என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 23 பிப்ரவரி, 2013

*குலதெய்வமே உன்னைக் கொண்டாடுவேன்!*

2
=
ஸ்ரீராமஜயம்

குலதெய்வமே 
உன்னைக் கொண்டாடுவேன்!


சென்ற என் மூன்று பதிவுகளில் “என் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார்” என்ற தலைப்பில் என் வீட்டைப்பற்றி கொஞ்சம் எழுதியிருந்தேன்.

எவ்வளவு நேரம் வீட்டுக்குள்ளேயே ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது? காலாற நடந்து சென்று அருகே உள்ள கோயில் குளம் எனப்பார்த்து மகிழ வேண்டாமா?  

எங்களின் குலதெய்வங்கள் மொத்தம் மூன்று. என் முன்னோர்கள் சிறப்பாக வழிபட்ட தெய்வங்கள் இவை.  

[1] குணசீலம் 
[2] மாந்துறை 
[3]  சமயபுரம்

வீட்டில் புதிதாகக் குழந்தைகள் பிறந்தால் முடிகாணிக்கை செலுத்த வேண்டியதும் இதே வரிசைக் கிரமப்படி தான் செய்வது வழக்கம். 




குணசீலம் பெருமாள் கோயில் 


மாந்துறை சிவன் கோயில்


மாந்துறை காவல் தெய்வமான கருப்பர் கோயில்


சமயபுரம் மஹமாயீ கோயில்




1. குணசீலம் : [திருச்சி To சேலம் மார்க்கத்தில் திருச்சியிலிருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள முக்கொம்பு பக்கத்தில் உள்ளது]

குணசீலம் “ஸ்ரீ அலமேலு மங்கா ஸமேத ஸ்ரீ ப்ரஸன்ன வேங்கடாசலபதி” திருக்கோயில். 

முதல் நாள் மாலை ஸ்வாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரமும், மறுநாள் காலை திருமஞ்சனமும் செய்து வருவது வழக்கம். 

வருஷத்தில் ஒரு நாள் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம அகண்ட பாராயணமும் நடைபெறும். 

அன்று பால் குடம் ஏந்திப்போய், அகண்ட பாராயணத்திலும் கலந்து கொள்வது உண்டு. 

லக்ஷக்கணக்கான ஆவர்த்திகள் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம ஜபம், பலராலும் சேர்ந்து உச்சரிக்கப்பட்டு, நாள் பூராவும் இரவு பகல் எந்நேரமுமாக நடைபெற்று வரும்.   

அதுபோல வருடத்தில் ஒரு நாள் நடைபெறும் தேர் திருவிழாவும், அன்றைய தினம் நடைபெறும் மிகப்பெரிய அன்னதான விருந்தும் மிகவும் குறிப்பிடத்தக்கவைகளாகும்.  

இந்தக்கோயிலின் சிறப்புகள் பற்றி மேலும் பல விஷயங்கள் அறிய, நம் தெய்வீகப்பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி  [மணிராஜ்] அவர்கள் எழுதியுள்ள பதிவுக்குச் சென்று பார்த்து மகிழுங்கள்.

இணைப்பு இதோ: 

http://jaghamani.blogspot.com/2011/11/blog-post_05.html  
[தலைப்பு: ”குணக்குன்று குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி” ]

இந்தக்கோயிலுக்கு வருடம் ஒருமுறையாவது சென்று வழிபட்டு வருவது எங்கள் வழக்கம். இந்தக்கோயிலில் குடிகொண்டுள்ள தெய்வத்தின் பிரதிநிதி போல என் வீட்டருகே ஒரு கோயில் அமைந்துள்ளது என்பதில் எத்தனை மகிழ்ச்சி. இதோ இங்கே பாருங்கள்:





ஸ்ரீகிருஷ்ணன் 
என்கிற 
ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப்பெருமாள் திருக்கோயில்
திருச்சி - 2


பெருமாள் மூலவர் சந்நதி


2. மாந்துறை : [திருச்சி To லால்குடி மார்க்கத்தில் திருச்சியிலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அருமையான சிவன் கோயில். இதன் முக்கியமான காவல் தெய்வம் கருப்பர் - ஸ்ரீ கருப்பண்ணஸ்வாமி ]

மாந்துறை “ஸ்ரீ பாலாம்பிகா ஸமேத ஸ்ரீ ஆம்ரவனேஸ்வரர் ” திருக்கோயில் [வெகு அழகான சிவாலயம், அந்த அம்மனும் அழகோ அழகு தான்].

இந்தக்கோயிலின் சிறப்புகள் பற்றி மேலும் பல விஷயங்கள் அறிய, நம் தெய்வீகப்பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி  [மணிராஜ்] அவர்கள் எழுதியுள்ள பதிவுக்குச் சென்று பார்த்து மகிழுங்கள்.

இணைப்பு இதோ:
http://jaghamani.blogspot.com/2011_07_01_archive.html 

[தலைப்பு: ”ஆதரவு அளிக்கும் ஆம்ரவனேஸ்வரர்” ] 

இந்தக்கோயிலுக்கும் வருடம் ஒருமுறையாவது சென்று வழிபட்டு வருவது எங்கள் வழக்கம். ஆடி வெள்ளி + தை வெள்ளி போன்ற நாட்களில், அம்பாள் சந்நதியில் மாவிளக்கு போட்டுவிட்டு, கருப்பர் உள்பட ஐந்து சந்நதிகளில் விசேஷ அர்ச்சனைகள் செய்து விட்டு மெயின் ரோட்டருகே உள்ள பிள்ளையாருக்கு சதிர் தேங்காய் உடைத்து விட்டு வருவோம்.  

எப்போதாவது, கும்பங்கள் பலவும் வைத்து, வேதவித்துக்களை வரவழைத்து,  ஸ்ரீருத்ர மஹன்யாச பாராயணம் செய்யச்சொல்லி, சிறப்பு அபிஷேகங்களும் செய்து விட்டு வருவதும் உண்டு.

இந்தக்கோயிலில் குடிகொண்டுள்ள சிவன் + அம்பாள் + கருப்பர் போன்ற தெய்வங்களின் பிரதிநிதிகள் போலவும், என் வீட்டருகே  கோயில்கள் அமைந்துள்ளன என்பதில் எத்தனை மகிழ்ச்சி.  இதோ இங்கே பாருங்கள்:





திருச்சி வடக்கு ஆண்டார் தெரு மூலையில் 
வடக்கு நோக்கியபடி 
[ராமா கஃபேக்கு மிக அருகில்]
அமைந்துள்ள கருப்பர் கோயில், 
திருச்சி-2 


ஸ்ரீகருப்பண்ண ஸ்வாமி சந்நதி



இதோ மேலும் ஓர் சப்பாணிக்கருப்பர்
திருச்சி-2 
வாணப்பட்டரைப் பகுதியில் 
தெப்பக்குளம் பர்மா பஜாரை ஒட்டி
கிழக்கு நோக்கி கோயில் கொண்டுள்ளார்.



ஸ்ரீ ஆனந்தவல்லி ஸமேத ஸ்ரீ நாகநாதர்
மிகப்பிரபலமான சிவன் கோயில்


ஸ்ரீ நாகநாதர் சந்நதி



ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் சந்நதி


3. சமயபுரம்: [திருச்சி To சென்னை மார்க்கத்தில் திருச்சியிலிருந்து 20  கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அருமையான மிகப் பிரபலமான சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில்.]  

மஹாமாயை, மஹமாயீ, மாரியாத்தா என்றெல்லாம் சொல்லி, அனைத்துத் தரப்பு  மக்களாலும் கொண்டாடப்படும் திவ்யமான க்ஷேத்ரம் இது.  

இந்தக்கோயிலின் சிறப்புகள் பற்றி மேலும் பல விஷயங்கள் அறிய, நம் தெய்வீகப்பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி [மணிராஜ்] அவர்கள் எழுதியுள்ள பதிவுக்குச் சென்று பார்த்து மகிழுங்கள்.

இணைப்பு இதோ:
 http://jaghamani.blogspot.com/2011/05/blog-post_05.html

[தலைப்பு:  ”சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள்..” ]

இந்தக்கோயிலுக்கும் வருடம் ஒருமுறையாவது சென்று வழிபட்டு வருவது எங்கள் வழக்கம்.  ஒரே ஒரு முறை இந்தக்கோயிலின் தங்கத் தேரினை எங்கள் குடும்பத்தினர் எல்லோரும் சேர்ந்து இழுக்கும் பாக்யம் பெற்றோம்.

இந்தக்கோயிலில் குடிகொண்டுள்ள தெய்வத்தின் பிரதிநிதி போலவும் என் வீட்டருகே ஒரு கோயில் அமைந்துள்ளது என்பதில் தான் எத்தனை மகிழ்ச்சி. இதோ இங்கே பாருங்கள்:




திருச்சி டவுன் வாணப்பட்டரை 
ஸ்ரீ மாரியம்மன் கோயில் கோபுரம்


வாணப்பட்டரை ஸ்ரீ மஹமாயீ அம்பாள் சந்நதி
[அபிஷேக அலங்காரங்களுக்கு முன் எடுக்கப்பட்ட படம்]


^17.07.2018 அன்று எடுத்து இணைக்கப்பட்ட படம்^


என் வீட்டை விட்டு காலாற நடந்து, திருச்சி தாயுமானவர் கோயிலுக்குச் சொந்தமான நந்திகேஸ்வரரையும், மிக அழகான தெப்பக்குளத்தையும், அதன் மேற்குக்கரையில் அமைந்துள்ள வாணப்பட்டரை ஸ்ரீ மாரியம்மனையும் ஒரு சுற்று சுற்றி விட்டு வந்தாலே போதும். இந்திரலோகம் சென்று வந்தது போல மனதுக்கு ஓர் உற்சாகம் பிறந்திடும். 


திருச்சி டவுன்  தெப்பக்குளம்
வடக்குக்கரையிலிருந்து 
இரவினில் எடுத்த படம்


ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் இந்தத்தெப்பக்குளத்தில் நடைபெறும் ஸ்ரீ தாயுமானவர் + ஸ்ரீ மட்டுவர் குழலம்மை தெப்ப உற்சவம், கண்கொள்ளாக் காட்சியாகும்.  




தாயுமானவரை நோக்கி அமர்ந்திருக்கும் 
மஹா நந்திகேஸ்வரர்.

நந்திக்கு மட்டுமே இங்கே ஒரு தனிக்கோயில் 
அமைந்துள்ளதால்  திருச்சி மலைக்கோட்டையைச்சுற்றி 
அமைந்துள்ள தேரோடும் வீதிகளில் ஒன்றான இதற்கு 
”நந்தி கோயில் தெரு” என்றே பெயர் உள்ளது.

பிரதோஷ தினங்களில் சந்தனக்காப்புடன் 
இந்த நந்தியானவர் ஜொலிப்பார்.
அந்த அழகினைக்காண நமக்கு 
கோடி கண்கள் வேண்டும்.


என் வீட்டிலிருந்து கிளம்பி காலாற 10 நிமிடங்கள் நடந்தாலே போதும் மேலே காட்டியுள்ள அனைத்து இடங்களுக்கும் சென்றிடலாம்.

எல்லாவற்றையும் நிறுத்தி நிதானமாக தரிஸித்து விட்டு திரும்ப வீடு வந்து சேர மொத்தமே ஒரு மணி நேரம் மட்டுமே ஆகும்.

என் எல்லாக் குலதெய்வங்களையும் ஒருங்கே கும்பிட்டு வந்தது போல ஓர் மன நிம்மதி ஏற்பட்டு விடும்.

வீடு அமைந்தது ஓர் ராசியென்றால் இவ்வாறு என் மூன்று குல தெய்வங்களின் பிரதிநிதிகள் போலவே எல்லாக் கோயில்களும் என் வீட்டுக்கு மிக அருகிலேயே அமைந்துள்ளது, நினைக்கவே மிகவும் வியப்பளிப்பதாக உள்ளது அல்லவா!

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம், யானை முன்னே நடந்து வர,   அதன் பின்னே பிள்ளையார் தேர், தாயுமானவர் தேர், மட்டுவர் குழலம்மை தேர் என மூன்று தனித்தனித் தேர்களும், மற்றொரு நாள் வாணப்பட்டரை ஸ்ரீ மஹமாயீ தேரும் எங்கள் தெருவழியாகவே செல்லும்.   அவை மிகவும் அற்புதமான காட்சிகளாகும்.

நான் எழுதிய என் முதல் சிறுகதையான “தாயுமானவள்” என்னும் கதையின் முதல் பகுதியில் இந்த வாணப்பட்டரை ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் வருகை பற்றிய வர்ணனைகள் இடம் பெற்றிருக்கும்.

இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2011/12/1-of-3.html






திருச்சி நகரின் மையப்பகுதியான MAIN GUARD GATE இல் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் தோற்றம்.  இதையும் என்னால் என் வீட்டு ஜன்னல் கம்பிகள் மூலம் காணமுடிகிறது என்பதும், என் வீட்டுக்கு மேலும் ஓர் சிறப்பாகும்.


இந்த ஆலயத்தின் சிறப்புகள் பற்றி மேலும் பல விஷயங்கள் அறிய, நம் திருச்சி திரு. தி. தமிழ் இள்ங்கோ ஐயா [எனது எண்ணங்கள்] அவர்கள் எழுதியுள்ள பதிவுக்குச் சென்று பார்த்து மகிழுங்கள்.

இணைப்பு இதோ:

http://tthamizhelango.blogspot.com/2012/09/st-lourdes-church_9.html

[தலைப்பு: ”திருச்சி: புனித லூர்து அன்னை ஆலயம் (St. Lourdes Church)”]



  







சூடான 
செய்திகளும் படங்களும்



இன்று 24.02.2013 மாசி மகத் திருநாளை ஒட்டி 
ஸ்ரீ ஆனந்தவல்லி + ஸ்ரீ நாகநாதர்
கோயில் திருத்தேர்கள் 
சற்று நேரம் முன்பு 
பவனி வந்த காட்சிகள்
என் வீட்டு ஜன்னல் கம்பிகள் மூலம் 
படமாக்கித் தரப்பட்டுள்ளன. 



என்றும் அன்புடன் தங்கள்,
வை. கோபாலகிருஷ்ணன்


152 கருத்துகள்:


  1. திரு VGK அவர்களுக்கு வணக்கம்! உங்கள் பதிவினை படித்தேன்! அதில் “ திருச்சி: புனித லூர்து அன்னை ஆலயம் (St. Lourdes Church) http://tthamizhelango.blogspot.com/2012/09/st-lourdes-church_9.html என்ற பதிவினை எடுத்துக் காட்டியதற்கு நன்றி!
    மீண்டும் வருவேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.தமிழ் இளங்கோ February 23, 2013 at 7:26 AM

      வாருங்கள் ஐயா, வணக்கம்.

      //திரு VGK அவர்களுக்கு வணக்கம்! உங்கள் பதிவினை படித்தேன்! அதில் “ திருச்சி: புனித லூர்து அன்னை ஆலயம் (St. Lourdes Church) http://tthamizhelango.blogspot.com/2012/09/st-lourdes-church_9.html என்ற பதிவினை எடுத்துக் காட்டியதற்கு நன்றி! //

      சந்தோஷம் ஐயா. இந்த ஆலய கோபுரத்தின் உச்சிப்பகுதி என் வீட்டின் மேற்குப்புறத்தில் உள்ள ஒரு தனி அறையின் ஜன்னல் வழியே மிக நன்றாகத் தெரியுது ஐயா.

      //மீண்டும் வருவேன்!//

      ஆகட்டும் ஐயா, வாருங்கள் ஐயா.

      இங்கு இன்று தங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றி, ஐயா.

      நீக்கு
  2. வீடு அமைந்தது ஓர் ராசியென்றால் இவ்வாறு என் மூன்று குல தெய்வங்களின் பிரதிநிதிகள் போலவே எல்லாக் கோயில்களும் என் வீட்டுக்கு மிக அருகிலேயே அமைந்துள்ளது, நினைக்கவே மிகவும் வியப்பளிப்பதாக உள்ளது அல்லவா!..

    குலதெய்வங்களைக் கொண்டாடும் குடும்பங்கள் வளர்ச்சியுற்று ஜொலிப்புடன் திகழ்வதை வாழும் உதாரணமாக பகிர்ந்து பாடமாக்கியதற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி February 23, 2013 at 7:56 AM

      வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ!!!!! வணக்கம்..

      *****வீடு அமைந்தது ஓர் ராசியென்றால் இவ்வாறு என் மூன்று குல தெய்வங்களின் பிரதிநிதிகள் போலவே எல்லாக் கோயில்களும் என் வீட்டுக்கு மிக அருகிலேயே அமைந்துள்ளது, நினைக்கவே மிகவும் வியப்பளிப்பதாக உள்ளது அல்லவா!..*****

      //குலதெய்வங்களைக் கொண்டாடும் குடும்பங்கள் வளர்ச்சியுற்று ஜொலிப்புடன் திகழ்வதை வாழும் உதாரணமாக பகிர்ந்து பாடமாக்கியதற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் ஐயா...//

      தங்களின் அன்பான வருகையும் ஆச்சர்யமான கருத்துக்களும் மனதுக்கு மிகவும் ஆறுதலாக உள்ளன. சந்தோஷம்.

      நீக்கு
  3. எமது பதிவுகள் சிலவற்றை எடுத்துக்காட்டி
    சிறப்பித்ததற்கு இனிய நன்றிகள் ஐயா...

    http://jaghamani.blogspot.com/2011/11/blog-post_05.html
    [தலைப்பு: ”குணக்குன்று குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி” ]

    http://jaghamani.blogspot.com/2011_07_01_archive.html
    [தலைப்பு: ”ஆதரவு அளிக்கும் ஆம்ரவனேஸ்வரர்” ]

    http://jaghamani.blogspot.com/2011/05/blog-post_05.html
    [தலைப்பு: ”சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள்..” ]

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி February 23, 2013 at 8:00 AM

      //எமது பதிவுகள் சிலவற்றை எடுத்துக்காட்டி சிறப்பித்ததற்கு இனிய நன்றிகள் ஐயா...//

      எங்கள் குலதெய்வங்கள் பற்றி, சிறப்பித்து அழகாக எழுதி, அவற்றிற்கான படங்களையும் இணைத்துக்கொடுத்துள்ள தங்களுக்குத்தான் நான் முதலில் நன்றி சொல்ல வேண்டும்.

      இந்த மூன்று கோயில்கள் மட்டுமல்லாமல் எங்கள் இஷ்ட தெய்வமான வைத்தீஸ்வரன் கோயில் பற்றியும் ப்ரும்மாண்டமாக இரண்டு பதிவுகள் கொடுத்திருந்தீர்கள்.

      இதோ அதற்கான இணைப்புகள்:

      http://jaghamani.blogspot.com/2011/11/blog-post_15.html
      [தலைப்பு: வையகம் காக்கும் ஸ்ரீவைத்யநாதர்]

      http://jaghamani.blogspot.com/2011/11/blog-post_16.html
      [தலைப்பு: செல்வமுத்துக்குமாரர்]

      இந்தத் தங்களின் அழகான பதிவுகளையெல்லாம் படித்த நாங்கள் [எங்கள் குடும்பத்தினர்] அத்தனைபேரும் எவ்வளவு சந்தோஷப்பட்டுக்கொண்டோம் தெரியுமா!

      வெளியூர் + வெளிநாடுகளில் உள்ள எங்கள் உறவினர்கள்+ பந்துக்கள் + தாயாதி பங்காளி என பலருக்கும், இதன் லிங்க் அனுப்பினோமாக்கும்!!

      எங்களுக்குள் நாங்களே வைத்துக்கொண்டுள்ள ஒருசில சுயக்கட்டுப்பாடுகள் காரணமாக, என்னால் நான் நினைத்தாலும், எங்கள் குலதெய்வக்கோயிலின் காவல்தெய்வமான மாந்துறைக் கருப்பரையெல்லாம் புகைப்படமாகவே எடுக்கவும் முடியாது.

      நீங்கள் என்றால் இதுபோலச்செய்யலாம்.

      அதனாலும் உங்களுக்கு நாங்கள் தான் நன்றி கூற வேண்டியுள்ளது.

      தங்களுக்கு என் ஒரே பதில்

      ’குலதெய்வமே உன்னைக் கொண்டாடுவேன்!’ ;)))))

      நீக்கு
    2. @@@//எங்களுக்குள் நாங்களே வைத்துக்கொண்டுள்ள ஒருசில சுயக்கட்டுப்பாடுகள் காரணமாக, என்னால் நான் நினைத்தாலும், எங்கள் குலதெய்வக்கோயிலின் காவல்தெய்வமான மாந்துறைக் கருப்பரையெல்லாம் புகைப்படமாகவே எடுக்கவும் முடியாது.//

      நாங்கள் சிறு வயதில் மார்கழி மாதம் முழுவதும் திருவரங்கத்தில் ஒரு மடத்தில் தங்கியிருந்து அரங்கனைச் சேவிப்பது வழக்கம் ..

      அப்போது ஒரு பெரியவர் தங்கள் குலதெய்வம் என்று சொல்லி மாந்துறைக்கருப்பர் கோவிலுக்கு அழைத்துச்சென்று குறி சொல்லுதல் ,அங்கே இருக்கும் மண் பத்திரப்படுத்துதல் புகைப்படம் எடுக்கக்கூடாத கட்டுப்பாடுகள் மற்றும் பல சுவாரஷ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டது பசுமரத்தாணிபோல் பதிந்துவிட்டது ..

      அப்போது நான் பதிவராக இல்லாததால் படமெல்லாம் எடுக்கவில்லை ..எல்லாம் வலை உலாவில் கிடைத்ததுதான் ..

      எழுதி வைத்துக்கொண்டு பப்ளிஷ் செய்தால் தவறாகுமோ என்று தயங்கிக்கொண்டிருந்த அதே வேளை அசரீரி போல தாங்களும் தங்கள் குலதெய்வம் என்று தெரிவித்ததால் உடனே பப்ளிஷ் செய்தேன் ..
      உற்சாகமளித்த தங்களுக்கு நன்றிகள் ஐயா..

      நீக்கு
    3. இராஜராஜேஸ்வரி February 24, 2013 at 8:58 PM

      @@@//எங்களுக்குள் நாங்களே வைத்துக்கொண்டுள்ள ஒருசில சுயக்கட்டுப்பாடுகள் காரணமாக, என்னால் நான் நினைத்தாலும், எங்கள் குலதெய்வக்கோயிலின் காவல்தெய்வமான மாந்துறைக் கருப்பரையெல்லாம் புகைப்படமாகவே எடுக்கவும் முடியாது.//

      //நாங்கள் சிறு வயதில் மார்கழி மாதம் முழுவதும் திருவரங்கத்தில் ஒரு மடத்தில் தங்கியிருந்து அரங்கனைச் சேவிப்பது வழக்கம் ..//

      கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.

      //அப்போது ஒரு பெரியவர் தங்கள் குலதெய்வம் என்று சொல்லி மாந்துறைக்கருப்பர் கோவிலுக்கு அழைத்துச்சென்று குறி சொல்லுதல் ,அங்கே இருக்கும் மண் பத்திரப்படுத்துதல் புகைப்படம் எடுக்கக்கூடாத கட்டுப்பாடுகள் மற்றும் பல சுவாரஷ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டது பசுமரத்தாணிபோல் பதிந்துவிட்டது ..//

      பெரியவராக வந்து உங்களை மாந்துறை கருப்பர் கோயிலுக்கு அன்று அழைத்துச்சென்றவர், அந்தக்கோயிலில் குடிகொண்டுள்ள தெய்வமாகவே கூட இருக்கலாம். ஆச்சர்யம் ஏதும் இல்லை.

      எப்படியோ தாங்கள் அந்தக்கோயிலுக்கு அன்று அவருடன் விஜயம் செய்திருப்பது கேட்க, எனக்கும் சந்தோஷமாகவே உள்ளது.

      //அப்போது நான் பதிவராக இல்லாததால் படமெல்லாம் எடுக்கவில்லை ..எல்லாம் வலை உலாவில் கிடைத்ததுதான் ..//

      தாங்கள் அங்கு படம் எடுக்காமலேயே வந்ததும் நல்லது தான்.

      //எழுதி வைத்துக்கொண்டு பப்ளிஷ் செய்தால் தவறாகுமோ என்று தயங்கிக்கொண்டிருந்த அதே வேளை அசரீரி போல தாங்களும் தங்கள் குலதெய்வம் என்று தெரிவித்ததால் உடனே பப்ளிஷ் செய்தேன் ..//

      நான் தங்களிடம் கேட்டுக்கொண்டவுடனேயே பப்ளிஷ் செய்ததும் நானே, அன்று மிகவும் வியந்து தான் போனேன்.

      //உற்சாகமளித்த தங்களுக்கு நன்றிகள் ஐயா..//

      நடந்தவை அனைத்தும் நம் கையில் இல்லை. எல்லாமே ஈஸ்வர சங்கல்பம் மட்டுமே.

      தங்களின் மீண்டும் வருகைக்கும், தகுந்த விளக்கங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
    4. http://kavinaya.blogspot.in/2011/06/8.html

      இந்த இணைப்பில் சகோதரி கவிநயா அவர்கள் நம்மையும் அழைத்துக்கொண்டு வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் அற்புதத்தை தரிசிக்க்லாம் ஐயா.

      //வைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 8
      முந்தைய பகுதிகள்:
      முதல் பகுதி; இரண்டாம் பகுதி; மூன்றாம் பகுதி;
      நான்காம் பகுதி; ஐந்தாம் பகுதி; ஆறாம் பகுதி; ஏழாம் பகுதி;///

      நீக்கு
    5. இராஜராஜேஸ்வரி February 25, 2013 at 3:54 AM

      //http://kavinaya.blogspot.in/2011/06/8.html

      இந்த இணைப்பில் சகோதரி கவிநயா அவர்கள் நம்மையும் அழைத்துக்கொண்டு வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் அற்புதத்தை தரிசிக்க்லாம் ஐயா.

      //வைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 8
      முந்தைய பகுதிகள்:
      முதல் பகுதி; இரண்டாம் பகுதி; மூன்றாம் பகுதி;
      நான்காம் பகுதி; ஐந்தாம் பகுதி; ஆறாம் பகுதி; ஏழாம் பகுதி;//

      தகவலுக்கு மிக்க நன்றி, இப்போது போய் மேலெழுந்தவாரியாகப் பார்த்தேன்.

      மீண்டும் பிறகு போய் முழுவதும் படித்துவிடுகிறேன்.

      நீக்கு
  4. வீடு அமைந்தது ஓர் ராசியென்றால் இவ்வாறு என் மூன்று குல தெய்வங்களின் பிரதிநிதிகள் போலவே எல்லாக் கோயில்களும் என் வீட்டுக்கு மிக அருகிலேயே அமைந்துள்ளது, நினைக்கவே மிகவும் வியப்பளிப்பதாக உள்ளது அல்லவா!

    வியப்பு ஒன்றும் இல்லை ஐயா..
    குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பது போல கொண்டாடும் குணம் கொண்டவர்களின் அருகில் தேடிவந்து தங்கள் வருகையை எதிர்பார்த்து பல தலைமுறைகள் முன்பாகவே கோவில்கொண்டிருப்பார்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி February 23, 2013 at 8:04 AM

      *****வீடு அமைந்தது ஓர் ராசியென்றால் இவ்வாறு என் மூன்று குல தெய்வங்களின் பிரதிநிதிகள் போலவே எல்லாக் கோயில்களும் என் வீட்டுக்கு மிக அருகிலேயே அமைந்துள்ளது, நினைக்கவே மிகவும் வியப்பளிப்பதாக உள்ளது அல்லவா!*****

      //வியப்பு ஒன்றும் இல்லை ஐயா.. குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பது போல கொண்டாடும் குணம் கொண்டவர்களின் அருகில் தேடிவந்து தங்கள் வருகையை எதிர்பார்த்து பல தலைமுறைகள் முன்பாகவே கோவில்கொண்டிருப்பார்கள்..//

      அம்பாள் போல ... அசரீரி போல வெகு அழகாகச் சொல்கிறீர்கள்.

      கேட்கவே மிகவும் சந்தோஷமாகவும், ஆறுதலாகவும் உள்ளது. ;)))))

      நீக்கு
  5. என் வீட்டை விட்டு காலாற நடந்து, திருச்சி தாயுமானவர் கோயிலுக்குச் சொந்தமான நந்திகேஸ்வரரையும், மிக அழகான தெப்பக்குளத்தையும், அதன் மேற்குக்கரையில் அமைந்துள்ள வாணப்பட்டரை ஸ்ரீ மாரியம்மனையும் ஒரு சுற்று சுற்றி விட்டு வந்தாலே போதும். இந்திரலோகம் சென்று வந்தது போல மனதுக்கு ஓர் உற்சாகம் பிறந்திடும்.

    இந்திரலோக காட்சிகளை
    அருமையாக காட்சிப்படுத்திருப்பதற்குப் பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரிFebruary 23, 2013 at 8:06 AM

      *****என் வீட்டை விட்டு காலாற நடந்து, திருச்சி தாயுமானவர் கோயிலுக்குச் சொந்தமான நந்திகேஸ்வரரையும், மிக அழகான தெப்பக்குளத்தையும், அதன் மேற்குக்கரையில் அமைந்துள்ள வாணப்பட்டரை ஸ்ரீ மாரியம்மனையும் ஒரு சுற்று சுற்றி விட்டு வந்தாலே போதும். இந்திரலோகம் சென்று வந்தது போல மனதுக்கு ஓர் உற்சாகம் பிறந்திடும்.*****

      //இந்திரலோக காட்சிகளை அருமையாக காட்சிப்படுத்திருப்பதற்குப் பாராட்டுக்கள்...//

      தங்களின் அன்பான வருகையும், அழகழகான ஆதரவான கருத்துக்களும் மனதுக்கு மிகவும் ஹிதமாக உள்ளன. தங்களின் பாராட்டுக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. கவியாழி கண்ணதாசன் February 23, 2013 at 8:32 AM

      வாருங்கள், வணக்கம்.

      //அத்தனையும் அழகு//

      தங்களின் அன்பான வருகை + அழகான கருத்து மகிழ்வளிக்கிறது. மிக்க நன்றி.

      நீக்கு
  7. வைகோ சார்,
    நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர் தான் . இத்தனை தெய்வங்களும் உங்களுக்குத் துணை நிற்கின்றனர்.

    மிண்டும் அந்த ஆனந்தவல்லித் தாயார் படம் போட்டுள்ளீர்கள்.
    அவள் என்னை திருச்சிக்கு வா என்று கூப்பிடுவது போலவே உள்ளது. எத்தனை அழகு அவள்.பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது.

    அந்தத் தெப்பக்குளம் போட்டோ மிக அழகாகப் படமெடுக்கப் பட்டிருக்கிறது. Reflection எல்லாம் மிக அருமையாகத் தெரிகிறது.

    ஆக மொத்தம் திருச்சியின் brand ambassador ஆகிவிட்டீர்கள்.
    நன்றி இவ்வளவு விரிவாக தகவல்களுடன் படங்களும் பதிவிட்டதற்கு.

    நீங்கள் கொடுத்துள்ள லிங்கிற்கு சென்று படிக்கிறேன்.
    நன்றி.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. rajalakshmi paramasivam February 23, 2013 at 9:36 AM

      வாருங்கள், வணக்கம்.

      //வைகோ சார், நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர் தான் . இத்தனை தெய்வங்களும் உங்களுக்குத் துணை நிற்கின்றனர்.//

      சந்தோஷம்.

      //மீண்டும் அந்த ஆனந்தவல்லித் தாயார் படம் போட்டுள்ளீர்கள்.
      அவள் என்னை திருச்சிக்கு வா என்று கூப்பிடுவது போலவே உள்ளது.//

      உடனே புறப்பட்டு வந்து தரிஸித்துச் செல்லுங்கோ. எனக்கும் ஒருசில அம்பாள்கள் என்னிடம் ஏதோ சொல்வதுபோல அறிகுறிகளும் உள்ளுணர்வுகளும் தோன்றுவது உண்டு.

      //எத்தனை அழகு அவள்.பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது.//

      ஆம் சக்திவாய்ந்த அழகான அம்மன் தான். சந்தேகமே இல்லை.
      கோயிலில் அதிகமாக கும்பலோ, கட்டாய வசூலோ, வேறு எந்தத் தொந்தரவுகளோ இருக்காது. அமைதியாக அழகாக நிம்மதியாக நீண்ட நேரம் மனம் குளிர தரிஸித்துக்கொண்டே இருக்கலாம்.

      தரிஸன நேரம்: காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் 9 மணி வரை. வெள்ளிக்கிழமை + பிரதோஷம் போன்ற ஒருசில விசேஷ நாட்களில் மட்டும் சற்று கும்பல் அதிகம் இருக்கும். அந்த நாட்களிலும் கூட, வேறு சில கோயில்கள் போல மிகப்பெரிய கும்பலும், மணிக்கணக்கான க்யூவும் இருக்கவே இருக்காது.

      //அந்தத் தெப்பக்குளம் போட்டோ மிக அழகாகப் படமெடுக்கப் பட்டிருக்கிறது. Reflection எல்லாம் மிக அருமையாகத் தெரிகிறது.//

      நான் தான் படம் எடுத்தேன். இரவு சுமார் 7 மணி இருக்கும். Panasonic F3 LUMIX Digital Camera. அதில் எவ்வளவோ Technology Adjustments உள்ளன. எனக்கு அது பற்றியெல்லாம் முழுவதும் தெரியாது. ஏதோ எடுப்பேன். கணினியில் ஏற்றுவேன். சிலது மிகச் சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கும். சிலது சுமாராகத்தான் இருக்கும்.

      கணினியில் ஏற்றிய பிறகு ஒருசில EDITING வேலைகள் செய்து BRIGHT ஆக்க இப்போது தான் ஒரு வாரம் முன்பு கற்றுக்கொண்டுள்ளேன்.

      //ஆக மொத்தம் திருச்சியின் brand ambassador ஆகிவிட்டீர்கள். நன்றி இவ்வளவு விரிவாக தகவல்களுடன் படங்களும் பதிவிட்டதற்கு.//

      சந்தோஷம் ... நன்றி. திருச்சியில் ஒரு 4 நாட்களாவது தங்கி, சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை “ஊரைச்சொல்லவா ... பேரைச்சொல்லவா” என்ற என் பதிவினில், படங்களுடன் விளக்கமாக அளித்துள்ளேன்.

      http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_24.html

      ஏதாவது உதவிகளோ மேல் விபரங்களோ தேவையென்றால் என்னைத் தொடர்புகொள்ள : valambal@gmail.com

      //நீங்கள் கொடுத்துள்ள லிங்கிற்கு சென்று படிக்கிறேன். நன்றி.//

      ஆஹா சென்று படியுங்கோ. தங்கள் கருத்துக்களை அவர்களின் பதிவுகளிலும் பதிவு செய்யுங்கோ! So that They may also feel Happy.

      தங்கள் அன்பான வருகைக்கும், மனம் திறந்த விரிவான அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  8. பதில்கள்
    1. பழனி. கந்தசாமி February 23, 2013 at 2:10 PM
      ரசித்தேன்.//

      தங்களின் அன்பான வருகைக்கு மிக்க நன்றி, சார்.

      நீக்கு
  9. வணக்கம். ஸ்தல யாத்திரை சென்று வந்த உணர்வு

    பதிலளிநீக்கு
  10. வணக்கம். ஸ்தல யாத்திரை சென்று வந்த உணர்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரந்தை ஜெயக்குமார் February 23, 2013 at 5:05 PM

      வாருங்கள், வணக்கம்.

      //வணக்கம். ஸ்தல யாத்திரை சென்று வந்த உணர்வு//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  11. Aha!!!!!!
    How lucky you are. I think you are blessed by your dieties Sir. Very happy reading this post. Felt like i had a walk along with you.
    viji

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. viji February 23, 2013 at 7:31 PM

      வாங்கோ திருமதி விஜயலக்ஷ்மி மேடம். வணக்கம்.

      Aha!!!!!! How lucky you are. I think you are blessed by your dieties Sir. Very happy reading this post. Felt like i had a walk along with you. --viji

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான, சந்தோஷமான, மனம் திறந்த, கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  12. தலைப்பைப் பார்த்ததும் உங்கள் துணைவியாரைப் பற்றி தான் எழுதுகிறீர்கள் என்று எதிர்பார்த்தேன்..என்ன ஒரு ஏமாற்றம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி February 23, 2013 at 8:04 PM

      //தலைப்பைப் பார்த்ததும் உங்கள் துணைவியாரைப் பற்றி தான் எழுதுகிறீர்கள் என்று எதிர்பார்த்தேன்..என்ன ஒரு ஏமாற்றம்!//

      வாங்கோ ஸ்வாமீ ! வணக்கம்.

      ஏமாறச்சொன்னது நானோ ..... என் மீது கோபம் தானோ !

      உமக்கு ஒரு விஷயம் தெரியுமோ! என் மனைவி பெயரும், என் மூன்று குல தெய்வ அம்பாள் பெயர்களில் ஒன்றும், ஒன்று தான்.

      அது ஏன் அப்படி அமைந்து விட்டது என்றால் என் தர்மபத்தினி இருக்காங்களே, அவங்க என் சொந்த அத்தையின் பெண்வழிப் பேத்திதான். அதனால் என் அத்தை பெயரும், இவள் பெயரும், அந்த அம்பாள் பெயரும் எல்லாம் ஒன்றாகவே அமைந்து விட்டன.

      அதனால் நான், அம்பாளுக்கு பதிலாக இவளைக் குலதெய்வமாக நினைத்துக் கொண்டாடுவதும், இவளை அர்சிப்பதற்கு பதிலாக அம்பாளை அர்ச்சிப்பதும் உண்டு தான்.

      எப்படியே எதையோச்சொல்லி சமாளித்து உம்மை ஒரு குழப்புக்குழப்பி விட்டுள்ளேன்.

      நீர் இந்நேரம் என்னை அர்சித்துக்கொண்டு இருப்பீர் என நினைக்கிறேன்.

      அஷ்டோத்ரமோ ! சஹஸ்ரநாமமோ !! ;)))))

      நீக்கு
  13. பதில்கள்
    1. Advocate P.R.Jayarajan February 23, 2013 at 8:07 PM
      Sir...

      Another interesting episode... Keep it up...//

      Thank you very much, Sir for your kind visit here and for your valuable comments.

      நீக்கு
  14. மிகவும் சிறப்பான கோவில்கள் பற்றிய தகவல் தெரிந்து கொள்ள முடிந்தது.

    குல தெய்வங்களின் பிரதிநிதி போன்ற கோவில்கள் தங்கள் வீட்டிற்கு அருகிலேலே அமைந்திருப்பது மிகவும் அதிர்ஷ்டம்.

    படங்கள் மிகவும் அழகு அதிலும் தெப்ப குளத்தின் படங்கள் மிக அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. RAMVI February 23, 2013 at 9:35 PM

      வாருங்கள், வணக்கம்.

      //மிகவும் சிறப்பான கோவில்கள் பற்றிய தகவல் தெரிந்து கொள்ள முடிந்தது. குல தெய்வங்களின் பிரதிநிதி போன்ற கோவில்கள் தங்கள் வீட்டிற்கு அருகிலேலே அமைந்திருப்பது மிகவும் அதிர்ஷ்டம்.//

      சந்தோஷம்.

      //படங்கள் மிகவும் அழகு அதிலும் தெப்ப குளத்தின் படங்கள் மிக அழகு.//

      மிக்க மகிழ்ச்சி.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான, சந்தோஷமான, மனம் திறந்த, கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

      நீக்கு
  15. ஜன்னலுக்கு வெளியேயும் சின்னதாக ஒரு சிற்றுலா அழைத்து செல்கிறீர்கள், அழகு, நன்று, நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கே. பி. ஜனா... February 23, 2013 at 9:40 PM

      வாருங்கள் Mr. கே.பி.ஜனா Sir, வணக்கம்.

      //ஜன்னலுக்கு வெளியேயும் சின்னதாக ஒரு சிற்றுலா அழைத்து செல்கிறீர்கள், அழகு, நன்று, நன்றி.//

      தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் என் மனதுக்கு மகிழ்ச்சியளிக்கின்றன. மிக்க நன்றி, Sir.

      நீக்கு
  16. Detailed description azhagaaga irukkirathu! Yengal kuladeivamum Gunaseela Perumaal thaan. Appuram Thirupathi. Appuram Samayapuram.

    Neengal romba koduththu vaiththavar...yellaa kovilum veettarugileye ullana!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Sandhya February 23, 2013 at 10:15 PM

      வாருங்கள் மேடம், வணக்கம்.

      //Detailed description azhagaaga irukkirathu! விபரமான விளக்கங்கள் அழகாக இருக்கின்றன. //

      ரொம்பவும் சந்தோஷம்.

      //Yengal kuladeivamum Gunaseela Perumaal thaan. Appuram Thirupathi. Appuram Samayapuram.எங்கள் குலதெய்வமும் குணசீலம் பெருமாள் தான் அப்புறம் திருப்பதி, அப்புறம் சமயபுரம்.//

      ஆஹா, இதைக் கேட்கவே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

      //Neengal romba koduththu vaiththavar... நீங்க ரொம்பக் கொடுத்து வைத்தவர். yellaa kovilum veettarugileye ullana! எல்லாக்கோயில்களும் வீட்டருகேயே உள்ளன.//

      ஆமாம், இது விஷயத்தில் ஏதோ கொஞ்சம் எனக்கு அதிர்ஷ்டம் உள்ளது என்பதே உண்மை.

      [மறக்காத மன்னியாக ;) ] தங்களின் அன்பான வருகைக்கும், அழகான, சந்தோஷமான, மனம் திறந்த, கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

      நீக்கு
  17. 1) குலதெய்வம் மூன்றா? சாதரணமாக ஒன்றுதான் இருக்கும் இல்லையோ?

    2) குணசீலம் கோவிலும், மாந்துரைக் கோவில் படமும் நாகநாதர் கோவிலும் இன்னும் நிறையப் படங்கள் 'எல்லை மீறி' அழகாக இருக்கின்றன!

    3) இச்சிறப்புப் பெற்ற எல்லாக் கோவில்கள் பற்றியும் இராஜராஜேஸ்வரி மேடம் பதிவிட்டிருப்பது சிறப்பு.


    சாதாரணமாகவே வீடே கோவில் என்பார்கள். வீட்டைச் சுற்றி இவ்வளவு கோவில்கள் இருந்தால் அந்த வீடு - உங்கள் வீடு - கோ..........வில்! :)))

    சென்ற பதிவில் TF என்னவென்று கேட்டிருந்தீர்கள்? TO FOLLOW என்று அர்த்தம்! முதல்தரம் கமெண்ட் இட்டபோது சைன் இன் செய்யச் சொன்னதால் தொடரும் பட்டனைக் கிளிக் செய்ய முடியவில்லை. எனவே அந்த இரு எழுத்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம். February 23, 2013 at 10:43 PM

      வாருங்கள் ஸ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

      //1) குலதெய்வம் மூன்றா? சாதாரணமாக ஒன்றுதான் இருக்கும் இல்லையோ?//

      அதாவது பொதுவாக குலதெய்வம் என்பது ஒன்று மட்டுமே தான் இருக்கும்.

      சிலருக்கு தலைமுறை இடைவெளியால், அதுவும் எந்தக் குலதெய்வம் என்று தெரியாமலும் கூட இருக்கும்.

      இதுபோல நிறைய பேர்கள் எனக்குத்தெரிந்தே உள்ளனர்.

      பலரும் தங்களுக்கு ஏதாவது ஒரு கஷ்டம் ஏற்படும்போது மட்டும் இதனை உணர்ந்து, பல ஜோதிடர்களிடம் செல்கிறார்கள், பரிகாரம் செய்யத் துடிக்கிறார்கள்.

      ஜோதிடர்கள் கூறுவதை வைத்து ஏதோ ஒன்றை குலதெய்வம் என நினைத்துக் கொள்கிறார்கள்.

      அதிலும் ஒவ்வொரு ஜோதிடர்கள் ஒவ்வொரு தெய்வத்தை குலதெய்வம் என அடையாளம் காட்டுவார்கள்.

      எங்களுக்கு ”குணசீலம் பெருமாள்” தான் குலதெய்வம்.

      மாந்துறையில் உள்ள ஸ்ரீ ஆம்ரவனேஸ்வரர் என்ற சிவனும், ஸ்ரீ வாலாம்பிகை அல்லது பாலாம்பிகை என்ற அழகான அம்மனும், காவல் தெய்வமான ஸ்ரீ கருப்பரும் கிராம தேவதைகள் ஆகும்.

      அதுபோல சமயபுரம் மஹமாயீ யைத் தெரியாதவர்களோ, வணங்காதவர்களோ இந்த உலகில் யாருமே இருக்க முடியாது என்றே சொல்லலாம். அவர்கள் எந்த இனம், எந்த மொழி, எந்த ஜாதியாக இருப்பினும் சரி.

      சமயபுரம் மஹமாயீ + வைதீஸ்வரன் கோயில் போன்றவை எங்கள் பரம்பரையினரின் இஷ்ட தெய்வங்களாக இருந்திருக்கிறது.

      வெள்ளைக்கார துரைமார்களையே ஆட்டிப்படைத்து அடங்க வைத்துள்ள தெய்வங்கள் இந்த மாந்துறைக்கருப்பரும், சமயபுரம் மஹமாயீயும் என்று சொன்னால் நீங்கள் யாரும் நம்பமாட்டீர்கள்.

      நம்ப வேண்டும் என்ற அவசியமும் இல்லை.

      இவைபற்றியெல்லாம் என் முன்னோர்கள் சொன்ன கதைகள் என்னிடம் ஏராளமாக உள்ளன.

      நானும் தீவிர ஆராய்ச்சிகள் பல செய்துள்ளேன். இவையெல்லாம் 100% உண்மை தான் என்ற முடிவுக்கும் வந்துள்ளேன்.

      அவற்றில் சிற்சில உண்மைகள் நம் பதிவர்களான திரு. சூரிசிவா என்ற சுப்புத்தாத்தா அவர்களுக்கும், நம் திருமதி சாகம்பரி மேடம் [மகிழம்பூச்சரம்] அவர்களுக்கும் நிச்சயமாக கொஞ்சம் தெரிந்துள்ளது என்பது என் அனுமானம்.

      நான் என் வாயால் எதையும் இதற்கு மேல் வெளிப்படையாகச் சொல்ல முடியாதவனாக இருக்கிறேன்.

      புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

      நாம் நம் சங்கல்பத்தில் கூடச்சொல்வோம் கவனித்திருக்கிறீர்களா?

      குலதேவதா, கிராம தேவதா, இஷ்ட தேவதா சித்யர்த்தம் என்று வருமே .... இதிலெல்லாம் எவ்வளவோ விஷயங்கள் அடங்கியுள்ளன!!!!

      ஒரு சுபகார்யம் நடக்கும் முன்பு இவர்களையெல்லாம் நினைவுடன் வணங்கி திருப்தி செய்த பிறகே ஆரம்பிக்க வேண்டும்.

      எங்கள் மூதாதையர்கள் வாழ்ந்த ஆங்கரை என்ற கிராமத்தில் [மாந்துறைக்கு லால்குடிக்கும் இடையில் உள்ள அழகான கிராமம் இது. இங்கும் சிவன் கோயில் + பெருமாள் கோயில் எல்லாம் தனியாக உள்ளன] சங்கிருதி கோத்ரத்தில் பிறந்த அனைத்து நபர்களுக்குமே இந்த மாந்துறை தான் கிராம தேவதை.

      இன்று இவர்களின் லக்ஷக்கணகணக்கான குழந்தைகள் [வாரிசுகள்] உலகெங்கும் பரவி உள்ளார்கள்.

      அவர்களுக்காகவே மட்டும், நான் சற்று விஸ்தாரமாக ஆனால்
      சொல்ல வேண்டிய THRILLING + MIRACLE விஷயங்களை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் பட்டும் படாததுமாக இங்கு இப்போது எழுதியுள்ளேன்.

      என்னிடம் என் தலைமுறைச்சீட்டு என்ற பொக்கிஷம் உள்ளது.

      என் தந்தை >>>
      அவரின் தந்தை >>>> அவரின் தந்தை >>>> அவரின் தந்தை >>>> அவரின் தந்தை >>>> அவரின் தந்தை >>>> அவரின் தந்தை >>>> அவரின் தந்தை >>>> அவரின் தந்தை >>>> அவரின் தந்தை >>>> அவரின் தந்தை >>>> அவரின் தந்தை >>>> அவரின் தந்தை >>>>

      என 12 தலைமுறை தாத்தாக்களின் பெயர்கள் உள்ளன.

      அனைவரும் வேதம் படித்த பண்டிதர்கள் >>>> தினமும் வேதபாராயணமும் சிவபூஜையும் சிரத்தையாகச் செய்தவர்கள் >>> தினமும் பிறருக்கு வேதம் கற்பித்தவர்கள்.

      இதுபோன்ற ஓர் தலைமுறைச்சீட்டு 7+7=14 தலைமுறைகளுடன் யாரிடமாவது இந்த உலகினில் இருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கும் என்று நம்புகிறீர்களா, ஸ்ரீராம்? NEVER.

      எங்கள் பரம்பரை வழித்தோன்றலில் பலரும் மிகச்சிறந்த மஹான்களாகவே இருந்துள்ளார்கள்.

      இவை பற்றியெல்லாம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமிகள் மூலமும், ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் மூலமும் நேரிடையாகவே நானே கேட்டு அறிந்துள்ளேன்.

      வேத பரம்பரையான, இமயமலை போன்ற வேத பர்வதங்களாகத் திகழ்ந்துள்ள எங்கள் மூதாதயரை நினைத்து நான் பெருமைப்பட்டுக்கொள்ள மட்டுமே என்னால் முடிகிறது.

      அவர்கள் செய்துள்ள புண்ணியங்கள் எங்களின் அடுத்த ஏழு அல்லது பதினாலு பரம்பரைகளைக்காத்து விடும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

      >>>>>>>

      நீக்கு
    2. கோபு >>>> ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் [2]

      //2) குணசீலம் கோவிலும், மாந்துரைக் கோவில் படமும் நாகநாதர் கோவிலும் இன்னும் நிறையப் படங்கள் 'எல்லை மீறி' அழகாக இருக்கின்றன!//

      குணசீலம் கோயில் + மாந்துறை கோயில் படங்கள் மட்டும் என் அன்புக்குரிய தெய்வீகப்பதிவரான அம்பாளிடமிருந்து நான் உரிமையுடன் எடுத்துக்கொண்டது.

      ஸ்ரீ நாகநாதர் கோயில் முதலிய மற்ற படங்கள் ‘எல்லை மீறி’ அதாவது ’அனுமதி என்ற எல்லையை மீறி’ என்னால் எடுக்கப்பட்டுள்ளன.

      அதுவே அழகாக இருக்கின்றன என்கிறீர்கள். சந்தோஷம்.

      அனுமதி பெற்று எடுத்திருந்தால், மேலும் இன்னும் ஜொலிக்கக் கூடும் தான். ஏதோ ஒரு அச்சம், கோயில் நிர்வாகத்திடம் அனுமதி வாங்க நினைத்த என்னைத்தடுத்து விட்டது.

      ஆனாலும் ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாளிடம் மானஸீகமாக கெஞ்சிக்கேட்டு அனுமதி வாங்கித்தான், அந்த அம்பாளின் படத்தினை நான் வெளியிட்டுள்ளேனாக்கும்.

      >>>>>

      நீக்கு
    3. மிக நீளமான விளக்கத்துக்கு நன்றி வைகோ சார்.

      12 தலைமுறைகள் விவரம் யாரிடமும் இருக்காதுதான். மிகுந்த ஆச்சர்யம் எல்லோருக்கும் 3 தலைமுறைகள் பெயர் மட்டுமே கடமை கருதி தெரிந்து வைத்திருப்பார்கள். நம் முன்னோர்கள் பெருமையை நாம் உணர வேண்டும்.

      'எல்லை மீறி' என்ற என் வார்த்தை, படங்கள் கொஞ்சம் பெரிய அளவினதாய் தன எல்லையை மீறி வலப்பக்க பார்டருக்குள் சென்றிருந்ததை அப்படிக் குறிப்பிட்டிருந்தேன். :))

      நீக்கு
    4. கோபு >>>> ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் [3]

      //3) இச்சிறப்புப் பெற்ற எல்லாக் கோவில்கள் பற்றியும் இராஜராஜேஸ்வரி மேடம் பதிவிட்டிருப்பது சிறப்பு.//

      ஆம், அவர்கள் எது செய்தாலும் மிகச்சிறப்பாகவே செய்கிறார்கள்.

      வேகம், விவேகம், ஆர்வம், ஆசை, ஆழ்ந்த ஈடுபாடு, மிகச்சிறந்த கூர்மையான அறிவு, ஆற்றல், விடாமுயற்சி, நேரம் காலம் பார்க்காமல் நல்கும் கடும் உழைப்பு, நேரம் தவறாமை, தனித்தன்மை, புத்திசாலித்தனம் மற்ற வசதி வாய்ப்புகள் எல்லாவற்றையும் ஒருங்கே கொண்டுள்ள அவர்கள் ஓர் தெய்வப்பிறவியாகவோ, தெய்வானுக்கிரஹம் அதிகம் உள்ளவர்களாகவோ தான் இருக்க வேண்டும்.

      பொதுவாக எனக்குத்தெரிந்து, பிள்ளையார் சதுர்த்தி அன்று பிறக்கும் குழந்தைகள், இதுபோல அதி புத்திசாலியாகவும், ரொம்ப சமத்தாகவும் இருப்பது உண்டு.

      இவர்கள் எந்த தினம் பிறந்தார்களோ, அது தெரிய வந்தால், பிள்ளையார் சதுர்த்தி போலவே அந்த நாளையும் நாம் மிகச்சிறந்த நாளாக, நம் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.

      இவர்கள் வலைப்பதிவு ஆரம்பித்து இன்றுடன் முடிந்துள்ள 767 நாட்களுக்குள் 830 பதிவுகள் கொடுத்துள்ளார்கள் என்றால் சும்மாவா!

      அதுவும் தினமும் ஒரு பதிவுக்கு மேல், உலகத்தரம் வாய்ந்த உன்னதமாக தெய்வீகப்படங்களுடன் தருவது என்றால், நினைத்துப்பார்க்கவே முடியாத ஓர் MIRACLE தானே!!

      அதனால் மட்டுமே இவர்களை நான் அவ்வப்போது தெய்வீகப்பதிவர் என்றும், பிரத்யக்ஷ அம்பாள் என்றும் கூட குறிப்பிட்டு வருகிறேன்.

      //சாதாரணமாகவே வீடே கோவில் என்பார்கள். வீட்டைச் சுற்றி இவ்வளவு கோவில்கள் இருந்தால் அந்த வீடு - உங்கள் வீடு - கோ..........வில்! :)))//

      இந்தக் கடைசி வரிகளான ”கோ..........வில்! :)))” என்பதில் கோடானு கோடி அர்த்தங்களை புதைத்துத்தான் உள்ளீர்கள். ;))) புரிகிறது. மிக்க நன்றி.

      //சென்ற பதிவில் TF என்னவென்று கேட்டிருந்தீர்கள்? TO FOLLOW என்று அர்த்தம்! முதல்தரம் கமெண்ட் இட்டபோது சைன் இன் செய்யச் சொன்னதால் தொடரும் பட்டனைக் கிளிக் செய்ய முடியவில்லை. எனவே அந்த இரு எழுத்துகள்!//

      OK ... Now I understood. Thank you very much for your kind explanation.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான மனம் திறந்த முதிர்ச்சியான கருத்துக்களுக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !

      நீக்கு
    5. ஸ்ரீராம்.February 25, 2013 at 12:49 AM

      //மிக நீளமான விளக்கத்துக்கு நன்றி வைகோ சார்.

      12 தலைமுறைகள் விவரம் யாரிடமும் இருக்காதுதான். மிகுந்த ஆச்சர்யம் எல்லோருக்கும் 3 தலைமுறைகள் பெயர் மட்டுமே கடமை கருதி தெரிந்து வைத்திருப்பார்கள். நம் முன்னோர்கள் பெருமையை நாம் உணர வேண்டும்.//

      12 தலைமுறைகள் என்பது என் தந்தை வரை மட்டுமே

      13 ஆவது தலைமுறை நானும் என் இரு அண்ணாக்களும்

      14 ஆவது தலைமுறை என் பிள்ளைகள் மூவர் + என் அண்ணா பிள்ளைகள் இருவர்

      15 ஆவது தலைமுறை என் இரு பேரன்களான சிவா + அநிருத்.

      எங்கள் வீட்டிலுள்ள தலைமுறைச்சீட்டு இப்போது 15 ஆவது தலைமுறை வரை Update செய்யப்பட்டு விட்டது. இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.

      //'எல்லை மீறி' என்ற என் வார்த்தை, படங்கள் கொஞ்சம் பெரிய அளவினதாய் தன எல்லையை மீறி வலப்பக்க பார்டருக்குள் சென்றிருந்ததை அப்படிக் குறிப்பிட்டிருந்தேன். :))//

      இது என் கவனத்திற்கும் சிலரால் கொண்டுவரப்பட்டுள்ளது. இனி அதுபோல இல்லாமல் எல்லைக்குள் கொண்டுவர நினைத்துள்ளேன். விளக்கத்திற்கு மிக்க நன்றி.

      ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !

      நீக்கு
  18. ஆன்மீகச் சுற்றுலா சென்று வந்த நிறைவு. எல்லோரையும் தரிசனம் செய்தாயிற்று :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமைதிச்சாரல் February 23, 2013 at 10:50 PM
      ஆன்மீகச் சுற்றுலா சென்று வந்த நிறைவு. எல்லோரையும் தரிசனம் செய்தாயிற்று :-)//

      வாருங்கள். வணக்கம்.

      அன்பான வருகை + அழகான கருத்துக்களுக்கு, மிக்க நன்றி.

      நீக்கு
  19. என் வீட்டிலிருந்து கிளம்பி காலாற 10 நிமிடங்கள் நடந்தாலே போதும் மேலே காட்டியுள்ள அனைத்து இடங்களுக்கும் சென்றிடலாம்.

    எல்லாவற்றையும் நிறுத்தி நிதானமாக தரிஸித்து விட்டு திரும்ப வீடு வந்து சேர மொத்தமே ஒரு மணி நேரம் மட்டுமே ஆகும்.

    என் எல்லாக் குலதெய்வங்களையும் ஒருங்கே கும்பிட்டு வந்தது போல ஓர் மன நிம்மதி ஏற்பட்டு விடும்.//

    சார், உண்மையில் நீங்கள் கொடுத்து வைத்தவர் தான். காலாற நடந்த மாதிரியும் இருக்கிறது, குலதெய்வங்களை கும்பிட்ட மனநிறைவும் கிடைக்கிறது.

    இரவு நேர தெப்பக்குள காட்சி தெப்ப உற்சவ்ம் இல்லாமலே இந்திரலோகமாய் காட்சி தருக்கிறது நீங்கள் சொன்ன மாதிரி.
    தெப்ப உற்சவம் பார்த்தால் எப்படி இருக்கும்! கண்கொள்ளா காட்சியாகத்தான் இருக்கும் .

    படங்கள் எல்லாம் அழகு.

    //குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பது போல கொண்டாடும் குணம் கொண்டவர்களின் அருகில் தேடிவந்து தங்கள் வருகையை எதிர்பார்த்து பல தலைமுறைகள் முன்பாகவே கோவில்கொண்டிருப்பார்கள்..//

    திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள் சொன்னதை நான் ஆமோதிக்கிறேன். மிகச்சரியாக சொன்னார்கள்.


    //நம் திருச்சி திரு. தி. தமிழ் இள்ங்கோ ஐயா [எனது எண்ணங்கள்] அவர்கள் எழுதியுள்ள பதிவுக்குச் சென்று பார்த்து மகிழுங்கள்//

    படித்து மகிழ்கிறேன் சார். நன்றி.

    வாழ்த்துக்கள்.

    பதிவு மனநிறைவை தருகிறது


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு February 23, 2013 at 11:14 PM

      வாருங்கள், வணக்கம்.

      //சார், உண்மையில் நீங்கள் கொடுத்து வைத்தவர் தான். காலாற நடந்த மாதிரியும் இருக்கிறது, குலதெய்வங்களை கும்பிட்ட மனநிறைவும் கிடைக்கிறது.//

      ஆமாம் மேடம். மிகவும் அழகாகத்தான் உள்ளது. சில சமயம் கொஞ்சம் போக்குவரத்து நெருக்கடிகளும் ஏற்பட்டு விடுவதுண்டு. .

      //இரவு நேர தெப்பக்குள காட்சி தெப்ப உற்சவ்ம் இல்லாமலே இந்திரலோகமாய் காட்சி தருக்கிறது நீங்கள் சொன்ன மாதிரி.
      தெப்ப உற்சவம் பார்த்தால் எப்படி இருக்கும்! கண்கொள்ளா காட்சியாகத்தான் இருக்கும் . படங்கள் எல்லாம் அழகு.//

      ஆமாம். மொத்தம் மூன்று சுற்று சுற்றி வரும். இரவு 7 முதல் 10 வரை ஒரே ஜே ஜேன்னு அழகாக, கண்கொள்ளாக்காட்சியே தான்.

      //திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள் சொன்னதை நான் ஆமோதிக்கிறேன். மிகச்சரியாக சொன்னார்கள்.//

      அவங்க எதுசொன்னாலும் மிகச்சரியாக மட்டுமே சொல்லுவாங்க! அருள்வாக்கு அருளும் தேவதை போல அவங்க! வாக்தேவி!! ;)

      /நம் திருச்சி திரு. தி. தமிழ் இள்ங்கோ ஐயா [எனது எண்ணங்கள்] அவர்கள் எழுதியுள்ள பதிவுக்குச் சென்று பார்த்து படித்து மகிழ்கிறேன் சார்.//

      சரிங்க மேடம். சந்தோஷம்.

      //பதிவு மனநிறைவை தருகிறது//

      தங்களின் அன்பான வருகையும், அழகான மனநிறைவான கருத்துக்களும் என் மனதுக்கும் மகிழ்ச்சியளிக்கின்றன.

      மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  20. தெய்வ சன்னிதானத்திற்கு சென்று வருவதே பெரும் பாக்கியம், அச்சன்னிதானங்களின் அருகிலேயே வசிப்பது என்பது சென்ற பிறவியில் செய்த
    புண்ணயமாகத்தான் இருக்கும்.எனது வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Rukmani Seshasayee February 24, 2013 at 12:33 AM

      வாங்கோ, அநேக நமஸ்காரங்கள்.

      ”நம் உரத்த சிந்தனை” [தன்னம்பிக்கையூட்டும் தமிழ் மாத இதழ் FEB 2013] - பக்கம் 5 ஐ தங்களுக்காகவே தனியாக ஒதுக்கி சிறப்பித்திருந்தார்கள். பார்த்தேன். என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

      அப்படியே புரட்டிக்கொண்டு வந்தபோது பக்கம் 50 முதல் 53 வரை அடியேனுக்காகவும் ஒதுக்கியிருந்தார்கள். பிறகு தான் புரிந்து கொண்டேன், அது “எழுத்தாளர்களுக்கான சிறப்பிதழ்” என்று.

      தங்களைப்போன்ற மிகப் பிரபலங்களுடன் நானா? என எண்ணி மிகவும் வியந்து போனேன்

      அதைப்பற்றி ஓர் தனிப்பதிவு தரணும் என நினைத்துக் கொண்டுள்ளேன்.

      //தெய்வ சன்னிதானத்திற்கு சென்று வருவதே பெரும் பாக்கியம், அச்சன்னிதானங்களின் அருகிலேயே வசிப்பது என்பது சென்ற பிறவியில் செய்த புண்ணயமாகத்தான் இருக்கும்.எனது வாழ்த்துக்கள்.//

      தங்களின் அன்பான வருகையும், அழகான மனநிறைவான கருத்துக்களும், வாழ்த்துகளும் என் மனதுக்கும் மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றன. மிகவும் சந்தோஷம்.

      தங்களுக்கு என் மனமாந்த நன்றிகள், மேடம்..



      நீக்கு
  21. சூடான செய்திகளும் படங்களும் சிறப்பு சேர்க்கின்றன ..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி February 24, 2013 at 1:40 AM

      //சூடான செய்திகளும் படங்களும் சிறப்பு சேர்க்கின்றன ..... பாராட்டுக்கள்..//

      சுடச்சுட வந்து பாராட்டியுள்ளது, மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி.

      நீக்கு
  22. இந்தப்பதிவு நேற்று 23.02.2013 இரவு வெளியிடப்பட்டது.

    இன்று 24.02.2013 காலை ’மாசி மகம்’ திருநாளை உத்தேசித்து பவனி வந்த ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் + ஸ்ரீ நாகநாதர் [சிவன்] கோயில் தேர்களின் படங்கள் மட்டும், இங்கு இப்போது புதிதாக, கடைசியில் என்னால் இணைக்கப்பட்டுள்ளன.

    இது தங்கள் அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    பதிலளிநீக்கு
  23. உங்கள் குலதெய்வ கோயில்களைப் பற்றியும் சுற்று வட்டார கோயில்களை பற்றியும் அழகான படங்களுடன் அருமையாக பகிர்ந்து தந்தமைக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  24. அழகாக தெய்வங்களும் உங்கள் வீட்டின் அருகிலேயே கோயில் கொண்டுள்ளனர். எங்களுக்கும் தரிசித்தாற்போல ஒரு உணர்ச்சி.
    அருகிலிருந்தாலும், தரிசிக்க பாக்கியம் வேண்டும். அல்லது நினைத்தாற்கூட போதும். எல்லா வகையிலும், அமைந்திருந்து.
    வணங்கும்,உங்களை, எழுதும் உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன். பக்தி வலையிற் படுவோன் காண்க என்று நினைத்து,அழகான இக்கட்டுரை,நிஜவுரையாக இருப்பதை நினைத்து ஸந்தோஷிக்கும் அன்புடன் ஆசிகளுடன் மாமி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Kamatchi February 24, 2013 at 4:25 AM

      வாங்கோ மாமி, அநேக நமஸ்காரங்கள்.

      //அழகாக தெய்வங்களும் உங்கள் வீட்டின் அருகிலேயே கோயில் கொண்டுள்ளனர். எங்களுக்கும் தரிசித்தாற்போல ஒரு உணர்ச்சி.//

      ரொம்பவும் சந்தோஷமாக உள்ளது.

      //அருகிலிருந்தாலும், தரிசிக்க பாக்கியம் வேண்டும்.//

      மிகச்சரியாகவே சொல்லிட்டீங்கோ. வாஸ்தவமான பேச்சு இது.

      //அல்லது நினைத்தாற்கூட போதும். எல்லா வகையிலும், அமைந்திருந்து. வணங்கும், உங்களை, எழுதும் உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன். //

      எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

      //பக்தி வலையிற் படுவோன் காண்க என்று நினைத்து, அழகான இக்கட்டுரை, நிஜவுரையாக இருப்பதை நினைத்து ஸந்தோஷிக்கும் அன்புடன் ஆசிகளுடன் மாமி//

      தங்களின் அன்பான வருகையும், அழகான மனநிறைவான கருத்துக்களும், வாழ்த்துகளும், ஆசீர்வாதங்களும் என் மனதுக்கும் மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றன.

      மிகவும் சந்தோஷம். நன்றியோ நன்றிகள்.

      அநேக நமஸ்காரங்களுடன்,
      கோபாலகிருஷ்ணன்

      நீக்கு
  25. அழகான படங்களுடன் அசத்திய பதிவு. படிக்கவே இதமாக இருந்தது சார்!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Pattu Raj February 24, 2013 at 4:40 AM

      வாங்கோ .... வணக்கம். ;)))))

      //அழகான படங்களுடன் அசத்திய பதிவு. படிக்கவே இதமாக இருந்தது சார்!.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், பட்டு.

      நீக்கு
  26. நீங்கள் கும்பிடும் தெய்வங்கள் எல்லோரும் உங்கள் வீட்டருகிலேயே உங்கள் ஜன்னல் கம்பிகளின் வழியே உங்களுக்கு காட்சி கொடுப்பது மிகப் பெரிய வரம் கோபு ஸார்!

    படங்களும் தகவல்களும் உங்களுடனேயே இத்தளங்களுக்கு நாங்களும் வந்த உணர்வைத் தருகின்றன.

    குலதெய்வத்தின் அருள் என்றேன்றும் உங்களுக்கு இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ranjani Narayanan February 24, 2013 at 4:41 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //நீங்கள் கும்பிடும் தெய்வங்கள் எல்லோரும் உங்கள் வீட்டருகிலேயே உங்கள் ஜன்னல் கம்பிகளின் வழியே உங்களுக்கு காட்சி கொடுப்பது மிகப் பெரிய வரம் கோபு ஸார்!

      படங்களும் தகவல்களும் உங்களுடனேயே இத்தளங்களுக்கு நாங்களும் வந்த உணர்வைத் தருகின்றன.

      குலதெய்வத்தின் அருள் என்றேன்றும் உங்களுக்கு இருக்கட்டும்.//

      தங்களின் அன்பான வருகையும், அழகான மனநிறைவான கருத்துக்களும் என் மனதுக்கும் மகிழ்ச்சியளிக்கின்றன. என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      நீக்கு
  27. அனைத்துத் தெய்வங்களையும் உங்கள் தயவால் தரிசிக்க முடிந்தது. மாந்துறைக் கோயிலுக்குப் போக நேர்ந்ததில்லை. குணசீலம் பலமுறைகளும், சமயபுரமும் அநேக முறைகளும் சென்றிருக்கிறேன். மற்றக் கோயில்களில் தாயுமானவர் தவிர மற்றவை இனித் தான் தரிசிக்க வேண்டும். பகிர்வுக்கு நன்றி. என் மாமனார் வீட்டிலும் முதலில் குலதெய்வம் ஆன மாரியம்மனுக்கும், (கிராமத்திலேயே குடி கொண்டிருக்கிறாள்), பின்னர் அங்கேயே உள்ள பெருமாளுக்கும், அதன் பின்னர் வைத்தீஸ்வரனுக்கும் முடி எடுப்பது உண்டு. அதன் பின்னரே மருமகளின் பிறந்த வீட்டுப் பிரார்த்தனைகள். :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha Sambasivam February 24, 2013 at 4:50 AM

      வாங்கோ ..... நமஸ்காரங்கள்.

      //அனைத்துத் தெய்வங்களையும் உங்கள் தயவால் தரிசிக்க முடிந்தது. மாந்துறைக் கோயிலுக்குப் போக நேர்ந்ததில்லை. குணசீலம் பலமுறைகளும், சமயபுரமும் அநேக முறைகளும் சென்றிருக்கிறேன். மற்றக் கோயில்களில் தாயுமானவர் தவிர மற்றவை இனித் தான் தரிசிக்க வேண்டும். பகிர்வுக்கு நன்றி. என் மாமனார் வீட்டிலும் முதலில் குலதெய்வம் ஆன மாரியம்மனுக்கும், (கிராமத்திலேயே குடி கொண்டிருக்கிறாள்), பின்னர் அங்கேயே உள்ள பெருமாளுக்கும், அதன் பின்னர் வைத்தீஸ்வரனுக்கும் முடி எடுப்பது உண்டு. அதன் பின்னரே மருமகளின் பிறந்த வீட்டுப் பிரார்த்தனைகள். :)))))//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான, சந்தோஷமான, மனம் திறந்த, கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      [தங்கள் மெயில் கிடைத்தது. சந்தோஷம்.
      அதற்கு என் பதிலும் கொடுத்துள்ளேன். ]


      நீக்கு
  28. அன்பின் வை.கோ - பதிவும் அருமை - தகவல்கலூம் அருமை - படங்களூம் அருமை. தங்களின் குல தெய்வங்கள் மூன்றும் தங்கள் வீட்டினருகே இருந்து கொண்டு தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் அருள் பாலிப்பது மிக மிக அருமை. தெய்வீகப் பதிவர் மற்றும் தமிழ் இளங்கோவின் பதிவுகளீல் இருந்து சுட்டி கொடுத்தது நன்று. ஜன்னல் கம்பிகள் கூட கொடுத்து வைத்தவை - இறை வணக்கம் செய்வதற்கென்றே ஏற்படுத்தப் பட்ட ஜன்னலா ? -

    அனைத்துப் படங்களையும் கண்டு மகிழ்ந்து இரசித்து, தகவல்கள் விளக்கங்கள் அனைத்தையும் படித்து மகிழ்ந்து இரசித்து இங்கு மறுமொழி இடுகிறேன்.

    வை.கோ - கொடுத்து வைத்தவர் ஐயா நீங்கள் - இத்தனையும் இருந்த இடத்தில் இருந்து செய்யும் வாய்ப்பு கிடைத்தவர் அல்லவா .....

    நல்வாழ்த்துகள் வை.கோ
    நட்புடன் சீனா

    பி.கு : ஒரு முறை திருச்சி வந்து தங்கள் வீட்டில் தங்கி ஜன்னல் கம்பிகளை இரசிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. cheena (சீனா) February 24, 2013 at 5:18 AM

      வாருங்கள் அன்பின் சீனா ஐயா, வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான திறந்து வைத்த ஜன்னல் போன்ற கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

      //பி.கு : ஒரு முறை திருச்சி வந்து தங்கள் வீட்டில் தங்கி ஜன்னல் கம்பிகளை இரசிக்க வேண்டும்.//

      அவசியம் வாருங்கள் ஐயா. WELCOME !

      மகிழ்ச்சியுடன் வரவேற்கக் காத்திருக்கிறேன். ;)))))

      நீக்கு
  29. அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்! நலனறிய ஆவல்! இப்போதுதான் தஞ்சாவூரிலிருந்து வந்தேன். வந்ததும் வலைச்சரம் மறுமொழிகள் தந்தேன்.

    [1] குணசீலம் [2] மாந்துறை [3] சமயபுரம் – மூன்று கோயில்களைப் பற்றிய தங்கள் பதிவையும், தெய்வீகப்பதிவர் என்று தங்களால் பாராட்டப்பட்ட சகோதரி திருமதி இராஜராஜேஸ்வரி [மணிராஜ்] அவர்களது பதிவுகளையும் படித்தேன். குணசீலம், சமயபுரம் கோயில்கள் சென்றிருக்கிறேன். மாந்துறை சென்றதில்லை. (மாந்துறை பாபுஜி தயாரித்த நடிகர் சுருளிவேல் நடித்த மாந்தோப்பு கிளியே! திரைப்படம் அப்போது மஹா ஹிட்)

    நாங்கள் சிந்தாமணி பகுதியில் குடியிருந்தபோது தரிசித்த ( ஆண்டார் வீதி, வாணப்பட்டறை, நந்திகோயில் தெரு பகுதியில் உள்ள ) கோயில்களின் படங்களை தங்கள் வலைப் பகுதியில் பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சியாக இருகிகிறது. நந்திகோயில் தெருவில் கூடப்பள்ளி திருமண மண்டபம் எதிரில் இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலை எப்படி மறந்தீர்கள்? அந்த ஆஞ்சநேயருக்கு அடிக்கடி வடைமாலை சாத்துவார்கள். மேலும் அந்த ஆஞ்சநேயர் கோயிலில் நவராத்திரி சமயம் கொலுவும், பொம்மைகளை விற்பனைக்கும் வைத்து இருப்பார்கள்.

    இரவில் எடுக்கப்பட்ட தெப்பக்குளம் படமும், லூர்தன்னை ஆலயமும் பார்கப் பார்க்க அருமை. எடிட் செய்து LARGE SIZE - இல் இராஜராஜேஸ்வரி [மணிராஜ்] அவர்களது பதிவில் வருவது போல் போட்டு இருக்கலாம். நன்றி!




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.தமிழ் இளங்கோ February 24, 2013 at 5:18 AM

      // மாந்துறை சென்றதில்லை.//

      மாந்துறை என்ற கோயில் இருப்பது பலருக்கும் தெரியாது தான். தாங்கள் செல்லாததில் வியப்பேதும் இல்லை தான். அங்கு ஒருவேளை தாங்கள் செல்ல நினைத்தால், தயவுசெய்து உடலும் உள்ளமும் மிகவும் சுத்தமாக இருக்கும்படி பார்த்துக்கொண்டு செல்லுங்கள். தவறாக ஏதும் நினைக்க வேண்டாம். இது ஓர் முன்னெச்சரிக்கை மட்டுமே.

      //(மாந்துறை பாபுஜி தயாரித்த நடிகர் சுருளிவேல் நடித்த மாந்தோப்பு கிளியே! திரைப்படம் அப்போது மஹா ஹிட்)//

      சுருளிராஜன் மிகப்பெரிய கஞ்சனாக நடித்த நகைச்சுவைப்படம். நானும் பார்த்துள்ளேன்.சிரிப்பதற்கு பதிலாக நான் மிகவும் அழுதேன். என் மனதைக்கலங்க அடித்த படம் அது.

      அதில் சுருளிராஜனின் மகன் [சுமார் 10 வயது பையன்] இறக்கும் தருவாயில், தன் தந்தையிடம் கூறும் வசனம் இப்போது நினைத்தாலும் எனக்கு அழுகையை வரவழைக்கும்.

      நான் சிறுவயதில் படம் பார்க்கும் போது படத்துடனும், கதையுடனும் அப்படியே ஒன்றிப்போய் விடுவேன். பிறருக்கும் அந்தக்கதையினை அப்படியே ஒரு வரி விடாமல் சொல்வேன்.

      >>>>>

      நீக்கு
    2. VGK >>>>> திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள் [2]

      //நாங்கள் சிந்தாமணி பகுதியில் குடியிருந்தபோது தரிசித்த ( ஆண்டார் வீதி, வாணப்பட்டறை, நந்திகோயில் தெரு பகுதியில் உள்ள ) கோயில்களின் படங்களை தங்கள் வலைப் பகுதியில் பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சியாக இருகிகிறது.//

      சந்தோஷம். நாங்களும் ஓரிரு வருட்ங்கள் மட்டும் [நான் ஆறாம் வகுப்பு படிக்கும் காலத்தில்] மேலச்சிந்தாமணி காவிரிக்கரை அருகில் ஓர் இடத்தில் குடியிருந்தோம். அங்கிருந்தே NCHS வந்து போவேன். இப்போதுள்ள அண்ணாசிலை அன்று அங்கு கிடையாது.

      அந்த சிறுவயதில் எனக்கு ஏற்பட்டதோர் அனுபவத்தைக் கூட என் பதிவான “பிரார்த்தனை” என்பதில் கொண்டு வந்துள்ளேன்.
      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_874.html

      //நந்திகோயில் தெருவில் கூடப்பள்ளி திருமண மண்டபம் எதிரில் இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலை எப்படி மறந்தீர்கள்? //

      அதைப்போய் நானாவது மறப்பதாவது ! ;))))) அந்த ஆஞ்சநேயர் எனக்கு மிகவும் Dearest Friend, Sir. அதெல்லாம் மிகப்பெரிய கதை.

      //அந்த ஆஞ்சநேயருக்கு அடிக்கடி வடைமாலை சாத்துவார்கள். //

      நானே பலமுறை வடைமாலை அவருக்குச் சாத்தியுள்ளேன்.
      அடிக்கடி அவர் மார்பினில் வெண்ணெயும் சாத்திவிட்டு வருவேன். நம் பழநிவிலாஸ் நெய் ஸ்டோரில் வெண்ணெய் சாம்பிள் பாக்கெட் வாங்கிக்கொண்டு, அப்படியே போய் சாத்தி விட்டு, வடையோ துளசியோ, செந்தூரமோ எது பிரஸாதமாகக் கிடைக்கிறதோ அதை வாங்கி வாயில் போட்டுக்கொண்டு தெப்பக்குளத்தைச்சுற்றி வாக்கிங் செல்வதுண்டு.

      //மேலும் அந்த ஆஞ்சநேயர் கோயிலில் நவராத்திரி சமயம் கொலுவும், பொம்மைகளை விற்பனைக்கும் வைத்து இருப்பார்கள். //

      இப்போதும் நவராத்திரி சமயம் அது சிறப்பாக நடைபெற்று வருகிறது. தனிப்பதிவாகவே தந்து ஜமாய்த்து விடுவோம், ஐயா. கவலையே வேண்டாம். ;)

      >>>>>

      நீக்கு
    3. VGK >>>>> திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள் [3]

      //இரவில் எடுக்கப்பட்ட தெப்பக்குளம் படமும், லூர்தன்னை ஆலயமும் பார்கப் பார்க்க அருமை.//

      மிக்க நன்றி, சந்தோஷம், ஐயா.

      //எடிட் செய்து LARGE SIZE - இல் இராஜராஜேஸ்வரி [மணிராஜ்] அவர்களது பதிவில் வருவது போல் போட்டு இருக்கலாம். நன்றி!//

      ஆசை தான். எனக்கும் ஆசை தான் ஐயா.

      ஆனாலும் நான் மிகச் சாதாரணமானவன் ஐயா. என்னால் அதுபோலெல்லாம் செய்ய தொழில்நுட்ப அறிவும், வசதி வாய்ப்புகளும் கிடையாது, ஐயா.

      அவர்கள் போடுவதுபோல [ சக்கைபோடு போடுவது போல ] நானும் போட நினைத்தால் ...... போச்சு .... போச்சு ........அது புலியைப்பார்த்து பூனையும் சூடு போட்டுக்கொண்ட கதையாகிவிடும் ஐயா. ;)))))

      >>>>>>

      நீக்கு
    4. VGK >>>>> திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள் [4]

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான, சந்தோஷமான, மனம் திறந்த, கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

      எல்லாவற்றையும் விட தங்களை நான் நேற்று என் வீட்டில் நேரில் சந்தித்துப் பேசியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, ஐயா.

      நீண்ட நாட்களுக்குப்பின் நேற்று தான், சரியான நேரத்தில் படுத்து நிம்மதியாக தூங்கினேன். பல இன்பக்கனாக்களும் கண்டேன்.

      நன்றியோ நன்றிகள், ஐயா.

      அன்புடன் VGK

      நீக்கு
  30. பதில்கள்
    1. ரிஷபன் February 24, 2013 at 5:51 AM
      பக்திப் பரவசமானேன்..//

      வாங்கோ, சார், வணக்கம். தங்களின் அன்பான வருகையிலும் அழகான கருத்தினிலும், நானும் பக்திப்பரவசமானேன்.

      [அதாவது இது என் குரு பக்தியாக்கும் ;))))) ]

      நீக்கு
  31. அழகான படங்கள்... அற்புதமான தகவல்கள்...

    சீனா ஐயா அவர்கள் என்னை விட்டு போக மாட்டார் என்று நினைக்கிறேன்... நானும் இன்று Reserved...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திண்டுக்கல் தனபாலன் February 24, 2013 at 6:00 AM

      வாருங்கள், வணக்கம்.

      //அழகான படங்கள்... அற்புதமான தகவல்கள்...//

      மிகவும் சந்தோஷம்.

      //சீனா ஐயா அவர்கள் என்னை விட்டு போக மாட்டார் என்று நினைக்கிறேன்... நானும் இன்று Reserved...//

      அவரை உடன் இருந்து பத்திரமாக பாதுகாப்பாக அழைத்து வாருங்கள். கேட்கவே சந்தோஷமாக உள்ளது. ;)))))

      நீக்கு
  32. நல்ல சுற்றுலா,பக்கத்திலே இத்தனையும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமலன் February 24, 2013 at 7:30 AM

      வாருங்கள், வணக்கம்.

      //நல்ல சுற்றுலா, பக்கத்திலே இத்தனையும் இருக்கிறது.//

      ஆம், எல்லாமே என் அருகில்.

      அன்பான வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  33. ஆன்மிக சுற்றுலா சென்று வந்தது போல் இருந்தது. ராஜராஜேஸ்வரி அவர்களின் இணைப்பும் அழகு சேர்த்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உஷா அன்பரசு February 24, 2013 at 8:21 AM

      வாங்கோ, வணக்கம்.

      //ஆன்மிக சுற்றுலா சென்று வந்தது போல் இருந்தது.//

      தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      //ராஜராஜேஸ்வரி அவர்களின் இணைப்பும் அழகு சேர்த்தது.//

      இந்த 'அழகு சேர்த்துள்ள இணைப்பு' என்ற பெருமையில் பெரும் பங்கு, தங்களுக்கு மட்டுமே உண்டு .

      உடலாலும் உள்ளத்தாலும் சற்றே சோர்ந்து போய் ஒதுங்கியிருந்த என்னை “பின்னூட்டப்புயல்” என ஏதேதோ சொல்லி, பட்டம் கொடுத்து, மீண்டும் பட்டத்தினைத் தக்கவைக்கும் பொருட்டாவது பறக்க வேண்டிய நிர்பந்தத்தை உருவாக்கிக்கொடுத்து, பட்டத்தைப் பட்டொளி வீசிப்பறக்கச் செய்தது தாங்கள் அல்லவோ!

      என் பட்டநூல் இனி என்றுமே அறுகாமல் இருக்க அன்புடன் மாஞ்சாத்தூள் தடவியுள்ளவர் என் அன்புத்தங்கை மஞ்சு அல்லவோ!!

      மிக்க நன்றி.

      ஸ்பெஷல் நன்றிகள் உங்களுக்கும் + மஞ்சுவுக்கும் + என் குலதெய்வத்திற்கும். ;)))))

      நீக்கு
  34. உங்கள் வழிபாடு பற்றி தெரிந்து கொண்டேன்.நல்லா சுற்றி காட்டுறீங்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Asiya Omar February 24, 2013 at 9:07 PM

      வாருங்கள், வணக்கம்.

      //உங்கள் வழிபாடு பற்றி தெரிந்து கொண்டேன்.நல்லா சுற்றி காட்டுறீங்க..//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      நீக்கு

  35. என் வீட்டிலிருந்து கிளம்பி காலாற 10 நிமிடங்கள் நடந்தாலே போதும் மேலே காட்டியுள்ள அனைத்து இடங்களுக்கும் சென்றிடலாம்.

    எல்லாவற்றையும் நிறுத்தி நிதானமாக தரிஸித்து விட்டு திரும்ப வீடு வந்து சேர மொத்தமே ஒரு மணி நேரம் மட்டுமே ஆகும்.

    என் எல்லாக் குலதெய்வங்களையும் ஒருங்கே கும்பிட்டு வந்தது போல ஓர் மன நிம்மதி ஏற்பட்டு விடும்.

    வீடு அமைந்தது ஓர் ராசியென்றால் இவ்வாறு என் மூன்று குல தெய்வங்களின் பிரதிநிதிகள் போலவே எல்லாக் கோயில்களும் என் வீட்டுக்கு மிக அருகிலேயே அமைந்திருக்கின்றன.//
    ஜன்னல் வழிக் கதைகள் தெய்வங்களையும் வளைத்துவிட்டன.
    எங்களுக்கும் வீட்டிலிருந்தபடி ஆனந்த தரிசனம் ஆச்சு.
    இந்தக் கொடுப்பினை பலதலைமுறைக்கும் தொடர வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிசிம்ஹன் February 25, 2013 at 12:42 AM

      வாங்கோ, வணக்கம். செளகர்யமாக இந்தியா திரும்பியிருப்பீர்கள் என நம்புகிறேன். சந்தோஷம்.

      *****என் வீட்டிலிருந்து கிளம்பி காலாற 10 நிமிடங்கள் நடந்தாலே போதும் மேலே காட்டியுள்ள அனைத்து இடங்களுக்கும் சென்றிடலாம்.

      எல்லாவற்றையும் நிறுத்தி நிதானமாக தரிஸித்து விட்டு திரும்ப வீடு வந்து சேர மொத்தமே ஒரு மணி நேரம் மட்டுமே ஆகும்.

      என் எல்லாக் குலதெய்வங்களையும் ஒருங்கே கும்பிட்டு வந்தது போல ஓர் மன நிம்மதி ஏற்பட்டு விடும்.

      வீடு அமைந்தது ஓர் ராசியென்றால் இவ்வாறு என் மூன்று குல தெய்வங்களின் பிரதிநிதிகள் போலவே எல்லாக் கோயில்களும் என் வீட்டுக்கு மிக அருகிலேயே அமைந்திருக்கின்றன.*****

      //ஜன்னல் வழிக் கதைகள் தெய்வங்களையும் வளைத்துவிட்டன.
      எங்களுக்கும் வீட்டிலிருந்தபடி ஆனந்த தரிசனம் ஆச்சு.
      இந்தக் கொடுப்பினை பலதலைமுறைக்கும் தொடர வேண்டும்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், ஆசிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      நீக்கு
  36. தங்களின் வீட்டிலிருந்து கிளம்பி தங்களுடன் ஒர் உலா வந்தது போன்ற திருப்தி ஏற்பட்டது!அருமையான படங்களுடன் கூடிய பயனுள்ள தகவல்கள் நிறைந்த பதிவு! மாசிமகம் படங்கள் அருமை! 12 தலைமுறைகளின் விவரம் வியக்க வைத்தது! நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Seshadri e.s.February 25, 2013 at 1:35 AM

      வாருங்கள், வணக்கம்.

      //தங்களின் வீட்டிலிருந்து கிளம்பி தங்களுடன் ஒர் உலா வந்தது போன்ற திருப்தி ஏற்பட்டது!அருமையான படங்களுடன் கூடிய பயனுள்ள தகவல்கள் நிறைந்த பதிவு!//

      ரொம்பவும் சந்தோஷம்.

      //மாசிமகம் படங்கள் அருமை!//

      மாசிமகத்தன்று இரவு திருச்சி தாயுமானவர் + மட்டுவர் குழலம்மை வெள்ளி ரிஷப வாகனங்கள் வந்தன. கண்கொள்ளாக்காட்சியாக இருந்தன. மேலும் ஸ்ரீ நாகநாதர் + ஸ்ரீ ஆனந்தவல்லி ரிஷப வாகனங்களும் வந்தன. அவற்றையும் அழகாகப் படமாகப் பதிவு செய்தேன்.

      காலையில் பவனி வந்த அந்த ஸ்ரீ நாகநாதர் + ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் தேர்கள் மட்டும் கேமராவை செட்-அப் செய்வதற்குள் வேக வேகமாக புறப்பட்டுச் சென்று விட்டன. ஏதோ என் வீட்டு மாடியில் இருந்தபடியே ஜன்னல் வழியாகக் கிளிக்கினேன். அதையும் பிறகு பதிவினில் சேர்த்து விட்டேன்.

      //12 தலைமுறைகளின் விவரம் வியக்க வைத்தது! நன்றி ஐயா!//

      மேலும் மூன்று தலைமுறைகள் ஏற்பட்டு அந்த 12 இப்போது 15 ஆகியுள்ளது. எனக்கும் இதில் மிகவும் வியப்பு தான். இப்போது சிலர் FAMILY TREE என கணினியில் உருவாக்கி வருகிறார்கள்.

      எந்த கணினி வசதிகளும் இல்லாதபோதே என் மூதாதயர்கள் இவற்றையெல்லாம் குறித்து வைத்துப்பாதுகாத்துள்ளது மிகவும் வியப்பாகத்தான் உள்ளது.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  37. // ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திFebruary 23, 2013 at 8:04 PM
    தலைப்பைப் பார்த்ததும் உங்கள் துணைவியாரைப் பற்றி தான் எழுதுகிறீர்கள் என்று எதிர்பார்த்தேன்..என்ன ஒரு ஏமாற்றம்! //

    // வை.கோபாலகிருஷ்ணன்February 24, 2013 at 1:08 PM
    வாங்கோ ஸ்வாமீ ! வணக்கம்.
    ஏமாறச்சொன்னது நானோ ..... என் மீது கோபம் தானோ ! //

    இரண்டு பதிவர்களுக்கிடையே நல்ல நகைச்சுவை. இதனைத்தான் எனது வலைச்சரம் மூன்றாம் நாள் ஆசிரியர் பணியில் ரசித்து சொல்லி இருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.தமிழ் இளங்கோ February 25, 2013 at 2:31 AM

      வாருங்கள் ஐயா,
      தங்களின் மீண்டும் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.

      // ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திFebruary 23, 2013 at 8:04 PM
      தலைப்பைப் பார்த்ததும் உங்கள் துணைவியாரைப் பற்றி தான் எழுதுகிறீர்கள் என்று எதிர்பார்த்தேன்..என்ன ஒரு ஏமாற்றம்! //

      ***** வை.கோபாலகிருஷ்ணன்February 24, 2013 at 1:08 PM
      வாங்கோ ஸ்வாமீ ! வணக்கம்.
      ஏமாறச்சொன்னது நானோ ..... என் மீது கோபம் தானோ ! *****

      //இரண்டு பதிவர்களுக்கிடையே நல்ல நகைச்சுவை.

      இதனைத்தான் எனது வலைச்சரம் மூன்றாம் நாள் ஆசிரியர் பணியில் ரசித்து சொல்லி இருந்தேன். //

      மிக்க மகிழ்ச்சி ஐயா. சிலரைப்பார்த்த அல்லது நினைத்த மாத்திரத்திலேயே நமக்கு ஓர் சந்தோஷமும் மகிழ்ச்சியும் சிரிப்பும் தானே நம்மைத்தேடி வரும்.

      அவர்கள் தான் நகைசுவை உணர்வு கொண்டவர்கள் ஆவார்கள்.

      அவருக்கு நானும் எனக்கு அவரும் அதுபோலவே தான். நேரில் சந்தித்துக்கொண்டால் எல்லாமே எங்களுக்குள் சரளமாகப் புறப்பட்டு வரும். சபை நாகரீகம் கருதி இங்கு எல்லாவற்றையும் என்னால் எழுத முடிவதில்லை.

      நல்ல மனிதர். நல்லதொரு நண்பர். எங்கள் இருவரின் நட்பும் நகைச்சுவையால் மட்டுமே வளர்ந்ததாகும். ;)))))

      நீக்கு

  38. பக்திப் பரவசமூட்டும் ஆலயங்கள் அழகு வர்ணனையுடன்.... அருமை! அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ravi krishna February 25, 2013 at 4:01 AM

      பக்திப் பரவசமூட்டும் ஆலயங்கள் அழகு வர்ணனையுடன்.... அருமை! அருமை!//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  39. அனைத்து படங்களும் அழகு !!!!
    இவ்வாறான சூழலில் வசிப்பது மிகுந்த ஆசீர்வாதம் .
    பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா ..
    எல்லா கடவுளர்களின் பார்வையிலும் நீங்கள் இருக்கிறீர்கள் ..தெப்பக்குளம் படம் இரவில் பலவர்ணங்களுடன் ஜொலிஜொலிக்கிறது .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. angelin February 25, 2013 at 8:10 AM

      வாங்கோ நிர்மலா, வணக்கம்.

      //அனைத்து படங்களும் அழகு !!!!
      இவ்வாறான சூழலில் வசிப்பது மிகுந்த ஆசீர்வாதம் .
      பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா ..
      எல்லா கடவுளர்களின் பார்வையிலும் நீங்கள் இருக்கிறீர்கள்..//

      ரொம்பவும் சந்தோஷம் நிர்மலா. மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள்.

      //தெப்பக்குளம் படம் இரவில் பலவர்ணங்களுடன் ஜொலிஜொலிக்கிறது .//

      நம் நிர்மலாவின் அன்பான வருகையும் அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களும் இங்கு அதேபோல ஜொலிஜொலிக்கின்றன. ;))))) நன்றியோ நன்றிகள்.

      நீக்கு
  40. லால்குடியில் வளர்ந்த என்னை(தற்பொழுது சென்னைவாசி) , சில நிமிடங்கள் திருச்சி, மாந்துறை, சமயபுரம், குணசீலம் போய் வந்த திருப்தியை கொடுத்துவிட்டீர்கள்.
    அற்புதமான பதிவு

    //வெள்ளைக்கார துரைமார்களையே ஆட்டிப்படைத்து அடங்க வைத்துள்ள தெய்வங்கள் இந்த மாந்துறைக்கருப்பரும், சமயபுரம் மஹமாயீயும் என்று சொன்னால் நீங்கள் யாரும் நம்பமாட்டீர்கள்.//

    இதைப் பற்றியும் அறிய ஆவலாயிருக்கிறேன்.

    என் கணவர் N.Paramasivam இன் கருத்துரை இது.




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. rajalakshmi paramasivamFebruary 25, 2013 at 9:14 AM

      வாருங்கள், வணக்கம்.

      தங்களின் மீண்டும் வருகை எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

      //லால்குடியில் வளர்ந்த என்னை (தற்பொழுது சென்னைவாசி) , சில நிமிடங்கள் திருச்சி, மாந்துறை, சமயபுரம், குணசீலம் போய் வந்த திருப்தியை கொடுத்துவிட்டீர்கள்.அற்புதமான பதிவு//

      கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.

      *****வெள்ளைக்கார துரைமார்களையே ஆட்டிப்படைத்து அடங்க வைத்துள்ள தெய்வங்கள் இந்த மாந்துறைக்கருப்பரும், சமயபுரம் மஹமாயீயும் என்று சொன்னால் நீங்கள் யாரும் நம்பமாட்டீர்கள்.*****

      //இதைப் பற்றியும் அறிய ஆவலாயிருக்கிறேன். என் கணவர் N.Paramasivam இன் கருத்துரை இது.//

      [1]

      http://jaghamani.blogspot.com/2011/07/blog-post_27.html
      அழகுக்குதிரையில் ஐயனார்

      இந்தப்பதிவுக்கு நான் எழுதியுள்ள பின்னூட்ட எண் 2 மற்றும் 3 ஆகிய இரண்டையும் தயவுசெய்து படித்துப்பாருங்கள் / தங்கள் கணவரையும் படித்துப்பார்க்கச்சொல்லுங்கள்.


      >>>>>>>>>>

      நீக்கு
    2. VGK >>>>> Mrs. rajalakshmi paramasivam Madam [2]

      [2]

      http://jaghamani.blogspot.com/2011/07/blog-post_31.html

      என்ற இந்தப்பதிவினில் நான் நம் தெய்வீகப்பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும், திருமதி சாகம்பரி அவர்களுக்கும் கொடுத்துள்ள பின்னூட்டங்களை தயவுசெய்து படித்துப்பாருங்கள் / தங்கள் கணவரையும் படித்துப் பார்க்கச் சொல்லுங்கள்.

      ஒருவேளை மாந்துறை கோயிலுக்கு தாங்கள் என்றாவது ஒருநாள் செல்ல விரும்பினால், உடலையும், உள்ளத்தையும் மிகவும் சுத்தமாக வைத்துக்கொண்டு, தைர்யமாக பயப்படாமல் செல்லுங்கள்.

      இதுபோல சொல்வதற்கு தயவுசெய்து என்னைத் தவறாக ஏதும் நினைக்க வேண்டாம். மற்ற கோயில்கள் போல அல்ல இது. ஓர் முன்னெச்சரிக்கைக்காக மட்டுமே இதை இங்கு நான் சொல்லியுள்ளேன்.

      அங்குள்ள கருப்பர் கோயிலில் தரப்படும் விபூதி + குங்குமம் + மணலை அலட்சியப்படுத்தாதீர்கள். அந்த மணலையும் நெற்றியில் கொஞ்சம் இட்டுக்கொண்டு, பத்திரமாக வீட்டு பூஜை அறையில் ஒரு சிறிய சிமிழில் போட்டு பத்திரப்படுத்துங்கள்.

      எங்காவது வெளியூர் வெளிநாடு பயணம் செல்வதானால் அதில் தங்களுடன் தங்கள் லக்கேஜுடன், இந்த மணலும் ஒரு சிறிய பொட்டலமாக எடுத்துச்செல்லுங்கள்.

      இவை யாவும் நாங்கள் எங்கள் குடும்பத்தில் இன்றுவரை பின்பற்றி வரும் பரம்பரை பரம்பரையான வழக்கம்.

      மேலே உள்ள பதிவுகளில் நான் கொடுத்துள்ள பின்னூட்டங்களைத் தவிர, வேறு எதுவும் வெளிப்படையாக என்னால் சொல்வதற்கோ பகிர்வதற்கோ முடியாத சூழ்நிலையில் உள்ளேன் என்பதைப் புரிந்து கொள்ளவும்.

      வாழ்த்துகள். அன்புடன் VGK.

      நீக்கு
  41. அரிய வாய்ப்பு உங்கள் வாழ்க்கையில்...
    மிக அருமையாக இருக்கிறது உங்கள் இல்லம் அமைந்திருக்கும் இடம். தல வரலாறு போல உங்கள் இல்ல வரலாறு மிக இனிதாக இருக்கிறது.
    அழகிய படங்களுடன் பக்திமணம் பரப்புகிறது உங்கள் பதிவு.

    அருமை! பெருமை!! சிறப்பு!!!

    பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளமதி February 25, 2013 at 9:40 AM

      வாருங்கள், தங்களுக்கு என் அன்பான வணக்கங்கள்.

      அரிய வாய்ப்பு உங்கள் வாழ்க்கையில்... மிக அருமையாக இருக்கிறது உங்கள் இல்லம் அமைந்திருக்கும் இடம். தல வரலாறு போல உங்கள் இல்ல வரலாறு மிக இனிதாக இருக்கிறது.

      அழகிய படங்களுடன் பக்திமணம் பரப்புகிறது உங்கள் பதிவு.

      அருமை! பெருமை!! சிறப்பு!!!

      பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா!//

      தங்களின் அபூர்வமான வருகையும், ரத்தினச்சுருக்கமான மிகச்சிறந்த ஆத்மார்த்தமான கருத்துக்களும் எனக்கு மனதுக்கு ஹிதமாக உள்ளன. என் மனமார்ந்த நன்றிகள், உங்களுக்கு. ;)

      என்றும் தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் செளக்யமாக சந்தோஷமாக இருக்கப் பிரார்த்திக்கிறேன்.

      நீக்கு
  42. தெப்பக்குளம் பகுதியில் பத்து நிமிடம் போல் நின்று ரசித்தேன்.. இட நெருக்கடி கூட்டம் எல்லாமே ஒரு சுவார்சியத்தைக் கொடுத்தது. படம் அழகாக இருக்கிறது.
    இராரா அவர்களின் ப்லாகைப் படிக்கிறேனோ என்று சந்தேகம் வந்துவிட்டது - கோவில் கவரேஜ்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாதுரை February 25, 2013 at 9:50 PM

      வாங்கோ, சார், வணக்கம்.

      //தெப்பக்குளம் பகுதியில் பத்து நிமிடம் போல் நின்று ரசித்தேன்..//

      மிகவும் ரஸிக்க வேண்டிய இடம் தான்.

      //இட நெருக்கடி கூட்டம் எல்லாமே ஒரு சுவார்சியத்தைக் கொடுத்தது.//

      இட நெருக்கடி + கூட்டம் இவைகளால் மட்டுமே ஒருவித சுவாரஸ்யத்தைக் கொடுக்க முடியும்.

      தில்லானா மோஹனாம்பாள் படத்தில் இடநெருக்கடி + கூட்டம் மட்டுமே இரயிலில் பயணம் செய்யும் சிவாஜிக்கும் பத்மினிக்கும் மட்டுமல்லாமல் படம் பார்த்த நமக்கும் ஒருவித சுவாரஸ்யத்தைக் கொடுத்தது என்பது தானே உண்மை ;)))))

      //படம் அழகாக இருக்கிறது.//

      சந்தோஷம்.

      //இராரா அவர்களின் ப்லாகைப் படிக்கிறேனோ என்று சந்தேகம் வந்துவிட்டது - கோவில் கவரேஜ்!//

      அடாடா, அவர்கள் இதிலெல்லாம் [அதாவது க வ ரே ஜி ல்] ஓர் இமயமலை, சார்! நானெல்லாம் சும்மா ஜுஜுபீ !!

      அவர்களுடன் நான் மோதினால், கடைசியில் என் மண்டைதான் உடையும் ;))))))

      அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, சார்.

      நீக்கு
  43. அருமையான இடம். குணசீலமும், சமயபுரமும் ஒருமுறை சென்றிருக்கிறேன். மாந்துறை சென்றதில்லை. தங்கள் வீட்டுக்கும் சுற்றியுள்ள கோவில்களுக்கும் ஒருமுறை வர வேண்டும்.

    நானும் தலைப்பை பார்த்ததும் மாமியைப் பற்றித் தான் எழுதியிருக்கிறீர்கள் என்று நினைத்தேன்...:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவை2தில்லி February 26, 2013 at 12:16 AM

      வாங்கோ, வணக்கம்.

      //அருமையான இடம். குணசீலமும், சமயபுரமும் ஒருமுறை சென்றிருக்கிறேன். மாந்துறை சென்றதில்லை.//

      குணசீலம் + சமயபுரம் அளவு மாந்துறைக்கு நீங்கள் மட்டுமல்ல யாருமே அதிகம் சென்றிருக்க மாட்டார்கள் தான். அதில் ஒன்றும் வியப்பு இல்லை.

      நீங்கள் தற்சமயம் திருச்சிவாசியாகி விட்டதால் ஒருவேளை மாந்துறைக் கோயிலுக்குச் செல்ல விரும்பினால், மேலே நான்
      Mrs. Rajalakshmi Paramasivam Madam அவர்களுக்குக் கடைசியாகக் கொடுத்துள்ள பின்னூட்டத்தில் உள்ள எச்சரிக்கைகளை மறக்க வேண்டாம்.

      //தங்கள் வீட்டுக்கும் சுற்றியுள்ள கோவில்களுக்கும் ஒருமுறை வர வேண்டும்.//

      வாங்கோ, அவசியமாக வாங்கோ. ஏற்கனவே வந்தபோது எதையும் கவனிக்காமல் உடனே புறப்பட்டுப்போய் விட்டீர்கள்.

      அடுத்தமுறையாவது பொறுமையாக இருந்து எல்லாவற்றையும் தரிஸித்துச் செல்வது போல நேரம் ஒதுக்கிக்கொண்டு வாருங்கள்.

      //நானும் தலைப்பை பார்த்ததும் மாமியைப் பற்றித் தான் எழுதியிருக்கிறீர்கள் என்று நினைத்தேன்...:)//

      ;))))))) அடடா, நம் ஆச்சி மேடம், அதிரா, திருமதி ஜெயந்திரமணி, ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி இவர்களுடன் நீங்களும் சேர்ந்து விட்டீர்களா? என்னைக்கிண்டலும் கேலியும் செய்ய. ;))))))

      இந்த லிஸ்டில் பின்னூட்டம் மூலம் இல்லாமல் மெயில் மூலம் என்னைக்கிண்டலும் கேலியும் செய்யும் கோஷ்டியொன்று தனியாகவே உள்ளது.

      நான் மேலே நம் ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி” அவர்களுக்குக்கொடுத்துள்ள பதிலே உங்களுக்கும் பொருந்தும்.
      ;))))))

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், மென்மையான + மேன்மையான + நகைச்சுவையான கிண்டலுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      நீக்கு
  44. மாந்துறை கருப்பன் எங்கள் குல தெய்வம் . நமது குல தெய்வம் என்று சொல்ல வேண்டும்.
    வானப்பட்டரை மகமாயி தாயார் கோவில், நாகனாத ஸ்வாமி கோவில், நந்தி கோவில், தெப்பக்குளம் அருகே
    மாணிக்க வாசகர் கோவில் , குணசீலப்பெருமாள்

    எல்லோருடைய தரிசனமும் கிடைக்கப்பெற்றதற்கு தங்களுக்கு நன்றி.

    திரு. தி. தமிழ்.இளங்கோ அவர்களுக்கும் நன்றி சொல்லவேண்டும். அவர்கள் பதிவில் உங்களை சந்தித்ததாக சொல்லி இருக்கிறார்.
    நாக நாத ஸ்வாமி உற்சவ ஊர்வலத்தையும் படங்கள் எடுத்து போட்டு இருக்கிறார்.

    அடுத்த தடவை எங்கள் மாந்துறை கருப்பனை தரிசிக்க வரும்பொழுது உங்களையும்
    கண்டு அளவளாவ வேண்டும்.

    சுப்பு ரத்தினம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. sury Siva February 26, 2013 at 9:45 PM

      வாருங்கள் ஐயா, நமஸ்காரங்கள்.

      //மாந்துறை கருப்பன் எங்கள் குல தெய்வம் . நமது குல தெய்வம் என்று சொல்ல வேண்டும். //

      ஆம் .... நம் குலதெய்வம் என்றே சொல்ல வேண்டும்.

      //வாணப்பட்டரை மகமாயி தாயார் கோவில், நாகனாத ஸ்வாமி கோவில், நந்தி கோவில், தெப்பக்குளம் அருகே மாணிக்க வாசகர் கோவில் , குணசீலப்பெருமாள் எல்லோருடைய தரிசனமும் கிடைக்கப்பெற்றதற்கு தங்களுக்கு நன்றி.//

      மிக்க சந்தோஷம், ஐயா.

      //திரு. தி. தமிழ்.இளங்கோ அவர்களுக்கும் நன்றி சொல்லவேண்டும். அவர்கள் பதிவில் உங்களை சந்தித்ததாக சொல்லி இருக்கிறார்.
      நாகநாத ஸ்வாமி உற்சவ ஊர்வலத்தையும் படங்கள் எடுத்து போட்டு இருக்கிறார்.//

      ஆம், எனக்கும் மெயில் மூலம் தகவல் கொடுத்திருக்கிறார். மிகவும் நல்ல மனிதர். என் மீது மிகுந்த அன்பும் பாசமும் வைத்துள்ளார்கள். நிச்சயமாக நன்றி கூறத்தான் வேண்டும்.

      //அடுத்த தடவை எங்கள் மாந்துறை கருப்பரை தரிசிக்க வரும்பொழுது உங்களையும் கண்டு அளவளாவ வேண்டும்.
      -சுப்பு ரத்தினம்.//

      சந்தோஷம். வாருங்கள். எல்லோரும் சேர்ந்தே அளவளாவுவோம்.

      நீக்கு
  45. தெரிந்த இடங்கள்..பார்த்துப்பார்த்து பரவசப்பட்ட ஆலயங்கள்....கேட்டதெல்லாம் கொடுத்த தெய்வங்கள்....மீண்டும் ஒரு முறை திருச்சிக்கு வர உங்கள் பதிவு தூண்டுகிறது. அன்புடன், எம்.ஜே.ராமன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. your name MANAKKAL .
      I am thrilled by hearing the name MANAKKAL. Manakkal is a village close to Lalgudi, and near that in another village Angarai I was born some seventy two years ago.
      Would u please let me know your cell or landline number, if u belong to the Manakkal village ? Long long ago my cousins were there, and i am wondering whether they are still there. I dont know whether it could be you also.
      subbu rathinam
      meenasury@gmail.com

      நீக்கு
    2. ManakkalFebruary 27, 2013 at 2:32 AM

      வாங்கோ Mr. M J Raman Sir, நமஸ்காரம்.

      //தெரிந்த இடங்கள்.. பார்த்துப்பார்த்து பரவசப்பட்ட ஆலயங்கள்.... கேட்டதெல்லாம் கொடுத்த தெய்வங்கள்.... //

      ’கேட்டதெல்லாம் கொடுத்த தெய்வங்கள்’ என வெகு அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.

      உங்களுக்கு அன்று கேட்டதெல்லாம் கொடுத்த
      எங்களுக்கு இன்று கேட்டதெல்லாம் கொடுக்கும்
      நாளைக்கு நம் வாரிசுக்கெல்லாம் வாரிக் கொடுக்கப்போகிற தெய்வங்களே தான், சந்தேகமே இல்லை.

      //மீண்டும் ஒரு முறை திருச்சிக்கு வர உங்கள் பதிவு தூண்டுகிறது. அன்புடன், எம்.ஜே.ராமன்.//

      திருச்சி உங்கள் ஊர்; நமது ஊர். எப்போது வேண்டுமானாலும் நீங்கள் வரலாம். வரவேற்கக் காத்திருக்கிறோம். அன்புடன் கோபு.






      நீக்கு
    3. sury Siva February 27, 2013 at 5:29 AM
      your name MANAKKAL ??????.

      ஐயா, அவர் பெயர் Mr M J RAMAN. அவரின் சொந்த ஊர் நீங்கள் சொல்லும் அதே மணக்கால் கிராமம் தான். [லால்குடி >> அன்பில் மார்க்கத்தில் உள்ள, லால்குடிக்கு மிக அருகே உள்ள கிராமம்] . அவர் தற்சமயம் வசிப்பது மும்பை.

      He is a Retired Officer from Bank of India. Just for your information, please.

      நீக்கு

  46. தங்கள் பதிவின் பக்கப்பார்வை

    //Total Pageviews
    100009 //

    ஒரு லட்சத்தைத்தாண்டி இருக்கிறது ,,பாராட்டுக்கள்..வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  47. இராஜராஜேஸ்வரிFebruary 27, 2013 at 10:24 AM

    தங்கள் பதிவின் பக்கப்பார்வை //Total Pageviews 100009 //

    ஒரு லட்சத்தைத்தாண்டி இருக்கிறது ... பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்...

    அம்பாள் வாயால் அசரீரி போல இதைச்சொல்லி நான் இப்போது கேட்டதில் எனக்கும் ஓர் மகிழ்ச்சி தான்.

    ’குலதெய்வமே உன்னைக்கொண்டாடுவேன் !’


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. VGK >>>> திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் [2]

      சுமார் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பாகவே ஒரு நாள் இதே போன்ற நள்ளிரவு வேளையில், நான் தங்களுக்குக் கொடுத்திருந்த ஒரு கமெண்ட் மூலம், அதுவே என்னை தங்களுக்கு ஒரு லக்ஷமாவது பார்வையாளராக ஆக்கியுள்ளதாகவும், அகஸ்மாத்தாக இப்படி அமைந்தது தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் சொல்லி அகம் மகிழ்ந்து போனீர்கள்,

      அது இன்னும் எனக்குப்பசுமையாக நினைவில் உள்ளது. ;)))))

      தாங்கள் மட்டும் இதைச்சுட்டிக்காட்டி இப்போது என்னிடம் சொல்லியிருக்காவிட்டால், இதை இப்போது நான், என் தளத்தில் கவனித்திருக்கவே மாட்டேன். சந்தோஷம். நன்றி.

      அன்புடன் VGK

      நீக்கு
  48. பதில்கள்
    1. அஜீம்பாஷா February 27, 2013 at 10:58 AM

      //100009 க்கு வாழ்த்துக்கள்.//

      மிக்க நன்றி, நண்பரே. ;)))))

      நீக்கு
  49. பதில்கள்
    1. சே. குமார் March 1, 2013 at 12:15 PM
      படங்களுடன் அழகான பகிர்வு ஐயா.//

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  50. சார்
    வலைப்பதிவு எழுத ஆரம்பித்து போட்டோகிராபராகவும் கலக்குறிங்க.நந்தி படம் 2 முறை வந்துள்ளது .முக்கால்வாசி பின்னுட்டங்கள் படித்தேன்,பதிவைவிட அங்கு சுவாரஸ்யங்கள் விபரங்கள் அமைந்துள்ளன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. thirumathi bs sridhar March 2, 2013 at 2:30 AM

      வணக்கம். வாங்கோ ....... அம்மாடி!

      எங்க ஊரிலே தைப்பூசத்தன்று, சாயங்காலமாக காவிரியில் தீர்த்தவாரி முடித்துவிட்டு, திருச்சியில் உள்ள எல்லாக்கோயில், புறப்பாட்டு ஸ்வாமிகளும், மேள தாள நாயனங்களுடன் திருச்சி மலையைச்சுற்றி விடியவிடிய வந்துகொண்டே இருக்கும்.

      எங்கள் தெரு வழியாகத்தான் அந்த ஸ்வாமி ஊர்வலம் புறப்படும்.

      அதில் பாலக்கரை பிள்ளையார் என்று ஒன்று மட்டும் கடைசியோ கடைசி ஸ்வாமியாக வரும்.

      அது வருவதற்குள் தைப்பூச இரவு முடிந்து விடியற்காலம் ஆகிவிடும்.

      ஏனோ உங்களின் வருகை எனக்கு எங்கள் ஊர் தைப்பூச பாலக்கரை பிள்ளையாரை நினைவு கூர்ந்தது. எனினும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.;)

      //சார், வலைப்பதிவு எழுத ஆரம்பித்து போட்டோகிராபராகவும் கலக்குறிங்க.//

      அதெல்லாம் ஒன்றும் இல்லை. ஒவ்வொருவரும் கலக்குவதைப் பார்த்தால் நானெல்லாம் சும்மா ஜுஜுபியாக்கும் உங்களுகே தெரியுமாக்கும். ஹுக்க்க்க்க்கும்.

      //நந்தி படம் 2 முறை வந்துள்ளது. //.

      ஆமாம். அப்போத்தான் அதை ஒரு குறையாகவாவது சொல்ல நீங்க வரலாம் என்ற எதிர்பார்ப்புடன் 2 முறை வெளியிட்டுள்:ளேன். ;)

      //முக்கால்வாசி பின்னுட்டங்கள் படித்தேன்.//

      முக்கால்வாசி பின்னூட்டங்கள் மட்டும் தானா? அப்போ கோவை2தில்லி மேடத்துக்கு நான் எழுதினதைப் படிக்கவில்லையா? அடடா!

      //பதிவைவிட அங்கு சுவாரஸ்யங்கள் விபரங்கள் அமைந்துள்ளன.//

      எப்போதுமே மேலேயுள்ளதை விட, கீழேயுள்ளவற்றில் தான் சுவாரஸ்யமே இருக்குமாக்கும். ;)))))

      அதாவது பதிவை விட பின்னூட்டங்கள் + பதில்களில் தான் சுவாரஸ்யம் என சொல்லியுள்ளேனாக்கும்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  51. குல தெய்வத்தில் கூட சிறப்பா. எல்லாருக்கும் ஒரு குல தெய்வம்தான் இருக்கும். உங்களுக்கு மட்டும் மூன்றா?

    இதில் நான் பார்த்திருப்பது சமயபுரத்தாளை மட்டுமே.

    ”ஆசை இருக்கு தாசில் பண்ண
    அதிர்ஷ்டம் இருக்கு மாடு மேய்க்க”ன்னு சொன்னா மாதிரி எனக்கும் வலையில் விளையாட ஆசை அதிகம் இருக்கு. ஆனா நேரம் தான் இல்லை.

    50வது பதிவிற்காக காத்திருப்பதால் IN AND OUT CHENNAI ல் வெளி வந்த கவிதையைக்கூட பதிவிடவில்லை. மேலும் நல்ல நாள் பார்த்து தொடர் பதிவைத் தொடரலாம் என்று இருக்கிறேன்.

    நன்றியுடன்
    ஜெயந்தி ரமணி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. JAYANTHI RAMANI March 2, 2013 at 3:23 AM

      வாங்கோ, வணக்கம்.

      எங்கள் ஊர் பாலக்கரைப் பிள்ளையார் என்பது ”இரட்டைப்பிள்ளையார்” கோயில்.

      என்ன ஒரு பொருத்தம் பாருங்கோ. மேலே என் அன்புக்குரிய ஆச்சி மேடமும், அதே என் அன்புக்குரிய தாங்களும் இரட்டைப் பிள்ளையார்கள் போலவே சேர்ந்து கருத்தளிக்க வந்துள்ளீர்கள்.
      தாமதமானாலும் இரட்டிப்பு சந்தோஷம் எனக்கு. ;)

      //குல தெய்வத்தில் கூட சிறப்பா. எல்லாருக்கும் ஒரு குல தெய்வம்தான் இருக்கும். உங்களுக்கு மட்டும் மூன்றா?//

      ஒன்றுக்கு இரண்டு உபத்ரவத்திற்கு மூன்று என்று சொல்லுவா, பெரியவாளெல்லாம்.

      அதுபோலெல்லாம் இல்லாமல் எனக்கு குலதெய்வங்கள் மட்டுமே மூன்றாக அமைந்துள்ளது

      [எனக்குப் பிள்ளைகளும் மூன்றே]

      //இதில் நான் பார்த்திருப்பது சமயபுரத்தாளை மட்டுமே.//

      அதுபோதுமே.

      ”சமயபுரத்தாளே சாக்ஷி” மீதியொன்றும் நீங்கள் பார்க்கவில்லை என்பதற்கு.

      சமயபுரம் மஹமாயீக்குள் எல்லாமே அடங்கிவிடுகிறது. கவலையை விடுங்கோ.

      //”ஆசை இருக்கு தாசில் பண்ண அதிர்ஷ்டம் இருக்கு மாடு மேய்க்க”ன்னு சொன்னா மாதிரி எனக்கும் வலையில் விளையாட ஆசை அதிகம் இருக்கு.//

      விளையாடிண்டு தானே இருக்கேள், லயாக்குட்டியோடும், வலையோடும், ஆத்தோடும், ஆத்துக்காரரோடும், அலுவலகத்தோடு, IN-OUT CHENNAI யோடும். இன்னும் என்னவாம்?.

      //ஆனா நேரம் தான் இல்லை.//

      உங்கள் சுறுசுறுப்புக்கு ஒரு நாளைக்கு 24 நேரமே போதாது தான்.

      //50வது பதிவிற்காக காத்திருப்பதால் IN AND OUT CHENNAI ல் வெளி வந்த கவிதையைக்கூட பதிவிடவில்லை.//

      அதை பேசாமல் பதிவு இட்டு வெளியிடுங்கோ. ஐம்பதாவது பதிவாக அதுவே இருந்து விட்டுப்போகட்டும் . அதனால் என்ன?
      NO PROBLEM AT ALL.

      //மேலும் நல்ல நாள் பார்த்து தொடர் பதிவைத் தொடரலாம் என்று இருக்கிறேன்.//

      சந்தோஷம். உங்கள் செளகர்யப்படியே செய்யுங்கோ. ஒன்றும் அவசரமே இல்லை.

      //நன்றியுடன் ஜெயந்தி ரமணி//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  52. உங்கள் பதிவுகளை தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  53. சே...சே...சே... இம்முறை மீக்கு க்ஹார்ட் பெட்டிதான் கிடைச்சிருக்காம்... அதாவது ரெயினின்... ஆங்கிலத்தில சொல்லிட்டேன்ன் கோபு அண்ணனுக்குப் புரியுமோ தெரியாதென்பதால்ல்:) தமிழ்ல சொல்கிறேன்ன் :) புகையிரதத்தின் கடேசிப் பெட்டி...

    சரி என்னவானாலும் ஏறிட்டனெல்லோ... அதுதானே முக்கியம் விஷயத்துக்கு வருவம்..

    ///வீட்டில் புதிதாகக் குழந்தைகள் பிறந்தால் முடிகாணிக்கை செலுத்த வேண்டியதும் இதே வரிசைக் கிரமப்படி தான் செய்வது வழக்கம்.
    ///

    ஏன் 3 கோயிலிலும் முடி எடுப்பிங்களோ? நாங்கள்.. முன்ன முன்னம் ஒரு கோயிலுக்கு நேர்ந்து அதிலயே மொட்டையாக வழிப்பதுதான் வழக்கம்... அது எப்படி 3 கோயிலிலும் மொட்டை போடுவது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira March 9, 2013 at 11:00 AM

      வாங்கோ அதிரா, வணக்கம்.

      //சே...சே...சே... இம்முறை மீக்கு க்ஹார்ட் பெட்டிதான் கிடைச்சிருக்காம்... அதாவது ரெயினின்... ஆங்கிலத்தில சொல்லிட்டேன்ன் கோபு அண்ணனுக்குப் புரியுமோ தெரியாதென்பதால்ல்:) தமிழ்ல சொல்கிறேன்ன் :) புகையிரதத்தின் கடேசிப் பெட்டி...

      சரி என்னவானாலும் ஏறிட்டனெல்லோ... அதுதானே முக்கியம் விஷயத்துக்கு வருவம்..//

      அதானே! ... ஏறிட்டீங்களே ..... அது தான் முக்கியம்.

      ஓடிவந்து ஏறியதால் மூச்சு வாங்கலாம். சூடா ஒரு டீ [ரீ] குடியுங்கோ, ப்ளீஸ். அப்புறம் விஷயத்து வருவம். ;)

      ’ரெயின்’ = TRAIN புகையிரதத்தின் = புகைவண்டியின்
      ரொம்ப கஷ்டப்பட்டு புரிஞ்சுகிட்டேனாக்கும். நாங்க ’ரயில் வண்டி’ அல்லது ’டிரையின்’னு சொல்லுவோம்.

      //ஏன் 3 கோயிலிலும் முடி எடுப்பிங்களோ? நாங்கள்.. முன்ன முன்னம் ஒரு கோயிலுக்கு நேர்ந்து அதிலயே மொட்டையாக வழிப்பதுதான் வழக்கம்... அது எப்படி 3 கோயிலிலும் மொட்டை போடுவது?//

      ஆமாம். எங்கள் பரம்பரை வழக்கம். 3 கோயிலுக்கும் முடி காணிக்கைக் கொடுக்கணும். குழந்தை பிறந்ததும் ஓர் ஆண்டு முடிவதற்குள் முதல் முடி கொடுக்கணும்.

      அது ஒருவேளை முடியாமல் போனால் இரண்டு வயது பூர்த்தி ஆன பிறகு, அதாவது மூன்றாம வயது பிறந்த பிறகு தான், முதல் முடி எடுக்கணும்.

      அதன் பிறகு நம் செளகர்யப்படி ஏதாவது ஒரு நாள் இரண்டாம் முடி அதன் பிறகு ஏதாவது ஒருநாள் மூன்றாவது முடி எடுக்கலாம்.

      முதல் முடிக்கு மட்டும் ஒரு வயதிற்குள் அல்லது மூன்றாம் வயது பிறந்த பிறகு என ஏதோ சில விதிமுறைகள் வைத்துள்ளனர்.



      நீக்கு
  54. மாந்துறை சிவன் கோயில்பற்றி நான் அறிந்ததில்லை... ஆனா எனக்கு சிவன் கோயில் பிடிக்கும்... அதிகமாக சிவன், வைரவரைத்தான் கும்பிடுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira March 9, 2013 at 11:03 AM

      //மாந்துறை சிவன் கோயில்பற்றி நான் அறிந்ததில்லை...//

      அதைப்பற்றி இங்கு தமிழ்நாடு திருச்சியில் உள்ள ஆளுங்களுக்கே அவ்வளவாகத் தெரியாதூஊஊஊஊ.

      //ஆனா எனக்கு சிவன் கோயில் பிடிக்கும்... அதிகமாக சிவன், வைரவரைத்தான் கும்பிடுவேன்.//

      ரொம்பவும் சந்தோஷம் அதிரா.

      நான் கூட நேற்று சனிக்கிழமை இரவு 7 மணி சுமாருக்கு இங்குள்ள சிவன் கோயில் போய்விட்டு வந்தேன்.

      09.03.2013 சனிப்பிரதோஷம் மிகவும் விசேஷம்.

      ஒரே கூட்டமாக இருந்தது. ரிஷப வாகனத்தில் ஸ்வாமி புறப்பாடு ஜோராக இருந்தது.

      நீக்கு
  55. இலங்கையில் கொழும்பில் ஹொட்டஹேனாவில்... சில வருடங்களுக்கு முன் ஒரு அம்மன் கோயில் கட்டப்பட்டது, அங்கு உள் வீதிய்ல் பல கடவுள்களினுருவங்கள் ப்பெயிண்ட் பண்ணப்பட்டு கீழே எந்தக் கோயில் தெய்வம் எனவும் எழுதப்பட்டிருக்கும்.

    அதில் ஒன்று சமயபுரத்து மாரியம்மன். எனக்கு அப்பெயரைக் கேட்டதுமே பிடித்து விட்டது. அதிலிருந்து சமயபுரமாரியம்மனையும் மனதில் நினைத்துக் கும்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira March 9, 2013 at 11:05 AM

      //இலங்கையில் கொழும்பில் ஹொட்டஹேனாவில்... சில வருடங்களுக்கு முன் ஒரு அம்மன் கோயில் கட்டப்பட்டது, அங்கு உள் வீதிய்ல் பல கடவுள்களினுருவங்கள் ப்பெயிண்ட் பண்ணப்பட்டு கீழே எந்தக் கோயில் தெய்வம் எனவும் எழுதப்பட்டிருக்கும்.

      அதில் ஒன்று சமயபுரத்து மாரியம்மன். எனக்கு அப்பெயரைக் கேட்டதுமே பிடித்து விட்டது. அதிலிருந்து சமயபுரமாரியம்மனையும் மனதில் நினைத்துக் கும்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டேன்.//

      ஆஹா, அற்புத நினைவலைகள் தான். சமயபுரம் மாரியம்மனை மனதில் நினைத்துக் கும்பிடுங்கோ. அது மிகவும் நல்ல அம்பாள்.

      Good Night Athira - Midnight 1.30 ஆச்சு!

      சனி போய் ஞாயிறு வந்தாச்சு. இன்று ஞாயிறு சிவராத்திரி.

      10.03.2013 ஞாயிறு இரவு முழுவதும் விழித்திருந்து ’சிவ சிவா’ அல்லது ‘சிவாய நம ஓம்” என ஜபிக்க வேண்டும்.

      சிவன் கோயிலில் நடக்கும் அபிஷேகம் பூஜை முதலியவற்றை தரிஸிக்க வேண்டும்.

      ஒன்றும் முடியாவிட்டால் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் பதிவினிலாவது சிவனை தரிஸிக்க வேண்டும்.

      Bye for Now Athira.

      நீக்கு
  56. சூடான செய்தியும் படமும் சுடுகிறது... உங்கள் ஜன்னலில் இருந்தே அனைத்து காட்சிகளையும் பார்க்கலாம்.. உடம்பு முடியாவிட்டாலும் கூட... சபாபதே...!!!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira March 9, 2013 at 11:07 AM
      //சூடான செய்தியும் படமும் சுடுகிறது... உங்கள் ஜன்னலில் இருந்தே அனைத்து காட்சிகளையும் பார்க்கலாம்.. உடம்பு முடியாவிட்டாலும் கூட... சபாபதே...!!!.//

      அதே அதே .... சபாபதே !

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான சிரத்தையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், அதிரா.

      நாளை சந்திப்போம்.Bye for Now.

      நீக்கு
  57. உங்க பதிவின் மூலமாகத்தான் தமிழ் நாட்டில் உள்ள பல கோவில்கள் பற்றிய விவரங்கள் தெரிஞ்சுக்கறேன். ராஜேஸ்வரி அம்மாவும் இப்படி நிறையா கோவில்கள் பற்றி சொல்லி வராங்க.படங்களும் விவரங்களும் தத்ரூபமா இருக்கு.பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  58. பூந்தளிர் March 27, 2013 at 9:25 PM

    வாங்கோ, வணக்கம்.

    //உங்க பதிவின் மூலமாகத்தான் தமிழ் நாட்டில் உள்ள பல கோவில்கள் பற்றிய விவரங்கள் தெரிஞ்சுக்கறேன்.//

    கோயில்களைப்பற்றி நான் ’கற்றது கைமண் அளவு’.

    அதற்கென்றே தனிப்பிறவி எடுத்தவர்கள் உள்ளார்கள். நான் ஏற்கனவே உங்களுக்குப் பலமுறை சொல்லியிருக்கிறேன் - ‘தெய்வம் இருப்பது எங்கே’ என்று. ;)))))

    //திருமதி. ராஜேஸ்வரி அம்மாவும் இப்படி நிறையா கோவில்கள் பற்றி சொல்லி வராங்க.//

    கரெக்ட்.

    அவர்கள் இதுபோன்ற விஷயங்களின் இமயமலைபோல!

    கடல் அளவு விஷய ஞானங்கள் உள்ளவர்கள்.

    கடுமையாக உழைப்பவர்கள்.

    நமக்காகவே தினமும் ஒரு பதிவு அதுவும் அழகழகான படங்களுடன் + அற்புதமான விளக்கங்களுடன் தந்து வருகிறார்கள்.

    அவர்கள் ஒரு தகவல் களஞ்சியம்.

    நமக்கு இன்று கிடைத்துள்ள மாபெரும் ‘பொ க் கி ஷ ம்’ ;)))))

    நான் ஏற்கனவே சொல்லியுள்ளபடி தினமும் அவர்களின் பதிவுக்குத்தட்டாமல் சென்று, பாருங்கள், படியுங்கள், கருத்தும் கூறுங்கள். அதுவே நேரில் கோயிலுக்குச்சென்று வந்த மன அமைதியையும், புண்ணியத்தையும் உங்களுக்குத்தரும்.

    தாங்கள் எனக்காக ஒரு உதவி செய்ய வேண்டும். கீழ்க்கண்ட பதிவுக்கு உடனே சென்று அதில் உள்ள 115 பின்னூட்டங்களையும், பொறுமையாகப் படிக்க வேண்டும். அதன் பிறகு 116 ஆவது பின்னூட்டம் ஒன்றும் நீங்கள் எழுத வேண்டும். அப்போது தான் இந்த நம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாளைப்பற்றி, உங்களுக்குக் கொஞ்சமாவது தெரியவரும்.

    http://jaghamani.blogspot.com/2013/01/blog-post_26.html

    அவர்கள் ஓர் ஜொலிக்கும் வைரமாக்கும். ;))))))

    அரிய வாய்ப்பினை நழுவ விடாதீர்கள்.

    அவ்வளவு தான் என்னால் சொல்லமுடியும்.

    //படங்களும் விவரங்களும் தத்ரூபமா இருக்கு.பகிர்வுக்கு நன்றி//

    அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  59. படங்கள் பகிர்வு எல்லாமே சிறப்பா க இருக்கு அதுவும் அந்த ஆனந்தவல்லி அம்பாள் சன்னிதி படம் கண்ணுக்குள்ளயே நிக்குது. வெகு தத்ரூபம். பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.ஆமா அங்க போட்டோ எடுக்க அனுமதிக்குராங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் March 27, 2013 at 10:01 PM

      வாங்கோ, மீண்டும் வருகை மகிழ்வளிக்கிறது.

      //படங்கள் பகிர்வு எல்லாமே சிறப்பாக இருக்கு //

      சந்தோஷம்.

      //அதுவும் அந்த ஆனந்தவல்லி அம்பாள் சன்னிதி படம் கண்ணுக்குள்ளயே நிக்குது. வெகு தத்ரூபம். பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.//

      மிக்க மகிழ்ச்சி.

      //ஆமா, அங்கே போட்டோ எடுக்க அனுமதிக்கிறார்களா?//

      பொதுவாக எந்தக்கோயிலிலுமே அனுமதிப்பது இல்லை.

      தேவஸ்தான நிர்வாகிகளிடம், ஸ்பெஷலாகச் சொல்லி, அனுமதி வாங்கித்தான் எடுக்க வேண்டியுள்ளது. சிலர் மட்டும் அனுமதிப்பார்கள். பலரும் அனுமதிக்க மறுப்பார்கள்.

      கோயிலில் நாம் நடத்தும், மாப்பிள்ளை அழைப்புகள், நிச்சயதார்த்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் போட்டோ வீடியோ கவரேஜ் எல்லாம் தான் நடந்து வருகிறது. அப்போது நாம் அதற்கான கட்டணம் செலுத்திவிடுவதால், யாரும் அதிகமாகக் கண்டுகொள்வது இல்லை.

      நீக்கு
  60. சாஆஆஆஆர் இந்தப்பதிவுக்கு 6 பின்னூட்டம் கொடுத்திருந்தேனே. 2 தானே வந்திருக்கு. ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் March 28, 2013 at 9:47 PM

      வாங்கோ பூந்தளிர், வணக்கம்.

      //சாஆஆஆஆர் இந்தப்பதிவுக்கு 6 பின்னூட்டம் கொடுத்திருந்தேனே. 2 தானே வந்திருக்கு. ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்?//

      எனக்கு 2 மட்டும் தான் வந்துள்ளது. மீதி எங்கே? எங்கே? எங்கே?
      மீதியை போஸ்ட் செய்யாமல் தலையணிக்கு அடியில் வைத்திருப்பீர்கள் என நினைக்கிறேன். தூக்கக்கலக்கமாக உள்ளீர்கள் என்று தோன்றுகிறது.

      பார்த்து தேடி அவற்றையும் அனுப்பி வையுங்கோ. அவற்றைக்காணாமல் என் தலையே வெடிச்சுடும் போல உள்ளதூஊஊஊஊஊ.

      நீக்கு
  61. நீங்க கொடுத்தலிங்க் படி 116- வது பின்னூட்டம் கொடுத்துட்டு, பின்னூட்டங்கள் எல்லாமும் படிச்சு ரசித்து வந்தேன். அவங்க பக்கத்தில் கூட நம்மால நிக்க முடியாது. என்ன ஒரு திறமையானவங்க. சாரி நம்மாலன்னு சொல்லிட்டேன் என்னாலன்னு சொல்லி இருக்கணும்.உங்க பதிவெல்லாம் படிக்க அரைமணி நேரம் ஒதுக்க சொல்லி இருந்தீங்க இல்லியா. ம்ஹூம் போதவே போதாது சார்.இங்க வந்தா வேர எந்த பக்கமும் போகவே மனசு வரதில்லே.அப்படி உங்க எழுத்தால கட்டிப்போட்டுடுரீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் March 28, 2013 at 10:08 PM

      வாங்கோ, பூந்தளிர். மீண்டும் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.

      //நீங்க கொடுத்தலிங்க் படி 116- வது பின்னூட்டம் கொடுத்துட்டு, பின்னூட்டங்கள் எல்லாமும் படிச்சு ரசித்து வந்தேன்.//

      சந்தோஷம். சமத்தோ சமத்து நீங்கள். நானும் பார்த்தேன் அதை.
      மிக்க நன்றி.

      //அவங்க பக்கத்தில் கூட நம்மால நிக்க முடியாது. என்ன ஒரு திறமையானவங்க.//

      அசாத்ய திறமைசாலி தான். ;) அவங்க பக்கத்திலே நாம ஏன் போய் நிற்கணும்? போட்டோ எடுத்துக்கொள்ளவா? வேண்டாம்மா வேண்டாம்.

      //சாரி நம்மாலன்னு சொல்லிட்டேன் என்னாலன்னு சொல்லி இருக்கணும்.//

      அதனால் பரவாயில்லை. நீங்க சரியாகத்தான் சொல்லியிருக்கீங்க. என்னாலும் கூட முடியவே முடியாது.

      //உங்க பதிவெல்லாம் படிக்க அரைமணி நேரம் ஒதுக்க சொல்லி இருந்தீங்க இல்லியா. ம்ஹூம் போதவே போதாது சார்.//

      அப்படியா? ஆச்சர்யமாக இருக்கே!!

      //இங்க வந்தா வேற எந்த பக்கமும் போகவே மனசு வரதில்லே. அப்படி உங்க எழுத்தால கட்டிப்போட்டுடுறீங்க//

      என் எழுத்துக்கள் என்ன கயிறா? பாசக்கயிறா? உங்களைப்போய் நான் கட்டிப்போட? என்னவெல்லாமோ சொல்றீங்கோ, நேக்கு ஒண்ணுமே புரியலையாக்கும். ;)

      தங்களின் அன்பான மீண்டும் வருகைக்கும், அழகழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், பூந்தளிர்.
      .

      நீக்கு
  62. அன்பின் வை.கோ - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவா குலதெய்வம் என்றால் என்ன ? என அருமையாக விளக்கம் கொடுத்து குல தெய்வத்தினைக் கும்பிட வேண்டிய காரணத்டையும் அழகாக விளைக்கியமையைப் பகிர்ந்தது நன்று - http://gopu1949.blogspot.in/2013/11/88.html இப்பதிவினில்.

    அங்கிருந்து இங்கு வந்தேன் - பிப்ரவர் 25 2013ல் மறுமொழி இட்டிருக்கிறேன்.

    இருப்பினும் இன்னொரு மறுமொழி :

    எங்கள் குல தெய்வம் ஒன்று. காரைக்குடி தாண்டி கோட்டையூருக்கும் பள்ளத்தூருக்கும் நடுவினில் வேலங்குடி என்ற கிராமத்தில் இருக்கும் வயல் நாச்சி அம்மன் என்கிற பெரிய நாயகி அம்மன் தான் எங்கள் குல தெய்வம். அதற்குப் பக்கத்தில் பதினெட்டாம் படிக் கருப்பர் கோவிலும் உண்டு. இரண்டு கோவிலிற்கும் செல்வோம்.

    வீட்டில் குழந்தை பிறந்தால் ( ஆணோ / பெண்ணோ ) அக்குழந்தைக்கு வய்ல் நாச்சி அம்மன் கோவிலில் ஆண்டுக்கு ஒன்றாக மூன்று முடி இறக்குவோம். அங்கு தான் குழந்தை பிறந்த உடன் காது குத்திய உடன் முடி இறக்கி பெயர் வைப்போம். அதற்குப் பிறகு ஓராண்டு இடை வெளியில் மற்ற இரு முடிகளும் இறக்குவோம். முதல் இரண்டு பிள்ளைகளுக்கு கருப்பையா /. கருப்பாயி ( ஆண் /பெண்ணுக்குத் தகுந்தவாறு ) என்றோ பெரிச்சியப்பன் / பெரியாள் என்றோ பெயர் வைப்போம். இது பல தலைமுறைகளாக நடந்து வரும் செயல். நான் எத்தனாவது தலைமுறை எனக்கூறுங்கள் பார்ப்போம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. cheena (சீனா) November 30, 2013 at 1:08 AM

      //அன்பின் வை.கோ - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவா குலதெய்வம் என்றால் என்ன ? என அருமையாக விளக்கம் கொடுத்து குல தெய்வத்தினைக் கும்பிட வேண்டிய காரணத்டையும் அழகாக விளைக்கியமையைப் பகிர்ந்தது நன்று - http://gopu1949.blogspot.in/2013/11/88.html இப்பதிவினில்.

      அங்கிருந்து இங்கு வந்தேன் - பிப்ரவர் 25 2013ல் மறுமொழி இட்டிருக்கிறேன்.

      இருப்பினும் இன்னொரு மறுமொழி : //

      வாங்கோ என் அன்பின் திரு. சீனா ஐயா, வணக்கம் ஐயா. மீண்டும் வருகை மகிழ்வளிக்கிறது, ஐயா.


      //எங்கள் குல தெய்வம் ஒன்று. காரைக்குடி தாண்டி கோட்டையூருக்கும் பள்ளத்தூருக்கும் நடுவினில் வேலங்குடி என்ற கிராமத்தில் இருக்கும் வயல் நாச்சி அம்மன் என்கிற பெரிய நாயகி அம்மன் தான் எங்கள் குல தெய்வம். அதற்குப் பக்கத்தில் பதினெட்டாம் படிக் கருப்பர் கோவிலும் உண்டு. இரண்டு கோவிலிற்கும் செல்வோம். //

      மிக்க மகிழ்ச்சி ஐயா. செட்டிநாட்டுக்கும் என் தாய் தந்தையின் வாழ்க்கைக்கும் கொஞ்சமல்ல நிறையவே சம்பந்தம் உள்ளது ஐயா.

      என் தாய் தந்தையர் ஓர் பத்தாண்டுகளுக்கு மேல், தாங்கள் சொல்லும் வேலங்குடி, கீழசேவல்பட்டி, கோனாவட்டு, கோட்டையூர், கோவிலூர் போன்ற காரைக்குடியைச் சுற்றியுள்ள பல்வேறு சிவஸ்தலங்களில் வாழ்ந்துள்ளனர்.

      வேலங்குடியில் உள்ள சிவாலயத்தில் உள்ள சிவனின் பெயர் “ஸ்ரீகண்டர்” என்பது தானே, என்பதை எனக்குத் தங்களின் மெயில் மூலம் தெரிவிக்க வேண்டுகிறேன் ஐயா.

      இங்கு தான், அதாவது வேலங்குடியில்தான், என் அண்ணா ஒருவர் பிறந்துள்ளார். அவரை ஸ்ரீகண்டன் என்றே அழைத்து வந்தார்கள்.

      ஸ்ரீ என்றால் விஷம் என்றொரு பொருள் உண்டு. அதுபோல கண்டம் என்றால் கழுத்து என்பது பொருள். ஸ்ரீகண்டன் என்றால் விஷமுண்ட கழுத்தை உடையவன் [சிவன்] என்று பொருள்.

      //வீட்டில் குழந்தை பிறந்தால் ( ஆணோ / பெண்ணோ ) அக்குழந்தைக்கு வய்ல் நாச்சி அம்மன் கோவிலில் ஆண்டுக்கு ஒன்றாக மூன்று முடி இறக்குவோம். அங்கு தான் குழந்தை பிறந்த உடன் காது குத்திய உடன் முடி இறக்கி பெயர் வைப்போம். அதற்குப் பிறகு ஓராண்டு இடை வெளியில் மற்ற இரு முடிகளும் இறக்குவோம். முதல் இரண்டு பிள்ளைகளுக்கு கருப்பையா /. கருப்பாயி ( ஆண் /பெண்ணுக்குத் தகுந்தவாறு ) என்றோ பெரிச்சியப்பன் / பெரியாள் என்றோ பெயர் வைப்போம். இது பல தலைமுறைகளாக நடந்து வரும் செயல்.//

      கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது, ஐயா.

      //நான் எத்தனாவது தலைமுறை எனக்கூறுங்கள் பார்ப்போம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

      அது எப்படி ஐயா உறுதியாகக் கூறமுடியும்? பரம்பரை பரம்பரையாக வந்து கொண்டிருக்கும் அறுபடாத சங்கிலித்தொடர் அல்லவா!

      என்னிடம் எங்கள் வம்சாவழியினரின் பத்துத் தலைமுறை தாத்தாக்களின் பெயர்கள் உள்ளன.

      அதில், எங்களுடன் ஒரு 7 தலைமுறைகள் முடிந்து விட்டதாகவும், எனக்குப்பிறந்த மூத்த பிள்ளை மீண்டும் முதல் தலைமுறை என்றும், அவனுக்கு அந்த ஏழில் முதல் தாத்தாவான “கோதண்டராமன்” என்று பெயர் வைக்கச்சொல்லி என் தந்தை என்னிடம் கூறினார்.

      என் மூத்த பிள்ளைக்கு ஒரு வயதாகும் போது என் தந்தை காலமானார். அவனுக்கு பூணூல் போட்டபோது என் தந்தை சொன்னபடியே “கோதண்டராமன்” என்றே பெயரிட்டேன். அவனை நாங்கள் அழைக்கும் பெயர் மட்டுமே இராமப்ரஸாத் என்பதாகும்.

      தங்கள் குலதெய்வமான வேலங்குடிக்கு நான் இதுவரை சென்றது இல்லை. எங்கள் தாய் தந்தை வாழ்ந்த எல்லா ஊர்களுக்கும் + நான் பிறந்த கோவிலூருக்கும் மீண்டும் செல்ல நினைத்துள்ளேன்.

      பிராப்தம் ஏற்படும்போது கட்டாயமாகச் சென்று வருவேன்.

      தங்களின் அன்பான மீண்டும் வருகையும், ஆச்சர்யமான கருத்துக்களும் என்னை மிகவும் மகிழ்வித்தன. நன்றி.

      அன்புடன் VGK

      நீக்கு
  63. http://gopu1949.blogspot.in/2014/04/vgk-12-01-03-first-prize-winners.html

    மேற்படி பதிவினில் இந்த ஆண்டு 22.04.2014 செவ்வாய்க்கிழமையான இன்று மிகச்சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும், திருச்சி டவுன், வாணப்பட்டரை மஹமாயீ [மாரியம்மன்] தேர்ப்படங்கள் சுடச்சுட சூடாக இணைக்கப்பட்டுள்ளன. கண்டு களியுங்கள்.

    இது தங்கள் அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  64. பதில்கள்
    1. முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:

      அன்புடையீர்,

      வணக்கம்.

      31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      இதுவரை, 2011 ஜனவரி முதல் 2013 பிப்ரவரி வரையிலான 26 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள என் பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.

      மேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து, விட்டுப்போய் உள்ள பதிவுகளுக்குக் கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      போட்டியில் வெற்றியும் ரொக்கப்பரிசும் பெற என் அன்பான அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஐயா. :)

      என்றும் அன்புடன் VGK

      நீக்கு
  65. :)))) இங்கயும் அல்ரெடி6-பின்னூட்டங்கள் கொடுத்திருக்கேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் August 15, 2015 at 6:34 PM

      வாங்கோ .... வணக்கம்.

      //:)))) இங்கேயும் அல்ரெடி 6-பின்னூட்டங்கள் கொடுத்திருக்கேன்//

      அக்குப்பஞ்சர் டாக்டரம்மா கணக்கில் கொஞ்சம் வீக் போலிருக்குது. ஏற்கனவே .... ஆறு அல்ல .... நான்கு பின்னூட்டங்கள் மட்டுமே கொடுத்துள்ளீர்கள். அதனால் பரவாயில்லை. மிகவும் சந்தோஷமே. :)))))

      நீக்கு
    2. பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,

      வணக்கம்மா.

      31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      இத்துடன் 2011 ஜனவரி முதல் 2013 பிப்ரவரி வரை முதல் 26 மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

      பிரியமுள்ள நட்புடன் கோபு

      நீக்கு
  66. படங்கல்லா தேடிபுடிச்சி சூப்பரா போடுரீங்க. பதிவு தா வெளங்கிகிட ஏலலே ஸோ........?????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru October 23, 2015 at 12:04 PM

      வாங்கோ, முருகு. வணக்கம்மா.

      //படங்கல்லா தேடிபுடிச்சி சூப்பரா போடுரீங்க. பதிவு தா வெளங்கிகிட ஏலலே ஸோ........?????//

      வெளங்காட்டிப்போகுது ..... விடுங்கோ ..... மிக்க நன்றி !

      நீக்கு
  67. குலதெய்வங்கள் மூன்றா. கருவரையில் படம் எடுக்க அலவ்டா?? அருமையான படங்களுடன் பதிவும் பக்தி மணமாக இருக்கு.

    பதிலளிநீக்கு
  68. ஜன்னலில் உட்கார்ந்தபடியே நகர்வலமே சென்று வரலாம் போலிருக்கிறது...என் ஆவல் - அதிகரிக்கிறது...

    பதிலளிநீக்கு
  69. தெய்வீகப் பதிவர் ராஜேஸ்வரி என்று தாங்கள் குறிபிட்டு இருப்பதைப் படித்ததும் மெய்சிலிர்த்தது. வார்த்தைகளுக்கு - வாக்குப் போல பலமான அர்த்தங்கள் இருக்கின்றன.

    தாங்கள் கொண்டாடும் தெய்வங்கள் தங்கள் இல்லத்தின் அருகிலேயே அமைந்ததும் அதை ராஜி எழுதியதும் தெய்வீகச் செயல்தான்.

    மிக அருமையாக தாங்கள் புளகாங்கிதத்தோடு எழுதி இருந்தது நெகிழவைத்தது. நாங்களும் உலா போய் வந்து தரிசித்த திருப்தியைத் தந்தது.

    மூன்று கோயில்களுக்கும் சென்றதில்லை. குணசீலத்தை பஸ்ஸில் பலமுறை கடந்திருக்கிறேன். கோயில் பார்த்ததில்லை. உங்கள் இடுகைகள் மூலம் தரிசித்தேன் நன்றியும் அன்பும் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thenammai Lakshmanan January 21, 2017 at 3:49 PM

      வாங்கோ ஹனி மேடம், வணக்கம்.

      //தெய்வீகப் பதிவர் இராஜராஜேஸ்வரி என்று தாங்கள் குறிப்பிட்டு இருப்பதைப் படித்ததும் மெய்சிலிர்த்தது. வார்த்தைகளுக்கு - வாக்குப் போல பலமான அர்த்தங்கள் இருக்கின்றன. //

      ஆமாம் மேடம். நான் எப்போதுமே அவர்களை அப்படித்தான் அழைத்து மகிழ்வது வழக்கம்.

      அவர்கள் இனி பின்னூட்டமிட வர மாட்டார்கள் என உணர்ந்ததும், நானும் என் வலைத்தளத்தினில் முன்புபோல மிக அதிகமான புதிய பதிவுகள், ஏதும் கொடுக்க விரும்பாமல்தான் இருந்து வருகிறேன்.

      என்னுடைய சமவயதில் இருந்தவர்கள். என்னைவிட அவர்கள் இன்னும் அபார சம்சாரி. நானும் அவர்களும் 2011 ஜனவரி மாதம் முதல்தான் வலைத்தளங்கள் ஆரம்பித்துப் பதிவுகள் கொடுக்க ஆரம்பித்தோம்.

      2011 to 2015 ஐந்து ஆண்டுகளில் நாங்கள் இருவரும் வலைத்தளங்களில் சுறுசுறுப்பாகத்தான் இயங்கினோம்.

      அவர்களால் அந்த 5 ஆண்டுகளில் 1555 பதிவுகள் கொடுக்க முடிந்தது. அதே காலக் கட்டத்தில் என்னால் அதில் படிக்குப்பாதியாக 806 பதிவுகள் மட்டுமே கொடுக்க முடிந்தது.

      இருப்பினும் என்னுடைய அந்த 806 பதிவுகள் அனைத்திலும் அவர்களின் பின்னூட்டங்கள் ஏராளமாகவும், தாராளமாகவும் தாமரைகளாகவும், தாமரைத் தடாகங்களாகவும் மலர்ந்துள்ளன என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகத்தான் உள்ளது.

      இப்போதும்கூட, எனக்குப் பொழுதுபோகாத நேரங்களில், அவர்கள் என்னுடைய அனைத்துப்பதிவுகளுக்கும் கொடுத்துள்ள ஏராளமான பின்னூட்டங்களையும், அவர்கள் என் சிறுகதை விமர்சனப்போட்டிகளில் கலந்துகொண்டு எழுதியுள்ள அனைத்து விமர்சனங்களையும், நானும் மீண்டும் மீண்டும் படித்து மகிழ்ந்து மெய்சிலிர்த்துப் போவதுண்டு.

      சென்ற ஆண்டு இதே நாளில் 19.01.2016 அன்று திருமணம் ஆன தன் புதிய மருமகளுடன் மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்துள்ளார்கள்.

      தன் கடமை எல்லாமே முடிந்துவிட்டது என்ற மன நிம்மதியுடன் நம்மிடமெல்லாம்கூட சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிவிட்டார்கள்.

      உங்களின் ‘அப்பத்தா’ கதையின் கடைசி வரிகள் ஏனோ என் நினைவுக்கு இப்போது வந்தது. http://gopu1949.blogspot.in/2016/09/4.html

      >>>>>

      நீக்கு
    2. கோபு >>>>> ஹனி மேடம் (2)

      //தாங்கள் கொண்டாடும் தெய்வங்கள் தங்கள் இல்லத்தின் அருகிலேயே அமைந்ததும் அதை ராஜி எழுதியதும் தெய்வீகச் செயல்தான். மிக அருமையாக தாங்கள் புளகாங்கிதத்தோடு எழுதி இருந்தது நெகிழவைத்தது. நாங்களும் உலா போய் வந்து தரிசித்த திருப்தியைத் தந்தது. //

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      //மூன்று கோயில்களுக்கும் சென்றதில்லை. குணசீலத்தை பஸ்ஸில் பலமுறை கடந்திருக்கிறேன். கோயில் பார்த்ததில்லை. உங்கள் இடுகைகள் மூலம் தரிசித்தேன் நன்றியும் அன்பும் :)//

      தங்களின் அன்பான வருகைக்கும், ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
  70. Mail message received on 19.10.2017 - 11.44 Hrs.

    என் வீட்டு ஜன்னல்..... பதிவு கண்டு படித்தேன்.
    அழகாக எழுதி இருக்கிறீர்கள்.

    படிப்பவர் மனம் பார்ப்பது போன்ற ஒரு பிரமை....ஜன்னல் சொன்ன கதைகள் நிச்சயம் அங்கு ஓரிடம் வேண்டும் என்று கேட்கத் தான் சொல்கிறது மனம்.

    திரு. அப்பாதுரை அவர்கள் கேட்டதில் நியாயம் இருக்கிறது.. வியந்ததும், தங்களை விளக்கம் எழுதச் சொல்லிக் கேட்டதிலும் வியப்பேதும் இல்லை தானே.

    பவித்ராலயாவின் அன்புலோகத்தின் கண்கள்
    உலகத்தைப் பார்க்கும் அழகோ அழகு.

    இப்படிக்குத் தங்கள் எழுத்துக்களின்
    பரம ரஸிகை

    பதிலளிநீக்கு
  71. திருச்சி, வாணப்பட்டரை ஸ்ரீ மஹமாயீ அம்பாள் படம் இன்று 17.07.2018 செவ்வாய்க்கிழமை புதியதாக எடுக்கப்பட்டு இந்தப் பதிவினில் இணைக்கப்பட்டுள்ளது.

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    [வெள்ளியினால் ஆன ஒரு ஜோடி புதிய கண் மலர்கள், இன்று எங்கள் காணிக்கையாக மஹமாயீ அம்பாளுக்கு சமர்பிக்கப்பட்டது.]

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு