என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 27 அக்டோபர், 2014

VGK-39 / 03 / 03 - THIRD PRIZE WINNER - ’மாமியார்’




’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்



  


கதையின்  தலைப்பு :


 VGK-39 



     மாமியார்   






     

மேற்படி ‘சிறுகதை விமர்சனப்போட்டி’க்கு 

மிக அதிக எண்ணிக்கையில் 

பலரும் மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 

அவர்கள் அனைவருக்கும் 

என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.  






 நடுவர் திரு. ஜீவி  


 நம் நடுவர் அவர்களால் 

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள

விமர்சனங்கள் மொத்தம் :



ஐந்து







இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் நம் பாராட்டுக்கள் + 

மனம் நிறைந்த இனிய  நல்வாழ்த்துகள். 




  


மற்றவர்களுக்கு: 






      




முத்தான  மூன்றாம் பரிசினை




வென்றுள்ள விமர்சனம்.




     


 





எல்லோருக்கும் நமஸ்காரம். என்னைத் தெரியறதா? என்னை உங்களாண்ட அறிமுகப்படுத்திக்கறதா வேணாமான்னு யோஜனை பண்ணிண்டிருக்கேனாக்கும். ஏன்னு கேக்கறேளா? என்னை யாருன்னு தெரிஞ்சா அடுத்த கணமே எம்முன்னால நிக்கற நீங்க அத்தனைப் பேரும் என்னைப் பிலுபிலுன்னு பிடிச்சிண்டுக்குவேளே… இந்தப் பொண்ணு வனஜா கூட என்னைப் பார்த்து என் வாய்க்கு சக்கரை போடணும்னு என்னைத் தேடிண்டிருக்காளாம்… காத்துவாக்கிலே சேதி வரது.

இப்போ தெரிஞ்சிருக்குமே நான் யாருன்னு. ஆமாமா... நான்தான் வனஜாவுக்கு ஜாதகம் பாத்து சொன்ன ஜோஸ்யர்.

“அடப்பாவி மனுஷா…. ஏய்யா… நீரெல்லாம் ஒரு ஜோஸியரா? அந்தப் பொண்ணு வனஜா படுற பாட்டைப் பாத்தீரா? அந்தப் பொண்ணுக்கும் அந்தப் புள்ளையாண்டானுக்கும் மித்ர சஷ்டாஷ்டகம்னு தெரிஞ்சும் ரெண்டு ஜாதகத்தையும் கோத்து விட்டிருக்கீரே… உம்மைத்தான் இத்தனை நேரமா தேடிண்டிருக்கோம்”னு யாரும் அவசரப்பட்டு என் சொக்காயைப் பிடிச்சிடாதேங்கோ.

என் தரப்புல சொல்லவேண்டியதை சொல்லிடறேன் ஸ்வாமீ.. அப்புறமா என்னை என்ன பண்றதுன்னு முடிவு பண்ணுங்கோ.

அபார சம்சாரியாக்கும் நான்! குடும்பம் நடத்த வேணாமோ? ஜோஸ்யம்தான் பொழப்புன்னு ஆயிடுத்து. வரவா மனசுக்கேத்த மாதிரி கொஞ்சம் முன்னபின்ன சொன்னாத்தானே ஐயா… தட்சணை கிடைக்கும்? அவா ரெண்டு பேருக்கும் சஷ்டாஷ்டக தோஷம் இருக்குன்னு உண்மையைத்தானே சொன்னேன். வனஜாவோட அப்பாதான் அதுக்கு பரிகாரம் கேட்டார். எல்லா வகையிலும் பொருந்தி வந்திருக்கிற இந்த வரனை விட அந்த மனுஷருக்கு மனசில்லேன்னு புரிஞ்சிடுத்து. நானும் ஜாதகத்தை நேக்கு சாதகமா பயன்படுத்திண்டேன். தப்பொண்ணும் பண்ணலையே…

மித்ர சஷ்டாஷ்டகமா இருந்தாதான் என்னநானும் என் ஆத்துக்காரியும் அம்சமா குடித்தனம் நடத்தி ஆறு புள்ளைகள் ரெண்டு பொண்களைப் 
பெத்து அமோகமா வாழலையான்னேன்நூத்துக்கு பதிலா இருநூறா 
கொடுத்ததுலேர்ந்தே அவருக்கும் மனசுநெறைஞ்சுபோச்சுன்னு 
புரிஞ்சிடுத்து. நீர் சொன்னதெல்லாம் நிசம்தானா ஐயான்னு என்னைக் 
கேள்வி கேக்கப்படாது. அதெல்லாம் சிதம்பர ரகசியம். வெளியில 
சொல்லப்படாது. 

பகலெல்லாம் சண்டை போடறதும் ராத்திரியானா சமாதானமாறதுமா… இதென்ன இருட்டு வாழ்க்கை… திருட்டுவாழ்க்கைன்னு தத்துவம் 
பேசாதேங்கோ.. யாராத்துல பிரச்சனை இல்லஒண்ணு கவனிச்சேளா… இந்த மித்ர சஷ்டாஷ்டக தோஷம் இல்லாதபோது கூட அவராத்துலயும் 
அந்தப் பிரச்சனை இருக்குன்னு வனஜா அப்பா தன் வாயாலேயே 
சொன்னாரேவீட்டுக்கு வீடு வாசப்படி.. இல்லையோஇதுக்கு என்னைக் கொறைசொல்வானேன்?

அந்தப் பொண்ணு வனஜா இருக்காளோன்னோ… சும்மா சொல்லப்படாது. சமத்து.. சக்கரைக்கட்டி. அவளண்டை அவ கல்யாணத்துக்கு முன்னாலேயே அவ அப்பா இந்த ஜாதக தோஷம் பத்தி சொல்லிட்டார். அதைத் தெரிஞ்சிண்டதினாலேயே அவளுக்கு அவ புருஷன் சாதாரணமா பேசுறது கூட சண்டை போடறா மாதிரி தோணலாம்.

ஆனா… நல்ல பொண்ணு. ஆத்துக்காரனண்டதான் அல்லாட்டமெல்லாம். மாமியாரண்டை எத்தனைப் பிரியமா நடந்துக்கறா. என்னது? பொறந்தாத்துக்கு கோச்சுண்டு போன பொண்ணண்டை என்னத்த நல்ல கொணத்தைக் கண்டேள்னு கேக்கறேளா?

நேத்து நடந்த விஷயத்துக்கே வரேனே. எந்த மாட்டுப்பொண்ணாவது பொறந்தாம் போய்ட்டு புக்காம் வந்த கையோட மாமியாரைத் தேடுவாளா? அதுவும் மாமியாரண்ட பிரச்சனை பண்ணிண்டு போனவள்? மாமியார் மேல இருக்கற அக்கறைதானே அவளை வந்ததுமே எங்கேன்னு தேடச்சொல்லறது. இன்னொண்ணு… இந்தப் பிரச்சனையே ஏன் வந்தது? மாமியார் நாளெல்லாம் ஒத்தயிலே சமையக்கட்டுலே நின்னு வடிச்சிக் கொட்டறாளே… அவளுக்கு ஒருநாளாவது ரெஸ்ட் கொடுக்கணுங்கற நல்ல எண்ணந்தானே காரணம்? எந்த மருமக இந்தக் காலத்துல இப்படியிருக்கா? அந்த மாமியாரும் மருமகளை மெச்சி உச்சிமோந்து கொண்டாட வேணாமோ? இப்படியா மருமகளை அதத் தொடாதே… இதத் தொடாதே அதைச் செய்யாதே இதைச் செய்யாதேன்னு கட்டுப்படுத்தறது? அவளுக்கு கோவம் வந்ததுல என்ன தப்பு?

ஆனாலும் என்ன பண்ணினா அவ? நேரே பொறந்தாம் போய் அவ அம்மாவண்டை மாமியாரைப் பத்தி ஏதானும் வத்தி வச்சாளா? கண்ணைக் கசக்கினாளா? மூக்கச் சிந்தினாளா? ஒருபாட்டம் பொலம்பித் தள்ளுனாளா? ஒண்ணுமில்லயே.. ஏதோ மன சாந்திக்கு அம்மாவப் பாத்துவரப் போனா… போன வேகத்துல அடுத்தநாளே திரும்பி வந்துட்டா… மத்தப் பொண்களா இருந்தா… ஒண்ணுக்கு ரெண்டா சொல்லி ஒண்ணுமில்லாத பிரச்சனையை ஊதி ஊதி பெரிசு பண்ணியிருக்கமாட்டாளோ? மறுநா கூட தன் மாமியாரைக் காணாததாலேதான் அவ அம்மாவண்டை அத்தனை விஷயத்தையும் போன்ல சொல்லறா. அதுவும் தான் செஞ்ச தப்பையும் சேர்த்தேதான் சொல்லறா. நல்ல பொண்ணுங்கறதுக்கு இத விட வேறென்ன சாட்சியம் வேணும்?

வனஜாவோட மாமியாரும் அவ மாட்டுப்பொண்ணுக்கு ஏத்த மாமியார்தான்! வனஜா அவ மாமியார் மேல வச்சிருக்கற பிரியத்துக்கு இவ மருமக மேல வச்சிருக்கற பிரியமும் குண்டுமணி குறையல. பேஷ்! பேஷ்!

சரி, மருமக எங்க போயிருக்கா? பெத்தவாளைப் பாக்கத்தானே போயிருக்கா… அதுவும் உள்ளூர்தானே.. போயிட்டுதான் வரட்டுமேன்னு இந்த மாமியாரால இருக்க முடிஞ்சதா? என்னத்துக்கு பெத்த புள்ளயண்டை  கூட ஒரு வார்த்தை சொல்லாம கெளம்பி சம்பந்தியாத்துக்குப் போவணும்? சொல்லிட்டுப் போனாத்தான் என்னவாம்? காரணமில்லாமலா இருக்கும்? சதா மருமகளண்டை சண்டை போட்டுண்டு சிடுசிடுக்கற புள்ளையை மறைமுகமா தண்டிக்கறாளா இருக்கும்.

சும்மாவே ஆடுமாம் சாமி. இதிலே தாரை தப்பட்டையும் சேர்ந்தால் கேக்கணுமாங்கற கதையாய் ஆயிடுத்து வனஜாவோட ஆம்படையான் நெலமை. அவளண்டை சிடுசிடுக்க இது இன்னொரு சாக்கு.

இந்த ஜாதக தோஷமெல்லாம் வனஜாவோட மாமியாருக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல. தெரிஞ்சிருந்தா… பேரன் பேத்தி பத்தியெல்லாம் கவலைப்பட்டிருக்கமாட்டா… காலாகாலத்துல அதது கரெக்டா நடக்குங்கற நிம்மதியோட மகனும் மருமகளும் பண்ற பகல்கூத்தையெல்லாம் கண்டும் காணாமே சிவனேன்னு இருந்திருப்பா. அது தெரியாமப் போனதாலதான் மகனும் மருமகளும் எப்போ பார்த்தாலும் எலியும் பூனையுமா இருக்கறதுகளேன்னு மனசொடைஞ்சுபோய் சம்பந்தியம்மாளண்டை தன் கவலையெல்லாம் கொட்டித் தீர்க்கறா.

அந்தம்மாவும் லேசுப்பட்டவளா? என்னமா தம்பொண்ணுக்கு புத்திமதி சொல்லறா. வனஜாவோட மாமியார் தன்னண்ட வந்திருக்கறதை எடுத்தவொடனே சொல்லாமே என்ன பிரச்சனைன்னு மகள் வாயாலயே கிண்டி கெளறிக் கேட்டு அப்புறமாதான் விஷயத்தையே சொல்லறா.

ரெண்டு சம்பந்திகளுமா சேர்ந்து வனஜாவுக்கு விஷயத்தைப் புரியவச்சாச்சி. அவதான் கெட்டிக்காரியாச்சே… புரிஞ்சு பக்குவமா நடந்துண்டுக்க மாட்டாளா என்ன?  னஜா அப்பா வந்து எங்கிட்டே 

நடந்த இந்த சமாசாரத்தையெல்லாம் சொன்னாரோ,  இதெல்லாம் 


எனக்குத் தெரிய வந்ததோ!    


இப்போ சொல்லுங்கோ… இந்த மித்ர சஷ்டாஷ்டக தோஷமிருந்தாலும் நட்டமில்லேன்னு நான் சொன்னதாலதானே வனஜாவுக்கு இப்படியொரு அருமையான மாமியார் கிடைச்சிருக்கா… புருஷன்காரனை விடுங்கோ… ராத்திரியானா அவனோட கடுப்பையெல்லாம் எங்கயோ பறந்துபோக வச்சி பொட்டிப்பாம்பா ஆக்கற தந்தரம்தான் வனஜாட்ட இருக்கே.. அப்புறம் என்ன… இனிமே கூடிய சீக்கிரமே அந்தாத்துல குவா குவா சத்தம் கேக்கத்தான் போறது… என்ன நாஞ்சொல்றது?       





 







இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்: 




  


 திருமதி. 



கீதா மதிவாணன்  


அவர்கள்.



வலைத்தளம்: கீதமஞ்சரி

geethamanjari.blogspot.in

  



மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


அன்பான இனிய நல்வாழ்த்துகள்.



      






 

  

VGK-35 TO VGK-39


 

  





முத்தான மூன்றாம் 

பரிசினை வென்றதுடன்



தான் அடித்த ஐந்தாம் ஹாட்-ட்ரிக் 


வெற்றியினை


ஐந்தாம் சுற்றிலும் தக்க 



வைத்துக்கொண்டுள்ளார்கள்.





மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


அன்பான இனிய நல்வாழ்த்துகள்.




      






மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.






      

 



இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்பட உள்ளன.





காணத்தவறாதீர்கள் !



    







என்றும் அன்புடன் தங்கள்

வை.கோபாலகிருஷ்ணன்




13 கருத்துகள்:

  1. ஜோதிடரின் பார்வையில் விமர்சனத்தை
    வித்தியாசமாக அமைத்து பரிசுபெற்ற
    திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கு
    மனம் நிறைந்த பாராட்டுக்கள்
    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மேடம்.

      நீக்கு
  2. மூன்றாம் பரிசுக்குரியதாய் என் விமர்சனம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. போட்டித்தொடர் நிறைவு பெறவிருக்கும் இவ்வேளையிலும் களத்தில் நான் தொடர்ந்து இருக்கிறேன் என்பது மகிழ்வைத் தருகிறது. தேர்ந்தெடுத்த நடுவர் ஜீவி சார் அவர்களுக்கும் வாய்ப்பமைத்துக் கொடுத்த கோபு சார் அவர்களுக்கும் அன்பான நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. நகைச்சுவை இழையோட வேறுபட்ட கோணத்தில் கதையை அலசி பரிசு பெற்றிருக்கும் கீதாமதிவாணனுக்குப் பாராட்டுக்கள்! தொடர்ந்து ஹாட் டிரிக் பரிசு வெல்வதற்கும் பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  4. பேஷ், பேஷ்... நன்னாயிருக்கு விமர்சனம்!
    வாழ்த்துக்கள் திருமதி கீதா மதிவாணன்!

    பதிலளிநீக்கு
  5. கீதமஞ்சரிக்கு மூன்றாம் பரிசா? ஆச்சரியமான விஷயம் தான். என் விமரிசனம் தேர்ந்தெடுக்கப்படாததில் வருந்த ஒன்றுமே இல்லை. :)

    பதிலளிநீக்கு
  6. திருமதி. கீதா மதிவாணன் அவர்களைப் பாராட்டுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்..

    பதிலளிநீக்கு
  7. திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  8. திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள். வித்தியாசமா யோசிக்கறவங்களுக்கு பரிசு கிடைக்காமல் போகுமா என்ன?

    பதிலளிநீக்கு
  9. திருமதி கீதாமதிவாணனவங்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. திருமதி கீதாமதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. தொடர் வெற்றிகளுக்கு வாழ்த்துகள் சகோதரி.

    பதிலளிநீக்கு
  12. திருமதி கீதாமதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு