என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 28 டிசம்பர், 2013

102 ] ஸ்நான வகைகள் - ஐந்து.

2
ஸ்ரீராமஜயம்


 


ஸ்நானம்: ஸ்நானத்தில் ஐந்து வகைகள் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 

இவற்றில் ஸ்நானம் என்றவுடன் நாம் தினமும் செய்கிறதான ஜலத்தில் குளிப்பது ‘வாருணம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த வாருணம் என்பதும் குளம், ஆறு போன்றவற்றில் மூழ்கி /முங்கிக் குளித்தலே. இதுவே முக்கிய ஸ்நானம். 

மற்றபடி பாத்திரம் போன்றவற்றால் நீரை எடுத்து விட்டுக்கொள்வது போன்றவை இரண்டாம் பக்ஷம்தான். இதற்கு அப்புறம் வருவதுதான் கெளணமாகக் கழுத்துவரைக் குளிப்பது, இடுப்புவரைக் குளிப்பது போன்றவை. ஆனாலும் இந்த 'கெளண' ஸ்நானங்கள் எல்லாம் ஜலத்தால் /நீரால் செய்யும் வாருணத்தில் வருவதுதான்.

இல்லங்களில் சளி அல்லது ஜுரத்தில் இருக்கும்போது  விபூதி ஸ்நானம் செய்துகொள்வார்கள் பெரியோர். இது இரண்டாம் வகை. ஆக்நேயம் என்று பெயர். அக்னி சம்பந்தமுடையது என்று பொருள். அக்னியில் பஸ்மத்தால் கிடைக்கும் பஸ்மத்தை [சாம்பலை] ஜலம் விட்டுக்குழைக்காமல் வாரிப் பூசிக்கொள்வதை 'பஸ்மோத்தூளனம்' என்று சொல்கிறோம்.

பசுக்கள் கூட்டமாகச் செல்லும்போது, அவற்றின் குளம்படி மண்ணை ரொம்பவும் புனிதமாகாச் சொல்லியிருக்கிறது. இதற்கு ’கோதூளி’ என்று பெயர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணனே இந்தப்பசுக்களின் தூளியை சந்தனப்பொடி தூவினார் போல தனது உடம்பில் படிந்தபடி ‘கோதூளி தூஸரிதனாக’ இருந்தானாம். இவ்வாறான ’கோதூளி’ நம்மீது படும்படியாக நின்று, அந்த மண் துகள்களை நம் உடலில் ஏற்பது மூன்றாம் வகையான ஸ்நானம். இதன் பெயர் ’வாயவ்யம்’.

இது வாயுவுடன் ஸம்பந்தமுடையதாக இருப்பதால், அதாவது காற்றினால் பறக்கும் மண் தூசி என்பதால், இதன் பெயர் வாயவ்யம்.

அபூர்வமாக சிலசமயங்களில் வெயில் அடிக்கும்போதே மழையும் பொழிகிறதல்லவா. இவ்வாறான மழை ஜலம் தேவலோகத்திலிருந்து வரும் தீர்த்ததிற்கு சமம்  என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதில் குளிப்பது ’திவ்ய ஸ்நானம்’ என்று பெயர். இதுவே நான்காம் வகை ஸ்நானம். 

புண்யாஹவாசனம், உதகசாந்தி போன்றவை செய்தபின் மந்திர ஜலத்தை புரோகிதர் நம்மீது தெளிப்பார். சந்தியா வந்தனத்தில் ‘ஆபோ ஹி ஷ்டா’ சொல்லி நீரைத் தெளித்துக்கொள்கிறோம். இவ்வாறு அபிமந்திரித்து தெளித்துக் கொள்வது ஐந்தாம் முறை. இதன் பெயர் ‘ப்ராஹ்மம்’. ’ப்ரம்ஹம்’ என்றால் வேதம், வேத மந்திரம் என்று ஒரு அர்த்தம். ஆகவே வேத மந்திரத்தால் புனிதப் படுத்தப்பட்ட தீர்த்த புரோக்ஷணத்திற்கு ‘ப்ராஹ்ம ஸ்நானம்’ என்று பெயர். 

பார்க்கப்போனால் எல்லா ஸ்நானமுமே ப்ராஹ்மம் தான். எந்தக் காரியம் ஆனாலும், அந்தக் காரியத்தை மட்டும் பண்ணாமல், அதோடு மந்திரத்தையும் சேர்த்து, ஈஸ்வர ஸ்மரணையுடப் ஈஸ்வரார்ப்பணமாகப் பண்ணுவதாகவே, அத்தனை ஆசாரங்களும் ஏற்பட்டிருக்கின்றன. 


oooooOooooo

[ 1 ]

”மஹா பெரியவாளோட அனுஷ ஜயந்தியை, வருஷம் தவறாம நடத்திண்டு வரேன். சில வருஷத்துக்கு முன்னால, ஜயந்தித் திருநாள் தருணத்துல நடந்தது இது. -  By பட்டு சாஸ்திரிகள்.


ஒரு மாலை நேரம்… அன்பர் ஒருத்தர் அயோத்தியா மண்டபத்துக்கு வந்தார். 

‘என் பேரு சுவாமிநாதன். நீங்க ஏன் மஹாபெரியவாளோட பாதுகையையும் திருவுருவப் படத்தையும் வைச்சு அனுஷ ஜயந்தி நடத்தறேள்? பஞ்சலோக விக்ரஹகம் பண்ணி, அதுக்குண்டான வழிபாடுகளைச் செஞ்சு, ஜயந்தி விழாவை நடத்தலாமே?’ன்னு என்னைக் கேட்டார்.

அதோட நிக்காம, ஒரு பையிலிருந்து ரெண்டு பித்தளை சொம்புகளை எடுத்துக் கொடுத்து, ‘மஹாபெரியவாளின் பஞ்சலோக விக்ரஹகம் செய்யறதுக்கு முயற்சி பண்ணுங்க. நிச்சயம் அது கைகூடும். மாம்பலத்துலயே அவர் கோயில்ல குடியிருந்தபடி எல்லார்க்கும் அருள்பாலிக்கப் போறார், பாருங்க’ என்று சொல்லி, ஒரு ஓரமா இருந்த நாற்காலியில் போய் உட்கார்ந்தார்.

பத்து நிமிஷம் கழிச்சுப் பார்த்தா, அங்கே அவரைக் காணோம்! மண்டபம் முழுக்கத் தேடியும் கிடைக்கலே. பக்தர்கள்கிட்ட இந்த விஷயத்தைச் சொன்னதும், பஞ்சலோகத் திருமேனி பண்றதுக்கு, எல்லாரும் ரொம்ப ஆர்வத்தோட உதவி பண்ணினார்கள்.

அப்புறம்… மஹாபெரியவாளோட திருவுருவத்தை பஞ்சலோக விக்ரஹகமா வடிக்க, சுவாமிமலைக்குப் போனோம். அங்கே… கோயிலுக்குப் பக்கத்துலயே இருக்கிற தேவ சேனாபதி ஸ்தபதியைப் பாத்தோம். மஹாபெரியவாள்மேல ரொம்ப பக்தி கொண்டவர் அவர். வயசானவர். ‘இத்தனை வயசுக்குப் பிறகும், மஹாபெரியவாளோட பஞ்சலோக விக்ரஹகம் பண்ற பாக்கியம் எனக்குக் கிடைச்சிருக்கே’ன்னு சொல்லிச் சொல்லிச் சந்தோஷப்பட்டார். 

ஒரு நல்ல நாள் பார்த்து, விக்ரஹகம் பண்ற வேலையை ஆரம்பிச்சு, பிரமாதமா தயாரிச்சு முடிச்சார் (பெரியவாள் விக்ரஹம்தான், அவர் பண்ணின கடைசி விக்ரஹகம்).

இந்த நேரத்துல, கையில பணம் குறைச்சலா இருந்துது. விக்ரஹத்தை வாங்கிண்டு வரணும்னா, சுமார் 5,000 ரூபா வரைக்கும் தேவையா இருந்துது. ‘எல்லாம் பெரியவா பார்த்துப்பா’னு தைரியமா இருந்தேன். 

திடீர்னு ஒருநாள், கடம் விநாயக்ராமோட தம்பி சுபாஷ் சந்திரனோட வீட்டுக்கு, அவரோட மாப்பிள்ளை கஞ்சிரா வித்வான் கணேஷ்குமார் அமெரிக்காலேருந்து போன் பண்ணியிருக்கார்.

‘மாம்பலத்துல மேச்சேரி பட்டு சாஸ்திரிகள்னு ஒருத்தர், காஞ்சி மஹா பெரியவாளோட பஞ்சலோக விக்ரஹத்தைச் சிரமப்பட்டுப் பண்ணியிருக்காராம். ‘அவருக்குப் பணம் கொடுத்து ஒத்தாசை பண்ணு’ன்னு அதிகாலைல, மஹா பெரியவா என் சொப்பனத்துல வந்து சொன்னார்’னு கணேஷ்குமார் சொல்லிருக்கார். 

சுபாஷ் சந்திரனோட மனைவி கீதா நேர்ல வந்து, ‘இந்த 6,000 ரூபாயை உங்க கிட்ட கொடுக்கச் சொன்னார்’னு முழு விவரமும் சொல்லிக் கொடுத்தப்ப, ஆச்சரியத்துல அசந்து போயிட்டோம் நாங்க!

பணத்துக்கு என்ன பண்றதுன்னு தவிச்ச கொஞ்ச நேரத்துலயே, 6,000 ரூபாய் கைக்கு வந்தா எப்படி இருக்கும் எனக்கு? அப்படியே உருகிப் போயிட்டேன். 

இத்தனைக்கும் எனக்குப் பணம் தேவைப்படறதுன்னு யார்கிட்டயும் நான் ஒரு வார்த்தைகூடச் சொல்லலை. 

ஆனா, எங்கேயோ அமெரிக்காவுல இருக்கிற கணேஷ் குமாரோட சொப்பனத்துல வந்து, மஹாபெரியவாளே சொல்லிருக்கார்னா, பெரியவாளோட மகிமையை என்னன்னு சொல்றது! ஆறு வருஷத்துக்கு முன்னால நடந்த சம்பவம் இது!

பணம் கைக்கு வந்ததும், வைகாசி அனுஷ ஜயந்தி நடத்தறதுக்கு முன்னேயே, ஜூன் மாசம் 3-ம் தேதி ராத்திரி, சுவாமிமலையில ஸ்ரீஸ்வாமிநாத ஸ்வாமியை கண் குளிரத் தரிசனம் பண்ணிண்டு, வடவாம்பலம் வழியா வந்து, அங்கே ஸ்ரீஆத்ம போதேந்திராள் அதிஷ்டானத்துல மஹா பெரியவாளோட பஞ்சலோக விக்ரஹகத் திருமேனியை ஒரு வாகனத்துல வெச்சு, தீபாராதனை காட்டினோம்.

பூஜையெல்லாம் முடிச்சுட்டு, வண்டியைக் கிளப்பினா… ம்ஹூம்.. வண்டி ஒரு அடிகூட நகரலை. அங்கேயே நின்னுடுத்து. டிராக்டரைக் கொண்டு வந்து இழுத்துப் பார்த்தோம்; லாரியைக் கொண்டு வந்து கட்டி இழுத்தோம்; ம்ஹூம்… வண்டி அசைவேனாங்கறது! கிட்டத்தட்ட விடியற்காலை நேரமும் வந்தாச்சு. 

அந்த நேரத்துல, விவசாயி ஒருத்தர் ரெண்டு சிநேகிதர்களோடு அங்கே வந்தார். அவர் தினமும் ஆத்ம போதேந்திராள் அதிஷ்டானத்துல பிரார்த்தனை செஞ்சுட்டுதான் கூலி வேலைக்குப் போவாராம்.

எங்ககிட்ட வந்த அந்த விவசாயி, ‘என்ன நடந்துது?’ன்னு கேட்டார். ‘ஏனோ தெரியலை; வாகனம் நகரவே இல்லை’ன்னு சொன்னோம். அப்ப, அவர் சொன்ன வார்த்தைகள், எங்களை மெய்சிலிர்க்க வெச்சுடுச்சு!

‘மஹா பெரியவாளும் அவரோட குருவும் ஆத்மார்த்தமா சம்பாஷணையில இருக்கிற நேரத்துல, நீங்க எப்படிக் குறுக்கிடலாம்? பாதிப் பேச்சுல, பெரியவாளைப் பிரிச்சு எப்படி சென்னைக்குக் கூட்டிட்டுப் போகலாம்? இப்ப… அவங்க சம்பாஷணையை நிறுத்திட்டாங்க. இப்போ வண்டியை இழுத்துப் பாருங்க, நல்லாவே நகரும்’னார். 

அதோட நிக்காம, எங்களோட அவரும் சேர்ந்து, ‘ஜய ஜய சங்கர; ஹர ஹர சங்கர‘ன்னு சொல்லிண்டே வாகனத்தை நகர்த்தறதுக்கு உதவி பண்ணினார். வண்டியும் எந்தச் சிரமமும் இல்லாம நகர்ந்தது. வழியிலேயும் எந்தவித அசௌகரியமும் இல்லாம, விக்ரஹத்தை நல்லபடியா சென்னைக்குக் கொண்டு வந்தோம்.

மஹா பெரியவா, சாதாரணமானவரா என்ன? அவர், மஹான் மாத்திரமில்லை; சாட்சாத் ஈஸ்வர அம்சம். இல்லேன்னா இதெல்லாம் நடக்குமா? இந்த பஞ்சலோக விக்ரஹகத் திருவுருவமேனியைச் செஞ்சது நாங்களா? இல்லவே இல்லை. அவரோட காரியத்தை அவரே நடத்திண்டுட்டார். 

இப்ப… பாதுகையோடு பஞ்சலோக விக்ரஹகமும் தரிசனத்துக்கு இருக்கு. அடுத்து, பெரியவாளுக்குக் கோயில் கட்டுற வேலைதான் பாக்கி. மஹா பெரியவாளுக்கு கோயில்ங்கறது, பக்தர்களோட கோரிக்கைதான். இதையும் அவரே நடத்திக் கொடுத்துடுவார், பாருங்கோ!

ஒண்ணு மட்டும் சத்தியம்! ‘இன்னது நடக்கணும்’னு நாம சங்கல்பம் பண்ணிண்டாப் போதும்; அவரே நடத்தி வெச்சுடுவார். 

அவரோட அன்பாலதான் எல்லாமே இயங்கறது; மஹா பெரியவா, கருணாமூர்த்தியாச்சே!” என்று நெகிழ்ச்சியுடன் சொல்லி, பஞ்சலோக விக்ரஹகத் திருமேனியாகக் காட்சி தரும் காஞ்சி மஹானைப் பார்த்த பட்டு சாஸ்திரிகள், அப்படியே வணங்கித் தொழுதார்.

[Thanks to Sage of Kanchi 9.7.2013]

oooooOooooo

[ 2 ]

குல்பர்க்காவில் நடந்தது
குல்பர்காவில் பெரியவா முகாம். அன்று மௌன வ்ரதம். ஒரு "டொக்கு" அறைக்குள் பெரியவா உட்கார்ந்து கொண்டிருக்க, ஜன்னலுக்கு வெளியே தீக்ஷதர் ஒருவர் "திருவீழிமிழலை" என்னும் திவ்ய க்ஷேத்ர மஹாத்மியம் படித்துக் கொண்டிருக்க, பெரியவா அதை ஸ்வாரஸ்யமாக கேட்டுக் கொண்டிருந்தார். 
அன்று கொஞ்ச நேரம் கழித்து பெரியவா தன் மௌன வ்ரதத்தை முடித்துக் கொண்டு அந்த தீக்ஷதரை "க்ஷேமமா இரு" என்று ஆசீர்வாதம் பண்ணினார். 
தீக்ஷதர் மெதுவாக பெரியவாளிடம் வந்து, "பொண்ணுக்கு கல்யாணம் நல்ல இடத்தில் குதிரணும். பெரியவாதான் அனுக்ரஹம் பண்ணணும்" என்று விண்ணப்பித்தார்.

"காலேல பாப்போம்" ஒரே வார்த்தையில் அந்த தீக்ஷதரின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு, மீதி வேலைகளை கவனிக்கச் சென்றுவிட்டார். 
தீக்ஷதருக்கோ ஏக கவலை! கல்யாணப் பேச்சை எடுத்ததும், ஏன் பெரியவா இப்படி சொன்னார்? என்று உள்ளே குடைந்து கொண்டிருந்தது. 
மறுநாள் காலை எட்டு மணி. தீக்ஷதரை பெரியவா அழைப்பதாக பாரிஷதர் வந்து சொன்னதும், ஓடிப்போய் நமஸ்காரம் பண்ணினார். 
”ஒண்ணும் கவலைப்படவேணாம். ஒம்பொண்ணுக்கு நல்ல எடத்ல கல்யாணம் நடந்து, க்ஷேமமா இருப்பா" என்று ஆசிர்வதித்துவிட்டு, குங்குமப் ப்ரஸாதம் குடுத்து அனுப்பினார்.


அதோடு பாரிஷதரிடம் " இவன் வெளில எங்கியும் சாப்ட மாட்டான். அதுனால, பொரில தயிரைக் கலந்து சாப்டக் குடு" என்று அன்பான உத்தரவும் இட்டார். 
அவர் சொல்வதை எத்தனை கஷ்டம் வந்தாலும் நாம் கடைப் பிடிக்க முயற்சி எடுத்தால் கூட போறும். பெரியவாளே அதற்கான பந்தோபஸ்த்தை பண்ணிவிடுவார். 
ஊருக்கு வந்தபின் தீக்ஷதருக்கு ஒரு பயங்கரமான, அதிர்ச்சியான விஷயம் காத்திருந்தது! 
ஆம். நேற்று இரவு பெரியவாளிடம் எந்தப் பெண்ணின் கல்யாணத்துக்காக விண்ணப்பம் செய்தபோது "காலேல பாப்போம்" என்று பெரியவா சொன்னாளோ, அதே நேரம். அதாவது ராத்ரி எட்டு மணிக்கு, அந்த பெண்ணின் ப்ராணனுக்கே ஆபத்து வந்து, ரொம்ப அவஸ்தை பட்டு பிழைக்கப் போராடியிருக்கிறாள். 
அங்கிருந்தே பெரியவா அவளை ரக்ஷித்திருக்கிறார். காலை பெரியவா தீக்ஷதரை அழைத்தபோது அவள் ஆச்சர்யமான வகையில் பரிபூர்ணமாக குணமடைந்திருந்தா.



நன்றி: அமிர்த வாஹினி 13.12.2013


oooooOooooo

[ 3 ]





"வெறும் சப்தத்திற்கும், 


வேத சப்தத்திற்கும்


 உள்ள மதிப்பு"







நத்தத்தில் காஞ்சி பரமாசார்யாள் ஒரு சமயம் 

இருந்தபோது நடந்த சம்பவம். 



பெரியவாள் தங்கியிருந்த இடத்தில் ஒரு வேதபாராயண 

கோஷ்டி வேதத்தில் ஒரு அனுவாகம் 

கூறிக்கொண்டிருந்தார்கள்.


அந்த இடத்திற்கு 

ஒர் ச்ரத்தையில்லாத பிராம்மணன் வந்திருந்தான். 



அவனுக்கு வேதம் தெரியாது. ’


”என்னவோ அர்த்தமில்லாமல் முணுமுணுக்கிறதே


இந்த கோஷ்டி. 



இதனால் உலகத்திற்கு என்ன ப்ரயோஜனம்? ஏழை 

எளியவர்களுக்கு ஏதாவது திட்டமிட்டு செலவழித்தாலும் 

புண்யமாவது கிடைக்குமே” என்று கூறினானாம். 


இது எப்படியோ பெரியவாள் காதுகளையும் எட்டிவிட்டது.

நமக்கும் பெரியவாளுக்கும் அதுதான் வித்யாசம். 



வால்மீகி மகரிஷி தனது ராமாயணத்தில் ராமரைப்பற்றிக் 

கூறும்போது, "நூறு குற்றங்கள் செய்தாலும் கொஞ்சம் 

கூட ஞாபகம் கொள்ள மாட்டார். ஏதாவது ஒரு நல்ல 

காரியம் செய்தாலும் அதைக்கொண்டே பூரண திருப்தி 

அடைந்து விடுவார்" என்று வர்ணித்திருப்பதை நடந்து 

காட்டியவர் நமது காஞ்சி பரமாச்சார்யாள்.



அன்று மாலை பூஜாகாலத்திற்குப் பிறகு பெரியவாள் 

அருள்வாக்கு கூற அமர்ந்தார். காலையில் கம்ப்ளெய்ன்ட் 

செய்த ஆசாமியும் அங்கு, மாலை, கூட்டத்தில் 

அமர்ந்திருப்பதைக் கண்டார். 


அவனருகில் சென்று மடத்து 

சமையல்காரனைக் கூப்பிட்டார். 


”இந்த ப்ராம்மணனுக்குப் 

பகல் சாப்பாடு நன்றாக இல்லையாம். 

ராத்திரி கொஞ்சம் 

ஸ்பெஷலாக கவனித்துக்கொள்" என்று கூறினார். 


அந்த சமையல்காரன் இந்த ப்ராம்மணனைப் பார்த்து 

முணுமுணுத்துக் கொண்டே போனான். இந்த 

பிராம்மணனுக்கு படுகோபம் வந்து விட்டது. 


"ஸ்வாமி! 

பார்த்தேளா! என்னமோ முணுமுணுத்துக் கொண்டே 

போகிறானே பார்த்தேளா?" என்றான் அந்த பிராம்மணன்.


நம் நடமாடும் தெய்வம் புன்முறுவலுடன் கேட்கிறார். 



"அவன் என்ன முணுமுணுத்தான் என்று தெரியுமா?" 

என்று. 


"அது காதில் விழவில்லை. ஆனால் 


முணுமுணுத்ததுகாதில் நன்றாக விழுந்தது" என்றான் 

அந்தப் பிராம்மணன். 



"அவன் என்ன சொன்னான் என்று புரியாத 

முணுமுணுப்புக்கு, அது என்ன வார்த்தை, யாரைப்பற்றி 

என்று தெரியாமல் இருக்கும்போது, அந்த முணுமுணுப்பு 

சப்தம் உன்னிடம் ஒரு ரியாக்ஷன் ஏற்படுத்துமானால், 

வழிவழியாக பரம்பரையாக வந்த வேத முணுமுணுப்பு, 

அந்த அட்மாஸ்ஃபியரில் எத்தகைய உயர்ந்த ரியாக்ஷன் 

ஏற்படுத்தும் என்பது உனக்குக் காலையில் ஞாபகமில்லை 

போலிருக்கு" என்று சொன்னார்.

வெறும் சப்தத்திற்கு, வேத சப்தத்திற்கு உள்ள மதிப்பை, 

ஆசார்யாள் சொல்லுகிற மாதிரி யார் நமக்கு மனதில் 

பதியும்படி சொல்லமுடியப்போகிறது!

அந்த ப்ராம்மணன் வேத அத்யயனகோஷ்டியை 

இகழ்ந்தற்கு ஆசார்யாள் அஸூயைப்படவில்லை. ஸ்ரீ 

மடத்தில் தனது சன்னிதானம் இருக்கும் இடத்தில், 

காலையில் காலை வைத்துவிட்ட அந்த ஒரு 

புண்ணியத்திற்காக (कृतेनैकेन तुष्यति) அவன் வேத 

கோஷ்டியை இகழ்ந்த பாபத்தை மறந்துவிட்டு, ஒரு 

சிறிதும் கோபமோ, வெறுப்போ கொள்ளாமல், 

அவனுக்கும், அவனை வ்யாஜமாக, லோகத்தினருக்கும் 

ஞானம் அனுக்ரஹம் பண்ணுவது இருக்கிறதே, 


அதுதான் "தெய்வீகம்" என்பதற்கு லக்ஷணம்.



அந்த பரமாசார்யாளின் பாததூளி பாக்யம் எத்துணை 

உயர்ந்ததாக இருக்கும் என்று கூறவும் வேண்டுமோ?



[Thanks to Amritha Vahini 23.12.2013]




ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.



இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியாகும்.



என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

  


54 கருத்துகள்:

  1. அருமையான நிகழ்வுகள்... 5 வகையான குளியல் என அருமையான பகிர்வாய்...

    அருமை ஐயா.

    பதிலளிநீக்கு
  2. குளிப்பதில் ஐந்து முறைகள், அதற்கான வழிகள் அறிந்து உணர்ந்தேன் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    ஐயா.
    அறியமுடியாத பல கருத்துக்களை நான் அறியப்பெற்றேன். பதிவு அருமை வாழ்த்துக்கள் ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான பகிர்வு... சம்பவங்கள் ஒவ்வொன்றும் பெரியவாளின் கருணையயும், சிறப்பையும் உணர்த்துகின்றன...

    ஸ்நானங்களை பற்றி குறிப்பிட்டது அருமை..

    பதிலளிநீக்கு
  5. ஸ்நானம் விளக்கம் மிகவும் அருமை ஐயா... வியக்க வைக்கும் சம்பவங்கள்... தெய்வீகம் என்பதற்கு லக்ஷணம் சிறப்பு... நன்றி ஐயா...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  6. ஒவ்வொரு ஸ்னானத்திற்கும் பஞ்சபூதங்களைக்கொண்டு அருமையான விளக்கம் அந்த நாட்களில் ராஜாக்கள் ஸ்வப்னத்தில் வந்து ஸ்வாமி கோவில்கள் உருவாக்கியதாக படித்திருக்கிறோம் அதே மாதிரி தனக்காக இல்லாவிட்டாலும் தன் பக்தாளுக்காக ஸ்வப்னத்தில் சொல்லியிருக்கிறார்கள்.அந்த பெண் உயிரை க்காப்பாற்றி பின் அவளுக்கு திருமண ஆசிர்வாதம் செய்த தீர்கதரிஸனம் சிலிர்க்கவைக்கிறது நாஸ்திகர்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் விளக்க மஹாபெரியவாள் போன்ற ஞானிகளுக்குத்தான் முடியும் மிகவும் நாசூக்காக வும் ஆகாகவும் இருந்தது .நன்றி

    பதிலளிநீக்கு
  7. பார்க்கப்போனால் எல்லா ஸ்நானமுமே ப்ராஹ்மம் தான். எந்தக் காரியம் ஆனாலும், அந்தக் காரியத்தை மட்டும் பண்ணாமல், அதோடு மந்திரத்தையும் சேர்த்து, ஈஸ்வர ஸ்மரணையுடப் ஈஸ்வரார்ப்பணமாகப் பண்ணுவதாகவே, அத்தனை ஆசாரங்களும் ஏற்பட்டிருக்கின்றன.

    அருமையான விளக்கங்கள்..!

    பதிலளிநீக்கு
  8. எங்கேயோ அமெரிக்காவுல இருக்கிற கணேஷ் குமாரோட சொப்பனத்துல வந்து, மஹாபெரியவாளே சொல்லிருக்கார்னா, பெரியவாளோட மகிமையை என்னன்னு சொல்றது!

    மகிமை மிக்க மஹா பெரியவாள் ..!

    பதிலளிநீக்கு
  9. மஹா பெரியவா, சாதாரணமானவரா என்ன? அவர், மஹான் மாத்திரமில்லை; சாட்சாத் ஈஸ்வர அம்சம். இல்லேன்னா இதெல்லாம் நடக்குமா? இந்த பஞ்சலோக விக்ரஹகத் திருவுருவமேனியைச் செஞ்சது நாங்களா? இல்லவே இல்லை. அவரோட காரியத்தை அவரே நடத்திண்டுட்டார்.

    ஆம் ..அதுதான் சத்திய வாக்கு ..!

    பதிலளிநீக்கு
  10. பட்டு சாஸ்திரிகள்,அனுபவம் கிடைத்தற்கரிய பேறு ..!
    ‘ஜய ஜய சங்கர; ஹர ஹர சங்கர‘..!!

    பதிலளிநீக்கு
  11. //அங்கிருந்தே பெரியவா அவளை ரக்ஷித்திருக்கிறார். காலை பெரியவா தீக்ஷதரை அழைத்தபோது அவள் ஆச்சர்யமான வகையில் பரிபூர்ணமாக குணமடைந்திருந்தா.//

    அமிர்த வாஹினி செய்தி பிரமிக்கவைத்தது ..!

    பதிலளிநீக்கு
  12. ஸ்ரீஸ்ரீஸ்ரீ பரமாச்சார்ய ஸ்வாமிகளின் கருணைக்கு அளவேது!..

    ஜய ஜய சங்கர.. ஹர ஹர சங்கர!..

    பதிலளிநீக்கு
  13. //வழிவழியாக பரம்பரையாக வந்த வேத முணுமுணுப்பு,
    அந்த அட்மாஸ்ஃபியரில் எத்தகைய உயர்ந்த ரியாக்ஷன்
    ஏற்படுத்தும்//

    நம் நடமாடும் தெய்வம் புன்முறுவலுடன் உணர்த்திய மாதிரி
    வெறும் சப்தத்திற்கு, வேத சப்தத்திற்கு உள்ள மதிப்பை,
    ஆசார்யாள் சொல்லுகிற மாதிரி யார் நமக்கு மனதில்
    பதியும்படி சொல்லமுடியப்போகிறது!

    பதிலளிநீக்கு
  14. "தெய்வீகம்" என்பதற்கு லக்ஷணமாக
    அந்த பரமாசார்யாளின் பாததூளி பாக்யம் எத்துணை உயர்ந்ததாக இருக்கும் என்பதை சிறப்பாக எடுத்துரைத்த உயர்வான பரம் பாக்கியமான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  15. ஸ்நான வகைகள் பற்றித் தெரிந்து கொண்டேன்; பொருத்தமான பெரியவா படம் அருமை!
    // ‘இன்னது நடக்கணும்’னு நாம சங்கல்பம் பண்ணிண்டாப் போதும்; அவரே நடத்தி வெச்சுடுவார். // நீங்கள் தொகுத்திருக்கும் சம்பவங்களைப் படித்தால் நம்மை எண்ண வைப்பதே அவர் தான் என்று தெரிகிறது!! 'அவன் அருளாலே அவன் தாள் பணிந்து....'

    பதிலளிநீக்கு
  16. ஸ்நானத்தில் இத்தனை வகையா?? அரிந்துக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி..

    பெரியவரின் கருனையை நினைத்து மிக வியப்பாக இருக்கிறது..

    பதிலளிநீக்கு
  17. ஸ்நானத்தில் இத்தனை வகையா ? படிக்க படிக்க வியப்பு மேலிடுகிறது. மகா பெரியவரின் கருணையைப் படிக்க படிக்க பக்தி மேலிடுகிறது. அதுவம் தீட்சிதரின் பெண் கல்யாணம் பற்றி
    அவர் சொல்லியது முக்காலமும் உணர்ந்த ஞானி என்பதை உலகிற்கு உணர்த்துவதே அமைகிறது. வாழ்த்துக்கள்..............

    பதிலளிநீக்கு
  18. பார்க்கப்போனால் எல்லா ஸ்நானமுமே ப்ராஹ்மம் தான். எந்தக் காரியம் ஆனாலும், அந்தக் காரியத்தை மட்டும் பண்ணாமல், அதோடு மந்திரத்தையும் சேர்த்து, ஈஸ்வர ஸ்மரணையுடப் ஈஸ்வரார்ப்பணமாகப் பண்ணுவதாகவே, அத்தனை ஆசாரங்களும் ஏற்பட்டிருக்கின்றன. //

    அருமையான் அமுத மொழி.


    அவரோட அன்பாலதான் எல்லாமே இயங்கறது; மஹா பெரியவா, கருணாமூர்த்தியாச்சே!” என்று நெகிழ்ச்சியுடன் சொல்லி, பஞ்சலோக விக்ரஹகத் திருமேனியாகக் காட்சி தரும் காஞ்சி மஹானைப் பார்த்த பட்டு சாஸ்திரிகள், அப்படியே வணங்கித் தொழுதார்.//
    மஹானின் மகிமை என்னவென்று சொல்வது!
    அருமை.

    //அங்கிருந்தே பெரியவா அவளை ரக்ஷித்திருக்கிறார். காலை பெரியவா தீக்ஷதரை அழைத்தபோது அவள் ஆச்சர்யமான வகையில் பரிபூர்ணமாக குணமடைந்திருந்தா.//
    ஞானகண் படைத்தவர் அல்லவா குரு!

    //அந்த பரமாசார்யாளின் பாததூளி பாக்யம் எத்துணை

    உயர்ந்ததாக இருக்கும் என்று கூறவும் வேண்டுமோ?//
    மகா உயர்ந்தது குருவின் பாததுளி.
    அருமையான் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.


    பதிலளிநீக்கு
  19. ஐந்து வகை ஸ்நான விளக்கம் மிகவும் சிறப்பு! அமுத மழையில் நனைந்தேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  20. அருமையான படைப்புக்களால் எம் இதயத்தில் குடிகொண்ட
    தங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா .
    ஒரு வாரத்திற்கு பதிவுகள் போட வாய்ப்பில்லை நாம்
    வேறு நாட்டிற்கு செல்லவிருப்பதால் :)) மிக்க நன்றி ஐயா
    தென்றலாய் பரந்து விரிந்து தங்கள் பகிர்வுகள் உச்சம்
    பெற்றிடவும் என் இனிய வாழ்த்துக்கள் .................

    பதிலளிநீக்கு
  21. அருமையான தகவல்கள்.

    அமுத மொழிகள் தொடர்ந்து படிப்பதில் ஆனந்தம்..... நன்றி.

    பதிலளிநீக்கு
  22. அன்பின் வை.கோ

    ஸ்னானம் செய்வதில் இத்தனை முறைகள் இருக்கின்றனவா ? பலே பலே - இப்பொழுதெல்லாம் நாங்கல் வீட்டில் ஷவரைத் திறந்து விட்டு - ஸ்னானம் செய்கிறோம் - அவ்வளவுதான் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  23. அன்பின் வை.கோ - இணைத்துள்ள புகைப் படம் அருமை - காணக் கிடைக்காத படம் - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  24. அன்பின் வை.கோ

    ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளின் பஞ்ச லோக விக்ரஹம் செய்வதற்குத் - தேவைப்பட்ட பணத்தினை அவரே ஏற்பாடு செய்து அயலகத்தில் இருந்து செய்தி வந்து பணமும் வந்து - அருமையான் விக்ரஅம் செய்யப் பட்டு பிரதிஷ்டை செய்யப்ப்ட்டிருப்பது அற்புதமான செயல். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  25. அன்பின் வை.கோ

    // மஹா பெரியவாளும் அவரோட குருவும் ஆத்மார்த்தமா சம்பாஷணையில இருக்கிற நேரத்துல, நீங்க எப்படிக் குறுக்கிடலாம்? பாதிப் பேச்சுல, பெரியவாளைப் பிரிச்சு எப்படி சென்னைக்குக் கூட்டிட்டுப் போகலாம்? இப்ப… அவங்க சம்பாஷணையை நிறுத்திட்டாங்க. இப்போ வண்டியை இழுத்துப் பாருங்க, நல்லாவே நகரும்’னார். // - அதுதான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளின் மகிமை.

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  26. அன்பின் வைகோ - காலைல பாப்ப்போம் - பெரியவாளின் தீர்க்க தரிசனம் - அருமை அருமை . குல்பர்காவில் நடந்த நிகழ்வு அருமை .
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
    ஹர் ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
    ஹர் ஹர சங்க்ர ஜெய ஜெய சங்கர
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
    ஹர் ஹர ச்ங்கர ஜெய ஜெய சங்கர
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர்
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  27. அன்பின் வை.கோ

    வெறும் சப்தத்திற்கும் வேத சப்தத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அழகாக அருமையாக விவரித்த ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவா வணக்கத்திற்கு உரியவா தான்.

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  28. அருமையான நிகழ்வுகள். பெரியவாளின் கருணையே கருணை.

    பதிலளிநீக்கு
  29. ஐந்து வகைக் குளியல்கள்
    சப்தத்திற்கும் மந்திரத்திற்கும் உள்ள வித்தியாசம்
    முதலானவைகளை எளிமையாகச் சொல்லிச் சென்றவிதம்
    அற்புதம்.அறியாதன அறிந்தோம்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  30. ஐந்துவகைக்குளியல் பற்றி விசேஷமான செய்தி. அருமையாக இருக்கிறது. தீக்ஷிதரின் பெண் கலியாணத்திற்கு நாளை பார்ப்போம் என்று சொல்லி அருளியது, முணுமுணுப்பிற்கு அர்த்தம் கூறியது எல்லாம் எத்தனை விசேஷமான செய்திகள்.
    அவரின் கருணை ஆச்சர்யமானது. அன்புடன்

    பதிலளிநீக்கு
  31. அத்தனை குளிப்புகளை இன்று தான் அறிந்தேன் மிக்க நன்றி.
    உலகத்தில் தெரியாதவைகள் இன்னும் ஏராளம் உள்ளதே!!!!!
    இறையாசி நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  32. சிலிர்க்கச் செய்யும் நிகழ்வுகள்...

    வரும் புத்தாண்டில் தாங்கள் மேலும் பல வளம் பெற பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  33. எதை செய்தாலும் அந்த செயலை ஈஸ்வரனோடு தொடர்புபடுத்தி செய்வது நம்முடைய பாரம்பரியம்.
    அதை பெரியவா தெளிவாக விளக்கியுள்ளார்.
    பதிவுக்கு நன்றிvgk

    பதிலளிநீக்கு
  34. ஐந்துவகை ஸ்நானம் பற்றி அறிந்து கொண்டேன். மேலும் பெரியவர் பற்றிய சில செய்திகள் பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  35. ஐந்துவகை ஸ்நானங்கள் பற்றிய விளக்கங்கள் நன்றாக இருந்தன
    //அவரோட அன்பாலதான் எல்லாமே இயங்கறது; மஹா பெரியவா, கருணாமூர்த்தியாச்சே!// பட்டு சாஸ்திரிக்கு மட்டுமில்லை; எங்களுக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  36. குளியல் விளக்கங்கள் நன்றாக இருந்தன. பட்டு சாஸ்திரிகள் கைங்கரியமும் சிலிர்க்க வைத்தது. பெண் பிழைத்ததும் அதிசயமான நிகழ்வே.

    பதிலளிநீக்கு
  37. அன்பு கோபு சார், பெரியவர் பற்றிப்பல விஷயங்கள் உங்கள் பதிவு மூலம் தெரியவருகிறது. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  38. அரிய தகவல்கள்! ஆச்சரியம் அளிக்கின்றன!
    //பரமாசார்யாளின் பாததூளி பாக்யம் எத்துணை உயர்ந்ததாக இருக்கும் என்று கூறவும் வேண்டுமோ?// உண்மை! நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  39. பெரியவா பற்றி படிக்க படிக்க நாமம் தித்திக்கிறது
    நன்றி பல பல.

    பதிலளிநீக்கு
  40. அவன் என்ன சொன்னான் என்று புரியாத

    முணுமுணுப்புக்கு, அது என்ன வார்த்தை, யாரைப்பற்றி

    என்று தெரியாமல் இருக்கும்போது, அந்த முணுமுணுப்பு

    சப்தம் உன்னிடம் ஒரு ரியாக்ஷன் ஏற்படுத்துமானால்,

    வழிவழியாக பரம்பரையாக வந்த வேத முணுமுணுப்பு,

    அந்த அட்மாஸ்ஃபியரில் எத்தகைய உயர்ந்த ரியாக்ஷன்

    ஏற்படுத்தும் என்பது உனக்குக் காலையில் ஞாபகமில்லை

    போலிருக்கு" எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்.வேதத்தின் பெருமையை சொல்லவும் முடியுமோ?அந்த வேதத்தின்ஒலிதான் நம்மை வாழவைத்துக் கொண்டிருக்கிறது என்பதை எத்தனை அழகாகச் சொல்லியிருக்கிறார் மகா பெரியவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Radha Balu March 1, 2014 at 10:25 PM

      //வேதத்தின் பெருமையை சொல்லவும் முடியுமோ?அந்த வேதத்தின்ஒலிதான் நம்மை வாழவைத்துக் கொண்டிருக்கிறது என்பதை எத்தனை அழகாகச் சொல்லியிருக்கிறார் மகா பெரியவர்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா வேதத்தின் ஒலியின் மஹிமையைப்பற்றிச் சொன்னதை அழகாக திரும்பவும் எடுத்துச்சொல்லி தாங்கள் சந்தோஷப்பட்டுக்கொண்டதோடு, இவற்றையெல்லாம் திரட்டிக்கொடுத்த என்னையும் உற்சாகப்படுத்தியுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  41. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : அ.பாண்டியன் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : அரும்புகள் மலரட்டும்

    வலைச்சர தள இணைப்பு : சூரியனுக்கு டார்ச் அடிச்சு பார்த்திடலாமா!

    பதிலளிநீக்கு
  42. வணக்கம்
    ஐயா

    இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  43. ஐந்து வகை ஸ்நானம் அறிந்து கொண்டோம்.

    பதிலளிநீக்கு
  44. ஸ்நானம் செய்வதில்கூட இவ்வளவு விஷயம் இருக்கா. தெரியாதன தெரிந்துகொள்ள முடிந்தது

    பதிலளிநீக்கு

  45. ஸ்நானத்தில் இத்தனை வகைகளா? விஷயங்களா? - அருமை.

    // ஒண்ணு மட்டும் சத்தியம்! ‘இன்னது நடக்கணும்’னு நாம சங்கல்பம் பண்ணிண்டாப் போதும்; அவரே நடத்தி வெச்சுடுவார். //

    கண்கூடா பாத்துண்டிருக்கோமே.

    // அங்கிருந்தே பெரியவா அவளை ரக்ஷித்திருக்கிறார். காலை பெரியவா தீக்ஷதரை அழைத்தபோது அவள் ஆச்சர்யமான வகையில் பரிபூர்ணமாக குணமடைந்திருந்தா.//

    ஆச்சரியமும், அதிசயமும் நமக்குத்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya September 24, 2015 at 5:15 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஜெயா.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      நீக்கு
  46. இன்னாவோ புச்சு புச்சா என்னலாமோ சொல்லினிங்க குளிக்கயில கூடவா மந்திரமெல்லா சொல்லுவாக.

    பதிலளிநீக்கு
  47. ஸ்நான மந்திரங்கள் தெரிந்துகொள்ள முடிந்தது. பெரியவா பத்தி தினமும் புது புது விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது.

    பதிலளிநீக்கு
  48. பெரியவர் குறித்த தகவல்கள் தங்கச்சுரங்கம்..

    பதிலளிநீக்கு
  49. "மஹா பெரியவாளும் அவரோட குருவும் ஆத்மார்த்தமா சம்பாஷணையில இருக்கிற நேரத்துல, நீங்க எப்படிக் குறுக்கிடலாம்? பாதிப் பேச்சுல, பெரியவாளைப் பிரிச்சு எப்படி சென்னைக்குக் கூட்டிட்டுப் போகலாம்? இப்ப… அவங்க சம்பாஷணையை நிறுத்திட்டாங்க. இப்போ வண்டியை இழுத்துப் பாருங்க, நல்லாவே நகரும்’னார்" - விவசாயிக்குத்தான் எத்தகைய ப்ரேமை, பக்தி, அந்த பக்தி கொடுத்த ஞானம்.

    "பெரியவா அவளை ரக்ஷித்திருக்கிறார்" - முக்காலம் அறிந்தவரல்லவா..

    "வெறும் சப்தத்திற்கு, வேத சப்தத்திற்கு உள்ள மதிப்பை" - நல்ல எடுத்துக்காட்டு, நமக்குப் புரியும்படியாக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'நெல்லைத் தமிழன் September 27, 2016 at 6:10 PM

      வாங்கோ, வணக்கம். தங்கள் அன்பான வருகைக்கும், ஆழ்ந்த வாசிப்புடன் கூடிய அருமையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு

  50. https://www.facebook.com/groups/396189224217111/permalink/857084324794263/

    இந்தப்பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புள்ள ஆச்சி அவர்களால், தனது பேஸ்புக் பக்கத்தில் இன்று 8.3.2020 வெளியிட்டுள்ளது. மேற்படி இணைப்பினில் காணலாம். இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    https://www.facebook.com/groups/396189224217111/permalink/857084324794263/

    பதிலளிநீக்கு