என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 20 அக்டோபர், 2014

VGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 4 of 4] நிறைவுப்பகுதி



முக்கிய அறிவிப்பு 

இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான 

கடைசி கதையாக இருப்பதால்
இதை நான்கு மிகச்சிறிய பகுதிகளாகப் பிரித்து

சென்ற வெள்ளிக்கிழமை முதல்
 இன்று திங்கட்கிழமை வரை 
தினம் ஒரு பகுதியாக
வெளியிடப்பட்டுள்ளது.

இன்றுடன் முடிந்துள்ள இந்த 
நான்கு பகுதிகளையும் 
பொறுமையாகப் படித்து
ஒரே விமர்சனமாக 
எழுதி அனுப்பி வைத்தால் போதுமானது. 


விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய 

இறுதி நாள்: 26.10.2014 
ஞாயிற்றுக்கிழமை

இந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.

விமர்சனம் அனுப்ப வேண்டிய 
மின்னஞ்சல் முகவரி: 
valambal@gmail.com 

REFERENCE NUMBER:  VGK 40

போட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:




மனசுக்குள் மத்தாப்பூ

சிறுகதைத் தொடர் 

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-


பகுதி-1 க்கான இணைப்பு:  


பகுதி-2 க்கான இணைப்பு:  


பகுதி-3 க்கான இணைப்பு:  


பகுதி-4

[ நிறைவுப்பகுதி ]


லாரம் மண்டையை உடைப்பது போல அடிக்க ஆரம்பித்தது. 

திடுக்கிட்டு எழுந்தான் மனோ.
பால் காரனையும் காணோம். பஞ்சாயத்தாரையும் காணோம். இதுவரை நடந்த அத்தனையும் கனவு என்பதை உணர்ந்தான்.

மனோவுக்கு கனவு ஏற்பட்டால் அது நிச்சயம் நடந்து விடுவதுண்டு. அவன் தந்தை ஒரு சாலை விபத்தில் இறந்து போவது போல கனவு கண்டான். அது போலவே ஒரு வாரத்தில் நடந்து விட்டது.  பிறகு ஒரு முறை அவன் தாய் கிணற்றடியில் வழுக்கி விழுவது போலக் கனவு கண்டான். ஒரே மாதத்தில் அதுபோலவே நடந்து, அவள் படுத்த படுக்கையாகி அடுத்த ஒரு மாதத்தில் போய்ச் சேர்ந்தும் விட்டாள். அன்று முதல் நெருங்கிய சொந்த பந்தங்கள் என்று சொல்லிக்கொள்ள யாருமின்றி, தனி மரமானான் மனோ. 

தன்னுடன் படித்த சகமாணவன் ஒருவன், பள்ளி இறுதித் தேர்வில், மிகவும் அதிக மதிப்பெண்கள் எடுத்து பள்ளியிலேயே முதன் மாணவனாக வருவதாகக் கனவு கண்டான். அதன்படியே அதே மாணவன், மிக அதிக மதிப்பெண்கள் பெற்று மாநில அளவிலேயே முதல் மாணவனாக ஆனான்.

இன்றைய அவனுடைய கனவில் நல்ல வேளையாக அந்தக் கருநாகப்பாம்பு அனுவைக் கடிக்கவில்லை என்ற மன நிம்மதியுடன், பாத் ரூமுக்குக் குளிக்கச் சென்றான். பத்து மணிக்குள் தன்னை ரெடிசெய்து கொண்டு, அனு வீட்டில் ஆஜராகிவிட்டான், மனோ.


இவன் உள்ளே நுழையவும் அவர்கள் வீட்டு வாசலில் கார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. வந்தவர்களை வரவேற்ற மனோவுக்கு ஒரே அதிர்ச்சி.

வந்தவன் பெயர் நாகப்பா. தன் நடுத்தர வயது நரைமுடிகளை மறைக்க தலைமுழுவதும் ’டை’ அடித்துக்கொண்டு கருகருவென்று வந்துள்ளான். 

சென்னையில் ஏற்கனவே மனோ தன் சிறுவயதில் தாய் தந்தையுடன் வசித்த பகுதியில், அவன் ஒரு பேட்டை ரெளடி என்று பெயர் பெற்றவன். ஏற்கனவே மனோவுக்குத் தெரிந்தவரை இரண்டு முறை திருமணம் ஆனவன். சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு பலமுறை கம்பி எண்ணி வந்தவன்.   

அவனுடன் வந்திருப்பவர்களும் அவனுடைய சொந்த தாயோ தந்தையோ அல்ல. எல்லாம் திட்டமிட்ட சதிச்செயலும், ஏமாற்று வேலைகளும், கபட நாடகமும் என்பதை அனுவின் தாயாரைத் தனியே அழைத்துப்போய் மனோ விளக்கமாக எடுத்துக் கூறிவிட்டான்.

அனுவின் தாயும் ஏதேதோ சாக்குப்போக்குச் சொல்லி, பெண் கொடுக்க சம்மதம் இல்லை எனக்கூறி, அவர்களைத் திருப்பி அனுப்பி விட்டாள்.

தங்கள் சூழ்ச்சிக்கு பெண் பலியாகாமல் தப்பித்து விட்டாளே என்ற ஆத்திரத்திலும், ஏமாற்றத்திலும் வந்தவன் பெரிதாகச் சத்தம் போட்டான்:

“இந்த ஊமையான செவிடான உங்கள் பெண்ணுக்கு எவன் தாலி கட்டப்போறான்னு நானும் பார்க்கிறேன்; ஏதோ போனாப்போகுதுன்னு பெரிய மனசு பண்ணி, ஒரு பொண்ணுக்கு வாழ்வு கொடுத்து உதவலாம்னு வந்தா, இப்படி மரியாதை தெரியாம இருக்கிறீங்களே!” என்று புலம்பியவாறு புறப்பட்டான்.

அமைதியும், அழகும், அறிவும் நிறைந்த இந்த அல்வாத்துண்டு போன்ற அனுவைக் கட்டிக்கொள்ள எவனுக்காவது கசக்குமா என்ன? இவள்மேல் என் அடிமனதில் குடிபுகுந்து விட்ட அன்பும் காதலும் மாறுமா என்ன? என்று தன் மனதுக்குள் நினைத்துக்கொண்டான், மனோ.

தன் கனவில் வந்த கருநாகப்பாம்பு தான், இந்த நாகப்பா ரூபத்தில் இப்போது அனுவைக் கொத்த வந்துள்ளது. கனவில் அந்த கருநாகப் பாம்பிடமிருந்து அனுவைக் காப்பாற்றியது போலவே, இப்பவும் இந்த நாகப்பாவிடமிருந்தும் நம் அனுவை எப்படியோ ஒரு வழியாகக் காப்பாற்றி விட்டோம், என மனதிற்குள் மகிழ்ந்து கொண்டான், மனோ.

நல்ல நேரத்தில் தெய்வம் போல வந்து தன் மகளின் வாழ்க்கை பாழாகி வீணாகாமல் காப்பாற்றிய மனோவுக்கு அனுவின் தாய் கண்ணீருடன் நன்றி கூறினாள். எல்லாவற்றையும் புரிந்து கொண்ட புத்திசாலிப்பெண் அனுவும் கைகூப்பி மனோவை வணங்கினாள்.

தான் கண்ட கனவில் அனு “அம்மா” என்று கத்தியதுபோல, விரைவில் தகுந்த சிகிச்சைகள் மேற்கொண்டால், அவள் வாய் திறந்து பேசவும் வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கை டாக்டர் மனோவுக்குத் தோன்றியது.

மனோவின் கனவு என்றுமே பலிக்காமல் இருந்தது இல்லை. அவளை அவன் அலாக்காகக் கட்டிப்பிடித்துத் தூக்கியது, பிள்ளைத்தாச்சியான அவளைப் பிரிய மனமில்லாமல், கட்டி அணைத்தவாறு அமர்ந்து கொஞ்சியது உள்பட, நிச்சயம் ஒரு நாள் நடந்தே தீரும், என்ற நம்பிக்கையில் ........ 

மனோவின்  மனசுக்குள் மத்தாப்பூக் கொளுத்தியது போன்றதொரு மகிழ்ச்சி ஏற்பட்டது.   

மறுநாள் அதிகாலையின் அனு போட்டிருந்த இதயம் போன்ற [ஹாட்டீன் வடிவ] கோலத்தில் 



WELCOME ! 
THANK YOU !! 
HAPPY DEEPAVALI !!! 

போன்ற அழகான வார்த்தைகளைப் பார்த்த மனோவுக்கு, அவளின் மனத்திலும் தான் புகுந்து விட்டதைப் புரிந்து கொள்ள முடிந்தது. 


அப்புறம் என்ன! அடுத்த தீபாவளி அனுவுக்கும் மனோவுக்கும் நிச்சயமாகத் தலை தீபாவளியாகத் தானே இருக்கும்!    


நாமும் அவர்களை 
மனதார வாழ்த்திடுவோம்!!



இந்த என் குறுநாவல் முழுவதும் ஒரே பகுதியாக

"வல்லமை" மின் இதழில் 


”தீபாவளி 2011 ஸ்பெஷல்” 


ஆக வெளியிட்டிருந்தார்கள் என்பதையும் 

தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறேன்.





 சுபம் 





தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் 


மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 


என் இனிய தீபாவளி


நல்வாழ்த்துகள்.




 



இத்துடன் நம் ’சிறுகதை 


விமர்சனப்போட்டி’க்கான கதைகள்


அனைத்தும் வெற்றிகரமாக 


இனிதே நிறைவடைகின்றன.





of  




இந்த இன்றைய நிறைவுப்பதிவு


இந்த ஆண்டின் 200வது பதிவாக


அமைந்துள்ளதை நினைக்க 


என் மனதுக்கும் 


ஓர் நிறைவாகத்தான் உள்ளது.



 200th Post of 2014 


 








இந்தப்போட்டிகளில் இதுவரை


ஆர்வத்துடன் பங்கு கொண்டு



சிறப்பித்துள்ள 


அனைவருக்கும் 


மீண்டும் என் அன்பான 


இனிய நன்றிகள்.






VGK-40 போட்டியில் 
கலந்துகொள்ள மறவாதீர்கள் !

இதுவே இந்தப்போட்டியில்
கலந்துகொள்ளத் தங்களுக்கான 
இறுதி வாய்ப்பு !!

     




 




VGK-38, VGK-39, VGK-40 ஆகிய


போட்டிகளின் பரிசு முடிவுகள், 


ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்கள் பட்டியல்,


சாதனையாளர்களுக்கான


புதிய கூடுதல் விருதுகள் [பரிசுகள்],


ஒட்டுமொத்த பரிசுப்பட்டியல்


முதலிய பல்வேறு அலசல்கள்


வழக்கம்போல


வெகு விரைவில்


தினமும் ஒவ்வொன்றாக 


வெளியிடப்படும்.

காணத்தவறாதீர்கள் !





தகவலுக்காக


நாளை 21.10.2014 முதல் 24.10.2014 வரை
தினமும் ஒரு ’நேயர் கடிதம்’ வீதம் வெளியிடப்படும்


 

 


VGK-38 - மலரே ..... குறிஞ்சி மலரே !
விமர்சனப்போட்டி பரிசு முடிவுகள்
25.10.2014 சனிக்கிழமை
முதல் வெளியிடப்படும்.
  



சிறுகதை விமர்சனப்போட்டிகளின்
நிறைவு விழாக் கொண்டாட்டங்களாக 
 அடுத்தடுத்து தினமும் ஏதாவது ஒரு பதிவு 
வெளியாகிக்கொண்டே இருக்கும்.

காணத்தவறாதீர்கள் !


என்றும் அன்புடன் தங்கள்
வை.கோபாலகிருஷ்ணன்

30 கருத்துகள்:

  1. தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  2. இந்த ஆண்டின் 200வது பதிவாக அமைந்துள்ள
    நிறைவான பதிவுக்கு இனிய வாழ்த்துகள்..

    மனம் நிறைந்த இனிய தீபாவாளி நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி October 20, 2014 at 8:36 AM

      வாங்கோ, வணக்கம்.

      //இந்த ஆண்டின் 200வது பதிவாக அமைந்துள்ள
      நிறைவான பதிவுக்கு இனிய வாழ்த்துகள்..//

      மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி.

      //மனம் நிறைந்த இனிய ’தீ பா வ ளி’
      நல்வாழ்த்துகள்..//

      மிகவும் சந்தோஷம் .... தங்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். - VGK

      நீக்கு
  3. பதில்கள்
    1. G Perumal Chettiar October 20, 2014 at 11:27 AM

      வாருங்கள், ஐயா .... வணக்கம் ஐயா. நீண்ட நாட்களுக்குப்பின் தங்களின் அபூர்வ வருகை மிகுந்த மகிழ்வளிக்கிறது. நலமாக உள்ளீர்கள் தானே ஐயா.

      //இனிய தீபாவாளி நல்வாழ்த்துகள்..//

      மிகவும் சந்தோஷம் ஐயா. தங்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள், ஐயா.

      அன்புடன் VGK

      நீக்கு
  4. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள், கோபு ஸார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ranjani Narayanan October 21, 2014 at 3:09 PM

      வாங்கோ மேடம், வணக்கம் மேடம். நலம் தானே ! :) நீண்ட நாட்களுக்குப்பின் தங்களின் அபூர்வ வருகை மிகுந்த மகிழ்வளிக்கிறது, மேடம்.

      //உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள், கோபு ஸார்!//

      மிக்க நன்றி. அதே அதே தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

      அன்புடன் கோபு

      நீக்கு
  5. போட்டியின் கதைகளைச் சிறப்பாக வெளியிட்டு நிறைவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
  6. இவ்வாண்டின் 200-ஆவது பதிவிற்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  7. தங்களுக்கும் இல்லத்தில் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் October 21, 2014 at 9:12 PM

      வாருங்கள் நண்பரே, வணக்கம்.

      //போட்டியின் கதைகளைச் சிறப்பாக வெளியிட்டு நிறைவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி!//

      எனக்கும் மகிழ்ச்சியே ! :)

      //இவ்வாண்டின் 200-ஆவது பதிவிற்கு வாழ்த்துகள்!//

      மிக்க நன்றி :)

      //தங்களுக்கும் இல்லத்தில் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்!//

      தங்களின் தீபாவளி வாழ்த்துகள் அதிக தித்திப்பாக உள்ளது. மிக்க நன்றி, நண்பரே.

      அன்புடன் VGK


      நீக்கு
  8. நிறைவாக அமைந்த இவ்வாண்டின் 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்! தங்களின் இனிய தீபாவளி வாழ்த்துக்கு மிக்க நன்றி சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Kalayarassy G October 23, 2014 at 10:48 PM

      வாங்கோ, வணக்கம்.

      //நிறைவாக அமைந்த இவ்வாண்டின் 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்! //

      தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி, மேடம்.

      //தங்களின் இனிய தீபாவளி வாழ்த்துக்கு மிக்க நன்றி சார்!//

      சந்தோஷம். நன்றிக்கு என் நன்றிகள், மேடம்.

      நன்றியுடன் VGK

      நீக்கு
  9. என்னுடைய வாழ்த்து எங்கே போயிற்று. உங்களுக்கும்,குடும்பத்தாருக்கும், என்னுடைய மனப்பூர்வமான
    ஆசிகளும்,வாழ்த்துகளும். பதிவுகளெல்லாம் இமாலய வெற்றிப்பதிவுகள்.அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Kamatchi October 24, 2014 at 4:52 PM

      வாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.

      //என்னுடைய வாழ்த்து எங்கே போயிற்று?//

      தெரியலையே மாமி. எங்காவது காக்கா ஊஷ் ஆகியிருக்குமோ என்னவோ ! :)

      //உங்களுக்கும்,குடும்பத்தாருக்கும், என்னுடைய மனப்பூர்வமான ஆசிகளும்,வாழ்த்துகளும். //

      மிகவும் சந்தோஷம், மாமி.

      //பதிவுகளெல்லாம் இமாலய வெற்றிப்பதிவுகள்.அன்புடன்//

      எல்லாம் தங்களைப்போன்ற பெரியவா ஆசீர்வாதங்கள் மட்டுமே, காரணம். நாளை முதல் ஒரு 15 நாட்களுக்கு நிறைவு விழா நடைபெற உள்ளது. முடிந்தால் தினமும் வந்து ஆசீர்வாதம் பண்ணுங்கோ.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  10. இந்த ஆண்டின் 200வது (அடேயப்பா...நினைத்தாலே பிரமிப்பாக இருக்கு )பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    தங்களுக்கு என் இனிய தாமதமான தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. இந்தக்கதைக்கு திருமதி. ராதாபாலு அவர்கள் எழுதி அனுப்பியிருந்த விமர்சனம் அவர்களின் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிடப்பட்டுள்ளது. இணைப்பு:
    http://enmanaoonjalil.blogspot.com/2014/11/vgk-40.html

    போட்டியில் தன் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாமல் இருந்தும்கூட, அதை தன் வலைத்தளத்தினில் வெளியிட்டுச் சிறப்பித்துள்ள திருமதி. ராதாபாலு அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    VGK

    பதிலளிநீக்கு
  12. கதை பூரணமாகாமல் ஒரு சஸ்பென்சுடன் முடிந்திருப்பது ஒரு ஏக்கமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  13. இந்த கதையின் நறைவு பகுதியே 200--வது பதிவாக அமைந்துவிட்டதா. நிறைவான பதிவும்கூட.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் September 4, 2015 at 2:36 PM

      வாங்கோ பூந்தளிர், வணக்கம்மா.

      //இந்த கதையின் நிறைவு பகுதியே, 2014ம் ஆண்டின் 200--வது பதிவாக அமைந்துவிட்டதா. நிறைவான பதிவும்கூட.//

      தங்களின் அன்பான வருகைக்கும், நிறைவான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      200 முறை நானும் நன்றிகள் சொன்னதாக நினைத்துக்கொள்ளவும். :)

      நீக்கு
  14. சுப முடிவு இல்லாத கதைகளை நான் படிப்பதே இல்லை.

    200 ஆவது பதிவு. ஆஆஆஆஆஆஆஆ - கண்ணை கட்டுதே,

    பதிலளிநீக்கு
  15. 200---வது பதவுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  16. இந்த ஆண்டின் 200---வது பதிவுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  17. வாத்யாரின் கதைகள் வாத்யாரின் பட்ங்களைப்போலத்தான்.விறுவிறுப்புக்குக் குறைவிருக்காது. குறையும் இருக்காது. 200ம் பதிவுக்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  18. இனியென்ன! “பாவாடை தாவணியில் பார்த்த உருவமா?, “கண்ணெதிரே தோன்றினாள்!” என்றும் “உறவோடு விளையாட எண்ணும் கண்கள் உறங்காது உறங்காது கண்ணே!” என மனோ இடைவிடாமல் பாடி மகிழ வாழ்த்துவோம்! அடுத்த தீபாவளி அவர்களுக்குத் தலை தீபாவளியாகட்டும்!
    திருப்பங்கள் நிறைந்த காதல் கதையைப் படைத்த கதாசிரியரும் இனி இதுபோன்று பல கதைகள் பிரசவிக்க மன்னிக்கவும் பிரசுரிக்க வாழ்த்துவோம் வாரீர்! நன்றி! =====சுபம்!====

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. My Dear Mr. Seshadri Sir,

      வாங்கோ, வணக்கம்.

      கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன.

      //திருப்பங்கள் நிறைந்த காதல் கதையைப் படைத்த கதாசிரியரும் இனி இதுபோன்று பல கதைகள் பிரசவிக்க மன்னிக்கவும் பிரசுரிக்க வாழ்த்துவோம் வாரீர்!//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)

      தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் VGK

      நீக்கு
  19. இந்தப் போட்டிக்கான, இந்த விறுவிறுப்பான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், 2011-இல் என் வலையுலக ஆரம்ப நாட்களில், வெளியிட்டிருந்தபோது அவற்றிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்:

    40 + 32 + 36 + 43 = 151

    அதற்கான இணைப்புகள் (பகுதி-1 to பகுதி-4):

    http://gopu1949.blogspot.in/2011/10/1-of-4.html

    http://gopu1949.blogspot.in/2011/10/2-of-4.html

    http://gopu1949.blogspot.in/2011/10/3-of-4.html

    http://gopu1949.blogspot.in/2011/10/4-of-4.html

    பதிலளிநீக்கு
  20. மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான ஆறு விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:

    முதல் பரிசுக்குத் தேர்வானவை:
    http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-01-03-first-prize-winners.html

    இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:
    http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-02-03-second-prize-winners.html

    மூன்றாம் பரிசுக்குத் தேர்வானவை:
    http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-03-03-third-prize-winners.html

    சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.html

    பதிலளிநீக்கு