ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும்
நாடகம் [பகுதி-18]
{ நிறைவுப்பகுதி }
{ நிறைவுப்பகுதி }
By வை. கோபாலகிருஷ்ணன்
காட்சி-23
[சங்கரரின் அழகான சொற்பொழிவைக் கேட்டு மகிழ்ந்த பட்டுவும் கிட்டுவும் சந்தித்து பேசிக்கொள்கிறார்கள்]
பட்டு:
இது போல மிக இனிமையாகவும், மிகச் சுலபமாகப் புரியும்படியும் யாரால் உவமானங்கள் சொல்ல் முடியும்?
கிட்டு:
ஆம். நம் சங்கரரால் மட்டுமே இதுபோல அழகாகப் பேச முடியும்.
ஆமாம். அதிருக்கட்டும்.
நம் சங்கரர், தான் மட்டும் ஏதோ ஹிமாசலம் போய் கேதார்நாத் செல்லப்போவதாகச் சொல்கின்றாரே!
அவர்கூட, நாம் யாராவது போக வேண்டாமா?
பட்டு:
யாரும் தன்கூட வரத் தேவையில்லை என்று சொல்லிவிட்டாராம்.
ஏதோ ஒரு குகைக்குள் தனிமையில் தியானம் செய்யப்போகிறாராம்.
எப்போது திரும்பி வருவார் என்று அவருக்கே தெரியாதாம்.
கிட்டு:
சங்கரர் இல்லாத இடத்தில் நமக்கு இனி என்ன வேலை?
நாமும் நம் ஊருக்கே திரும்பிப்போய் சங்கரருடன் பழகிய அனுபவங்களை பலருக்கும் தெரிவித்து, அவரின் புகழைப் பரப்புவோம்.
ooooooooooooooooooooooooooooooooo
காட்சி-24
[ஆதி சங்கரர் படத்தை, பூ மாலைகளால் அலங்கரித்து வைக்கலாம். இரண்டு குத்து விளக்குகள், ஐந்து முகங்களுடன் அழகாக எரிவதுபோல வைக்கலாம். பின்னனியில் கீழ்க்கண்டவாறு குரல் மட்டும் கொடுக்கலாம்]
ஆதி சங்கரர் வாழ்ந்த காலம் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு என்று அறிகிறோம்.
அவர் 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார் என்றும் சொல்லப்படுகிறது.
புண்ணிய பூமியாம் நம் பாரதத் திருநாட்டில் பல்வேறு மடங்கள், ஆதி சங்கரரால் நிறுவப்பட்டு, இன்று வரை அவை மக்களை பக்தி மார்க்கத்தில் இட்டுச்சென்று, நல்வழிப்படுத்தி வருகின்றன.
மிகவும் பழமை வாய்ந்த வேதங்களும், சாஸ்திரங்களும், சனாதன தர்மங்களும், ஆலமரம் போல் விழுதுகள் விட்டு, உலகில் இன்றும் நிலைத்து நிற்கிறது என்றால் அதற்குக் காரணம் யார்?
நம் ஆதிசங்கரர் அவர்களால் வித்திட்டு, விதை விதைத்து, நீர் ஊற்றி, நன்கு வளர்த்ததனால் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.
நமக்கு வழிகாட்டியாக இருந்த “சங்கரர்” என்கிற ஆதிசங்கரரை என்றும் நினைப்போம்.
அவரின் அவதார தினத்தை ஆண்டுதோறும் ”சங்கர ஜயந்தி”த் திருநாளாக எல்லோரும் வெகு விமரிசையாகக் கொண்டாடுவோம்.
அவர் இயற்றிய ஸ்லோகங்களை அனைவரும் படிப்போம்.
அனுதினமும் அவற்றை உச்சரித்து மகிழ்வோம்.
ஆதி சங்கரர் காட்டிய நல்வழியில் நாம் வாழ்வோம்.
நற்கதியை நாம் அடைவோம்.
ஸ்ரீ தோடகாஷ்டகம்
கருணாவருணாலய பாலய மாம்
பவஸாகர துக்க விதூன ஹ்ருதம்!
ரசயாகிலதர்சன தத்த்வவிதம்
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 2 ]
பவதா ஜனதா ஸுஹிதா பவிதா
நிஜபோத விசாரண சாருமதே!
கலயேச்வர ஜீவவிவேக விதம்
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 3 ]
பவ ஏவ பவானிதி மே நிதராம்
ஸமஜாயத சேதஸி கெள துதிதா
மம வாரய மோஹ மஹா ஜலதிம்
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 4 ]
ஸுக்ருதே (அ) திக்ருதே பஹூதா பவதோ
பவிதா ஸமதர்சன லால ஸதா!
அதி தீன மிமம் பரிபாலய மாம்
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 5 ]
ஜகதீ மவிதும் கலிதாக்ருதயோ
விசரந்தி மஹா மஹஸ: ச்சலத:!
அஹிமாம் சுரிவாத்ர விபாஸி புரோ
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 6 ]
குருபுங்கவ புங்கவகேதந தே
ஸமதா மயதாம் ந ஹி கோ பி ஸுதீ:!
சரணா கத வத்ஸல தத்த்வநிதே
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 7 ]

ஆமாம்.... ஆமாம். நீ சொல்வது தான் சரி.
நாளைக்கு சங்கரர் கேதார்நாத்துக்கு புறப்பட்டதும், நாமும் நம் ஊரைப்பார்க்கக் கிளம்பிடுவோம்.
அதற்கான பயண வேலைகளை இப்போதே ஆரம்பித்து விடலாம் ..... வா!
ooooooooooooooooooooooooooooooooo
காட்சி-24
[ஆதி சங்கரர் படத்தை, பூ மாலைகளால் அலங்கரித்து வைக்கலாம். இரண்டு குத்து விளக்குகள், ஐந்து முகங்களுடன் அழகாக எரிவதுபோல வைக்கலாம். பின்னனியில் கீழ்க்கண்டவாறு குரல் மட்டும் கொடுக்கலாம்]
ஆதி சங்கரர் வாழ்ந்த காலம் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு என்று அறிகிறோம்.
அவர் 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார் என்றும் சொல்லப்படுகிறது.
புண்ணிய பூமியாம் நம் பாரதத் திருநாட்டில் பல்வேறு மடங்கள், ஆதி சங்கரரால் நிறுவப்பட்டு, இன்று வரை அவை மக்களை பக்தி மார்க்கத்தில் இட்டுச்சென்று, நல்வழிப்படுத்தி வருகின்றன.
மிகவும் பழமை வாய்ந்த வேதங்களும், சாஸ்திரங்களும், சனாதன தர்மங்களும், ஆலமரம் போல் விழுதுகள் விட்டு, உலகில் இன்றும் நிலைத்து நிற்கிறது என்றால் அதற்குக் காரணம் யார்?
நம் ஆதிசங்கரர் அவர்களால் வித்திட்டு, விதை விதைத்து, நீர் ஊற்றி, நன்கு வளர்த்ததனால் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.
நமக்கு வழிகாட்டியாக இருந்த “சங்கரர்” என்கிற ஆதிசங்கரரை என்றும் நினைப்போம்.
அவரின் அவதார தினத்தை ஆண்டுதோறும் ”சங்கர ஜயந்தி”த் திருநாளாக எல்லோரும் வெகு விமரிசையாகக் கொண்டாடுவோம்.
அவர் இயற்றிய ஸ்லோகங்களை அனைவரும் படிப்போம்.
அனுதினமும் அவற்றை உச்சரித்து மகிழ்வோம்.
ஆதி சங்கரர் காட்டிய நல்வழியில் நாம் வாழ்வோம்.
நற்கதியை நாம் அடைவோம்.
[தோடகாஷ்டக ஸ்லோகத்தை ஒலிபரப்பி நாடகத்தை முடிக்கலாம்]
ஸ்ரீ தோடகாஷ்டகம்
விதிதா கில சாஸ்த்ர ஸுதா ஜலதே
மஹிதோபநிஷத் கதிதார்த்தநிதே!
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 1 ]
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 1 ]
கருணாவருணாலய பாலய மாம்
பவஸாகர துக்க விதூன ஹ்ருதம்!
ரசயாகிலதர்சன தத்த்வவிதம்
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 2 ]
பவதா ஜனதா ஸுஹிதா பவிதா
நிஜபோத விசாரண சாருமதே!
கலயேச்வர ஜீவவிவேக விதம்
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 3 ]
பவ ஏவ பவானிதி மே நிதராம்
ஸமஜாயத சேதஸி கெள துதிதா
மம வாரய மோஹ மஹா ஜலதிம்
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 4 ]
ஸுக்ருதே (அ) திக்ருதே பஹூதா பவதோ
பவிதா ஸமதர்சன லால ஸதா!
அதி தீன மிமம் பரிபாலய மாம்
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 5 ]
ஜகதீ மவிதும் கலிதாக்ருதயோ
விசரந்தி மஹா மஹஸ: ச்சலத:!
அஹிமாம் சுரிவாத்ர விபாஸி புரோ
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 6 ]
குருபுங்கவ புங்கவகேதந தே
ஸமதா மயதாம் ந ஹி கோ பி ஸுதீ:!
சரணா கத வத்ஸல தத்த்வநிதே
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 7 ]
விதிதா ந மயா விசதைக கலா
ந ச கிஞ்சன காஞ்சன மஸ்தி குரோ!
த்ருத மேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 8 ]
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 8 ]
-ooooooooooooooooooooooooooo-
நாடகம் நிறைவுற்றது
சுபம்
ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo
இந்த நாடகத்திற்கு காட்சி வாரியாக என்னால் கொடுக்கப்பட்டிருந்த நேர ஒதிக்கீடுகள் [TIME SCHEDULE FOR EACH AND EVERY SCENE]
காட்சிகள்: 1, 2, 3, 4, 5, 6, 8, 9, 10, 13, 17 மற்றும் 23 ஆகிய
12 காட்சிகள் தலா 2 நிமிடங்கள் வீதம் ............................ 12*2 = 24 நிமிடங்கள்
காட்சிகள்: 7, 11, 15, 16/1, 16/2, மற்றும் 21 ஆகிய
6 காட்சிகள் தலா 6 நிமிடங்கள் வீதம்................................ 6*6 = 36 நிமிடங்கள்
காட்சிகள்: 12, 14, 18, 19, 20 மற்றும் 24 ஆகிய
6 காட்சிகள் தலா 4 நிமிடங்கள் வீதம் .............................. 6*4 = 24 நிமிடங்கள்
காட்சி 22 க்கு மட்டும் .......................................................... 10 நிமிடங்கள்
ஒவ்வொரு காட்சிக்கும் இடைவெளி
Setting Time / Breathing Time .................................................... 26 நிமிடங்கள்
=================== ========
ஆகமொத்தம் ............................................................... 120 நிமிடங்கள்
=================== ========
ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo
”ஸ்ரீ ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும்”
என்ற தலைப்பில் பள்ளிச்சிறுவர்களால் 2 மணி நேரத்திற்குள் நாடகமாக நடித்து முடிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூடிய, நாடக ஆக்கம் பற்றிய எழுத்துப்போட்டி ஒன்றுக்காக, இந்த நாடகம் என்னால் 2007 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது.
குறிப்பிட்ட 2 மணி நேரத்திற்குள் இந்த நாடகம் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்பதாலும், அதே நேரம் சொல்லப்பட வேண்டிய கருத்துக்கள் யாவும், ஓரளவுக்காவது, முழுமையாகப் பார்வையாளர்களைச் சென்றடைய வேண்டும் என்பதாலும், “பட்டு” “கிட்டு” என்ற இரண்டு கற்பனைக் கதாபாத்திரங்களை இந்த நாடகத்தில் நானாகவே நுழைத்துள்ளேன்.
நாடகத்தில் நடித்துக்காட்டப்பட நேரமில்லாத பகுதிகளை இந்த “பட்டு” “கிட்டு” ஆகிய இருவரின் உரையாடல்கள் மூலம் அனைவரும் அறிந்து கொள்ளுமாறு செய்து விடலாம் என்ற நம்பிக்கையில். நான் இந்த இரு கதாபாத்திரங்களைக் கையாண்டுள்ளேன்.
ஆதிசங்கரரின் உண்மையான வாழ்க்கை வரலாற்று நூல்கள் எதிலும், இந்தப்பட்டுவையோ அல்லது கிட்டுவையோ நீங்கள் காணமுடியாது.
இதுபோன்ற வரலாற்றில் காணப்படாத இருவரை, நானே [காமெடியன்ஸ் போல] இடையே நுழைத்துள்ளதால் தான், என்னுடைய படைப்பு முதல் பரிசுக்கோ இரண்டாவது பரிசுக்கோ பரிசீலிக்கப்படாமல் போய் விட்டதோ என்ற சந்தேகமும் எனக்கு பிறகு ஏற்பட்டது.
ஏதோ என் படைப்பு, அகில இந்திய அளவில் நடைபெற்ற போட்டியொன்றில், மொத்தம் கலந்துகொண்ட 500க்கும் மேற்பட்ட, படைப்பாளிகளின் இடையே, மூன்றாவது பரிசுக்காவது தேர்ந்தெடுக்கப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சியே.
பரிசளிப்பு விழா 02.10.2007 அன்று சென்னை தி. நகரில், வாணி மஹாலில் நடைபெற்றது. ரொக்கப்பரிசாக ரூபாய் ஐயாயிரம் அளிக்கப்பட்டது. என் குடும்பத்தார் அனைவருடனும் நேரில் போய் விழாவில் கலந்து கொண்டேன்.
அன்றைய தினம் அங்கு கூடியிருந்த எக்கச்சக்கமான கும்பலாலும், ஒருசில V.V.I.P. க்களின் வருகையாலும், அடுத்தடுத்து திட்டமிடப்பட்டிருந்த பல்வேறு நிகழ்ச்சிகளாலும், பரிசு பெறுபவர்களைத் தவிர வேறு யாரையும் மேடைக்கு அருகே, சென்று அமர அவர்கள் அனுமதிக்கவில்லை.
அதனால் அன்று நான் பரிசு பெறுவதை, என் குடும்பத்தினர், மிகத்தொலைவிலிருந்து புகைப்படம் எடுத்தது சரியாகத் தெளிவாக அமையவில்லை.
இந்த என் வெற்றிக்காக திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் 16.10.2007 அன்று திருச்சியில், எனக்கு ஓர் பாராட்டு விழா நடத்தியது.
இந்தத் தொடர் நாடகத்திற்கு, அன்புடன் வருகை புரிந்து, அவ்வப்போது உற்சாகப்படுத்தி மகிழ்வித்த, உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
என் அடுத்த பதிவினில்,
இந்த என் நாடகத்தின் 18 பகுதிகளிலும்
அவ்வப்போது வருகை தந்து
கருத்துக்கள் கூறி
உற்சாகப்படுத்தியுள்ள
உங்கள் அனைவருக்கும்
தனித்தனியே நன்றி கூறுவேன்.

தமிழ்ப் பேராசிரியரும், தொலைகாட்சிப்புகழ் பட்டிமன்ற நடுவரும்
திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கத்தின் புரவலருமான
பெரும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய
திரு. சோ. சத்யசீலன் ஐயா அவர்களால்
16.10.2007 அன்று திருச்சியில் நடைபெற்ற விழாவில் பாராட்டி கெளரவிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.
-oOo-
இந்தத் தொடர் நாடகத்திற்கு, அன்புடன் வருகை புரிந்து, அவ்வப்போது உற்சாகப்படுத்தி மகிழ்வித்த, உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
என் அடுத்த பதிவினில்,
இந்த என் நாடகத்தின் 18 பகுதிகளிலும்
அவ்வப்போது வருகை தந்து
கருத்துக்கள் கூறி
உற்சாகப்படுத்தியுள்ள
உங்கள் அனைவருக்கும்
தனித்தனியே நன்றி கூறுவேன்.
என்றும் அன்புடன் தங்கள்
vgk
-oOo-
300 வது பதிவிற்கு நல்வாழ்த்துகள். மெய் சிலிர்க்க வைத்த நாடகம் படிக்கும்போதே காட்சிகள் கண்ணில் விரிந்தன.. உங்கள் எழுத்துத் திறமை எனும் கிரீடத்தில் இன்னொரு சிறகு.
ReplyDeleteVGK அவர்களுக்கு வணக்கம்! நிறைவுப் பகுதி நிறைவாகவே முடிந்தது. நன்றி! வழக்கம் போல உங்கள் நல் ஆக்கங்கள் தொடரட்டும்.
ReplyDeleteஇது போல மிக இனிமையாகவும், மிகச் சுலபமாகப் புரியும்படியும் யாரால் உவமானங்கள் சொல்ல் முடியும்?
ReplyDeleteஇத்தனை அருமையாக எளிமையான , சிறப்பான நாடக ஆக்கத்திற்கு பாராட்டுக்கள்..
பவ சங்கர தேசிக மே சரணம்!!
ReplyDeleteபவ சங்கர தேசிக மே சரணம்!!
மிகவும் பழமை வாய்ந்த வேதங்களும், சாஸ்திரங்களும், சனாதன தர்மங்களும், ஆலமரம் போல் விழுதுகள் விட்டு, உலகில் இன்றும் நிலைத்து நிற்கிறது என்றால் அதற்குக் காரணம் யார்?
ReplyDeleteநம் ஆதிசங்கரர் அவர்களால் வித்திட்டு, விதை விதைத்து, நீர் ஊற்றி, நன்கு வளர்த்ததனால் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.
சிறப்பான விளக்கம்..
இந்த என் வெற்றிக்காக திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் 16.10.2007 அன்று திருச்சியில், எனக்கு ஓர் பாராட்டு விழா நடத்தியது.
ReplyDeleteவாழ்த்துகள்.. பதிவுலகமும் பாராட்டுகிறது..
500க்கும் மேற்பட்ட, படைப்பாளிகளின் இடையே, மூன்றாவது பரிசுக்காவது தேர்ந்தெடுக்கப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சியே. //
ReplyDeleteஅனைவரும் மகிழ்ச்சியும் பெருமையும் பகிர்ந்து கொள்கிறோம்..
தமிழ்ப் பேராசிரியரும், தொலைகாட்சிப்புகழ் பட்டிமன்ற நடுவரும்
ReplyDeleteதிருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கத்தின் புரவலருமான
பெரும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய
திரு. சோ. சத்யசீலன் ஐயா அவர்களால்
16.10.2007 அன்று திருச்சியில் நடைபெற்ற விழாவில் பாராட்டி கெளரவிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம்./
மனம் நிறைந்த இனிய வாழ்த்துகளும் பாராட்டுக்களும்..
இப்பொழுதுதான் பதிவுலகம் பக்கம் வர முடிந்தது. சீக்கிரமாக முதலிலிருந்து படித்துவிட்டு சங்கரரின் அருளை பெற்றுக்கொண்டுவிடுகிறேன். நன்றி.
ReplyDeleteநல்லதொரு பதிவினை அளித்தமைக்கு மனமார்ந்த நன்றி!
ReplyDelete-காரஞ்சன்(சேஷ்)
விறுவிறுப்பாகவும் விரைவாகவும் ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றினை அழகாகக் கூறினீர்கள்.உழைப்பிற்கேற்ற ஊதியமும்(பரிசளிப்பு) பெற்றது மிக்க மகிழ்ச்சி. நாடகத்தினை நேரம் முதற்கொண்டு நன்கு திட்டமிட்டு படைத்துள்ளீர்கள். சில பகுதிகள் நன்கு புரியும்படி எளிமையாகப் படைத்திருப்பது இன்னும் அழகு. நிறைவான படைப்பு.
ReplyDeleteதங்களுடைய சிறப்பான எழுத்தால் ஆதிசங்கரரை பற்றி எல்லோரும் புரிந்து கொள்ளும் படியாக நாடகம் இருந்தது.
ReplyDeleteநேர கணக்கீடும் அருமை.
பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள் சார்.
நிறைவான பகுதி. நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்க முடிந்தது. நன்றி பாராட்டுக்கள் வாழ்த்துகள்.
ReplyDeleteபடிக்கும் பொழுதே அழகாக இருந்தது. பரிசு பெற்ற நாடகம் என்பதை நினைக்கும் பொழுது இன்னும் பெருமையாக உள்ளது. கிட்டுவும் பட்டுவும் கற்பனைக் கதாப்பாத்திரம் என்பதே நீங்கள் சொல்லித் தான் தெரிகின்றது. வாழ்த்த வயதில்லை வணகுகின்றேன்
ReplyDeleteஅற்புதமா இருந்தது போன பதிவு. இந்தப் பதிவில் இது உங்களின் நாடகமாக்கும் என்றும அதற்கும் பரிசும் பெற்றீர்கள் என்று அறிந்து மிக மிக மகிழ்ச்சியாய் உள்ளது.
ReplyDeleteஅற்புதமா இருந்தது போன பதிவு. இந்தப் பதிவில் இது உங்களின் நாடகமாக்கும் என்றும அதற்கும் பரிசும் பெற்றீர்கள் என்று அறிந்து மிக மிக மகிழ்ச்சியாய் உள்ளது.
ReplyDeleteவணக்கம் ஐயா..
ReplyDeleteவிடுமுறைக்கு இந்தியா வந்துள்ளதால்.
என்னால் சரியாக வலைப்பக்கம் வரமுடியவில்லை..
விட்டு வைத்த அனைத்து பகுதிகளையும்
படித்து விடுகிறேன்..
பகுதிவாரியாக, நல்ல விஷயங்களைக் கொடுத்து, அதற்கான நேரத்தினையும் சொல்லி, நல்ல கருத்துகளை எங்களுக்கும் எடுத்துச் சொல்லி வந்த உங்களுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteபரிசு பெற்றதற்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
நேரம் உட்பட அனைத்தையும் குறித்திருப்பது ஆச்சர்யம். உங்களுக்குள் எத்தனைத் திறமைகள் என்று வியந்து போகிறேன்.
ReplyDeleteமிகவும் பழமை வாய்ந்த வேதங்களும், சாஸ்திரங்களும், சனாதன தர்மங்களும், ஆலமரம் போல் விழுதுகள் விட்டு, உலகில் இன்றும் நிலைத்து நிற்கிறது என்றால் அதற்குக் காரணம் யார்?
ReplyDeleteநம் ஆதிசங்கரர் அவர்களால் வித்திட்டு, விதை விதைத்து, நீர் ஊற்றி, நன்கு வளர்த்ததனால் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.
நமக்கு வழிகாட்டியாக இருந்த “சங்கரர்” என்கிற ஆதிசங்கரரை என்றும் நினைப்போம்.//
என்றும் நினைக்கும் படி எளிமையான வ்சனம் எழுதி நாடகம் ஆக்கி தந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.
நல்ல விஷயங்களை எல்லோருக்கும் எடுத்த சொல்ல உங்களை போன்றவர்கள் இந்த சமுதாயத்திற்கும் இளையதலைமுறைகளுக்கும் ஒரு வரப்பிரசாதம்.
வாழ்த்துக்கள்.
பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
நாடகத்தில் நடித்துக்காட்டப்பட நேரமில்லாத பகுதிகளை இந்த “பட்டு” “கிட்டு” ஆகிய இருவரின் உரையாடல்கள் மூலம் அனைவரும் அறிந்து கொள்ளுமாறு செய்து விடலாம் என்ற நம்பிக்கையில். நான் இந்த இரு கதாபாத்திரங்களைக் கையாண்டுள்ளேன்.//
ReplyDeleteபட்டு , கிட்டு உரையாடல் யுத்தி அருமை.
பட்டு, கிட்டுவை மறக்க முடியாது.
தங்கள் பாண்டித்தியத்தையும் திட்டமிடலையும்
ReplyDeleteநல்லனவற்றையே தரவேண்டும் என்கிற அக்கறையையும்
மிக அழகாக அனைவரும் புரிந்து கொள்ளும்படி
அமைந்திருந்தது இந்த நாடகப் பதிவு
அறியாதன மிக அறிந்தோம் நன்றி
நிறைவான நிறைவுப்பகுதிக்கு
ReplyDeleteநிறைந்த பாராட்டுக்கள்..
இந்த என் வெற்றிக்காக திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் 16.10.2007 அன்று திருச்சியில், எனக்கு ஓர் பாராட்டு விழா நடத்தியது.//மிகவும் மகிழ்வாக உள்ளது.வாழ்வில் இன்னும் பஃற்பல ம்வெற்ரிகளும் விருதுகளும்,பரிசுகளும் பெற மனமார்ந்த வாழ்த்துகக்ள்!
ReplyDelete300ஆவது பதிவுக்கு வாழ்த்துகக்ள்
ReplyDeleteஎளிமையாக சுவை குறையாமல் சென்றது நாடகம். பாராட்டுக்கள் சார்.
ReplyDeleteநாடக ஆக்கம், அரங்கமைப்பு, காட்சி நேரம் என்று தொகுத்து வழங்கியிருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எளிமையாக சொல்லப்பட்ட மிகப்பெரிய விஷயம்...
ReplyDeleteபாதுகாக்க வேண்டிய தொடர்!
நன்றி...
அற்புதமான ஆக்கம்!2 மணி நேரத்தில் முடிப்பதற்காகக் கையாண்ட உத்தி சிறப்பு.எஙளுக்கு படிக்ககொடுத்தமைக்கு நன்றி.
ReplyDeleteAha....
ReplyDeleteGreat job.....
Really wounderful.
Very correct for getting the honour.
Congragulations.
Very interesting DrAMA.
viji
இந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்துள்ள அனைவருக்கும் , ஸ்வீட், காரம், காஃபி, ஐஸ் கிரீம், ஜூஸ், பழங்களுடன், உலகத்தின் மிகப்பெரிய விமானத்தில் பயணம் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ReplyDeleteமேலும் விபரங்களுக்கு தயவுசெய்து
“பறக்கலாம் வாங்க!”
என்றப் பதிவுக்குப் போங்க!!
இணைப்பு இதோ:-
http://gopu1949.blogspot.in/2012/05/blog-post.html
அன்புடன் vgk
மிக்க நன்றி.எனது மாவட்டத்தில் இருந்து ஒரு பதிவர் மிக அழகான் பதிவு என்றால் அது மிகை அல்ல.
ReplyDeleteAnand said...
ReplyDelete//மிக்க நன்றி.எனது மாவட்டத்தில் இருந்து ஒரு பதிவர் மிக அழகான் பதிவு என்றால் அது மிகை அல்ல.//
Thank you very much Sir, for your very first entry into my post & for your valuable comments. vgk
அன்பின் வை.கோ
ReplyDeleteஅகில் இந்திய அளவில் மூன்றாவது பரிசு வாங்கியமைக்கும் முன்னூறாவது பதிவினிற்கும் பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள். ஒன்று பட்டுவும் கிட்டுவும் இருப்பதினால் தான் நாடகம் வெற்றி பெற்றிருக்க முடிந்திருக்கும். திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் நடத்திய பாராட்டு விழாவினிற்கும் நல்வாழ்த்துகள். கூட நிற்பவர் கிரிஜா மணாளணா ? என்னுடைய நெருங்கிய நண்பர். நல்லதொரு பதிவு. வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா
cheena (சீனா) said...
ReplyDelete//அன்பின் வை.கோ
அகில் இந்திய அளவில் மூன்றாவது பரிசு வாங்கியமைக்கும் முன்னூறாவது பதிவினிற்கும் பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள். ஒன்று பட்டுவும் கிட்டுவும் இருப்பதினால் தான் நாடகம் வெற்றி பெற்றிருக்க முடிந்திருக்கும்.//
அன்பின் சீனா ஐயா, வணக்கம்.
தங்களின் அன்பான வருகையும் அழகான கருத்துக்களும் எனக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது, ஐயா.
//திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் நடத்திய பாராட்டு விழாவினிற்கும் நல்வாழ்த்துகள். கூட நிற்பவர் கிரிஜா மணாளணா ? என்னுடைய நெருங்கிய நண்பர்.//
ஆம் ஐயா. என் அருகில் கட்டம்போட்ட சட்டை அணிந்து நிற்பவர் “கிரிஜா மணாளன்” என்ற புனைப்பெயரில் எழுதும் நந்தகோபால் அவர்களே! எனக்கும் அவர் மிகவும் நெருங்கிய நண்பரும், என்னுடன் BHEL இல் சேர்ந்து 1975-1980 வாக்கில் ஒரே துறையில் [OP&C Operation Planning & Control] பணியாற்றியவரும், திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கத்தில் அன்று பொருளாளராக பொறுப்பில் இருந்தவரும் ஆவார். மிகவும் தங்கமான மனிதர் தான், தங்களைப்போலவே!!
//நல்லதொரு பதிவு. வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா//
மிக்க நன்றி, மகிழ்ச்சி.
your hardwork shines in every post Gopu sir which deserves the award.
ReplyDeletecharachters pattu and kittu innovation is very good and is very apt to describe the parts that are not played.
Mira said...
ReplyDelete//your hardwork shines in every post Gopu sir which deserves the award.
charachters pattu and kittu innovation is very good and is very apt to describe the parts that are not played.//
Thanks for your kind entry & valuable Comments, Mira.
Anbudan
GOPU
”ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும்” இந்த தொடர் பதிவுக்கு ஒண்ணோ ரெண்டோ பின்னூட்டம் போட்ட என்னையும் இந்த லிஸ்ட்லே சேர்த்திருக்கறதைப் பார்த்தா, மிக சங்கடமாக இருக்கு,வழக்கமாக உங்கள் எல்லா பதிவுகளையும் படிக்கும் நான் இந்த தொடர்பதிவை படிக்கவில்லை உண்மையான காரணம் எந்த மத ரீதியாக வரும் செய்திகளுக்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுத்து படிப்பதில்லை என்பதால்தான். ஆனால் நீங்கள் எழுதிய இந்த ”ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும்” தொடர்பதிவு அனேக மக்களை கவர்ந்து இருக்கும் என்பதில் ஐயமில்லை.உங்களின் இந்த விடாமுயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களின் நல்ல மனசுக்கு நன்றி திரு.கோபாலகிருஷ்ணன் ஐயா..
Avargal Unmaigal said...
ReplyDelete//”ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும்” இந்த தொடர் பதிவுக்கு ஒண்ணோ ரெண்டோ பின்னூட்டம் போட்ட என்னையும் இந்த லிஸ்ட்லே சேர்த்திருக்கறதைப் பார்த்தா, மிக சங்கடமாக இருக்கு,வழக்கமாக உங்கள் எல்லா பதிவுகளையும் படிக்கும் நான் இந்த தொடர்பதிவை படிக்கவில்லை உண்மையான காரணம் எந்த மத ரீதியாக வரும் செய்திகளுக்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுத்து படிப்பதில்லை என்பதால்தான்.//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமாந்த நன்றிகள்.
”அவர்கள் உண்மைகள்” என்பது போலவே உள்ளதை உள்ளபடி உண்மையாக எடுத்துக்கூறியுள்ளது எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
நானும் உங்களைப்போலவே தான்.
எனக்கு விருப்பமில்லாத எந்தப் பதிவுக்கும் பின்னூட்டமிடுவது கிடையாது. நேரம் கிடைத்தால் அனைத்தையும் படிப்பேன்.
நான் படித்தவற்றில் என்னைக் கவரும் விஷயம் ஏதாவது இருந்தால் மட்டும் பின்னூட்டம் அளிப்பேன்.
பொதுவாக ஆபாசத் தலைப்புகள், ஆபாசப்படங்கள், அரசியல் பற்றியவை, பெண்களை இழிவு படுத்துபவை, நமது பாரம்பர்ய கலாச்சாரத்தையும் பண்பாடுகளையும் கேலி செய்பவை இவற்றையெல்லாம், பின்னூட்டமிட்டு ஆதரிப்பது கிடையாது.
வெளியிடுவது, படிப்பது, கருத்துக் கூறுவது இவையெல்லாம் அவரவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களைப் பொருத்த சமாசாரங்கள்.
அதனால் தாங்கள் என் பதிவுகள் அனைத்துக்கும் வராமல் கருத்திடாமல் விட்டுவிட்டீர்களே என எனக்கு எந்தவித வருத்தமும் கிடையாது.
//ஆனால் நீங்கள் எழுதிய இந்த ”ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும்” தொடர்பதிவு அனேக மக்களை கவர்ந்து இருக்கும் என்பதில் ஐயமில்லை.உங்களின் இந்த விடாமுயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.
உங்களின் நல்ல மனசுக்கு நன்றி திரு.கோபாலகிருஷ்ணன் ஐயா..//
தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி, நண்பரே.
தங்களுடைய படைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் எங்களுக்குக் கிடைத்ததாகவே உணருகிறோம்.
ReplyDeleteமுனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:
Deleteஅன்புடையீர்,
வணக்கம்.
31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இதுவரை, 2011 ஜனவரி முதல் 2012 ஏப்ரல் வரையிலான 16 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள என் பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து, விட்டுப்போய் உள்ள பதிவுகளுக்குக் கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியில் வெற்றியும் ரொக்கப்பரிசும் பெற என் அன்பான அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஐயா. :)
என்றும் அன்புடன் VGK
எளிமை, இனிமை.
ReplyDeleteபொதுவா ஒரு நாடகம்ன்னா காட்சி 1, 2 என்று போட்டு மட்டும் எழுதிக் கொடுப்பார்கள். உங்களைப் போல் ஒவ்வொரு காட்சிக்கும் இத்தனை நிமிஷங்கள் என்று எல்லாம் குறிப்பிட்டு எழுதுவார்களா என்பது சந்தேகமே.
உங்களுடை உண்மையான உழைப்பு, SINCERITY தான் உங்களுக்குப் பரிசை வாங்கிக் கொடுத்திருக்கிறது. 500 பேரில் மூன்றாவது பரிசு என்பது மிகப் பெரிய விஷயம்.
வழக்கம் போல் வியந்து, ரசித்து, மயங்கி நிற்கிறேன்.
அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு,
Deleteஅன்புள்ள ஜெயா,
வணக்கம்மா !
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன் 2011 ஜனவரி முதல் 2012 ஏப்ரல் வரையிலான முதல் பதினாறு மாதங்களில் உள்ள என் அனைத்துப் பதிவுகளிலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா.
பிரியமுள்ள நட்புடன் கோபு
ஆஹா... நேர்த்தியான திரைக்கதை அமைப்பும் வசனங்களும்! மூன்றாம் பரிசு பெற்றமைக்குப் பாராட்டுகள். ஏன் முதலிரண்டு இடங்கள் தவறிப்போயின என்பதற்கான அலசல் அருமை. அப்படித்தான் இருக்கவேண்டும் என்று எனக்கும் தோன்றுகிறது.
ReplyDeleteஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் முழுவதும் படித்து முடித்ததுமே மனசு மிகவும் லேசாகி விட்டது போல இருந்தது 3-வது பரிசுக்கும் 300--வது பதிவுக்கும் வாழ்த்துகள்
ReplyDeleteபிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,
Deleteவணக்கம்மா.
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன் 2011 ஜனவரி முதல் 2012 ஏப்ரல் வரை முதல் பதினாறு மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள நட்புடன் கோபு
இது உங்கட 300---வது பதிவா. வாழ்த்துகள். கமண்டு போட்டினவங்க அல்லாருமே ரொம்ப ரசிச்சு படிச்சிருக்காங்கபோல
ReplyDeletemru October 20, 2015 at 6:29 PM
Delete//இது உங்கட 300---வது பதிவா. வாழ்த்துகள். //
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, முருகு. தங்களின் வாழ்த்துகளுக்கும் என் நன்றிகள்.
//கமண்டு போட்டினவங்க அல்லாருமே ரொம்ப ரசிச்சு படிச்சிருக்காங்கபோல//
அப்போ நீங்க ????? :)
அன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:
Deleteஅன்புள்ள (mru) முருகு,
வணக்கம்மா !
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2012 ஏப்ரல் மாதம் வரை, முதல் பதினாறு மாதங்களில் என்னால் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள நட்புடன் குருஜி கோபு
300---வது பதிவுக்கு வாழ்த்துகள். நீங்கள் செய்துவருவது ரொம்ப பெரிய புண்ணிய பணி. நாங்க எல்லாருமே அந்த புண்ணியத்தை அடைஞ்சிருக்கோம் சந்தோஷமாகவும் மனது நிறைவாகவும் உணற முடிகிறது.
ReplyDeleteDear Sir,
Delete2012 ஏப்ரல் மாதம் வரை வருகை தந்து முடிக்க நினைத்துள்ளீர்கள். இருப்பினும் இடையே கீழ்க்கண்ட ஒரேயொரு பதிவு மட்டும் தங்களால் பின்னூட்டம் இடாமல் எப்படியோ விட்டுப்போய் உள்ளது.
http://gopu1949.blogspot.in/2012/04/3-of-3.html
அதற்கு பின்னூட்டம் எனக்குக் கிடைத்தபிறகு 'Confirmation Certificate for Monthly Completion of Comments' என்னால் அனுப்பி வைக்கப்படும்.
இது தங்களின் அவசரத் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் VGK
அன்புள்ள ’சரணாகதி’ திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:
ReplyDeleteவணக்கம் !
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2012 ஏப்ரல் மாதம் முடிய, என்னால் முதல் 16 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அடுத்த 13 மாத பதிவுகளின் மொத்த எண்ணிக்கையே வெறும் 40 மட்டுமே. அதனால் தாங்கள் மிகச்சுலபமாக ஓரிரு நாட்களிலேயே பின்னூட்டமிட்டு, ஒரே தாவாகத் தாவி ஜூன் 2013க்குச் சென்றுவிடலாம்.
இந்தப் பதிமூன்று மாத 40 பதிவுகளுக்கு மட்டும், ஒட்டுமொத்தமாக என்னால் ‘Monthly Certificate for Completion of Comments' தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு எப்போதும்போல ஒவ்வொரு மாதம் முடித்ததும் அவ்வப்போது அனுப்பி வைக்கப்படும்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள நட்புடன் VGK
பரிசுக்கு வாழ்த்துகள்! பட்டு-கிட்டு catchyஆன பாத்திரங்கள்..எதிர் நீச்சல் கேரக்டர்கள்போல..
ReplyDelete-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
ReplyDeleteSo far your Completion Status:
301 out of 750 (40.13%) within
8-9 Days from 26th Nov. 2015.
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர்
திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:
வணக்கம் !
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2012 ஏப்ரல் மாதம் வரை, என்னால் முதல் 16 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள நட்புடன் VGK
{பின்குறிப்பு:-
நாளை ஒரே நாளில் 40 பதிவுகளுக்குப் பின்னூட்டமிட்டால் அடுத்த 13 மாதங்களையும் ஒரே தாவகத்தாவி ஜுன் 2013 ஐ சுலபமாக எட்டிவிடலாம். - vgk }
:)
ReplyDeleteஅன்புள்ள ’காரஞ்சன் சேஷ்’ வலைப்பதிவர்
ReplyDeleteதிரு. E.S. SESHADRI அவர்களுக்கு:
வணக்கம் !
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2012 ஏப்ரல் மாதம் வரை என்னால் வெளியிடப்பட்டுள்ள, முதல் 16 மாத அனைத்துப் பதிவுகளிலும்,தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள நட்புடன் VGK