிழ்ச்சியானதோர் தகவல்.


’VGK-13 வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ. 

புதிய கட்சி மூ.பொ.போ.மு.க. உதயம் !’ 

என்ற இந்தக் குறிப்பிட்ட சிறுகதைக்கு 

 விமர்சனம் எழுதி 

அனுப்பியுள்ள 

ஒவ்வொருவருக்குமே 

மூன்றாம் பரிசுக்குச் சமமான தொகை என்னால் 

 ’போனஸ் பரிசாக ’

அளிக்கப்பட உள்ளது என்பதை 

பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஏன்? எதற்கு? எப்படி? என யாரும் குறுக்குக்கேள்வி எதுவும் கேட்கக்கூடாது.  ஒருசில கதைகளையும், அவை உருவாகக் காரணமாக இருந்த சூழ்நிலைகளையும் நினைக்கையில் மனதில் அவ்வப்போது ஏற்படும் ஏதோவொரு [ எழுத்தில் எடுத்துரைக்க இயலாத ] சந்தோஷம் மட்டுமே இதற்குக் காரணமாகும். 

உயர்திரு நடுவர் அவர்களால் பரிசுக்கு இங்கு இப்போது தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளவர்களுகும் இந்த போனஸ் பரிசு என்னால் உபரியாக அளிக்கப்படும் என்பதையும் மேலும் மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுபோன்ற போனஸ் பரிசுகள் அவ்வப்போது மேலும் ஒருசில கதைகளுக்கு மட்டும் என்னால் அறிவிக்கப்பட உள்ளன. அவை எந்தெந்த கதைகள் என்பது மட்டும் இப்போதைக்கு ’சஸ்பென்ஸ்’.

அதனால் இந்த ‘சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான அனைத்துக் கதைகளுக்கும், அனைவருமே, இப்போது போலவே மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொள்ளுங்கள். அப்போதுதான் போனஸ் பரிசு கிடைக்கும் வாய்ப்புக்களும் தங்களுக்கு அவ்வப்போது அமையக்கூடும்.

    




இதுவரை முதல் பதிமூன்று கதைகளுக்கான 

விமர்சனப் போட்டி பரிசு முடிவுகள் 


முற்றிலுமாக வெளியிடப்பட்டுள்ளன.

  [[
சிறுகதை விமர்சனதாரர்களா  ..... கொக்கா ! 



இதுவரை ஹாட்-ட்ரிக்

வெற்றியாளர்கள் 


பட்டியலில் உள்ளோர் :






 கீதமஞ்சரி  



திருமதி




  
      
 1] கீதா மதிவாணன்  


அவர்கள்

[VGK-07 To VGK-13] 



தொடர்ச்சியாக      அடுத்தடுத்து 


ஏழு முறைகள் வெற்றி


 

 2) திரு.    ர ம ணி   அவர்கள் 


[VGK-01 To VGK-04]


தொடர்ச்சியாக அடுத்தடுத்து 


நான்கு முறைகள் வெற்றி

 

3) திருமதி. 



இராஜராஜேஸ்வரி         



அவர்கள் 


[VGK-04 To VGK-06] 


தொடர்ச்சியாக அடுத்தடுத்து 


மூன்று முறைகள் வெற்றி

 
4] திருமதி. 



இராஜராஜேஸ்வரி 



அவர்கள் 


[VGK-08 To VGK-10] 


மீண்டும் 


தொடர்ச்சியாக அடுத்தடுத்து 


மூன்று முறைகள் வெற்றி

 

5] திரு. 



 E.S. சேஷாத்ரி  



(காரஞ்சன் - சேஷ்) அவர்கள்


[ VGK-10 To VGK-12 ] 


தொடர்ச்சியாக அடுத்தடுத்து 


மூன்று முறைகள் வெற்றி

 

6] திருமதி



 ராதாபாலு  



அவர்கள்


[ VGK-10 To VGK-12 ] 


தொடர்ச்சியாக அடுத்தடுத்து 


மூன்று முறைகள் வெற்றி


 

7] களம்பூர்  திரு.



 G. பெருமாள் செட்டியார் 


அவர்கள்


[VGK-11 TO 13]



தொடர்ச்சியாக அடுத்தடுத்து 


மூன்று முறைகள் வெற்றி

 


இந்தப்பட்டியலில் அடுத்தது யார் ?


இதைப்படித்துக்கொண்டிருக்கும்


நீங்களாகவும் இருக்கலாம் !



oooooOooooo



ஹாட்-ட்ரிக் பட்டியலில் இன்று 

புதிதாக இடம்பெற்றுள்ள


களம்பூர் திரு. 


 G. பெருமாள் செட்டியார் * 


அவர்களுக்கு


நம் ஸ்பெஷல் பாராட்டுக்கள் + 


நல்வாழ்த்துகள்.


  இவரின் தொடர் வெற்றியினைப் பொறுத்து

ஹாட்-ட்ரிக் பரிசுக்கான தொகை பிறகு நிர்ணயிக்கப்படும்.

அது பற்றிய மேலும் விபரங்களுக்கு இணைப்பு:


oooooOooooo



அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


oooooOooooo



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 




இணைப்பு: 
கதையின் தலைப்பு:


VGK-15



” அழைப்பு   



விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


01.05.2014  


இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.









என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்