என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

பல்லெல்லாம் பஞ்சாமியின் பல் ஆகுமா ?





கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?
பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா?


நகைச்சுவை சிறுகதை 
By வை. கோபாலகிருஷ்ணன்




தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்கள். நமக்குப் பல் வலி வந்தால் மட்டும் பக்கத்து வீட்டுக்காரனுக்கா தெரியும், அதன் கஷ்டம்?


பற்களினால் படாதபாடுபட்ட பஞ்சாமியை உங்களுக்குத் தெரியுமா? தெரியா விட்டாலும் பரவாயில்லை. இந்தக்கதையைப் படித்து முடிக்கும் போது ஓரளவுக்குக்காவது தெரிந்து கொண்டு விடுவீர்கள். இதைப்படிக்கும் உங்களில் எவ்வளவோ பஞ்சாமிகள் பஞ்சமின்றி இருக்கக்கூடும். உங்களைப் பற்றிய உண்மைக் கதையை எழுதிவிட்டதாக யாரும் கோபப்பட வேண்டாம்.


பஞ்சாமிக்கு ஆஜானுபாகுவான உடம்பு. நல்ல உயரம், தடிமனான உடல்வாகு, அதற்கேற்றபடி, கைகள், கால்கள், முகம், வாய் மட்டுமல்ல, நல்ல எடுப்பான பற்களும் கூட. அவர் வாயைத் திறக்காமலேயே கூட நாம் அவரின் பற்களை தரிஸிக்க முடியும். பற்களின் வளர்ச்சியில் அவ்வளவு ஒரு அபரிமிதமான முன்னேற்றம். அவரின் மேல் வரிசைப் பற்களைப்பார்க்கும் போதெல்லாம் எனக்கென்னவோ அதில் தேங்காய்த் துருவ வேண்டும் போல் ஒரு எழுச்சி ஏற்படும்.


அவருடைய மிகப்பெரிய பற்கள் சில துணி துவைக்கும் பாறாங்கற்களை நினைவு படுத்தும். ஒன்றில் துணியைக் கசக்கிப்பிழிந்து வைக்கலாம். மற்றொன்றில் துணியையே அடித்துத் துவைக்கலாம் போல அருமையாகவும், சொரசொரப்பாகவும் இருக்கும். 

ஆலங்குச்சி, வேலம் குச்சி, அடுப்புச் சாம்பல் முதலியவற்றில் ஆரம்பித்து பயோரியா, நஞ்சன்கூடு, கருவேலப்பட்டை, ’பாடாவதி பல்பொடி’ என்றும் ஒன்று உண்டு - அது வரையிலும் அனைத்தையும் உபயோகித்து, பிறகு இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலிய எல்லா நாட்டு மக்களும் தேய்ப்பதாக பிரபலபமாக விளம்பரப்படுத்திய அந்தத் தித்தித்து வழியும் ரோஸ் கலர் பற்பொடி வரை உபயோகித்து ஓய்ந்தவர் தான் நம் பஞ்சாமி.  ஒரு காலக்கட்டத்தில் நெல் உமியுடன் உப்பு, கிராம்பு, கற்பூரம் முதலியன போட்டு வறுத்து அரைத்து உமிக்கரிப் பல்பொடி என்ற தன் சொந்தத் தயாரிப்பிலும் தேய்த்துப் பார்த்தவர்.

வெற்றிலை, பாக்கு, புகையிலை போடும் ஆசாமியானதால் பற்கள் யாவும் பழுப்பேறி ஒரு வித ஈஸ்ட்மென் கலரில் காட்சியளிக்கும். டீ.வி. விளம்பரங்களில் வரும் அந்த முத்துப்பல்லழகி போல ஆக வேண்டும் என்று விரும்பி பஞ்சாமியும் இதுவரை தேய்த்துப் பார்க்காத பற்பசைகளே இல்லையெனச் சொல்லலாம். 

சொட்டுத்தண்ணி விட்டால் சட்டிச்சாந்து வழிக்கலாம் போல அட்டைக் கருப்பாக இருக்கும் நானே, அந்தக் காலத்தில் டீ.வி. விளம்பரத்தைப் பார்த்து, இண்டர் நேஷனல் லக்ஸ் தேய்த்துப் பார்த்தவன் தான், சினிமா நடிகை ஸ்ரீதேவி போல அழகாக ஆகிவிடுவோம் என்ற நம்பிக்கையில்.

விளம்பரத்தில் வருவதெல்லாம் அண்டப்புளுகு ஆகாசப்புளுகு என்பதைப் புரிந்து கொள்வதற்குள் நானே நூற்றுக்கணக்கான சோப்புகள் வாங்கி விட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இவ்வாறு ஆலங்குச்சியில் ஆரம்பித்து, நவ நாகரீகப் பற்பசைகள் வரை அனைத்தையும் உபயோகித்துப் பார்த்து விட்ட பஞ்சாமியின் முப்பத்திரண்டு பற்களும் நேற்று வரை ஒற்றுமையாக சகோதர பாசத்துடன் ஒரேயடியாக பாசம் பிடித்து ஒன்றுடன் ஒன்று மிகவும் ஒட்டுறவாகத் தான் இருந்து வந்தன.

அவருடன் நெருக்கமாகப் பழகிய ஒரு சிலர் அவர் வாயிலிருந்து ஒரு வித துர் நாற்றம் அடிப்பதாகச் சொன்னதும் அவரால் அதை நம்பவே முடியவில்லை. (சாக்கடை நாற்றம் அந்த சாக்கடைக்குத் தெரியாது என்பது போல). 

பொறுமையில் பூமாதேவியான நம் பஞ்சாமியின் மனைவியே அவர் வாயில் அடித்த நாற்றத்தில், ஒரு நாள் மயக்கம் போட்டு கீழே விழுந்து, பிறகு மயக்கம் தெளிந்து எழுந்தவுடன் கண்டிப்புடன் சொல்லி விட்டாள்: “இனி பல்லிருக்கும் வரை நீர் என் பக்கத்திலேயே வரக்கூடாதென்று”.

பல்லு போய் தாத்தாவான பிறகு உன் பக்கத்தில் வந்து தான் என்ன லாபம், வராமல் இருந்து தான் என்ன நஷ்டம் எனக் கேட்க வேண்டும் போலத் தொன்றியது பஞ்சாமிக்கு. இருந்தும் வாயை மூடி மெளனமாக இருந்து விட்டார். பிரச்சனைக்குரிய வாய் துர்நாற்றம் மேலும் பரவாமல் இருக்கவோ என்னவோ!


2]

முடிவாக தன் நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி, பல் டாக்டர் ஒருவரை சந்தித்து பற்களை முழுமையாக க்ளீன் செய்து வந்து விடுவது என்ற முடிவுடன் கிளம்பினார்.

ஆஸிட்டுக்கு பை-பை என்ற விளம்பரத்தில் வரும் டாய்லெட் போல தன் பற்களும் பளிச்சென்று படு சுத்தமாகி விடும் என்ற இன்பக் கனவில் மூழ்கியவாறு நீண்ட க்யூவில் டாக்டரைப் பார்க்க அமர்ந்திருந்தார்.

தன்னைப்போலவே பலருக்கும் பலவித பல் பிரச்சனைகள் உள்ளன என்பதை அங்கு பல்லைக் காட்டிக்கொண்டு நிற்கும் பலரைப் பார்த்ததும் அறிந்து கொண்ட பஞ்சாமிக்கு, பல்லில் பாலை வார்த்தது போல இருந்தது. யான் பெற்ற துன்பம் பெறுக இந்த வையகமும் என்ற நல்லெண்ணம்.

வெற்றியோ, தோல்வியோ, இன்பமோ, துன்பமோ, நாற்றமோ, துர்நாற்றமோ, மெஜாரிட்டி இருந்தாலே ஒரு வித நிம்மதி தானே!

டாக்டரின் அழைப்பின் பேரில் உள்ளே நுழைந்ததும் அழகான சுழலும் நாற்காலியில் அமர்த்தப்பட்டார் நம் பஞ்சாமி. யாருக்குமே நாற்காலியைப் பிடித்து விட்டால் போதும், இதுவரை பட்ட கஷ்டமெல்லாம் பறந்து விட்டதாக ஒரு நினைப்பு வந்து விடுவது இயற்கையே.

இடிக்கி, குரடு, நோஸ்ப்ளேயர் போன்ற ஒரு சில உபகரணங்களுடனும், கை நிறைய பஞ்சுடனும், டாக்டர் அவர்கள் பஞ்சாமியின் பல் இடுக்குகளில் புகுந்து விளையாட ஆரம்பித்தார். இதுவரை ஒட்டி உறவாடிய பற்களுக்கு இடையே பெரிய இடைவெளிகளை ஏற்படுத்தத் தொடங்கினார். நெடுநாளைய காரைகள் பாறைகள் போல பெயர்த்து எடுக்கப்பட்டன. 

ஒவ்வொரு முறை குத்திக்குத்தி சுரண்டும் போதும் ஈறுகளிலும், எகிறிலும் ரத்தம் பீரிட்டு வந்து வலி எடுத்து வாய் பூராவும் ரத்தத்தால் உப்புக்கரித்தது. பஞ்சினால் ரத்தம் ஒத்தி ஒத்தி எடுக்கப்பட்டு பிறகு, தூக்கி எறியப்பட்டு வந்தது. பஞ்சாமியின் வாய் வெற்றிலை பாக்குப் போடாமலேயே நல்ல சிவப்பாகிப் போனது, இனக்கலவரத்தில் சிக்கிய இலங்கை போல. 


விடுதலை விரும்பிகளாகவும், தீவிரவாதிகளாகவும் கருதப்பட்ட கறைகளும் காரைகளும் அடக்கி ஒடுக்கி அகற்றப்பட்டதால், தங்கள் ‘சொத்தை’ இழந்த அப்பாவி மக்கள் போல, பற்கள் யாவும் பலகீனமாகி ஒரு வித பாதுகாப்போ, ஒற்றுமையோ, பலமோ, அரவணைப்போ இல்லாமல் அகதிகள் போல ஒரு வித ஆட்டத்துடனும், நடுக்கத்துடனும் விளங்கின.

எவ்வளவு கஷ்டப்பட்டாலும், கடைசியில் முத்துப்பற்களைப் பெற்றே தீரப் போகிறோம் என்று நம்பி, பஞ்சாமியும் வலியைப் பொறுத்துக்கொண்டு, டாக்டருக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார். இடையிடையே அங்குள்ள வாஷ்பேசினில் வாய்க்கொப்பளித்தபடி, துர்நாற்றமில்லாத தன் வருங்கால இல் (பல்) வாழ்க்கையை எண்ணி மகிழ்ந்தார்.

டாக்டரின் ஆலோசனையின் பேரில் முன் பக்கம் மேல் வரிசையில் தூக்கலாக இருந்த ஆறு பற்களையும் அகற்றி விட்டு, படிமானமான செயற்கைப் பற்கள், அளவெடுக்கபட்டு, இரண்டு நாட்கள் கழித்து கிளிப் மூலம் பொருத்துவது என்று பேசி முடிக்கப்பட்டது. கீழ்ப்புறமும் பக்கத்துக்கு தலா இரண்டு வீதம் நான்கு கடவாய்ப் பற்களும் சொத்தையாகி விட்டது என அகற்றப்பட்டிருந்தன. சிகிச்சைக்குப்பின் முகத்தில் பிரதிபலிக்க இருக்கும் அழகை உத்தேசித்து, பஞ்சாமி (இருக்கும்) பல்லைக் கடித்துக்கொண்டு டாக்டர் சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொண்டு, இரண்டு நாட்கள் கழித்து வருவதாகச் சொல்லி வீட்டுக்குப் புறப்படலானார்.


3]

இரண்டு நாட்களுக்கு சூடாக எதுவும் சாப்பிட வேண்டாம். பால், கஞ்சி, ஐஸ்கிரீம் போன்ற ஏதாவது திரவ உணவாக சூடு இல்லாமல் ஜில்லென்று மட்டும் சாப்பிடச் சொல்லி டாக்டர் கூறியிருந்ததால், இவை மூன்றில் தனக்கு மிகவும் இஷ்டமான ஐஸ்கிரீம் ஃபேமிலி பேக் டப்பாக்களாக நிறைய வாங்கி வந்து, தன் வீட்டு குளிர் சாதனப் பெட்டியில் அடுக்கி வைத்து விட்டார்.

இரண்டு நாட்கள் கழித்து டாக்டரிடம் திரும்பி வந்த பஞ்சாமிக்கு, முன் வரிசையில் அழகாக ஆறு பொய்ப் பற்கள் கட்டி விடப்பட்டன. கண்ணாடி முன் நின்று பல்லைக்காட்டிய பஞ்சாமிக்குத் தன் முகமே மாறி விட்டது போன்ற ப்ரமை ஏற்பட்டது.

குத்துச்சண்டை வீரரிடம் குத்து வாங்கியது போல முகத்திலும், தாடையிலும் ஒரு வித வீக்கமும், பலகீனமும், வலியும் உணர முடிந்தது. கீழ் வரிசை கடவாய்ப் பற்கள் நான்கு பெயர்த்தெடுக்கப் பட்டிருந்ததால், மிகப் பெரிய குழிகள் ஏற்பட்டு விட்டது. நன்றியுள்ள நாக்கின் நுனி மட்டும் அடிக்கடி அவ்விடம் சென்று துழாவிய வண்ணம், மறைந்த அந்தப் பற்கள் வசித்த நினைவிடப் பகுதிகளில், தன் நினைவு அஞ்சலியை செலுத்தி கொண்டிருந்தது.

முன்புற செயற்கைப்பற்கள் ஆறுக்கும் ஆதரவாக, மிகப்பெரிய செதில் போன்ற பொருள் மேல் தாடையின் உள் ஓட்டுப் பகுதியில் சொருகப்பட்டிருந்தது. அது பஞ்சாமியின் வாயில் ஏதோ வேண்டாத ஒரு பொருள் ஈஷிக்கொண்டிருப்பது போல அருவருப்பை அளித்தது.

மேலும் அந்தப் பொய் பற்கள் கீழே விழுந்து விடாமல் இருக்க இரு புற நிஜப்பற்களிலும் இரண்டு கம்பிகள் க்ளிப் போல வளைத்து மாட்டப் பட்டிருந்ததால், விண் விண்ணென்று அந்தப்பற்களிலும், ஒரு வித வலியை ஏற்படுத்தி அவஸ்தை கொடுத்து வந்தது.

எதையாவது சாப்பிடும்போது, பொய்ப் பற்களும் விழுங்கப்பட்டுவிடுமோ என்ற ஒரு வித பயத்தில், பஞ்சாமியால், நிம்மதியாக எதுவும் ருசித்து, ரசித்துச் சாப்பிட முடியாமல் மிகவும் அவஸ்தையாக இருந்தது.

சுமார் ஒருமாத காலமாக இது போன்ற பல வித கஷ்டங்களை அனுபவித்து வந்த பஞ்சாமிக்கு, அவருடைய வயதான மாமனாரின் வருகை, ஒரு வித திருப்பு முனையாக அமைந்தது. 

சதாபிஷேகம் முடிந்து, எண்பது வயதைத்தாண்டி எட்டு மாதங்கள் ஆன அவரால், கரகரப்பான மிக்ஸர், காராச்சேவ், முள்ளு முறுக்கு, கடலை மிட்டாய் என எல்லாமே நன்றாகக் கடித்து சாப்பிட்டு வர முடிகிறது. சுத்தமாக எல்லாப் பற்களும் விழுந்து, கம்ப்ளீட் ஆக பல் செட் கட்டியிருப்பவர்.

பஞ்சாமிக்கு பல் சம்பந்தமாக பல்வேறு ஆலோசனைகளை எடுத்துச் சொல்லி, தான் இது போல ஆரம்பத்தில் அனுபவித்த பல்வேறு கஷ்டங்களையும் எடுத்துச் சொல்லி, மீதியுள்ள எல்லாப் பற்களையும் சப்ஜாடா தட்டி விட்டு விட்டு, புதியதாக முழுமையான கட்டிடம் கட்டினால் தான் சரிப்பட்டு வரும் என்று எடுத்துரைத்தார்.



பஞ்சாமிக்கு இதைக்கேட்டதுமே பல்லைப் பிடுங்கியது போல ஆகிவிட்டது. வேறு வழியில்லாமல், மாமனார் எவ்வழியோ மாப்பிள்ளையும் அவ்வழியே என தினமும் பல் டாக்டரிடம் படையெடுத்து, வாரம் இரண்டு மூன்று பற்கள் வீதம் பிடுங்கிய வண்ணம் இருந்தார். ஒரு வழியாக, கொஞ்சம் கொஞ்சமாக, அனைத்துப் பற்களையுமே புடுங்கியெறிய நான்கு மாத காலம் ஆகி விட்டது. 



அனைத்துப் பற்களுமே புடுங்கப்பட்ட அவர் முகமே மாறிவிட்டது. காலி செய்யப்பட்ட ஜிப்-பேக் போல அவரின் வெறும் வாய் காற்றினை உள்வாங்கி அசை போட்டு வந்தது. கன்னப்பகுதி முழுவதும் உரித்துப்போட்ட முழுக் கமலாரஞ்சுப் பழத்தோல் போல வலுவின்றி லொடக்கென்று காணப்பட்டது.புதுப் பல்செட் கட்டும் வேலை, வாய்ப்புண்கள் ஆற வேண்டி, டாக்டரால் மேலும் ஒரு மாததிற்கு ஒத்தி வைக்கப் பட்டது.


4]

இந்த ஒரு மாதமும், பஞ்சாமி வாயைக் கட்ட, வயிற்றைக் கட்ட படாதபாடு பட்டு விட்டார். சாப்பாட்டில் கடுகு போன்ற மிகச்சிறிய கடிக்க வேண்டிய சமாசாரங்களைக் கூட கடிக்க முடியாமல் கடுப்பு வந்தது அவருக்கு.

அவருக்கு மிகவும் பிடித்தமான கரமுரா அயிட்டங்களான பக்கோடா, மிக்சர், காராச்சேவ், கடலை, நேத்திரங்காய் சிப்ஸ், வறுத்த முந்திரி முதலியவற்றை அவர் கண்ணெதிரிலேயே பிறர் கரமுரா எனக் கடித்துச் சாப்பிடுவதைக் கண்டு கண்ணீர் விடலானார்.

மேற்படி அனைத்து அயிட்டங்களையும் தனித்தனியே மிக்ஸியில் போட்டு அரைத்துப் பொடிப் பொடியாக்கி பொக்கை வாயில் போட்டு வந்தும் திருப்தியாகவில்லை பஞ்சாமிக்கு. கடிக்க வேண்டியதை கடிக்கணும், சப்ப வேண்டியதைச் சப்பணும், அப்போது தான் முழுத்திருப்தி ஏற்படும், என்ற உண்மை அவருக்கு விளங்கியது.

நன்றாக மென்று தின்று வெற்றிலை பாக்குப் போட்டு, புகையிலைச்சாறை விழுங்கி வந்த பஞ்சாமிக்கு, இப்போது வாழ்க்கையே வெறுத்துப் போனது போலத் தோன்றியது. 
”மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவார்களா?” என்பார்கள். அதுபோல வாய்த் துர்நாற்றம் நீங்க, பற்களைக் க்ளீன் செய்யப்போனது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை எண்ணி எண்ணி வருத்தப்பட்டார், பஞ்சாமி.

வறுத்த முந்திரி போட்ட பால் பாயஸம், சற்றே கெட்டியான ஆமவடை, சதைப்பத்தான முருங்கைக்காய் சாம்பார், கட்டை வடாம், மொறுமொறுப்பான அடை என அவரவர் இஷ்டத்துக்கு வெட்டும்போது, மோர்க்களி, குழைந்த மோர்சாதம், கரைத்த ரஸம் சாதம், மோர்க்கஞ்சியெனப் பத்திய சமையல்கள் பரிமாறப்பட்டன, பஞ்சாமிக்கு மட்டும் தனியாக.

ஆசையில் அன்றொரு நாள் பால் பாயஸத்தைப் பாய்ந்து ஒரு டம்ளர் எடுத்துக் குடித்த அவர், வாயில் மிதந்த முந்திரிப் பருப்புகளை கடிக்க வழியில்லாமல், சாப்பாடுத் தட்டைச் சுற்றி தூ...தூ என்று துப்பியதைப் பார்க்க எனக்கே மனதுக்குக் கஷ்டமாகத் தான் இருந்தது.

பல்லில்லாத பஞ்சாமிக்கு வெளியில் போகவோ, யாரையும் சந்திக்கவோ மிகவும் வெட்கமாக இருந்தது. பல்வலி இருப்பது போல ஒரு சிறிய டவலால், வாயை எப்போதும் மறைத்துக் கொண்டு, வீட்டிலேயே முடங்கி கிடந்தார்.

ஒரு மாதம் முடிந்து வாய்ப்புண் ஆறியதும் பல் டாக்டரை சந்திக்கச் சென்றார். ரெடிமேட் பேண்ட் சட்டை வாங்கி உடனடியாக அணிந்து கொள்வது போல, உடனே இன்று தனக்கு பல் செட் கட்டப்பட்டு, அனைத்தையும் கடித்து சாப்பிட்டு விடலாம் என எண்ணிச் சென்ற அவருக்கு பெருத்த ஏமாற்றம் காத்திருந்தது.






இவரின் வாயைப் பிளக்கச் சொல்லி ஆராய்ந்த டாக்டர் எகிறுப் பகுதியில் நிறைய மேடு பள்ளங்கள் இருப்பதாகவும், அவற்றை சமன் படுத்தி ஒரு லெவலுக்குக் கொண்டுவர ஆங்காங்கே ராவு ராவு என்று ராவி மீண்டும் புண்ணாக்கி, ஒரு வாரம் கழித்து, புண் நன்றாக ஆறிய பிறகு வந்து பார்க்கச் சொல்லி அனுப்பி விட்டார்.


தொடரும்



64 கருத்துகள்:

  1. பிரமாதம் அற்புதம் ....ஐயா நீங்க பல் டாக்டரா ?

    பதிலளிநீக்கு
  2. //இனக்கலவரத்தில் சிக்கிய இலங்கை போல. //
    //பாதுகாப்போ, ஒற்றுமையோ, பலமோ, அரவணைப்போ இல்லாமல் அகதிகள் போல //

    கதை நெடுக உள்ள உவமைகள் அருமை ஐயா ...
    நன்றி நன்றி

    பதிலளிநீக்கு
  3. இல்வாழ்க்கை, பல்வாழ்க்கை, கமாலரஞ்சு பழத்தோல், காலி செய்யப் பட்ட ஜிப் பேக் பஞ்சாமிக்கு பரிமாறப் படும் பத்திய வகையும், எதிரணியினரின் கடமுடா சமையல் லிஸ்ட்டும்....

    வர்ணனைகளும் உவமைகளும் பிரமாதம். பாவம் பஞ்சாமி!,

    பதிலளிநீக்கு
  4. நானே பல் டாக்டரிடம் போவது போன்ற உணர்வு வந்தது.

    பதிலளிநீக்கு
  5. சிரித்த‌ சிரிப்பில் ப‌ல்லெல்லாம் சுளுக்கிக் கொண்ட‌து போங்க‌ள்!
    இடையிடையே தெறித்த‌ ச‌மூக‌ உண‌ர்வோடான‌ உவ‌மைக‌ள் விய‌ப்பு!

    பதிலளிநீக்கு
  6. கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா?

    கதையெல்லாம் தங்கள் கதையாகுமா?
    பள பள பல்கதை அருமை.

    பதிலளிநீக்கு
  7. அவரின் மேல் வரிசைப் பற்களைப்பார்க்கும் போதெல்லாம் எனக்கென்னவோ அதில் தேங்காய்த் துருவ வேண்டும் போல் ஒரு எழுச்சி ஏற்படும்.//

    தேங்காய் துருவிப்பல் -வேடிக்கைதான்.

    பதிலளிநீக்கு
  8. விளம்பரத்தில் வருவதெல்லாம் அண்டப்புளுகு ஆகாசப்புளுகு//

    கையோடு -- பல்லோடு - விழிப்புணர்வும் வந்தாயிற்று.

    பதிலளிநீக்கு
  9. ”மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவார்களா?” என்பார்கள். அதுபோல வாய்த் துர்நாற்றம் நீங்க, பற்களைக் க்ளீன் செய்யப்போனது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் //

    பல்லும் போய் சொல்லும் போய் கஷ்டம்..

    பதிலளிநீக்கு
  10. இவ்வாறு ஆலங்குச்சியில் ஆரம்பித்து, நவ நாகரீகப் பற்பசைகள் வரை அனைத்தையும் உபயோகித்துப் பார்த்து விட்ட பஞ்சாமியின் முப்பத்திரண்டு பற்களும் நேற்று வரை ஒற்றுமையாக சகோதர பாசத்துடன் ஒரேயடியாக பாசம் பிடித்து ஒன்றுடன் ஒன்று மிகவும் ஒட்டுறவாகத் தான் இருந்து வந்தன.


    ..... காமெடி சரவெடி! :-)))

    பதிலளிநீக்கு
  11. அன்பின் வை.கோ - நல்லதொரு நகைச்சுவை - தொடரும் வேறு போட்டீர்களா - எப்பொழுது என்று மனம் ஏங்குகிறது. உவமைகளும் வர்ணனைகளும் கதாசிரிய்ரைன் திறமையினைக் காட்டுகின்றன. எத்தனை எத்தனை உவமைகள்.அத்தனையும் அருமை. திரும்பத் திரும்பப் படிக்க வேண்டும் போல இருக்கிறது. மிக மிக இரசித்தேன். நல்வாழ்த்துகள் வை.கோ - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  12. எழுத்தில் அனாயச வீச்சு. நடை பிரமாதம். உவமைகள் பேஷ் பேஷ்.!எழுதியது எல்லாம் அனுபவித்து இருந்தாலும் இப்படியும் எழுத முடியுமா. ?வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் கோபு சார்.

    பதிலளிநீக்கு
  13. அவ்வ் இனிமே பல் டாக்டர் கிட்ட போகும்போது போது எல்லாம் இதான் நினைவுக்கு வரும்.

    பதிலளிநீக்கு
  14. வாரத்தில் முதல் நாள் சிரிப்புடன் ஆரம்பித்துள்ளது.....

    பதிலளிநீக்கு
  15. விடுதலை விரும்பிகளாகவும், தீவிரவாதிகளாகவும் கருதப்பட்ட கறைகளும் காரைகளும் அடக்கி ஒடுக்கி அகற்றப்பட்டதால், தங்கள் ‘சொத்தை’ இழந்த அப்பாவி மக்கள் போல, பற்கள் யாவும் பலகீனமாகி ஒரு வித பாதுகாப்போ, ஒற்றுமையோ, பலமோ, அரவணைப்போ இல்லாமல் அகதிகள் போல ஒரு வித ஆட்டத்துடனும், நடுக்கத்துடனும் விளங்கின.//

    ஆஹா என்ன அருமையான உதாரணம்.

    கதை அருமையாக இருக்கு.

    பல் டாக்டரிடம் போக ஒருமுறைக்கு இருமுறை இனி யோசிப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  16. வரிக்கு வரி சிரிப்பு. ;)))) இந்த மாதிரி எழுத உங்களால் மட்டும்தான் முடியும்.

    அடுத்த பகுதிக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. செம கலகல...

    பல்லுல பிரச்சினை வந்தா படும் பாட்டை அருமையா நகைச்சுவையோட சொல்லியிருக்கீங்க :-))))

    பதிலளிநீக்கு
  18. பல் டாக்டர்கள் கவனிக்க....:)

    பதிலளிநீக்கு
  19. புகையிலை ஒரு உடல்நிலை மற்றும் பற்கள் மிகவும் தீங்கு உள்ளது. ரஜினி இந்த கடின வழி கற்று மற்றும் நேரத்தில் விலகினார். மேலும் அறிய இங்கே சொடுக்கவும்
    http://bit.ly/n9GwsR

    பதிலளிநீக்கு
  20. நகைச்சுவைக் கதைக்கு தங்களின் வர்ணனைகளை தாண்டி சொல்ல யாரும் கிடையாது. உணர்ந்து விவரிப்பது சிறப்பு. சிரித்துக் கொண்டேயிருக்கிறேன் சார்.

    பதிலளிநீக்கு
  21. லகலக பதிவு
    ரெம்ப ரசிச்சு ருசிச்சு சிரிச்சு படிச்சேன்

    பதிலளிநீக்கு
  22. எழுத்தெல்லாம் வை கோ சாரின் எழுத்தாகுமா??!! :-))

    உவமைகள் பிரமாதம்

    பதிலளிநீக்கு
  23. உங்கள் கதைக்குள் எத்தனை உவமைகள்.... பிரமாதம்... பல்லெல்லாம்.... என பாடத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  24. இந்த தடவை உங்களின் அலசலுக்குக் கிடைத்தது 'பல்' தானா?
    அருமையான நகைச்சுவைத் தொடர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. I think you have written this based on your experience. Otherwise, the difficulties experienced by Panjabi cannot be explained in detail.

      நீக்கு
    2. Nagarajan Narayanan September 3, 2013 at 10:17 AM

      //I think you have written this based on your experience. Otherwise, the difficulties experienced by Panjabi cannot be explained in detail.//

      வாங்கோ, வணக்கம். மதுரை சோமசுந்தரம் காலனியிலிருந்து [பிக்ஷாண்டார்கோயில்] மாப்பிள்ளை அவர்கள் எழுதியுள்ளீர்கள் என நினைக்கிறேன்.

      தங்களின் முதல் வருகைக்கு மிகவும் சந்தோஷம். ஆத்தில் எல்லோரும் செளக்யமா?

      தங்கள் மாமியார் மாமனார் பெரிய மாமா உள்பட எவ்ளோ பேர்கள் நம் குடும்பத்திலேயே பல்செட் கட்டியுள்ளார்கள் ! அவர்களைப்பேட்டி கண்டு, என் நகைச்சுவை + கற்பனைகள் கலந்து எழுதியுள்ளது தான், இந்தப்படைப்பு.

      கீழே கடைசியில் கமெண்ட் பாக்ஸ் என்று தனியாக ஒரு கட்டம் உள்ளது பாருங்கோ, இனி அதில் அடித்து அனுப்புங்கோ.

      அன்புடன் கோபு மாமா

      நீக்கு
  25. அருமையான நகைச்சுவைத் தொடர்
    உவமைகள் உலகம் சுற்றி வருவது
    ரசிக்கத் தக்கதாய் உள்ளது
    நல்ல பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  26. பஞ்சாமி படும் பாட்டை பார்த்தால் பாவமாக இருக்கிறது.......

    பதிலளிநீக்கு
  27. இந்தப் பதிவுக்கு அன்புடன் வருகை புரிந்து, அரிய கருத்துக்களைக்கூறி, வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் வழங்கியுள்ள என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  28. படிக்கத் துவங்கியது முதல் தொடரும் வரை உதாரண உவமைகள் அருமை.

    நகைச்சுவைக்கு பஞ்சமில்லை.அடுத்து என்னாகப் போகிறாரோ பஞ்சாமி என்ற ஆவலுடன் தொடருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு சகோதரி திருமதி thirumathi bs sridhar அவர்களே, வாங்க, வணக்கம்.

      தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களுக்கு எனக்கு மிகவும் மகிழ்வளிக்கின்றன.

      அன்புடன்
      vgk

      நீக்கு
  29. //அனைத்துப் பற்களுமே புடுங்கப்பட்ட அவர் முகமே மாறிவிட்டது. காலி செய்யப்பட்ட ஜிப்-பேக் போல அவரின் வெறும் வாய் காற்றினை உள்வாங்கி அசை போட்டு வந்தது. கன்னப்பகுதி முழுவதும் உரித்துப்போட்ட முழுக் கமலாரஞ்சுப் பழத்தோல் போல வலுவின்றி லொடக்கென்று காணப்பட்டது.//

    ஹைய்யோ!!!!!!!!! சிரிச்சு மாளலை:-))))))

    பதிலளிநீக்கு
  30. //ஹைய்யோ!!!!!!!!! சிரிச்சு மாளலை:-))))))//

    தங்களின் அன்பான வருகையும், அழகான பாராட்டுக்களும், வாழ்த்துகளும் என்னை மிகவும் உற்சாகப்படுத்துவதாக உள்ளன.

    தாங்கள் சுட்டிக்காட்டிய பகுதியை நானும் மிகவும் சிரித்துக்கொண்டே தான் எழுதினேன்.

    மிகவும் சந்தோஷம்.... மனமார்ந்த நன்றிகள், மேடம்.

    அன்புடன்
    vgk

    பதிலளிநீக்கு
  31. //ஆலங்குச்சி, வேலம் குச்சி, அடுப்புச் சாம்பல் முதலியவற்றில் ஆரம்பித்து பயோரியா, நஞ்சன்கூடு, கருவேலப்பட்டை, ’பாடாவதி பல்பொடி’ என்றும் ஒன்று உண்டு - அது வரையிலும் அனைத்தையும் உபயோகித்து, பிறகு இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலிய எல்லா நாட்டு மக்களும் தேய்ப்பதாக பிரபலபமாக விளம்பரப்படுத்திய அந்தத் தித்தித்து வழியும் ரோஸ் கலர் பற்பொடி வரை உபயோகித்து ஓய்ந்தவர் தான் நம் பஞ்சாமி. ஒரு காலக்கட்டத்தில் நெல் உமியுடன் உப்பு, கிராம்பு, கற்பூரம் முதலியன போட்டு வறுத்து அரைத்து உமிக்கரிப் பல்பொடி என்ற தன் சொந்தத் தயாரிப்பிலும் தேய்த்துப் பார்த்தவர்.//

    உங்களுக்கே உரிய நகைச்சுவை முறையில் அவர் பல் தேய்த்த
    அனைத்து வகைகளையும் சொல்லி விட்டீர்கள்.

    நானும் பல் மருத்துவ மனையில் பற்களை சுத்தம் செய்து இருக்கிறேன். நல்லவேளை இதுபோல் ஆகவில்லை. பல்லையும் பிடுங்கிவிட்டு, பணத்தையும் சேர்த்து பிடுங்குகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ ஐயா, வாங்க வணக்கம்.

      நகைச்சுவை எழுத்துக்களை வெகுவாக ரஸித்துள்ளீர்கள் என புரிந்து கொண்டேன். மிக்க மகிழ்ச்சி.

      // பல்லையும் பிடுங்கிவிட்டு, பணத்தையும் சேர்த்து பிடுங்குகிறார்கள்.//

      ஆம் ஐயா, சலூனுக்குச் சென்றாலும், நம் முடிகளை எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, பணத்தையும் வாங்கிக்கொண்டு, மொத்தத்தில் மொட்டை அடித்து விடுகிறார்கள்.?????? ;)))))

      அன்புடன்
      vgk

      நீக்கு
  32. அவஸ்தைகளை நகைச்சுவையோடு ரசனையோடு சொல்லக்கூட ஒரு ரசிப்புத்தன்மை வேண்டும்… அந்த வகையில் அண்ணாவின் இந்த பகிர்வு.

    ஆமாம் ஆமாம் தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தா தான் தெரியும்.. அப்ப பல்வலி மட்டும் அடுத்து இருப்பவருக்கா தெரியும்.. அட்டகாசமான ஆரம்பம் அண்ணா…
    நம்மில் நிறைய பஞ்சாமிகள் இருப்பதால் யாரும் கோச்சுக்கக்கூடாது அவர்களை தான் சொல்றேன்னு என்று நைச்சியமா முன்னாடியே சொல்லிக்கிட்டு அதரகளம் பண்ணிட்டீங்க…
    களத்தில் குதிச்ச பஞ்சாமி கேரக்டரை உண்டு இல்லன்னு செய்து… உவமைகள் அதெப்படி அண்ணா இப்படி தங்கு தடை இல்லாம வர்றது உங்களுக்கு மட்டும்?

    மிகப்பெரிய பற்கள் துணி துவைக்கும் கல்லாகவும் சொரசொரப்பாகவும் இருக்குமாம்.

    பற்கள் எல்லாம் பழுப்பேறி ஈஸ்ட்மேன் கலர் படம் போல பழுப்பேறி இருக்குமாம்..

    முப்பத்திரெண்டு பற்களும் ஒன்றோடொன்று பாசத்துடன் ஒட்டு உறவாடி இருக்குமாம்…

    வயிற்றில் பால் வார்த்தது போய் பல்லில் பால் வார்க்க வைத்துவிட்டீங்களே அண்ணா...

    வாய் துர்நாற்றத்தை தீர்க்கிறேன் என்று ஆஸ்பிட்டலுக்கு போன மனிதர் ஐயோ பாவம் இப்படியா பல்லை இழந்துட்டு வந்து நிற்பார்? அதோடு முடிந்ததா? போன பல்லெல்லாம் திரும்ப மீட்கும் உத்வேகத்தோடு செயற்கை பல் பொருத்தச்சொல்லி வீட்டுக்கு வந்து பார்த்தால் அவர் மாமனார் எல்லா கரமுர ஐட்டமெல்லாம் நல்லா அவர் முன்னாடியே மென்னு தின்றுக்கொண்டிருக்க பஞ்சாமி பாடு திண்டாட்டம் தான்…

    இடைச்செருகலாக குழி விழுந்த பற்கள் இல்லாத இடத்தில் நாக்கு மட்டும் நினைவஞ்சலி செலுத்திவிட்டு வருகிறது என்றுச்சொல்லி இருப்பது ரசிக்க வைத்தது…

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. அன்புச் சகோதரி மஞ்சுவே, வாருங்கள், வாருங்கள்.

      தங்களை நான், என் பல்லைக்காட்டி வரவழைக்க வேண்டியுள்ளது பாருங்கள்.

      இன்றைய வலைச்சரத்தின் மூலம் வந்தீகளோ?

      எப்படியோ வந்துட்டீங்களே, அது போது எனக்கு. ;)))))

      //அவஸ்தைகளை நகைச்சுவையோடு ரசனையோடு சொல்லக்கூட ஒரு ரசிப்புத்தன்மை வேண்டும்… அந்த வகையில் அண்ணாவின் இந்த பகிர்வு.//

      அடடா, சரியான பஞ்ச் from my Dear மஞ்ச்.

      இதுவும் எனக்கு அவஸ்தையல்ல.. நகைச்சுவையே ...!

      //அட்டகாசமான ஆரம்பம் அண்ணா…//

      நன்றி, மஞ்சு.

      //அதரகளம் பண்ணிட்டீங்க… //

      அப்படியா? அது என்ன அதரகளம் [அமர்களமோ]

      //அதெப்படி அண்ணா உவமைகள் இப்படி தங்கு தடை இல்லாம வர்றது உங்களுக்கு மட்டும்?//

      எல்லாம் என் தங்கை மஞ்சு கொடுத்துவரும் உற்சாகம் தான்.

      தொடரும்..... vgk

      நீக்கு
    2. VGK to மஞ்சு... தொடர்ச்சி....

      // போன பல்லெல்லாம் திரும்ப மீட்கும் உத்வேகத்தோடு செயற்கை பல் பொருத்தச்சொல்லி வீட்டுக்கு வந்து பார்த்தால் அவர் மாமனார் எல்லா கரமுர ஐட்டமெல்லாம் நல்லா அவர் முன்னாடியே மென்னு தின்றுக்கொண்டிருக்க பஞ்சாமி பாடு திண்டாட்டம் தான்…//

      ஒருபல் விடாமல் அலசி ஆராய்ந்து, இந்தக் கதையை ரசித்து மகிழ்ந்து, என் தங்கை மஞ்சு தன் முப்பத்திரெண்டு பற்களும் தெரிய மிகப்பெரிதாய் சிரித்து மகிழ்ந்ததை கற்பனை செய்து பார்த்தேன்.

      அடடா என்ன ஒரு சந்தோஷம் இந்தப்பல்லழகிக்கு என நினைத்து வியந்தேன்.

      பிரியமுள்ள
      VGK

      நீக்கு
  33. பல்செட் கட்டச்சொல்லி மீதி இருக்கிற பல்லெல்லாம் கூட மொத்தமா பிடுங்கி எடுத்துட்டு எல்லாரும் அவர் கண்முன்னாடி நல்லா சாப்பிட இவர் மட்டும் மிட்டாயை ஏக்கத்தோடு பார்க்கும் குழந்தைப்போல காண்பிப்பது அருமை…

    கதையாசிரியரின் நகைச்சுவை ரசிக்கவைத்தது மட்டுமில்லாமல் நம் பற்களை பாதுகாக்க என்னென்ன செய்யவேண்டும் எதை தவிர்க்கவேண்டும் என்று சொன்னவிதம்.. டாக்டர் பேஷண்டை கையாண்டவிதம் எல்லாம் மிக அருமையாக விவரித்தது சிறப்பு… பஞ்சாமி ஆசையா ஆஸ்பிட்டல் போனால் பல்செட் கட்டாம ராவி விட்டு அனுப்பிட்டாங்களாமே.. அப்புறம் என்ன தான் ஆச்சாம்?

    அபாரம் அண்ணா உங்க ரசனையும் நகைச்சுவை உணர்வும்… தொடரும் போட்டுட்டீங்களே… சரி தொடர்கிறோம் அண்ணா…

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பல்செட் கட்டாம ராவி விட்டு அனுப்பிட்டாங்களாமே.. அப்புறம் என்ன தான் ஆச்சாம்? //

      அப்புறம் என்ன தான் ஆச்சாம்? ன்னாக்க:
      “ராவு ராவுன்னு ராவியாச்சாம்” போதுமா?

      //அபாரம் அண்ணா உங்க ரசனையும் நகைச்சுவை உணர்வும்… //

      அபாரம் மஞ்சு உங்க ரசனையும், நகைச்சுவை உணர்வும், மிகப்பெரிய பின்னூட்டமும்... ;)))))

      //தொடரும் போட்டுட்டீங்களே… //

      பின்னே, வேறு எதைப்போடுவது?

      //சரி தொடர்கிறோம் அண்ணா…//

      சரி, தொடருங்கள்... தொடர்ந்து வாருங்கள்.

      பிரியமுள்ள,
      vgk

      நீக்கு
  34. வலைச்சரத்தில் மஞ்சு சொன்னதால் இதைப் பார்த்தேன். அடாடா... ரசித்துச் சிரித்துப் படித்தேன். இத்தனை நாள் பார்க்காமல் போனோமே என்று கொஞ்சம் வருந்தினேன். எல்லாச் சுவைகளிலும் எழுதுவது உங்களுக்கு கை வந்த கலையாயிருக்கிறது. நகைச்சுவையும் அருமை ஐயா.

    பதிலளிநீக்கு
  35. பால கணேஷ்October 2, 2012 10:23 PM
    வலைச்சரத்தில் மஞ்சு சொன்னதால் இதைப் பார்த்தேன்.//

    என் செல்லத்தங்கை மஞ்சுவுக்கு என் நன்றியோ நன்றிகள்.

    //அடாடா... ரசித்துச் சிரித்துப் படித்தேன்.//

    மிகவும் சந்தோஷம் சார்.

    //இத்தனை நாள் பார்க்காமல் போனோமே என்று கொஞ்சம் வருந்தினேன்.//

    இத்தனை நாள் தங்கள் பற்களும் நல்ல உறுதியாக ஆரோக்யமாக தொந்தரவு ஏதும் கொடுக்காமல் பளீச்சென்று இருந்திருக்கலாம்.;)
    அதனால் சந்தோஷப்பட வேண்டும். வருத்தப்படவே கூடாது. என் அன்புத்தங்கை மஞ்சுவும் இதுபோலத்தான் என்னிடம் மிகவும் வேடிக்கையாகப் பேசுவாள்.

    //எல்லாச் சுவைகளிலும் எழுதுவது உங்களுக்கு கை வந்த கலையாயிருக்கிறது. நகைச்சுவையும் அருமை ஐயா.//

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், சார்.

    அன்புடன்
    VGK

    பதிலளிநீக்கு
  36. பல பல பல :))))))))))என்று சிரிச்சிட்டேன்
    அந்த ரோஸ் கலர் பொடி தேய்க்கவேணாம் அப்படியே சாப்பிடலாம் :))
    பல்பொடிகளில் காலிகட் பல்பொடி பச்சை நிற டப்பாவில் வருமே ..நினைவுக்கு வருது .

    வெய்ட் வெய்ட் வெய்ட் :))நான் பயன்படுத்தல ..ஊரில் எங்க பாட்டி92
    வயது வரை அதைதான் உபயோகிச்சாங்க ..
    கடையில் போய் வாங்கிவருவது நான் மற்றும் தங்கை ..


    பஞ்சாமி பல்சாமின்னு பேரை மாத்திக்குவாரோ:)) அடுத்த பகுதியில்

    பதிலளிநீக்கு
  37. angelin October 5, 2012 3:35 AM
    //பல பல பல :))))))))))என்று சிரிச்சிட்டேன் //

    அன்பின் நிர்மலா, தங்களின் சிரிப்பொலி லண்டனிலிருந்து கிளம்பி திருச்சி மலைக்கோட்டையில் முட்டி என் வீட்டு ஜன்னல் வரைக் கேட்டது. [கற்பனை செய்து பார்த்தேன் ;)))))]

    //அந்த ரோஸ் கலர் பொடி தேய்க்கவேணாம் அப்படியே சாப்பிடலாம் :))//

    ஆமாம். சின்னக்குழந்தயாய் இருந்த போது நானும் அப்படியே சாப்பிட்டுள்ளேன். ;)

    //பல்பொடிகளில் காலிகட் பல்பொடி பச்சை நிற டப்பாவில் வருமே .. நினைவுக்கு வருது//

    ஆமாம் அது காரசாரமாக இருக்கும், உங்கள் பதிவினில் தாங்கள் என்சொல்படி ஜிமிக்கி போட்டு வைத்த, வற்றல் குழம்பு போல. ;)

    //வெய்ட் வெய்ட் வெய்ட் :))நான் பயன்படுத்தல ..//

    அதானே பார்த்தேன். பல்லழகியாக இருக்கும் [இதுவும் கற்பனை தான்] நீங்கள் போய் இதெல்லாம் உபயோகிப்பீர்களா என்ன? ;)

    //ஊரில் எங்க பாட்டி92 வயது வரை அதைதான் உபயோகிச்சாங்க ..//

    92 வயது வரைப் பல்லுடன் அட்டா ஆச்சர்யம் தான். ;)

    //கடையில் போய் வாங்கிவருவது நான் மற்றும் தங்கை ..//

    ஓஹோ! அப்போ தங்கள் கைராசி தான் அவர்கள் பல்ராசிக்குக் காரணம் என எனக்கு இப்போ புரிந்து விட்டது, நிர்மலா.

    பிரியமுள்ள
    கோபு அண்ணா


    பஞ்சாமி பல்சாமின்னு பேரை மாத்திக்குவாரோ:)) அடுத்த பகுதியில்

    பதிலளிநீக்கு
  38. VGK to Angelin நிர்மலா

    //பஞ்சாமி பல்சாமின்னு பேரை மாத்திக்குவாரோ:)) அடுத்த பகுதியில்//

    பஞ்சாமியோ, பல்சாமியோ, பல்லில்லா சாமியோ, பால்சாமியோ அடுத்தப்பகுதியில் போய்ப்பார்த்தால் தான் நமக்கே தெரியும்.

    VGK

    பதிலளிநீக்கு
  39. அன்பின் வை.கோ = வலைச்சராம் மூலமாக வந்தேன் - வந்து பார்த்தால் நான் ஏற்கனவே படித்து இரசித்து மகிழ்ந்து மறு மொழியும் இட்ட பதிவெனக் கண்டறிந்தேன். இவ்வலவு நீண்ட கதைஅயினைப் ப்படித்து மறுமொழி மறுபடியும் போட வேண்டாமென விட்டு விட்டேன் - நகைச்சுவை மன்னர் வை.கோ வாழ்க வளமுடன் - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  40. //cheena (சீனா)December 29, 2012 10:24 PM
    அன்பின் வை.கோ = வலைச்சராம் மூலமாக வந்தேன் - வந்து பார்த்தால் நான் ஏற்கனவே படித்து இரசித்து மகிழ்ந்து மறு மொழியும் இட்ட பதிவெனக் கண்டறிந்தேன். இவ்வளவு நீண்ட கதையினைப் படித்து மறுமொழி மறுபடியும் போட வேண்டாமென விட்டு விட்டேன் - நகைச்சுவை மன்னர் வை.கோ வாழ்க வளமுடன் - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா//

    வாருங்கள் ஐயா, வணக்கம். தங்களின் மீண்டும் வருகை எனக்கு மகிழ்வளிக்கிறது.

    தங்களின் மேலேயுள்ள பின்னூட்டத்திலேயே இந்தக்கதையை
    மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும் போல ஆவலாக உள்ளது என்று சொல்லியுள்ளீர்கள். இதோ அதையே நீங்கள் இப்போது படியுங்கள்:

    //cheena (சீனா)August 7, 2011 8:21 PM
    அன்பின் வை.கோ - நல்லதொரு நகைச்சுவை - தொடரும் வேறு போட்டீர்களா - எப்பொழுது என்று மனம் ஏங்குகிறது. உவமைகளும் வர்ணனைகளும் கதாசிரிய்ரைன் திறமையினைக் காட்டுகின்றன. எத்தனை எத்தனை உவமைகள்.அத்தனையும் அருமை.

    திரும்பத் திரும்பப் படிக்க வேண்டும் போல இருக்கிறது. மிக மிக இரசித்தேன். நல்வாழ்த்துகள் வை.கோ - நட்புடன் சீனா//

    அதனால் இந்த மீண்டும் வருகை சரியானது தான்.

    இன்று 28.12.2012 நம் வலைச்சர ஆசிரியர் திருமதி உஷா அன்பரசு அவர்களால் இது மீண்டும் இன்று சிறப்பாக வலைச்சரத்தில் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

    வலைச்சர தலைமை ஆசிரியர் வருகை மிகவும் மகிழ்வளிக்கிறது. நன்றியோ நன்றிகள், ஐயா,

    பிரியமுள்ள
    VGK

    பதிலளிநீக்கு
  41. ஐயா தங்களைப் போன்ற பெரியவர்கள் என்னுடைய பதிவைப்படிப்பதே நான் செய்த பாக்கியம்...தங்கள் பஞ்சாமியின் பல்வலி கதையைப் படித்து சிரித்ததை விட நகைச்சுவையில் கூட தங்களின் உவமைகளையும் உருவகங்களையும் எண்ணி ரசித்தேன்..தங்களின் வருகைக்கு நன்றி ஐயா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலியபெருமாள் புதுச்சேரி May 30, 2013 at 6:43 AM

      வாருங்கள். வணக்கம். தங்களின் முதல் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.

      //ஐயா தங்களைப் போன்ற பெரியவர்கள் என்னுடைய பதிவைப்படிப்பதே நான் செய்த பாக்கியம்...//

      நேரமின்மையால் நான் பல பதிவர்களின் பதிவுகளைப் படிப்பது இல்லை என்பதே உண்மை.

      இன்று அகஸ்மாத்தாக வேறொருவர் பதிவின் மூலம் உங்கள் பக்கம் வர நேர்ந்தது.

      தங்களின் பல் சிகிச்சை பற்றிய பதிவு கண்ணில் பட்டு நான் அதைப் படிக்க நேர்ந்தது.

      //தங்கள் பஞ்சாமியின் பல்வலி கதையைப் படித்து சிரித்ததை விட நகைச்சுவையில் கூட தங்களின் உவமைகளையும் உருவகங்களையும் எண்ணி ரசித்தேன்..//

      மிக்க மகிழ்ச்சி. 2011ம் ஆண்டு வெளியிடப்பட்ட என் பதிவுகள் பலவற்றிலும் நகைச்சுவை தூக்கலாகவே இருக்கும்.

      //தங்களின் வருகைக்கு நன்றி ஐயா..//

      தங்களின் அன்பான முதல் வருகைக்கும், ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      என் மற்ற பதிவுகளின் இணைப்புகள்:பற்றிய INDEX தங்களுக்குத் தேவைப்படுமானால் கீழ்க்கண்ட இணைப்பு உங்களுக்கு மிகவும் பயனளிக்கக்கூடும்.

      http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html

      நீக்கு
  42. நகைச்சுவை திலகம்
    Vgk அவர்களே பாராட்டுக்கள்

    சொந்த அனுபவம்
    போலிருக்கிறது
    சுவைபட நகைசுவையாக
    போகிறது பல்லு புராணம்

    இன்று பல் ஆஸ்பத்திரிக்குள்
    நுழைய வேண்டுமென்றால்
    கையில் கிரெடிட் கார்டுடந்தான்
    நுழையவேண்டும்
    அல்லது ஒரு ஆயிரம் ரூபாய் கட்டு
    ஒன்றை பையில்
    வைத்திருக்கவேண்டும்.

    இல்லாவிடில் கன்சல்டிங் பீஸ்
    250 வாங்கிகொண்டு 1000 ரூபாய்க்கு
    பேஸ்ட்,மௌத் வாஷ் ஜெல்
    கொடுத்து சில நாட்கள் கழித்து
    வாருமாறு அனுப்பிவிடுவார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Pattabi Raman June 8, 2013 at 5:37 AM

      //நகைச்சுவை திலகம் Vgk அவர்களே பாராட்டுக்கள் //

      மிக்க நன்றி. சந்தோஷம். வாங்கோ, வணக்கம்.

      இதன் இரண்டாம் பகுதியையும் படித்திருப்பீங்கோ என்று நினைக்கிறேன்.

      //சொந்த அனுபவம் போலிருக்கிறது. சுவைபட நகைசுவையாக
      போகிறது பல்லு புராணம். இன்று பல் ஆஸ்பத்திரிக்குள் நுழைய வேண்டுமென்றால் கையில் கிரெடிட் கார்டுடந்தான் நுழையவேண்டும். அல்லது ஒரு ஆயிரம் ரூபாய் கட்டு ஒன்றை பையில் வைத்திருக்கவேண்டும்.

      இல்லாவிடில் கன்சல்டிங் பீஸ் 250 வாங்கிகொண்டு 1000 ரூபாய்க்கு
      பேஸ்ட்,மௌத் வாஷ் ஜெல் கொடுத்து சில நாட்கள் கழித்து
      வருமாறு அனுப்பிவிடுவார்கள் //

      ஆமாம். மிகச்சரியாகவே சொல்லிவிட்டீர்கள். பணமும் ஏராளமாகவும் தாராளமாகவும் வேண்டியுள்ளது.

      அதைவிட அசாத்ய பொறுமையும் வேண்டியுள்ளது.

      அதற்கான ஓர் சிறுகதை இதோ:

      http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_6123.html
      ”வாய்விட்டுச்சிரித்தால் ........”

      நீக்கு
  43. கண்ணில் நீர் வர சிரித்தேன். பற்களை கிளீன் செய்யக் கூட பல்டாக்டரிடம் போகக்கூடாது என்ற பேருண்மையைப் பிரிந்து கொண்டேன். பல்டாக்டர்கள் யாரும் உங்கள் மேல் கேஸ் எதுவும் போடவில்லையே>

    பதிலளிநீக்கு
  44. rajalakshmi paramasivam October 31, 2013 at 8:01 AM

    வாங்கோ, வணக்கம்/

    //கண்ணில் நீர் வர சிரித்தேன்.//

    சந்தோஷம். ‘வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும்’ தெரியுமோ ? தெரியாவிட்டால் இதோ என்னுடைய மிகக்குட்டியூண்டு கதை ஒன்று உள்ளது:

    http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_6123.html


    // பற்களை கிளீன் செய்யக் கூட பல்டாக்டரிடம் போகக்கூடாது என்ற பேருண்மையைப் புரிந்து கொண்டேன்.//

    ஆஹா, எப்படியோ புரிந்து கொண்டவரையில் நல்லது தான்.

    //பல்டாக்டர்கள் யாரும் உங்கள் மேல் கேஸ் எதுவும் போடவில்லையே//

    இதையெல்லாம் படிக்க அவர்களுக்கு ஏது நேரம்? அவர்கள் நிலமையைப்பற்றியும் ஓர் குட்டியூண்டு கதை எழுதியுள்ளேன் இந்தாங்கோ அதன் இணைப்பு:

    http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_06.html

    தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  45. எங்கேந்துதான் உதூரணங்கள் பிடிக்டுரீஙக? நல்ல பல் டாக்டர் கிடைப்பதும் ஒரு அதிர்ஷ்டம் தான்

    பதிலளிநீக்கு
  46. பல் வலிக்கும் போது கூட இந்த சிறுகதையைப் படிச்சா சிரிப்புதான் வரும்.

    சிரிச்சு, சிரிச்சு பல் சுளுக்கிண்டதுதான் மிச்சம்.

    பதிலளிநீக்கு
  47. இந்த கத கூட மொதக ஒருவாட்டி படிச்சி கமண்டு போட்டுபிட்டனே. மறுக்கா ஏன் போட்டிருக்கீக?

    பதிலளிநீக்கு
  48. படிக்க படிக்க அலுக்காத கதைகளில் இதையும் சேர்த்துடலாம் பல் வலி பல் டாகடர் என்றாலே பஞ்சாமியும் பல்லவராயனும்தான் நினைவில் வருவார்கள்

    பதிலளிநீக்கு
  49. ரசிகர்களின் ஏகோபித்த வேண்டுகோளுக்கு இணங்கி...மீண்டும்...மீண்டும் சிரிப்பு..

    பதிலளிநீக்கு
  50. எத்தனை முறை படித்தாலும்நகைச்சுவைக்குப் பஞ்சமில்லை!

    பதிலளிநீக்கு
  51. பல் வலியைக்கூட நகைச்சுவையாக சொல்லியிருக்கிங்க..பல்வலியும் தலைவலியும் தனக்கு வந்தாதான் தெரியும்.. உதாரணங்கள் எல்லாமே பொருத்தமா சொல்லியிருக்கிங்க.பல்ஸெட் கட்டினவங்க அதை இரவு கழட்டி வச்சு மறுநா போட படும் பாட்டையும் போடுங்க...

    பதிலளிநீக்கு